அவர்கள் பிரார்த்தனையை முடிப்பத்தற்குள், அவர்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் .. வாங்க வாங்க...

பரசுராம் & பவானி தம்பதிகளின் அருந்தவப் புதல்வனே நம்ம ருத்ரா ஆர்யகன் @ஷிவா . யோகி தாத்தா அப்படிதான் அவனை அழைப்பார்.

பரசுவின் உடன் பிறந்த தங்கைகள் தான் மயூரா & மதனிகாவின் அம்மாமார்கள் . மூத்தவர் சாம்பவி. அடுத்தவர் சாரதா. இருவரையும் தன் உயிர் நண்பர்கள் சந்ரசேகர் & தேவ ராஜ்க்கு கட்டி கொடுத்து தன் தொழிலில் பங்குதாரர்கள் ஆக்கி கொண்டார் பரசுராம்.

மூன்று தலைமுறையாக ஊட்டியில் ரிசார்ட் நடத்தி வரும் குடும்பம் இவர்களுடையது. காபி எஸ்டேட்கள் சிலதும் உபரி தொழிலாக இயங்க, நண்பர்கள் மூவரும் ஒரே குடும்பமாக வசிக்கத் தொடங்கி விட்டனர்.

ருத்ராவின் அம்மா பவானி சந்ரசேகரின் சகோதரி ஆவார். பெண் கொடுத்து பெண் எடுத்து என்றும் இணை பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டனர்.இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த பரசுராம்மிற்கு குடும்ப சொத்து நெறைய இருந்தன.

ஆனால் சொந்தங்கள் என்று பெருமளவில் யாரும் இல்லாததாலே தன் நண்பர்களையே தன் தங்கைகளுக்கு கட்டி கொடுத்து தன் குடும்பத்தை விருத்தி பண்ணிக் கொண்டார்.

தொழில் வளர வளர, மூவரும் தனி நிலம் வாங்கி மூன்று வீடுகள் ஒரே லிங்க்கில் வருமாறு கட்டி கொண்டனர். அவர்கள் வீட்டுக்கு பொதுவாக ஒரு பெரிய ஹால், பெரிய கிட்சன் , பூஜை அறை என வடிவமைத்திருந்தனர்.

வீட்டில் முதலில் பிறந்தது ருத்ரன். அவனுக்கு பின் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சந்ரசேகர்& சாம்பவிக்கு பிறந்தவள் மயூரா. பின் ஓராண்டு கழித்து தேவராஜ் & சாரதாக்கு பிறந்தவள் மதனிகா.

ஒரே ஆண் வாரிசாய் ருத்ரன் நின்று விட எல்லோருக்கும் செல்லமாகி போனான். நீண்ட நாள் பிள்ளை இல்லாத சாம்பவிக்கு அவனே சகலமும் ஆகிப் போனான். இப்போ வரைக்கும் அவன் அத்தை செல்லமே. மயூரா பிறந்தும் அதே நிலையே.

அவளும் சாம்பவியை விட பவானியை தான் அதிகம் நாடுவாள். சாரதாவும் ருத்ரனையே கவனிக்க, மதனிகாவும் மயூராவை போல் அத்தை செல்லம்தான். மூத்தவன் என்பதால் ருத்ராவுக்கு செல்லம் அதிகம் என்றாலும், மூக்குக்கு மேல் கோவம் சுறுசுறுனு வந்துவிடும்.

அதுவும் சிறு வயது முதலில் அவனை எதிர்க்கும் மயூரா என்றால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாய் வந்து ஒட்டிக் கொள்ளும்.அவன் எதை சொன்னாலும் தட்டாமல் செய்யும் மதியை மட்டும் அதட்டி கூட பேச மாட்டான். பய புள்ளைக்கு அம்பிட்டு பாசமாம்.

தினம் தினம் ருத்ரா & மயூரா பஞ்சாயத்து மட்டும் அந்த வீட்டில் ஓயவே ஓயாது. மயிலு பொறந்த நேரம் அப்படி.முரண்களின் நாயகி அவள். எப்போ எது எப்படி செய்வானு அவளுக்கும் தெரியாது. அவளை படைச்ச சிவனுக்கும் தெரியாது. நீர் பூத்த நெருப்பு போல் குணம் கொண்டவன் ருத்ரா. கோவம் அவனோட பிளஸ் ன் மைனஸ். ரொம்ப நல்லவன். மயிலுக்கு மட்டும் பொல்லாதவன்.

ஊட்டி காலேஜ்ஜில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பைனல் இயர் ஸ்டுடென்ட். மயூரா & மதனிகாவும் அதே கோர்ஸ்சில் ஜூனியர்ஸ். பின்ன குடும்ப தொழிலில விருத்தி பண்ண வேணாமா?

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நம்பாலக் கோட்டை சிவனை வழிபடுவது அவர்கள் குடும்ப வழக்கமாகும். அப்படிதான் இந்த பௌர்ணமி பூஜைக்கும் குடும்பமாய் செல்ல, சில்க் ஷர்ட் பிரச்சனை மயூராவிற்காக ஸ்பெஷலாய் காத்துக் கொண்டிருந்தது.

பௌர்ணமிக்கு மட்டுமே பாவாடை தாவணியில் மயூராவையும் , வேஷ்டி சட்டையில் ருத்ராவையும் காணலாம்.

பிற நாட்களில் சுடிதார், டாப் ஜீன்ஸ் இப்படிதான் மயிலு திரியும். ஒரு பூ , நகை நட்டு எதுவும் இருக்காது. அள்ளி முடிஞ்ச கொண்டை , நெற்றி நிறைய விபூதி பட்டை,இவ்வளவுதான் அவள் அலங்காரம்.

இதற்கு எதிர்மாறாக மதனிகா, சீவி சிங்காரித்து, கொழு பொம்மை போல் அழகாக இருப்பாள் . அமைதியானவள். அவளுடைய வாலையும் சேர்த்து அந்த கடவுள் மயூராவிற்கே வைத்து விட்டான் போலும்.

தப்பி தவறி மதி தவறு செய்தாலும் , அறந்தவாலு மயிலுதான் மாட்டிக்கொள்வாள்.அமைதியா இருக்கறவ வால்த்தனம் பண்ணமாட்டாளாம்.நம்ம ருத்ரா கணிப்பு அப்படி.

தங்கை மேல் பாசம் என்பதால் மயிலு எதையும் பெரிது படுத்த மாட்டாள். இப்படி தான் செய்யும் தவறுக்கும் அவள் செய்யும் தவறுக்கும் சேர்த்து ருத்ராவிடம் போராடி போராடி முரட்டுக் குழந்தையாகி விட்டாள்.

ஒரு சில விஷயங்களுக்கு ருத்ரா மயூராவை மட்டும்தான் தேடுவான். அதே போல் அவளும் சில விஷயங்களுக்கு ருத்ரா கூடவே இருக்கணும். இந்த அடி தடிலாம் சகஜம் பா. ரெண்டு பேருக்கும் பொதுவில் மதனிகாதான் செயல்படுவாள்.

மயூரா பூஜை வேளையில், அவள் அத்தை அருகே நிற்க, அவர்தான்,

"போய் அவன் கூட சேர்ந்து முன்னுக்கு நில்லு செல்லம், உன் சிவன் அங்கதான் நல்லா கிளியரா தரிசனம் குடுப்பாரு '' பவானி தள்ளி விட, வேண்டாம் வெறுப்பாய் அவன் பக்கத்தில் போய் நின்றுக் கொண்டாள்.

அதை பார்க்க பார்க்க பவானி கண்கள் நிறைந்தன. ஜோடி பொருத்தம் சூப்பர்னு மனதில் சொல்லிக் கொண்டார்.

இடையில் போன் கால் வர, ருத்ரா பிரிந்து செல்ல, தரிசனம் முடிந்து அனைவரும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து பிரசாதத்தை உண்டு கொண்டிருந்தனர்.ஆண்கள் பிற நண்பர்களை தேடி போய் கதையடிக்க, பெண்கள் மட்டும் அங்கிருந்தனர்.

மயூரா கோவில் பிரசாதமாக தரப் பட்டிருந்த தயிர் சாதத்தை உள்ளே தள்ளிக்

கொண்டிருந்தாள்.

அவன் திட்டிய கோவம் வேற, பசி வேற.. தயிர் சாதம் அமிர்தமாய் உள்ளிரங்கியது. அப்போ அங்க வந்த ருத்ரா அவள் பக்கத்துல உட்கார முயல, சாம்பவி தடுத்தார்.

"டேய் கண்ணா என்னடா நெற்றில விபூதி எங்க? போய் வெச்சுட்டு வா ''னு விரட்ட, அவனோ,

"அதெல்லாம் வேணாம் பவி, தோ இங்க ஒரு சாமியாரினி மொக்கிட்டு இருக்கா பாரு, அவள் கிட்ட வாங்கிக்கிறேன்'' பேசியவாறே அசால்ட்டா மயூரா நெற்றியில் அப்பி இருந்த விபூதியை மோதிர விரலால் தொட்டு தன் நெற்றியில் வைத்துக் கொண்டான் .

" இப்ப ஓகேவா பவி? '' ருத்ரா சாம்பவியை பார்த்து கேட்க, அவருக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

தயிர் சாதத்துடன் போராடிக் கொண்டிருந்த மயிலு , ருத்ரா குறுக்கீட்டால் கைக்கு எட்டிய தயிர் சாதம் தவறி கீழே விழுந்ததில் காண்டு ஆகி விட்டாள்.

"டேய் மாடசாமி என்னடா உன் பிரச்சனை? பசிக்கு சாப்பிட விடறியா? இன்னிக்கு உன்னை உண்டு இல்லனு பண்ணல, நான் மயிலு இல்லடா '' தயிர் சாத தட்டை கீழ் வைத்தவள், அவனோடு சிண்டு பிடிக்கத் தயாரானாள்.

Last edited:
Author: KaNi Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 3🌹 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.