அவளையறியமாலே அவள் தன் மொபைலை எடுத்து கேலரியில் இருந்த அவனுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை பார்த்தாள். அதில் ஒரு படம் அஸ்வினின் பிறந்த நாள் அன்று மால் இற்கு சென்ற போது எடுத்தது....அதை பார்த்ததும் அன்று நடந்த நிகழ்வுகள் சாருவின் கண் முன் படமாய் விரிந்தது...
அஸ்வினின் பிறந்தநாளை அவனது ரெசியூமியை பார்த்து தெரிந்து கொண்ட சாரு அவனுக்கு சப்ரைஸ் குடுக்க எண்ணினாள்....
அன்று வேலை நாள் என்பதால் அஸ்வினிற்கு ஆபிசில் ஒரு சின்ன பர்த்டே பார்ட்டி ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.... அவனுக்கு அனைவரும் வாழ்த்த அவன் எதிர்பார்த்திருந்த சாருவோ அன்று ஆபிஸிற்கு வரவில்லை.... அவனுக்கு சிறு ஏமாற்றமே... ஆனாலும் ஏதேனும் வேலை என்று எண்ணி அவளிற்கு அழைக்க அது எடுக்கப்படவில்லை.... சஞ்சுவிடம் விசாரிக்க அவனும் சரியாக பதில் சொல்லவில்லை.... அன்று மாலை ஆபிஸ் முடியும் வரை சாருவை எதிர்பார்த்திருந்த அஸ்வினிற்கு ஏமாற்றமே..... ஆபிஸ் முடியும் நேரம் அவன் அவனது காரினுள் அமர திடீரென்று அவனது கண்கள் யாருடையதோ கைகளால் மூடப்பட முதலில் பதறிய அஸ்வின் பின் அது சாரு என்று உணர்ந்தான்... அவளை சீண்டும் விதமாக
“யாருங்க நீங்க ??? இப்படி ஒரு கன்னிப்பையன் தனியா இருக்கும் போது கண்ணை மூடி விளையாடுறீங்க??? சிஸ்டர் கொஞ்சம் கையை எடுத்தீங்கனா யாருனு பார்த்துக்க வசதியா இருக்கும்” என்று அவன் கூற கைகள் உடனடியா எடுக்கப்பட்டது....
தன் கண்களை ஒருமுறை தன் கைகளால் ஒற்றி எடுத்துவிட்டு பின்னால் திரும்பி பார்க்க அங்கே சாரு கோபத்தால் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள்....
அவளது தோரணையை பார்த்து அஸ்வின் சிரிக்க சாரு அவனை முறைத்தாள்....
“என்ன ஜிலேபி சிரிச்சா அடிப்பனு எதிர்பார்த்தேன்.... நீ என்னடானா அடிக்காம முறைக்கிற????”
“ஓ உனக்கு அது ஒரு குறையா இருக்கா..... உனக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு பாவம் பார்த்தா நீ அடிக்கலைனு பீல் பண்ணுறியா??? சரி இந்தா வாங்கிக்கோ....”என்று அங்கிருந்த பைலினால் அடிக்கத்தொடங்கினாள் சாரு...
அவள் அடிக்காதவாறு அவளை தடுத்த அஸ்வின்
“கூல் ஜிலேபி..... எதுக்குமா இந்த பாவப்பட்ட ஜென்மத்தை இப்படி அடிக்கிற???? சரி சொல்லு ஜிலேபி... எதுக்கு என்னை அப்படி முறைச்ச???”
“நீ பண்ணுற காரியத்திற்கு உன்னை வேறு என்ன பண்ணுறதாம்???? நான் தான் கண்ணை மூடினேன்னு தெரிந்தும் சிஸ்டர்னு கூப்பிடுறனா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?”
“இல்லை ஜிலேபி எனக்கு கொலஸ்ரோல் இல்லைனு டாக்டர்ஸ் சொன்னாங்க” என்று அவன் வேணுமென்ற சாருவை கடுப்பேற்ற அவன் கையில் வைத்திருந்த பைலை வாங்கி மீண்டும் அடித்தவாறே
“உனக்கு எத்தனை தரம் இப்படி மொக்க ஜோக் சொல்லி கடுப்பாக்காதனு சொல்லி இருக்கேன்....கேட்குறியா... கேட்குறியா...”
“ஹாஹா கூல் ஜிலேபி சும்மா உன்னை கடுப்பேத்தலாம்னு தான் அப்படி கூப்பிட்டேன்..... நீ எனக்கு விஷ் பண்ணாததற்கு பனிஷ்மண்ட் தான் அது ... இன்னைக்கு புல்லா உன்னை சிஸ்டர்னு கூப்பிடலாம்னு இருக்கேன்” என்று அஸ்வின் கூற
“அப்படி எல்லாம் பனிஷ்மென்ட் குடுக்கக் கூடாது பேபி... உன்னோட ஜிலேபி பாவம்ல???”
“இல்லையே... இப்பெல்லாம் ஜிலேபி ரொம்ப சேட்டை பண்ணுது... அதுக்கு பனிஷ்மண்ட் குடுக்கனும்னு இந்த பேபி முடிவு பண்ணியாச்சு...”
“ஹேலோ பாஸ் உங்க முடிவெல்லாம் இங்க யாரும் கேட்கல.... இப்போ போய் இந்த டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாங்க” என்று அவன் கையில் ஒரு பொதியை சாரு கொடுக்க அஸ்வின் அதை பிரித்து பார்த்தான்... அதில் ஒரு இளம் நீலநிற ஸ்ரைப் சேர்ட்டும் ஒரு சாம்பல் நிற டெனிமும் இருந்தது... அதை எடுத்துக்கொண்டு ஆபிசினுள் சென்றவன் உடை மாற்றிவிட்டு வெளியே வர சாரு காரிற்கு வெளியே நின்றிருந்தாள்.... அழகிய இளஞ் சிவப்பு நிற டாப்பும் வெள்ளை நிற லாங் ஸ்கேட்டுமாய் லூஸ் எயாருடன் இருந்தவள் அவனை பார்த்து சூப்பர் என்று சைகை காட்ட அவளது செய்கையில் மையலுற்று இருந்தான் அஸ்வின். என்றும் அவளது அழகில் சொக்கி நிற்பவன் இன்று சித்தம் கலங்கி நின்றான். அவன் அவ்வாறு நிற்க அவனது மாற்றத்தை உணராத சாரு அவன் நின்ற இடம் வந்து அவன் கரம் பற்றி காரினருகே இழுத்து சென்றாள். அவனும் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றவன் அவள் காரின் பாக் டோரினை திறக்கச் சொல்லியவள் மறுபுறக்கதவினை திறந்து உள்ளே ஏறினாள்....
கார் கதவினை திறந்த அஸ்வினை ஒரு அழகிய கேக் உடன் ஒரு சிறிய பரிசுப்பொதியே வரவேற்றது.... உள்ளே ஏறி அஸ்வின் அமர சாருவோ அந்த கேக்கின் மீது பொருத்தப்பட்டிருந்த அந்த ஒற்றை மெழுகுதிரியை ஏற்றினாள்.. அந்த கேக்கின் மீது “ஹாப்பி போன் டே ரௌடி பேபி” என்று எழுதப்பட்டிருந்தது.....
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை ஸ்வீட் ரொமாண்டிக் லவ்லி எக்சட்ரா..... ரௌடி பேபி....... நீ இப்போ போல எப்போவும் இப்படியே என்கூட லைப் லோங் ஹேப்பியா இருக்கனும்...”என்று அவனை வாழ்த்திவிட்டு அவன் புறம் கேக்கினை நீட்ட அவன் அவள் மறுகையிலிருந்த கத்தியினை வாங்கி அதனை வெட்டி அவளிற்கு ஊட்டினான்... அவளும் அவனிற்கு ஒரு துண்டு கேக்கினை வெட்டி ஊட்டினாள்.... பின் அங்கு அழகிய சிவப்பு நிற உறையால் பொதி செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை அவனிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொன்னாள். அந்த பதியில் இரண்டு பரிசில்கள் இருந்தது.. ஒன்று ஒரு கறுப்பு கூலர்ஸ்..... மற்றொன்று ஒரு அழகிய ஆர். ஜே என்று எழுத்துக்கள் ஒரு இதய வடிவ சின்னத்தினுள் ஒன்றின் மேல் ஒன்றாக பதிக்கப்பட்டு இருந்த ஒரு தங்க பென்டன்.... அதனை கையில் எடுத்த அஸ்வின் தன் கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி அதில் கோர்த்து அணிந்து கொண்டான்.
“ஜிலேபி தான்கியூ சோ மச்.... இந்த பென்டன் ஐடியா சூப்பர்... ஆனா ஏன் உனக்கு பென்டன் குடுக்கனும்னு தோணுச்சி???” என்று அஸ்வின் வினவ தன் சட்டையினுள் இருந்த செயினை வெளியில் எடுத்து அதில் இருந்த பென்டனை காட்டானாள்.
“ நீ எனக்கு பிரபோசல் பண்ணி பார்ட்டி எல்லாம் குடுத்து சப்ரைஸ் பண்ண.... அதான் உன் ஜிலேபியும் உன்னை சப்ரைஸ் பண்ணேன். இந்த பென்டன் எப்பவும் நம்ம ரெண்டு பேரோட கழுத்திலும் இருக்கனும்... இனன
து நமக்குள்ள என்றைக்கும் பிரிவே வரக்கூடாது அப்படிங்கிறத சிம்பலைஸ் பண்ணுறதுக்காக தான் அப்படி சொல்லி செய்து எடுத்தேன். அந்த பென்டன் நம்ம கழுத்தில் இருக்கும் போது நான் உன் கூடவே இருக்கதாகவும் நீ என் கூட இருக்கதாகவும் நம்ம பீல் பண்ணனும்... அதுக்காக தான் இப்படி ஒரு பெண்டன்...”
“அது சரி .... இது எதுக்கு கூலிங்கிளாஸ்??”
“அது வந்து..... சொன்னா சிரிக்க கூடாது...”
“நீ சிரிக்கிற மாதிரி எதுவும் சொல்ல கூடாது...” என்று அஸ்வின் கூற அவனை முறைத்தாள் சாரு....
“கூல் ஜிலேபி. மேட்டரை சொல்லு.”
“அது நீ கூலிங் கிளாஸ் போட்டால் செம்ம ஹேண்சம்மா இருப்ப.. அப்போ எனக்கு உன்னை அப்படியே இறுக்கி அணைச்சி ஒரு உம்மா கொடுக்கனும் போல இருக்கும்....” என்று சாரு கூற அஸ்வின் வினாடியும் தாமதிக்காது உடனடியாக அந்த கூலரை எடுத்து அணிந்து கொண்டு
“இப்போ அப்படியே இறுக்கி அணைச்சி உம்மா குடுத்திரு ஜிலேபி” என்று கூற அவனை சாரு முறைக்க என்று அவர்கள் இருவரும் சீண்டி விளையாடியது பின் மால் இற்கு சென்று சுற்றி ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தது என்று அனைத்தும் அவள் கண்முன் படமாய் ஓட அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது...... அந்த பென்டனை தொட்டுப்பார்த்தவளால் பெருகி கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...அதை அடக்கும் வழி தெரியாது அப்படியே அசதியில் உறங்கியும் விட்டாள்....
இனி சாரு என்ன செய்யப்போகிறாள்??? அஸ்வினின் நிலை என்ன???
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விழித்த சாரு எழுந்து சென்று கதவினை திறந்தாள்... அங்கு ஷெண்பா கையில் உணவுத்தட்டுடன் நின்றிருந்தார்.....
அவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாத சாருவோ அவரை உள்ளே அழைத்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்....
அஸ்வின் சாருவிற்கு அவளது தவறை உணர்த்திய பின் சாரு தன் சித்தி ஷெண்பாவின் ஊரிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு வேண்டினாள். அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்க அவர் மறுத்துவிட்டார்... பின் அவரிடம் பல கெஞ்சல்கள் மன்றாட்டுக்களை முன் வைத்து அவரையும் அவளது தம்பியையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டாள்... அதன் பின் ஷெண்பா சாருவை தன் மகள் போல் கவனித்துக்கொண்டாள்.... எப்போதும் ஆபிஸ் விட்டு வரும் சாரு சித்தி என்று அழைத்தவாறே வீட்டினுள் நுழைவாள்..... பின் அன்று நடந்த அனைத்தையும் அவரோடு பகிர்ந்து கொள்வாள்... பின் தன் சகோதரனுடன் அரட்டை, அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என்று அவளது நேரம் பறக்கும்....
ஷெண்பா சாருவிற்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்வார்.....
சாருவிற்கு உறவென்று தான் இருக்கின்றேனென தன் ஒவ்வொரு செயலிலும் காட்டினார்.....
அவ்வாறு இருக்க இன்று வழமையான நேரத்திற்கு முன் வீடு திரும்பிய சாரு தான் அழைத்தது கூட காதில் வாங்காது சோர்ந்த நடையுடன் அறைக்கு சென்றதை பார்த்த அவரிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.....
சரி அவளுக்கு ஓய்வு தேவை என்று எண்ணி அவளை சிறிது நேரம் தொல்லை பண்ண வேண்டாம் என்று ஷெண்பா அமைதியாய் இருக்க சாருவோ அறையை விட்டு வெளியே வரவில்லை...இரவு உணவிற்கும் கீழே வராத சாருவிற்கு தானே உணவு கொண்டு சென்றார் ஷெண்பா...
அவர் ஐயம் கொண்டது போல் சாருவும் எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்தாள்...
அவளது கண்கள் வழமைக்கு மாறாய் சிவந்திருந்தது அவள் அழுததை காட்டிக்கொடுத்தது... தான் இங்கு வந்த நாள் முதலாய் மலர்ச்சியை மட்டுமே தாங்கி நின்ற அவள் முகம் இன்று ஏதோ வேதனையில் கசங்கி நின்றதை காணப்பொறுக்காது சாருவிடம் விசாரித்தார்...
“சாருமா என்னாச்சு??? ஏன் முகமெல்லாம் வாடி இருக்கு ??? ஆபிசில் ஏதும் பிரச்சினையா??”
“இல்லை சித்தி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.... நான் நல்லா தான் இருக்கேன்... லைட்டா தலை வலி அதான்....”
“தலைவலியா??? இதை ஏன் முன்னமே சொல்லல??? சொல்லி இருந்தா சித்தி தைலம் பூசி விட்டுருப்பேன்ல...” என்றவாறு அவர் தைல டப்பாவை எடுக்கச்செல்ல அவரை தடுத்த சாரு
“சித்தி கொஞ்ச நேரம் உங்க மடியில் படுத்துக்கவா?” என்று கேட்க
“இதை நீ கேட்கனுமா??? நான் உன்னோட சித்தி. நீ உரிமையோட என் மடியில் படுத்துக்கலாம்... வாமா வந்து படுத்துக்கோ” என்று ஷெண்பா சாருவை அழைக்க சாரு தன் சித்தி மடிமீது தலை வைக்க அவர் தலையை தடவிக்கொடுத்தார்....அது அவளுக்கு அப்போது மிகத்தேவையாக இருந்தது....
“சாரு..”
“சொல்லுங்க சித்தி...”
“எந்தவொரு பிரச்சனையும் நிரந்திரமில்லை..... வாழ்க்கைனா பிரச்சனைகள் வரத்தான் செய்யும்...
அதை நாம தான் தைரியமா நின்று முகம் கொடுக்கனும். உன்னோட பிசினசில் எவ்வளவோ பிரச்சனைகளை முகம் கொடுத்து தான் இன்று இந்த நிலையில் இருக்க.... ஒவ்வொரு பிரச்சனையும் ஏதோ ஒரு நோக்கத்தோடு தான் அந்த கடவுள் நமக்கு கொடுக்கிறார்... அதை நாம பிரச்சனைனு எடுத்துக்கிட்டா பிரச்சனை சவால்னு எடுத்துக்கிட்டா அது வெற்றி..... இதெல்லாம் நான் உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை ...
ஆனாலும் வாழ்க்கைனு வரும் போது சில உணர்வுகள் நமக்கு பிரச்சினையை உண்டு பண்ணுது… அந்த உணர்வுகளுக்கு நாம் அடிமையாகும் பட்சத்தில் அது நமக்கு சில பிரச்சனைகளை உருவாக்குகின்றது… உதாரணத்திற்கு ஒரு புதிதா திருமணமான ஜோடியை எடுத்துகிட்டா திருமணமான புதிதில் மனைவி கணவனை இதை செய்யாதீங்க அதை செய்யாதிங்க அப்படினு குறை சொல்லும் போது பொதுவான எந்த ஆணா இருந்தாலும் கோபம் வரும்… சில வேளைகளில் அவங்களோட வாழ்க்கை முறையை அந்த வேண்டுகோள்கள் மாற்றுவதாக இருந்தால் அவங்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்… ஆனா எதனால் அவன் மனைவி அப்படி சொல்றானு கணவன் யோசித்து அதன்படி நடந்துகொண்டால் அவங்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் வராது…… மனைவியும் கணவனை புரிந்து ஒரேடியாக மாற்றத்தை எதிர்பார்க்காம சிறுக சிறுக மாற்றத்தை ஊக்குவிக்கும் போது அவர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் எப்போதும் இருக்காது...... இவங்க இரண்டு பேரும் அப்படி நடந்துகொள்வதற்கு காரணம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு உள்ள உரிமையுணர்வு...... அந்த உரிமையுணர்வு இல்லாவிடின் தாம்பத்தியம் இனிக்காது....ஆனா அந்த உரிமையுணர்வு தான் அவங்களுக்குள்ளே பிரச்சனையை உருவாக்குகின்றது. அதுமட்டும் இல்லை அதீத அன்பு கூட சில சிக்கல்களை உருவாக்கலாம்.... ஆனா அதற்காக அந்த அன்பை உதறித்தள்ளிட்டு செல்வது சரியல்ல......... அந்த சிக்கலிற்கான வேறு தீர்வை நாம தான் நிதானமா யோசித்து எடுக்கனும்....... உணர்வுகள் கண்ணாடி பாத்திரம் மாதிரி சரியாக கையாளவில்லைனா அது பல மறைக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திடும்....
அதனால் நாம தான் நம்மோட சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தைரியமா கையாளனும்...... அதுக்கு நம்ம மனம் ஒத்துழைக்கின்ற அளவுக்கு நம் மனதை திடமாக வைத்திருக்கனும்.........
பிரச்சினைகள் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும் அதற்காக உன்னோட மகிழ்ச்சியை நீ எப்பவும் தியாகம் பண்ணக்கூடாது.... ஒரு மனிதனுக்கு எல்லா விடயங்களும் மகிழ்ச்சியை கொடுக்காது..... ஒரு கர்நாடக இசை பிரியருக்கு மேல்நாட்டு இசை மகிழ்ச்சியை கொடுக்காது.... சிலபேருக்கு குடும்பத்திற்காக தன்னோட வாழ்க்கையை அர்பணிப்பதில் மகிழ்ச்சி ..... ஆனா சில பேருக்கு அவங்களோட குடும்பத்தை மீறி அவங்களோட கனவுகளை நிறைவேற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி........இது தான் சாரு வாழ்க்கை....... பிரச்சனை என்ற காரணத்தினால் எந்த தியாகத்தையும் செய்யாதே..... அவசியம் இருந்தால் மட்டும் செய்யும் தியாகத்திற்கே ஆயுள் அதிகம்.... அதனால பிரச்சனைகள் வந்தா அதை தீர்க்கும் வழியை பார்க்கனும்... இப்படி உம்முனு முகத்தை வைத்துக்கொள்ள கூடாது... சரியா??
உனக்கு நான் சொன்னதெல்லாம் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்????? இப்போ எழும்புமா கொஞ்சம் சாப்பிட்டு படுக்கலாம்....”
“சரி சித்தி....” என்ற சாருவிற்கு தான் கொண்டு வந்திருந்த உணவினை ஊட்டினார்....
உணவுண்ண தோன்றாத போதிலும் ஷெண்பாவிற்காக உண்டாள் சாரு....
உணவூட்டி முடித்த ஷெண்பா சாருவை படுத்துறங்குமாறு கூறிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு சென்றார்...
அவர் சென்றதும் அவர் கூறியது அனைத்தும் சாருவிற்கு ரீவைன் ஆனது.....
அவசியம் என்றால் எந்த தியாகத்தையும் செய்யலாம் என்று ஷெண்பா கூறியது மீண்டும் மீண்டும் சாருவின் காதில் ஒலித்தது....
தன்னுடைய காதலை தியாகம் செய்வது அஸ்வினை அவனது தந்தையுடன் சேர்ப்பதோடு அவனுக்கு என்னால் இனி எந்த கஷ்டமும் வராது என்று எண்ணியவள் ஷெண்பாவுடைய புத்திமதியில் தேவையானதை விடுத்து அவசியமில்லாததை மனதில் பதிய வைத்த சாரு அதை பின்பற்ற முடிவெடுத்தது அந்த காலத்தின் சதி....
முடிவெடுத்தாளே ஒழிய அவளால் அதை நடைமுறை படுத்த முடியுமா என்று தெரியவில்லை...அஸ்வினை சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை....அவனிடம் பிரிவு பற்றி பேசும் தைரியமும் அவளிடம் இல்லை... அவள் பேசும் தோரணையிலே அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று கண்டுபிடிப்பவன் அஸ்வின்... அவனிடம் அவனை வெறுப்பது போல் நடிப்பது என்பது அவளால் முடியாத காரியம்...அவனிடம் இந்த பிரிவின் அவசியத்தை அவளால் வார்த்தைகளால் சொல்லி புரியவைக்க முடியாது.. அதை அஸ்வின் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்...... இந்த பிரிவு அவனுக்கு அவசியம் என்று அவளால் புரியவைக்கவும் முடியாது.... ஆனால் இந்த பிரிவு அவனுக்கு நன்மையே...
ஆனால் உனக்கு என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் கண்ணீராய் வெளிவந்தது....
தன் மொபைலை எடுத்தவள் கேலரியில் இருந்த அஸ்வினுடைய படத்தோட பேச ஆரம்பித்தாள்
“ஏன்டா என்னோட லவ்விற்கு ஓகே சொன்ன???? என்னால உனக்கு என்ன சந்தோஷம் கிடைத்தது... என்னால் உன் அப்பாவை எதிர்கின்ற சூழ்நிலை வந்தது.... என்னால தான் கிருஷ்ணன் அப்பா இப்போ ஆஸ்பிடலில் இருக்காங்க.... ஆனா நீதான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் அப்படிங்கிற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சியோட என்னை பார்க்குற..... கிருஷ்ணன் அப்பா ஆஸ்பிடலில் இருப்பதை கூட நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட.... ஏன் மறைச்ச??? நீ எனக்காக சண்டை போட்டது எனக்கு தெரிந்திரும் அப்படிங்கிறதாலா??? அது தெரிந்தா நான் கில்டியா பீல் பண்ணுவேன் அப்படிங்கிறதால தான் என்கிட்ட இருந்த மறைச்சியா????? ஏன்டா எப்பவும் என்னை பற்றி மட்டுமே யோசிக்கிற???? உன்னை பற்றி யோசிக்கவே மாட்டியா?? உனக்காக அங்க ஒருதொழில் சாம்பிராச்சியமும் உன் குடும்பமும் காத்திட்டு இருக்கும் போது நீ ஏன்டா என்னை பற்றி இவ்வளவு யோசிக்கிற???நீ என்னை இவ்வளவு தூரம் நேசிப்பதற்கு நான் உனக்கு ஒன்றும் செய்யலையே......... ஆனாலும் ஏன் இப்படி??” என்று அவள் படத்துடன் பேசிக்கொண்டிருக்க தவறுதலாக அவள் கை பட்டு அவர்கள் இருவரும் இருந்த படமொன்று வந்தது. அது அவர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்த போது எடுத்தது. அந்த புகைப்படம் அந்த நாளில் அவர்கள் பேசிக்கொண்ட உரையாடலை அவளுக்கு நினைவு படுத்தி அவளது துயரை அதிகப்படுத்தியது........
அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்.... சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்... அவர்கள் இருவருக்கும் இது வழமை ...... அந்த நேரத்தை இருவரும் மிகவும் ரசிப்பார்கள்....... சில வேளைகளில் இருவரும் கடலின் கரையில் அதாவது கால்கள் நீரில் நனையுமாறு உள்ள தூரத்தில் இருவரும் தம் கைகளை பின்னிக்கொண்டு நடப்பர்...... இன்னும் சில வேளைகளில் சூரிய அஸ்தமனத்தை கடல் மண்ணில் அமர்ந்து இருவரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள்......
சாருவிற்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.....அதுவும் கடலை ரசித்துக்கொண்டு கடல் காற்று மேனியில் மோத அதை அனுபவித்தவாறு ஐஸ்கிரீமை ருசிப்பதில் அலாதி பிரியம்..... அதை சாரு கூறி அறிந்த அஸ்வின் கடற்கரை வரும் வேளைகளில் எல்லாம் அவளிற்கு கொனேட்டோ வாங்கி கொடுப்பான்.... சாரு அதை தனியே சாப்பிடாது அவனுக்கு ஊட்டி விடுவாள்.....இதற்காகவே அஸ்வின் எப்போதும் ஒரு ஐஸ்கிரீமோடு தான் வருவான்.... ஏன் உனக்கு வாங்கவில்லை என்று கேட்கும் சாருவிடம் ஏதாவது காரணம் சொல்லி சமாளிப்பான்... இது தொடரவும் ஒரு நாள் சாரு கேட்டுவிட்டாள்...
“ஏன் ரௌடி பேபி என்னோட ஐஸ்கிரீமிலேயே எப்பவும் நீ பங்கு கேட்குற???? உனக்கு ஒன்று வாங்குனா ரெண்டு பேரும் நிறைய சாப்பிடலாம்ல.... பாரு உன்னால எப்பவும் நான் பாதி ஐஸ்கிரீம் தான் சாப்பிடுறேன்.... போ இன்றைக்கு நீ உனக்கு ஒன்று தனியா வாங்கி சாப்பிடு” என்று அஸ்வினை விரட்ட
“வாங்கலாம் ஜிலேபி....ஆனா அது நீ எச்சிப்படுத்திட்டு எனக்கு ஊட்டுகின்ற ருசியை கொடுக்காதே... என்ன பண்ண???”
“டேய் திருடா..... வெளியில துர்வாசர் மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இப்படி லவ்ஸ் பண்ணுறியா???? நான் உன்னை என்னமோனு நினைத்தேன்.... ஆனா நீ லவ் சப்ஜக்ட்டில் பி.எச்.டி வாங்கயிருப்ப போல....என்னலாம் செய்ற??” என்று சாரு கூற அஸ்வின் சிரித்தவாறு அவள் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை ஒரு கடி கடித்து ருசித்தான்....
அன்றும் இருவரும் இந்த நேரத்தை சேட்டைகளுடன் அனுபவித்தனர்... அப்போது சாரு திடீரென்று அஸ்வினிடம்
“ரௌடிபேபி நம்ம ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு ஏதும் யோசித்து வைத்திருக்கியா??”
“பார்டா என் ஜிலேபிக்கு ஹனிமூன் ஆசை வந்திருச்சி...... நீ ஓகேன்னு சொன்னா இன்றைக்கே கொண்டாடிரலாம்” என்று அஸ்வின் அவளை வம்பிழுக்க...
“அடிங்... உனக்கு இப்படி ஒரு ஆசையிருக்கா..... ரௌடி .... சரி நான் கேட்டதற்கு பதில் சொல்லு.... நீ எங்க கொண்டாடலாம்னு பிளான் பண்ணியிருக்க???”
“நான் ஏதும் பிளான் பண்ணல ஜிலேபி..”
“டேய் உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும்.... இன்னேரம் நீ நம்ம குழந்தையை எந்த ஸ்கூலில் சேர்க்கனும்குற வரை பிளான் பண்ணியிருப்ப..... நீ வெல் பிளான்ட் பர்சன் னு எனக்கு தெரியும். சோ சொல்லு எங்க போகலாம்னு யோசிச்சிருக்க???”
“அது எப்படி சாரு எல்லாத்தையும் சரியா கண்டுபிடிச்சிர்ற??? சரி சொல்லுறேன்... அதுக்கு முதல்ல நீ சொல்லு...நீ எங்க போகலாம்னு பிளான் பண்ணியிருக்க???”
“அதுக்கு தான் நீ இருக்கியே... நீ இருக்கும் போது நான் எதுக்கு அதை பற்றி எல்லாம் யோசிக்கனும்.....நீயே சூப்பரா ஏதாவது யோசித்து வைத்திருப்ப...சொல்லு....எந்த இடத்திற்கு போறோம்...??”
“என்னோட பாட்டி கிராமத்திற்கு.....”
“என்ன ரௌடிபேபி எல்லாரும் சுவிஸ்,பாரிஸ் னு சொல்லுவாங்க நீ என்னானா கிராமத்திற்கு போகலாம்னு சொல்லுற??”
“உனக்கு இந்த ஐடியா பிடிக்கலையா ஜிலேபி??” என்று அஸ்வின் சற்று வருத்தத்துடன் கேட்க
“ஐயோ அப்படி இல்லை பேபி... நீ ஏதும் ரீசன் இல்லாம இப்படி செய்ய மாட்டனு எனக்கு தெரியும்.... அந்த ரீசன் என்னான்னு சொன்னா நானும் பிரப்பேர் ஆவேன்...”
“ஹாஹா... நீ பாரதியாரோட காணி நிலம் வேண்டும் கண்ணம்மா பாட்டு கேட்டுருக்கியா???”
“ஆமா..? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??”
“அதை ரியல் லைப்பில் செய்து பார்க்கனும்னு ஆசை...”
“சரி அதை எப்படி நம்ம ஹனிமூனில் செய்ய போறோம்??”
“சொல்றேன்.... அதுக்கு முதலில் அந்த பாட்டை நல்லா கேளு” என்றுவிட்டு அந்த பாடலை தன் மொபைலில் ஒலிக்கச்செய்தான் அஸ்வின்...
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
“இந்த பாட்டில் வருகின்ற மாதிரி தான் பாட்டி ஊரில் இருக்கின்ற அவங்க தோட்ட வீடு....அந்த வீடு தோட்டத்திற்கு நடுவில் கட்டியிருக்காங்க.... வீட்டை சுற்றி அழகழகான பூமரங்கள்... பத்து பன்னியிரண்டு தென்னை மரம் இல்லை. ஆனா அங்க நாலு தென்னை மரங்கள் இருக்கு... அதோடு அங்கு ஒரு மல்லிகை பந்தலும் இருக்கு.... அதோட வாசம் அப்படியே ஆளை தூக்கும்... அந்த வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருக்கு... இரவு நேரத்தில் வெளிச்சத்திற்காக அங்க இலாம்பு விளக்கு வைத்திருப்பாங்க....அந்த வெளிச்சத்தில் அந்த இடம் அவ்வளவு அழகா இருக்கும்... இங்க பல லட்சம் செலவு பண்ணி வீட்டை அலங்கரிக்கிறாங்க... ஆனா அங்க அந்த அந்த சுண்ணாம்பு அடிக்கப்பட்ட அந்த மண்வீடு இங்குள்ள வீடுகளோட அழகையே மிஞ்சிரும்..... அதோட அங்கு மரங்கள் இருப்பதால எப்போதும் பறவைகள் சத்தம் இருந்துட்டே இருக்கும்... அங்கிருக்க தென்னை மரத்தோட இளநீர் செம்ம டேஸ்ட்... வெயில் காலத்துக்கு ரொம்ப இதமா இருக்கும்... அந்த இடத்தை சுற்றி வேலி அமைச்சிருப்பாங்க... அந்த வேலியில் ஒரு இடத்தில சின்ன கதவு இருக்கும்.... அது கம்புகளை இணைத்து அமைக்கப்பட்டிருக்கும்.... வீட்டிற்கு வெளியே சின்ன திண்ணை இருக்கும் அங்க உட்கார்ந்து அந்த வியூவை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்..... அந்த திண்ணையில் ஒரு இலாம்பு தொங்கிட்டு இருக்கும்....அந்த திண்ணையில் உட்கார்ந்த சும்மா குளு குளுனு காற்று வீசும். அதை அப்படியே உள்ளெடுத்து வெளிய விட்டா அவ்வளவு சுகமா இருக்கும்.....அப்புறம்” என்று மீதி பாடலை ஒலிக்கவிட்டான் அஸ்வின்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
“அந்த ரம்மியமான சூழலில் நீயும் நானும் மட்டும் இருக்கனும்.... நீ மடிசாரி கட்டிக்கிட்டு அந்த திண்ணையில் சாப்பிட அமர்ந்திருக்க எனக்கு நீ உன் கையால் சமைத்த சமையலை பரிமாற அதை நான் உன்னை ரசித்தவாறே சாப்பிடனும்...... நான் சாப்பிட்டு முடிந்தோன நான் என் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உனக்கு பரிமாறனும்..... நீ உன்னோட சாப்பாட்டில் கொஞ்சம் உன் கையால் எனக்கு ஊட்டி விடனும்..... நானும் உணவை வாங்கும் சாக்கில் உன் கையை மெல்ல கடிக்க நீ ரொம்ப வலித்த மாதிரி கத்தி என்னை முறைக்கனும்.... நானும் சிரிச்சிட்டே உன்னை பார்த்து கண்ணடிக்க நீ அதில் உன் முகம் சிவந்திருக்க அந்த நிலவொளியில் எனக்கு அது போதையேற்றனும்...... சாப்பிட்டு முடிந்தவுடன் நான் வெளி வாசலில் மரக்கட்டிலை எடுத்துபோட்டு உட்கார்ந்திருக்க நீ எனக்கு வெற்றிலை மடிச்சி குடுக்கனும்......அதை வாங்கி நான் கொஞ்சம் சாப்பிட்டு உனக்கு கொஞ்சம் ஊட்டி விடனும்.... அந்த வெற்றிலை மென்னுகிட்டே நான் உன்னை என்னோடு அணைத்து அந்த வானத்தில் காய்ந்து கொண்டிருக்கும் நிலாவை ரசிக்கனும்..... அந்த நேரம் பனி பொழிய நீ குளிர்தாங்காம என்னை இறுக்கமா அணைச்சிக்கனும்.....உன் அணைப்பு என்னை பித்தனாக்க நான் உன் காதில் அதை என்னோட காதல் மொழியில் உறைக்கும் போது நீ வெட்கப்பட்டு என்னை தள்ளிவிட்டுட்டு எழும்பி ஓடனும்... நீ என்னை விட்டு ரொம்ப தூரம் ஓடாதவாறு உன் கையை பிடித்து நான் இழுக்க நீ அப்படியே என் மேல வந்து விழ என்னை நிமிர்ந்து பார்க்க முடியாம வெட்கப்பட்டு என் நெஞ்சில் சாய்ந்து கொள்ளனும்... உன் நாடி பிடித்து நான் தலையை உயர்த்த நீ அதை தடுக்க நான் என் மறுகையால் உன் இடுப்பை கிள்ள நீ துள்ளி விலகும் போது நான் உன்னை பார்த்து இஞ்சி இடுப்பழகி பாட்டு பாடுவேன்... அதுக்கு ஏற்ற மாதிரி நீயும் என்கூட சேர்ந்து ஆடுவ......” என்று அஸ்வின் ஒரு கிறக்கத்துடன் தன் கற்பனையை கூற சாருவோ அவனை பார்த்து பலமாக சிரித்தாள்.... அதில் கலைந்தவன்
“ஏன் ஜிலேபி சிரிக்கிற??? நான் சொல்லுறது ரொம்ப மொக்கையா இருக்கா???”
“அவ்வளவு மொக்கை இல்லை.... ஆனா எப்படி ரௌடிபேபி என்ன பாட்டு பாடுவனு கூடவா பிளான் பண்ணுவ???? இப்படியா டா ஹனிமூனை ஒருத்தன் பிளான் பண்ணுவான்??”
“ஹாஹா ஜிலேபி....இது டீசர் தான் மா.... நீ மெயின் பிக்கசரை பார்க்கும் போது இன்னும் மெர்சர் ஆகிருவ”
“அப்படியா பேபி சரி இப்ப டீசரில் நீ பாடப்போறேனு சொன்ன பாட்டை இப்ப பாடிக்காட்டு???” என்று சாரு கூற அஸ்வின் பாடத்தொடங்கினான்...
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான …
என்று அவர்களுக்கு இடையிலான அந்த இனிய நாள் நினைவுவந்து அவளது மனதை இனிமேல் அந்த நாள் வராதா என்று ஏங்கச் செய்தது...அவளது ஏக்கம் அதிகமாக மனமோ உன் முடிவு என்ன என்ற கேள்வியை எழுப்பி அந்த இனிய ஏக்கத்தை கலைத்தது... அதன் விளைவாக அவளிற்கு கண்ணீர் பெருக இரவு முழுவதும் கண்ணீரில் கரைந்தாள்..... அதன் விளைவாக காய்ச்சல் அவளை சிறைபிடித்தது.....இரண்டு நாட்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தவள் மூன்றாம் நாள் கண்விழிக்கையில் ஆஸ்பிடலில் இருந்தாள்....அவள் கண் விழித்ததும் அவளருகே வந்த ஷெண்பா
“இப்ப உடம்பிற்கு எப்படி இருக்கு சாருமா???”
“நான் எங்கே இருக்கேன் சித்தி??? எனக்கு என்னானது???”
“ஆ... நீ ரெண்டு நாளா சொர்க்கத்தில தூங்கிட்டு இருந்த இப்போ தான் உன்னை அங்க இருந்து எழுப்பி கூட்டிட்டு வந்தோம்” என்று ஷெண்பா பின்னாலிருந்து சஞ்சு குரல் கொடுக்க
“நீ எப்போ சிங்கப்பூரில் இருந்து வந்த???”
“நான் நேற்று காலையிலேயே வந்துட்டேன்... அப்போ அஸ்வின் தான் கால் பண்ணி உன்னை அட்மிட் பண்ணி இருக்கதா சொன்னாரு.... நான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்...”
“ஆமா சாரு மா உனக்கு காய்ச்சல்னு தெரிந்தவுடன் அந்த தம்பி தான் டாக்டரை கூட்டிட்டு வந்துச்சி...நீ ஜுரத்தில விடாம அனத்திட்டு இருந்த.... நான் டாக்டர் நம்பரை உன்னோட போனில் தேடும் போது அஸ்வின் தம்பி கால் பண்ணிச்சி.... அதுகிட்ட விஷயத்தை சொன்னவுடன் உடனே கையோட டாக்டரை கூட்டிட்டு வந்திச்சி... டாக்டர் உன்னை செக் பண்ணி பார்த்திட்டு உன்னை அட்மிட் பண்ணணும்னு சொல்லிட்டாரு..ரெண்டு நாளா நீ சுய நினைவே இல்லாம இருந்த... சஞ்சு தம்பி வர வரைக்கும் அஸ்வின் தம்பி தான் துணைக்கு இருந்தார்...சஞ்சு தம்பி தான் அவரை வற்புறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்...” என்று நடந்த அனைத்தையும் ஷெண்பா ஒப்பிக்க சாருவிற்கு இனியும் அஸ்வினை பிரியும் முடிவு சாத்தியமல்ல என்று உறுதியானது....தனக்கு ஏதும் என்றால் ஓடி வருபவன் எந்த காலத்திலும் தான் அவனை விட்டு பிரிய அனுமதிக்க மாட்டான் என்று அவளுக்கு நிச்சயமானது..... இனிமேல் என்ன செய்வது என்று யோசிக்கத்தொடங்கினாள்......
???????????????????????????????????????????
அன்று மதியம் அஸ்வின் சாருவை பார்க்க வந்திருந்தான்.......
அப்போதுதான் தூங்கப்போவதாக கண்மூடிய சாரு அவன் வந்தது தெரிந்ததும் தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.... அவன் வந்ததும் அவனை சாருவின் துணைக்கு அமர்த்திவிட்டு ஷெண்பா காண்டீன் சென்றார்...
அவள் மருந்தின் வீரியத்தில் உறங்குவதாக நினைத்து அவள் கையை பிடித்து அவளிடம் பேசத்தொடங்கினான் அஸ்வின்...
“ஏன் ஜிலேபி..உன்னை நீயே வருத்திக்கிற???? அப்படி என்ன கஷ்டம் உனக்கு....????
எது உன்னோட மனதை இப்படி கஷ்டப்படுத்துகிறது???
உன்னோட ரௌடிபேபிகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன கஷ்டம்????
உன் ரௌடிபேபி எப்பவும் உனக்காக இருப்பேன்....
நீ சுயநினைவே இல்லாமல் ஜுர வேகத்தில் அனத்திட்டு இருந்ததை பார்த்தப்போ நான் செத்து பிழைச்சிட்டேன்.....
ஜுரம் வருகிற அளவுக்கு நீ ஏன் அழுத??? உன்னை யாரு அப்படி கஷ்டப்படுத்தினா???? ரெண்டு நாளா நீ சுயநினைவு இல்லாம படுத்திருந்தாலும் திடீர் திடீர்னு ஏதோ சொன்ன....
அப்புறம் பேபி என்னை மன்னிச்சிருனு புலம்புன...........
என்னா நடந்திச்சினு தெரியாம நான் திண்டாடிப்போயிட்டேன்.......
எந்த கஷ்டமா இருந்தாலும் அதை நமக்குள்ளே போட்டு புழுங்குவதால எந்த நன்மையும் இல்லை.....
சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்குரிய முடிவை எடுக்கனும்....
அதை விட்டுட்டு உனக்குள்ளே அதை வைத்துக்கொண்டால் அது உன்னை தான் பலவீனமாக்கும்.... இது ஏன் உனக்கு புரியமாட்டேன்குது ஜிலேபி??????
நீ கஷ்டப்படுறது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் வலிக்குது......
இந்த இரண்டு நாளா நான் பட்ட அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...........
நீ ஏன் ஜிலேபி உன்னோட கஷ்டத்தை என்கிட்ட பகிர்ந்துக்காம இருக்க???? சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்வதற்கு மட்டுமா நம்ம உறவு?????
அப்போ உன்னோட கவலையை துக்கத்தை எல்லாம் என்னோட பகிர்ந்துக்க மாட்டியா??? அதற்கான சுதந்திரத்தை உனக்கு நான் கொடுக்கலையா????
அவ்வளவு தரம்கெட்டவனாகவா நான் உன்கிட்ட நடந்துகிட்டேன்??????
இது தான் நான் உன்னை காதலித்த விதமா???? இதுக்கு பேர் காதல் தானா?? என்னை உயிருக்குயிராய் விரும்பிய உன்னை பற்றி கவலைப்படாமல் நீ சந்தோஷமாக இருக்கிறனு நினைச்சது என்னோட தப்பு தான்.....ஆனா இந்த தப்பு இனிமேல் நடக்காது.... உனக்கு நான் இப்போ பிராமிஸ் பண்ணித்தாரேன்... இனிமே உன் மனதை பாதிக்கின்ற மாதிரி எந்த பிரச்சனையும் உன்னை நெருங்க விடமாட்டேன். அது எதுவாக இருந்தாலும்....... நீ எந்த பிரச்சினைக்கு பயந்தும் என்னை விட்டு விலகனும்னு நினைக்கக்கூடாது...... பிரிவு எதற்கும் தீர்வு இல்லை..... அப்படியே நீ என்னை பிரிய நினைச்சா இந்ந அஸ்வினோட இன்னொரு பக்கத்தை நீ பார்ப்ப......” என்றுவிட்டு அவள் தலையை தடவிக்கொடுத்தான் அஸ்வின்... அப்போது சித்ரா வர அவரிடம் சொல்லிக்கொண்டு அஸ்வின் கிளம்பி விட்டான்.......
அவன் சென்றதும் சாருவிற்கு அஸ்வின் கூறிய ஒவ்வொன்றும் அவளது இதயத்தை வருடிச்சென்றது..... தன்மீது அவன் கொண்ட காதலின் ஆழம் அவளிற்கு அவனது பேச்சில் இருந்து தெரிந்தது....... அவன் எக்காலத்திலும் தன்னை அவனிடம் இருந்து பிரிய விடமாட்டான் என்று புரிந்தது......அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை எதிர்க்கவும் துணியமாட்டான்.... ஆனால் அந்த சந்தர்ப்பம் அவனது குடும்பம் மூலம் உருவாக்கப்பட்டால் அவன் தனது குடும்பத்தையும் எதிர்ப்பான்....அவ்வாறு எதிர்க்கும் பட்சத்தில் அவனை அவனது குடும்பத்தில் இருந்து பிரித்த பாவியாகி விடுவேன்...... நான் அவனை விரும்பக் காரணமே அவனது குடும்பம் தான்.... அப்படி இருக்கும் பட்சத்தில் எனது சுயநலக்காதலுக்காக அந்த அன்பான கூட்டில் இருந்து எனது அஸ்வினை பிரிக்க நினைப்பது உசிதம் தானா?????
இல்லை அப்படி நடக்க ஒரு போதும் விட மாட்டேன்..... இந்த சிக்கலுக்கு என்ன முடிவு எடுப்பதென்று எனக்கு தெரியவில்லை.... ஆனால் இந்த சிக்கல் அஸ்வினுடைய வாழ்க்கையை பாதிக்க விடமாட்டேன்....அவன் தன் குடும்பத்தவரின் மகிழ்ச்சிப்படி இருக்கட்டும்.....
இங்கு அவன் கண் முன்னாடி இருப்பது தான் அவனை தொல்லை செய்கிறது....
சில காலத்திற்கு அவனுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தால் அவன் என் மீது கொண்ட காதலை மறக்கச்செய்ய முடியும்.... அந்த இடைவெளியில் அவனது குடும்பத்தினர் அவனை பேசி சரிகட்டி விடுவர்...என்று முடிவெடுத்த சாரு உடனடியாக சஞ்சுவை அழைத்தாள்..........
“சஞ்சு உனக்கு பதிலா இந்த டைம் நான் சிங்கப்பூர் போறேன்.... அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை பண்ணு.....”
“என்ன சொல்லுற சாரு...??? இப்போ உன்னால எப்படி அங்க போக முடியும்??? இப்போ தான் நீ கொஞ்ச கொஞ்சமா ரெக்கவர் ஆகிட்டு வர்ற.... அதோட இப்போ அங்க போனா குறைந்தது சிக்ஸ் மன்த்ஸ் அங்க இருக்கனும்..... உனக்கு அது சரிப்படாது சாரு.... நீ இதை அஸ்வின் கிட்ட சொல்லிட்டியா???”
“இங்க நான் சார்மன்னா அவர் சார்மன்னா???? நான் எது செய்தாலும் அவர்கிட்ட கேட்டுட்டு தான் செய்யனுமா??? இது என்னோட கம்பனி..... அதோட இது பிசினஸ் ரிலேடட் ட்ரிப்.... அதுக்கு நான் அவர்கிட்ட பர்மிஷன் வாங்கனும்னு எந்த அவசியமும் இல்லை..... நான் இன்னும் ஒன்வீக்கில் புல்லா ரிக்கவர் ஆகிருவேன்.. சோ நான் சிங்கப்பூர் போறதுக்கான் அரேன்ஜ்மன்சை நீ பண்ணு...”
“இல்லை சாரு.....”
“நோ மோர் குவெஸ்ஷன்ஸ் சஞ்சய்...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் சாரு......
சஞ்சுவை சமாளிக்க முடிந்த சாருவால் அஸ்வினை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை..... பார்வையாலே அவளை கண்டுகொள்ளும் அவனை சமாளிப்பது முடியாத காரியம்... ஆனால் அவனை சமாளிக்காவிட்டால் தான் நினைத்தது நடவாது..... அந்த ஒரு வாரத்தில் சாரு ஷெண்பாவின் கவனிப்பால் நன்றாக தேறிவிட்டாள்.... இடையில் அவளை பார்க்க வந்த அஸ்வினோடு அவள் முகம் கொடுத்து கூட பேசவில்லை..... அவனும் அதை பெரிது படுத்தாது அவளை நலம் விசாரித்துவிட்டு சென்றுவிட்டான்..... சித்ராவும் கவியும் சாருவை பார்க்க வந்தனர்... அஸ்வினிடம் முகம் திருப்பிய சாருவால் அவர்களிடம் அதே போல் நடந்துகொள்ளமுடியவில்லை..... அஸ்வினை மட்டுமே தன் வாழ்வில் இருந்து விலக்க வேண்டுமென நினைத்தாளே தவிர மற்ற அனைவரும் அவள் குடும்பத்தினராகவே எண்ணினாள்.....
சித்ராவிடம் கிருஷ்ணர் பற்றி விசாரிக்க அவர் இப்போது நலமாக இருப்பதாகவும் அவரிற்கு அதீத அதிர்ச்சி தரக்கூடிய எந்த விடயத்தையும் அவரிடம் தெரியப்படுத்த வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்தியதாகவும் சித்ரா கூறினார்.... சித்ரா கூறியதை கேட்ட சாரு தன் முடிவு சரி தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்...
அதன் பின் நாட்கள் பறக்க சாரு சிங்கப்பூரிற்கு பறந்தாள்....
பிளைட்டில் ஏறி அமர்ந்த சாருவிற்கு சஞ்சு பேசியவை அனைத்தும் மனதில் ஓடியது.....
“இப்போ நீ சிங்கப்பூர் டிரிப் போவதற்கு என்ன அவசியம் நான் போவதாக தானே இரண்டு பேரும் முடிவு பண்ணி இருந்தோம்.... இப்போ எதுக்கு திடீர்னு பிளானை மாத்தின???
யாருக்கு பயந்து இப்போ நீ சிங்கப்பூரிற்கு ஓடுற???? அஸ்வினுக்கு பயந்தா இல்ல உன் மனசாட்சிக்கு பயந்தா??” என்ற சஞ்சுவின் கேள்வியில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சாரு...
“என்ன அப்படி பார்க்குற???? எனக்கு உன்னை பற்றியும் தெரியும். இந்த காதல் மனுஷனை படுத்திற பாட்டையும் தெரியும்.... இப்போ எதுக்கு சிங்கப்பூர் போறதுல பிடிவாதமாக இருக்க??
முதல்ல கேட்டப்போ முடியாதுனு சொன்ன நீ இப்போ போறேனு பிடிவாதம் பிடிக்கிறேனா அதுக்கு காரணம் நிச்சயம் அஸ்வினா மட்டும் தான் இருக்கும்......ஆனா அஸ்வின் கிட்ட மறைமுகமா விசாரிச்சப்போ அவர் அப்படி ஒன்றும் சொல்லலை... சோ பிரச்சனை உன் சைடில் தான்..... நீ சிங்கப்பூர் போறதுக்கு முடிவெடுத்த காரணத்தை நீ எனக்கு சொல்லியே ஆகனும்.... ஏதும் சொல்லி மழுப்பலாம்னு நினைக்காத.......என்னைப்பற்றி உனக்கு நல்லாவே தெரியும்..... நான் கோபம் வந்தா அஸ்வின் மாதிரி உன்னை கொஞ்சிட்டு இருக்க மாட்டேன்...சொல்லிட்டேன்...”
“இல்ல சஞ்சு அப்படிலாம் ஒன்றும் இல்லை கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது இடம்மாறி இருக்கலாம்னு தோணுச்சி...அதான் இந்த டிரீப்பை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைத்தேன்”
“சாரு உனக்கு முதலிலேயே சொல்லிட்டேன். என்னை பொய் சொல்லி சமாளிக்க நினைக்காத... சொல்லு எந்த விஷயம் உன்னை டிஸ்டப் பண்ணுது.....???” என்று சஞ்சய் கேட்க இதற்கு மேல் அவனிடம் மறைக்கமுடியாது என்று எண்ணி தான் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்ததற்கான காரணத்தை கூறினாள்....
அதை முழுவதும் கேட்ட சஞ்சு அவளை தாறுமாறாக திட்ட தொடங்கினான்...
“சாரு நீ எப்போ இவளோ முட்டாள் ஆன??? உன்னை பற்றி நான் எவ்வளவு உயர்வா நினைத்திருந்தேன்....நீ ரொம்ப போல்ட் கேரெக்டர்.... எந்த சிட்டுவேஷனையும் ரொம்ப ஸ்மார்ட்டா ஹாண்டில் பண்ணுவ....... நீ எப்பவும் எதுக்காகவும் வொரி பண்ணாம எல்லாத்தையும் இறங்கி செய்வனு நினைச்சிருந்தேன்..... ஆனா நீ இப்படி கேனத்தனமா யோசிப்பனு நான் கனவுல கூட யோசிக்கலை.....நீ இதை அஸ்வின் கிட்ட சொன்னியா???”
“இல்லை..சொல்ல எனக்கு தைரியம் இல்லை.....”
“சொல்லிறாத.... பயபுள்ள உன்னை துரத்தி துரத்தி அடிப்பான்...... உனக்கு அஸ்வினை பற்றி எவ்வளவு தூரத்திற்கு தெரியும்னு எனக்கு தெரியாது..... அவன் ஏதாவது டிசைட் பண்ணிட்டான அவனை கன்வின்ஸ் பண்ணுறது ரொம்ப கஷ்டம்.... அவனுக்கு எப்பவும் தன்னோட முடிவு சரியா தான் இருக்கும்னு கான்பிடன் அதிகம்.... அதே மாதிரி அவனோட டிசிஷன்ஸ் கரெக்ட்டா தான் நான் பார்த்தவரையில் இருந்திருக்கு..... சோ அவ்வளவு சீக்கிரம் உன்னை ஓடி ஒழிய விடமாட்டான்.... அதே மாதிரி உன்னை எப்படி சரி பண்ணுறதுனு அவனுக்கு தெரியும்.... அதனால உன்னோட இந்த டிசிஷனை ரீகன்சிடர் பண்ணுறது உனக்கு நல்லது.... இல்லைனா உன் பக்கம் தான் அடி பலமா இருக்கும்...பிறகு நீ ஒரு வார்த்தை சொல்லலைனு என்கிட்ட சொல்லக்கூடாது..... அதோடு என்னால அஸ்வின்கிட்ட அடி வாங்க முடியாது சொல்லிட்டேன்......”
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க..... நான் சிங்கப்பூர் போகத்தான் போறேன்.... நான் நினைத்தபடி அஸ்வின் அவங்க வீட்டினர் விருப்பப்படி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கட்டும்... அது தான் எனக்கு சந்தோஷம்.....”
“எனக்கு என்னமோ உன்னோட எண்ணம் உல்டா ஆகப்போகுதுனு தோனுது..... எனிவே ஆல் த பெஸ்ட்...” என்று சஞ்சு கூறியது அவளது மனத்திரையில் ஓடியது.....
சஞ்சுவிற்கு அஸ்வினை பற்றி தெரிந்த அளவு கூட ஏன் சாருவிற்கு அவனைப்பற்றி தெரியவில்லை.... சாருவை எப்போதும் அஸ்வின் தாங்குவதால் அவனது இன்னொரு பக்கத்தை அறியத் தவறினாளா சாரு??