

துருவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. "பேபி டால்" என்றார் அகிலா பக்கத்தில் வந்து.
"டாடி அப்ப நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா?? எனக்கான காதல் தேவ் கிட்ட இல்லையா??" என்றாள் கலங்கிய கண்களுடன்.
"அது வந்து இல்லடா" என்றார் வருத்தமாக.
"தப்பு பண்ணிட்டேன் டாடி" என்று அப்படியே முட்டிபோட்டு கதற ஆரம்பித்தாள். அனைவரும் பாவமாக பார்த்தனர் சந்தியா மற்றும் மித்ராவை தவிர. இருவரும் கோபமாக உள்ளே சென்றனர்.
"அழாதடா அழாத" என்று குணா கலங்கிய கண்களுடன் அவளை அணைத்தபடி உட்கார்ந்தார்.
"சாரி டாடி நானே என் தேவ் மனச கஷ்டப்படுத்திட்டேன், யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்னு சொன்ன நானே இப்படி பண்ணிட்டேன் சாரி சாரி சாரி" என்றாள் கதறலுடன்.
அபி, தியா, அகிலா மூவரும் கலங்கிய கண்களுடன் அவளை சுற்றி உட்கார்ந்தனர். அகிலா அவள் முதுகை வருடினார். "அழாதடா துரு கிட்ட பேசலாம் வருத்தப்படாத" என்றார் குணா அவளை விலக்கி கண்ணீரைத் துடைத்தபடி.
"இல்ல டாடி என்னைய மன்னிக்க மாட்டான். நான் லவ் பண்றது எனக்கு இப்ப தான் தெரியும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்ககிட்ட நான் சொல்லிருப்பேன் தானே" என்றாள் அழுகையுடன்.
"ஆமாடா ஆமா சொல்லிருப்ப" என்றார் சமாதானமாக.
"சாரி டாடி சாரி" என்றாள் அழுகையுடன். அனைவரும் அவளை எப்படி சமாதானம் செய்வது என்பது தெரியாமல் வருத்தத்துடன் பார்த்தனர்.
"பேபி டால் போதும் துரு கிட்ட பேசலாம்" என்றார் சமாதானமாக.
"வேணா டாடி வேணா எனக்காக யாரும் தேவ் கிட்ட பேசி அவன கஷ்ட படுத்தாதீங்க வேணா வேணா வேணா" என்றபடி மயங்கி சரிந்தாள்.
"நேகா.. பேபி டால்.." என்று அனைவரும் பதறியபடி அவளை சூழ்ந்தனர். சந்தோஷ் அவளை தூக்கி சென்று ரூமில் படுக்க வைத்துவிட்டு கீழே வந்தான்.
"மாமா நேகாவ மன்னிச்சிடுங்க அவளுக்கு எப்படி துரு மேல லவ் வந்ததுன்னு எனக்கு தெரியல, அவ இப்படி பண்ணுனது தப்புதான் மாமா மன்னிச்சிடுங்க" என்றார் குணா நாதனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு.
"என்ன குணா ஏன் இப்படி பண்ற?? நீ தானே சொன்ன காதல் எப்ப எப்படி வரும்னு தெரியாதுன்னு, அவ காதல இப்படி வெளிப்படுத்திட்டா விடு" என்றார் ஆறுதலாக அவர் கையை பிடித்து.
"இருந்தாலும் அண்ணா துரு அபிய தானே கல்யாணம் பண்ணனும்னு ஆசப்பட்டான், அவன் கோபம் நியாயமானது நேகா அவசரப்பட்டுட்டா மன்னிச்சுடுங்க அண்ணா அண்ணி" என்றார் அகிலா கலங்கிய கண்களுடன்.
"என்னால புரிஞ்சுக்க முடியுது அண்ணி நேகா பண்ணுனது தப்புதான் ஆனா அப்பா எதப் பார்த்து இவ்ளோ கோபப்பட்டு இவங்களுக்கு கல்யாணத்தை முடிவு பண்ணுனாரு அதான் எனக்கு புரியல" என்றார் பார்வதி கலங்கிய குரலில்.
"ஆமா அப்படி என்ன நடந்தது??" என்றனர் மற்ற பெரியவர்கள்.
"அப்பா துருக்கு போன் பண்ணுனேன் எடுக்கவே இல்ல" என்றான் விரு கவலையாக.
"இப்ப என்னங்க பண்றது" என்றார் பார்வதி கலங்கிய கண்களுடன்.
"பார்வதி அவன் டெல்லிக்கு தான் போயிருப்பான் நானும் குமரனும் டெல்லிக்கு கிளம்புறோம், நீங்க எல்லாரும் கல்யாண வேலைய பாருங்க" என்றார் நாதன்.
"மாமா அப்பா கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்திடலாம்".
"என்ன குணா தெரிஞ்சுதான் பேசுறியா மாமா முடிவு பண்ணுன மாதிரி கல்யாணம் நடக்கட்டும் எந்த பிரச்சனையும் வராது, கல்யாண வேலைய எல்லாரும் பாருங்க, குமார் உன் திங்ஸ் எடுத்து வச்சுட்டு வா நானும் கிளம்பி வரேன்" என்று அவர் அறைக்கு சென்றார். பார்வதி பின்னாலே சென்றார்.
"என்னங்க இப்படி ஆய்டுச்சு துரு ரொம்ப கஷ்டப்படுவான்" என்றார் அழுகையுடன்.
"பார்வதி துரு அபிய விரும்புறது எனக்கு தெரியும்மா ஆனா அவன் எதுக்கு கோவில்ல இருந்து வீட்டுக்கு வந்தான், என்ன தான் நேகா அவன கூப்பிட்டுருந்தாலும் நம்ம கிட்ட சொல்லாம ஏன் வந்தான்னு தான் எனக்கு புரியல" என்றார் யோசனையோடு.
"துரு மனச கஷ்டப்படுத்தி இந்த கல்யாணம் நடக்கணுமாங்க அவன என்னால பார்க்கவே முடியல" என்றார் அழுகையுடன்.
"எப்படி நிறுத்த சொல்ற உங்க அப்பா எதுக்கு இவ்ளோ! பிடிவாதம் பிடிக்கிறாருன்னு தெரியல ஆனா இதுவும் நல்லதுக்குதான் பார்வதி, நேகா கிட்ட உன் கோபத்தை காட்டிடாத" என்றார் பொறுமையாக.
"என்னங்க இப்படி சொல்றீங்க அவ சின்ன பொண்ணு அவளுக்கு தோணுனத சொல்லிட்டா அதனால வர பின் விளைவ பத்தி அவ யோசிக்கவே இல்ல அவ்ளோ! தான் சரி நீங்க கிளம்புங்க துருவ பார்த்துக்கோங்க" என்றார் பெருமூச்சுடன்.
"ம்ம்.. சரி" என்று கிளம்ப ஆரம்பித்தார். நாதனும் குமரனும் கிளம்பி சென்றனர். ரவீன் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். அபி,தியா, ஆதி, நேகா, தாத்தாக்கள் தவிர மற்ற அனைவரும் தாழ்வாரத்தில் இருந்தனர்.
"நேகா எங்க??" என்றான் ரவீன் வேகமாக உள்ளே வந்து சிறியவர்களைப் பார்த்து.
"அவ ரூம விட்டு வெளிய வரல" என்றான் ரிஷி.
"அழுதுகிட்டே இருக்கா மாமா" என்றான் நந்து வருத்தமாக.
"மாமா நீங்க அவள சமாதானம் பண்ணலையா??" என்றான் ரவீன் குணாவிடம்.
"எங்க ரவீன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா அழுதுகிட்டே இருக்கா எப்படி சமாதானம் பண்றதுன்னே தெரியல" என்றார் வருத்தமாக.
"ரவீன் உனக்கு அபிய கல்யாணம் பண்ண சம்மதமா??" என்றான் சந்தோஷ் நேரடியாக.
"எனக்கு சம்மதம் சந்தோஷ் துரு எப்படி இருக்கிறான்??" என்றான் கவலையாக.
"தெரியல ரவீன் அவன் டெல்லி போயிட்டான், வீட்ல இருந்த வேலையால் கால் பண்ணி சொன்னாங்க" என்றான் விரு.
"சரி நேகாவ பார்க்கலாம்" என்று மாடிக்கு சென்றான். சிறியவர்கள் மித்ரா மற்றும் சந்தியாவை தவிர மற்றவர்கள் சென்றனர்.
நேகா பெட்டில் படுத்து அழுது கொண்டு இருந்தாள். மற்ற மூவரும் அவளை சுற்றி உட்கார்ந்திருந்தனர். "நேகா" என்று பக்கத்தில் வந்தான்.
"ரவீன்" என்றாள் வீங்கிய முகத்துடன் எழுந்து உட்கார்ந்து.
"என்னடா இப்படி பண்ணிட்ட நீ துருவ லவ் பண்றேன்னு சொன்னதே இல்ல, துருவ ரொம்ப பிடிக்கும்னு சொன்ன அன்னைக்கு உன் கிட்ட பேசுறதுக்கு கூப்பிட்டேன் என்னைய நீ பேசவிட்டுருந்தா உனக்கு எந்த மாதிரி ஃபீலிங் இருக்குன்னு அப்பவே சொல்லிருப்பேன், இவ்ளோ தூரம் பிராப்ளம் வந்திருக்காது" என்றான் வருத்தமாக அவள் கண்ணீரை துடைத்தபடி.
"எனக்கு தெரியாது ரவீன் தேவ்வ நா லவ் பண்றது காலைலதான் தெரிஞ்சது" என்றாள் அழுகையுடன்.
"தாத்தா உள்ளவந்தப்ப என்ன நடந்தது எதனால தாத்தா சத்தம் போட ஸ்டார்ட் பண்ணுனாங்க" என்றான் விரு.
"அப்படி என்னதாண்டா உனக்கும் துருக்கும் நடந்தது" என்றான் சந்தோஷ்.
"நாங்க மூணு பேரும் அதே தான் கேட்கிறோம் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறா" என்றனர் மூவரும் (அபி,ஆதி,தியா).
"நீ ஏதாச்சும் சொன்னாதானே துரு கிட்ட பேச முடியும் சொல்லு" என்றான் ரிஷி.
"சொல்லு நேகி" என்றான் நந்து.
"எனக்காக தேவ் கிட்ட எதுவும் பேசாதீங்க, என்ன நடந்ததுன்னு கேட்காதீங்க நா சொல்ல மாட்டேன், எனக்கும் தேவுக்கும் நடுல யாரும் வராதீங்க" என்றாள் நேகா அழுத்தமாக.
"யாரும் வரல முதல்ல சாப்பிடு" என்றபடி குணா, அகிலா, பார்வதி உள்ளே வந்தனர்.
"அத்த சாரித்த நா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்றாள் அழுகையுடன்.
"எவ்ளோ நேரம் அழுது கிட்டே இருப்ப காலையிலிருந்து சாப்பிடாமலயே இருக்க, நீ சாப்பிடாம இருந்தா துரு வந்துருவானா?? வர மாட்டான், அவன் உன் மேல கோவமா தான் இருக்கான், உன்ன வெறுக்கல, சீக்கிரமாவே அவன் மனசு மாறும் நீ முதல்ல சாப்பிடு" என்றார் பார்வதி சமாதானமாக.
"அத்த சாரியத்த" என்றாள் மீண்டும்.
"எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல, வருத்தம் மட்டும் தாண்டா" என்றார் அவள் கண்ணீரை துடைத்தபடி.
"சரி அழுததது போதும் பேபி டால் முதல்ல சாப்பிடு" என்று குணா வற்புறுத்தி சாப்பாட்டை ஊட்டினார்.
அபி பாலில் தூக்க மாத்திரை போட்டு வந்து அகிலாவிடம் கொடுத்தாள்.அவர் நேகாவை குடிக்க வைத்து தூங்க வைத்தார். அவள் தூங்கியதும் அனைவரும் வெளியே வந்தனர்.
"அபி உனக்கு ரவீன மேரேஜ் பண்ண சம்மதமா??" என்றார் குணா.
"எனக்கு ஓகே டாடி உங்ககிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன்" என்றாள் தயங்கியபடி.
"என்ன??" என்றார்.
அபி அனைவரையும் தயங்கிய படி பார்த்தாள்."சரி அண்ணா நீங்க பேசிட்டு வாங்க நாங்க போறோம்" என்று பார்வதி மற்றவர்களை அழைத்து சென்றார். ரவீன் அங்கேயே நின்றான்.
"ரவீன் இருக்கலாமா டா??" என்றார் அகிலா.
"இருக்கலாம் மீ.. நானும் ரவியும் லவ் பண்றோம்" என்று நடந்த அனைத்தையும் சொன்னாள். அவள் பேசி முடிக்கும் வரை இருவரும் அமைதியாக கேட்டனர். "திடீர்னு பேபி இப்படி சொல்லுவான்னு எனக்கு தெரியாது டாடி அவளுக்கு துருவ ரொம்ப பிடிக்கும் துரு பேபிய ரொம்ப நல்லா பாத்துப்பாரு மேரேஜ ஸ்டாப் பண்ணிடாதீங்க" என்றாள் கலங்கிய குரலில்.
"என்ன அபி இப்படி பண்ணி வச்சிருக்க இவ்ளோ நடந்திருக்கு இத சொல்றதுக்கு என்ன?? நீங்க ரெண்டு பேரும் சப்போட்டா" என்றார் குணா கோவமாக ஆதி மற்றும் தியாவிடம்.
"டாடி துரு கூட மேரேஜ் பேசுன அன்னைக்கே உங்ககிட்ட சொல்ல சொன்னோம் கேட்கவே இல்ல, இதுல ரவீன் கிட்டயும் நேகி கிட்டயும் சொல்லாதன்னு சொல்லிட்டா" என்றாள் தியா வேகமாக.
"முன்னாடி நீ சொல்லிருந்தா துரு மனசுல உன்ன கல்யாணம் பண்ண போறோம்ன்னு நினைப்பும் வந்திருக்காது, ரவீன் இவ சொல்றத கேட்காம நீயாச்சு சொல்லிருக்கலாம்ல" என்றார் வருத்தத்துடன்.
"மாமா இவளால தான் சொல்ல முடியல நானும் கோவமா இருந்தனால சொல்லல, சாரி மாமா,நேகி இன்னைக்கு துரு கிட்ட எங்க விஷயத்தை சொல்ல தான் துருவ தனியா வர வச்சா சொன்னாலா இல்லையானு தெரியல, இதுல இவ(நேகா) வேற இப்படி அழுதுக்கிட்டே இருக்கா எப்படி சமாதானம் பண்றதுன்னு புரியல" என்று கோபமாக ஆரம்பித்து கவலையாக முடித்தான்.
"துரு இன்னும் யார்கிட்டயும் பேசல அவனுக்கு போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குறான், மாமா(நாதன்) கூட வீட்டுக்கு போனதும் பேச ட்ரை பண்ணி இருக்காரு துரு கதவ திறக்கலன்னு சொன்னாரு" என்றார் கவலையாக.
"சாரி டாடி" என்றாள் அழுகையுடன்.
"நீ என்ன பண்ணுவ எல்லாம் உங்க அம்மாவ சொல்லனும் உன்ன யோசிக்க விடாம உன்கிட்ட பேச என்னையும் இழுத்துட்டு வந்துட்டா, நாங்க பேச வரலனா நீ லவ் பண்றத சொல்லிருப்ப" என்றார் அவளை அணைத்து ஆறுதலாக.
"சாரி அபி இந்த பிரச்சனைக்கு நானும் ஒரு காரணம் இப்ப சேர்ந்த குடும்பம் உன்னால பிரிஞ்சுட கூடாதுன்னு நினைச்சு தான் அப்படி பண்ணுனேன் சாரி டா" என்றார் அகிலா வருத்தமாக.
"என்ன இருந்தாலும் நா சொல்லிருக்கணும் மீ.. சாரி" என்றாள் குணாவிடம் இருந்து விலகி.
"இட்ஸ் ஓகே டா நீங்க மூணு பேரும் சாப்பிட்டு நேகா கூடவே படுத்துக்கோங்க" என்றார்.
"ம்ம்.. சரி மீ" என்றனர் மூவரும்.
மறுநாளிலிருந்து கல்யாண வேலை பரபரப்பாக நடக்க ஆரம்பித்தது நேகா ரூமை விட்டு வெளியே வந்தாலும் மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். மித்ரா மற்றும் சந்தியா நேகாவை பார்க்கும் போதெல்லாம் முறைப்புடன் ஏதாவது குத்தல் பேச்சுடன் இருந்தனர். சந்தோஷ்,விரு, ரிஷி, நந்து நால்வரும் அவளிடம் பேசினாலும் ஒதுங்கியே இருந்தாள். நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றது. கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது துரு அவன் அப்பா மற்றும் சித்தப்பாவுடன் வீட்டிற்கு வந்தான். அனைவரும் அவனை வரவேற்றனர் அபி, ஆதி , தியாவை தவிர.
"துரு மன்னிச்சிரு நேகா பண்ணுனது தப்புதான் அவளுக்காக நா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்றார் குணா வருத்தத்துடன்.
"நீங்க ஏன் மாமா மன்னிப்பு கேட்டுகிட்டு விடுங்க நா போய் ரீப்ரெஷாகிட்டு வரேன்" என்று முகத்தை எதுவும் காட்டிக்கொள்ளாமல் மாடிக்குச் சென்றான்.
சிறியவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்." இப்பவாச்சும் பெர்சனல் விஷயம் பேசலாமா?? எப்ப பேசினாலும் ஆபீஸ் விஷயம் பேசிட்டு கட் பண்ணிடுற" என்றான் சந்தோஷ் நிதானமாக.
"உன் கிட்ட பேச எவ்ளோ டிரை பண்றது, அங்க வரோம்னு சொன்னாலும் வேணாம்னு சொல்லிட்ட" என்றான் விரு சலிப்புடன்.
"துரு ஏதாச்சும் பேசு டா" என்றான் ரிஷி சலிப்புடன்.
"என்ன பேசானும் சொல்லுங்க" என்றான் சாதாரணமாக.
"அண்ணா அன்னைக்கு உனக்கும் நேகாக்கும் என்ன நடந்தது??" என்றாள் மித்ரா கோபமாக.
"ஆமா மாமா எதனால தாத்தா சத்தம் போட்டாரு" என்றாள் சந்தியா.
துரு ஓர் நிமிடம் அன்று நடந்ததை நினைத்து பார்த்தபடி அமைதியாக இருந்தான்." சொல்லுங்க மாமா நேகா கிட்ட கேட்டதுக்கு எனக்கும் தேவுக்கும் நடுவுல யாரும் வராதீங்க, அந்த விஷயத்த கேட்டாலும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா" என்றான் நந்து வேகமாக.
துரு எதுவும் பேசாமல் தலை முடியை கோதினான்."என்னடா ஆச்சு சொல்லுடா" என்றான் சந்தோஷ்.
"அதக் கேட்டு என்ன பண்ண போறீங்க நா ரீப்ரெஷ் பண்ணனும், டயர்டா இருக்கு அம்மாவ சாப்பாடு மேல அனுப்ப சொல்லு நா சாப்பிட்டு தூங்கனும்" என்றான் முகத்தில் எதையும் காட்டிக்காமல்.
"சரி" என்று அனைவரும் வெளியே சென்றனர். வீட்டில் இருந்த பெரியவர்கள் கல்யாண வேலையாக வெளியே சென்றனர். சிறியவர்கள் மட்டுமே இருந்தனர்.
ஐந்தரை மணி போல் நேகா கீழே வந்தாள்."ஏன் டா சாப்பிட வரல" என்றான் சந்தோஷ்.
"தூங்கிட்டேன் இப்ப தான் எழுந்தேன்" என்றாள் கண்களால் வீட்டைச் சுற்றியபடி. துரு மறுபக்க படிக்கட்டு வழியாக கீழே நேகாவை பார்த்தபடி வந்தான்.
"எப்படி தான் என் அண்ணாவோட லவ்வ அழிச்சுட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம உன்னால தூங்க முடியுதோ!!" என்றாள் மித்ரா கோபமாக பக்கத்தில் வந்து.
நேகா ,ஆதி,அபி,தியா நால்வரும் குழப்பமாக பார்த்தனர்."உன்னால தான் துரு மாமா வீட்டை விட்டு போனாங்க ஆனா நீ கல்யாண கனவோட சந்தோஷமா தான் இருக்க" என்றாள் சந்தியா ஆத்திரமாக.
"சந்தியா.. மித்ரா.." என்றான் விரு பல்லைக் கடித்தபடி.
"என்ன அண்ணா எப்ப பார்த்தாலும் வீட்ல பெரியவங்க இருக்காங்க அதனால தான் இவ்ளோ நாள் எதுவும் பேசாமல் இருந்தோம்" என்றாள் மித்ரா கோவமாக.
"இன்னைக்கு தான் யாரும் இல்லயே! எங்கள பேச விடுங்க நீங்களும் பேச மாட்டீங்க நாங்களும் பேசக் கூடாது அப்படி தானே!! அபிக்கும் மாமாவுக்கும் தானே கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணுனாங்க அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ எதுக்கு வந்த??" என்றாள் சந்தியா ஆத்திரமாக.
"எங்க அண்ணாவ விடு அபி உன் கூட பிறந்தவ தானே அவங்க கல்யாணத்த நிறுத்தி அந்த இடத்துல நீ இருக்க ஆசப்படுறீயே!! உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்ல?? அக்காவோட வாழ்க்கையே அழிக்குற என்ன பொண்ணு நீ" என்றாள் மித்ரா ஆத்திரமாக.
"மித்ரா போதும் இதுக்கு மேல என் தங்கச்சிய பத்தி நீ ஒரு வார்த்த பேசுனா நாக்க வெட்டி போட்டுருவேன்" என்றாள் அபி உச்சக்கட்ட கோபத்தில்.
"ப்ச்ச்.. அபி விடு" என்றாள் நேகா.
"நீ வாய மூடு நேகா".
"என்ன அபி உனக்காக தானே மித்ரா பேசுனா அவள போய் திட்டுற உன் தங்கச்சி பாசம் உன் கண்ண மறைக்கிதா அதான் உனக்கு நிச்சயம் பண்ணுனவர விட்டுக்கொடுக்க முடிவு பண்ணிட்டியா??" என்றாள் நக்கலாக.
"நா விட்டுக் கொடுத்தனா போடி ஃபுல் எனக்கு துருவ கல்யாணம் பண்ண விருப்பமே இல்ல, அது கூட தெரியாம பைத்தியக்காரி மாதிரி பேசிட்டு இருக்கீங்க" என்றாள் ஆத்திரமாக.
அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.துரு ஓர் பார்வையாளராக நின்றான்." என்ன சொல்ற அபி" என்றாள் சந்தியா அதிர்ச்சியுடன்.
"ஆமா எனக்கு விருப்பமில்ல ஏன்னா நானும் ரவீனும் லவ் பண்றோம், குடும்பம் பிரியக் கூடாதுன்னு தான் சம்மதம் சொன்னேன் மத்தபடி எதுவுமில்ல, ரியலி சாரி துரு என் பயத்தால உன்கிட்ட என் லவ் மேட்டர சொல்ல முடியல, அன்னைக்கு கோவில்ல இருந்து நேகா உன்ன வரவச்சது இந்த விஷயத்த சொல்றதுக்கு தான், என்னைய மன்னிச்சுடு" என்றாள் கலங்கிய குரலில்.
"நீங்க வேணா ரவீன் அண்ணாவ லவ் பண்ணலாம் ஆனா என் அண்ணா உங்கள தானே லவ் பண்ணுனாங்க" என்றாள் மித்ரா கோபமாக. மற்ற நால்வரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
நேகாவுக்கு துருவின் காதல் விஷயம் தெரிந்ததும் என்ன செய்ய போகிறாள்??? அடுத்து என்ன நடக்கும்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்......


Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.