தாயுமானவன் 14

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றிலே கலந்தேன்...
மின்னலில் நனைந்தேன்...
கனவினில் பிறந்தேன்...
உன்னில் என்னை இழந்தேன்..

உன் தாயுமானவன்...

ஆகாஷின் நெஞ்சில் மயூ தன் முகத்தை இன்னும் ஆழமாக புதைத்துக் கொண்டாள்...

அவளது வாய் மட்டும் 'ஆகாஷ் அவன போக சொல்லு... எனக்கு பயமா இருக்கு... அவன் என்னைக் கொன்றுவான்டா... என்னோட பேபிய கொன்றுவான்டா... அவன... அவன... போக சொல்லு ஆகாஷ்... ப்லீஸ்டா...', மயூவின் கண்ணீர் ஆகாஷ் அணிந்திருந்த சட்டையையும் மீறி அவனது நெஞ்சைச் சுட்டது...

ஆகாஷ் மயூவின் கண்ணீரால் மிகவும் துவண்டு போனான்...

அவன் முன்னே நின்றிருந்தவனை அனல் கக்கும் பார்வையை வெளியிட்டான்... இருட்டில் சரியாக தெரியாத அந்த முகம் தெளிவாக தெரிய ஆடித்தான் போனான் ஆகாஷ்...

"வெளிய போ சதீஸ்... ", ஆகாஷ் அடக்கப்பட்ட குரலில் சீறினான்...

"மச்சான் நான் சொல்றத பொறுமையா கேளு... நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்துருக்கன்... " , என்றான் ஆகாஷின் உயிர் தோழன் சதீஸ்...

"எதுவும் தேவையில்லை... வெளிய போ... எனக்கு என்னோட மயூ மட்டும்தான் முக்கியம்... அவளுக்கு முன்னாடி எதுவும் ஏன் உன்னோட நட்பு கூட வேணா... போ...", ஆகாஷின் ருத்திரத்தில் மயூவின் உடல் அதிர்ந்து குலுங்கியது...

சதீஸ் சத்தமின்றி அவ்விடத்தைவிட்டு அகன்றான்...

ஆகாஷ் மயூவை அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப...

"ஆகாஷ் அவன போ சொல்லு எனக்கு பயமா இருக்கு... ", மயூ பிரம்மை பிடித்தவள் போல் அதையே மீண்டும் மீண்டும் பினாத்த ஆகாஷின் விரல் தடம் மயூவின் கன்னத்தில் பதிந்தது...

மயூ அவனையே மலங்க மலங்க பார்த்தாள்...

பின் 'ஆகாஷ் ஐ லவ் யூடா', என்ற முணுமுணுப்போடு அவன் மீதே மயங்கி சரிந்தாள்...

(யாஹூ😍😍😍 மயூ ஆகாஷ்கிட்ட லவ்வ சொல்லிட்டா😌😌😌 ஏய் அரச்ச தக்காளி இனி நீயே நெனச்சாலும் ஆகாஷ் லைப்ல வர முடியாது😚😚😚போ போ😏😏😏 உனக்கு குரங்கு மனுஷன ரெடி பண்ணி வெக்குறன்😉😉😉 நல்ல புள்ளையா அவனையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ🤣🤣🤣)

மயங்கி சரிந்தவளைத் தன் கைகளில் ஏந்தி கொண்டவன் அவளது அறையில் படுக்கையில் கிடத்தினான்...

அழகிய மலர்சோலையாய் காட்சியளித்தவள் வாடிய பயிராய் உருமாறி கிடந்தாள்...

ஆகாஷ் மயூவை விட்டு விலக எத்தனிக்க, அவளோ அவனது சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டு கிடந்தாள்...

கண் மூடி இருந்தாலும் மயூவின் கண்ணிமை நிலைக்கொள்ளாமல் அலைந்து கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது...

ஆகாஷ் தன் கைவளைவில் மயூவை உறங்க செய்தான்... ஆகாஷின் அருகாமை தந்த பாதுகாப்பில் மயூ ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றாள்... அவளது தலையைக் கோதிக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான் ஆகாஷ்...

'மயூ உன்ன அழுத்துற அந்த விஷயம் தான் என்ன... சிரிச்சி பேசினாலும் உன் கிட்ட ஏதோ ஒரு பயம் எப்பயுமே இருக்கு... உன்னோட கடந்த கால வாழ்க்கையில என்னமோ நடந்துருக்க... அது என்னவா இருக்கும்... எப்படி கண்டுபிடிக்கிறது...', யோசித்துக் கொண்டே அந்த அறையை அளந்தான்... கட்டிலின் அருகே கிடந்த மேசையிலிருந்த மயூவின் டைரி அவனின் கண்ணில் பட்டது...

இரவுகளில் மயூ அந்த டைரியைப் பார்த்து அழுவதை அவன் பல நாள் கவனித்திருக்கிறான்...
அப்பொழுதெல்லாம் அவளைச் சமாதானம் செய்து அமைதி படுத்தவே எண்ணியிருக்கிறான்...

இன்று அந்த டைரியின் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள விழைந்தான்...

