Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 6
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

இதயம் கேட்கும் காதலுக்கு

வேறெதையும் கேட்டிட தெரியாது

அன்பை கேட்கும் காதலுக்கு

சந்தேகம் தாங்கிட முடியாது...

மாலை அபி வந்திட அஜயோ இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை...

தேவ்வும் ஸ்ரவ்யாவின் நினைவிலேயே பால்கனியில் பழிகிடந்திட அபி வந்ததை கவனிக்கவில்லை... தன்னிடமிருந்த இன்னொரு சாவியினை கொண்டு வீட்டிற்கு வந்த அபி பால்கனியிலிருந்த தேவ்வினை பார்த்துவனுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது... பகல் தன்னிடம் பேசியபோதே தேவ்வின் குரல் வழமைக்கு மாறான சோகத்தில் இருந்ததை கண்டுகொண்டான் அபி... ஏதே நடந்திருக்கிறது என்று யூகித்தவன் அஜயை தேட அவனது அறையோ மூடப்பட்டு இருந்தது.. அவனை தொல்லை செய்யவேண்டாமென எண்ணிய அபி தேவ் அருகே சென்று அமர்ந்தான்...

“மச்சான்... என்னடா... டல்லா இருக்க மாதிரி இருக்கு.. போனில் பேசும் போதும் சீக்கிரமா வர சொன்ன... என்ன விஷயம்??” என்று அபி கேட்க தன்னிடத்திலிருந்து எழுந்தவன் பால்கனியின் கம்பியை பிடித்துக்கொண்டு சூழலை வெறித்தபடி

“சூட்டியை பார்த்தேன்டா..” என்று தேவ் கூற ஒரு நொடி அதிர்ந்த அபி

“என்னடா சொல்லுற?? எப்போ பார்த்த???அவகூட பேசுனியா???” என்று ஒரு வித பதட்டத்துடன் அபி கேட்க

“அவ என்கூட பேசுற நிலையில இல்லடா...”

“தெளிவா சொல்லு தேவ்... சூட்டியை எங்க பார்த்த??” என்று அபி கேட்க தேவ் நடந்ததனைத்தையும் கூறினான்...

அதை கேட்டவனுக்கு மனதில் சஞ்சலம் மட்டுமே சூழ்ந்து கொண்டது...

“அப்போ அஜய்??”

“அவளோட கசின்.. உனக்கு கூட தெரியுமே.. அவ என்னோட பேபினு சொல்லி அடிக்கடி என்னை கடுப்பாக்குவாளே...”

“ஓ... அப்போ உங்க விஷயம் அஜய்க்கு??”

“தெரியும்... பகல் அவளை பார்க்க போனப்போ தான் நான் அப்புனு அவருக்கு தெரியும்...”

“இப்போ என்னடா பண்ண போற??”

“அது தான்டா தெரியலை... நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு இப்போ தான்டா புரியிது... நான் கோபத்துல எடுத்த முடிவால நான் கஷ்டப்பட்டாக்கூட பரவாயில்லை.... சம்பந்தமே இல்லாமல் அவ ஏன்டா கஷ்டப்பட்டா??? இப்போ கூட பேச முடியாமல் இருந்தவ என்னை பார்த்ததும் அப்புனு கூப்பிட்டபோ அந்த நொடியே செத்து போயிடலாம்னு தோனுச்சு டா... அவ குழந்தை மாதிரிடா.. அடம்பிடிக்க மட்டும் தான் தெரியும்.. அது தெரிஞ்சும் கூட நான் அவளை வேண்டாம்னு சொல்லிட்டு போயிருக்கக்கூடாது... நான் அவளுக்கு பண்ணது துரோகம்...” என்று வேதனையில் புலம்பியவனை அணைத்து ஆறுதல் படுத்திய அபி

“தேவ் இப்போ சரி அன்னைக்கு என்ன நடந்துச்சுனு சொல்லுடா... அன்னைக்கு நீயும் சூட்டியும் அவங்க அப்பாவை பார்க்கப்போறோம்னு வீட்டுக்கு போனீங்க... ஆனா ஊர்ல இருந்து வந்ததும் நீ வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்த ஸ்காலர்ஷிப் ஆப்பருக்கு ஓகே சொல்லி கனடாவுக்கு கிளம்பிட்ட.... நான் என்ன நடந்துச்சுனு கேட்டப்போ நீ இனி சூட்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அவ என்னை பற்றி கேட்டாக்கூட எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு கிளம்பிப்போயிட்ட... ஆனா அதுக்கு பிறகு சூட்டியும் காலேஜ் வரலை. விசாரிச்சப்போ அவ வெளிநாடு போயிட்டானு சொன்னாங்க....ஆனா இப்போ... சொல்லு .. அன்னைக்கு என்ன நடந்துச்சு???” என்று அபி கேட்க அன்றைய நாளின் கசப்பான அனுபவத்தை அபியிடம் கூறத்தொடங்கினான் தேவ்...

தேவ்வும் ஸ்ரவ்யாவும் தத்தமது காதலை பரிமாறியதும் இருவரும் ஜோடிப்புறாக்களாய் வலம் வந்தனர்... ஸ்ரவ்யாவின் தனிமையை உணர்ந்த தேவ்வும் எப்போதும் அவள் தன்னுடனேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.... ஆனால் இருவரும் படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்ட பிறகே மற்றைய விஷயங்கள் என்று முடிவெடுத்திருந்தனர்...

படிப்பு, மியூசிக் ப்ரோக்ரம்ஸ் என்று பிசியாயிருந்தனர் இருவரும்... ஒருநாள் ஸ்ரவ்யா தேவ்வை அவள் வீட்டிற்கு அழைக்க அவனோ

“என்ன சூட்டி திடீர்னு???”

“எங்க அப்பா எனக்கு அலையன்ஸ் பார்த்திருக்காரு...”

“ஹேய் என்ன சொல்லுற??? உனக்கு இப்போ தானே டுவென்டி... அதுக்குள்ள??”

“அது அவருக்கு பிரச்சினை இல்லை.... என்னை அந்த வீட்டுல இருந்து துரத்தி விட்டா அவருக்கு போதும்...” என்று குரலில் வேதனையுடன் ஸ்ரவ்யா கூற அதை கண்டுகொண்டவன்

“என்ன ஸ்ரா பேபி இப்படி பேசுறீங்க...” என்று அவள் கன்னமிரண்டும் பிடித்து இருபுறமும் ஆட்டினான் தேவ்...

ஆனால் எப்போதும் போல் அதில் மகிழாமல் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள்

“இல்லை அப்பு.... உனக்கு அவரை பற்றி தெரியாது... அவருக்கு என்னை பார்த்தாலே வெறுப்பு.... அதை கூட பொறுத்துப்பேன். . ஆனா என் அம்மோட நடத்தையை அவர் தப்பா பேசும் போது அவர் கழுத்தை நெரித்து கொன்றிடலாம்னு தோன்றும்.. அம்மா இறக்கும் வரைக்கும் அம்மாவோட அரவணைப்பில தான் வளர்ந்தேன்... அவங்க ஸ்டீல் வுமன் தேவ்... யாரும் அவங்ககிட்ட வாலாட்டமுடியாது... அப்படிபட்டவங்களை அவர் நடத்தை கெட்டவனு சொல்லும் போது எனக்கு அவ்வளவு வேதனையாக இருக்கும்...”

“சூட்டி உன்னோட வேதனை எனக்கு புரியிது... அவர் ஏதாவது கோபத்துல சொல்லியிருப்பாரு...”

“இல்லை தேவ்....அவரு அம்மாவை அப்படி தான் சொல்வாரு... அம்மாவை மட்டும் இல்லை... என்னையும்.... என்னையும்... ரொம்ப தப்பா...நீ.. யார்.. கூட.....ப...படுக்....”என்று வேதனையில் திக்கித்திணறியவளின் வாயினை தன் கைகளால் மூடியவன் அவளை ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்....

அவள் வாய் மூலம் கேட்ட சில ஏச்சுக்களே அவனுள் கோபத்தை கிளப்பியிருக்க அருகே இருந்து முழுதாய் அனுபவித்த அவள் வேதனை எத்தனை கொடியது என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது....

சற்று நேரம் அவள் வேதனை தீரட்டும் என்று அழவிட்டவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் வதனத்தை தன் கைகளில் ஏந்தியவன்

“இங்க பாரு சூட்டி... உனக்கு நான் இருக்கேன்...இப்போ மட்டும் இல்லை... எப்போதும் இந்த அப்பு உனக்காக இருப்பான்... இதை நல்ல மனசுல பதிந்துக்கோ.... இப்போ என்ன உங்க அப்பாகிட்ட வந்து நான் பேசனும்... அவ்வளவு தானே... நான் உன்கூட வந்து உங்க அப்பாவை பார்த்து நான் தான் உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாப்பிள்ளை.... உங்க பொண்ணுகட்டுனா என்னை தான் கட்டுவேனு அடம்பிடிக்கிறா... நானும் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இனி நான் தான் அவ வீட்டுக்காரர்னு சொல்லுறேன் ஓகேவா???” என்று தேவ் கேட்க கண்கள் பிரகாசிக்க அவன் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.....

தேவ்விற்கோ அவள் மன ஆறுதலுக்காக தான் அவள் தந்தையை சந்திப்பதாக கூறியபோதிலும் அவனுக்கு இதில் உடன்பாடு இல்லை.... அவனும் இன்னும் தன் படிப்பை முடிக்கவில்லை... எந்த தைரியத்தில் ஸ்ரவ்யாவின் தந்தையிடம் தங்களது காதல் விவகாரத்தை கூறுவான்??? அதோடு தந்தையும் மகளும் பேசிமுடிக்கவேண்டிய விஷயத்தில் அவன் தலையிடுவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் வரலாமென்று அவன் மனம் அடித்துக்கூறியது... ஆனால் இதை கூறினால் ஸ்ரவ்யா ஒப்புக்கொள்ளமாட்டாள்.. குழந்தைபோல் அடம்பிடிக்கத்தொடங்கிவிடுவாள்..

இவளை சமாளிப்பதற்கு பதில் அவள் தந்தையையே சமாளிப்பது மேல் என்று எண்ணியவன் அவளோடு செல்லும் முடிவுக்கு வந்தான்...

சனிக்கிழமை அதிகாலை இருவரும் பஸ்ஸில் கண்டிக்கு கிளம்பினர்...

தேவ்வோ பதற்றத்துடன் வர ஸ்ரவ்யாவோ தேவ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் அவன் கையினை தன் கைகளால் அணைத்தபடியே அவன் தோளில் உறங்கியபடி வந்தாள்..

மூன்று மணித்தியாலத்தில் கண்டியை அடைந்துவிட ஸ்ரவ்யா பஸ் ஸ்டாண்டில் அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏற அவளை பின்தொடர்ந்து தேவ்வும் ஏறினான்..

கார் மிதமான வேகத்தில் செல்ல ஸ்ரவ்யாவோ தேவ்விடம்

“எங்க ஊரு எப்படி இருக்கு??”

“ம்ம்ம்... சூப்பரா இருக்கு.... கண்டியும் எங்க ஊரு மாதிரினு தான்னு நினைச்சேன்.. ஆனா இது இயற்கை வளங்கள் நிறைந்த கொழும்பு மாதிரி இருக்கு... இங்கே எல்லா வசதியும் இருக்கு... அதே மாதிரி இயற்கையோட வாசமும் அதிகமாக இருக்கு சூட்டி..”

“ஆமா அப்பு....இங்கேயும் ஹோட்டல்ஸ், பார்க்ஸ், ப்ளாட்ஸ், ஹாஸ்பிடல்ஸ், ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே இருக்கு... சொல்லப்போனா கொழும்புல கிடைக்கிற தொழில் படிப்புனு எல்லாமே இங்கேயே கிடைக்கும்..”

“அப்போ எதுக்கு சூட்டி இப்படியொரு இடத்தை விட்டுட்டு அந்த சிட்டீங்கிற நரகத்துல வந்து படிக்கிற?? எங்க ஊருல மட்டும் இப்படி எல்லா வசதியும் இருந்திருந்தா நான் கொழும்புக்கு வந்திருக்கவே மாட்டேன்...”

“நான் அங்க வந்ததால தானே நீ எனக்கு கிடைச்ச??”

“நல்ல பார்ம்ல (form) தான் இருக்க.. ம்... நடத்து நடத்து...”

“ஹாஹா.. சோ ஸ்வீட்டா அப்பு நீ..” என்று அவனோடு உரையாடியபடியே வர ஸ்ரவ்யாவின் வீட்டு வாசலில் கார் நின்றதும் காரின் உள்ளேயிருந்தபடியே வீட்டை பார்த்த தேவ் அரண்டுவிட்டான்....

பாதி கண்டியையே உள்ளடக்கியது போன்றிருந்தது ஸ்ரவ்யாவின் வீடு... சுற்றி பல ஏக்கரில் பூந்தோட்டம் இருக்க அதன் நடுவில் சிம்மாசனம் போல் இருந்தது அவளது வீடு..

தூரத்தில் நீச்சல் தடாகம், கார்ஷெட், அவுட் ஹவுஸ் என்று அனைத்தும் இருக்க முன்புறமோ ஒருபுறமாய் பட்மின்டன் கோர்ட், கார்டன், நீருற்று என்று அந்த இடமே ஸ்ரவ்யாவின் செல்வநிலையை எடுத்து காட்டியது...

இதையெல்லாம் பார்த்ததும் தேவ்வின் தைரியம் சற்று குறைந்து தான் போனது.... அவன் எதிர்பார்த்து வந்தது வேறு.. ஆனால் நடப்பவையோ வேறு...

ஒருநிமிடம் இடம் மாறி வந்துவிட்டோமோ என்று தோன்றிட தேவ்வும்

“சூட்டி இது தான் உன் வீடா??”

“ஆமா தேவ்... வா போகலாம்...” என்று அவனை வீட்டிற்கு அழைத்து சென்றாள்.....

அவன் தங்குவதற்கு தேவையானவற்றை ஒழுங்கு செய்து கொடுத்தவள் அவனை குளித்து தயாராகச்சொன்னாள்...

தேவ்விற்கோ நடப்பது எதுவும் புரியவில்லை... நிச்சயம் அவன் எதிர்பார்த்தது எதுவும் இங்கு நடக்கவில்லை... ஸ்ரவ்யா இத்தனை வசதி படைத்தவள் என்று அவனால் நம்பமுடியவில்லை..

அவள் என்றுமே அவனிடம் அதை வெளிப்படுத்தியதில்லை.. அவனிடம் மட்டும் இல்லை... யாரிடமும் அவள் அதை வெளிப்படுத்தியதில்லை...

ஆனால் தான் இங்கு வந்த விடயத்தை தன்னால் பேசி சரிப்படுத்த முடியுமென்று அவனுக்கு தோன்றவில்லை... ஸ்ரவ்யாவின் தந்தையின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்குமென்று அவனால் யூகிக்ககூட முடியவில்லை... அவள் கூறியவற்றை வைத்து பார்த்தால் அவள் தந்தை நிச்சயம் தங்கள் காதலுக்கு சரிசொல்லமாட்டார் என்று புரிந்தது...

ஆனால்...ம்ஹூம்.. காதலை தெரிவித்தால் தானே எதிர்ப்பு வரும்??? இப்போதைக்கு அவள் படிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுப்பார்ப்போம்... அவள் படிப்பு முடிவதற்குள் தன் படிப்பும் முடிந்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட்டால் எப்படியாவது அவரின் சம்மதம் பெற்று அவள் கரம் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தவன் குளிக்கச்சென்றான்..

குளித்து முடித்து தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தவனை டைனிங் ஹாலிற்கு அழைத்து சென்றாள் ஸ்ரவ்யா......

டைனிங் ஹாலும் அந்த வீட்டின் பிரமாண்டத்திற்கு சற்றும் குறைவிலாத கம்பீரத்துடன் இருந்தது... அந்த நீண்ட மேசையின் அருகே இருந்து கதிரையில் அமர்ந்தவள் தேவ்வையும் அமரச்சொல்ல அவனும் எதுவும் கூறாமல் அமர்ந்தான்...

வேலையாட்கள் வந்து அவர்களுக்கு உணவு பரிமாறினர்..

ஸ்ரவ்யா பல நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சியாய் உண்ண தேவ்வோ மனதில் குழப்பத்துடன் உணவை கொறித்துக்கொண்டிருந்தான்...

அதை கண்ட ஸ்ரவ்யா

“என்னாச்சு அப்பு.. ஏன் சாப்பிடாமல் இருக்க??” என்று அவள் கேட்க அப்போது அங்கு வந்த அவள் தந்தை தேவ்வை இளக்காரமாய் பார்த்தபடியே

“அது எப்படி சாப்பாடு உள்ள இறங்கும்??? பார்க்கிறதை வாங்கி சாப்பிடுறவங்களுக்கு இந்தமாதிரி பெரியவீட்டு சாப்பாட்டெல்லாம் உள்ள இறங்காது... என்ன நான் சொல்றது சரிதானே...?” என்றபடி அவரும் வந்து அந்த மேசையில் அமர அவரை ஒரு பார்வை பார்த்த ஸ்ரவ்யா தேவ்விடம்

“அதெல்லாம் ஒன்றும் இல்லைனு சொல்லு அப்பு... உனக்கு இட்லி தோசை பிடிக்காதுனு சொல்லு... எனக்காக தான் சாப்பிடுறேன்னு சொல்லு.... சிலபேருக்கு மற்றவங்களை பற்றி எந்த கவலையும் இல்லை... அது அவங்க பெத்த பொண்ணா இருந்தாக்கூட...” என்று ஸ்ரவ்யா தன் தந்தைக்கு ஒரு கொட்டு வைக்க அதில் வெகுண்ட ஸ்ரவ்யாவின் தந்தை எதுவும் பேசாமல் ஸ்ரவ்யாவை முறைத்தார்..

அவளோ அதை கண்டுகொள்ளாது வேலைகாரர்களிடம் தேவ் விரும்பி உண்ணும் ரொட்டியை தயாரித்து கொண்டு வரச்சொல்ல அவர்களும் எடுத்து வந்தனர்...

தேவ்விற்கோ ஸ்ரவ்யாவின் தந்தையின் குணம் அவரது பேச்சிலேயே புரிந்துவிட்டது...இவரை சமாளிப்பது சுலபமல்ல என்று அவன் அறிவு கூற இப்போதைக்கு நாம் நினைத்ததை செய்துமுடிப்போம்.. பின்னர் இவரை சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தவன் உணவை உண்ணத்தொடங்கினான்...இடையிடையே சில பல குத்தல் பேச்சில்கள் இருந்தபோதிலும் அதை ஸ்ரவ்யா கத்தரித்த விதத்தில் தேவ்வே ஆடிப்போய்விட்டான்...

ஒரு நொடி அவன் மனதில் நம்ம சூட்டியா இது என்றுகூட தோன்றியது... அவள் வீட்டில் அவள் முற்றிலும் வேற்றாளாய் இருந்தாள்.. அவள் பேசும் தோரணையிலிருந்து அவள் நடவடிக்கை என்று அனைத்திலுமே வித்தியாசம் தெரிந்தது.... ஆனால் தேவ்விடம் மட்டும் அவள் எப்போது போலவே பேசினாள்..

தேவ்விற்குமே அங்கிருந்த சூழ்நிலை அத்தனை உவப்பானதாய் இல்லை. செல்வம் கொட்டிக்கிடந்தபோதிலும் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு நொடியும் ஏதோவொரு இறுக்கத்தை உணர்ந்தான்..

அப்போது தான் அவனுக்கு ஸ்ரவ்யாவின் நிலையும் புரிந்தது. எதற்காக அவள் தன்னையே சுற்றி வந்தாள் என்பதும் புரிந்தது.. ஆனால் அவளது இந்த செல்வநிலை தான் அவன் மனதை உறுத்தியது.. தங்கள் காதல் விவகாரம் தெரிந்தால் அவர் குணத்திற்கு நிச்சயம் நான் ஸ்ரவ்யாவின் செல்வநிலை அறிந்தே காதல் என்று கூறி அவளை ஏமாற்றுவதாக கூறுவார்... எந்த எதிர்பார்ப்புமின்றி உண்டான காதலுக்கு அத்தகைய அவப்பெயர் சரிதானா?? இல்லை... எங்கள் காதலுக்கு நிச்சயம் இப்படியொரு அவப்பெயர் வரக்கூடாது.... காதலை வெளிப்படுத்தும் முன் நான் என் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.. பின் தைரியமாக சூட்டியை பெண் கேட்க என்னால் முடியும்... ஆம்.. இதுவே சரியான முடிவு....

இவ்வாறு முடிவெடுத்தவன் ஸ்ரவ்யாவை அழைத்தான்...

“என்ன அப்பு...”

“சூட்டி... நான் சொல்லுற விஷயத்தை நல்லா கேளு... நான் இப்போ உங்க அப்பாகிட்ட பேசப்போறேன்... ஆனா நம்ம காதல் விஷயத்தை சொல்லப்போறதில்லை. .”

“என்ன அப்பு சொல்லுற??”

“சூட்டி நான் சொல்ல வருவதை முழுசாக கேளு.. இப்போ நம் காதல் விவகாரம் உங்க அப்பாவுக்கு தெரிவது நல்லதல்ல.. நான் கொஞ்சம் செட்டில் ஆனதும் இதை பற்றி பேசலாம்..”

“ஆனா..”

“சூட்டி... பயப்படாத.. இப்போ நம்ம காலேஜால எனக்கு கனடா போய் ஸ்டடீஸை தொடருவதற்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு... போவதை பற்றி நான் இன்னும் முடிவெடுக்கவில்லை... இப்போ உன்னையும் என்கூடவே கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்.... அதுக்கு உங்க அப்பாகிட்ட பேசனும்... நான் காலேஜில விசாரிச்சப்போ பஸ்ட் இயர் ஸ்டுடன்ஸ்ல பெஸ்ட் பர்போரிமிங் (performing) மூன்று மாணவர்களுக்கு கனடா ஸ்காலர்ஷிப் கொடுக்கிறாங்க... அந்த லிஸ்டில நீயும் இருக்கனு காலேஜ்ல சொன்னாங்க.. இதை தான் உங்க அப்பாகிட்ட நாம இப்போ சொல்ல போறோம்... அதாவது உனக்கு கனடாவுல படிக்கிற ஆப்பர் கிடைத்திருக்கு... அதனால் நீ கனடா போகனும்...சோ இப்போ உனக்கு கல்யாணம் வேண்டாம்... அதான் விஷயம்.... இதை தவிர இப்போ வேற எதுவும் உங்க அப்பாவுக்கு சொல்லவேண்டாம்...”

“ம்ஹூம்... இதெல்லாம் சரிவரும்னு நினைக்கிறியா அப்பு... அவரை பற்றி உனக்கு சரியாக தெரியலை அப்பு..”

“சூட்டி முயற்சி எடுக்காமல் எந்தவொரு முடிவுக்கும் வரக்கூடாது... இது உன்னோட படிப்பு சம்மந்தப்பட்ட விஷயம்... அதனால உங்க அப்பா சிலநேரம் யோசிக்கலாம்..புரிந்துக்கோமா...” என்று தேவ் கூற அவன் நம்பிக்கை கெடுக்கவேண்டாமென்று எண்ணிய ஸ்ரவ்யாவும்

“சரி உன்னோட இஷ்டம் அப்பு.... ஆனா எனக்கு இதுல துளிகூட நம்பிக்கை இல்லை அப்பு...”

“நம்பு சூட்டி.. எல்லாம் நல்லதாவே நடக்கும்...”

“சரி பேசுறதை இப்போவே பேசிரு... இல்லைனா நைட்டுக்கு அவரு வேற மாதிரி இருப்பாரு...”

“எப்படி சூட்டி.... இந்த நெஷனல் ஜோக்கிரபி சேனல்ல வருமே அந்த கறுப்பு கிங்காங் மாதிரியா???”

“அதை ஏன் அப்பு இவர்கூட கம்பெயார் பண்ணி கேவலப்படுத்துற???. அவரை நேருக்கு நேர் பேஸ் பண்ணும் போது உனக்கே புரியும்...”

“இருந்தாலும் உங்க அப்பாவுக்கு இவ்வளவு பில்டப்லாம் ரொம்ப ஓவர்மா..”

“ம்ம்... அவரோட குணம் முழுசா தெரியும் போது உனக்கே புரியும்...”

“சரிசரி... பார்த்துக்கலாம்... இப்போ உங்க அப்பாகிட்ட கூட்டிட்டு போ..” என்று தேவ் கூற அவனை தன் தந்தையிடம் அழைத்து சென்றாள் ஷ்ரவ்யா...

ஸ்ரவ்யாவின் தந்தை ஹாலில் ஏதோவொரு கோப்பை பார்வையிட்டபடியிருக்க அவரருகே அவரது பி.ஏ நின்றிருந்தார்...

ஸ்ரவ்யா பி.ஏ விடம்

“அப்பாகூட கொஞ்சம் பர்சனலாக பேசனும் நீங்க ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க...” என்று ஸ்ரவ்யா பி.ஏவை அனுப்பமுயல அவள் தந்தையோ ஸ்ரவ்யாவையும் தேவ்வையும் ஒரு பார்வை பார்த்தபடியே பி. ஏவிற்கு அனுமதியளிக்க அவரும் ஆபிஸ் ரூமிற்கு சென்று காத்திருக்கத்தொடங்கினார்...

வேலையாட்களும் வேலை முடிந்து அவுட் ஹவுசிற்கு சென்றிட வீட்டில் வேறு யாரும் இல்லை..

“என்ன விஷயம்...” என்று ஸ்ரவ்யாவின் தந்தை கையிலிருந்த கோப்பை முடியபடி அவர்களை என்னவென்று கேட்க தேவ்வும் விஷயத்தை கூறினான்...

“அப்போ மகாராணி கனடா போயிட்டு படிக்கப்போறாங்க.. அப்படிதானே... சரி அது அவ இஷ்டம்.... ஆனா இதை அவளே சொல்லியிருக்கலாமே... எதுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ண உன்னை கூட்டிட்டு வரணும்..??”

“அது..அது.. அங்கிள்.. நீங்க... ஏதாவது சொல்லுவீங்களோனு.?”

“ஓ... அப்படி... சரிசரி... மேடம் தனியாக தான் போறாங்களா??”

“ஆமா.. அங்கிள்...”

“ஓ.. அப்போ அங்க போய் யாரையாவது பிடிக்கலாங்கிற ஐடியாவில இருக்காங்க போல....”

“அங்கிள்... என்ன அங்கிள் நீங்க...”

“நான் சரியா தானே சொன்னேன்... அவ அவங்க அம்மா மாதிரி... கண்டவனோட மேய்றதுனா அவ அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம்... இந்த மகாராணிக்கும் அப்படிதான்....இங்கயிருந்தா எதுவும் பண்ணமுடியாதுனு நாடுவிட்டு நாடு போய் தான் நினைச்சபடி கேடுகெட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறாங்க போல...” என்ற தன் மகள் என்றும் பாராது ஸ்ரவ்யாவை அவள் தந்தை தரக்குறைவாய் பேச தேவ்விற்கு என்ன மனிதர் இவர் என்றானது...

ஆனால் ஸ்ரவ்யாவோ

“போதும் நிறுத்துங்க... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?? நீங்க பெத்த பொண்ணை பத்தி இன்னொருத்தர் முன்னாடி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே... உங்களுக்கு வெட்கமாயில்லை.... வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?? என் ஒழுக்கத்தை பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை... உங்களை அப்பானு கூப்பிடவே நாக்கு கூசுது...”

“ஓ.. உண்மையை சொன்னா கோபம் வருதோ... நீ என்ன கூத்தடிக்கிறனு எனக்கு தெரியாதுனு நினைச்சியா?? இங்கேயிருக்கும் போது பாட்டு பாடுறேன்னே ஊர் மேய்ந்தவ தானேடி நீ...யார்கூட எப்போ போய் படுத்தியோனு யாருக்கு தெரியும்...இப்பவும் யார்கூட உடம்பை பங்குப்போடுறியோ யாருக்கு தெரியும்... ஆனா நிச்சயம் ஒருத்தனா மட்டும் இருக்காதுனு எனக்கு நிச்சயமா தெரியும்..” என்று அவர் மேலும் மேலும் ஸ்ரவ்யாவின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்க அதை பொறுக்கமுடியாது வெகுண்ட தேவ்

“அங்கிள்... உங்க பொண்ணை பற்றி நீங்களே இப்படி பேசுறது சரியா?? ஸ்ரவ்யா எதுவும் தெரியாது குழந்தை அங்கிள்.. அவளை பத்தி எப்படி இவ்வளவு கேவலமாக உங்களால பேசமுடியிது??”

“ஓ... கதை அப்படி போகுதா....?? நீயும் அவளோட லிஸ்டில ஒருத்தனா??? எவ்வளவு பணம் தரேன்னு சொன்னா??? பணத்துக்காக தானே அவ கூட இருக்க??” என்று ஸ்ரவ்யாவின் தந்தை வார்த்தைகளாலே கொத்தி கிளறி அதில் கோபத்தை அடக்கமுடியாமல் தேவ் அவரின் சட்டையை பாய்ந்து பிடித்துவிட்டான்...

அவனின் செயலில் அதிர்ந்த ஸ்ரவ்யா தேவ் என்று அவனை தடுக்க முயல அதற்கு முன்னமே ஸ்ரவ்யாவின் தந்தை அவன் எதிர்பாரா வண்ணம் பிடித்து தள்ளியவர்

“யாரு சட்டையை யார் பிடிக்கிறது???” என்று தேவ்வை ஓங்கியொரு அறைவிட அவனோ அவரது இடிபோன்ற அடியில் சுருண்டு தூரவிழுந்தான்...

தூரவிழுந்தவனருகே ஓடிய ஸ்ரவ்யா அவன் நிலையை கண்டு கொதித்தெழுந்தவள்

“எதுக்கு அவனை அடிச்சீங்க... அவனை கையோங்க நீங்க யாரு... உங்க காட்டுமிராண்டிதனத்துக்கு ஒரு அளவே இல்லையா??” என்று ஸ்ரவ்யா தன் தந்தையிடம் பாய அவரோ

“அவன் என் சட்டைடை பிடிச்சது உனக்கு தப்பா தெரியலை.... ஆனா அவனை அடிச்சதுக்கு துள்ளிக்கிட்டு வர்ற??”

“ஆமா... தப்பா தெரியல... என்னை நீங்க தப்பா பேசுனதை பொறுத்துக்க முடியாமல் தான் உங்க சட்டையை பிடிச்சான்.. நீங்க இதைவிடவும் என்னை கேவலமாக பேசுவீங்கனு அவனுக்கு தெரியாது தானே... உங்க குணம் அவனுக்கு தெரியலை...”

“ஏய் என்னடி உங்க அம்மாக்காரி மாதிரி திமிரு ஏறிப்போய் சுத்துரியா??? கண்ட பிச்சைக்கார நாய்க்காகவெல்லாம் என்கூட மல்லுகட்டுற??”

“வார்த்தையை அளந்து பேசுங்க.... அவனை பத்தி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...”

“ஆமாஆமா... சொத்துக்காக உன்கூட சகவாசம் வச்சிக்கிறவனை பற்றியெல்லாம் பேச எனக்கு அருகதையில்லை தான்... இவன் கூட மட்டும் தான் பழக்கமா இல்லை... இல்லை இவன் அப்பா அண்ணானு...”

“ச்சீ.... நீயெல்லாம் மனுஷனா??? பெற்ற பிள்ளையே தப்பா பேசுறோம்னு உனக்கு உறுத்தலையா??? என்னை கேவலப்படுத்தினது மட்டுமல்லாமல் எனக்காக பேச வந்தவனையும் அவன் குடும்பத்தையும் என்கூட சேர்த்து வச்சி தப்பா பேசுறியே... உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு.... இதுக்கு மேலேயும் இந்த வீட்டுல நான் இருக்கமாட்டேன்... அப்பு.. வா போகலாம்...” என்று ஸ்ரவ்யா தேவ்வுடன் கிளம்ப முற்பட அவளது தந்தையே

“இப்படியெல்லாம் பேசுனா நீ பேசுனதெல்லாம் உண்மைனு ஆகிடாது... இவ்வளவு ஆனபின்பு உன்னை வெளியில விட்டா அது எனக்கு தான் மானக்கேடு....” என்றவர் ஸ்ரவ்யா கையைபிடித்து தரதரவென்று இழுத்து செல்ல தேவ்வோ அவரை தடுக்க முயன்றான்...

வெளியே நின்றிருந்த காவலாளியை அழைத்து இவனை கேட்டிற்கு வெளியே விட்டுவிடச்சொல்ல காவலாளியும் தேவ்வை வெளியே அழைத்து செல்ல முயல அவனோ காவலாளியை தள்ளிவிட்டு ஸ்ரவ்யாவின் தந்தையிடமிருந்து ஸ்ரவ்யாவை காக்க முயன்றான்...

காவலாளி இன்னொரு காவலாளியை அழைத்து வந்து தேவ்வை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கேட்டிற்கு வெளியே தள்ளினர்..

தேவ்வோ உள்ளே செல்ல முயற்சிக்க அவனை யாரும் உள்ளே விடவில்லை... அடுத்து என்னசெய்வதென்று திணறியவனுக்கு ஒரு யோசனை தோன்றிட உடனேயே அங்கிருந்தவர்களிடம் விசாரித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்...

அங்கு சென்று நடந்ததை கூறிய தேவ்வை சந்தேகமாக பார்த்த ஓ.ஐ.சி (Officer in charge) அவன் கூறுவது நம்பும்படியாக இல்லையென்றும் அதோடு அவன் கூறும் நபர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பதால் அவரை விசாரிக்க ஏதேனும் வலுவான ஆதாரம் வேண்டுமென்று கூறிய தேவ்விற்கோ அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை... ஆனால் அவன் மறுபடியும் கெஞ்ச அவன் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று எண்ணிய ஓ.ஐ.சி ஸ்ரவ்யாவின் தந்தையை மொபைலில் அழைத்தார்..

அவரிடம் பொதுவாக பேசியவர் அவர் மகளை பற்றி விசாரிக்க ஸ்ரவ்யாவின் தந்தையோ அவளுக்கு உடம்புக்கு முடியவில்லையென்று கூற ஓ.ஐ.சியோ அவளை சந்திக்கமுடியுமா என்று கேட்க சந்தேகம் கொண்ட ஸ்ரவ்யாவின் தந்தையோ தன் மகளிடம் அவளின் நண்பன் என்று கூறிக்கொண்டு வீட்டுக்கு வந்த ஒருவன் தவறாக நடந்துகொண்டதாகவும் சரியான நேரத்தில் தான் பார்த்ததால் தன் மகளை காப்பாற்ற முடிந்ததாகவும் அந்த சம்பவத்தின் தாக்கத்தால் தன் மகள் காய்ச்சலில் விழுந்துவிட்டதாகவும் ஒரு கதையை எடுத்துவிட இப்போது ஓ.ஐ.சியின் சந்தேகம் தேவ்வின் மீது திரும்பியது....

அதோடு தன் மகளின் நண்பன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவன் மீது தான் புகார் கொடுப்பதாகவும் கூறினார்...

ஸ்ரவ்யாவின் தந்தையோடு பேசிமுடித்து அழைப்பை வைத்த அதிகாரியிடம் ஸ்ரவ்யாவை மீட்க வருமாறு அழைக்க அவரோ அவனை பளாரென்று அறைந்துவிட்டு அவனை இழுத்து சென்று சிறையில் அடைத்தார்...

தேவ்வோ அதிகாரியின் செயலில் அதிர்ந்திருக்க அவரோ

“தப்பை நீ பண்ணிட்டு நல்லவன் மாதிரி அவர் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறியா??? அந்த பொண்ணு வந்து ஒரு வார்த்தை சொல்லட்டும்... அப்போ இருக்கு உனக்கு கச்சேரி....” என்றவர் அங்கிருந்து சென்றுவிட தேவ்வோ உள்ளுக்குள் நொந்து போனான்...

அவனுக்கு இப்போது தன் நிலையை விட ஸ்ரவ்யாவின் நிலையே மனதை அரித்தது... அவள் தந்தை அவளை என்ன பாடுபடுத்தபோறாரோ என்று எண்ணியவனுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியது...

முழுதாய் ஒருநாள் சிறையில் இருந்தவனுக்கு உணவும் இறங்கவில்லை நித்திரையும் வரவில்லை...

மறுநாள் காலை தன் தந்தையோடு வந்தாள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தாள் ஸ்ரவ்யா...

ஓ.ஐ.சி தேவ்வை அழைத்து வரக்கூற அவனை அழைத்து வந்தார் மற்றைய அதிகாரி...

ஸ்ரவ்யாவை பார்த்த தேவ் அவளை அழைக்க அவளோ இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை..

அப்போது ஓ.ஐ.சியே

“இங்கபாரு தம்பி... உன்மேல எந்த தப்பும் இல்லைனு அந்த தங்கச்சி சொன்னதால வெளியே விடுறேன்.. இனிமேலாவது ஒழுங்கா இரு.. இல்லைனா எங்க முறையில உன்னை கவனிக்க வேண்டியதாக இருக்கும்... இப்போ ஒழுங்கா ஊர் போய் சேருர வழியை பாரு..” என்று கூறியவர் அவர்களை அனுப்பிவைக்க வெளிய வந்ததும் பேச முயன்ற தேவ்வை கண்டு தொண்டையை கனைத்த தன் தந்தையை பார்த்த ஸ்ரவ்யா அவரை காரில் காத்திருக்கும்படி கூறினாள்..

அவரும் அங்கிருந்து சென்றிட ஸ்ரவாயாவை அணுகிய தேவ் அவளை ஆராய்ந்தபடியே

“சூட்டி...”

“இங்கே இருக்காத தேவ்.. போயிடு... ப்ளீஸ்...”

“சூட்டி என்னாச்சு??? உங்க அப்பா..”

“ஆமா அவரு தான்... இனி அவரு சொல்றபடிதான் எல்லாம் நடக்கும்... நமக்குள்ள எல்லாம் முடிந்தது....”

“என்ன சூட்டி பேசுற??”

“நான் எல்லாம் தெரிந்து புரிந்து தான் பேசுறேன். எனக்காகனு நீ பண்ணது எல்லாம் போதும்.... இனி எதுவும் வேண்டாம்... இத்தோட முடிச்சிக்கலாம்... இனி நான் உன் வாழ்க்கையில இல்லை... நீ போயிடு...”

“சூட்டி நீ ஏதோ பயத்து பேசுற..எல்லாத்தையும் நான் சரிப்படுத்துறேன்..”

“எதுவும் வேணாம்... நீ முதல்ல இங்கேயிருந்து கிளம்பு....”

“ஏய் என்னடி பேசுற நீ... எல்லாம் முடிஞ்சிடுச்சுனா என்ன அர்த்தம்??? உன்னை உங்க அப்பா ஏதோ சொல்லி மிரட்டியிருக்காருனு புரியிது... நீ எதுக்கும் பயப்படாத... நீ என்கூட கிளம்பி வா.. மற்றதையெல்லாய் நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் ஸ்ரவ்யாவின் கரம்பற்றி அழைத்து செல்ல முயல அவனை உதறினாள் ஸ்ரவ்யா..

“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?? முகத்தில அடிச்சமாதிரி சொன்னா தான் போவியா?? எங்க அப்பா சொன்னமாதிரி என்னுடைய வசதியை பற்றி தெரிந்துக்கொண்டு அதற்காக தான் என்கூட பழகுனியா??? இவ்வளவு நாள் நீயும் உன்குடும்பமும் இந்த சொத்துக்காக தான் நல்லவங்க வேஷம் போட்டீங்களா??? சீ... உன்னை நம்பி நான் என் அப்பாவை எதிர்த்தேன்.. உன்னல நம்பி ஏமாந்துட்டேன்..” என்று விரக்தியில் பேசியவளின் பேச்சில் வெகுண்ட தேவ்

“போதும் நிறுத்து.... நான் உன்னை சொத்துக்காக ஏமாற்ற நினைச்சேனா??? ஆமா... உனக்கு பாவம் பார்த்த எனக்கு இந்த பழி தேவை தான்.... நீ இவ்வளவு பெரிய கோடீஸ்வரீனு தெரிந்திருந்தாலே உன் பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டேன்.... உங்க அப்பா இதை சொல்லும் போது கூட எனக்கு வலிக்கலை... ஆனா எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுறதை தான் என்னால தாங்கிக்கமுடியலை.... நம்ம.. சாரி... என்னோட காதல் பொய்யில்லை... நான் காதலித்தவள் தான் பொய்... ஏமாற்றுக்காரி... இதற்கு மேல நீ பேசப்போற எதையும் கேட்கிற தைரியம் எனக்கில்லை... நீ சொன்னமாதிரியே இந்தநொடியே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.... இந்த நொடியில இருந்து எனக்குள்ள இருந்த காதல் செத்துப்போச்சு... இனிமே எந்த காரணம் கொண்டும் உன்முகத்துல முழிக்கமாட்டான்...” என்றவன் ஸ்ரவ்யாவை திரும்பியும் பாராது அவள் தந்தை எடுத்து வந்திருந்த அவனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

அவன் சென்றதும் அத்தனை நேரமாய் அவளுள் அடங்கியிருந்த அழுகை அணைப்புடைத்து வெளியே வர மடிந்தமர்ந்து அழத்தொடங்கியவளை அவள் தந்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்து சென்றார்...

இவ்வாறு நடந்ததை தேவ் கூற அபியோ

“ஏன்டா அவசரப்பட்ட??? அவ நிலைமை தெரிந்தும் கூட அவ பேசுனதை பெரிதுபடுத்தி அவளை தனியாகவிட்டுட்டுவந்தது தப்பில்லையா??”

“தப்பு தான்டா .. தப்பு தான்... அந்த நிமிஷம் சூட்டியே சொத்துக்காகத்தான் நான் அவளை விரும்புனேன்னு சொன்னதை என்னால ஏற்றுக்கொள்ள முடியலை.... அப்போ எழுந்த என்னோட கண்மூடித்தனமான கோபம் அவளோட நிலையை யோசிக்க விடலை... அப்போ அந்த நிமிஷம் கோபம் மட்டும் தான் என் கண்முன்னாடி இருந்தது...”

“சரி... இப்போ நடந்ததை பற்றி பேசி எந்த பலனும் இல்லை... இனி என்ன பண்ண போற???”

“தெரியலை அபி.. ஆனா இந்தமுறை எந்த காரணம் கொண்டும் சூட்டியை நான் தனியாக விடமாட்டேன்... எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..”

“சரி தேவ்... ஆனா... அஜய்..”

“அவருகிட்ட என்னோட நிலைமையை சொல்லு புரியவைப்போம்டா... ஆனா அதுக்கு முதல்ல சூட்டிக்கு என்னாச்சுனு தெரிந்துக்கொள்ளவேண்டும். .. முதல்ல அவளை குணப்படுத்திட்டு மற்றையதை பிறகு சமாளிக்கலாம்...”

“சரி தேவ்... முதல்ல நீ அஜய்கிட்ட பேசு .” என்று அபி கூற தேவ்வும் அஜயோடு பேசுவதற்காக அவன் அறைக்கதவை தட்டி அவனோடு பேசவேண்டுமென்று கூற அவனும் ஹாலில் வந்து அமர்ந்தான்...

[QUOTE="Anu Chandran, post: 2902, member: 6"] இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது... மாலை அபி வந்திட அஜயோ இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை... தேவ்வும் ஸ்ரவ்யாவின் நினைவிலேயே பால்கனியில் பழிகிடந்திட அபி வந்ததை கவனிக்கவில்லை... தன்னிடமிருந்த இன்னொரு சாவியினை கொண்டு வீட்டிற்கு வந்த அபி பால்கனியிலிருந்த தேவ்வினை பார்த்துவனுக்கு ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது... பகல் தன்னிடம் பேசியபோதே தேவ்வின் குரல் வழமைக்கு மாறான சோகத்தில் இருந்ததை கண்டுகொண்டான் அபி... ஏதே நடந்திருக்கிறது என்று யூகித்தவன் அஜயை தேட அவனது அறையோ மூடப்பட்டு இருந்தது.. அவனை தொல்லை செய்யவேண்டாமென எண்ணிய அபி தேவ் அருகே சென்று அமர்ந்தான்... “மச்சான்... என்னடா... டல்லா இருக்க மாதிரி இருக்கு.. போனில் பேசும் போதும் சீக்கிரமா வர சொன்ன... என்ன விஷயம்??” என்று அபி கேட்க தன்னிடத்திலிருந்து எழுந்தவன் பால்கனியின் கம்பியை பிடித்துக்கொண்டு சூழலை வெறித்தபடி “சூட்டியை பார்த்தேன்டா..” என்று தேவ் கூற ஒரு நொடி அதிர்ந்த அபி “என்னடா சொல்லுற?? எப்போ பார்த்த???அவகூட பேசுனியா???” என்று ஒரு வித பதட்டத்துடன் அபி கேட்க “அவ என்கூட பேசுற நிலையில இல்லடா...” “தெளிவா சொல்லு தேவ்... சூட்டியை எங்க பார்த்த??” என்று அபி கேட்க தேவ் நடந்ததனைத்தையும் கூறினான்... அதை கேட்டவனுக்கு மனதில் சஞ்சலம் மட்டுமே சூழ்ந்து கொண்டது... “அப்போ அஜய்??” “அவளோட கசின்.. உனக்கு கூட தெரியுமே.. அவ என்னோட பேபினு சொல்லி அடிக்கடி என்னை கடுப்பாக்குவாளே...” “ஓ... அப்போ உங்க விஷயம் அஜய்க்கு??” “தெரியும்... பகல் அவளை பார்க்க போனப்போ தான் நான் அப்புனு அவருக்கு தெரியும்...” “இப்போ என்னடா பண்ண போற??” “அது தான்டா தெரியலை... நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு இப்போ தான்டா புரியிது... நான் கோபத்துல எடுத்த முடிவால நான் கஷ்டப்பட்டாக்கூட பரவாயில்லை.... சம்பந்தமே இல்லாமல் அவ ஏன்டா கஷ்டப்பட்டா??? இப்போ கூட பேச முடியாமல் இருந்தவ என்னை பார்த்ததும் அப்புனு கூப்பிட்டபோ அந்த நொடியே செத்து போயிடலாம்னு தோனுச்சு டா... அவ குழந்தை மாதிரிடா.. அடம்பிடிக்க மட்டும் தான் தெரியும்.. அது தெரிஞ்சும் கூட நான் அவளை வேண்டாம்னு சொல்லிட்டு போயிருக்கக்கூடாது... நான் அவளுக்கு பண்ணது துரோகம்...” என்று வேதனையில் புலம்பியவனை அணைத்து ஆறுதல் படுத்திய அபி “தேவ் இப்போ சரி அன்னைக்கு என்ன நடந்துச்சுனு சொல்லுடா... அன்னைக்கு நீயும் சூட்டியும் அவங்க அப்பாவை பார்க்கப்போறோம்னு வீட்டுக்கு போனீங்க... ஆனா ஊர்ல இருந்து வந்ததும் நீ வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்த ஸ்காலர்ஷிப் ஆப்பருக்கு ஓகே சொல்லி கனடாவுக்கு கிளம்பிட்ட.... நான் என்ன நடந்துச்சுனு கேட்டப்போ நீ இனி சூட்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அவ என்னை பற்றி கேட்டாக்கூட எதுவும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு கிளம்பிப்போயிட்ட... ஆனா அதுக்கு பிறகு சூட்டியும் காலேஜ் வரலை. விசாரிச்சப்போ அவ வெளிநாடு போயிட்டானு சொன்னாங்க....ஆனா இப்போ... சொல்லு .. அன்னைக்கு என்ன நடந்துச்சு???” என்று அபி கேட்க அன்றைய நாளின் கசப்பான அனுபவத்தை அபியிடம் கூறத்தொடங்கினான் தேவ்... தேவ்வும் ஸ்ரவ்யாவும் தத்தமது காதலை பரிமாறியதும் இருவரும் ஜோடிப்புறாக்களாய் வலம் வந்தனர்... ஸ்ரவ்யாவின் தனிமையை உணர்ந்த தேவ்வும் எப்போதும் அவள் தன்னுடனேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டான்.... ஆனால் இருவரும் படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்ட பிறகே மற்றைய விஷயங்கள் என்று முடிவெடுத்திருந்தனர்... படிப்பு, மியூசிக் ப்ரோக்ரம்ஸ் என்று பிசியாயிருந்தனர் இருவரும்... ஒருநாள் ஸ்ரவ்யா தேவ்வை அவள் வீட்டிற்கு அழைக்க அவனோ “என்ன சூட்டி திடீர்னு???” “எங்க அப்பா எனக்கு அலையன்ஸ் பார்த்திருக்காரு...” “ஹேய் என்ன சொல்லுற??? உனக்கு இப்போ தானே டுவென்டி... அதுக்குள்ள??” “அது அவருக்கு பிரச்சினை இல்லை.... என்னை அந்த வீட்டுல இருந்து துரத்தி விட்டா அவருக்கு போதும்...” என்று குரலில் வேதனையுடன் ஸ்ரவ்யா கூற அதை கண்டுகொண்டவன் “என்ன ஸ்ரா பேபி இப்படி பேசுறீங்க...” என்று அவள் கன்னமிரண்டும் பிடித்து இருபுறமும் ஆட்டினான் தேவ்... ஆனால் எப்போதும் போல் அதில் மகிழாமல் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள் “இல்லை அப்பு.... உனக்கு அவரை பற்றி தெரியாது... அவருக்கு என்னை பார்த்தாலே வெறுப்பு.... அதை கூட பொறுத்துப்பேன். . ஆனா என் அம்மோட நடத்தையை அவர் தப்பா பேசும் போது அவர் கழுத்தை நெரித்து கொன்றிடலாம்னு தோன்றும்.. அம்மா இறக்கும் வரைக்கும் அம்மாவோட அரவணைப்பில தான் வளர்ந்தேன்... அவங்க ஸ்டீல் வுமன் தேவ்... யாரும் அவங்ககிட்ட வாலாட்டமுடியாது... அப்படிபட்டவங்களை அவர் நடத்தை கெட்டவனு சொல்லும் போது எனக்கு அவ்வளவு வேதனையாக இருக்கும்...” “சூட்டி உன்னோட வேதனை எனக்கு புரியிது... அவர் ஏதாவது கோபத்துல சொல்லியிருப்பாரு...” “இல்லை தேவ்....அவரு அம்மாவை அப்படி தான் சொல்வாரு... அம்மாவை மட்டும் இல்லை... என்னையும்.... என்னையும்... ரொம்ப தப்பா...நீ.. யார்.. கூட.....ப...படுக்....”என்று வேதனையில் திக்கித்திணறியவளின் வாயினை தன் கைகளால் மூடியவன் அவளை ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்.... அவள் வாய் மூலம் கேட்ட சில ஏச்சுக்களே அவனுள் கோபத்தை கிளப்பியிருக்க அருகே இருந்து முழுதாய் அனுபவித்த அவள் வேதனை எத்தனை கொடியது என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.... சற்று நேரம் அவள் வேதனை தீரட்டும் என்று அழவிட்டவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் வதனத்தை தன் கைகளில் ஏந்தியவன் “இங்க பாரு சூட்டி... உனக்கு நான் இருக்கேன்...இப்போ மட்டும் இல்லை... எப்போதும் இந்த அப்பு உனக்காக இருப்பான்... இதை நல்ல மனசுல பதிந்துக்கோ.... இப்போ என்ன உங்க அப்பாகிட்ட வந்து நான் பேசனும்... அவ்வளவு தானே... நான் உன்கூட வந்து உங்க அப்பாவை பார்த்து நான் தான் உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாப்பிள்ளை.... உங்க பொண்ணுகட்டுனா என்னை தான் கட்டுவேனு அடம்பிடிக்கிறா... நானும் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இனி நான் தான் அவ வீட்டுக்காரர்னு சொல்லுறேன் ஓகேவா???” என்று தேவ் கேட்க கண்கள் பிரகாசிக்க அவன் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்..... தேவ்விற்கோ அவள் மன ஆறுதலுக்காக தான் அவள் தந்தையை சந்திப்பதாக கூறியபோதிலும் அவனுக்கு இதில் உடன்பாடு இல்லை.... அவனும் இன்னும் தன் படிப்பை முடிக்கவில்லை... எந்த தைரியத்தில் ஸ்ரவ்யாவின் தந்தையிடம் தங்களது காதல் விவகாரத்தை கூறுவான்??? அதோடு தந்தையும் மகளும் பேசிமுடிக்கவேண்டிய விஷயத்தில் அவன் தலையிடுவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் வரலாமென்று அவன் மனம் அடித்துக்கூறியது... ஆனால் இதை கூறினால் ஸ்ரவ்யா ஒப்புக்கொள்ளமாட்டாள்.. குழந்தைபோல் அடம்பிடிக்கத்தொடங்கிவிடுவாள்.. இவளை சமாளிப்பதற்கு பதில் அவள் தந்தையையே சமாளிப்பது மேல் என்று எண்ணியவன் அவளோடு செல்லும் முடிவுக்கு வந்தான்... சனிக்கிழமை அதிகாலை இருவரும் பஸ்ஸில் கண்டிக்கு கிளம்பினர்... தேவ்வோ பதற்றத்துடன் வர ஸ்ரவ்யாவோ தேவ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் அவன் கையினை தன் கைகளால் அணைத்தபடியே அவன் தோளில் உறங்கியபடி வந்தாள்.. மூன்று மணித்தியாலத்தில் கண்டியை அடைந்துவிட ஸ்ரவ்யா பஸ் ஸ்டாண்டில் அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏற அவளை பின்தொடர்ந்து தேவ்வும் ஏறினான்.. கார் மிதமான வேகத்தில் செல்ல ஸ்ரவ்யாவோ தேவ்விடம் “எங்க ஊரு எப்படி இருக்கு??” “ம்ம்ம்... சூப்பரா இருக்கு.... கண்டியும் எங்க ஊரு மாதிரினு தான்னு நினைச்சேன்.. ஆனா இது இயற்கை வளங்கள் நிறைந்த கொழும்பு மாதிரி இருக்கு... இங்கே எல்லா வசதியும் இருக்கு... அதே மாதிரி இயற்கையோட வாசமும் அதிகமாக இருக்கு சூட்டி..” “ஆமா அப்பு....இங்கேயும் ஹோட்டல்ஸ், பார்க்ஸ், ப்ளாட்ஸ், ஹாஸ்பிடல்ஸ், ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே இருக்கு... சொல்லப்போனா கொழும்புல கிடைக்கிற தொழில் படிப்புனு எல்லாமே இங்கேயே கிடைக்கும்..” “அப்போ எதுக்கு சூட்டி இப்படியொரு இடத்தை விட்டுட்டு அந்த சிட்டீங்கிற நரகத்துல வந்து படிக்கிற?? எங்க ஊருல மட்டும் இப்படி எல்லா வசதியும் இருந்திருந்தா நான் கொழும்புக்கு வந்திருக்கவே மாட்டேன்...” “நான் அங்க வந்ததால தானே நீ எனக்கு கிடைச்ச??” “நல்ல பார்ம்ல (form) தான் இருக்க.. ம்... நடத்து நடத்து...” “ஹாஹா.. சோ ஸ்வீட்டா அப்பு நீ..” என்று அவனோடு உரையாடியபடியே வர ஸ்ரவ்யாவின் வீட்டு வாசலில் கார் நின்றதும் காரின் உள்ளேயிருந்தபடியே வீட்டை பார்த்த தேவ் அரண்டுவிட்டான்.... பாதி கண்டியையே உள்ளடக்கியது போன்றிருந்தது ஸ்ரவ்யாவின் வீடு... சுற்றி பல ஏக்கரில் பூந்தோட்டம் இருக்க அதன் நடுவில் சிம்மாசனம் போல் இருந்தது அவளது வீடு.. தூரத்தில் நீச்சல் தடாகம், கார்ஷெட், அவுட் ஹவுஸ் என்று அனைத்தும் இருக்க முன்புறமோ ஒருபுறமாய் பட்மின்டன் கோர்ட், கார்டன், நீருற்று என்று அந்த இடமே ஸ்ரவ்யாவின் செல்வநிலையை எடுத்து காட்டியது... இதையெல்லாம் பார்த்ததும் தேவ்வின் தைரியம் சற்று குறைந்து தான் போனது.... அவன் எதிர்பார்த்து வந்தது வேறு.. ஆனால் நடப்பவையோ வேறு... ஒருநிமிடம் இடம் மாறி வந்துவிட்டோமோ என்று தோன்றிட தேவ்வும் “சூட்டி இது தான் உன் வீடா??” “ஆமா தேவ்... வா போகலாம்...” என்று அவனை வீட்டிற்கு அழைத்து சென்றாள்..... அவன் தங்குவதற்கு தேவையானவற்றை ஒழுங்கு செய்து கொடுத்தவள் அவனை குளித்து தயாராகச்சொன்னாள்... தேவ்விற்கோ நடப்பது எதுவும் புரியவில்லை... நிச்சயம் அவன் எதிர்பார்த்தது எதுவும் இங்கு நடக்கவில்லை... ஸ்ரவ்யா இத்தனை வசதி படைத்தவள் என்று அவனால் நம்பமுடியவில்லை.. அவள் என்றுமே அவனிடம் அதை வெளிப்படுத்தியதில்லை.. அவனிடம் மட்டும் இல்லை... யாரிடமும் அவள் அதை வெளிப்படுத்தியதில்லை... ஆனால் தான் இங்கு வந்த விடயத்தை தன்னால் பேசி சரிப்படுத்த முடியுமென்று அவனுக்கு தோன்றவில்லை... ஸ்ரவ்யாவின் தந்தையின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்குமென்று அவனால் யூகிக்ககூட முடியவில்லை... அவள் கூறியவற்றை வைத்து பார்த்தால் அவள் தந்தை நிச்சயம் தங்கள் காதலுக்கு சரிசொல்லமாட்டார் என்று புரிந்தது... ஆனால்...ம்ஹூம்.. காதலை தெரிவித்தால் தானே எதிர்ப்பு வரும்??? இப்போதைக்கு அவள் படிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுப்பார்ப்போம்... அவள் படிப்பு முடிவதற்குள் தன் படிப்பும் முடிந்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட்டால் எப்படியாவது அவரின் சம்மதம் பெற்று அவள் கரம் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தவன் குளிக்கச்சென்றான்.. குளித்து முடித்து தயாராகி அறையிலிருந்து வெளியே வந்தவனை டைனிங் ஹாலிற்கு அழைத்து சென்றாள் ஸ்ரவ்யா...... டைனிங் ஹாலும் அந்த வீட்டின் பிரமாண்டத்திற்கு சற்றும் குறைவிலாத கம்பீரத்துடன் இருந்தது... அந்த நீண்ட மேசையின் அருகே இருந்து கதிரையில் அமர்ந்தவள் தேவ்வையும் அமரச்சொல்ல அவனும் எதுவும் கூறாமல் அமர்ந்தான்... வேலையாட்கள் வந்து அவர்களுக்கு உணவு பரிமாறினர்.. ஸ்ரவ்யா பல நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் மகிழ்ச்சியாய் உண்ண தேவ்வோ மனதில் குழப்பத்துடன் உணவை கொறித்துக்கொண்டிருந்தான்... அதை கண்ட ஸ்ரவ்யா “என்னாச்சு அப்பு.. ஏன் சாப்பிடாமல் இருக்க??” என்று அவள் கேட்க அப்போது அங்கு வந்த அவள் தந்தை தேவ்வை இளக்காரமாய் பார்த்தபடியே “அது எப்படி சாப்பாடு உள்ள இறங்கும்??? பார்க்கிறதை வாங்கி சாப்பிடுறவங்களுக்கு இந்தமாதிரி பெரியவீட்டு சாப்பாட்டெல்லாம் உள்ள இறங்காது... என்ன நான் சொல்றது சரிதானே...?” என்றபடி அவரும் வந்து அந்த மேசையில் அமர அவரை ஒரு பார்வை பார்த்த ஸ்ரவ்யா தேவ்விடம் “அதெல்லாம் ஒன்றும் இல்லைனு சொல்லு அப்பு... உனக்கு இட்லி தோசை பிடிக்காதுனு சொல்லு... எனக்காக தான் சாப்பிடுறேன்னு சொல்லு.... சிலபேருக்கு மற்றவங்களை பற்றி எந்த கவலையும் இல்லை... அது அவங்க பெத்த பொண்ணா இருந்தாக்கூட...” என்று ஸ்ரவ்யா தன் தந்தைக்கு ஒரு கொட்டு வைக்க அதில் வெகுண்ட ஸ்ரவ்யாவின் தந்தை எதுவும் பேசாமல் ஸ்ரவ்யாவை முறைத்தார்.. அவளோ அதை கண்டுகொள்ளாது வேலைகாரர்களிடம் தேவ் விரும்பி உண்ணும் ரொட்டியை தயாரித்து கொண்டு வரச்சொல்ல அவர்களும் எடுத்து வந்தனர்... தேவ்விற்கோ ஸ்ரவ்யாவின் தந்தையின் குணம் அவரது பேச்சிலேயே புரிந்துவிட்டது...இவரை சமாளிப்பது சுலபமல்ல என்று அவன் அறிவு கூற இப்போதைக்கு நாம் நினைத்ததை செய்துமுடிப்போம்.. பின்னர் இவரை சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தவன் உணவை உண்ணத்தொடங்கினான்...இடையிடையே சில பல குத்தல் பேச்சில்கள் இருந்தபோதிலும் அதை ஸ்ரவ்யா கத்தரித்த விதத்தில் தேவ்வே ஆடிப்போய்விட்டான்... ஒரு நொடி அவன் மனதில் நம்ம சூட்டியா இது என்றுகூட தோன்றியது... அவள் வீட்டில் அவள் முற்றிலும் வேற்றாளாய் இருந்தாள்.. அவள் பேசும் தோரணையிலிருந்து அவள் நடவடிக்கை என்று அனைத்திலுமே வித்தியாசம் தெரிந்தது.... ஆனால் தேவ்விடம் மட்டும் அவள் எப்போது போலவே பேசினாள்.. தேவ்விற்குமே அங்கிருந்த சூழ்நிலை அத்தனை உவப்பானதாய் இல்லை. செல்வம் கொட்டிக்கிடந்தபோதிலும் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு நொடியும் ஏதோவொரு இறுக்கத்தை உணர்ந்தான்.. அப்போது தான் அவனுக்கு ஸ்ரவ்யாவின் நிலையும் புரிந்தது. எதற்காக அவள் தன்னையே சுற்றி வந்தாள் என்பதும் புரிந்தது.. ஆனால் அவளது இந்த செல்வநிலை தான் அவன் மனதை உறுத்தியது.. தங்கள் காதல் விவகாரம் தெரிந்தால் அவர் குணத்திற்கு நிச்சயம் நான் ஸ்ரவ்யாவின் செல்வநிலை அறிந்தே காதல் என்று கூறி அவளை ஏமாற்றுவதாக கூறுவார்... எந்த எதிர்பார்ப்புமின்றி உண்டான காதலுக்கு அத்தகைய அவப்பெயர் சரிதானா?? இல்லை... எங்கள் காதலுக்கு நிச்சயம் இப்படியொரு அவப்பெயர் வரக்கூடாது.... காதலை வெளிப்படுத்தும் முன் நான் என் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.. பின் தைரியமாக சூட்டியை பெண் கேட்க என்னால் முடியும்... ஆம்.. இதுவே சரியான முடிவு.... இவ்வாறு முடிவெடுத்தவன் ஸ்ரவ்யாவை அழைத்தான்... “என்ன அப்பு...” “சூட்டி... நான் சொல்லுற விஷயத்தை நல்லா கேளு... நான் இப்போ உங்க அப்பாகிட்ட பேசப்போறேன்... ஆனா நம்ம காதல் விஷயத்தை சொல்லப்போறதில்லை. .” “என்ன அப்பு சொல்லுற??” “சூட்டி நான் சொல்ல வருவதை முழுசாக கேளு.. இப்போ நம் காதல் விவகாரம் உங்க அப்பாவுக்கு தெரிவது நல்லதல்ல.. நான் கொஞ்சம் செட்டில் ஆனதும் இதை பற்றி பேசலாம்..” “ஆனா..” “சூட்டி... பயப்படாத.. இப்போ நம்ம காலேஜால எனக்கு கனடா போய் ஸ்டடீஸை தொடருவதற்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கு... போவதை பற்றி நான் இன்னும் முடிவெடுக்கவில்லை... இப்போ உன்னையும் என்கூடவே கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்.... அதுக்கு உங்க அப்பாகிட்ட பேசனும்... நான் காலேஜில விசாரிச்சப்போ பஸ்ட் இயர் ஸ்டுடன்ஸ்ல பெஸ்ட் பர்போரிமிங் (performing) மூன்று மாணவர்களுக்கு கனடா ஸ்காலர்ஷிப் கொடுக்கிறாங்க... அந்த லிஸ்டில நீயும் இருக்கனு காலேஜ்ல சொன்னாங்க.. இதை தான் உங்க அப்பாகிட்ட நாம இப்போ சொல்ல போறோம்... அதாவது உனக்கு கனடாவுல படிக்கிற ஆப்பர் கிடைத்திருக்கு... அதனால் நீ கனடா போகனும்...சோ இப்போ உனக்கு கல்யாணம் வேண்டாம்... அதான் விஷயம்.... இதை தவிர இப்போ வேற எதுவும் உங்க அப்பாவுக்கு சொல்லவேண்டாம்...” “ம்ஹூம்... இதெல்லாம் சரிவரும்னு நினைக்கிறியா அப்பு... அவரை பற்றி உனக்கு சரியாக தெரியலை அப்பு..” “சூட்டி முயற்சி எடுக்காமல் எந்தவொரு முடிவுக்கும் வரக்கூடாது... இது உன்னோட படிப்பு சம்மந்தப்பட்ட விஷயம்... அதனால உங்க அப்பா சிலநேரம் யோசிக்கலாம்..புரிந்துக்கோமா...” என்று தேவ் கூற அவன் நம்பிக்கை கெடுக்கவேண்டாமென்று எண்ணிய ஸ்ரவ்யாவும் “சரி உன்னோட இஷ்டம் அப்பு.... ஆனா எனக்கு இதுல துளிகூட நம்பிக்கை இல்லை அப்பு...” “நம்பு சூட்டி.. எல்லாம் நல்லதாவே நடக்கும்...” “சரி பேசுறதை இப்போவே பேசிரு... இல்லைனா நைட்டுக்கு அவரு வேற மாதிரி இருப்பாரு...” “எப்படி சூட்டி.... இந்த நெஷனல் ஜோக்கிரபி சேனல்ல வருமே அந்த கறுப்பு கிங்காங் மாதிரியா???” “அதை ஏன் அப்பு இவர்கூட கம்பெயார் பண்ணி கேவலப்படுத்துற???. அவரை நேருக்கு நேர் பேஸ் பண்ணும் போது உனக்கே புரியும்...” “இருந்தாலும் உங்க அப்பாவுக்கு இவ்வளவு பில்டப்லாம் ரொம்ப ஓவர்மா..” “ம்ம்... அவரோட குணம் முழுசா தெரியும் போது உனக்கே புரியும்...” “சரிசரி... பார்த்துக்கலாம்... இப்போ உங்க அப்பாகிட்ட கூட்டிட்டு போ..” என்று தேவ் கூற அவனை தன் தந்தையிடம் அழைத்து சென்றாள் ஷ்ரவ்யா... ஸ்ரவ்யாவின் தந்தை ஹாலில் ஏதோவொரு கோப்பை பார்வையிட்டபடியிருக்க அவரருகே அவரது பி.ஏ நின்றிருந்தார்... ஸ்ரவ்யா பி.ஏ விடம் “அப்பாகூட கொஞ்சம் பர்சனலாக பேசனும் நீங்க ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க...” என்று ஸ்ரவ்யா பி.ஏவை அனுப்பமுயல அவள் தந்தையோ ஸ்ரவ்யாவையும் தேவ்வையும் ஒரு பார்வை பார்த்தபடியே பி. ஏவிற்கு அனுமதியளிக்க அவரும் ஆபிஸ் ரூமிற்கு சென்று காத்திருக்கத்தொடங்கினார்... வேலையாட்களும் வேலை முடிந்து அவுட் ஹவுசிற்கு சென்றிட வீட்டில் வேறு யாரும் இல்லை.. “என்ன விஷயம்...” என்று ஸ்ரவ்யாவின் தந்தை கையிலிருந்த கோப்பை முடியபடி அவர்களை என்னவென்று கேட்க தேவ்வும் விஷயத்தை கூறினான்... “அப்போ மகாராணி கனடா போயிட்டு படிக்கப்போறாங்க.. அப்படிதானே... சரி அது அவ இஷ்டம்.... ஆனா இதை அவளே சொல்லியிருக்கலாமே... எதுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ண உன்னை கூட்டிட்டு வரணும்..??” “அது..அது.. அங்கிள்.. நீங்க... ஏதாவது சொல்லுவீங்களோனு.?” “ஓ... அப்படி... சரிசரி... மேடம் தனியாக தான் போறாங்களா??” “ஆமா.. அங்கிள்...” “ஓ.. அப்போ அங்க போய் யாரையாவது பிடிக்கலாங்கிற ஐடியாவில இருக்காங்க போல....” “அங்கிள்... என்ன அங்கிள் நீங்க...” “நான் சரியா தானே சொன்னேன்... அவ அவங்க அம்மா மாதிரி... கண்டவனோட மேய்றதுனா அவ அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம்... இந்த மகாராணிக்கும் அப்படிதான்....இங்கயிருந்தா எதுவும் பண்ணமுடியாதுனு நாடுவிட்டு நாடு போய் தான் நினைச்சபடி கேடுகெட்ட வாழ்க்கையை வாழ நினைக்கிறாங்க போல...” என்ற தன் மகள் என்றும் பாராது ஸ்ரவ்யாவை அவள் தந்தை தரக்குறைவாய் பேச தேவ்விற்கு என்ன மனிதர் இவர் என்றானது... ஆனால் ஸ்ரவ்யாவோ “போதும் நிறுத்துங்க... என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?? நீங்க பெத்த பொண்ணை பத்தி இன்னொருத்தர் முன்னாடி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே... உங்களுக்கு வெட்கமாயில்லை.... வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?? என் ஒழுக்கத்தை பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை... உங்களை அப்பானு கூப்பிடவே நாக்கு கூசுது...” “ஓ.. உண்மையை சொன்னா கோபம் வருதோ... நீ என்ன கூத்தடிக்கிறனு எனக்கு தெரியாதுனு நினைச்சியா?? இங்கேயிருக்கும் போது பாட்டு பாடுறேன்னே ஊர் மேய்ந்தவ தானேடி நீ...யார்கூட எப்போ போய் படுத்தியோனு யாருக்கு தெரியும்...இப்பவும் யார்கூட உடம்பை பங்குப்போடுறியோ யாருக்கு தெரியும்... ஆனா நிச்சயம் ஒருத்தனா மட்டும் இருக்காதுனு எனக்கு நிச்சயமா தெரியும்..” என்று அவர் மேலும் மேலும் ஸ்ரவ்யாவின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்க அதை பொறுக்கமுடியாது வெகுண்ட தேவ் “அங்கிள்... உங்க பொண்ணை பற்றி நீங்களே இப்படி பேசுறது சரியா?? ஸ்ரவ்யா எதுவும் தெரியாது குழந்தை அங்கிள்.. அவளை பத்தி எப்படி இவ்வளவு கேவலமாக உங்களால பேசமுடியிது??” “ஓ... கதை அப்படி போகுதா....?? நீயும் அவளோட லிஸ்டில ஒருத்தனா??? எவ்வளவு பணம் தரேன்னு சொன்னா??? பணத்துக்காக தானே அவ கூட இருக்க??” என்று ஸ்ரவ்யாவின் தந்தை வார்த்தைகளாலே கொத்தி கிளறி அதில் கோபத்தை அடக்கமுடியாமல் தேவ் அவரின் சட்டையை பாய்ந்து பிடித்துவிட்டான்... அவனின் செயலில் அதிர்ந்த ஸ்ரவ்யா தேவ் என்று அவனை தடுக்க முயல அதற்கு முன்னமே ஸ்ரவ்யாவின் தந்தை அவன் எதிர்பாரா வண்ணம் பிடித்து தள்ளியவர் “யாரு சட்டையை யார் பிடிக்கிறது???” என்று தேவ்வை ஓங்கியொரு அறைவிட அவனோ அவரது இடிபோன்ற அடியில் சுருண்டு தூரவிழுந்தான்... தூரவிழுந்தவனருகே ஓடிய ஸ்ரவ்யா அவன் நிலையை கண்டு கொதித்தெழுந்தவள் “எதுக்கு அவனை அடிச்சீங்க... அவனை கையோங்க நீங்க யாரு... உங்க காட்டுமிராண்டிதனத்துக்கு ஒரு அளவே இல்லையா??” என்று ஸ்ரவ்யா தன் தந்தையிடம் பாய அவரோ “அவன் என் சட்டைடை பிடிச்சது உனக்கு தப்பா தெரியலை.... ஆனா அவனை அடிச்சதுக்கு துள்ளிக்கிட்டு வர்ற??” “ஆமா... தப்பா தெரியல... என்னை நீங்க தப்பா பேசுனதை பொறுத்துக்க முடியாமல் தான் உங்க சட்டையை பிடிச்சான்.. நீங்க இதைவிடவும் என்னை கேவலமாக பேசுவீங்கனு அவனுக்கு தெரியாது தானே... உங்க குணம் அவனுக்கு தெரியலை...” “ஏய் என்னடி உங்க அம்மாக்காரி மாதிரி திமிரு ஏறிப்போய் சுத்துரியா??? கண்ட பிச்சைக்கார நாய்க்காகவெல்லாம் என்கூட மல்லுகட்டுற??” “வார்த்தையை அளந்து பேசுங்க.... அவனை பத்தி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...” “ஆமாஆமா... சொத்துக்காக உன்கூட சகவாசம் வச்சிக்கிறவனை பற்றியெல்லாம் பேச எனக்கு அருகதையில்லை தான்... இவன் கூட மட்டும் தான் பழக்கமா இல்லை... இல்லை இவன் அப்பா அண்ணானு...” “ச்சீ.... நீயெல்லாம் மனுஷனா??? பெற்ற பிள்ளையே தப்பா பேசுறோம்னு உனக்கு உறுத்தலையா??? என்னை கேவலப்படுத்தினது மட்டுமல்லாமல் எனக்காக பேச வந்தவனையும் அவன் குடும்பத்தையும் என்கூட சேர்த்து வச்சி தப்பா பேசுறியே... உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு.... இதுக்கு மேலேயும் இந்த வீட்டுல நான் இருக்கமாட்டேன்... அப்பு.. வா போகலாம்...” என்று ஸ்ரவ்யா தேவ்வுடன் கிளம்ப முற்பட அவளது தந்தையே “இப்படியெல்லாம் பேசுனா நீ பேசுனதெல்லாம் உண்மைனு ஆகிடாது... இவ்வளவு ஆனபின்பு உன்னை வெளியில விட்டா அது எனக்கு தான் மானக்கேடு....” என்றவர் ஸ்ரவ்யா கையைபிடித்து தரதரவென்று இழுத்து செல்ல தேவ்வோ அவரை தடுக்க முயன்றான்... வெளியே நின்றிருந்த காவலாளியை அழைத்து இவனை கேட்டிற்கு வெளியே விட்டுவிடச்சொல்ல காவலாளியும் தேவ்வை வெளியே அழைத்து செல்ல முயல அவனோ காவலாளியை தள்ளிவிட்டு ஸ்ரவ்யாவின் தந்தையிடமிருந்து ஸ்ரவ்யாவை காக்க முயன்றான்... காவலாளி இன்னொரு காவலாளியை அழைத்து வந்து தேவ்வை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கேட்டிற்கு வெளியே தள்ளினர்.. தேவ்வோ உள்ளே செல்ல முயற்சிக்க அவனை யாரும் உள்ளே விடவில்லை... அடுத்து என்னசெய்வதென்று திணறியவனுக்கு ஒரு யோசனை தோன்றிட உடனேயே அங்கிருந்தவர்களிடம் விசாரித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்... அங்கு சென்று நடந்ததை கூறிய தேவ்வை சந்தேகமாக பார்த்த ஓ.ஐ.சி (Officer in charge) அவன் கூறுவது நம்பும்படியாக இல்லையென்றும் அதோடு அவன் கூறும் நபர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பதால் அவரை விசாரிக்க ஏதேனும் வலுவான ஆதாரம் வேண்டுமென்று கூறிய தேவ்விற்கோ அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை... ஆனால் அவன் மறுபடியும் கெஞ்ச அவன் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று எண்ணிய ஓ.ஐ.சி ஸ்ரவ்யாவின் தந்தையை மொபைலில் அழைத்தார்.. அவரிடம் பொதுவாக பேசியவர் அவர் மகளை பற்றி விசாரிக்க ஸ்ரவ்யாவின் தந்தையோ அவளுக்கு உடம்புக்கு முடியவில்லையென்று கூற ஓ.ஐ.சியோ அவளை சந்திக்கமுடியுமா என்று கேட்க சந்தேகம் கொண்ட ஸ்ரவ்யாவின் தந்தையோ தன் மகளிடம் அவளின் நண்பன் என்று கூறிக்கொண்டு வீட்டுக்கு வந்த ஒருவன் தவறாக நடந்துகொண்டதாகவும் சரியான நேரத்தில் தான் பார்த்ததால் தன் மகளை காப்பாற்ற முடிந்ததாகவும் அந்த சம்பவத்தின் தாக்கத்தால் தன் மகள் காய்ச்சலில் விழுந்துவிட்டதாகவும் ஒரு கதையை எடுத்துவிட இப்போது ஓ.ஐ.சியின் சந்தேகம் தேவ்வின் மீது திரும்பியது.... அதோடு தன் மகளின் நண்பன் தப்பி ஓடிவிட்டதாகவும் அவன் மீது தான் புகார் கொடுப்பதாகவும் கூறினார்... ஸ்ரவ்யாவின் தந்தையோடு பேசிமுடித்து அழைப்பை வைத்த அதிகாரியிடம் ஸ்ரவ்யாவை மீட்க வருமாறு அழைக்க அவரோ அவனை பளாரென்று அறைந்துவிட்டு அவனை இழுத்து சென்று சிறையில் அடைத்தார்... தேவ்வோ அதிகாரியின் செயலில் அதிர்ந்திருக்க அவரோ “தப்பை நீ பண்ணிட்டு நல்லவன் மாதிரி அவர் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறியா??? அந்த பொண்ணு வந்து ஒரு வார்த்தை சொல்லட்டும்... அப்போ இருக்கு உனக்கு கச்சேரி....” என்றவர் அங்கிருந்து சென்றுவிட தேவ்வோ உள்ளுக்குள் நொந்து போனான்... அவனுக்கு இப்போது தன் நிலையை விட ஸ்ரவ்யாவின் நிலையே மனதை அரித்தது... அவள் தந்தை அவளை என்ன பாடுபடுத்தபோறாரோ என்று எண்ணியவனுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியது... முழுதாய் ஒருநாள் சிறையில் இருந்தவனுக்கு உணவும் இறங்கவில்லை நித்திரையும் வரவில்லை... மறுநாள் காலை தன் தந்தையோடு வந்தாள் பொலிஸ் நிலையத்திற்கு வந்தாள் ஸ்ரவ்யா... ஓ.ஐ.சி தேவ்வை அழைத்து வரக்கூற அவனை அழைத்து வந்தார் மற்றைய அதிகாரி... ஸ்ரவ்யாவை பார்த்த தேவ் அவளை அழைக்க அவளோ இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.. அப்போது ஓ.ஐ.சியே “இங்கபாரு தம்பி... உன்மேல எந்த தப்பும் இல்லைனு அந்த தங்கச்சி சொன்னதால வெளியே விடுறேன்.. இனிமேலாவது ஒழுங்கா இரு.. இல்லைனா எங்க முறையில உன்னை கவனிக்க வேண்டியதாக இருக்கும்... இப்போ ஒழுங்கா ஊர் போய் சேருர வழியை பாரு..” என்று கூறியவர் அவர்களை அனுப்பிவைக்க வெளிய வந்ததும் பேச முயன்ற தேவ்வை கண்டு தொண்டையை கனைத்த தன் தந்தையை பார்த்த ஸ்ரவ்யா அவரை காரில் காத்திருக்கும்படி கூறினாள்.. அவரும் அங்கிருந்து சென்றிட ஸ்ரவாயாவை அணுகிய தேவ் அவளை ஆராய்ந்தபடியே “சூட்டி...” “இங்கே இருக்காத தேவ்.. போயிடு... ப்ளீஸ்...” “சூட்டி என்னாச்சு??? உங்க அப்பா..” “ஆமா அவரு தான்... இனி அவரு சொல்றபடிதான் எல்லாம் நடக்கும்... நமக்குள்ள எல்லாம் முடிந்தது....” “என்ன சூட்டி பேசுற??” “நான் எல்லாம் தெரிந்து புரிந்து தான் பேசுறேன். எனக்காகனு நீ பண்ணது எல்லாம் போதும்.... இனி எதுவும் வேண்டாம்... இத்தோட முடிச்சிக்கலாம்... இனி நான் உன் வாழ்க்கையில இல்லை... நீ போயிடு...” “சூட்டி நீ ஏதோ பயத்து பேசுற..எல்லாத்தையும் நான் சரிப்படுத்துறேன்..” “எதுவும் வேணாம்... நீ முதல்ல இங்கேயிருந்து கிளம்பு....” “ஏய் என்னடி பேசுற நீ... எல்லாம் முடிஞ்சிடுச்சுனா என்ன அர்த்தம்??? உன்னை உங்க அப்பா ஏதோ சொல்லி மிரட்டியிருக்காருனு புரியிது... நீ எதுக்கும் பயப்படாத... நீ என்கூட கிளம்பி வா.. மற்றதையெல்லாய் நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் ஸ்ரவ்யாவின் கரம்பற்றி அழைத்து செல்ல முயல அவனை உதறினாள் ஸ்ரவ்யா.. “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?? முகத்தில அடிச்சமாதிரி சொன்னா தான் போவியா?? எங்க அப்பா சொன்னமாதிரி என்னுடைய வசதியை பற்றி தெரிந்துக்கொண்டு அதற்காக தான் என்கூட பழகுனியா??? இவ்வளவு நாள் நீயும் உன்குடும்பமும் இந்த சொத்துக்காக தான் நல்லவங்க வேஷம் போட்டீங்களா??? சீ... உன்னை நம்பி நான் என் அப்பாவை எதிர்த்தேன்.. உன்னல நம்பி ஏமாந்துட்டேன்..” என்று விரக்தியில் பேசியவளின் பேச்சில் வெகுண்ட தேவ் “போதும் நிறுத்து.... நான் உன்னை சொத்துக்காக ஏமாற்ற நினைச்சேனா??? ஆமா... உனக்கு பாவம் பார்த்த எனக்கு இந்த பழி தேவை தான்.... நீ இவ்வளவு பெரிய கோடீஸ்வரீனு தெரிந்திருந்தாலே உன் பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டேன்.... உங்க அப்பா இதை சொல்லும் போது கூட எனக்கு வலிக்கலை... ஆனா எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுறதை தான் என்னால தாங்கிக்கமுடியலை.... நம்ம.. சாரி... என்னோட காதல் பொய்யில்லை... நான் காதலித்தவள் தான் பொய்... ஏமாற்றுக்காரி... இதற்கு மேல நீ பேசப்போற எதையும் கேட்கிற தைரியம் எனக்கில்லை... நீ சொன்னமாதிரியே இந்தநொடியே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.... இந்த நொடியில இருந்து எனக்குள்ள இருந்த காதல் செத்துப்போச்சு... இனிமே எந்த காரணம் கொண்டும் உன்முகத்துல முழிக்கமாட்டான்...” என்றவன் ஸ்ரவ்யாவை திரும்பியும் பாராது அவள் தந்தை எடுத்து வந்திருந்த அவனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்... அவன் சென்றதும் அத்தனை நேரமாய் அவளுள் அடங்கியிருந்த அழுகை அணைப்புடைத்து வெளியே வர மடிந்தமர்ந்து அழத்தொடங்கியவளை அவள் தந்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்து சென்றார்... இவ்வாறு நடந்ததை தேவ் கூற அபியோ “ஏன்டா அவசரப்பட்ட??? அவ நிலைமை தெரிந்தும் கூட அவ பேசுனதை பெரிதுபடுத்தி அவளை தனியாகவிட்டுட்டுவந்தது தப்பில்லையா??” “தப்பு தான்டா .. தப்பு தான்... அந்த நிமிஷம் சூட்டியே சொத்துக்காகத்தான் நான் அவளை விரும்புனேன்னு சொன்னதை என்னால ஏற்றுக்கொள்ள முடியலை.... அப்போ எழுந்த என்னோட கண்மூடித்தனமான கோபம் அவளோட நிலையை யோசிக்க விடலை... அப்போ அந்த நிமிஷம் கோபம் மட்டும் தான் என் கண்முன்னாடி இருந்தது...” “சரி... இப்போ நடந்ததை பற்றி பேசி எந்த பலனும் இல்லை... இனி என்ன பண்ண போற???” “தெரியலை அபி.. ஆனா இந்தமுறை எந்த காரணம் கொண்டும் சூட்டியை நான் தனியாக விடமாட்டேன்... எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..” “சரி தேவ்... ஆனா... அஜய்..” “அவருகிட்ட என்னோட நிலைமையை சொல்லு புரியவைப்போம்டா... ஆனா அதுக்கு முதல்ல சூட்டிக்கு என்னாச்சுனு தெரிந்துக்கொள்ளவேண்டும். .. முதல்ல அவளை குணப்படுத்திட்டு மற்றையதை பிறகு சமாளிக்கலாம்...” “சரி தேவ்... முதல்ல நீ அஜய்கிட்ட பேசு .” என்று அபி கூற தேவ்வும் அஜயோடு பேசுவதற்காக அவன் அறைக்கதவை தட்டி அவனோடு பேசவேண்டுமென்று கூற அவனும் ஹாலில் வந்து அமர்ந்தான்... [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 6
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN