Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 8
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

உறையாத சொல்லின் பொருளை

மொழி இங்கு தாங்குமோ..

உறவாக அன்பில் வாழ

ஒரு ஆயுள் போதுமோ...

தேவ் ஸ்ரவ்யாவோடு அவளிருந்த வீட்டில் தங்கத்தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது... அவளை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டான் தேவ்... காலை அவளை எழுப்பி தேநீர் புகட்டுபவன் அவளோடு சற்று நேரம் பேசுவான்...அவன் பேச அவளோ அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பாள்.. அவளுக்கு ஏதேனும் தேவை என்றால் அப்பு என்ற வார்த்தை மட்டுமே அவள் நாவிலிருந்து உதிக்கும்... தேவ்வும் அதை உணர்ந்து அவளுக்கு தேவையானதை செய்வான்.. அவளை பார்த்துக்கொள்ளும் வேலையாளின் உதவியுடன் குளித்து முடித்து உடைமாற்றி வருபவளுக்கு தலை வாருவது, அலங்கரிப்பது என்று அனைத்தையும் செய்வான்... அதன் பின் அவளுக்கு உணவு புகட்டிவிட்டு தானும் உண்பான்... உணவை முடித்ததும் அவளை ஹாலிற்கு அழைத்து வந்து அமரச்செய்பவன் அவளோடு பல கதைகளை பேசுவான்.. அதில் தாமிருவரும் ஒன்றாய் சந்தித்த அனுபவங்கள், தான் சந்தித்த அனுபவம் என்று அனைத்தையும் அவன் அவளுடன் பகிர ஸ்ரவ்யாவும் கேட்டுக்கொண்டிருப்பாள்... தினமும் அபியுடன் அங்கு வருவான் அஜய்.. அவனும் ஸ்ரவ்யாவுடன் பேசினான்... தேவ் ஸ்ரவ்யாவை குழந்தைபோல் கவனித்துக்கொள்வதை கண்ட அஜயிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.. ஆனால் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை...

ஒருநாள் தேவ் அஜய் மற்றும் அபியோடு பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரவ்யா அப்பு என்றழைக்க

“என்ன சூட்டி வேண்டும்??” என்று கேட்க அவளோ எழும்ப

“வாஸ்ரூம் போகனுமா??” என்று கேட்க அவள் தேவ்வை பார்க்க

“வா.. போகலாம்...” என்றவன் அஜயிடமும் அபியிடமும் சொல்லிவிட்டு அவளை வாஸ்ரூம் அழைத்து சென்றவன் வாசலிலேயே நின்றுக்கொண்டு அவளை உள்ளே அனுப்பினான்... உள்ளே சென்று வந்தவளிடம்

“சூட்டி கையை வாஸ் பண்ணியா??” என்று கேட்க அவளோ அவனை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன்

“வா... வாஸ் பண்ணி விடுறேன்...” என்றவன் அவளை வாஸ்ரூமிற்கு அழைத்து சென்று அவள் கையிரண்டையும் ஹேன்ட் வாஸினால் கழுவியவன் உள்ளே இருந்த டிசுவினால் அவள் கையிரண்டையும் துடைத்துவிட்டு தன் கைகளையும் துடைத்துக்கொண்டு அவளை வெளியே அழைத்து வந்தான்.. இதை பார்த்திருந்த அஜயிற்கோ உள்ளம் நெகிழ்ந்தது... தேவ் மீதிருந்து கொஞ்ச நஞ்ச கோபமும் பறந்தோடியது...

ஸ்ரவ்யா தேவ்வை பற்றி பெருமையாய் கூறிம்போதெல்லாம் அஜய் அவள் சொல்வதை ஒப்புக்கொள்ளமாட்டான்... ஏதேனும் கூறி அவளை வம்புசெய்வான்... ஒருமுறை அஜய் ஸ்ரவ்யாவிடம் ஸ்கைப்பில் உரையாடும் போது

“ஏன் பேபி... எனக்கு ஒரு டவுட்டு.”

“சொல்லு ஆங்ரிபேட்...”

“உன்னோட தேவ் அப்படி இப்படினு சொல்லுறியே.... நிஜமா தான் அப்படி சொல்லுறியா?? இல்லை ஏதாவது படம் பார்த்திட்டு என்கிட்ட பிட்டை போடுறியா??”

“டேய் ஆங்ரிபேட்... நான் என்னோட அப்புவை பற்றி பேசுறது உனக்கு பிட்டு போடுறமாதிரி இருக்கா??”

“இல்லை பேபி... கொஞ்சம் ஓவரா பில்டப் பண்ண மாதிரி பீல் ஆச்சு.... அதான் டவுட்டு..”

“டேய் பீட்டரு.. அவன் உன்னை மாதிரி இல்லை ..”

“அது தான் தெரியுமே.. என்னை மாதிரி ஒரு நல்லவன் இந்த உலகத்துல நானா மட்டும் தான் இருப்பேன்...”

“அதேமாதிரி உன்னை மாதிரி ஒரு லூசு... இந்த உலகத்துல எங்கேயும் இல்லை..”

“என்ன பேபி... லூசுனு சொல்லிட்ட....”

“என்னோட அப்புவை ஏதாவது சொன்னா உன்னை லூசுனு தான் சொல்லுவேன்..”

“அது சரி அது என்ன அப்பு... சப்புனு.. அழகா தேவ் ராகவ்னு அவர் பெயரை சொல்லியே கூப்பிடலாமே.. அதைவிட்டுட்டு என்ன அப்பு,சப்பு, பப்புனு.. நல்லாவே இல்லை..”

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் நான் கூப்பிடுறதை மாற்றமுடியாது.... அவன் எப்பவுமே எனக்கு அப்பு தான்.. அவனுக்கே நான் அப்படி கூப்பிடுவதிலே எந்த பிரச்சினையும் இல்லை.. உனக்கு என்ன பிரச்சினை??”

“அவருக்கு வேற வழியில்லை... அதனால எதுவும் சொல்லமாட்டேங்கிறாரு.. ஆனா எனக்கு அப்படி இல்லையே.. பேபி...”

“ப்ளடி இடியட்.... ஆர் யூ கிட்டிங் மை அப்பு...??”

“இல்லைமா.. என்னை நம்பு... அது சரி ஏன் தேவ்வை அப்புனு கூப்பிடுற??”

“அவனை அப்பானு கூப்பிட முடியாததால அப்புனு கூப்பிடுறேன்..”

“ஹேய் என்ன பேபி சொல்லுற??”

“ஆமா அஜூ... எனக்கு அப்பா இருந்தும் அவரோட அன்பு கிடைக்கவில்லைனு பல நாட்கள் ஏங்கியதுண்டு.. எப்போ அப்புவை பார்த்தேனோ அந்தநொடியில் இருந்து எனக்குள்ள இருந்த ஏக்கம் மறைந்து போனது... காதலிப்பதற்கு முதலும் சரி காதலிக்கும் போதும் சரி அவனோட அன்பு நான் இழந்த எல்லாவற்றையும் மீட்டுக்கொடுத்தது... எத்தனையோ வசதிகள் இருந்தபோதும் அம்மாவிற்கு பிறகு என்னை சாப்பிட்டியானு கேட்பதற்கும் சாப்பிடலைனா திட்டிட்டு சாப்பாடு வாங்கிக்கொடுக்கவும் யாரும் இருக்கவில்லை... ஆனா அப்பு என் வாழ்க்கையில வந்தபிறகு எனக்கு அந்த கவலையை அவன் வரவிட்டதில்லை... நேரத்துக்கு சாப்பிடலைனா பயங்கரமா கோபம் வரும் அப்புக்கு... நான் சோகமாக இருந்தாலோ சந்தோஷமாக இருந்தாலோ அதை பகிர்ந்துக்கொள்ள அவன் எப்பவும் என்பக்கத்துல இருப்பான்..... நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவனோட இருந்த கொஞ்ச நாட்களிலேயே எனக்கு மீட்டு கொடுத்துட்டான்.... அதனால என் மனசு அவனை என்னோட அப்பா ஸ்தானத்துல தான் வைத்து பார்க்கிறது.. அதனால தான் அவனை அப்புனு கூப்பிடுறேன்... இப்போமட்டுமில்லை. எப்பவும் அவன் மட்டும் தான் என்னோட அப்பு..” என்று மனம் முழுக்க காதலுடன் கூறியவளின் வார்த்தைகள் இன்றும் அஜயின் காதுகளில் எதிரொலித்தது.... அவள் கூறிய வார்த்தைகளின் உண்மைத்தன்மையை இப்போது கண்களாலேயே கண்டான் அஜய்..

ஸ்ரவ்யா கூடியவிரைவில் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அஜயினுள் வலுவடைந்தது...

இரவு அஜயும் அபியும் சென்றதும் ஸ்ரவ்யாவை உணவுண்ண செய்துவிட்டு உறங்க அழைத்து சென்றான் தேவ்....

அவளை கட்டிலில் படுக்கவைத்தவன் அவளை கண்மூடச்சொல்ல அவளோ அவனை பார்த்தபடியிருந்தான்... அதைகண்டவன் அவளை எழுப்பி தன் மடியில் கிடத்தி அவள் தலையை கோதியபடி அவள் அதிகமாய் விரும்பிக்கேட்கும் பாடலை அழகாய் பாடினான்...

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே

பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா

ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே

மானே இள மானே

அவன் கானத்தில் அவள் கண்களிரண்டு மூடிக்கொள்ள ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் ஸ்ரவ்யா....

அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட தேவ் அவளை சரியாக படுக்கவைத்துவிட்டு வேலைக்கார அம்மாவிடம் அவளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வந்து படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை..

மனதில் பல எண்ணங்கள் அலைமோதிட அதன் புளுக்கம் தாளாமல் வீட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வானில் உலாவிக்கொண்டிருந்த நிலவு துணைநின்றது....

அவன் எண்ணங்களும் அந்த நிலவினைப்போல் உலாவரத்தொடங்கியது...

வீட்டிற்கு தேவையான விறகினை வெட்டிக்கொடுத்துக்கொண்டபடியே தன் அன்னையோடு உரையாடிக்கொண்டிருந்த தேவ்வை தேடிக்கொண்டு வந்தாள் ஸ்ரவ்யா..

அவனை கண்டதும்

“என்ன பண்ணுற தேவ்..”

“விறகு வெட்டிட்டு இருக்கேன்...”

“ஹே..நானும் வெட்டவா..” என்று கேட்க தேவ்வின் அன்னையோ

“வேண்டாம் சூட்டி.... கையை வெட்டிப்ப.. தம்பியே வெட்டட்டும்.. காட்ட ஊத்தவா சூட்டி...”

“வேணாம்மா... தேவ்... எப்போ ஸ்ரோபரி பேக்டரி கூட்டிட்டு போகப்போற???”

“நாளைக்கு போகலாம் சூட்டி... இன்னைக்கு போகலாம்னு தான் நினைச்சேன்.. இன்னைக்கு பசங்க விளையாட கூப்பிட்டானுங்க.. அபியும் கபியும் போவோம்னு சொன்னாங்க... அதான் இன்னைக்கு க்ரைவுண்டு போறோம்...”

“அப்போ நான்...”

“நீ நதி கூட பாக்டரிக்கு போயிட்டு வா... அம்மாவும் பாக்டரிக்கு போறேன்னு சொன்னாங்க...”

“அங்க தான் ஏற்கனவே போயிட்டு வந்துட்டேனே...”

“பாக்டரிக்கு தானே போன.. தேயிலை தோட்டத்தை பார்க்கலையே... நதிகூட போ.... சுற்றி காட்டுவா... அந்த இடம் நிச்சயம் பிடிக்கும்... காமெராவையும் எடுத்துட்டு போ...”

“ம்.. சரி...” என்று அவள் விருப்பமே இல்லாமல் அவன் சொன்னதிற்காக தலையாட்டியபடி செல்வதை அதை கண்ட தேவ்வின் அன்னை

“சூட்டி எப்பவுமே இப்படி தானா தம்பி??”

“இப்படினா அம்மா... ??”

“சின்ன பிள்ளை மாதிரி கொஞ்சிட்டே தான் இருப்பாளாபா...வளர்ந்தும் சின்னப்பிள்ளையாவே இருக்கா..” என்று கேட்க அவளின் தனிமையை தன் அன்னைக்கு கூறினான் தேவ்.... அவளின் நிலையை அறிந்ததும் தேவ்வின் அன்னைக்கு அவள்மீது ஒருவகை பாசம் உண்டானது... அவள் இங்கிருந்து செல்லும் வரை அவளை நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டுமென்று மனதில் எண்ணிக்கொண்டார்.

மாலை தேவ் தன் நண்பர்களுடன் க்ரைவுண்டிற்கு செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்தனர் தேவ்வின் ஊர் நண்பர்கள்.. அவர்களுக்கு தன் காலேஜ் நட்புக்களை அறிமுகப்படுத்தியவன் அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் ஆடத்தொடங்கினான்...

இங்கு ஸ்ரவ்யாவோ தேவ்வின் சித்தி மகள் நதியோடு தேயிலை தோட்டத்தை சுற்றக்கிளம்பினாள்... ஆனால் அவளுக்கு தேவ் இல்லாமல் எங்கும் செல்ல விருப்பமில்லை... ஆனாலும் அவன் கூறியதை மறுக்கமுடியாது சென்றவள் சற்று நேரத்திலேயே வீட்டிற்கு கிளம்பலாம் என்று கூற

“என்னாச்சு அக்கா..??”

“நதி இதெல்லாம் நான் எங்க ஊருலயே நிறைய பார்த்திட்டேன்.. அதைவிட நீயும் இந்த இடத்தை இதோட நான்காவதை தடவை சுற்றி காட்டப்போற... எனக்கு போர் அடிக்கிது நதி.. நாம வீட்டுக்கு போகலாம்...”

“அண்ணா இல்லாமல் வேறு எங்கேயும் போகமுடியாது... ஆனா..அக்கா ஒரு ஐடியா??”

“சொல்லு நதி...”

“நாம க்ரவுண்டுக்கு போவோமா??”

“க்ரவுண்டுக்கா...?? அங்க என்ன இருக்குது??”

“அக்கா.. அண்ணா அங்க தான் விளையாடபோயிருக்குது..”

“அப்போ வா போகலாம்...”

“ஆனா.. அண்ணா ஏசுமே...”

“தெரியாமல் இருந்து பார்த்துட்டு வந்திடலாம்..”

“ம்.. சரி வாங்க போகலாம்..” என்று நதி ஸ்ரவ்யாவை குறுக்குப்பாதையினூடாக க்ரவுண்டிற்கு அழைத்து சென்றாள்..

அந்த க்ரவுண்ட் வழமையான மைதானம் போல இல்லாமல் புற்கள் பிடுங்கப்பட்டு நடைபாதையிலிருந்து சற்று பள்ளமாக இருந்தது...

ஸ்ரவ்யாவை அங்கிருந்த மேட்டின் மீதிருந்த கல்லின் மேல் அமரச்செய்தவள் தானும் அருகில் அமர்ந்துகொண்டாள்...மைதானத்தில் விளையாடுபவர்களுக்கு அவர்கள் அங்கு அமர்ந்திருப்பது தெரியாது..

தேவ்வும் நண்பர்களும் ஏதோ வித்தியாசமாக விளையாடுவதை கண்ட ஸ்ரவ்யா

“நதி அவங்க என்ன விளையாடுறாங்க..??”

“பிள்ளையார் பந்து விளையாடுறாங்க அக்கா..”

“அப்படினா...”

“இதுவும் கிரிக்கெட் மாதிரி தான்.. ஆனா என்ன இதுல மட்டை இல்லை..”

“புரியிற மாதிரி சொல்லு நதி...”

“ம்ம்..சொல்றேன்..இந்த விளையாட்டோட பிள்ளையார் பந்து.. ஏன் அப்படி சொல்றாங்கனா இந்த விளையாட்டு பயன்படுத்துற கோல்(goal) பிள்ளையாரோட உருவத்துல இருக்கும்னு சொல்றாங்க... அது எப்படினா ஒரு தகரத்தை நடுவுல வைத்து அதை தாங்குறதுக்கு அதற்கு பின்னால குறுக்கால ஒரு தடுப்பு வைப்பாங்க.. அதோட உருவம் பிள்ளையாரும் அவரோட தும்பித்கையும் மாதிரி இருக்கிறதால அந்த பெயர்னு சொல்லுறாங்க.. அது உண்மையானு தெரியலை... அது தான் கோல்.. இரண்டு குழுவாக பிரிந்து தான் இந்த விளையாட்டை விளையாடனும்... முதல்ல ஒரு குழுவில உள்ள ஒருத்தர் கையில ரப்பர் பந்தை கொடுப்பாங்க.. அவருக்கு மூன்று வாய்ப்பு... அவரு ஒரு குறிப்பிட்டு தூரத்துல இருந்து பந்தை அந்த கோலை நோக்கி தூக்கி வீசனும்.. அவரு வீசுன பந்து சரியாக அந்த கோலுல படனும்.. அவரு பந்து வீசும் போதும் இரண்டு குழுவும் அந்த கோலுக்கு பக்கத்துல இருக்கனும்... வீசுனவரோட பந்து அந்த கோலுல அடிப்பட்டு பறந்து எதிரணி கைக்கு போயிடுச்சுனா பந்து வீசுனவரோட அணி அவுட்டு.. அது பந்து வீசுனவரோட குழுவுக்கு கிடைக்கனும்..பந்து கீழ விழுந்ததும் பந்து வீசுனவரோட குழுவில எல்லாரும் சேர்ந்து அந்த பந்தை வட்டமிட்டு எதிரணிக்கு தெரியாதமாதிரி ஒருத்தர் அந்த பந்தை எடுத்து சட்டைக்குள்ள மறைத்து வைத்திருக்கனும்... எதிரணியை குழம்புவதற்காக எல்லாரும் பந்தை மறைத்து வைத்திருக்கிறமாதிரி நடிப்பாங்க... பிறகு பந்து வைத்திருக்க குழுவில உள்ள ஆட்கள் ஆளுக்கு ஒருத்தரா எதிரணியில உள்ளவங்களை துரத்துவாங்க... எதிரணியில உள்ளவங்க ஓடிக்கிட்டே யாருகிட்ட பந்து இருக்குனு கண்டுபிடிக்கனும்.. பந்து தன்னை துரத்துற ஆள்கிட்ட இல்லைனு கண்டுபிடிச்சிட்டாங்கனா அவங்களை தொட்டுறனும்.. அப்படி தொட்டுட்டா பந்து வைத்திருக்க குழு அவுட்... இப்போது எதிரணியில ஒருத்தர் தன்னை துரத்துபவர்ட்ட பந்து இல்லைனு கண்டுபிடித்து சொன்னதும் உண்மையாகவே பந்து வைத்திருப்பவர் தன்னோட பந்தை வெளியில எடுத்து எதிரணியின் யார் மேலாவது வீசனும்.. அப்படி வீசும் போது எதிரணியின் யார் முதுகிலாவது பட்டா எதிரணி அவுட்... ஆனால் அதற்கு முதலில் எதிரணி பந்து வைத்திருக்கிற அணியில யாரையாவது தொட்டுட்டா பந்து வைத்திருக்கிற அணி அவுட்டு.. பந்து வைத்திருக்க அணி எதிரணியை துரத்தும் போது “ஹலோ..ஹலோனு....” சொல்லிக்கிட்டே தான் துரத்தனும்... வீசுன பந்து யார்முதுகிலும் படாட்டி எதிரணி வெத்துனதா அர்த்தம்...” என்று நதி ஸ்ரவ்யாவிற்கு பிள்ளையார் பந்து விளையாட்டை பற்றி எடுத்துரைக்க ஸ்ரவ்யாவோ

“ஹப்பா.. இவ்வளவு கஷ்டமா இந்த கேம்..”

“இல்லை அக்கா.. கேட்கும் போது கஷ்டம் மாதிரி தான் தெரியும். .. ஆனா விளையாடும் போது சூப்பரா இருக்கும்.. அதுவும் விளையாடுறதா இவங்க அடிக்கிற கூத்து இருக்கே... செம்ம காமடியாக இருக்கும்.... அங்க பாருங்களே...” என்று நதி ஸ்ரவ்யாவிடம் தேவ்வின் நண்பன் ஒருவனை காட்டினாள்..

அவன் தன் சட்டையினுள் பந்தை வைத்திருப்பதைபோல் காட்டி எதிராளியை ஏமாற்றிக்கொண்டிருந்தான்.. கபடியை போல் அங்கும் இங்கும் ஓடி போக்குகாட்டிக்கொண்டிருந்தான்... அனைவரும் அவனிடம் தான் இருக்கின்றது என்று நம்பும் வேளையில் இன்னொருவன் பந்தை எடுத்து எதிரணியில் ஒருவன் மீது எறிந்துவிட அது சரியாய் அவன் முதுகை பதம் பார்த்தது.. ஆனால் அவனோ தன்மேல் படவேயில்லை என்று அடித்து கூற அவனது அணியினரும் அவனிற்கு ஆதரவாக பேசினர்.. கடைசியில் முடிவு தெரிந்து கொள்வதற்காக அவன் சட்டையை கழற்றி பார்க்க அவன் பின்முதுகிலிருந்த காயம் அவன் அடிவாங்கியதை உறுதிப்படுத்தியது.. ஆனாலும் அவன் இல்லையென்று வாதாட

இதை கண்ட ஸ்ரவ்யா

“என்ன நதி இது..??””

“அதான் சொன்னேனே அக்கா... அந்த பந்து அவனை நல்லா பதம் பார்த்தும் கூட அடிபடவே இல்லைனு எப்படி சாதித்தான்னு பார்த்தீங்கள?? இப்படி தான்.. பார்க்கும் போது.. சூப்பரா இருக்கும்..”

“ம்ம்.. நல்லா தான் இருக்கு... “ என்றபடி நதியோடு அமர்ந்து அவர்களது விளையாட்டை பார்க்கத்தொடங்கினாள் ஸ்ரவ்யா... முதலில் விளையாட்டை ரசித்தபடியிருந்த கண்கள் பின் தேவ்வை மட்டுமே கவனிக்கத்தொடங்கியது..

புழுதி மண்ணில் பிரண்டு எழுந்து அவன் விளையாடும் அழகை கண்டவளுக்கு ஏதேதோ எண்ணங்கள்... அதுவும் அவன் வழமைக்கு மாறாக அரைக்காற்சட்டையும் சற்று தடிமனான முழுக்கை சட்டையும் அணிந்துகொண்டு தன் நண்பர்களோடு சிரித்து பேசி விளையாடுபவனை கண்டவளுக்கு மனதில் இனம்புரியாத குறுகுறுப்பு... இதை ரசித்தபடியிருந்தவளை உலுக்கினாள் நதி..

“அக்கா. வாங்க போகலாம்... இருட்ட ஆரம்பிச்சிருச்சு...”

“அவங்களோடயே போகலாமே நதி...”

“நாம இங்க வந்தோம்னு தெரிந்தது அவ்வளவு தான்.. எங்க அண்ணன் ஆடித்தீர்த்திடுவான்...வாங்க போகலாம்..” என்றபடியே ஸ்ரவ்யாவை இழுத்து சென்றாள் நதி..

வீட்டிற்கு சென்று சுடுநீரில் குளித்துவிட்டு தேவ்வின் அன்னை கொடுத்த இஞ்சி டீயை குடித்தவளுக்கு அப்போது தான் உடல் குளிரை உணரத்தொடங்கியது...

தான் கொண்டு வந்திருந்த இன்னொரு ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டவள் தேவ்வின் அன்னையை தேடிச்சென்று அவரோடு கதைத்தபடியிருந்தாள்...

சற்று நேரத்தில் தேவ்வும் மற்றவர்களும் வந்துவிட தேவ்விடம் ஸ்ரவ்யா

“அப்பு... நாளைக்கு ...”

“ஸ்ராபரி கார்டன் போறோம்.. அதற்கு முதல்ல இன்னொரு இடத்துக்கு போறோம்..”

“எங்க...??”என்ற ஸ்ரவ்யா ஆவலுடன் கேட்க தேவ்வோ

“அது சப்ரைஸ்.. காலை ஆறரைமணிக்கு கிளம்பனும்..”

“அவ்வளவு ஏர்லியாவா??”

“ஆமா சூட்டி.. அப்போ தான் அந்த இடத்தை பார்க்க நல்லா இருக்கும்...”

“ம்ம்...”

“சரி நீ சாப்பிட்டு சீக்கிரம் தூங்கு... மற்றவங்களையும் சீக்கிரம் தூங்கச்சொல்லு.. சரியா..” என்று கேட்க சரியென்று தலையாட்டியவள் உணவுண்டுவிட்டு மொபைலில் அலாரம் வைத்துவிட்டு உறங்கச்சென்றாள்..

காலையில் அனைவருக்கும் முதலாய் எழுந்து தயாரானவள் ஒருவித பரபரப்புடன் இருந்தாள்....

தேவ் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் தயாரானதும் அவர்களுக்காக அவன் ஒழுங்குபடுத்தியிருந்த வேனில் அனைவரும் கிளம்பினர்..

ஸ்ரவ்யாவோ வழிநெடுகிலும் எங்கு போகிறோம் என்று கேட்டபடிவர தேவ்வோ சற்று நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறியே அவள் பொறுமையை சோதித்தான்..

கடைசியாக வேன் ஓரிடத்தில் நிற்க கீழே இறங்கியவள் தான் கண்டவற்றை கண்டு உறைந்து நின்றாள்...

சுற்றிலும் பச்சைபசேலென்று மலைகளும் புல்நிலங்களுமாயிருக்க அதன் நடுவே பெரிய ஏரியொன்றிருந்தது...

மலைகளும் பச்சை வெளிகளும் வெண்பனியால் மறைக்கப்பட்டிருந்தது...

அந்த ரம்மியமான காலைப்பொழுதில் அந்த காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு புத்துணர்ச்சியாகவும் இருக்க அதன் அழகை ரசிக்கத்தொடங்கியவள் காமெராவை தேவ்வின் கையில் கொடுத்து அந்த இடத்தின் அழகை புகைப்படங்களாய் சேமிக்கக்கூறினாள்...

புற்களின் மீதிருந்த பனித்துளிகளை தன் பாதங்களாய் நசுக்கியபடியே அந்த புல்தரையில் நடைபயிலத்தொடங்கியவளை அங்கிருந்த சிறு மரத்தின் அசைவு கூட கவர்ந்திழுத்தது.. வெயிலும் அல்லாத இருளும் அல்லாத அந்த வானிலை அவளை அள்ளிக்கொண்டது...

அவள் தனக்குள் மகிழ்வதை கண்டு அவளருகே வந்த தேவ்

“என்ன சூட்டி... எப்படி என்னோட சப்ரைஸ்....”

“சூப்பர் அப்பு..... அன் எக்ஸ்பெக்டெட்... ஏதோ சொர்க்கத்துல இருக்கமாதிரி இருக்கு...இது என்ன இடம்...??”

“இது க்ரேகரி லேக்..... நுவரேலியாவில உள்ள டாப் டுவரிஸ்ட் விசிடட் பிலேசஸ்ல இதுவும் ஒன்று...ஏர்லி மார்னிங்...இங்க வியூவ் சூப்பராக இருக்கும்.. அதான் காலையிலேயே இங்க கூட்டிட்டு வந்தேன்... வா லேக் கிட்ட போகலாம்..” என்று கூறி அவள் கைபிடித்து கீழே அழைத்து சென்றான் தேவ்..மற்றவர்களை அபி கவனித்துக்கொள்ள ஸ்ரவ்யா தேவ்வோடு இருந்தாள் .

ஏரியினருகே வந்ததும் அங்கிருந்த கைப்பிடியை பிடித்து அதில் சாய்ந்தபடி அந்த காலை நேர அழகை ரசிக்கத்தொடங்கினாள் ஸ்ரவ்யா... சூரியனின் பொற்கிரணங்களே தென்படாத பனிசூழ்ந்த அந்த காலை வேளையும் குளிரும் இயற்கையின் விந்தையை பறைசாற்றியது....

பச்சை மலைகளை மறைத்து நின்ற வெண்பனிகள் திரைபோலல்லாது அம்மலைகளுக்கு வெண்ணிற அணிகலன்களாய் பொருந்திநின்றது....

கண்களை இத்தகைய நளினம் மறைத்துநிற்க ஸ்ரவ்யாவிற்கோ இவற்றைவிட தன்னவனின் அருகாமையே அவளை இம்சித்தது.... தேவ்வோ அவளுக்கு ஒவ்வொரு இடமாய் சுற்றிக்காட்ட அவளோ அதை உணரும் நிலையில் இல்லை.. அவள் மனமோ இப்போதே காதலை கூறிவிடு என்று எடுத்துரைக்க அறிவோ வேண்டாம் என்று தடுத்தது.....

வெகுநேரமாய் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்றுணர்ந்த தேவ்

“சூட்டி என்னாச்சு.. ரொம்ப குளிருதா??”

“இ..இல்லை... இங்க போர்ட்டிங் இருக்கா .??”

“ஆமா இருக்கு.. எட்டுமணிக்கு மேல இருக்கும்.... அதோடு அங்கபாரு..” என்று எதிர்புறம் காட்டியவன்

“அங்கேயிருக்கிற ரிசோட்டுல இருந்து பார்த்தா இந்த வியூவ் சூப்பரா இருக்கும்னு சொல்லுவாங்க... அதையும் ஒரு நாள் பார்த்திடனும்..” என்று கூற ஸ்ரவ்யாவும் அவன் கூறியதை மனதில் குறித்துக்கொண்டாள்...

மற்றையவர்களும் அவர்களிருந்த இடம் வந்திட அனைவரும் அங்கு சிறிது நேரம் அமரலாம் என்று அபி கூற மற்றவர்களும் அதை ஏற்றனர்...

அப்போது அபி “ டேய் மச்சான்.. என்ன இடம்டா இது.. ப்பா... இப்படி பார்க்கும் போது ஆளை தூக்குதே...” என்று கேட்க அனைவருக்கும் அந்த இடம் பற்றி கூறினான்..

அப்போது அபி “நான் கண்டுபிடிச்சிட்டேன்..”என்று கூற அக்ஷய்

“என்னத்தையடா கண்டுபிடித்த??”

“அதை நான் சொல்றேன்..” என்று கபிலன் முந்த அவனை முறைத்த அபி

“நீ என்னை டேமேஜ் பண்ண போறனு தெரியும்... ப்ளீஸ் நல்ல மூட்ல இருக்கேன்..இன்னைக்கு ஒரு நாளைக்காவது விட்டுடு...” என்று அபி கூற முபாரக்கோ

“மச்சி... கபி செல்லட்டுமே டா... நீ நினைச்சதை உன்ன விட அவுன் தான் செரியா சொல்லுவான்.. கபி நீ செல்லு பங்கு....” என்று முபாரக் அபிக்கு எதிராக கபிலனுடன் கைகோர்த்தான்...

தேவ்வோ “பாவம்டா... இன்னைக்கு ஒருநாள் அவனை விட்டுடுங்கடா...” என்று தேவ் அபிக்காக பரிந்து பேச அப்போது தேவ்வின் நட்புபட்டாளத்திலிருந்த பெண் நட்பான நிம்மி

“டேய்... அவனை விடாதீங்கடா.. அவன் நிச்சயம் ஏதாவது ஏடாகூடமாக தான் யோசிச்சிருப்பான்... கபி.. நீ ஆரம்பி. “

“நிம்மி. சந்தர்ப்பம் பார்த்தா பழிவாங்குற?? இருடி.. உன்னை இன்னொரு நாள் கவனிச்சுக்கிறேன்..” என்று அபி மனதினுள்ளே கருவ கபிலன் தன் பணியை ஆரம்பித்தான்..

“மச்சான் நம்ம அபி இந்த லொகேஷனை பார்த்ததும் என்ன நினைச்சிருப்பான்னா...” என்று கூறி நிறுத்தியவன் அபியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நிம்மியை ஒரு பார்வை பார்த்தான் கபிலன்....

அதை கண்டு பயந்த அபி கபிலனிடம் கண்களால் வேண்டாமென்று கெஞ்ச அவனோ இன்று உன்னை விடுவதாயில்லையென்று கண்களால் கூறியவன்

“அதாவது இப்படியொரு லொக்கேஷனுல மனசுக்கு பிடித்த பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணா எப்படி இருக்கும்னு யோசிச்சிருப்பான்.. என்ன அபி நான் சொன்னது கரெக்ட் தானே..” என்று கேட்க அபிக்கு அப்போது தான் சுவாசம் சீரானது...

ஆம் இல்லையென்று இருபுறமும் தலையாட்டிவனை கண்ட கபிலன்

“என்னடா தலை எல்லா ஏங்கில்லயும் ஆடுது... சரியில்லையே...நிம்மி...” என்று கபிலன் நிம்மியை அழைக்க அவனை முந்திக்கொண்டு அபியே

“ஆமானு சொன்னேன்டா...”

“ஓ.. அப்படியா... சரி அப்போ நிம்மிக்கிட்ட நீ சொல்லுறியா... இல்லை... நான் சொல்லவா..??” என்று கபிலன் கேட்க நிம்மியோ

“என்ன கபி... என்ன சொல்லபோற??” என்று கேட்க அபியோ இப்போதே கூறிவிடுவது உசிதமென்று எண்ணியவன் தன் உள்ளத்தை பாடலாகவே பாடினான்...

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லை நானா

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பாயா

இல்லை அடிப்பாயா

நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா

இல்லை மிதப்பேனா

நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா

மறிப்பேனா

என்று அபி பாட நிம்மியோ அதிர்ந்துவிட்டாள்.. இவ்வாறு அபி அனைவர் முன்னிலும் தன் காதலை வெளிப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை...

“நீ.. நீ... என்ன சொல்லுற??” என்று நிம்மி குரலில் நடுக்கத்துடன் அபியிடம் கேட்க அவனோ மீண்டும் பாடத்தொடங்கினான்..

ஆ.. எப்படி நான் சொல்வேன் அட எப்படி நான் சொல்வேன்

என் காதலை எப்படி நான் சொல்வேன்....

என்று மீண்டும் அபிபாட நிம்மியோ அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்...

அதை கண்டு அபியின் முகம் வாட கபிலனோ

“டேய் எழுந்து போடா... அவ எல்லாரும் இருப்பதால அன்கம்பர்டபலா பீல் பண்ணியிருப்பா... போ.... போய் பேசு...” என்று கபிலனும் தேவ்வும் அவனை உந்த அபியும் நிம்மியிடம் பேச எழுந்து சென்றான் ...

நிம்மி கைகளை கட்டிக்கொண்டு ஏரியை வெறித்தவளருகே வந்து நின்ற அபி தயக்கத்துடன் நிம்மி என்று அழைக்க அவளோ அவனை திரும்பி பார்த்தவள் அவன் எதிர்பாராத வேளையில் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்..

அவள் செயலில் முதலில் அதிர்ந்தவன்

“நிம்மி... உனக்கு...”

“உனக்கு இதை என்கிட்ட சொல்ல இரண்டு வருஷம் தேவைபட்டுச்சுல்ல??” என்று நிம்மி கேட்க அதிர்ந்தவன்

“அப்போ. நீயும்...”

“ஏன்டா உன் மனசுல இருப்பதை இத்தனை நாட்களாக சொல்லவில்லை??” என்று நிம்மி அவன் மார்பில் செல்லமாய் அடித்தபடியே கேட்க அவளை அணைத்தவன்

“எப்படி நான் சொல்வேன்... அடி எப்படி நான் சொல்வேன்...என் காதலை எப்படி நான் சொல்வேன்..” என்று மீண்டும் அவன் பாடலாக பாட நிம்மியோ

“ஓ... சாருக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணுறதுனு தெரியாது...”

“அவள் கண்ணை பார்த்து சொல்வேனா

இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா

அவள் எதிரில் நின்று சொல்வேனா

இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா

நான் பேசின் நடுவே சொல்வேனா

இல்லை மௌனம் காத்து சொல்வேனா

நான் சுத்தத் தமிழில் சொல்வேனா

இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா

அடி சொல்லிதான் விடுவேனா

இல்லை சொல்லாமல் தவிப்பேனா…” என்று பாடியவனை இறுக அணைத்துக்கொண்டவள் எக்கி அவன் இரு கன்னத்திலும் முத்தமிட அதில் லயித்தவன்

“உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை நீ தந்தாய்

என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய்

என் உயிரை போல காப்பேனா

இல்லை உயிரை கொடுத்து காப்பேனா

உன் உள்ளம் என்றே நினைப்பேனா

என் உலகம் என்றே நினைப்பேனா

அதை குழந்தை போல வளர்ப்பேனா

நாய் குட்டி போல வளர்ப்பேனா

என் கற்பை போல மதிப்பேனா

இல்லை கடவுள் போல துதிப்பேனா

அதை எனக்குள்ளே வைப்பேனா

என்னை அதற்குள்ளே வைப்பேனா..” என்று ஒற்றை பாடலிலேயே தன் இரு வருட காதலை தன் மனம் கவர்ந்தவளிடம் பரிமாறினான் அபி..

அவனும் பலமுறை எவ்வாறேனும் தன் காதலை நிம்மியிடம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறான்.. ஆனால் எங்கே அவள் தன் காதலை மறுத்துவிட்டால் இருவருக்கும் இடையில் தொடரும் நட்பும் துண்டிக்கப்பட்டு விடுமோ என்று பயந்தான்... அதனாலேயே இத்தனை நாட்கள் காதலை சொல்லாமல் இருந்தான்... ஆனால் இன்று அவன் எதிர்பாராவிதத்தில் காதலை வெளிப்படுத்துவோமென்று அவன் கனவில் கூட எண்ணவில்லை...

“நிம்மி.. நான் உன்னை லவ் பண்ணது??”

“எனக்கு தெரியும்டா... நீ கபிலன்கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்..”

“எப்போ...”

“காலேஜ் லெக்சர்ஸ் முடிந்ததும் கபி உன்னை வம்பிழுத்துட்டு இருந்தான்.. நான் அங்கில்லை அப்படீங்கிற தைரியத்துல சாரும் ஆமா நான் நிம்மியை லவ் பண்ணுறேன்னு உளறிட்டீங்க..

நான் ஏதோ எடுக்க கிளாஸிற்கு வந்தப்போ தான் இது என் காதுல விழுந்தது... நீ சொன்னப்போ எனக்கு ஷாக் தான்.. ஆனா உன்னை எனக்கு பிடிக்கும்டா... அதனால நீ வந்து சொன்னா மற்றதை பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்... ஆனா அதுக்கு பிறகு என்னை அறியாமலேயே உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன்... அது ஏன்னு என்னோட மனசுக்கு புரியலை.. ஆனா போகப்போக தான் காதல்னு புரிந்தது.... நீ எப்போ வந்து சொல்வனு இரண்டு வருஷமாக காத்திருந்தேன்.... ஆனா நீ அதை பற்றி கண்டுக்கொண்டதாக தெரியலை....இன்னைக்கு கபி மட்டும் ஆரம்பிச்சிருக்காமல் போயிருந்தா இப்போ கூட நீ சொல்லியிருக்கமாட்ட..” என்று அவன் மார்பில் செல்லமாய் அடிக்க அவள் முன்னெச்சியில் தன் இதழ் பதித்தவன்

“சாரிடி..எங்க நீ மறுத்திடுவியோங்கிற பயத்துல தான் நான் இத்தனை நாளாக சொல்லவில்லை.. சாரிமா.”

“சரிசரி.. பிழைத்து போ.... ஆனா ப்ரபோஸ் பண்ணும் போது கிப்ட் கொடுக்கனும்... எங்க என்னோட கிப்ட்...” என்று நிம்மி கேட்க என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவன் தன் ஜர்சியை தடவிப்பார்க்க அதில் ஒரு சிறு பை இருந்தது... அதை எடுத்தபார்த்தவன் அதிர்ந்தான்...

அது அபி நிம்மிக்கென்று வாங்கிய ஒரு சில்வர் மோதிரம்.. அது அவன் அறையில் தான் இருந்தது.. அது எப்படி இங்கே என்று யோசித்தவனுக்கு காலையில் தேவ் அபியிடம் ஒரு பொதியை கொடுத்து அவனது பாக்கெட்டில் வைக்கச்சொன்னது நினைவில் வந்தது..

இவை அனைத்தும் தம் நட்புக்களின் பிளான் என்று புரிய அவர்களுக்கு மானசீகமாய் நன்றி கூறியவன் அந்த இதயச்சுருக்கம் பதிக்கப்பட்ட சில்வர் மோதிரத்தை நிம்மியின் கையில் அணிவித்தான்...

அதை பார்த்தவள் மீண்டுமொருமுறை அவனை கட்டியணைத்தாள்....

பின் இருவரும் நண்பர்களிருந்த இடம் நோக்கிவர அனைவரும் இருவருக்கும் தனித்தனியே வாழ்த்து சொல்லினர்..

ஸ்ரவ்யா நிம்மிக்கு வாழ்த்து சொல்ல அதை ஏற்றவள் ஸ்ரவ்யாவின் காதில்

“சூட்டி.. இவனே இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டான்... உன் ஆளு இவனை விட மோசம்... நீயே களத்துல இறங்கிரு...”என்று குசுகுசுக்க ஸ்ரவ்யாவும் சிரிப்புடனே அவள் கூற்றை ஏற்றாள்...

பின் அனைவரும் அங்கிருந்து கிளம்பி ஸ்ராபரி தோட்டம் சென்றனர்....

இவ்வாறு நினைவுகளில் உழன்றவனை நித்திராதேவி ஆட்கொள்ள தான் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கத்தொடங்கினான் தேவ்....

[QUOTE="Anu Chandran, post: 2907, member: 6"] [I][B]உறையாத சொல்லின் பொருளை[/B][/I] [B][I]மொழி இங்கு தாங்குமோ.. உறவாக அன்பில் வாழ ஒரு ஆயுள் போதுமோ...[/I][/B] தேவ் ஸ்ரவ்யாவோடு அவளிருந்த வீட்டில் தங்கத்தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது... அவளை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டான் தேவ்... காலை அவளை எழுப்பி தேநீர் புகட்டுபவன் அவளோடு சற்று நேரம் பேசுவான்...அவன் பேச அவளோ அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பாள்.. அவளுக்கு ஏதேனும் தேவை என்றால் அப்பு என்ற வார்த்தை மட்டுமே அவள் நாவிலிருந்து உதிக்கும்... தேவ்வும் அதை உணர்ந்து அவளுக்கு தேவையானதை செய்வான்.. அவளை பார்த்துக்கொள்ளும் வேலையாளின் உதவியுடன் குளித்து முடித்து உடைமாற்றி வருபவளுக்கு தலை வாருவது, அலங்கரிப்பது என்று அனைத்தையும் செய்வான்... அதன் பின் அவளுக்கு உணவு புகட்டிவிட்டு தானும் உண்பான்... உணவை முடித்ததும் அவளை ஹாலிற்கு அழைத்து வந்து அமரச்செய்பவன் அவளோடு பல கதைகளை பேசுவான்.. அதில் தாமிருவரும் ஒன்றாய் சந்தித்த அனுபவங்கள், தான் சந்தித்த அனுபவம் என்று அனைத்தையும் அவன் அவளுடன் பகிர ஸ்ரவ்யாவும் கேட்டுக்கொண்டிருப்பாள்... தினமும் அபியுடன் அங்கு வருவான் அஜய்.. அவனும் ஸ்ரவ்யாவுடன் பேசினான்... தேவ் ஸ்ரவ்யாவை குழந்தைபோல் கவனித்துக்கொள்வதை கண்ட அஜயிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.. ஆனால் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை... ஒருநாள் தேவ் அஜய் மற்றும் அபியோடு பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரவ்யா அப்பு என்றழைக்க “என்ன சூட்டி வேண்டும்??” என்று கேட்க அவளோ எழும்ப “வாஸ்ரூம் போகனுமா??” என்று கேட்க அவள் தேவ்வை பார்க்க “வா.. போகலாம்...” என்றவன் அஜயிடமும் அபியிடமும் சொல்லிவிட்டு அவளை வாஸ்ரூம் அழைத்து சென்றவன் வாசலிலேயே நின்றுக்கொண்டு அவளை உள்ளே அனுப்பினான்... உள்ளே சென்று வந்தவளிடம் “சூட்டி கையை வாஸ் பண்ணியா??” என்று கேட்க அவளோ அவனை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவன் “வா... வாஸ் பண்ணி விடுறேன்...” என்றவன் அவளை வாஸ்ரூமிற்கு அழைத்து சென்று அவள் கையிரண்டையும் ஹேன்ட் வாஸினால் கழுவியவன் உள்ளே இருந்த டிசுவினால் அவள் கையிரண்டையும் துடைத்துவிட்டு தன் கைகளையும் துடைத்துக்கொண்டு அவளை வெளியே அழைத்து வந்தான்.. இதை பார்த்திருந்த அஜயிற்கோ உள்ளம் நெகிழ்ந்தது... தேவ் மீதிருந்து கொஞ்ச நஞ்ச கோபமும் பறந்தோடியது... ஸ்ரவ்யா தேவ்வை பற்றி பெருமையாய் கூறிம்போதெல்லாம் அஜய் அவள் சொல்வதை ஒப்புக்கொள்ளமாட்டான்... ஏதேனும் கூறி அவளை வம்புசெய்வான்... ஒருமுறை அஜய் ஸ்ரவ்யாவிடம் ஸ்கைப்பில் உரையாடும் போது “ஏன் பேபி... எனக்கு ஒரு டவுட்டு.” “சொல்லு ஆங்ரிபேட்...” “உன்னோட தேவ் அப்படி இப்படினு சொல்லுறியே.... நிஜமா தான் அப்படி சொல்லுறியா?? இல்லை ஏதாவது படம் பார்த்திட்டு என்கிட்ட பிட்டை போடுறியா??” “டேய் ஆங்ரிபேட்... நான் என்னோட அப்புவை பற்றி பேசுறது உனக்கு பிட்டு போடுறமாதிரி இருக்கா??” “இல்லை பேபி... கொஞ்சம் ஓவரா பில்டப் பண்ண மாதிரி பீல் ஆச்சு.... அதான் டவுட்டு..” “டேய் பீட்டரு.. அவன் உன்னை மாதிரி இல்லை ..” “அது தான் தெரியுமே.. என்னை மாதிரி ஒரு நல்லவன் இந்த உலகத்துல நானா மட்டும் தான் இருப்பேன்...” “அதேமாதிரி உன்னை மாதிரி ஒரு லூசு... இந்த உலகத்துல எங்கேயும் இல்லை..” “என்ன பேபி... லூசுனு சொல்லிட்ட....” “என்னோட அப்புவை ஏதாவது சொன்னா உன்னை லூசுனு தான் சொல்லுவேன்..” “அது சரி அது என்ன அப்பு... சப்புனு.. அழகா தேவ் ராகவ்னு அவர் பெயரை சொல்லியே கூப்பிடலாமே.. அதைவிட்டுட்டு என்ன அப்பு,சப்பு, பப்புனு.. நல்லாவே இல்லை..” “உன் இஷ்டத்துக்கு எல்லாம் நான் கூப்பிடுறதை மாற்றமுடியாது.... அவன் எப்பவுமே எனக்கு அப்பு தான்.. அவனுக்கே நான் அப்படி கூப்பிடுவதிலே எந்த பிரச்சினையும் இல்லை.. உனக்கு என்ன பிரச்சினை??” “அவருக்கு வேற வழியில்லை... அதனால எதுவும் சொல்லமாட்டேங்கிறாரு.. ஆனா எனக்கு அப்படி இல்லையே.. பேபி...” “ப்ளடி இடியட்.... ஆர் யூ கிட்டிங் மை அப்பு...??” “இல்லைமா.. என்னை நம்பு... அது சரி ஏன் தேவ்வை அப்புனு கூப்பிடுற??” “அவனை அப்பானு கூப்பிட முடியாததால அப்புனு கூப்பிடுறேன்..” “ஹேய் என்ன பேபி சொல்லுற??” “ஆமா அஜூ... எனக்கு அப்பா இருந்தும் அவரோட அன்பு கிடைக்கவில்லைனு பல நாட்கள் ஏங்கியதுண்டு.. எப்போ அப்புவை பார்த்தேனோ அந்தநொடியில் இருந்து எனக்குள்ள இருந்த ஏக்கம் மறைந்து போனது... காதலிப்பதற்கு முதலும் சரி காதலிக்கும் போதும் சரி அவனோட அன்பு நான் இழந்த எல்லாவற்றையும் மீட்டுக்கொடுத்தது... எத்தனையோ வசதிகள் இருந்தபோதும் அம்மாவிற்கு பிறகு என்னை சாப்பிட்டியானு கேட்பதற்கும் சாப்பிடலைனா திட்டிட்டு சாப்பாடு வாங்கிக்கொடுக்கவும் யாரும் இருக்கவில்லை... ஆனா அப்பு என் வாழ்க்கையில வந்தபிறகு எனக்கு அந்த கவலையை அவன் வரவிட்டதில்லை... நேரத்துக்கு சாப்பிடலைனா பயங்கரமா கோபம் வரும் அப்புக்கு... நான் சோகமாக இருந்தாலோ சந்தோஷமாக இருந்தாலோ அதை பகிர்ந்துக்கொள்ள அவன் எப்பவும் என்பக்கத்துல இருப்பான்..... நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவனோட இருந்த கொஞ்ச நாட்களிலேயே எனக்கு மீட்டு கொடுத்துட்டான்.... அதனால என் மனசு அவனை என்னோட அப்பா ஸ்தானத்துல தான் வைத்து பார்க்கிறது.. அதனால தான் அவனை அப்புனு கூப்பிடுறேன்... இப்போமட்டுமில்லை. எப்பவும் அவன் மட்டும் தான் என்னோட அப்பு..” என்று மனம் முழுக்க காதலுடன் கூறியவளின் வார்த்தைகள் இன்றும் அஜயின் காதுகளில் எதிரொலித்தது.... அவள் கூறிய வார்த்தைகளின் உண்மைத்தன்மையை இப்போது கண்களாலேயே கண்டான் அஜய்.. ஸ்ரவ்யா கூடியவிரைவில் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அஜயினுள் வலுவடைந்தது... இரவு அஜயும் அபியும் சென்றதும் ஸ்ரவ்யாவை உணவுண்ண செய்துவிட்டு உறங்க அழைத்து சென்றான் தேவ்.... அவளை கட்டிலில் படுக்கவைத்தவன் அவளை கண்மூடச்சொல்ல அவளோ அவனை பார்த்தபடியிருந்தான்... அதைகண்டவன் அவளை எழுப்பி தன் மடியில் கிடத்தி அவள் தலையை கோதியபடி அவள் அதிகமாய் விரும்பிக்கேட்கும் பாடலை அழகாய் பாடினான்... தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே அவன் கானத்தில் அவள் கண்களிரண்டு மூடிக்கொள்ள ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் ஸ்ரவ்யா.... அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்ட தேவ் அவளை சரியாக படுக்கவைத்துவிட்டு வேலைக்கார அம்மாவிடம் அவளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வந்து படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை.. மனதில் பல எண்ணங்கள் அலைமோதிட அதன் புளுக்கம் தாளாமல் வீட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தவனுக்கு வானில் உலாவிக்கொண்டிருந்த நிலவு துணைநின்றது.... அவன் எண்ணங்களும் அந்த நிலவினைப்போல் உலாவரத்தொடங்கியது... வீட்டிற்கு தேவையான விறகினை வெட்டிக்கொடுத்துக்கொண்டபடியே தன் அன்னையோடு உரையாடிக்கொண்டிருந்த தேவ்வை தேடிக்கொண்டு வந்தாள் ஸ்ரவ்யா.. அவனை கண்டதும் “என்ன பண்ணுற தேவ்..” “விறகு வெட்டிட்டு இருக்கேன்...” “ஹே..நானும் வெட்டவா..” என்று கேட்க தேவ்வின் அன்னையோ “வேண்டாம் சூட்டி.... கையை வெட்டிப்ப.. தம்பியே வெட்டட்டும்.. காட்ட ஊத்தவா சூட்டி...” “வேணாம்மா... தேவ்... எப்போ ஸ்ரோபரி பேக்டரி கூட்டிட்டு போகப்போற???” “நாளைக்கு போகலாம் சூட்டி... இன்னைக்கு போகலாம்னு தான் நினைச்சேன்.. இன்னைக்கு பசங்க விளையாட கூப்பிட்டானுங்க.. அபியும் கபியும் போவோம்னு சொன்னாங்க... அதான் இன்னைக்கு க்ரைவுண்டு போறோம்...” “அப்போ நான்...” “நீ நதி கூட பாக்டரிக்கு போயிட்டு வா... அம்மாவும் பாக்டரிக்கு போறேன்னு சொன்னாங்க...” “அங்க தான் ஏற்கனவே போயிட்டு வந்துட்டேனே...” “பாக்டரிக்கு தானே போன.. தேயிலை தோட்டத்தை பார்க்கலையே... நதிகூட போ.... சுற்றி காட்டுவா... அந்த இடம் நிச்சயம் பிடிக்கும்... காமெராவையும் எடுத்துட்டு போ...” “ம்.. சரி...” என்று அவள் விருப்பமே இல்லாமல் அவன் சொன்னதிற்காக தலையாட்டியபடி செல்வதை அதை கண்ட தேவ்வின் அன்னை “சூட்டி எப்பவுமே இப்படி தானா தம்பி??” “இப்படினா அம்மா... ??” “சின்ன பிள்ளை மாதிரி கொஞ்சிட்டே தான் இருப்பாளாபா...வளர்ந்தும் சின்னப்பிள்ளையாவே இருக்கா..” என்று கேட்க அவளின் தனிமையை தன் அன்னைக்கு கூறினான் தேவ்.... அவளின் நிலையை அறிந்ததும் தேவ்வின் அன்னைக்கு அவள்மீது ஒருவகை பாசம் உண்டானது... அவள் இங்கிருந்து செல்லும் வரை அவளை நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டுமென்று மனதில் எண்ணிக்கொண்டார். மாலை தேவ் தன் நண்பர்களுடன் க்ரைவுண்டிற்கு செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்தனர் தேவ்வின் ஊர் நண்பர்கள்.. அவர்களுக்கு தன் காலேஜ் நட்புக்களை அறிமுகப்படுத்தியவன் அவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் ஆடத்தொடங்கினான்... இங்கு ஸ்ரவ்யாவோ தேவ்வின் சித்தி மகள் நதியோடு தேயிலை தோட்டத்தை சுற்றக்கிளம்பினாள்... ஆனால் அவளுக்கு தேவ் இல்லாமல் எங்கும் செல்ல விருப்பமில்லை... ஆனாலும் அவன் கூறியதை மறுக்கமுடியாது சென்றவள் சற்று நேரத்திலேயே வீட்டிற்கு கிளம்பலாம் என்று கூற “என்னாச்சு அக்கா..??” “நதி இதெல்லாம் நான் எங்க ஊருலயே நிறைய பார்த்திட்டேன்.. அதைவிட நீயும் இந்த இடத்தை இதோட நான்காவதை தடவை சுற்றி காட்டப்போற... எனக்கு போர் அடிக்கிது நதி.. நாம வீட்டுக்கு போகலாம்...” “அண்ணா இல்லாமல் வேறு எங்கேயும் போகமுடியாது... ஆனா..அக்கா ஒரு ஐடியா??” “சொல்லு நதி...” “நாம க்ரவுண்டுக்கு போவோமா??” “க்ரவுண்டுக்கா...?? அங்க என்ன இருக்குது??” “அக்கா.. அண்ணா அங்க தான் விளையாடபோயிருக்குது..” “அப்போ வா போகலாம்...” “ஆனா.. அண்ணா ஏசுமே...” “தெரியாமல் இருந்து பார்த்துட்டு வந்திடலாம்..” “ம்.. சரி வாங்க போகலாம்..” என்று நதி ஸ்ரவ்யாவை குறுக்குப்பாதையினூடாக க்ரவுண்டிற்கு அழைத்து சென்றாள்.. அந்த க்ரவுண்ட் வழமையான மைதானம் போல இல்லாமல் புற்கள் பிடுங்கப்பட்டு நடைபாதையிலிருந்து சற்று பள்ளமாக இருந்தது... ஸ்ரவ்யாவை அங்கிருந்த மேட்டின் மீதிருந்த கல்லின் மேல் அமரச்செய்தவள் தானும் அருகில் அமர்ந்துகொண்டாள்...மைதானத்தில் விளையாடுபவர்களுக்கு அவர்கள் அங்கு அமர்ந்திருப்பது தெரியாது.. தேவ்வும் நண்பர்களும் ஏதோ வித்தியாசமாக விளையாடுவதை கண்ட ஸ்ரவ்யா “நதி அவங்க என்ன விளையாடுறாங்க..??” “பிள்ளையார் பந்து விளையாடுறாங்க அக்கா..” “அப்படினா...” “இதுவும் கிரிக்கெட் மாதிரி தான்.. ஆனா என்ன இதுல மட்டை இல்லை..” “புரியிற மாதிரி சொல்லு நதி...” “ம்ம்..சொல்றேன்..இந்த விளையாட்டோட பிள்ளையார் பந்து.. ஏன் அப்படி சொல்றாங்கனா இந்த விளையாட்டு பயன்படுத்துற கோல்(goal) பிள்ளையாரோட உருவத்துல இருக்கும்னு சொல்றாங்க... அது எப்படினா ஒரு தகரத்தை நடுவுல வைத்து அதை தாங்குறதுக்கு அதற்கு பின்னால குறுக்கால ஒரு தடுப்பு வைப்பாங்க.. அதோட உருவம் பிள்ளையாரும் அவரோட தும்பித்கையும் மாதிரி இருக்கிறதால அந்த பெயர்னு சொல்லுறாங்க.. அது உண்மையானு தெரியலை... அது தான் கோல்.. இரண்டு குழுவாக பிரிந்து தான் இந்த விளையாட்டை விளையாடனும்... முதல்ல ஒரு குழுவில உள்ள ஒருத்தர் கையில ரப்பர் பந்தை கொடுப்பாங்க.. அவருக்கு மூன்று வாய்ப்பு... அவரு ஒரு குறிப்பிட்டு தூரத்துல இருந்து பந்தை அந்த கோலை நோக்கி தூக்கி வீசனும்.. அவரு வீசுன பந்து சரியாக அந்த கோலுல படனும்.. அவரு பந்து வீசும் போதும் இரண்டு குழுவும் அந்த கோலுக்கு பக்கத்துல இருக்கனும்... வீசுனவரோட பந்து அந்த கோலுல அடிப்பட்டு பறந்து எதிரணி கைக்கு போயிடுச்சுனா பந்து வீசுனவரோட அணி அவுட்டு.. அது பந்து வீசுனவரோட குழுவுக்கு கிடைக்கனும்..பந்து கீழ விழுந்ததும் பந்து வீசுனவரோட குழுவில எல்லாரும் சேர்ந்து அந்த பந்தை வட்டமிட்டு எதிரணிக்கு தெரியாதமாதிரி ஒருத்தர் அந்த பந்தை எடுத்து சட்டைக்குள்ள மறைத்து வைத்திருக்கனும்... எதிரணியை குழம்புவதற்காக எல்லாரும் பந்தை மறைத்து வைத்திருக்கிறமாதிரி நடிப்பாங்க... பிறகு பந்து வைத்திருக்க குழுவில உள்ள ஆட்கள் ஆளுக்கு ஒருத்தரா எதிரணியில உள்ளவங்களை துரத்துவாங்க... எதிரணியில உள்ளவங்க ஓடிக்கிட்டே யாருகிட்ட பந்து இருக்குனு கண்டுபிடிக்கனும்.. பந்து தன்னை துரத்துற ஆள்கிட்ட இல்லைனு கண்டுபிடிச்சிட்டாங்கனா அவங்களை தொட்டுறனும்.. அப்படி தொட்டுட்டா பந்து வைத்திருக்க குழு அவுட்... இப்போது எதிரணியில ஒருத்தர் தன்னை துரத்துபவர்ட்ட பந்து இல்லைனு கண்டுபிடித்து சொன்னதும் உண்மையாகவே பந்து வைத்திருப்பவர் தன்னோட பந்தை வெளியில எடுத்து எதிரணியின் யார் மேலாவது வீசனும்.. அப்படி வீசும் போது எதிரணியின் யார் முதுகிலாவது பட்டா எதிரணி அவுட்... ஆனால் அதற்கு முதலில் எதிரணி பந்து வைத்திருக்கிற அணியில யாரையாவது தொட்டுட்டா பந்து வைத்திருக்கிற அணி அவுட்டு.. பந்து வைத்திருக்க அணி எதிரணியை துரத்தும் போது “ஹலோ..ஹலோனு....” சொல்லிக்கிட்டே தான் துரத்தனும்... வீசுன பந்து யார்முதுகிலும் படாட்டி எதிரணி வெத்துனதா அர்த்தம்...” என்று நதி ஸ்ரவ்யாவிற்கு பிள்ளையார் பந்து விளையாட்டை பற்றி எடுத்துரைக்க ஸ்ரவ்யாவோ “ஹப்பா.. இவ்வளவு கஷ்டமா இந்த கேம்..” “இல்லை அக்கா.. கேட்கும் போது கஷ்டம் மாதிரி தான் தெரியும். .. ஆனா விளையாடும் போது சூப்பரா இருக்கும்.. அதுவும் விளையாடுறதா இவங்க அடிக்கிற கூத்து இருக்கே... செம்ம காமடியாக இருக்கும்.... அங்க பாருங்களே...” என்று நதி ஸ்ரவ்யாவிடம் தேவ்வின் நண்பன் ஒருவனை காட்டினாள்.. அவன் தன் சட்டையினுள் பந்தை வைத்திருப்பதைபோல் காட்டி எதிராளியை ஏமாற்றிக்கொண்டிருந்தான்.. கபடியை போல் அங்கும் இங்கும் ஓடி போக்குகாட்டிக்கொண்டிருந்தான்... அனைவரும் அவனிடம் தான் இருக்கின்றது என்று நம்பும் வேளையில் இன்னொருவன் பந்தை எடுத்து எதிரணியில் ஒருவன் மீது எறிந்துவிட அது சரியாய் அவன் முதுகை பதம் பார்த்தது.. ஆனால் அவனோ தன்மேல் படவேயில்லை என்று அடித்து கூற அவனது அணியினரும் அவனிற்கு ஆதரவாக பேசினர்.. கடைசியில் முடிவு தெரிந்து கொள்வதற்காக அவன் சட்டையை கழற்றி பார்க்க அவன் பின்முதுகிலிருந்த காயம் அவன் அடிவாங்கியதை உறுதிப்படுத்தியது.. ஆனாலும் அவன் இல்லையென்று வாதாட இதை கண்ட ஸ்ரவ்யா “என்ன நதி இது..??”” “அதான் சொன்னேனே அக்கா... அந்த பந்து அவனை நல்லா பதம் பார்த்தும் கூட அடிபடவே இல்லைனு எப்படி சாதித்தான்னு பார்த்தீங்கள?? இப்படி தான்.. பார்க்கும் போது.. சூப்பரா இருக்கும்..” “ம்ம்.. நல்லா தான் இருக்கு... “ என்றபடி நதியோடு அமர்ந்து அவர்களது விளையாட்டை பார்க்கத்தொடங்கினாள் ஸ்ரவ்யா... முதலில் விளையாட்டை ரசித்தபடியிருந்த கண்கள் பின் தேவ்வை மட்டுமே கவனிக்கத்தொடங்கியது.. புழுதி மண்ணில் பிரண்டு எழுந்து அவன் விளையாடும் அழகை கண்டவளுக்கு ஏதேதோ எண்ணங்கள்... அதுவும் அவன் வழமைக்கு மாறாக அரைக்காற்சட்டையும் சற்று தடிமனான முழுக்கை சட்டையும் அணிந்துகொண்டு தன் நண்பர்களோடு சிரித்து பேசி விளையாடுபவனை கண்டவளுக்கு மனதில் இனம்புரியாத குறுகுறுப்பு... இதை ரசித்தபடியிருந்தவளை உலுக்கினாள் நதி.. “அக்கா. வாங்க போகலாம்... இருட்ட ஆரம்பிச்சிருச்சு...” “அவங்களோடயே போகலாமே நதி...” “நாம இங்க வந்தோம்னு தெரிந்தது அவ்வளவு தான்.. எங்க அண்ணன் ஆடித்தீர்த்திடுவான்...வாங்க போகலாம்..” என்றபடியே ஸ்ரவ்யாவை இழுத்து சென்றாள் நதி.. வீட்டிற்கு சென்று சுடுநீரில் குளித்துவிட்டு தேவ்வின் அன்னை கொடுத்த இஞ்சி டீயை குடித்தவளுக்கு அப்போது தான் உடல் குளிரை உணரத்தொடங்கியது... தான் கொண்டு வந்திருந்த இன்னொரு ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டவள் தேவ்வின் அன்னையை தேடிச்சென்று அவரோடு கதைத்தபடியிருந்தாள்... சற்று நேரத்தில் தேவ்வும் மற்றவர்களும் வந்துவிட தேவ்விடம் ஸ்ரவ்யா “அப்பு... நாளைக்கு ...” “ஸ்ராபரி கார்டன் போறோம்.. அதற்கு முதல்ல இன்னொரு இடத்துக்கு போறோம்..” “எங்க...??”என்ற ஸ்ரவ்யா ஆவலுடன் கேட்க தேவ்வோ “அது சப்ரைஸ்.. காலை ஆறரைமணிக்கு கிளம்பனும்..” “அவ்வளவு ஏர்லியாவா??” “ஆமா சூட்டி.. அப்போ தான் அந்த இடத்தை பார்க்க நல்லா இருக்கும்...” “ம்ம்...” “சரி நீ சாப்பிட்டு சீக்கிரம் தூங்கு... மற்றவங்களையும் சீக்கிரம் தூங்கச்சொல்லு.. சரியா..” என்று கேட்க சரியென்று தலையாட்டியவள் உணவுண்டுவிட்டு மொபைலில் அலாரம் வைத்துவிட்டு உறங்கச்சென்றாள்.. காலையில் அனைவருக்கும் முதலாய் எழுந்து தயாரானவள் ஒருவித பரபரப்புடன் இருந்தாள்.... தேவ் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் தயாரானதும் அவர்களுக்காக அவன் ஒழுங்குபடுத்தியிருந்த வேனில் அனைவரும் கிளம்பினர்.. ஸ்ரவ்யாவோ வழிநெடுகிலும் எங்கு போகிறோம் என்று கேட்டபடிவர தேவ்வோ சற்று நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறியே அவள் பொறுமையை சோதித்தான்.. கடைசியாக வேன் ஓரிடத்தில் நிற்க கீழே இறங்கியவள் தான் கண்டவற்றை கண்டு உறைந்து நின்றாள்... சுற்றிலும் பச்சைபசேலென்று மலைகளும் புல்நிலங்களுமாயிருக்க அதன் நடுவே பெரிய ஏரியொன்றிருந்தது... மலைகளும் பச்சை வெளிகளும் வெண்பனியால் மறைக்கப்பட்டிருந்தது... அந்த ரம்மியமான காலைப்பொழுதில் அந்த காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு புத்துணர்ச்சியாகவும் இருக்க அதன் அழகை ரசிக்கத்தொடங்கியவள் காமெராவை தேவ்வின் கையில் கொடுத்து அந்த இடத்தின் அழகை புகைப்படங்களாய் சேமிக்கக்கூறினாள்... புற்களின் மீதிருந்த பனித்துளிகளை தன் பாதங்களாய் நசுக்கியபடியே அந்த புல்தரையில் நடைபயிலத்தொடங்கியவளை அங்கிருந்த சிறு மரத்தின் அசைவு கூட கவர்ந்திழுத்தது.. வெயிலும் அல்லாத இருளும் அல்லாத அந்த வானிலை அவளை அள்ளிக்கொண்டது... அவள் தனக்குள் மகிழ்வதை கண்டு அவளருகே வந்த தேவ் “என்ன சூட்டி... எப்படி என்னோட சப்ரைஸ்....” “சூப்பர் அப்பு..... அன் எக்ஸ்பெக்டெட்... ஏதோ சொர்க்கத்துல இருக்கமாதிரி இருக்கு...இது என்ன இடம்...??” “இது க்ரேகரி லேக்..... நுவரேலியாவில உள்ள டாப் டுவரிஸ்ட் விசிடட் பிலேசஸ்ல இதுவும் ஒன்று...ஏர்லி மார்னிங்...இங்க வியூவ் சூப்பராக இருக்கும்.. அதான் காலையிலேயே இங்க கூட்டிட்டு வந்தேன்... வா லேக் கிட்ட போகலாம்..” என்று கூறி அவள் கைபிடித்து கீழே அழைத்து சென்றான் தேவ்..மற்றவர்களை அபி கவனித்துக்கொள்ள ஸ்ரவ்யா தேவ்வோடு இருந்தாள் . ஏரியினருகே வந்ததும் அங்கிருந்த கைப்பிடியை பிடித்து அதில் சாய்ந்தபடி அந்த காலை நேர அழகை ரசிக்கத்தொடங்கினாள் ஸ்ரவ்யா... சூரியனின் பொற்கிரணங்களே தென்படாத பனிசூழ்ந்த அந்த காலை வேளையும் குளிரும் இயற்கையின் விந்தையை பறைசாற்றியது.... பச்சை மலைகளை மறைத்து நின்ற வெண்பனிகள் திரைபோலல்லாது அம்மலைகளுக்கு வெண்ணிற அணிகலன்களாய் பொருந்திநின்றது.... கண்களை இத்தகைய நளினம் மறைத்துநிற்க ஸ்ரவ்யாவிற்கோ இவற்றைவிட தன்னவனின் அருகாமையே அவளை இம்சித்தது.... தேவ்வோ அவளுக்கு ஒவ்வொரு இடமாய் சுற்றிக்காட்ட அவளோ அதை உணரும் நிலையில் இல்லை.. அவள் மனமோ இப்போதே காதலை கூறிவிடு என்று எடுத்துரைக்க அறிவோ வேண்டாம் என்று தடுத்தது..... வெகுநேரமாய் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்றுணர்ந்த தேவ் “சூட்டி என்னாச்சு.. ரொம்ப குளிருதா??” “இ..இல்லை... இங்க போர்ட்டிங் இருக்கா .??” “ஆமா இருக்கு.. எட்டுமணிக்கு மேல இருக்கும்.... அதோடு அங்கபாரு..” என்று எதிர்புறம் காட்டியவன் “அங்கேயிருக்கிற ரிசோட்டுல இருந்து பார்த்தா இந்த வியூவ் சூப்பரா இருக்கும்னு சொல்லுவாங்க... அதையும் ஒரு நாள் பார்த்திடனும்..” என்று கூற ஸ்ரவ்யாவும் அவன் கூறியதை மனதில் குறித்துக்கொண்டாள்... மற்றையவர்களும் அவர்களிருந்த இடம் வந்திட அனைவரும் அங்கு சிறிது நேரம் அமரலாம் என்று அபி கூற மற்றவர்களும் அதை ஏற்றனர்... அப்போது அபி “ டேய் மச்சான்.. என்ன இடம்டா இது.. ப்பா... இப்படி பார்க்கும் போது ஆளை தூக்குதே...” என்று கேட்க அனைவருக்கும் அந்த இடம் பற்றி கூறினான்.. அப்போது அபி “நான் கண்டுபிடிச்சிட்டேன்..”என்று கூற அக்ஷய் “என்னத்தையடா கண்டுபிடித்த??” “அதை நான் சொல்றேன்..” என்று கபிலன் முந்த அவனை முறைத்த அபி “நீ என்னை டேமேஜ் பண்ண போறனு தெரியும்... ப்ளீஸ் நல்ல மூட்ல இருக்கேன்..இன்னைக்கு ஒரு நாளைக்காவது விட்டுடு...” என்று அபி கூற முபாரக்கோ “மச்சி... கபி செல்லட்டுமே டா... நீ நினைச்சதை உன்ன விட அவுன் தான் செரியா சொல்லுவான்.. கபி நீ செல்லு பங்கு....” என்று முபாரக் அபிக்கு எதிராக கபிலனுடன் கைகோர்த்தான்... தேவ்வோ “பாவம்டா... இன்னைக்கு ஒருநாள் அவனை விட்டுடுங்கடா...” என்று தேவ் அபிக்காக பரிந்து பேச அப்போது தேவ்வின் நட்புபட்டாளத்திலிருந்த பெண் நட்பான நிம்மி “டேய்... அவனை விடாதீங்கடா.. அவன் நிச்சயம் ஏதாவது ஏடாகூடமாக தான் யோசிச்சிருப்பான்... கபி.. நீ ஆரம்பி. “ “நிம்மி. சந்தர்ப்பம் பார்த்தா பழிவாங்குற?? இருடி.. உன்னை இன்னொரு நாள் கவனிச்சுக்கிறேன்..” என்று அபி மனதினுள்ளே கருவ கபிலன் தன் பணியை ஆரம்பித்தான்.. “மச்சான் நம்ம அபி இந்த லொகேஷனை பார்த்ததும் என்ன நினைச்சிருப்பான்னா...” என்று கூறி நிறுத்தியவன் அபியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நிம்மியை ஒரு பார்வை பார்த்தான் கபிலன்.... அதை கண்டு பயந்த அபி கபிலனிடம் கண்களால் வேண்டாமென்று கெஞ்ச அவனோ இன்று உன்னை விடுவதாயில்லையென்று கண்களால் கூறியவன் “அதாவது இப்படியொரு லொக்கேஷனுல மனசுக்கு பிடித்த பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணா எப்படி இருக்கும்னு யோசிச்சிருப்பான்.. என்ன அபி நான் சொன்னது கரெக்ட் தானே..” என்று கேட்க அபிக்கு அப்போது தான் சுவாசம் சீரானது... ஆம் இல்லையென்று இருபுறமும் தலையாட்டிவனை கண்ட கபிலன் “என்னடா தலை எல்லா ஏங்கில்லயும் ஆடுது... சரியில்லையே...நிம்மி...” என்று கபிலன் நிம்மியை அழைக்க அவனை முந்திக்கொண்டு அபியே “ஆமானு சொன்னேன்டா...” “ஓ.. அப்படியா... சரி அப்போ நிம்மிக்கிட்ட நீ சொல்லுறியா... இல்லை... நான் சொல்லவா..??” என்று கபிலன் கேட்க நிம்மியோ “என்ன கபி... என்ன சொல்லபோற??” என்று கேட்க அபியோ இப்போதே கூறிவிடுவது உசிதமென்று எண்ணியவன் தன் உள்ளத்தை பாடலாகவே பாடினான்... காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பாயா இல்லை அடிப்பாயா நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா இல்லை மிதப்பேனா நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா மறிப்பேனா என்று அபி பாட நிம்மியோ அதிர்ந்துவிட்டாள்.. இவ்வாறு அபி அனைவர் முன்னிலும் தன் காதலை வெளிப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை... “நீ.. நீ... என்ன சொல்லுற??” என்று நிம்மி குரலில் நடுக்கத்துடன் அபியிடம் கேட்க அவனோ மீண்டும் பாடத்தொடங்கினான்.. ஆ.. எப்படி நான் சொல்வேன் அட எப்படி நான் சொல்வேன் என் காதலை எப்படி நான் சொல்வேன்.... என்று மீண்டும் அபிபாட நிம்மியோ அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்... அதை கண்டு அபியின் முகம் வாட கபிலனோ “டேய் எழுந்து போடா... அவ எல்லாரும் இருப்பதால அன்கம்பர்டபலா பீல் பண்ணியிருப்பா... போ.... போய் பேசு...” என்று கபிலனும் தேவ்வும் அவனை உந்த அபியும் நிம்மியிடம் பேச எழுந்து சென்றான் ... நிம்மி கைகளை கட்டிக்கொண்டு ஏரியை வெறித்தவளருகே வந்து நின்ற அபி தயக்கத்துடன் நிம்மி என்று அழைக்க அவளோ அவனை திரும்பி பார்த்தவள் அவன் எதிர்பாராத வேளையில் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.. அவள் செயலில் முதலில் அதிர்ந்தவன் “நிம்மி... உனக்கு...” “உனக்கு இதை என்கிட்ட சொல்ல இரண்டு வருஷம் தேவைபட்டுச்சுல்ல??” என்று நிம்மி கேட்க அதிர்ந்தவன் “அப்போ. நீயும்...” “ஏன்டா உன் மனசுல இருப்பதை இத்தனை நாட்களாக சொல்லவில்லை??” என்று நிம்மி அவன் மார்பில் செல்லமாய் அடித்தபடியே கேட்க அவளை அணைத்தவன் “எப்படி நான் சொல்வேன்... அடி எப்படி நான் சொல்வேன்...என் காதலை எப்படி நான் சொல்வேன்..” என்று மீண்டும் அவன் பாடலாக பாட நிம்மியோ “ஓ... சாருக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணுறதுனு தெரியாது...” “அவள் கண்ணை பார்த்து சொல்வேனா இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா அவள் எதிரில் நின்று சொல்வேனா இல்லை ஒளிந்து கொண்டு சொல்வேனா நான் பேசின் நடுவே சொல்வேனா இல்லை மௌனம் காத்து சொல்வேனா நான் சுத்தத் தமிழில் சொல்வேனா இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா அடி சொல்லிதான் விடுவேனா இல்லை சொல்லாமல் தவிப்பேனா…” என்று பாடியவனை இறுக அணைத்துக்கொண்டவள் எக்கி அவன் இரு கன்னத்திலும் முத்தமிட அதில் லயித்தவன் “உள்ளத்தை நீ தந்தாய் உன் உள்ளதை நீ தந்தாய் என் இடம் உன் உள்ளதை நீ தந்தாய் என் உயிரை போல காப்பேனா இல்லை உயிரை கொடுத்து காப்பேனா உன் உள்ளம் என்றே நினைப்பேனா என் உலகம் என்றே நினைப்பேனா அதை குழந்தை போல வளர்ப்பேனா நாய் குட்டி போல வளர்ப்பேனா என் கற்பை போல மதிப்பேனா இல்லை கடவுள் போல துதிப்பேனா அதை எனக்குள்ளே வைப்பேனா என்னை அதற்குள்ளே வைப்பேனா..” என்று ஒற்றை பாடலிலேயே தன் இரு வருட காதலை தன் மனம் கவர்ந்தவளிடம் பரிமாறினான் அபி.. அவனும் பலமுறை எவ்வாறேனும் தன் காதலை நிம்மியிடம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறான்.. ஆனால் எங்கே அவள் தன் காதலை மறுத்துவிட்டால் இருவருக்கும் இடையில் தொடரும் நட்பும் துண்டிக்கப்பட்டு விடுமோ என்று பயந்தான்... அதனாலேயே இத்தனை நாட்கள் காதலை சொல்லாமல் இருந்தான்... ஆனால் இன்று அவன் எதிர்பாராவிதத்தில் காதலை வெளிப்படுத்துவோமென்று அவன் கனவில் கூட எண்ணவில்லை... “நிம்மி.. நான் உன்னை லவ் பண்ணது??” “எனக்கு தெரியும்டா... நீ கபிலன்கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்..” “எப்போ...” “காலேஜ் லெக்சர்ஸ் முடிந்ததும் கபி உன்னை வம்பிழுத்துட்டு இருந்தான்.. நான் அங்கில்லை அப்படீங்கிற தைரியத்துல சாரும் ஆமா நான் நிம்மியை லவ் பண்ணுறேன்னு உளறிட்டீங்க.. நான் ஏதோ எடுக்க கிளாஸிற்கு வந்தப்போ தான் இது என் காதுல விழுந்தது... நீ சொன்னப்போ எனக்கு ஷாக் தான்.. ஆனா உன்னை எனக்கு பிடிக்கும்டா... அதனால நீ வந்து சொன்னா மற்றதை பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்... ஆனா அதுக்கு பிறகு என்னை அறியாமலேயே உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன்... அது ஏன்னு என்னோட மனசுக்கு புரியலை.. ஆனா போகப்போக தான் காதல்னு புரிந்தது.... நீ எப்போ வந்து சொல்வனு இரண்டு வருஷமாக காத்திருந்தேன்.... ஆனா நீ அதை பற்றி கண்டுக்கொண்டதாக தெரியலை....இன்னைக்கு கபி மட்டும் ஆரம்பிச்சிருக்காமல் போயிருந்தா இப்போ கூட நீ சொல்லியிருக்கமாட்ட..” என்று அவன் மார்பில் செல்லமாய் அடிக்க அவள் முன்னெச்சியில் தன் இதழ் பதித்தவன் “சாரிடி..எங்க நீ மறுத்திடுவியோங்கிற பயத்துல தான் நான் இத்தனை நாளாக சொல்லவில்லை.. சாரிமா.” “சரிசரி.. பிழைத்து போ.... ஆனா ப்ரபோஸ் பண்ணும் போது கிப்ட் கொடுக்கனும்... எங்க என்னோட கிப்ட்...” என்று நிம்மி கேட்க என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவன் தன் ஜர்சியை தடவிப்பார்க்க அதில் ஒரு சிறு பை இருந்தது... அதை எடுத்தபார்த்தவன் அதிர்ந்தான்... அது அபி நிம்மிக்கென்று வாங்கிய ஒரு சில்வர் மோதிரம்.. அது அவன் அறையில் தான் இருந்தது.. அது எப்படி இங்கே என்று யோசித்தவனுக்கு காலையில் தேவ் அபியிடம் ஒரு பொதியை கொடுத்து அவனது பாக்கெட்டில் வைக்கச்சொன்னது நினைவில் வந்தது.. இவை அனைத்தும் தம் நட்புக்களின் பிளான் என்று புரிய அவர்களுக்கு மானசீகமாய் நன்றி கூறியவன் அந்த இதயச்சுருக்கம் பதிக்கப்பட்ட சில்வர் மோதிரத்தை நிம்மியின் கையில் அணிவித்தான்... அதை பார்த்தவள் மீண்டுமொருமுறை அவனை கட்டியணைத்தாள்.... பின் இருவரும் நண்பர்களிருந்த இடம் நோக்கிவர அனைவரும் இருவருக்கும் தனித்தனியே வாழ்த்து சொல்லினர்.. ஸ்ரவ்யா நிம்மிக்கு வாழ்த்து சொல்ல அதை ஏற்றவள் ஸ்ரவ்யாவின் காதில் “சூட்டி.. இவனே இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டான்... உன் ஆளு இவனை விட மோசம்... நீயே களத்துல இறங்கிரு...”என்று குசுகுசுக்க ஸ்ரவ்யாவும் சிரிப்புடனே அவள் கூற்றை ஏற்றாள்... பின் அனைவரும் அங்கிருந்து கிளம்பி ஸ்ராபரி தோட்டம் சென்றனர்.... இவ்வாறு நினைவுகளில் உழன்றவனை நித்திராதேவி ஆட்கொள்ள தான் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கத்தொடங்கினான் தேவ்.... [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 8
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN