காயத்தை கண்கொண்டு பார்த்திட முடியும்
வழியை கண்டிட கண்கள் இல்லை….
காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும்
ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை
இரவு மூவரும் அபியின் காரிலேயே கொழும்பிற்கு திரும்பினர். அபி வாடகைக்கு குடியிருந்த பிளாட்டிற்கு வந்தவர்களை நான்காவது மாடியிலிருந்து ஐந்தாம் இலக்க வீட்டிற்கு அழைத்து சென்றான் அபி..
கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற மறுநொடி தேவ் அபியிடம் எது அறையென்று கேட்டுக்கொண்டு அந்த அறையில் நுழைந்துகொண்டான்...
அபியே அஜயிற்கான அறையினை ஒழுங்கு செய்தவன் அவனுக்கு தேவையானதை கவனித்துவிட்டு
“சாரி ப்ரோ... தேவ் உங்களை கவனிக்கலைனு தப்பா எடுத்துக்காதீங்க... அவன் ஏதோ மைன்ட் அப்செட்ட அப்படி நடந்துக்கிட்டான்...”
“ஐயோ அபி.. அதெல்லாம் நான் மைன்ட் பண்ணவே இல்லை... நானும் தேவ்வை கவனிச்சிட்டு தான் இருந்தேன்... ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தாரு.... பிரச்சினை என்னதுனு தெரியாமல் எதுவும் பேசமுடியாதுனு தான் நான் எதுவும் பேசல... நீங்க வொரி பண்ணிக்காதீங்க.. குட் நைட்...”
“ரொம்ப தாங்க்ஸ் அஜய்.. குட் நைட்...” என்றவன் அறையிலிருந்து வெளியேறி தங்கள் அறைக்கு சென்றான்...
அங்கு தேவ் உடைகூட மாற்றாது தலையை கைகளால் தாங்கியபடியிருக்க அவனருகே வந்த அபி
“தேவ் என்னடா ஆச்சு???” என்று விசாரிக்க அவனோ ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு துவாயை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான்..
குளியலறையில் இருந்து வெளியே வந்த தேவ்வை வரவேற்றது அபியின் பிளேன்டீ..
ஒரு நன்றியுடன் அதை பெற்றுக்கொண்டவனுக்கு அப்போது அது தேவையாயிருந்தது...
அபியும் குளித்து முடித்துவிட்டு இரவு உடையில் வர அப்போது தேவ் கட்டிலின் ஒரு ஓரமாக படுத்திருந்தான்..
அப்போது அவனுக்கு ஓய்வு தேவை என்று எண்ணிய அஜய் அவனது லகேஜினை எடுத்து ஓரமாய் ஒதுக்கி வைத்தவன் நைட் லாம்பினை ஒளிரச்செய்துவிட்டு அவனும் வந்து படுத்துக்கொண்டான்....
விளக்குகள் அணைந்ததும் சில விநாடிகளுக்கு பின் மெதுவாக கண்விழித்த தேவ் அபி உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு ஹாலிற்கு சென்றான்...
அங்கிருந்த பால்கனி கதவினை திறந்தவன் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு எதிரேயிருந்த கடலை வெறிக்கத்தொடங்கினான்....
அந்த வானின் நிலவும் இருள் சூழ்ந்த இரவும் அவனது நினைவுகளை பின்நோக்கி இழுத்துச்சென்றது...
அன்று மியூசிக் ரூமில் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் தேவ்வின் குழுவினர். தேவ்வின் நண்பர்கள் உட்பட தரணி ஸ்ரவ்யா மற்றும் இன்னும் சிலர் அந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வருடத்திற்கான இன்டர் காலேஜ் காம்படீஷனில் பங்கெடுப்பதற்காக பெயர் கொடுத்திருந்தது அந்த குழு...
அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் நேரம் கடந்ததை உணரவில்லை... அபியோ தேவ்வை நச்சரித்தபடியிருக்க தேவ்வோ பயிற்சியை முடித்துவிட்டு செல்லலாம் என்று கூறினான்...
மற்றவர்களும் அதையே கூற கடுப்பான அபி
“டேய் நீங்களா கல்லையாடா முழுங்குனீங்க??? மனிஷனுக்கு பசியில உயிர் போகுது... இவனுங்க ப்ராக்டிஸ்னு உயிரை வாங்குறானுங்க... டேய் தேவ் போதும்டா.. சாப்பிட்டு வந்து மீதியை கண்டினியூ பண்ணலாம்டா...”என்று கூற
அதற்கு தேவ்
“டேய் சாப்பிட்டு வந்தா நீ தூங்க ஆரம்பிச்சிடுவ...அப்புறம் பிராக்டிஸ் பண்ண மாதிரி தான்... அதோடு ஈவ்னிங் கோல்பேஸ் (Galle face) போறதா பிளான் இருக்கு...நியாபகம் இருக்கு தானே...”
“டேய் இப்ப மணி இரண்டு தான்டா ஆகுது... இப்போ சாப்பிட்டு வந்து பிராக்டிஸ் பண்ணிட்டு போக டைம் இருக்குடா..” என்று அபி கூற அக்ஷயோ
“உன்னை பத்தி தெரிஞ்சதால தானேடா அவன் ப்ராக்டிஸ்ஸை முடிச்சிட்டு போகலாம்னு சொல்றான்...”
“அவனே சரினு சொன்னாலும் இவன் விட மாட்டான் போல...” என்று அபி புலம்ப முபாரக்கோ
“அபி தேவ் சொல்றதும் செரிதான்... துண்டிட்டு வந்தா பசிந்தா ப்ராக்டிஸ் செய்ய முடியாதுடா.... நீ கொஞ்சம் இருவன்... ப்ராக்டிஸ் முடிஞ்சதும் உனக்கு தின்ன சோறு வாங்கி தாரன்...” என்று கூற அவனை எழுந்து சென்று கட்டியணைத்தவன்
“மகே மச்சாங்... நீ தான்டா உயிர்கொடுக்கும் நட்பு.... இவனுங்களும் இருக்கானுங்களே...” என்று அபி நொடித்துக்கொள்ள அப்போது கபிலன்
“டேய் நல்லவனே... உனக்கு திங்க வாங்கி கொடுக்குற எல்லாருமே உனக்கு நல்லவங்க தானேடா... அதுவும் இன்னைக்கு முபாரக் வாலண்டியரா வந்து மாட்டியிருக்கான்.. அப்போ அவன் உனக்கு கடவுள் தானே..”
“என்னடா இன்னும் இவன் வாயை திறக்கலயேனு இப்போ தான் மனசுக்குள்ள நினைச்சேன்... அதுக்குள்ள என்னை அசிங்கப்படுத்த வந்துட்டான்.... இவ்வளவு பேசுறியே.. என்னைக்காவது எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கியா??? இல்லை வாங்கி தாரேன்னு ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கியா???” என்று அபி பொங்க தேவ்வோ
“டேய் அவனுக்கு உன்னை பத்தி நல்லா தெரிஞ்சதால தான் வாய் வார்த்தைக்கு கூட அவன் சொல்லமாட்டேங்கிறான்... சரி.. இப்போ என்ன உனக்கு பந்தியை விரிக்கனும்.. அதானே.. ப்ராக்டிஸ்ஸை இதோடு முடிக்கிறேன்... எல்லாரையும் தள்ளிக்கிட்டு சாப்பிட கிளம்பு...” என்று தேவ் கூற அபியோ
“பார்த்தியா அகி..... ஏதோ சொன்ன தேவ் சீக்கிரம் பிராக்டிஸ் முடிக்கமாட்டானு.. இப்போ பார்த்தியா...இது தான் இந்த அபியோட டாலண்ட்..” என்று தன் சேர்ட்டின் காலரை தூக்கிவிட அனைவரும் ஒருசேர அவனை முறைத்தனர்.
அனைவரும் உணவிற்கு எழுந்து செல்ல ஸ்ரவ்யா மட்டும் தன்னிடத்திலிருந்து எழவில்லை... அதை கண்ட தேவ் அவளருகே சென்று விசாரித்தான்..
“என்ன சூட்டி லன்சிற்கு போகலையா...???”
“இல்லை.. எனக்கு...” என்று தயங்கியபடி அவர்களுக்காக காத்திருந்த தேவ்வின் நண்பர்களை பார்த்தபடி அவனை மீண்டும் பார்த்தாள்...
அவள் பார்வையிலிருந்த கலக்கமே ஏதோ சரியில்லையென புரிய நண்பர்களை முன்னே செல்லுமாறு கூறியவன் மீண்டும் ஸ்ரவ்யாவின் அருகே வந்து
“சூட்டி லேடிஸ் யாரையாவது கூப்பிடவா??” என்று கேட்க அவளும் கலங்கிய கண்களுடன் தலையாட்ட அவளை பார்த்தவனுக்கு பாவமாகிப்போனது..
ஆறுதலாக அவள் தலையில் கை வைத்தவன் விரைந்து சென்று தன் வகுப்பு தோழியொருத்தியை அழைத்து வந்து ஸ்ரவ்யாவிடம் என்னவென்று விசாரிக்க சொன்னான்..
அவளும் சென்று விசாரித்தவள் மீண்டும் தேவ்விடம் வந்து
“தேவ்.. அவளுக்கு... அவளுக்கு...”
“லேடிஸ் ப்ராப்ளமா தான்யா??”
“ஆமாடா..”
“ஏதாவது வாங்கிட்டு வரணுமா தான்யா??” என்று கேட்க தான்யாவும் ஸ்ரவ்யாவிற்கு வாங்கவேண்டியதை எழுதிக்கொடுத்தவள்
“தேவ்... அவளுக்கு ஒரு செட் ட்ரெஸ்சும் வாங்கனும்.....என்ன பண்ணுறது...??”
“நான் வாங்கிட்டு வர்றேன்.. நீ கொஞ்ச நேரம் அவளுக்கு துணையா இருக்கியா??” என்று கேட்டுவிட்டு அபியை அழைத்து அங்கு வாசலில் துணைக்கு நிறுத்திவிட்டு ஸ்ரவ்யாவிற்கு தேவையானதை வாங்கி வந்தான்.
அரைமணிநேரத்தில் ஸ்ரவ்யாவிற்கு தேவையான பொருட்களுடன் வந்தவன் வாசலில் இருந்தபடியே தான்யாவை அழைத்து கொடுத்தவன் வெளியே அபியுடன் நின்றுக்கொண்டான்.
சற்று நேரத்தில் இருவரும் வெளியே வர அவர்கள் அருகே சென்ற தேவ் ஸ்ரவ்யாவிடம் சென்று
“எல்லாம் ஓகேயா சூட்டி.. ?? டிரெஸ் சரியா இருக்கா??” என்று கேட்க ஸ்ரவ்யா தலையை ஆட்டினாள்..
தான்யாவிற்கு நன்றி கூறிய தேவ்
“நீ இப்போ கிளம்புறியா தான்யா??”
“ஆமாடா... இன்னைக்கு ஈவினிங் லெக்சசும் இல்லை...”
“சரிமா.. நீ கிளம்பு..பாய்... அன்ட் தாங்க்ஸ்..”
“சரிடா.. பார்த்துக்கோ... நான் வர்றேன்...” என்றபடி தான்யா அங்கிருந்து நகர தேவ் அபியை செல்லுமாறு கூறியவன் அவன் ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு வருவதாக கூறினான்.
அபி அங்கிருந்து நகர்ந்ததும் ஸ்ரவ்யாவின் புறம் திரும்பியவன்
“சூட்டி.. ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரவா???”
“இல்ல வேணாம்... நீங்க சாப்பிட போங்க... அவங்க உங்களுக்காக வெயிட் பண்ணுவாங்க...”
“அப்போ நீ என்ன பண்ண போற???”
“நான் வீட்டுக்கு போறேன்...”
“அப்போ லன்ச்...??”
“எனக்கு பசிக்கல...”
“லூசா நீ... ஏதாவது சாப்பிட்டு போ..” என்று கூற ஸ்ரவ்யாவோ அழுகையை அடக்கியபடி
“எ.ன்னால... முடியல...” என்று கூறிய மறுநொடி கண்களிரண்டிலும் நீர் வடிந்தது..
அதை கண்டு பயந்த தேவ் அவளை ஆதரவாக அழைத்து சென்று அங்கிருந்த கதிரையில் அமரச்செய்தவன் அவள் அருகில் அமர்ந்துகொண்டு
“என்ன சூட்டி செய்யிது??”
“ரொம்ப வலிக்குது தேவ்..” என்று வலியை அடக்கும் பொருத்து பற்களை கடித்தபடி வயிற்றை பிடித்துக்கொண்டு கூற தேவ்விற்கோ ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியவில்லை....
முதலில் அவளுக்கு குடிக்க தண்ணி எடுத்துவந்து கொடுத்தவன்
“இதை கொஞ்சம் குடி சூட்டி... உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றேன்..” என்று எழ முயன்றவனை தடுத்தவள்
“வேணாம் தேவ்... என்னால இப்போ எதுவும் சாப்பிடமுடியாது..”
“ஹேய்... இந்த மாதிரி நேரத்துல நல்ல சாப்பிடனும்னு சொல்லுவாங்களே.. நீ என்னடானா வேணாம்னு சொல்லுற?? நீ இங்கயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.. நான் இதோ வர்றேன்..” என்றவன் விரைந்து சென்று கான்டீனில் ரைஸ் பாக்கெட்டும் பால் பாக்கெட்டும் வாங்கிவந்தான்..
அதை பிரித்து உண்ணக்கொடுத்தவன் அவள் அருகிலேயே இருந்து அவள் உண்டு முடிக்கும் வரை கவனித்தபடியிருந்தான்..
அவள் சிறிது உண்டதும் போதுமென்று கூற அவளை வற்புறுத்தி முழுவதையும் உண்ண வைத்தவன் அவள் உண்டு முடித்ததும் அவ்விடத்தை சுத்தப்படுத்துகையில் அங்கு அபி வந்தான்...
அவன் கையிலிருந்த மாத்திரையை வாங்கிய தேவ்
“சாரி மச்சான்... உன்னை நிம்மதியா சாப்பிடக்கூட விடலை ..”
“டேய்... இதெல்லாம் ஒரு விஷயமா?? எனக்கு ஒன்னுன்னா நீ இதை செய்யமாட்டியா?? இப்போ இது முக்கியம் இல்ல.. நீ சூட்டியை கவனி..நான் கிளம்புறேன்... உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரனுமா??”
“இல்லடா.. நீ போ.. அவன்க நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பானுங்க...”
“சரிடா.. நீ பார்த்துக்கோ.. ஏதும் தேவைனா போன் பண்ணு...” என்றுவிட்டு வெளியேறினான் அபி.
ஸ்ரவ்யாவின் அருகில் வந்தவன் அவளிடம் தன் கையிலிருந்த மாத்திரையை கொடுத்து
“சூட்டி.. இந்தா... இதை போட்டுக்கோ...” என்று தேவ் கூற ஸ்ரவ்யாவோ அவனை ஒருவித தயக்கத்துடன் பார்த்தாள்.. அவள் தயக்கம் புரிந்தவன்
“அபி பாமசியில விஷயத்தை சொல்லி தான் வாங்கிட்டு வந்தான்.. அதனால பயப்படாமல் இந்த மருந்தை குடி..” என்று கூற ஸ்ரவ்யாவும் வாங்கி குடித்தாள்...
பின் ஸ்ரவ்யாவிடம்
“ சூட்டி இங்கேயே ரெஸ்ட் எடுக்குறியா?? இல்லை வீட்டுக்கு போறியா??” என்று அபி கேட்க ஸ்ரவ்யாவே
“எனக்கு இப்போ வீட்டுக்கு போகனும்..”
“உன்னால நடக்க முடியுமா??”
“இப்போ வலி குறைஞ்சிடுச்சு...” என்று ஸ்ரவ்யா கூற அவளுடைய பையையும் தன் பையையும் எடுத்தவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்து சென்றான்...
வாடகைக்கு ஒரு முச்சக்கர வாகனத்தில் ஏறியவர்கள் அரைமணித்தியாலயத்தில் ஸ்ரவ்யா தங்கியிருக்கும் பிளாட்டிற்கு வந்தனர்...
வரும் வழி நெடுகிலும் அவளை கவனித்தபடியும் இடைக்கிடையே அவளின் உடல் நலத்தை பற்றி விசாரித்தபடியே வந்தான் தேவ்...
அவளது பிளாட் வந்ததும் கதவு பூட்டியிருப்பதை பார்த்ததும்
“சூட்டி தனியாகவா இருக்க???”
“இல்லை.. என்னோட ப்ரெண்ட் திவ்யாவோட தான் தங்கியிருக்கேன்... அவ ஊருக்கு போயிருக்கா...”
“ஓ... சரி டோர் கீயை தா..” என்று சாவியை வாங்கியவன் கதவை திறந்துகொண்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்...
உள்ளே சென்று ஹாலில் இருந்து கதிரையில் அவளை அமரச்செய்தவன்
“திவ்யா எப்போ வருவா??”
“அவ ஊருக்கு போயிருக்கா.. நாளைக்கு மார்னிங் தான் வருவா..”
“அப்போ யாரும் உனக்கு துணைக்கு இல்லையா???”
“இல்லை..நைட்டுக்கு பக்கத்து வீட்டு அக்கா துணைக்கு வர்றதா சொன்னாங்க...”
“அந்த அக்கா இப்போ வீட்டுல இருப்பாங்களா???”
“இல்ல.. அவங்க வர்க் பண்ணுறாங்க... நைட் தான் வருவாங்க..”
“அப்போ அது வரைக்கும் தனியா தான் இருக்கபோறியா??”
“ஆமா... டோரை லாக் பண்ணிட்டா எந்த பிரச்சனையும் இல்ல..”
“ம்ம்... வே... சரி நீ கவனமா இருந்துப்பியா??”
“ம்ம்... இ.. சரி...”
“உன்னால முடியும் தானே...” என்று தேவ் கேட்க அவளது கண்களோ அவனிடம் எதையோ யாசித்தது...
தேவ்விற்கும் அவளிருக்கும் நிலையில் அவளை தனியே விட்டு செல்ல மனமில்லை...
ஆனால் என்று யோசித்தவனுக்கு நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தவன் ஸ்ரவ்யாவிடம்
“நான் வேணும்னா அந்த அக்கா வரும் வரைக்கும் உனக்கு துணைக்கு இருக்கட்டுமா??” என்று கேட்ட மறுநொடி ஸ்ரவ்யா மகிழ்ச்சியாய் தலையாட்ட தேவ்வோ சிரித்தபடி அவள் தலையில் கைவைத்து சிகையை கலைத்துவிட்டு
“சரி கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு..” என்று கூறியவனின் சொல்லிற்கு ஏற்ப அங்கு ஹாலில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மெட்ரஸை விரிக்க போனவளை தடுத்தவன் தானே வாங்கி விரித்து அவள் படுப்பதற்கு ஏதுவாக அனைத்தையும் செய்து கொடுத்தான்...
ஸ்ரவ்யாவும் படுக்கையில் படுத்தவள் உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்..அவள் உறங்கியதும் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டவன் காற்றாடியின் வேகத்தை கூட்டிவிட்டு அவள் உறக்கத்தை கலைக்காதவண்ணம் அங்கிருந்த பால்கனியில் அமர்ந்து கொண்டான்...
மாலை ஆறரை மணியளவில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரவ்யாவை எழுப்பினான் தேவ்.
மெதுவாக இமை பிரித்தவளை எழுந்து அமர உதவி செய்தவன் அவளிடம் தேநீர் கோப்பையை நீட்டி அதை குடிக்கச்சொன்னான்..
அதை வாங்கிய ஸ்ரவ்யா குடித்து முடித்ததும்
“இப்போ உடம்புக்கு நல்லா இருக்கா சூட்டி??”
“ம்ம்ம்.. பரவாயில்லை.. அப்புறம் டீ சூப்பர்..”
“ஹாஹா... தாங்கியூ.. தாங்கியூ... சரி இனி உன்னால மேனேஜ் பண்ண முடியுமா இல்லை அந்த அக்கா வரும் வரை நான் இங்க இருக்கனுமா???”
“அந்த அக்கா வரும் வரை இருங்க தேவ்..”
“ம்ம்.. சரி இருக்கேன்.. நீ போயிட்டு குளிச்சிட்டு வா... அசதியெல்லாம் போயிடும்..” என்று தேவ் கூற
“நீங்க டீ குடிச்சீங்களா??”
“ம்ம் நான் குடிச்சிட்டேன்.. நீ போயிட்டு குளிச்சிட்டு வா..”என்று கூற ஸ்ரவ்யாவும் எழுந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்...
ஸ்ரவ்யா குளித்துவிட்டு வருவதற்குள் அவள் படுக்கையை மடித்து வைத்து ஹாலை ஒழுங்கு படுத்தினான் தேவ்..
ஸ்ரவ்யா வந்ததும் வீடு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை பார்த்தவள்
“எதுக்கு இதெல்லாம் நீங்க செஞ்சீங்க....?? நானே ஒதுக்கியிருப்பேன்ல..”
“உனக்கு உடம்புக்கு முடியலனு தான் ஒதுக்கி வச்சேன்... நைட்டுக்கு சாப்பாட்டிற்கு ப்ரிஜ்சில இருந்த பாணை ரோஸ்ட் பண்ணி நல்லெண்ணெய்ல முட்டை பொரிச்சி வச்சிருக்கேன்... நீ அதை சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நாளைக்கு உடம்புக்கு நல்லா இருந்தா மட்டும் காலேஜிக்கு வா.. இல்லைனா ரெஸ்ட் எடு....சரியா... பக்கத்து வீட்டு அக்கா நீ குளிக்க போகும் போதுதான் வந்தாங்க.. இப்போ அவங்க வந்திடுவாங்க... நான் கிளம்புறேன்... ஏதும் தேவைனா போன் பண்ணு சரியா??? ஒழுங்கா சாப்பிட்டு நல்லா தூங்கு.. எல்லாம் சரியாகிடும் சரியா??” என்று தேவ் அவளிடம் விடைபெற பக்கத்துவீட்டு அக்காவும் வந்துவிட தேவ்வும் அங்கிருந்து கிளம்பினான்.
தேவ் கிளம்பியதும் அந்த அக்கா
“யாரு ஸ்ரவ்யா இந்த பையன்.. உன்னோட சொந்தக்கார பையனா...???.” என்று அவர் கேட்க இன்று பகல் தனக்கு உடல்நிலை முடியாமல் போனதிலிருந்து அனைத்தையும் விளக்கினாள் ஸ்ரவ்யா...
அதை கேட்டவர்
“இப்போ உனக்கா எப்படி இருக்கு??? ஏதாவது குடிக்கிறியா??”
“இப்போ பரவாயில்ல அக்கா.. தேவ் எனக்கு டாப்லெட் வாங்கிக்கொடுத்தாரு... இப்போ தான் டீ குடிச்சேன்... அதுனால இப்போ எதுவும் வேணாம் அக்கா... டின்னரும் ரெடி பண்ணிட்டாராம்...”
“பார்டா..பையன் ரொம்ப பொறுப்பானவன் தான் போல...”
“ஆமா அக்கா.. நான் கேட்டதுக்காக நீங்க வரும் வரைக்கும் எனக்கு துணையாக இருந்தாரு...”
“சரி...சாப்பிட எடுத்துட்டு வரவா..??” என்று கேட்க மறுத்தவள் சற்று தாமதமாக சாப்பிடுவதாக கூறி தொலைகாட்சி பெட்டியை இயக்கி அதில் கவனம் பதித்தவளது நினைவுகளிலோ தேவ் மட்டுமே...
அவனுடன் நட்பு ஆரம்பித்த நாளிலிருந்தே அவனது ஒவ்வொரு செயலும் அவளை கவர்ந்திருந்தது.. பேச்சிலாகட்டும், வேலையிலாகட்டும் எதிலுமே அவனிடம் ஒரு நேர்த்தி இருந்தது.. ஆடம்பர செலவாளியும் அல்ல.. அதற்காக அற்ப கஞ்சனும் அல்ல.. தன் நிலை அறிந்து நடந்து கொள்பவன்.. நண்பர்களிடம் எப்போதுமே பாராபட்சம் பார்க்கமாட்டேன்..
எப்போதுமே இவன் தான் அவர்களின் உற்சாக ஊடகம்.. எந்தநிலையிலும் மற்றவர்களை எதிர்த்து முடிவெடுக்கமாட்டான்... அனைவரது ஆலோசனைகளை உள்ளடக்கியதாகவே அவனது முடிவுகள் இருக்கும்.. எப்போதும் பிறர் நலம் நாடுபவன்.. ஆனால் அனாவசியமாய் அவப்பெயரை சுமக்கவேண்டி வந்தால் வீறுகொண்டு சண்டையிடுவான்... பொய் புரட்டு எப்போதும் அவனால் விரும்பப்படாத ஒன்று...
இத்தனை நாள் நட்பில் ஸ்ரவ்யா அவனிடம் ஒரு இனம்புரியாத அன்பை உணர்ந்தாள். இதுவரை யாரும் அவளிடம் காட்டாத அன்பு.. அதில் அதிக அக்கறையும் கண்டிப்பும் கலந்திருந்ததை உணர்ந்தாள்... அதையும் மீறி அவன் மீது அவளுக்கு ஒரு ஈடுபாடு வந்துள்ளதை கடந்த சிலநாட்களாய் உணர்கின்றாள்.. ஆனால் அதற்கு நாமகரணம் சூட்ட அவள் மனம் முன்வரவில்லை.. அது நட்பு மட்டுமல்ல.. அது தவிர வேறொரு உணர்வு என்று மட்டும் அவள் மனம் தெரிந்துகொண்டது.....
எந்த ஒரு ஆண்மகனிடமும் அவள் உணராத உணர்வு.... தேவ்வின் அன்பு தனக்கு மட்டுமே வேண்டும் என்ற உணர்வு... வாழ்வின் இறுதி நொடிவரை அவன் அன்பு வேண்டுமென்ற உணர்வு.. அவனின் அரவணைப்பு வேண்டுமென்ற உணர்வு.. அவன் மட்டுமே தனக்கான வாழ்வு என்ற உணர்வு.. இவ்வாறு அவனுடனான பந்ததிற்கு வெவ்வேறு உணர்வுகளை உணர்ந்தவளுக்கு புரிந்த ஒரு விடயம் தேவ் தன் வாழ்வின் இறுதி நொடிவரை வேண்டும்... எல்லாமுமாக அவன் மட்டுமே வேண்டும்... நான் இழந்த அன்பு மொத்தத்தையும் அள்ளி வழங்கும் நபராய் அவன் தன் வாழ்வில் வேண்டும்...அந்த உறவிற்கு என் உலகம் என்ன நாமம் சூட்டும்??? நட்பை தாண்டிய இந்த உறவை தேவ் ஏற்றுக்கொள்வானா???? இல்லை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவானா???? அப்படி என்னை அவன் வாழ்வில் இருந்து ஒதுக்கிவிட்டால்....??? ஏன் நான் இவ்வாறு உணர்கின்றேன்.. என்னுடைய இந்த நிலைக்கு காரணம் என்ன??? எனது எண்ணங்கள் சரிதானா?? இல்லை நான் தவறாக புரிந்துகொண்டேனா?? இதற்கு யார் பதில் சொல்வார்??? என் மனம் விரும்புவது நடக்குமா இல்லையேல் பாலைவனத்தில் பயணிக்கும் பயணியின் கண்களுக்கு தெரியும் காணல் நீராய் என் நிலையும் மறைந்துவிடுமா???....
இவ்வாறு கேள்விகள் மட்டுமே தொக்கி நிற்க பதில் தெரியாமல் தவித்தவளுக்கு பசியும் மறந்து போனது.. பக்கத்து வீட்டு அக்காளின் வற்புறுத்தலின் பேரில் உணவை கொறித்தவள் மீண்டும் படுக்கையில் விழ தூக்கம் மட்டும் எட்டாக்கனியாகியது..
அங்கு தேவ்வோ தன் நண்பர்களுடன் கொட்டமடித்துவிட்டு இரவு பத்து மணியளவில் வீட்டுக்கு திரும்பினான்..
அப்போது தான் ஸ்ரவ்யாவின் நினைவு வர அவளுக்கு மேசேஜ் செய்தான் தேவ்...
தூக்கம் வராமல் புரண்டு படுத்தபடியிருந்த ஸ்ரவ்யா தேவ்வின் மெசேஜ் வந்ததும் மொபைல் ஒலியெழுப்ப அதை எடுத்து பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி..
அவன் அவள் உடல் நலம் பற்றி விசாரிக்க அதற்கு பதில் கூறியவள் இறுதியாக
“மிஸ் யூ அப்பு...” என்ற மெசேஜுடன் விடைபெற்றிருந்தாள்...
தேவ்வோ அதை சரியாக கவனிக்காததால் அந்த மெசேஜை பொருட்படுத்தவில்லை... ஆனால் ஸ்ரவ்யாவோ அவன் அதை பற்றி விசாரிப்பான் என்று காத்திருக்க அவனிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை.
ஸ்ரவ்யா மனதினுள்
“அப்பு.... நான் சொன்னதை நீ கவனிக்கலனு புரியிது... ஆனா கூடிய சீக்கிரம் நீ அதை கவனிச்சு என்கிட்ட கேட்கும் போது உன்கிட்ட அதை பத்தி சொல்லுவேன்... அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன்..” என்று கூறிக்கொண்டவள் தேவ் என்று பதியப்பட்டிருந்த எண்ணை அப்பு என்று பெயர் மாற்றம் செய்து மறுபடியும் சேமித்துக்கொண்டாள்....
இரவு முழுதும் தன்னவளின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன் அதிகாலை வேளையிலேயே கண்ணயர்ந்தான்.
காலை ஏழு மணியளவில் கண்விழித்த அபி தேவ்வை தேட அவனோ அந்த அறையில் இல்லை... வெளியே வந்து பார்த்தவன் பால்கனியில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி தேவ் உறங்கிக்கொண்டிருப்பதை கண்டவனுக்கு அவன் இரவு முழுதும் அங்கேயே உறங்கியிருக்கிறான் என்று புரிய அவனது தூக்கத்தை கலைக்காது தன் வேலைகளை முடித்தவன் தேநீர் கலந்து அதை பிளாஸ்கில் ஊற்றி வைத்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகி வந்தான்...
தேவ்வை எழுப்பியவன்
“தேவ் குடிக்க டீ ப்ளாஸ்கில் வச்சிருக்கேன்... சாப்பாடு கிச்சனுல இருக்கு சூடு பண்ணி சாப்பிட்டுக்கோ... அஜய் ப்ரோவும் இன்னும் தூங்குறாரு.. அவரு எழும்புனதும் அவருக்கு தேவையானதை கவனி... நம்ம அகியோட பைக்கை கொண்டு வர சொல்லியிருக்கேன்.. எங்கயும் வெளிய போகனும்னா அதை யூஸ் பண்ணிக்கோ... நான் கிளம்புறேன்டா.. லேட்டாச்சு...”
“சரிடா... நீ கிளம்பு..” என்றவன் அபி சென்றதும் கதவை மூடிவிட்டு சோபாவில் வந்து படுத்தவன் மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தான்...
ஒன்பது மணியளவில் மீண்டும் கண்விழித்தவன் எழுந்து சென்று காலை கடன்களை முடித்துவிட்டு வந்து பிளாஸ்கில் இருந்த தேநீரனை ஊற்றி குடித்தபடியிருக்க அப்போது அஜயையும் எழுந்து வந்தான்..
“குட் மார்னிங் அஜய்..”
“வெரி குட் மார்னிங் தேவ்... எங்க அபியை காணல??”
“அவன் வர்க்குக்கு கிளம்பிட்டான். நீங்க ப்ரெஸ் ஆகிட்டு வாங்க டீ குடிக்கலாம்..” என்று தேவ் கூற அஜயும் ப்ரெஸ்ஸாகி வந்தவன் தேவ்வின் உதவியுடன் ஒரு கோப்பையை கேட்டு பெற்றுக்கொண்டவன் ப்ளாஸ்கில் இருந்த தேநீரை ஊற்றி ருசிக்கத்தொடங்கினான்..
அப்போது தேவ்
“சாரி அஜய்... நைட் கொஞ்சம் மைண்ட் அப்செட்ல இருந்தேன்... அதான் உங்களை சரியாக கவனிக்கக்கூட இல்லை...”
“ஹேய் டியூட்... எதுக்கு சாரி எல்லாம்.... உங்க நிலைமை எனக்கு புரியிது... இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. சில் ப்ரோ...”
“தேங்க்ஸ் அஜய்.. இன்னைக்கு என்ன பிளான்...??”
“இன்னைக்கு என்னோட பேபியை பார்க்க போகனும் தேவ்..”
“ஓகே ஓகே... எங்கனு சொல்லுங்க.. நான் உங்களை பைக்கில ட்ராப் பண்ணுறேன்..”
“பம்ப...ல..”
“பம்பலபிட்டியா??”
“ஆ.. அதே தான் உங்க நம்பரை தாங்க தேவ்... நான் அட்ரசை ஸெயார் பண்ணுறேன்...” என்று கூற இருவரும் தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டதும் அஜய் அனுப்பிய லொகேஷன் எந்த இடமென்று அறிந்து கொண்ட தேவ் அவனை கிளம்புமாறு பணித்தான்..
இருவரும் காலை உணவை முடித்துவிட்டு அஜய் கூறிய விலாசத்திற்கு அகிலனின் பைக்கில் சென்றனர்..
அங்கு சென்று இறங்கியதும் இருவரும் பைக்கை பார்க் செய்துவிட்டு ஹெல்மட்டுடன் அந்த வீட்டின் வாசலில் அழைப்பு மணியை ஒலித்துவிட்டு காத்திருந்தனர்..
அப்போது ஒரு வயதான பெண்மணி வந்து கதவை திறக்க அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அஜய் தேவ்வையும் உள்ளே அழைத்து சென்றான்..
உள்ளே சென்றதும்
“ஏதாவது குடிக்கிறீங்களா சார்??” என்று அப்பெண்மணி கேட்க வேண்டாம் என்று மறுத்த அஜய்
“ஸ்ரவ்யா எங்க??” என்று கேட்க அப்பெயரில் திடுக்கிட்ட தேவ் அஜயை திரும்பி பார்க்க அவனோ அப்பெண்மணியுடன் உரையாடுவதில் மும்மரமாய் இருந்தான்..
ஏனோ அந்த பெயருக்கு சொந்தக்காரி தன்னவளாய் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்த நொடி அவனுள் ஒரு வித பயம் மேலோங்கியிருந்தது... ஆனால் அதற்கான காரணம் புரியாமல் தன்னுள் குழம்பியபடி இருந்தவனை அழைத்தான் அஜய்.
“தேவ் வாங்க... பேபியை பார்த்துட்டு வரலாம்..” என்று அழைக்க தேவ்விற்கோ எவ்வாறேனும் அவன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நினைவு மட்டுமே மனதில் இருக்க அஜயோடு எழுந்து சென்றான் தேவ்.. அதோடு ஸ்ரவ்யா என்ற பெயரை கேட்ட நொடியிலிருந்து அஜய் வார்த்தைக்கு வார்த்தை பேபி என்று கூறும் போது அவனுள் இனப்புரியாத ஒரு கோபமும் கிளர்ந்தெழுந்தது.. அதை வெளிக்காட்டாது இருப்பதற்கே அவன் அரும்பாடுபடவேண்டியிருந்தது.... ஒருவாறு முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது அஜயோடு அந்த பெண்மணி காட்டிய அறைக்கு சென்றான் தேவ்.
அந்த அறை இருட்டாயிருக்க அறையின் விளக்கினை ஒளிரச்செய்த அஜய் உள்ளே செல்ல அவனை பின் தொடர்ந்தனர்.
அந்த அறையின் ஓரமாக போடப்பட்டிருந்த கட்டிலில் ஒரு பெண் படுத்திருப்பது தெரிய அதை கண்ட தேவ்விற்கோ ஏதோ புரிவது போல் இருக்க அது இன்னும் அவன் பயத்தை அதிகரித்தது.. அதன் தாக்கத்தால் நின்ற இடத்திலிருந்து தேவ் அசையாது நிற்க அந்த பெண்ணின் அருகே சென்ற அஜய் கட்டினில் ஓரமாய் அமர்ந்து மெதுவாக பேபி என்று அழைக்க அந்த பெண்ணும் திரும்பி பார்த்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.
அந்த பெண்ணை பார்த்த தேவ்வோ அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் “சூட்டி” என்று கத்திவிட அவர்கள் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க தேவ்வோ கண்களில் கண்ணீரோடு மடிந்து அழுதுகொண்டிருந்தான். அவனின் செயலில் பதறிய அஜய் தேவ்வின் அருகில் சென்று
“தேவ் என்னாச்சு?? எழுந்திரிங்க...” என்று கூற தேவ்வோ சிறு பிள்ளைபோல்
“சூட்டி... என்னோட சூட்டி...” என்று கூற அஜயிற்கு ஏதோ புரிய
“அப்போ நீங்க தான் என்னோட பேபியோட அப்புவா???” என்று கேட்க கண்களில் நீரோடு தேவ்வும் ஆமென்று தலையாட்ட அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை பலமாக அறைந்தான் அஜய்....
அவனது இந்த செயலை எதிர்பார்க்காத தேவ் அஜயை அதிர்ச்சியோடு பார்க்க அஜயோ தேவ்வின் சட்டை காலரினை பிடித்து
“ஏன்டா என்னோட பேபியை இந்த நிலைமைக்கு ஆளாக்குன?? ஏன்டா அவளை இப்படி பண்ண??” என்று ஆவேசமாய் ஆட்ட தேவ்விற்கோ எதுவுமே புரியவில்லை...
“அவ இப்போ பழசெல்லாம் மறந்துட்டா... அவளுக்கு எதுவுமே நியாபகம் இல்லை... உன்னால அவளுக்கு பேச்சு போயிடுச்சு... இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதும் அவ மறக்காத ஒரு விஷயம் நீ மட்டும் தான்.. அவ உன்னை ஆசையா கூப்பிடுற அப்பு அப்படீங்கிற பெயர் மட்டும் தான் அவ நியாபகத்துல இருக்கு.. ஏன்டா இப்படி பட்டவளை தனியா விட்டுட்டு போன??” என்று அஜயின் வார்த்தைகள் இடியாய் விழ தேவ்வோ முற்றாக உடைந்துவிட்டான்..
அஜயின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை சாட்டையால் அடித்தது போல் இருந்தது... தான் தன்னவளுக்கு மாபெரும் தவறு இழைத்துவிட்டதை எண்ணி அந்தநொடி தன்னை முழுதாய் வெறுத்தான் தேவ்...