மயூவின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமாயின், ஆகாஷ் அவளது கடந்த காலத்தை அலசி ஆராய வேண்டும்...

'சாரி மயூ... பெர்மீஷன் இல்லாம உன்னோட டைரிய படிக்க போறன்..' என்றவனை...

'யாரோ சொன்னாங்க அடுத்தவங்க டைரிய படிக்குறது தப்புனு🙄🙄🙄 இப்போ அவங்க என்ன பண்றாங்க🤔🤔🤔' ஆகாஷின் மனம் அவனைக் கேலி செய்தது...

'பார்ரா... மத்தவங்க டைரிய படிச்சாதான் தப்பு... என்னவளோட டைரிய படிக்கறதுல தப்பே இல்லை...' மனச்சாட்சியின் தலையில் தட்டி அடக்கியவன் மயூவின் டைரியின் பக்கங்களைப் புரட்டினான்...

முதல் பக்கத்திலையே அழகிய சிறுமி ஒருவள் பாவாடை சட்டையில் இரட்டை ஜடையோடு அவனுக்குத் தரிசனம் தர... அது மயூதானென அனுமானித்தவன் அந்த குழந்தை சிரிப்பில் தன்னை தொலைத்தான்...

ஆகாஷின் அசைவில் மயூவின் தூக்கம் சற்றே கலைய... அவளது கைகள் தானாக அவனைத் தேடி அலைந்தது...

அவன் பக்கத்தில் தான் இருக்கிறானென உறுதி செய்து கொண்டவள்...

அவன் மீது பாதி படர்ந்த நிலையில் இருந்தவள் தலையை இன்னும் அழுத்தமாக அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு தூங்கினாள்...

'அடியே இராட்சசி கம்முனு இருடி... சும்மாவே இவ பக்கத்துல என்னால கம்முனு இருக்க முடியாது... இதுல இப்டி வேற கொல்றாலே... ' மென்மையாக அவள் நெற்றியில் இதழை பதித்தவன் அவளை அணைத்து கொண்டான்...

ஆகாஷின் அருகாமையில் மயூ சுகமாக உறங்கி போக...
ஆகாஷ் அவளது வாழ்க்கைப் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டினான்...

மயூவின் கடந்த கால வாழ்க்கை ஆகாஷின் மனதைக் கலங்கடித்தது... அவளது கஷ்டங்கள் அவனது மனதை உருக்கி கண்ணீர் விடச் செய்தன...

அந்த ஆறடி ஆண்மகன் தன்னவளின் இன்னலில் தன்னால் பங்கு கொள்ள முடியவில்லையே என வெம்பியது...

டைரியை மூடி அதனிடத்திலே பத்திர படுத்தியவன்... நிர்மலாக உறங்கும் தன்னவளைப் பார்த்தான்...

அந்த பளிங்கு முகத்தில் சோகத்தின் சாயலே இனி இருக்க கூடாது என தீர்மானித்தவனாய்... தான் ஆடிய நட்பெனும் கண்ணாமூட்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எண்ணினான்...

மயூவை இன்னும் நெருக்கமாக தன்னுள் புதைத்து கொண்டவன் சுகமாக கனவுகளோடு உறங்கி போனான்...

நாளைய விடியல் இவர்களின் வாழ்விலும் விடியலைக் கொண்டு வருமா???

சூரியனின் கதிர்கள் முகத்தில் அறைய மயூ தன் தூக்கத்திலிருந்த மெல்ல விழித்தாள்...

இரவில் நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மயூவின் கண் முன்னே வந்து போக...

பயமும் அழையா விருந்தாளியாக அவளைச் சூழ்ந்து கொண்டது...

ஏனென்றே தெரியாமல் அவள் கண்கள் கலங்கியது...

சத்தமின்றி அழ நினைத்தவள் தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போக... சின்ன விசும்பல் அழுகையாக வெடித்தது...

"ஏய் அழுமூஞ்சி ஏன்டி அழற...", தூங்கி எழுந்ததுக்கு அடையாளமாய் கறகறப்பாய் வெளியவந்த ஆகாஷின் குரலில் மயூவின் அழுகை நின்றது...

கண்கள் தெறித்து விடுமளவு விரிந்தது..

மயூவிற்கு தானிருக்கும் நிலை இப்பொழுது தான் உறைத்தது...

ஆகாஷின் மீது பாதி படர்ந்த நிலையில் அவன் நெஞ்சில் அழுத்த புதைந்திருந்த தன்னை எண்ணி வெட்கம் கொண்டவளாய் அவனை விட்டு விலக முற்பட்டாள்...

அதை அனுமானித்தவனாய் மயூவை இன்னும் தன்னுள் இறுக்கி கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான் ஆகாஷ்...

ஆகாஷின் மூச்சுக்காற்று அவள் மேனியில் பட்டுத்தெறிக்க மயூ நெளிய தொடங்கினாள்...

"டேய் எரும என்னை விடுடா... நீ யான் என் பெட்ல தூங்குற... வெளிய போ... ", கோபமாக பேச முயன்று தோற்றவளின் குரல் கிசுகிசுப்பாய் வெளிப்பட ஆகாஷ் சத்தமாய் சிரிக்க தொடங்கினான்...

"ஏய் இன்னொரு தடவ சொல்லுடி..."

"என்னது...ஆகாஷ் வெளிய போ ப்லீஸ்...",
மயூவின் குரல் கொஞ்சுதலாய் மாற...

"ஓகே டார்லிங்... நான் வெளிய போறன்... பட் அதுக்கு முன்னாடி நேத்து நைட் நீ என்கிட்ட சொன்னத திரும்ப சொல்லு...", என்றான் குறும்பாக

"நான் என்ன சொன்னன்... நீ என்ன கேட்ட... ஒன்னும் இல்ல... மொதல்ல வெளிய போ...",மயூ சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்...

(செல்லக்குட்டி நைட் என்ன சொன்னன்னு மறந்துட்டியா😆😆😆 சூப்பர்😚😚😚 நான் கொஞ்சமா ஆகாஷ ஓட்டலாம்🤗🤗🤗)

"பார்ரா.. நைட் என்ன சொன்னனு ஞாபகம் இல்லை... நான் வேணும்னா ஞாபகம் படுத்தவா..."

"ஒரு மண்ணும் வேணாம்... வெளிய போ..."

"போ...போனு... வாய் சொல்லுது... ஆனா உன் கண்ணு போக வேணானு சொல்லுதே... என்ன பண்ணலாம் பொண்டாட்டி... சொல்லு சீக்கிரம்...",
என்றான் படு சீரியஸாக...

விழி விரித்து ஆகாஷைப் பார்த்தவள்...

"யான்டா லூசு மாதிரி உளரிட்டு இருக்க... ப்லீஸ் போ... எனக்கு நீ வேணாம்... போ... எனக்கு என்னோட பேபி மட்டும் போதும்... போ... நான் ஆசப்பட்டது எதும் என் கூட இருக்காது... நீயும் அப்படிதான்... போயிடு... என்னைத் திரும்ப திரும்ப சாவடிக்காத...", மயூவின் கண்கள் பனித்தது...

"ஏய்.. இங்க பாருடி... என்னை பாரு..."

வலுக்கட்டாயமாக மயூவின் முகத்தைத் தன் புறம் திருப்பியவன்...

"என்னை பார்த்து சொல்லுடி நான் வேணா... போயிருனு சொல்லு...

நல்ல கேட்டுக்கோ....

இந்த ஜென்மத்துல நீதான் என்னோட பொண்டாட்டி... அன்ட் இது எனக்கும் உனக்கும் மட்டும் சொந்தமான குழந்த.. புரியுதா...",
என்றான் தீர்க்கமாக...

அசையாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ...

"மயூ... மயூ...", என்றான் மென்மையாக..

அவளிடம் வெறும் விசும்பல் சத்தம் மட்டுமே வெளிப்பட...

"இங்க பாரு மயூ... நீ ரொம்ப குழப்பத்துல இருக்க... நீ என்ன நினைக்குற... உனக்கு என்ன வேணும்னு உனக்கே தெரில... பட் உன் லைப்ல நான் இருக்கனும்... அதுதான் உனக்கும் விருப்பம் புரியுதா...", மயூ புரிந்ததாய் தலையசைக்க...

"தட்ஸ் குட்... இப்ப நல்லா தூங்கி ரெஸ்ட் எடு... எனக்கு கொஞ்சம் வேர்க் இருக்கு... ஓகேவா...", என்றவன் மயூக்குத் தனியே சிந்திக்க நேரம் கொடுத்தவனாய் அவளை விட்டு விலகினான்...

மயூவின் அறையை விட்டு வெளியேறியவனின் முன்னே தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மலைப் போல் குமிந்திருந்தது...

மயூவின் இறந்தகாலம் அதற்கும் சதீஸிற்கும் இருக்கும் தொடர்பு...
அதனை தீர்க்க வேண்டிய வழி...

விடாது சிந்தித்துக் கொண்டிருந்தவனின் தலை தெறித்து விடும் போல் வலிக்க தொடங்கியது..

'இது வேற', என்று நொந்தவன்..

மித்ரவைத் தேடினான்..

(நல்ல தம்பிடா நீ😁😁😁 இப்போதான் அக்கா ஞாபகம் வருதா உனக்கு😏😏😏 இருடி😕😕😕 வெக்குறன் ஆப்பு😏😏😏)

வீடு முழுவதும் தேடியும் மித்ரா எங்கும் காணப்படமால் போக..

'அக்கா எங்க போனாங்க.. இவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போக மாட்டங்களே... அதும் மயூவ பார்க்காம போவ மாட்டாங்களே... இன்னிக்கு என்னாச்சி...', தன்னுள் புலம்பியவனைக் கட்டி இழுத்தது அவன் கைபேசியின் இனியக் குறல்..

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ

மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை

எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

மெல்லிசையாய் அவன் கைப்பேசியின் ரிங்டோன் தீண்டிச் செல்ல சிறுபுன்னகையோடு கைப்பேசியை எடுத்தவனின் முகம் திரையில் மின்னிய பெயரைக் கண்டு சினம் கொண்டது...



தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN