யாசிக்கிறேன் உன் காதலை -15
நேகா மட்டும் தனியாக நின்று,'நா நினைக்கிறது கரெக்டா என்னன்னு தெரியல, நா எடுக்குற முடிவு யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது, எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு குடு, யாரையும் கஷ்டப்படுத்த கூடாது, அபிக்கு துருவ கல்யாணம் பண்ண விருப்பமில்ல, அவங்க கல்யாணம் நடக்கக் கூடாது, எப்படியாச்சும் அபிய ரவீன் கூட சேர்த்துவை' என்று வேண்டிக் கொண்டு வெளியே வந்தாள். அவள் கையை யாரோ பிடித்து இழுத்தனர்.
நேகாவை தூணின் மேல் சாய்ந்து அவளின் வாயில் கை வைத்து மூடினான் துரு. நேகா அதிர்ச்சியில் விரிந்த கண்களுடன் அவனைப் பார்த்தாள்."கத்தாத பிராடு.. பிராடு.. நீதானே விரு, ரிஷி,நந்துவ பேச வச்ச" என்றான் கைகளை எடுத்து முறைத்தபடி..
"ஈஈஈஈஈ.. அப்படில்லாம் இல்லையே!!" என்றாள் இழிப்புடன்.
"ஓய்! பிராடு அவனுங்க அந்த அளவுக்கு யோசிக்க மூளை இல்ல, நல்லா ஏத்திவிடுற அவனுகளும் நீ சொன்னபடி ஆடுறானுங்க" என்றான் பொய்யான முறைப்புடன்.
"இதுக்கு நீ என்கிட்ட தேங்க்ஸ் தான் சொல்லணும் மேன் அதவிட்டுட்டு என்னைய இப்படி மிரட்டுற என் கையை விடு" என்றாள் முகத்தை திருப்பியப்படி.
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, "நேத்துதான் அவளோ கலவரம் நடந்தது, இன்னைக்கி நீ தான் இப்படி பேச வச்சனு தாத்தாவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா மறுபடியும் ப்ராப்ளம் தானே வரும் கொஞ்சம் அமைதியா இரு டி" என்றான் அவள் முகத்தில் இருந்த முடியை காதுக்குப் பின்னால் சொருகியபடி.
"ம்ம்.. சரி தேவ் தாத்தா இல்லாதப்ப பண்றேன்" என்றாள் குறும்புடன்.
"அப்ப கூட கம்முன்னு இருக்கேன்னு வாயில வருதா பாரு" என்றான் பொய்யான முறைப்புடன்.
"ரெண்டு பேரும் சாப்பிட வராம இங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?? சாப்பிட வாங்க" என்றார் முல்லை. இருவரும் உள்ளே சென்று சாப்பிட்டனர்.
"ரவீன் நீ வெயிட் பண்ணு நா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துறேன், போலாம்" என்று நேகா வேகமாக மாடிக்கு சென்றாள்.
"ரெண்டு பேரும் எங்க போறீங்க??" என்றார் தாத்தா.
"அவளுக்கு புக்கு வாங்க போறோம் தாத்தா" என்றான் ரவீன்.
"சந்தோஷ் நீ அவ கூட போக வேண்டியதுதானே! ரவீனையும் அவளையும் கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்கு ஒன்னா வெளிய அனுப்பனும், குணா இதெல்லாம் என்ன??" என்றார் குணாவிடம்.
"ரவீன் போலாம்" என்று ஜீன்ஸ் மேலே டாப் போட்டு சிறிய சைடு பேக்குடன் கீழே வந்தாள் நேகா.
"நேகவதி சந்தோஷ் நந்து கூட போயிட்டு வா எதுக்கு ரவீன் கூட போயிக்கிட்டு??" என்றார் கோபத்தை அடக்கியவாறு.
"வாவ்! எவ்ளோ அக்கறை சூப்பர் தாத்தா ஆனா பாருங்க புக் அடர் கொடுத்தது, வர வச்சது ரவீன் தான், அவனுக்கு தான் தெரியும் அதான் போறேன்". தாத்தா ஏதோ சொல்ல வருவதை பார்த்ததும்,"வெய்ட் தாத்தா அதுக்கு எதுக்கு நீ போறேன்னு தானே கேட்கிறீங்க?? நா கேட்ட புக் இல்லாம வேற புக் வந்துருந்தா?? அப்ப ரெண்டு வேலைதானே அதான் நா போறேன் இதுக்கு மேல விளக்கம் சொல்லனுமா தாத்தா" என்றாள் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி.
"ஏங்க அவ போயிட்டு வரட்டும் ரவீன் கூட போயிட்டு வந்து கல்யாணத்துக்கு சம்மதம் கூட சொன்னாலும் சொல்லுவா" என்றார் அபிராமி பாட்டி மெதுவாக.
"சரி போயிட்டு வா" என்றார் தாத்தா முறைப்புடன்.
"பர்மிஷன் வாங்க வெயிட் பண்றேன்னு நினைச்சிங்களா?? ஓ...நோ தாத்தா எப்ப என் கல்யாணத்த நீங்களே! முடிவு பண்ணுனா போதும்னு நினைச்சிங்களோ! அப்பவே உங்க பர்மிஷன் வாங்குறத ஸ்டாப் பண்ணிட்டேன்".
"நேகா" என்றார் அகிலா கண்டிப்பான குரலில்.
"மீ... டோன்ட் வொர்ரி ஜில்.." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகி," டாடி.. மாமா.. பாய், வா ரவீன்" என்று அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள்.
"குணா உன் பொண்ணுக்கு கொழுப்பு ஜாஸ்தி டா ரவீன் கூட போயிட்டு வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவானு அபிராமி சொல்லவும் தான் போகவிட்டேன், அவ மட்டும் வந்து சம்மதம் சொன்னாலும் சரி, சம்மதம் இல்லனு சொன்னாலும் சரி கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அத யாராலும் மாத்த முடியாது" என்று கோபமாக தாத்தா வெளியே சென்றார்.
"அண்ணா அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்??" என்றபடி அவர் தம்பிகள் இருவரும் சமாதானம் செய்ய பின்னாலே சென்றனர்.
"மச்சான் உன் பொண்ணு செம்ம போல்ட்டா இருக்கா, மாமாவோட மறு உருவமா இருப்பா போல" என்றார் நாதன்(துரு அப்பா) சிரிப்புடன்.
"ஆமா மாமா செம்ம போல்ட் தான் அபியும் ரொம்ப போல்டான பொண்ணு தான் இங்க வந்ததும் அவளல ஏதும் ப்ராப்ளம் வரக்கூடாதுன்னு அமைதியா இருக்கா".
"இங்க நடந்தத எல்லாம் முல்லை சொன்னா எப்படா உங்க எல்லாரையும் மீட் பண்ணுவோம்னு நினைச்சிக்கிட்டே வந்தோம்" என்றார் குமரன்(ரிஷி அப்பா).
"ஆமா மித்ரா வேற போன்ல பேசுறப்ப அபி நேகா புராணம்தான்" என்றார் பிரகாஷ் சிரிப்புடன்.
"டாடி தாத்தா நினைக்கிறது என்னைக்குமே நடக்காது ரொம்ப ஃபோர்ஸ் பண்ணுனா நேகா நீயும் வேணா உன் உறவும் வேணாம்னு சொல்லி கிளம்பி போயிட்டே இருப்பா, எல்லாரும் அபி மாதிரி இருக்க மாட்டாங்க, உங்க அப்பா கிட்ட சொல்லி புரிய வைங்க" என்றாள் அபி கோபமாக.
"அபி" என்றார் அகிலா கண்டிப்பான குரலில்.
"என்ன மீ என்னைய அடக்க பாக்குறீங்களா இந்த மாதிரி என்னைய அடக்குற வேலைய இதோட விடுங்க அப்புறம் என்னோட கோவத்த பார்ப்பீங்க" என்றாள் கோபமாக.
"அபி ரிலாக்ஸ்டா பார்த்துக்கலாம்" என்றார் குணா ஆறுதலாக.
"டாடி இட்ஸ் வெரி பேட் உங்களால எப்படி அமைதியா இருக்க முடியுது" என்றாள் தியா சலிப்புடன்.
"டாடி உங்க டாடி ஏன் இப்படி பண்றாங்க??" என்றாள் ஆதி வருத்தமாக.
"ஃபீல் பண்ணாத ஆதி தாத்தா நினைக்கிற எதுவும் நடக்காது நாங்க இருக்கோம் தடுக்க" என்றான் சந்தோஷ் ஆறுதலாக.
"இல்ல சந்தோஷ் எனக்கு இது எல்லாம் சுத்தமா பிடிக்கல நா வீட்டுக்கு போறேன் டாடி".
"ஆதி ஏன்டா?? இரு இப்ப எதுக்கு இப்படி பேசுற??" என்றான் விரு வேகமாக.
"நா கொஞ்சம் மூட் அவுட்டா இருக்கேன் விரு நா ஈவினிங் வரேன், தியா நீ அபி கூட இரு நேகி வந்ததும் கால் பண்ணு" என்றாள் தியாவிடம்.
"நா பாத்துக்குறேன், அவ வந்ததும் கால் பண்றேன் நீ போயிட்டு வா" என்று அவளை அணைத்து விலகினாள்.
"ஆதி நானே உன்ன வீட்ல விட்டுட்டு வரேன் வா" என்று சந்தோஷ் ஆதியை அழைத்துச்சென்றான்.
"குணா எனக்கு பயமா இருக்குப்பா" என்றார் அபிராமி பாட்டி.
"கவலபடாதீங்க ம்மா, ஒண்ணு மட்டும் தெளிவாப் புரிஞ்சுக்கோங்க என் ரெண்டு பொண்ணுங்களும் என்னைய மாதிரி கிடையாது, மனசுல நினைச்சத தைரியமா சொல்லுவாங்க, என்னைக்கும் பயப்பட மாட்டாங்க என்ன அபி??" என்றார் குணா அபியிடம்.
அபியின் மனதில் சுழென்று வலி எடுத்தது,"ம்ம்.." என்று தலையை ஆட்டிவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினாள்.
"தியா அபிக்கு என்னாச்சு??" என்றார் அகிலா கவலையாக.
"ஆமா அடிக்கடி அவ ஏன் ஒரு மாதிரியா இருக்கா டா??" என்றார் குணா யோசனையுடன்.
"அவ மூட் அவுட்ல இருக்கா சரியாயிடுவா" என்றாள் தியா சமாதானமாக.
"என்ன துரு நீ எதுவும் பேசாம யோசனையாவே இருக்க" என்றார் நாதன்.
"ஒன்னும் இல்லப்பா டாலுவ பத்தி தான் யோசிக்கிறேன் அவ" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் போன் அடித்தது,"எக்ஸ்கியூஸ் மீ" என போனை எடுத்து பேசி விட்டு வேகமாக வந்து," விரு, ரிஷி , நந்து, சந்தியா வாங்க ஆபீஸ் வொர்க் இருக்கு அப்பா அப்புறம் பேசலாம்" என்று அவர்களை அழைத்துச் சென்றான். பெரியவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
நேகா மாலை ஆறு மணி போல் ரவீனுடன் வீட்டிற்குள் வந்தாள். "ரவி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அபி வேகமாக வந்தாள்.
"என்ன அபி சொல்லு" என்றான் சாதாரணமாக.
"ரவி விலகி இருக்குற மாதிரி ஏன் பேசுற" என்றாள் வருத்தமாக.
"உன் மேல கோவமா இருக்கணும்னு ஆனா என்ன பண்றது நீ எனக்கு உரிமையானவ இல்ல, உரிம இல்லாத இடத்துல எப்படி கோவப்படுறது அதான் என் கோவத்த விட்டுட்டேன்" என்றான் லேசான சிரிப்புடன். அபியின் கண்கள் கலங்கியது.
"ரவீன் ரூம்ல போய் பேசிக்கலாம், தியா மத்தவங்க எல்லாரும் எங்க??" என்றாள் நேகா.
"துரு ரூம்ல ஆபீஸ் ஒர்க் பாக்குறாங்க".
"சரி வாங்க என் ரூமுக்கு போலாம்" என்று அழைத்து சென்று உள்ளே வந்ததும் கதவை தாழ்ப்பாள் போட்டாள்.
"ரவி பிளீஸ் என்னைய புரிஞ்சுக்கோ!!" என்றாள் அபி அழுகையுடன்.
"உன்ன புரிஞ்சனால தான் பொண்ணு கேட்டு வந்தேன், அதுக்கு பெரிய பன்னு தர மாதிரி அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிவு பண்ணியாச்சுன்னு சொல்றாங்க, எனக்கு எப்படி இருந்திருக்கும்??" என்றான் கோபமாக.
"சாரி ரவி என்னால குடும்பம் பிரிஞ்சுட கூடாதுன்னு தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன் ஆனா ஒரு ஒரு நிமிஷமும் ஏன்டா சம்மதம் சொன்னோம்னு ஃபீல் பண்றேன் ரவி, நா துருவோட மனச காயப்படுத்திடுவனோன்னு பயந்துகிட்டே இருக்கேன்" என்றாள் அழுகையுடன்.
"நீ மாமா கிட்ட நம்ம லவ் விஷயத்த சொல்லிருந்தாலே இவ்ளோ! பிரச்சனை வந்திருக்காது, இப்ப பாரு நீ சொல்லாதனால நேகியும் துருவும் இந்த பிரச்சினைல மாட்டிகிட்டாங்க, உன்னால சொல்ல முடியலனா எங்க ரெண்டு பேருல ஒருத்தருக்கு மெசேஜ் பண்ணி இருந்தா கூட இந்த மாதிரி ப்ராப்ளம் வராம பண்ணிருப்போம், இப்ப நீ எடுத்த முடிவால நம்ம நாலு பேரோட வாழ்க்கையும் கேள்விக்குறியா தான் இருக்கு" என்றான் ஆத்திரமாக.
"ரவி நா எதுவும் வேணும்னு பண்ணல" என்றாள் அழுகையுடன் அவன் கையை பிடித்து.
ரவீன் அவளை இழுத்து அணைத்து," சரி அழாத நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, உன்ன பார்த்த நிமிஷத்துல இருந்து நீதான் என் ஓய்ப்னு முடிவு பண்ணிட்டேன், அது நடக்காதுன்னு தெரிஞ்சதும் கோபத்த கண்ட்ரோல் பண்ண முடியல, எனக்கு ரொம்ப வலிக்குது டி" என்று அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்தான்.
"துரு ரொம்ப நல்லவரு யாரையும் எப்பவுமே ஹார்ட் பண்ணி நா பார்த்ததும் இல்ல, யார்கிட்டயும் சின்னதா கூட முகம் சுளித்து பார்த்தது இல்ல இப்ப எப்படி அவர் கிட்ட போய் உன்ன லவ் பண்றத சொல்றது, துருவ பார்த்தாலே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு ரவி" என்றாள் அழுகையுடன்.
"நானும் அதான் யோசிக்கிறேன் துரு கிட்ட சொன்னா ப்ராப்ளம் சால்வ் ஆயிடும் ஆனா அவன் கிட்ட யார் சொல்றது" என்றான் கவலையாக.
"நானே இந்த விஷயத்த சொல்றேன்" என்றாள் நேகா தீவிரமான யோசனையுடன்.
"எப்படி சொல்லுவ??" என்றனர் மற்ற மூவரும்.
"இந்த விஷயத்த தனியா தான் சொல்லணும் அதுக்கு ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் பார்க்கலாம்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது. தியா கதவை திறந்தாள். நந்துவும் ஆதியும் நின்றனர்.
"என்ன நாலு பேரும் இங்கே இருக்கீங்க??" என்றான் நந்து.
"சும்மா தான்டா ஆதி வா எப்ப வந்த??
" என்றாள் தியா.
"இப்பதான் வந்தேன் வெளிய ரவீன் பைக் நின்னது அதான் ரூமுக்கு வந்துட்டேன்".
"கீழ வாங்க டீ குடிக்கலாம், அபி அக்கா அழுதியா??" என்றான் நந்து யோசனையுடன்.
"இல்லடா லேசா தலை வலிக்குது" என்றாள் வேகமாக.
"சரி கீழ வா டீ குடிச்சா சரியா போயிடும்" என்று அழைத்து வந்தான். தாழ்வாரத்தில் தாத்தாவை தவிர அனைவரும் இருந்தனர்.
"சரி பாய் எனக்கு வீட்ல வேலை இருக்கு" என்றான் ரவீன்.
"ரவீன் டீ குடிச்சுட்டு போகலாம்" என்றார் அபிராமி.
"இல்ல பாட்டி நா காலைல வந்தது கிளம்புறேன்" என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
"ரவீன்.." என்று நேகா வேகமாக அவன் பின்னால் சென்றாள். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"என்ன டா??" என்றான் பைக்கில் ஏறி உட்கார்ந்தபடி.
"நாளைக்கு தேவ் கிட்ட எப்படியாச்சும் சொல்லிடுறேன், நைட் அபிக்கு கால் பண்ணி பேசு அவ மேல கோவப்படாத, அவ ரொம்ப அழுகுறா, அவ மட்டும் என்ன பண்ணுவா உன் கோவத்தை ஒதுக்கிட்டு உன் ஹனி கிட்ட பேசு மேன்" என்றாள் லேசான சிரிப்புடன்.
"ம்ம்.. கோவம் இருக்கு தான் நா பேசுறேன் அவ கிட்ட பேசாம எங்க போக போறேன்" என்றான் சிரிப்புடன்.
"சரி பாய்" என்றாள் சிரிப்புடன்.
"பாய் டா" என்று கிளம்பினான். இதனை பார்த்தபடி தாத்தா மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.
நேகா சிறியவர்களிடம் சென்று உட்கார்ந்தாள். வேலையால் வந்து அனைவருக்கும் டீ ஸ்நாக்ஸ்ல கொடுத்தார். ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம் சிறியவர்கள் ஒரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்."நாளயோட திருவிழா முடிஞ்சுடும் அதுக்கப்புறம் கல்யாண வேலை பார்க்கலாம்" என்றார் தாத்தா.
"ம்ம்.. சரி" என்றனர் பெரியவர்கள்.
"நேகவதி" என்றார் தாத்தா எழுந்து தாழ்வாரத்திற்கு நடுவே வந்து, அனைவரும் எழுந்து பக்கத்தில் வந்தனர். நேகா அமைதியாக வந்து நின்றாள்."என்ன முடிவு பண்ணி இருக்க??".
"ஏத பத்தி?? என்ன முடிவு??" என்றாள் குழப்பமாக.
"ரவீன கல்யாணம் பண்றது பத்தி" என்றார் கூர்மையான பார்வையுடன்.
"அதுக்குதான் என் முடிவ முன்னாடியே சொல்லிட்டேனே!!" என்றாள் கூர்மையான பார்வையுடன்.
"மாமா அவளுக்கு தான் டைம் கொடுத்து இருக்கோம்ல சொல்லுவா மாமா" என்றார் அகிலா தயங்கியபடி.
"இப்ப ரவீன் கூட சந்தோசமா தானே போயிட்டு வந்த, அவன் கிளம்புறப்ப கூட சிரிச்சுக்கிட்டே வழியனுப்புனியே!" என்றார் சாதாரணமாக.
"ஓ... காட் சிரிச்சு பேசுனா கல்யாணம் பண்ணனுமா?? நா விரு,ரிஷி, தேவ் கூட சிரிச்சு பேசுறேன் அவங்களையும் கல்யாணம் பண்ண முடியுமா?? ஹ்ம்ம்.. என் முடிவ நா நேத்தே சொல்லிட்டேன், ரவீன எப்பவுமே அந்த மாதிரி பார்க்க மாட்டேன்" என்றாள் உறுதியாக.
"அப்ப எதுக்கு அவன வழியனுப்ப நீ மட்டும் போன" என்றார் கூர்மையான பார்வையுடன்.
"என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க அவன்கிட்ட இம்போட்டன்டா அதாவது முக்கியமா ஒரு விஷயம் பேச தான் போனேன், அது என்ன விஷயம்னு கேட்டா கூட நா சொல்ல மாட்டேன், அதுக்காக எல்லாம் அவன கல்யாணம் பண்ண முடியாது" என்றாள் எரிச்சலுடன்.
"இதுதான் உன் முடிவா" என்றார் கோபமாக.
"ஆமா" என்றாள் அழுத்தமாக.
"அப்ப நா சொல்றதையும் கேட்டுக்கோ துரு அபி கல்யாணம் அன்னைக்கு உனக்கும் ரவீனுக்கும் கல்யாணம் முடிஞ்சாகணும்" என்றார் அழுத்தமாக.
"சவாலா குட் நா சொல்றதையும் கேட்டுக்கோங்க அன்னைக்கு எனக்கு ரவீனுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்காது, உங்களால முடிஞ்சத நீங்க பாத்துக்கோங்க நா மேஜர் மறந்துடாதீங்க" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு முறைப்புடன் மாடிக்கு சென்றாள்.
"தாத்தா அவள எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க அவளுக்கு தான் பிடிக்கலன்னு சொல்லுறால விடுங்க" என்றான் துரு சலிப்புடன்.
"நீ சும்மா இரு துருவ் உனக்கு ஒன்னும் தெரியாது அவ கல்யாணம் நா குறித்த தேதில நடந்தே ஆகணும்" என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு வெளியே சென்றார்.
"ஆ.... இந்த அப்பா எதுக்கு என் பொண்ணோட வாழ்க்கைல விளையாடுறாரு எரிச்சலா வருது, அவள நிம்மதியாவே இருக்க விட மாட்டாரா??" என்றார் குணா ஆத்திரமாக.
"மச்சான் மாமா ஒரு முடிவு எடுத்தா மாத்துறது ரொம்ப கஷ்டம் சரி ஏதாச்சும் பண்ணலாம் பொறுமையா இரு" என்றார் நாதன் சமாதானமாக.
"டாடி நானும் நேகியும் யூஎஸ் கிளம்புறோம்னு உங்க அப்பா கிட்ட சொல்லிடுங்க, அவரு இஷ்டத்துக்கு ஆட நாங்க ஒன்னும் பொம்ம இல்ல" என்றாள் அபி ஆத்திரமாக.
"அபி" என்றனர் அனைவரும் பதறியபடி.
"அபி நீ ஒரு பிரச்சனைய கிளப்பாத நேகாக்கு இந்த முடிவு இல்லனாலும் நீயே சொல்லி கிளப்பிவிட்டுறாத வாய மூடு" என்றார் அகிலா கோபமாக.
"மாம் போதும் அந்த காலத்துலயே டாடி தான் வேணும்னு நீங்க வந்தீங்க, இங்க உங்க பொண்ணுக்கு இஷ்டமே இல்லாம கல்யாணம் பண்ண பாக்குறாங்க அப்ப கூட உங்க வாய மூடிக்கிட்டு தான் இருப்பிங்களா மாம், நீங்களும் பேசமாட்டீங்க பேசுறவங்களையும் பேச விடமாட்டீங்க, இந்த கல்யாணத்துல சம்மதம்னு ரவீன் வாய திறந்து சொன்னானா உங்ககிட்ட??" என்றாள் ஆத்திரமாக. அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். "நீங்களாவே முடிவு பண்ணிட்டீங்களா வாவ்! செம்ம" என்று கைகளை தட்டினாள்.
"அபி குல்டவுன் டென்ஷனாகாத" என்றான் துரு அவள் கையைப் பிடித்து.
"முடியல துரு எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல எப்ப பார்த்தாலும் சண்ட சண்ட இது என்ன வீடா இல்ல வேற ஏதாச்சுமா" என்றாள் எரிச்சலுடன்.
சந்தோஷ் அவள் பக்கத்தில் வந்து அவளை தோளில் சாய்த்து," உனக்கு என்ன பிரச்சனைனாலும் சொல்லு நாங்க உன்கூட தான் இருப்போம்" என்றான் ஆறுதலாக.
"அபிகா தாத்தா சாப்பாட்டுல பேதி மாத்திர கலந்துடலாம் விடு" என்றான் நந்து தீவிரமாக. அபி சந்தோஷிடம் இருந்து விலகி லேசாக சிரித்தாள்.
"இல்லனா தாத்தா தூங்குறப்ப அவர் ரூம்ல பாட்டு போட்டுட்டு ஓடி வந்துடலாம்" என்றான் விரு கிண்டலாக.
"அதெல்லாம் விட என்கிட்ட ஒரு பிளான் இருக்கு, தாத்தா குளிக்கிறப்ப பாத்ரூம் கதவ தாழ்பாள் போட்டுடலாம்" என்றான் ரிஷி தீவிரமாக.
அனைவரும் சத்தமாக சிரித்தனர். "டேய்! எங்க அப்பா பாவம் டா" என்றார் ராஜா கிண்டலாக.
"அப்ப நாங்க பாவம் இல்லையா??" என்றாள் சந்தியா வேகமாக.
"ஆமா பாவம் தான்" என்றனர் பெரியவர்கள்.
"நீங்க எல்லாரும் இப்படி ஒன்னா இருக்குறத பார்த்தா என் கண்ணே பட்டுரும் போல நேகாவ கூப்பிடுங்க சுத்தி போடலாம்" என்றார் அபிராமி பாட்டி.
"நேகி" என்றனர் சிறியவர்கள் சத்தமாக. கீழே எட்டிப் பார்த்தாள். "வா" என்றனர். அவள் வந்ததும் பாட்டி அனைவருக்கும் சுற்றி போட்டார்.
சிறியவர்கள் மொட்டை மாடிக்கு சென்றனர். நேகா அமைதியாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். துரு அவள் பக்கத்தில் சாய்ந்து உட்கார்ந்தான். மற்றவர்கள் வட்டமாக அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தனர்.
'நீ பேசு நீ பேசு' என்று ஆண்கள் ஒருவரை ஒருவர் கண் ஜாடை செய்தனர். தியா அனைவரையும் முறைத்துவிட்டு,"நேகி டென்சனா இருக்கியா??".
"இல்ல தியா யோசிச்சுட்டு இருக்கேன்".
"என்ன யோசிக்கிற??" என்றனர் அனைவரும் பதறியபடி.
"இந்த தாத்தாவ அவங்க அம்மா அப்பா எப்படி சமாளித்து இருப்பாங்கன்னு யோசிச்சுட்டு இருக்கேன், ஏன் இவர் இப்படி இருக்கிறாரு??" என்றாள் எரிச்சலுடன்.
"அதான் தெரியல, ஆத்திரமா வருது" என்றாள் அபி கோவமாக.
"அபி நீ எதுக்கு அத்தகிட்ட அப்படி பேசுற அவங்க ஹார்டவங்கள" என்றான் துரு பொறுமையாக.
"அவங்க பண்ணுனது மட்டும் சரியா?? எங்க டாடி எப்படி சப்போர்டா இருக்காங்க இவங்க ஏன் இப்படி பண்றாங்க?? அதான் அப்படி பேசுனேன்" என்று கோபமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தாள்.
"என்னாச்சு??" என்றாள் நேகா குழப்பமாக.
ஆதி நடந்த அனைத்தையும் சொன்னாள். "ஜானு இப்படி சாக் கொடுக்காத உனக்கு இங்க நல்ல பேரு இருக்கு அத கெடுத்துக்காத" என்றாள் பொறுமையாக.
"நீ மட்டும் ஏன் கெடுத்துக்குற, எனக்கு கோவமா வருது பேபி" என்றாள் எரிச்சலுடன்.
"நா எப்போதுமே இப்படித்தான் ஜானு நீ திடீர்னு இப்படி மாறுனா கஷ்டமா இருக்கும், யூஎஸ் போனா கூட என் ஸ்டடீஸயாச்சும் பார்ப்பேன்" என்றாள் யோசனையுடன்.
அனைவரும் பதறியபடி பார்த்தனர் அபி,ஆதி, தியாவை தவிர. "டாலு ரவீனுக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லன்னு இப்பதான் தெரியும், ஃபேஸ் பண்ணு, தாத்தாக்கு புரியவைக்கலாம், இப்படி நீ கோழ மாதிரி கிளம்பி போக தான் வீரவசனம் பேசுனீயா" என்றான் அவள் கையைப் பிடித்து.
"ஆமா நேகி தப்பான முடிவு எடுக்காத" என்றான் விரு.
"டெய்லி ஒர் ஃபைட் பண்ணி எனக்கு டயர்டா இருக்கு" என்றாள் சோகமாக.
துரு அவளை தோளில் சாய்த்து அணைத்து,"இதுக்காக நீ யூஎஸ் போனா பிராப்ளம் சால்வ் ஆயிடுமா?? ம்ம்.. அப்படியே தான் இருக்கும்" என்றான் பொறுமையாக.
"ம்ம்.." என்று அவன் மார்பில் புதைந்து அமைதியாக இருந்தாள். துரு எதுவும் பேசாமல் தலையை கோதினான்.
"இந்த ப்ராப்ளம எப்படி சால்வ் பண்றது??" என்றான் சந்தோஷ் யோசனையுடன்.
"அதான் தெரியல சந்தோஷ் தாத்தா மேல மேல இப்படி பண்ணுனாங்க நா சும்மா இருக்க போறது இல்ல" என்றாள் அபி கோபமாக.
"அபி நீ இவ்ளோ கோவப்படுவீயா??" என்றாள் சந்தியா ஆச்சரியமாக.
"படுவேன் என் பேபிக்கு ஒரு ப்ராப்ளம்னா நா சும்மா இருக்க மாட்டேன்" என்றாள் கோபமாக.
"ஓய்!! ஜில் நோ கோவம்" என்றான் ரிஷி அவள் தோளில் கை போட்டு அணைத்த படி.
துருவின் மார்பில் ஈரத்தை உணர்ந்து பதறி நேகாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அவள் அழுது கொண்டிருந்தாள்.
நேகா எதற்காக அழுகிறாள்??? கல்யாணம் எப்படி நிறுத்த போகிறார்கள்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்......
யாசிப்பு தொடரும் ..........
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.