துளி 3

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன்னை தவிர எதுவுமே
இஷ்டமில்லையே...
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்

“ஹாய் ப்ரோ” என்ற குரலில் கலைந்தவன் தன் விழிகளை திறந்து பார்க்க அவனது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இருந்த ஒரு இளைஞன் சிநேகமாய் புன்னகைத்தான்..

தேவ்வும் அவனுக்கு பதிலாய் ஹாய் கூற அந்த இளைஞனோ
“ஐயம் அஜய்... மே ஐ நோ யூ குட் நேம் ப்ளீஸ்...??”

“ஐயம் தேவ்ராகவ்...”

“ஹே ப்ரோ நீங்க தமிழா ...??”

“ஆமா..”

“சூப்பர்சூப்பர்சூப்பர்...உங்க நேட்டிவ் சிங்கப்பூரா??"

“இல்ல ப்ரோ.. நான் ஶ்ரீலங்கன்...”

“அப்போ இந்த ஜேர்னி புல்லா நீங்க எனக்கு கம்பனி கொடுக்கப்போறீங்க...”

“நீங்களும் ட்ரான்சிட் ப்ளைட்டா???”

“ஆமா ப்ரோ.... நீங்க வெகேஷனுக்கு கனடா வந்தீங்களா???”

“இல்ல ப்ரோ... ஹயர் ஸ்டடிசிற்காக வந்தேன்... அப்படியே நான்கு வருஷம் ஓடிரிச்சு... இப்போ மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு மறுபடியும் நம்ம ஊருக்கே போறேன்...”

“செம்ம ப்ரோ.. என்னன்னாலும் நம்ம ஊரைப் போல வருமா...??”

“அது என்னமோ உண்மை தான் ப்ரோ. அங்க இருக்கும் வரைக்கும் இங்க வரமாட்டோமானு ரொம்ப ஏங்கியிருக்கேன்... ஆனா இங்க வந்ததும் எப்போடா மறுபடியும் ஊருக்கு போவோம்னு இருந்துச்சு...”

“ஹாஹா...”

“அது சரி ப்ரோ நீங்க எந்த இடம்??”

“நான் கனடா தான் ப்ரோ... அம்மா அப்பா இரண்டு பேரும் ஶ்ரீ லங்கன்ஸ்... இரண்டு பேரும் மேரேஜ் முடிந்ததும் கனடாவில் வந்து செட்டில் ஆகிட்டாங்க... அதுனால நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இங்க தான்..”

“சூப்பரா தமிழ் பேசுறீங்களே ப்ரோ....”

“ஹாஹா.. ஆரம்பத்துல தமிழ் சுத்தமாகவே வாயில நுழையாது... வீட்டுல தமிழ் தான் பேசனும்னு அம்மாவோட ஆர்டர்.. ஆனா நான் மட்டும் அதுக்கு விதிவிலக்கு... இப்போ இவ்வளவு நல்லா தமிழ் பேசுறேன்னா அதுக்கு என்னோட பேபி தான் காரணம்... என்னால எப்பவுமே தமிழ் பேச முடியாதுனு பெட் பண்ணா.. அவளை தோற்கடிக்கிறதுக்காக கஷ்டப்பட்டு ராப்பகலா கண்முழிச்சி... தமிழ்படம் பார்த்து தமிழ் படிச்சிக்கிட்டேன்....ஏதோ அவ உபயத்தால இப்போ கொஞ்சம் தமிழ் நல்லாவே வருது....”

“சான்சே இல்லை ப்ரோ.. ஆனா நீங்க வேற லெவல்ல கலக்குறீங்க... இப்போ வெகேஷனுக்காகவா ஶ்ரீலங்கா போறீங்களா ப்ரோ???"

“வெக்கேஷன் தான்.. ஆனா என்னோட வேலை விஷயமாகவும் தான் போறேன்...அதோடு என்னோட பேபியையும் பார்க்கப்போறேன்....”

“செம்ம ப்ரோ... உங்க பேபி எங்க இருக்காங்க...”

“கொழும்புல தான் ப்ரோ...”

“அப்போ கொழும்புல தான் தங்க போறீங்களா??”

“ஆமா ப்ரோ.. ஆல்ரெடி புக் பண்ணலாம்னு தான் நினைச்சேன்... ஆனா வந்து பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்... ஶ்ரீலங்கா ரீச் ஆனதும் தான் ஏதாவது ஹோட்டலில் ரூம் எடுத்து தான் தங்கனும்...”

“ப்ரோ நான் ஒன்னு சொல்லுவேன்... தப்பா எடுத்துக்க கூடாது..”

“என்ன ப்ரோ ரொம்ப பார்மலா பேசுறீங்க...??? சொல்லுங்க என்ன விஷயம்??”

“நீங்க எத்தனை நாள் அங்க தங்க போறீங்க??”

“அதிகபட்சம் ஒரு மாசம்..”

“உங்களுக்கு ஓகேனா... நீங்க என்கூட தங்கிக்கலாம்.... நான் வெள்ளவத்தையில் தான் என் ப்ரெண்டோட தங்கப்போறேன்...அப்பார்ண்மண்ட்ல ரென்ட் பண்ணி தான் இப்போ என் பிரண்டு மட்டும் அங்க இருக்கான்..... நானும் அவன்கூட தான் தங்கப்போறேன்... உங்களுக்கு விருப்பம்னா நீங்களும் எங்ககூட தங்கிக்கலாம்..."

“சூப்பர்பா... நானும் எப்படிடா ஹோட்டல்ல ஒரு மாசம் தங்குறதுனு யோசிச்சிட்டு இருந்தேன்.. எனக்கு அங்க எதுவுமே தெரியாது... நீங்க பக்கத்துல இருந்தா எனக்கு ஹெல்பா இருக்கும்.. நானும் உங்ககூடவே தங்கிக்கிறேன்.. எனக்கு நம்ம ஊரை சுத்திகாட்டுவீங்க தானே??”

“அதுக்கு என்ன ப்ரோ தாராளமா சுத்திக்காட்டுறேன்..நீங்க எப்போ ப்ரீயா இருப்பீங்கனு மட்டும் சொல்லுங்க... உள்ள சந்து பொந்து எல்லாம் சுத்தி காட்டுருறேன்...” என்று தேவ் கூற இருவரும் ஒரு சேர சிரித்தனர்..

பயணம் முழுவதும் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்துகொள்ள அவர்களுக்கிடைய ஒரு நெருக்கமான நட்பு பாலம் உருவானது.... கனடாவின் தலைநகரமான ஒட்டோவாவில் இருந்து கிளம்பிய விமானம் சிங்கப்பூரை அடைந்ததும் அங்கிருந்து இலங்கையிற்கு கிளம்பிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இல் இருவரும் தங்கள் பயணத்தை தொடங்க மாலை நான்கு மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ். விமானம் தரையிறங்கியதும் தத்தமது லக்கேஜினை எடுத்துக்கொண்டு விமான நிலைய வாசலிற்கு வந்தனர் அஜயும், தேவ்வும்...
வாசலில் தேவ்விற்காக காத்திருந்த அபி தேவ்வை கண்டதும் அவனை அணைத்துக்கொண்டான்....

“மச்சான்.. எப்படிடா இருக்க???” என்று அபி நலம் விசாரிக்க

“எனக்கு என்னடா நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படிடா இருக்க?? நம்ம பொடியன்கள் எல்லாம் எப்படி இருக்கானுங்க??”

“எல்லாம் நல்லா இருக்கோம் மச்சான்...”என்றவன் அஜயை காட்டி

“யாருடா இவரு??” என்று அபி கேட்க தேவ் அஜயை அறிமுகப்படுத்திவிட்டு அவன் தங்களுடன் தான் தங்கப்போவதாக கூறினான்...

“ஹேய் சூப்பர் மச்சி... அஜய் நீங்க கவலையே படாதீங்க... உங்களை தங்க தட்டுல வச்சி பார்த்துக்கவேண்டியது என்னோட பொறுப்பு..” என்று அபி கூற

அவன் கூற்றில் சிரித்த அஜய் அபியிடம்
“செம்ம ஜாலியா பேசுறீங்க ப்ரோ...” என்று கூற அவர்கள் இருவரையும் தனது நனோ காரிற்கு அழைத்து சென்றான்..

செல்லும் வழி நெடுகிலும் அஜயிடம் டிசைன் டிசைனாக கேள்வி கேட்ட அபியை அடக்கும் வழி தெரியாது முழித்த தேவ்

“டேய்.. கொஞ்சமாவது அந்த வாயிற்கு ரெஸ்ட்டு குடுடா... கேப் விடாம இப்படியா கேள்வி கேட்ப?? படிக்கும் போதுகூட உனக்கு இவ்வளவு டவுட்டு வந்ததில்லையேடா..” என்று தேவ் அங்கலாய்க்க அவனை திரும்பி முறைத்த அபி

“டேய் உன்கிட்டயாடா கேள்வி கேட்டேன்??? இல்லை தானே... பிறகு என்ன சலிச்சிக்கிற?? நானும் அஜயும் சீரியசா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்ல.. கொஞ்ச நேரம் சட் யோர் மவுத்..” என்று அபி கூற கடுப்பானவன் கண்ணாடி வழியே வெளிப்புறத்தை கவனிக்கத்தொடங்கினான்...

அங்காங்கே தெருக்களில் போலிஸ் நின்றுக்கொண்டிருப்பதை கவனித்தவன் அபியிடம்

“ஏன் மச்சி ரோட்டு நெடுக போலிசால நிற்கிறாங்க???”

“அதுவா... தட (தண்டப்பணம்)அடிக்க தான்..”

“இது எப்போ இருந்து டா??”

“இப்போ கொஞ்ச நாளா தான்.. ஆட்சி மாறுனதுல இருந்து இதெல்லாம் நடக்குது... இப்போ குடிச்சிட்டு ஒரு பய ரோட்டுல இறங்க முடியாது.. நைட்டு ஒவ்வொரு சந்தியிலயும் போலிஸால நிற்கிறாங்க...எவ்வளவு தட தெரியுமா?? 25000/= ....இனி எவனாவது குடிச்சிட்டு வண்டி ஓட்டுவான்?? அதுமட்டுமா ரோட்டுல குப்பை கொட்ட முடியாது... கொஞ்ச நாளா அந்த வார்ன் பண்ணிட்டு விட்டுட்டாங்க.. இப்போ மறுபடியும் தட அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... நம்ம அகிலனோட மாமா காலையில கடை திறந்து கடையை கூட்டிட்டு குப்பையை அள்ளி போட வாசல்ல ஒதுக்கிருக்காரு.. எதையோ எடுக்க உள்ள போனப்போ பொலிஸ்காரன் வந்து ரோட்டுல குப்பை போட்டுட்டனு உசாவி (வழக்கு தொடுத்தல்) போட்டுட்டு போயிட்டான்... பாவம் அவரு...இப்படி நிறைய ரூல்ஸ்ல டைட் பண்ணிட்டாங்க...”

“இது நல்ல விஷயம் தான்டா... அப்போ தான் நம்ம ஆட்களை திருத்தமுடியும்.. அப்புறம் நாடும் முன்னேறும்.... அது சரி நீ எதுக்கு இப்போ நீர்கொழும்பு ரோட்டுல போற??” என்று தேவ் கேட்க அபியோ

“அப்துல் வீட்டுக்கு போறோம்டா...”

“இப்போ எதுக்குடா அவன் வீட்டுக்கு??”

“டேய் இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா???”

“என்ன நாள்டா..”
“ரமசான்டா....” என்று அபி கூற தன் மொபைலை எடுத்து தேடியவன்

“அட ஆமால.. அதான்.. ரோடு அப்படி காய்ந்து கிடந்துச்சா...??? அப்துல்லுக்கு நான் இன்னைக்கு வர்றது தெரியுமா???"

“ஆமாடா... அவன் தான் உன்னை நேரா அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு வரச்சொன்னான்...” என்ற அபி அஜயிடம்

“ப்ரோ உங்களுக்கு அங்க போறதுல எந்த பிராப்ளமும் இல்லையே... ??” என்று கேட்க அஜயோ

“அதெல்லாம் இல்ல ப்ரோ.. சொல்லப்போனா ஐயம் வெரி க்யூரிஸ் அபௌட் விசிட்டிங் யூர் ப்ரெண்ட்ஸ் ப்ளேஸ்...”

“செம்ம ப்ரோ.. நீங்க ரமசான் அதுவுமா அவன் வீட்டுக்கு முதல் முதலா போகப்போறீங்க... அவங்க வீட்டு கவனிப்புல நீங்க எப்படி ப்ரீஸ் ஆகிறீங்கனு மட்டும் பாருங்க..” என்று அபி கூற அஜயோ

“ஏன் ப்ரோ அவங்க வீடு என்ன ப்ரிட்ஜா??” என்று அஜய் கேட்க முதலில் அவன் கூறியதின் அர்த்தம் புரியாமல் அவனை பார்த்த அபி பின் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு

“ரொம்ப கடிச்சிட்டீங்க ப்ரோ...” என்று அபி கூற அஜயோ அதற்கெல்லாம் அசராதவனாய்

“நெக்ஸ்ட் டைம் கரெக்டா கடிக்கிறேன்... ப்ரோ...” என்று கூற தேவ்வோ அஜயின் பதிலில் சிரிக்கத்தொடங்கினான்...
இவ்வாறு ஒன்றரை மணி நேர பயணத்தின் பின் நீர்கொழும்பில் அப்துல் வீட்டினை அடைந்தனர் மூவரும்...

வீட்டினுள் நுழைந்த தேவ்வை கண்ட நண்பர் பட்டாளம் அனைவரும் அவனை அணைத்து தழுவி நலம் விசாரித்தனர்... நலவிசாரிப்பு படலம் முடிந்ததும் நண்பர்கள் அனைவருக்கும் அஜயை அறிமுகப்படுத்த அவனும் அந்த கூட்டத்தில் ஒருவனாகிப்போனான்...

அப்போது அப்துல்லின் அம்மா அங்கு வர அவர் காலில் விழுந்து வணங்கிய தேவ் அவருக்கு ரமசான் வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரை நலம் விசாரித்தான்.

“உம்மா... எப்படி இருக்கீங்க??”
“நான் நல்ல சொகம் மவன். .. நீங்க எப்படி ஈக்கிங்க?? எப்போ கனடால இருந்து வந்தீங்க??”

“இன்னைக்கு தான் உம்மா வந்தேன்... அபி இன்னைக்கு ரமசான்னு சொன்னான்.. அதான் உம்மாட மட்டன் பிரியாணி சாப்பிடலாம்னு ஓடி வந்துட்டேன்....”

“மவனுக்கு இல்லாத புரியாணியா?? அப்துல் இந்தா உண்ட கூட்டாளிப்பயலுகளை கூட்டிட்டு போய் தின்னக்கொடு... தேவ் ராவையில வந்திருப்பான் எதும் துண்டிருக்க மாட்டான்(சாப்பிட்டிருக்கமாட்டான்) கூட்டிட்டுப்போ.. போ மவன்...”என்று கூற
அப்துல்லும் தேவ்வையும் மற்றைய நண்பர்களையும் அவர்கள் வீட்டுப் பின்புறம் அழைத்து சென்றான்....

அங்கு தரையில் பாய் விரிக்கப்பட்டிருக்க நண்பர்கள் அனைவரும் வட்டமாய் அமர்ந்துக்கொண்டனர். அஜயையும் அபி தன்னருகில் அமரக்கூற அவனும் அந்த வட்டத்தின் ஒரு பங்காய் ஐக்கியமானான்.
அப்துல் சவன் உணவை எடுத்து வந்து நடுவில் வைக்க அனைவரும் ஒரு சேர தம் கைகளை அந்த சவன் தட்டில் இட்டு சுவைக்கத்தொடங்கினர்...

பிரியாணியை உள்ளடக்கிய உணவுத்தட்டையே சவன் என்று அழைப்பர்... இந்த சவன் உணவின் முக்கியத்துவம் பகிர்ந்துண்ணல்.. ஒரே தட்டில் நான்கு ஐந்து பேர் சேர்ந்து உண்ணுவர்... இதில் பிரியாணி சோறு, முட்டை, மாசி சம்பல், இறைச்சி, மற்றும் அச்சாறு ஆகியவை உணவுவகைகள் உள்ளடங்கியிருக்கும்....

அப்துல் தவிர மற்றைய ஏழ்வரும் அந்த சவன் உணவை ருசித்தனர்.. எப்படி உண்பது என்று தெரியாமல் முழித்திருந்த அஜயிற்கு எவ்வாறு சாப்பிடுவது என்று அபி சொல்லிக்கொடுக்க அவனும் அவர்களோடு இணைந்து அந்த சவன் முழுதையும் காலி செய்தான்.. இப்படியே மூன்று சவனையும் அந்த ஏழ்வரும் காலி பண்ணியதும் மூன்றாவது சவனிலிருந்த கடைசி பருக்கையை கூட விடாது தட்டை முழுதாய் வழித்தபடியிருந்த அபியை கண்ட அஜய்
“என்ன ப்ரோ சாப்பாடு பத்தலையா?? வேணும்னா அப்துல் ப்ரோகிட்ட இன்னொன்னு எடுத்துட்டு வர சொல்லவா??”

“இல்லை ப்ரோ சாப்பாடு வயித்துக்கு மேல இருக்கு.. இதுக்கு மேல சாப்பிட்டா சாப்பாட்டை வாயில தான் ஸ்டாக் பண்ணனும்..”

“அப்போ எதுக்கு ப்ரோ இன்னும் அந்த தட்டை வச்சி தடுமாறிட்டு இருக்கீங்க??”

“தடுமாறல ப்ரோ... சாப்பிட்டுட்டு இருக்கேன் ப்ரோ....” என்று அபி கூற அந்த தட்டை எட்டிப்பார்த்த அஜய்

“அதுல எதுவுமே இல்லையே ப்ரோ..” என்று கூற மற்றைய நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்... அஜயோ அவர்களை கேள்வியாய் பார்க்க அவன் குழப்பத்தை தீர்த்துவைக்க முன் வந்தான் அகிலன்...

“அது ஒண்டுமில்லை ப்ரோ... நம்ம அபி புரியாணி தியரியை பின்தொடர்றானாம்....”

“அது என்ன ப்ரோ பிரியாணி தியரி??” என்று அஜய் கேட்க அதை விளக்கத்தொடங்கினான் கபிலன்.

“அது ப்ரோ... புரியாணியோட கடைசி பருக்கைகூட விடாமல் முழுசா யாரு சாப்பிட்டு முடிக்கிறாங்களோ... அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குமாம்... அது சவன் புரியாணியோட ஒரு கொள்கை.....அந்த தியரியை தான் அபி பாலோ பண்ணுறான்... ஆனா பாருங்க ப்ரோ... இதுவரைக்கும் எத்தனையோ தட்டை காலி பண்ணியிருக்கான்.. ஆனா இதுவரை ஒரு கேள் ப்ரெண்ட் கூட அவனுக்கு அமையல..” என்று அபியின் சோகக்கதையை கபிலன் கூற அதை கேட்டு அபி அவனை முறைக்க மற்ற அனைவரும் சிரிக்கத்தொடங்கினர்...

இவ்வாறு கலாட்டாக்களுடன் சாப்பிட்டு முடிக்க அங்கு பலூடா மற்றும் சவர்மாவுடன் வந்தார் அப்துல்லின் அன்னை கதீஜா....

அனைவருக்கும் அதனை கொடுத்தவர் தேவ்விடமும் நலம் விசாரித்தவர்
“மவன் சூட்டிய கூட்டிக்கொண்டு வரல்லயா???” என்று கேட்க அதுவரை நேரம் இருந்த சூழல் மாறி அங்கொரு இறுக்கமான சூழ்நிலை சூழ்ந்தது...

கதீஜாவின் பின்னே வந்த அப்துல் அன்னையின் கையினை அழுத்தி பிடிக்க அவரோ அங்கிருந்த அனைவரிடமும் விடைபெற்று சென்றார்...

அவர் சென்ற மறுநொடி அங்கிருந்து தேவ் எழுந்துகொள்ள மற்ற நண்பர்கள் அவனை அழைக்க அபியோ அவனை தொந்தரவு செய்யவேண்டாமென்று கூறிவிட்டு கை கழுவ எழுந்தான்.

தேவ் கைகழுவிவிட்டு வீட்டுக்கு வெளிப்புறம் வந்தவனுக்கு நான்கு வருடங்களுக்கு முன்னான நியாபகங்கள் ஆட்டிப்படைக்க அவனால் அதன் சுமையை தாங்கமுடியவில்லை...

அப்போது அவன் தோள் மீது ஒரு கைவிழ அதன் அழுத்தத்திலேயே அது யாரென்று புரிந்துவிட கலங்கியிருந்த கண்ணை துடைத்தபடி திரும்பினான் தேவ்...
தேவ்வின் விரக்தியான சிரிப்பே அபியிற்கு அவன் மனநிலையை உணர்த்திவிட அவனை ஆதரவாக தழுவிக்கொண்டான் அபி... தேவ்விற்கும் அந்த நொடியில் தன் துக்கத்தை தேற்றிக்கொள்ள ஒரு தோள் தேவைப்பட்டது...

சற்றுநேரம் பொருத்த அபி தேவ்வை தன்னிடமிருந்து விலக்கி
“தேவ் நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்டா... உன்னோட கோபம் இப்போ உன்னை தான்டா கஷ்டப்படுத்துது..”

“எப்படிடா பொறுமையா இருக்கச்சொல்லுற??? அவங்க வீட்டுல அவ்வளவு பேசுன பிறகும் என்னால எப்படிடா பொறுமையா இருக்கமுடியும்???”

“நீ சூட்டிக்காகவாவது பொறுமையா இருந்திருக்கலாம்....”

“இல்லடா... எதுக்கும் ஒரு எல்லை இருக்கு... அதை தாண்டும் போது அதுக்கான மதிப்பு குறைஞ்சி போயிடுது... அது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்...”

“ஆனா சூட்டி பாவமே டா..”

“அவ அந்த நேரத்துல எதுவுமே பேசலையேடா... அவளை நானா முதல் விரும்புனேன்... இல்லையே.. அப்படி இருக்கும் போது எதுக்கு நான் அப்படி ஒரு பழியை சுமக்கனும்..??”

“டேய் ஈகோ இருந்தா அங்க காதல் நிலைக்காதுடா..”

“அப்படி நான் ஈகோ தான் பெருசுனு நினைச்சிருந்தா... நான் மறுபடியும் அவகிட்ட பேசியிருக்க மாட்டேனேடா... அவளுக்காகனு எல்லாம் நினைச்சி செய்து கடைசியில என்னோட மனசுதான் காயப்பட்டுச்சு... என்னால முடியலடா... அவளையும் மறக்கமுடியல... அவ பண்ணதையும் மறக்க முடியல.... அவளுக்கு நான் எப்பவும் தேவைனு தான் நினைச்சேன்... ஆனா அவ நீ எப்பவும் தேவையில்லைனு வார்த்தையால சொல்லி என்னோட காதலை உயிரோடு கொன்னுட்டா.... அவ தானேடா என்னை தேடி வந்தா...அவ தானே நான் எப்பவும் அவளுக்காக இருக்கனும்னு சொன்னா... ஆனா இப்போ அவளே தான் நான் அவளுக்கு வேணாம்னு சொல்லிட்டு போயிட்டா...” என்று தேவ் கூற அபியிற்கோ எவ்வாறு அவனை தேற்றுவதென்று தெரியவில்லை... அவன் இத்தனை தூரம் தன் துக்கத்தை வெளியிடுவதே அவனுக்கு நல்லது என்று எண்ணியவன் அமைதிகாத்தான்.

அப்போது மற்ற நண்பர்களும் அங்கு வந்துவிட அவர்களது பேச்சில் சூட்டியினது நினைவுகள் பின்னுக்கு தள்ளப்பட இரவு உணவை முடித்துவிட்டு அஜயை அழைத்துக்கொண்டு மூவரும் மீண்டும் கொழும்புக்கு திரும்பினர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN