இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை...
மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக அஜயிற்கு அழைத்தான் தேவ்..
தேவ்வின் அழைப்பை ஏற்ற அஜய்
“ஹாய் தேவ்... சொல்லுங்க... பேபி எப்படி இருக்கா???”என்று விசாரிக்க நேற்று இரவு நடந்ததனைத்தையும் கூறினான் தேவ்..
அதை கேட்டு பதறிய அஜய்
“தேவ் பேபியை உடனடியாக டாக்டரிடம் காட்டுறது நல்லது... அவ ஏன் மறுபடியும் இப்படி நடந்துக்கிறானு புரியலை .”
“ஆமா அஜய்.. சூட்டி கன்சல்ட் பண்ணுற டாக்டர் யாருனு தெரிந்துக்கொள்ள தான் உங்களுக்கு கால் பண்ணேன்..”
“நான் இப்போவே அபாய்ண்மண்ட் புக் பண்ணிட்டு உங்களுக்கு டீடெய்ல்ஸ் அனுப்புறேன்.. நீங்க சூட்டியை அவர்கிட்ட கூட்டிட்டு போங்க...”
“சரி அஜய்.. லேட் பண்ணாதீங்க...”
“ஓகே... ஒரு ஆப் அன்ட் அவர்ல உங்களை மறுபடியும் காண்டக்ட் பண்ணுறேன்..” என்று கூறிய அஜய் தான் சொன்னபடியே டீடெய்ல்ஸோடு தேவ்வ தொடர்பு கொண்டான் அஜய்...
அன்று மாலையே நேரம் பதிவு செய்யப்பட்டிருக்க மாலை ஸ்ரவ்யாவை வாடகைக்காரில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றான் தேவ்...
ஸ்ரவ்யாவை பரிசோதித்த மனநல நிபுணரிடம் நேற்று அவள் நடந்துகொண்ட விதத்தை கூறினான்.. அவரும் வேறு சில கேள்விகள் கேட்க அதற்கு பதிலளித்த தேவ்விடம்
“இது பயப்படுற விஷயமில்லை... அவங்க ரிக்கவராக ஆரம்பிச்சிட்டாங்க...”
“என்ன சார் சொல்லுறீங்க??”
“ஆமா.. அவங்களோட இந்த நிலைக்கு காரணம் அவங்க மனதை அழுத்திய அதிகபடியான துக்கம் தான்.. எல்லாருக்கும் கவலை இருக்கும்.. அதை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவோம்..சிலர் அழுது தங்களோட துக்கத்தை தீர்த்துப்பாங்க.. சிலர் அதை கோபமாக வெளிப்படுத்துவாங்க... அது அவங்கவங்களை பொறுத்தது.. ஆனா கட்டாயம் துக்கத்தை ஏதோவொரு வழியில் வெளிப்படுத்தும் போது தான் அதோட சுமையை மனதால தாங்கிக்கொள்ளவும் மனதை சமநிலைப்படுத்தவும் முடியும்.... இத்தனை நாட்களாக ஸ்ரவ்யாவுக்கு இருந்த பிரச்சினையே அவங்களோட உணர்வுகளை அவங்க வெளிப்படுத்தாதது தான்... நேற்று அவங்க சந்தோஷமாக இருந்ததால அதோட தாக்கம் அவங்க துக்கத்தை வெளிப்படுத்த உந்தியிருக்கிறது.... அதனோட விளைவு தான்... நேற்று இரவு அவங்க நடந்துக்கிட்ட முறை... தொடர்ந்து அவங்களை மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலமும் அவங்களுக்கு பிடித்ததை செய்வதன் மூலமும் அவங்க மனதிலுள்ள துக்கம் குறையும்.. அந்த சுமை குறைந்தாலே அவங்க முழுதாக குணமடைந்திடுவாங்க....
அவங்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிட்டு போங்க... அவங்களுக்கு பிடித்தவற்றை பேசுங்க.. அவங்கூட தினமும் பேசுங்க... இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போ அவங்க குணமடைய ஆரம்பிச்சிருக்காங்கனா அதுக்கு நீங்க தான் காரணம்..... நீங்க தான் அவங்க நோயிற்கு மருந்து... இது தொடர்ந்தா நிச்சயம் அவங்க முழுதாக குணமடைவாங்க.... இப்போ மருந்தை விட அவங்களுக்கு உங்களோட கவனிப்பு தான் ரொம்ப அவசியம்...” என்று மருத்துவர் கூற அதை ஏற்றவன் மேலும் தெரிந்துகொள்ளவேண்டியவற்றை கேட்டுத்தெரிந்துக்கொண்டு ஸ்ரவ்யாவோடு கிளம்பினான்...
வரும் வழி நெடுகிலும் என்ன செய்வது என்று யோசித்தபடியே வந்த தேவ் அஜயை அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறினான்...
தேவ்வும் ஸ்ரவ்யாவும் வீட்டிற்கு வந்ததும் அவளின் உடல்நிலை பற்றி விசாரித்த சீதாவிற்கு பதில் கூறியவன் அஜயிற்காக காத்திருக்கத்தொடங்கினான்..
அபியோடு வந்திறங்கிய அஜய் தேவ்விடம் விசாரிக்க அவனும் நடந்ததனைத்தையும் கூறினான்...
அவன் கூறியதை கேட்ட அபி
“தேவ்.... அப்போ சூட்டி சீக்கிரமாக குணமாகிடுவாளா??”
“ஆமா அபி... டாக்டர் ரொம்ப நிச்சயமாக சொல்றாரு...”
“இதை கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா தேவ்... இந்த நாள் எப்போ வரும்னு நான் காத்திட்டு இருந்தேன்..” என்று அஜய் கூற
“சீக்கிரம் சூட்டியை குணப்படுத்திடலாம் அஜய்... அவளை குணப்படுத்தி உங்க பேபியாக உங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு...”
“ரொம்ப தாங்க்ஸ் தேவ்... இப்போ அடுத்து என்ன பண்ண போறீங்க??”
“அது தான் யோசிக்கிறேன் அஜய்...” என்று தேவ் கூற அபியோ
“மச்சான்.. ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணுவோமா??”
“என்னடா சொல்லுற??”
“ஆமா மச்சி... சூட்டிக்கு உன்கூட ஊர் சுத்துறதுன ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவல... சோ... ப்ரெண்ட்ஸ் ட்ரிப் ஒன்று ஆர்கனஸ் பண்ணலாம்... நம்ம ப்ரெண்ட்ஸ்.. சூட்டியோட ப்ரெண்ட்ஸ்னு எல்லாரையும் கூப்பிடலாம்..”
“இது நடக்குமா மச்சி. “
“அதெல்லாம் நான் பக்காவா பிளான் பண்ணுறேன்.. உனக்கு ஓகே தானா...”
“எனக்கு ஓகே தான்டா... ஆனா..” என்று அஜயை பார்க்க அவனும்
“எனக்கும் ஓகே தான் தேவ்....”
“ஆனா அஜய் நீங்க இன்னும் வன் வீக்குல கனடா கிளம்பியாகனுமே...”
“இல்லை.. தேவ்.. நான் டிக்கட்ணை கேன்சல் பண்ணிட்டேன்.. இன்னும் வன் மன்த் இங்க தான்..” என்று கூற அபி
“அப்போ நான் ட்ரிப்பிற்கு உரியதை ப்ளான் பண்ணுறேன்.. டூ டேஸ் தான் பிளான் பண்ணமுடியும்... நான் மத்தவங்க கிட்டேயும் பேசிட்டு சொல்றேன்..” என்று கூறினான்...
அப்போது தேவ்வை தனியாக அழைத்து சென்ற அஜய் அவன் கையில் ஒரு டையரியை கொடுத்து
“இது பேபியோட டயரி... அவ மயங்கியிருந்தப்போ இந்த டையரி அவ கையில இருந்ததாக சர்வன்ட் கொடுத்தாங்க....அவளுக்கு இது எவ்வளவு முக்கியம்னு என்னை விட இதை கொடுத்த உங்களுக்கு தெரியும்... அவ நினைவுல கடைசியாக இருந்தது இந்த டையரியாக தான் இருக்கும்... இதை நான் அவ பர்மிஷன் இல்லாமல் படிக்கக்கூடாதுனு இதுவரை படிக்கவில்லை... இதை இப்போ உங்ககிட்ட கொடுக்கனும்னு தோன்றியது... அதான் எடுத்துட்டு வந்தேன்...” என்று தேவ்விடம் கொடுத்தவன் மருத்துவர் கூறியதை பற்றி தன் சந்தேகங்களை விசாரித்தவன் அபியோடு அங்கிருந்து கிளம்பினான்...
அபியும் அஜயும் சென்றதும் ஸ்ரவ்யாவிற்கு உணவை புகட்டிவிட்டு அவளை உறங்க வைத்தவன் அஜய் கொடுத்த டயரியோடு படுக்கையில் விழுந்தான்...
அந்த டையரி அவன் ஸ்ரவ்யாவிற்கு கொடுத்த டையரி... இருவரும் ஸாப்பிங் சென்றிருந்த போது இந்த இரு டையரியையும் வாங்கியவர்கள் தமக்குள் பரிமாறிக்கொண்டனர்... அவனுக்கு அவள் கொடுத்த டையரியில் அவளது கையெப்பமும்.. ஸ்ரவ்யாவிற்கு தேவ் கொடுத்த டையரியில் தேவ்வின் கையொப்பமும் இருந்தது...
அவள் கொடுத்த டையரியை இன்று வரை பொக்கிஷமாய் அவன் பாதுகாக்க அவளும் அதை பாதுகாத்திருப்பது தேவ்விற்கு புரிந்தது..
அதன் அட்டையை திறந்தவன் முன் பக்கத்தில் அவனது கையெழுத்தை பார்த்தான்...
அதை தன் கைகளால் தடவியவன் மறுபக்கத்தை திருப்பினான்..
அதில்
“கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்” என்ற பாடல் வரிகளுடன் ஆரம்பித்திருந்தது...
“இந்த வரியோட தாக்கத்தை உன்னை பார்த்த முதல் நொடியில நான் உணர்ந்தேன்..... அப்பா மேல உள்ள வெறுப்பு ஆண்கள் என்றாலே அவர் மாதிரி தான் இருப்பாங்கனு நினைத்தேன்.. ஆனா அதுக்கு முதல் விதிவிலக்கு என்னோட ஆங்ரிபேர்ட்... அவனுக்கு பிறகு நீ தான் அப்பு...
உன்னை பார்த்ததுமே யார்டா இவன் செம்மையா இருக்கான்னு என்னை அறியாமலேயே நான் உன்னை சைட் அடித்தேன்.. ஆனா அதை நான் உணரவில்லைனு அங்கிருந்து வரும் போது தான் புரிந்தது... அப்பா மேல இருந்த அளவுக்கு அதிகமான வெறுப்பால பசங்களை திரும்பிப்பார்த்ததில்லை... அதை பார்த்து நிறைய பேர் எனக்கு அழகு எனும் திமிர் அப்படி இப்படினு நிறைய பேசியிருக்காங்க... அதையும் மீறி ப்ரபோஸ் பண்ணுறேன்னு வருபவர்களிடம் நான் நின்று பேசியதில்லை... அதனால நான் சந்தித்த பிரச்சினை கொஞ்சம் நஞ்சமல்ல... அதனாலேயே ஆண்கள் என்றாலே வெறுப்பு.. அது உன்னை கண்ட நொடியில ஆட்டம் கண்டது.. அதுவும் நீ ரேகிங் பண்ணுறேன்னு சொல்லி என்னை பாடச்சொன்னப்போ நான் உள்ளுக்குள் எவ்வளவு அழுதேன் தெரியுமா?? துக்கத்தால இல்லை... சந்தோஷத்தால... நான் பாடுறதால என்னோட ஒழுக்கத்தை தன்னோட வார்த்தைகளால் கலங்கப்படுத்தினார் என்னோட அப்பா.... அதனால தான் நான் பாடுவதையே நிறுத்தியியிருந்தேன்... நான் பாடுவதை நிறுத்தினதும் யாருமே என்கிட்ட வந்து ஒரு பாட்டு பாடுனு கேட்கவில்லை... அப்படி யாரும் கேட்கமாட்டாங்களானு நான் ஏங்கிய நாட்களும் உண்டு.. ஆனா ரேகிங்னு நீ பாடச்சொன்னப்போ எனக்கு அந்த ஏக்கம் கவலையெல்லாம் பறந்து போயிடுச்சு... என்டா இவளே பாடமாட்டேன்னு சொல்லிட்டு யாரும் வந்து பாடசொல்லலையேனு கவலைப்படுறாளேனு நினைக்கலாம்... இப்போ பசிக்கலைனா கூட யாராவது வந்து சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்க மாட்டாங்களானு நம்ம மனசு ஏங்கியிருக்கும்.. அது அனாவசியம்னு மூளைக்கு தெரிந்தால் கூட அது மனசுக்கு புரியாது... அது மாதிரி தான் இதுவும்... நீ அப்படி கேட்டது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.. ஆனா அதற்கு பிறகு நீ என்னை மியூசிக் ரூமிற்கு வரச்சொல்லி என்னை மிரட்டுனதும் நீயும் என் அப்பா மாதிரி தானோனு பயந்து தான் நான் மயங்கி விழுந்தேன்...ஆனா மயக்கம் தெளிந்ததும் என்னை நீ கவனிச்சிக்கிட்ட விதம் என்னை குழந்தையாக உணரவைத்தது....
அந்த நொடி என் மனசு உன்னை முழுதாக ஏற்றுக்கொண்டது... ஆனா அதை புரிந்துக்கொள்ள தான் எனக்கு சில நாட்கள் தேவைபட்டது....
அதற்கு பிறகு உன்னோட மாறுபட்ட தோற்றங்களை கண்டு என்னோட காதல் துளிர்விட ஆரம்பித்தது..
உன் பார்வையில் பெண்கள், நட்பு என்று எல்லாமே வேறாக தான் இருந்தது...
நீ என்னை தாங்கி பிடித்த எந்தவொரு நேரத்திலேயேயும் என் மனம் அருவறுப்ப உணர்ந்ததில்லை... அதற்கு காரணம் உன்னோட கண்ணியமான நடத்தை.... ஆளை மொய்க்கும் பார்வைனு நிறைய கழுகுப்பார்வைகளை பார்த்திருக்கேன்.. ஆனா உன்னோட பார்வை யார்கிட்டேயும் அவங்க கண்ணை விட்டு வேறு எங்கேயும் அலைபாய்ந்ததில்லை...
இன்னும் வரை என்கிட்ட கூட உன்னோட பார்வை அலை பாய்ந்ததில்லை..... அந்த ஒரு விஷயமே என்னை ரொம்பவே கவர்ந்திடுச்சு....
இதைவிட உன்னோட வாழ்க்கைமுறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது... ஆடம்பரமில்லாமல் எதையும் அலட்டிக்கொள்ளாமல் நீ வாழும் முறை எனக்கு பிடித்திருந்தது... அதோடு சில விடயங்களில் உனக்கென்று நீ வரைந்திருந்த சில வேலிகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.. ஒருசில வேளைகளில் நீ கொஞ்சம் ஓவராக தான் நடந்துக்கிறியோனு தோன்றும்... ஆனா அதற்கான உன்னுடைய வாதம் அதை சரியென்று ஏற்றுக்கொள்ளச்செய்யும்...
எப்பவும் நீ சொல்லுற மற்றவங்களை காயப்படுத்தக்கூடாதுனு நினைக்கிறவங்க மனசாட்சிக்கு பயந்து வேலை செய்தாலே போதும்... என்ற வார்த்தைகள் எத்தனை உண்மைனு உன்னோடு இருந்த இந்த கொஞ்ச நாட்களில் புரிந்துகொண்டேன்...
அதே கொஞ்ச நாட்களில் உன்னோட கோபத்தோட அளவையும் புரிந்துக்கொண்டேன்.. உன்னோட ப்ரெண்ட் கோபி ஒரு ஜூனியர் பொண்ணுகிட்ட ரேகிங் என்று மிஸ் பிஹேவ் பண்ணது தெரிந்ததும் அத்தனை பேர் முன்னாடியும் அவனை போட்டு புரட்டி எடுத்தபாரு... ப்பா... இப்போ நினைத்தாலுமே உள்ளுக்குள்ள நடுங்குது.. அப்போ தான் உனக்குள்ள இப்படியொரு ஆக்ஷன் கிங் அர்ஜூன் இருந்தாருனு தெரியும் அடியா அது... ஒவ்வொரு அடியும் இடியால்ல விழுந்தது...
ஆனா அதில் ஹைலைட்டான விஷயம் அந்த பொண்ணு உன்கிட்ட வந்து நன்றி சொன்னதும் நீ சொன்ன பாரு ஒரு டயலாக்...
அவன் அப்படி மிஸ் பிஹேவ் பண்ணான்னு அழுதுட்டு ஓடினவ நின்று அவன் கன்னம் வெடிக்கும் அளவுக்கு நான்கு அறைவிட்டு இருந்தேன்னா அவன் மட்டும் இல்லை... யாருமே யார்கிட்டயும் மிஸ் பிஹேவ் பண்ணமாட்டாங்க... ஒவ்வொரு முறையும் என்னை மாதிரி யாரும் வந்து ஹெல்ப் பண்ணமாட்டாங்க... நீங்க தான் நிலைமையை புரிந்துக்கொண்டு அதற்கு எதிராக நிற்கனும்... இனிமேலாவது பயப்படாமல் எதிர்த்து நில்லுங்க... எவனும் அப்படி நடந்துக்கனும்னு நினைக்கமாட்டான்.. எவ்வளவு உண்மைனு எனக்கு புரிந்தது.. குனியக்குனிய கொட்டுற உலகம் இது... எங்க பயம் தான் தப்பான ஆம்பிளைங்களுக்கு பலம்... அப்போ எனக்கு எங்க அம்மா தான் நியாபகத்தில் வந்தாங்க...
அவங்க ரொம்ப தைரியமானவங்க... அப்பா தப்பு பண்ணும் ஒவ்வொரு முறையும் அதை எதிர்ப்பாங்க.... அப்பா வரம்பு மீறி நடந்துக்கிட்டதால தான் அப்பாவை பிரிந்தாங்க.. அதுக்கு ஊரும் உலகம் நிறைய சொன்னது.. ஆனா அவங்க அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை... நேரடியாக பேசுறவங்களுக்கு அவங்க பதிலடி கொடுக்கவும் தவறவில்லை... என்னையும் கூட எதுக்கும் பயப்படக்கூடாதுனு நிறைய அறிவுரைகள் சொல்வாங்க...
ஒருமுறை நான் பஸ்ஸில் போக ஆசைப்பட்டதால அம்மா என்னை பஸ்ஸில் கூட்டிட்டு போனாங்க...
நாங்க போன நேரம் ரொம்ப கூட்டமாக இருந்தது... அப்போ என் பக்கத்துல ஒரு அக்கா நின்றுக்கொண்டிருந்தாங்க.. அவங்களை ஒருத்தர் தொடர்ந்து உரசிக்கொண்ட இருந்தார்... அந்த அக்காவும் விலகி நிற்க முயற்சிப்பண்ணாங்க.. ஆனா அந்த நபர் திரும்பவும் அப்படியே நடந்துக்க அந்த அக்கா ஒரு கட்டத்துல முடியாமல் சத்தமாக அவரை திட்டிட்டாங்க... அதை பஸ்ஸில உள்ளவங்க பார்த்திட்டு சும்மா இருந்தாங்க.... பஸ் கண்டாக்டர் வந்து அந்த நபரை கீழே இறக்கிவிட்டுட்டாரு... அந்த அக்காவும் நாங்க இறங்கவேண்டிய இடத்துல தான் இறங்குனாங்க... அம்மா அவங்ககிட்ட பேசுனாங்க.. அவங்க நடந்துக்கிட்ட முறை சரினு சொன்னாங்க...அதுக்கு அந்த அக்கா இது தினமும் நடப்பது தான்.. இன்னைக்கு நாளைக்கு இன்னொருத்தன் என்று சலிப்புடன் சொல்லிட்டு போயிட்டாங்க... அவங்க போனதும் நான் அம்மாகிட்ட ஏன்மா அந்த அக்கா சத்தம் போட்டதும் பஸ்ஸில இருந்த எல்லாரும் பார்த்தாங்களே தவிர ஏன் யாரும் உதவிக்கு வரலைனு கேட்டேன்....அப்போ அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க இது தான் உலகம்... நம்ம வாழ்க்கையை வாழ்வதும் பாதுகாப்பதும் நம்ம பொறுப்பு... சுற்றி உள்ளவங்க வெறும் பார்வையாளர்கள் மட்டும் தான்.. நமக்கு அநியாயம் நடந்தா நாம தான் தட்டிக்கேட்கனும்... இன்னொருத்தர் வருவார்னு எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
இப்படி எல்லாம் கலந்த கலவையாக தான் நீ இருந்த...அது தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்க காரணம்....
ஆனா இவ்வளவு நல்லவனாக இருந்த உன்னை நான் கரெக்ட் பண்ண பட்டபாடு கொஞ்சநஞ்சமில்லை... ஹப்பா.... ஒரு நிமிஷம் ஏன்டா கடவுளே இவனை இவ்வளவு அம்மாஞ்சியா படைச்சனு அந்த கடவுளை கூட திட்டியிருக்கேன்.. நான் எது சொன்னாலும் அதை காமெடினு சொல்லி மொக்கையாக்கிட்டே இருந்த... ஆனா திடீர்னு ஒரு நாள் வந்து என்னை லவ் பண்ணுறியானு நீ கேட்டப்போ ஹப்படா இப்போவாவது இந்த அம்மாஞ்சிக்கு பல்ப் பத்துச்சேனு நான் சந்தோஷப்படுறதுக்குள்ள நீ சாரி சொல்லிட்டு போயிட்ட... எனக்கு அப்படியே சுவற்றுல முட்டிக்கலாம்னு தோன்றியது....
உன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம்னு வந்தப்போ நீ அபி அண்ணாகிட்ட பேசுனதை கேட்டு எனக்கு ரொம்ப பீலாகிடுச்சு...”என்று ஸ்ரவ்யா எழுதியிருக்க அன்றைய நாளை எண்ணிப்பார்த்தான் தேவ்...
அன்று வழமைபோல் கடைசி இருக்கையில் அமர்ந்து பாடத்தை கவனிப்பது போல் பாவ்லா செய்துக்கொண்டிருந்த தேவ்வை சுரண்டினான் அபி..
“என்னடா???” என்று தேவ் கேட்க
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்டா..”
“சொல்லு..”
“மச்சி... நம்ம பஸ்ட் பென்ச் ரத்னா இருக்கான்ல... “
“ஆமா.. அவனுக்கு என்ன??”
“அவன் சூட்டி நம்பரை கேட்டான்டா...” என்று அபி கூற அவனை திரும்பிபார்த்த தேவ்
“அவனுக்கு எதுக்குடா சூட்டி நம்பர்??”
“அது எனக்கு எப்படி தெரியும்...??”
“நீ கொடுத்திட்டியா??”
“சூட்டிக்கிட்ட கேட்டேன்..கொடுக்கசொன்னா... கொடுத்துட்டேன்..”
“அதை ஏன்டா நீ என்கிட்ட சொல்லலை..”
“அதான் சொல்லிட்டேனேடா..”
“கொடுப்பதற்கு முதல்ல என்கிட்ட ஏன்டா சொல்லலை..”
“இது என்னடா வம்பா போச்சு.. அவ நம்பரை கொடுக்க ஏன்டா உன்கிட்ட பர்மிஷன் கேட்கனும்...”
“அது கேட்கனும்..”
“அது தான்டா ஏன் கேட்கனும்?? இப்போ நிம்மி நம்பரை யாராவது கேட்டாங்கனா என்கிட்ட அனுமதி கேட்கிறதுல ஒரு நியாயம் இருக்கு...சூட்டிக்கு அப்படி இல்லையேடா...”
“இல்லை.. அது... “
“என்னது சொல்லு....”
“மூடிகிட்டு பாடத்தை கவனி..” என்றவனது பதிலில் கடுப்பான அபி
“டேய் நீ என்ன லூசாடா.. ஊருல உள்ள அத்தன பயலுக்கும் புரியிது. உனக்கு ஏன்டா புரியமாட்டேங்குது...”
“என்னடா புரியமாட்டேங்குது...??|
“ஓ மை கடவுளே... இருந்தாலும் இவன் இவ்வளவு மக்கா இருக்கக்கூடாது....”
“டேய் நானே பாடம் புரியமாட்டாங்குதுனு கடுப்புல இருக்கேன்... நீ வேற படுத்தாத...” என்று தேவ் கூற அவனை முறைத்த அபி
“உனக்கு வாழ்க்கையே புரியலை..இதுல பாடத்தை புரிந்து என்ன கிழிக்க போற....??”
“டேய் உளறாமல் விஷயத்தை புரியிற மாதிரி சொல்லு...”
“ம்... சொல்றேன்.. வேற வழி... நீயாக புரிந்துக்கொள்வனு பார்த்தால் அதுக்கு வாய்ப்பில்லைனு புரிந்துவிட்டது..”
“அபி.. விஷயத்தை சொல்வதுனா சொல்லு.. இல்லைனா சட் யோர் மவுத்..”
“அப்படியே சட்டிபானை கவுத்னு சொல்லேன்.. டேய் நீ ஓவரா பண்ணுறடா..” என்று அபி அங்கலாய்க்க அப்போது மணியடிக்க ஆசிரியர் வெளியே கிளம்பினார்..
அவர் சென்றதும் அபி புறம் நன்றாக திரும்பி அமர்ந்துகொண்ட தேவ்
“டேய் இப்போ உனக்கு என்ன பிரச்சினை... ??” என்று தேவ் கேட்க அப்போது அவர்களது மற்றைய நண்பர்களும் அவர்களை சூழ்ந்துகொண்டனர்..
அவர்களும் என்னவென்று விசாரிக்க அபி
“இவனுக்கும் சூட்டிக்கும் நடுவுல என்ன ஓடுதுனு கேட்டேன்டா... அதுக்கு டென்ஷனாகுறான்..” என்று அபி கூற தேவ் புரியாமல் முழிக்க மற்றவர்களோ கள்ளப்புன்னகையை சிந்திக்கொண்டனர்..
அதை கண்ட தேவ்
“டேய் நீங்களும் ஏன்டா சிரிக்கிறீங்க..?? அவன் தான் ஏதோ உளறுகிறான்னா நீங்களும் ஏன்டா.... டேய் அபி உனக்கு இப்போ என்ன பிரச்சினை???” என்று கேட்க அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கியவன் அதன் பின்புறத்தை காட்டி
“நல்லா பாருங்கடா.. Flames போட்டு விளையாடியிருக்கான்.. அதுவும் யார்யாருக்கு தேவ் ராகவ் ஆன்ட் ஸ்ரவ்யா... நல்லா பார்த்துக்கோங்கடா..”
“டேய்...இது சூட்டியோட வேலைடா..அவ தான் எழுதி விளையாடிட்டு இருந்தா..”
“அச்சோ அந்த பச்சை மண்ணு இந்த தத்தி பயலுக்கு புரியவைக்க என்னமா கஷ்டப்பட்டிருக்கு... ஆனா இவனுக்கு தான் இன்னும் பல்ப் பத்தவே இல்லை..” என்று அபி கூற கபியும்
“நீ சொல்றது சரிதான் அபி.. எல்லா விஷயத்திலேயேயும் ஸ்மார்ட்டா இருப்பவன் இந்த விஷயத்துல மக்கு ஸ்டுடண்டா இருக்கான்..”
“கபி என்னடா நீயும் அவன் கூட சேர்ந்துட்ட..” என்று புலம்ப முபாரக்கும்
“அபி செல்றது சரிதான் மச்சான்.. நீ இந்த விசயத்துல அவுல் தான்..”
“ஆளாளுக்கு குழப்புறானுங்களே.. இப்போ என்ன தான்டா பண்ண சொல்லுறீங்க..??” கேட்க அபி
“நீ நேரா போயிட்டு சூட்டிக்கிட்ட அவ உன்னை லவ் பண்ணுறாளானு கேளு..”
“அபி லூசு மாதிரி பேசாத... சும்மா வச்சு ஓட்டுறீங்கனு பார்த்தா தேவையில்லாமல் பேசிட்டு இருக்க..”
“டேய் நாங்க தேவையில்லாமல் பேசவில்லை... நீ போய் அவகிட்ட கேளு.. உனக்கு சரியான பதில் கிடைக்கும்..”
“இல்லை.. என்னால முடியாது...”
“டேய் பயப்படாத டா... உன்னை என்ன கொலையா பண்ண சொன்னோம்? லவ் பண்ணுறியானு கேட்க தானே சொன்னோம்??”
“அபி புரியாமல் பேசாத... நான் ஏதோ நீ சொல்றனு விளையாட்டு தனமாக கேட்கப்போய் அது ஏதாவது தப்பா முடிஞ்சிருச்சினா எங்களுக்கு இடையிலான அந்த அழகான நட்பு உடைந்துபோயிடும்.. வேணாம்...”
“அட யார்டா இவன்... நீ போய் கேளு.. ஏதும் பிரச்சினை வந்தா நாங்க சூட்டிக்கிட்ட பேசுறோம்... “
“வேண்டாம் அபி.. “ என்றவனை அனைவரும் வற்புறுத்தி ஸ்ரவ்யாவிடம் பேச அனுப்பி வைத்தனர்..
தேவ்வோ ஏதும் தவறாக நடந்திட கூடாதென்று உள்ளுக்குள் வேண்டியபடி அபி கூறியபடி தேவ் கேட்டுவிட்டு அவள் பதில் கூறுவதற்குள் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தவன் அபியிடம்
“அப்பவே சொன்னேன்... அவ தப்பா நினைப்பானு.. இப்போ பாரு.. அவளுக்கு என்மேல இருந்த நம்பிக்கை இல்லாமல் போயிடும்.... இனிமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை நம்பமாட்டா... அவளோட நட்பும் முறிந்துவிடும்.. அப்போவே சொன்னேன்.. கேட்டா தானே.. இப்போ உன்னோட சந்தேகம் என்ன நான் அவளை விரும்புறேனா இல்லையாங்கிறது தானே.. ஆமா.. நான் அவளை விரும்புறேன்.... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்..ஒரு நட்பாக அவளை ரொம்ப பிடித்கும்.. ஆனா அவளை எப்போ காதலிக்கத்தொடங்குனேன்னு எனக்கு தெரியலை... ஆனா இது காதல் தானானு எனக்கு தெரியலை.. எங்க இதை அவகிட்ட சொல்லி அவ தப்பா எடுத்துக்கிட்டு என்னுடனான உறவை முறிச்சிப்பாளோனு தான் நான் சொல்லத்தயங்கினேன்... கொஞ்சநாளாக இருந்தாலும் அவ கூட இருக்கனும்னு ஆசைப்பட்டேன்.. இப்போ அதுக்கு உலை வச்சிட்டே.. உனக்கு இப்போ சந்தோஷம் தானே...உன் பேச்சை கேட்டதுக்கு எனக்கு இது தேவை தான்...” என்று தேவ் புலம்ப அவன் முன்னே வந்து நின்றாள் ஸ்ரவ்யா....
அவளை கண்டு அதிர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனது நட்புக்களோ சிரித்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்..
ஸ்ரவ்யாவை தயக்கத்துடன் பார்த்தபடியே
“அது.வந்து சூட்டி...” என்று வார்த்தைகள் தந்தியடிக்க ஸ்ரவ்யாவோ அவன் கண்களை நேரே பார்த்தபடி
“நீ என்னை காதலிக்கிறியா அப்பு..??”என்று கேட்க அவனோ சற்று சங்கடத்துடன் தலைகுனிந்து நிற்க அவளோ
“என்னை பார்த்து பேசு அப்பு.... நீ என்னை விரும்புறியா??” என்று அவள் மீண்டும் கேட்க அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை...
“அது.. அது..”
“நானும் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னால் நம்புவியா அப்பு..??” என்று ஸ்ரவ்யா கேட்க தேவ் கண்களில் அதிர்ச்சியோடு அவளை நோக்கினான்..
“நீ... நீ.. என்ன சொல்லுற??”
“பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப
உன்னை
எதற்கு
உன்னை பிடித்ததென்று
தெரியவில்லையே தெரிந்து
கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே...”
“சூட்டி... நீ..”
“ஆமா அப்பு.... ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ... லவ்... யூ...” என்று ஸ்ரவ்யா கூற அவளை இறுக அணைத்துக்கொண்டான் தேவ்...
அவள் வார்த்தைகளால் தைரியமாய் உரைத்துவிட இவனுக்கோ வார்த்தைகள் மறந்துவிட்டது... இது அவன் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி..
அந்த நினைவுகளில் மூழ்கியிருந்தவனுக்கு இந்தநொடி கூட அச்சம்பவத்தின் தாக்கம் உள்ளுக்குள் ஒரு வித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது...
தொடர்ந்து அவளது டையரியை வாசிக்கத்தொடங்கினான் தேவ்..
“நான் உனக்கு ப்ரபோஸ் பண்ணதும் உன்னோட ரியாக்ஷன் எல்லாம் ரொம்ப கியூட்டா இருந்தது... அன்னைக்கு நான் வித்தியாசமான ஒரு அப்புவை பார்த்தேன்... நீ வெட்கப்பட்டடா... ஹிஹி... இப்போ நினைக்கும் போது கூட ஐ பீல் கிரேஸி.. நிஜமா நீ அப்படி ரியாக்ட் பண்ணுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை.... உன்னை பார்த்து எனக்கு ஒரு மாதிரி ஷையா போயிடுச்சு.. ஆனா அப்பவும் உன் வாயில் இருந்து ஐ லவ் யூங்கிற வார்த்தை வரலை.. நீ பார்க்க தான் பிஸ்தா மாதிரி.. ஆனா லவ் சப்ஜெக்ட்டுல நீ ரொம்ப வீக் தான்.... ஆனா அது கூட எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.. நான் ரொம்ப கெத்தா பீல் பண்ண விஷயம் என்ன தெரியுமா?? என் அப்புவை வெட்கப்பட வச்சிட்டேனேனு ரொம்ப கெத்தா பீல் பண்ணேன்.... நீ ரொம்ப க்யூட்டா.. லவ் யூ ராகவ் பேபி...
இவ்வாறு அந்த பக்கம் முடிவடைய அதன் பின் அவர்களது அனுபவங்களை திகதி குறிப்பிட்டு எழுதியிருந்தாள் ஸ்ரவ்யா..
அவற்றை பிறகு படிக்கலாம் என்று எண்ணியவன் கடைசியாக அவள் எழுதியிருந்த பக்கத்திற்கு சென்றான் தேவ்..
அது சாரி அப்பு... என்று ஆரம்பித்திருந்தது..