தாயுமானவன் 16

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

சித்தரமே...
என் வாழ்வில் நுழைந்த பெண்ணியமே...
சின்ன சின்னதாய் என் மனதை பறித்த மங்கையவளே...
உன் சிறு புன்னகையில் என்னைத் தொலைக்கிறேன்...
உன் உதட்டின் ஓரம் மீண்டும் பிறக்க இடமென்று கேட்கிறேன்
மின்னலே... உன் தாயுமானவன்...

ஊர் தலைவரும் ருத்ரனின் தந்தையுமான பார்த்திபன் பஞ்சாயத்துக்குத் தலைமைத் தாங்கினார்...

அவரின் கண்டன பார்வை 'உன்னிடம் இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை ருத்ரா...', என்று சொல்லாமல் சொல்லியது...

தவறு செய்திருந்தால் தலைக்குனிந்திருப்பானோ என்னமோ... ஆனால் ருத்ரன்தான் எந்த தவறும் செய்யவில்லையே...

தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தவன் துளசியையும் பார்த்தான்...

அவளைச் சந்தித்து இரண்டாண்டுகள் இருக்கும்...
அப்படியிருக்க திருமண கோலத்தில் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் எனில்....

நம்பி வந்தவளை யாரென்று தெரியாது என்று சொல்லும் அளவு கோழையல்ல இந்த ருத்ரன்... வீரத்தின் ஆண்மையின் பிம்பம் அவன்...

அவன் மீது நம்பிக்கை கொண்டு வந்தவளை இனி காலம் முழுவதும் தன்னில் சரிபாதியாக மாற்ற எண்ணினான்...
அதற்கு இந்த பஞ்சாயத்தும் உதவும் என அவனுக்குத் தெரியும்...

என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலமிடு
என்னை தானே

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவை முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

தெளிந்த மனநிலையில் இருந்ததால்...
'இந்த பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்மதம்' என்ற கேள்விக்கு 'இவள் என்னவள்.. எனக்கு மட்டுமே சொந்தமானவள்', என்று தங்கு தடையின்றி ருத்ரனிடமிருந்து பதில் வந்தது....

துளசி இவனை நிமிர்ந்து பார்க்க ஒரு நிமிடம் இருவரது பார்வையும் கவ்விக் கொண்டது...

ஆதரவற்ற குழந்தை போல் அலைப்புறும் கண்கள்... அவனை அவளுள் கட்டிப் போட்டது...

இதுதான் காதலென்பதா...
வாழ்வில் முதல் முறையாக அவனைத் தென்றல் சுகமாக தீண்டியது போல் தோன்றியது...

'பார்ரா... முறுக்கு மீசைக்குக் கூட காதல் வந்துருச்சி...', அவன் மனசாட்சியே சிரித்து கிண்டல் பண்ண அதன் தலையில் தட்டி அடக்கியவன் பஞ்சாயத்தைக் கவனிக்கலானான்...

யாரும் அறியா வண்ணம் துளசியின் கையோடு தன் கையைக் கோர்த்தவன் அவளைத் தன்னருகில் இழுத்துக் கொண்டான்...

பார்த்திபன் இருவரையும் அவர்களின் கோர்த்திருந்த கைகளையும் மாறி மாறி பார்த்தார்...

பின் முடிவுக்கு வந்தவராய்...

"ருத்ரா ஊரோடு கட்டுப்பாடு என்னு தெரிஞ்சும் நீ இப்டி பண்ணிருக்க கூடாது... பெரியவங்க ஸ்தானத்துல இருந்து ஊங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊர் பஞ்சாயத்து கல்யாணம் பண்ணி வைக்க போது... இனி இந்த பார்த்திபன் உயிரோட இருக்குற வரைக்கும் நீ இந்த மண்ண மிதிக்க கூடாது...", கணீரென்ற குரலில் அவர் சொல்லி முடிக்க அங்கு மயான அமைதி நிலவியது...

இத்தனை நாளால் தங்களுக்குப் பக்க பலமாய் விளங்கிய சின்ன ஜமீன் இனி தங்களோடு இருக்க மாட்டாரா எனும் ஏக்கங்களும்... நல்ல நண்பனை இழக்க போகும் வறுத்தமும் எல்லோர் முகத்திலும் தாண்டவமாடியது...

ருத்ரனின் மனம் மட்டும் நிர்மூலமாக இருந்தது... பிறந்தது முதல் இத்தனை ஆண்டுகள் பெற்றோர், சகோதரர், ஊர்மக்களென பிறருக்காக வாழ்ந்தாயிற்று...

இனி வரும் காலமாவது தனக்காகவும் தன்னை நம்பி வந்த மங்கையவளுக்காகவும் வாழ வேண்டுமென்று நினைத்தான்...

தன் வாழ்வின் திருப்புமுனையும் புதிய அத்தியாயமும் துளசியிடம் இருப்பதாக தோன்றிற்று...

தாயையும் தந்தையையும் குணசீலன் நல்ல முறையில் கவனித்துக் கொள்வான் என நம்பினான்...

அந்த ஊர் அம்மனின் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை ருத்ரனிடம் கொடுத்து துளசியின் சங்கு கழுத்தில் அணிவிக்குமாறு கூறினார் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர்...

துளசியின் தலை நிமிராமல் நிலைத்தை நோக்கி கொண்டிருக்க அவளைச் சீண்டி பார்க்க எண்ணியவனாய்....

"ஏய் நிமிர்ந்து என்னைப் பாருடி.. கீழ என்னா மூத்தா இருக்கு.. வாய பிளந்துட்டுப் பார்க்குற...
சரி எனக்கு ஒன்னு சொல்லுடா செல்லம்.. உன்ன நான் கட்டிக்கவா இல்ல வெச்சிக்கவா...", என்று கண்ணடித்தான்...

பட்டென்று ருத்ரனின் முகத்தை நோக்கியவளின் முகம் கலக்கத்தைச் சுமந்திருக்க கண்ணீர் வரவா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது...

"சரி...சரி.. ரொம்ப முழிக்காத..
உன்ன நான் கட்டிட்டு பொண்டாட்டியா வெச்சிக்குறன்..." என்று கூறியவன் நிதானமாக அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு துளசியை அவனது சரிபாதியாய் மாற்றிக் கொண்டான்...

"என் பொண்டாட்டிக்கு அவ புகுந்த வீட்டுல கிடைக்க வேண்டிய அத்தன மரியாதையும் கிடைக்கனும்... எங்க வாழ்க்க என்னோட முன்னோர்கள் வாழ்ந்த இடத்துலதான் தொடங்கனும்... உங்க தலைவருக்கு சம்மதமானு கேட்டுச் சொல்லுங்க...", என்றான் மிடுக்காக...

பார்த்திபன் சரியென தலையசைக்க புது மண தம்பதிகள் ஜமீன் கோட்டைக்கு தகுந்த மரியாதையோடு அழைத்துச் செல்லப்பட்டனர்...

ஊர் மக்கள் அனைவரும் இனி ருத்ரனைப் பார்க்க முடியாது என்ற காரணத்தால் தம்பதிகளைப் பின்தொடர்ந்து சென்றனர்...

கோட்டையில் ருத்ராவிற்கும் துளசிக்கும் ஆலம் சுற்றப்பட்டு அவள் ஜமீன் வம்சத்தின் இளைய மருமகளாக அந்த கோட்டையில் பிரவேசித்தாள்...

நேரம் மெதுவாக இரவை நோக்கி நகர்ந்தது...

துளசியைப் பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது...
அவளே தேடி வந்த வாழ்க்கைதான்...
அவள் உள்ளம் கவர்ந்தவன்தான்....

இருந்தாலும் பெண்களுக்கே உள்ள நாண உணர்வும் உடனிருக்கும் பெண்களின் கேலி கிண்டலும் துளசியின் கன்னத்தை சிவக்க வைத்தது...

கையில் பால் சோம்போடு ருத்ரனின் அறையில் தனித்து விடப்பட்டவளின் மேனி நடுங்கியது...

"ஹலோ மேடம்... அங்கயே நின்னுட்டு என்ன பண்ண போறிங்க.. பக்கத்துல வந்தா பேசலாம்... நீயே வரியா இல்ல நான் வரட்டா...", என்றான் வேண்டுமென்றே வரவழைத்த கடுமையான குரலில்...

ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்தவள் இன்னும் பயம் கொள்ள நிற்க முடியாமல் தடுமாறினாள்...

அடுத்த அடி எடுத்து வைக்க முயன்றவளின் கால்கள் நிலத்தில் படாமல் போக யோசனையில் நிமிர்ந்தவளின் முகத்தருகே ருத்ரனின் முகம் தெரிய தன் விழிகளை அகலமாக விரித்தாள்...

"என்னாடி முட்டக்கண்ணி...", என்பதாய் ருத்ரன் தன் புருவத்தைத் தூக்க ஒன்றுமில்லையென தலையசைத்தவள் மௌனமானாள்...

துளசியை மென்மையாக மெத்தையில் கிடத்தியவன்
"ஒன்னும் நினைக்காம கண்ண மூடி தூங்கு... இல்லாத மூளைய வெச்சி ரொம்ப யோசிக்காத புரிஞ்சத... "

அவள் புரிந்ததாய் தலையசைக்க...

"என்ன புரிஞ்சது...", என்று கேட்டான் குறும்பாக...

திருதிருவென விழித்தவள்
தலை இடமும் வலமுமாக தானாக அசைய தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்...

நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்க துளசியின் விசும்பல் ஒலி ருத்ரனின் நித்திரையைக் கலைத்தது...

'இவ எப்போ எழுந்தா...', யோசனையோடு அவளின் தோளைத் தொட்டான்...

காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவள் ருத்ரனை ஒரு கணம் திரும்பி பார்த்து முழித்தாள்...

பின் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு விட்ட இடத்திலிருந்து தன் அழுகையைத் தொடர்ந்தாள்..

"ஏய்.... என்னாச்சிடி.. இப்ப எதுக்கு அழுவற..."

துளிசியிடம் அழுகை மட்டுமே பதிலாக கிடைக்க...

"இப்ப என்ன வேணும்னு சொல்றியா இல்லையா... என்ன இந்த கல்யாணம் பிடிக்கலையா இல்ல என்னையே பிடிக்கலையா...", ருத்ரன் அடிக்குரலில் சீற..

"அம்மா...அம்மா...", என்றவளின் வார்த்தைச் சிக்கியது...

"அம்மா ஞாபகம் வந்துருச்சா..?? அம்மாவ பார்க்கனுமா சொல்லு நான் உன்னைக் கூட்டிட்டு போறன்... வரியா...", என்று ஆதுரமாய் அவள் தலையைக் கோதினான்...

மீண்டும் துளசியிடம் மௌனமே மொழியாக...

வலுகட்டாயமாக அவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன்...

" என்னனு சொன்னாதான் தெரியும்டி.. இப்டி கம்முனு இருந்தா நான் என்னனு நினைக்கிறது...",

"அது வந்து.... அது வந்து.. நா...ன்.... திரும்ப வீட்டுக்கு போக முடியாது...", என்றாள் திணறலாக...

"சரி போக வேண்டாம்.. இப்போ தூங்கு..."

"எனக்கு தூக்கம் வரல.. நீங்க தூங்குங்க...", என்றாள் மென்மையாக...

"எனக்கும் தூக்கம் வரலையே... என்ன பண்ணலாம்... சரி நீ எப்படி என்னை தேடி வந்த... எப்படி லவ் பண்ண எல்லாதையும் ஒன்னு ஒன்னா சொல்லு... நான் சமத்துப்பிள்ளையா கேட்டுக்குறன்.. ஓகே வா...", என்றான் கிண்டலாக...

துளசிக்கு பதட்டத்தில் வார்த்தையே வரவில்லை...

அவளது அவஷ்தையைக் கண்டு நகைத்தவன்...

"என்னமா வார்த்தைக்குப் பதில் காத்துதான் வருதா???" என்றான்...

"என்ன பண்ணலாம்..." என்று தீவிரமாக யோசித்தவன்... துளசி எதிர்பார சமயம் அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்...

"இப்ப சொல்லு... நீ சொல்லி முடிச்சோன நம்ம ரெண்டு பேரும் தூங்கலாம்... ஓகேவா... இப்போ ஸ்தார்ட் மியூசிக்...", என்றவன் இன்னும் வசதியாக அவள் மடியில் படுத்துக் கொண்டான்...

இவன் விடாக்கண்டன்.. சொல்லாமல் விட மாட்டான் என தெளிந்தவள்.. எப்படி ருத்ரனிடம் வந்து சேர்ந்தாள் என சொல்ல தொடங்கினாள்...

துளசியின் தந்தை பெண்களுக்கென தனிதாய் எந்தவொரு உரிமையும் இல்லையென நினைப்பவர்... தன் மனைவி மகளென்பவள் அவருக்கு பணிவிடை செய்யவே இருப்பவர்கள் என இறுமாப்புடன் திரிந்தார்...

துளசி மிகவும் சிரமப்பட்டே கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தாள்...

கல்லூரியில் முதல் நாளே அவளைக் கலாட்டா செய்த சில மாணவர்களை ருத்ரன் புரட்டி எடுக்க துளசிக்கு அவன் மீது ஈர்ப்பு உண்டானது...

பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக அத்தனை உரிமையும் உள்ளதென்று கருத்தை வெளியிடும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக துளசியின் மனதை வென்றான்...

கனவிலே அவனோட வாழ தொடங்கினாள்..

ஆனால் ருத்ரன் அவள் மீது காதல் இருப்பதைப் போல் எந்தவொரு சந்தர்பத்திலும் வெளிகாட்டியது இல்லை... எனவே துளசி அவள் காதலை ருத்ரனிடம் சொல்லவே இல்லை...

இப்படியாக அவர்களது கல்லூரி வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வர துளசிதான் மிகவும் தவித்துப் போனாள்...

இனி ருத்ரனைப் பார்க்கவே முடியாது என்ற எண்ணமே அவளை இரணமாய் கொன்றது...

இதுதான் தனக்கு விதிக்கப்பட்டது போலும் என மனதைத் தேத்திக் கொண்டாள்...

ருத்ரனின் சின்ன சின்ன அசைவுகளையும் அவனது நினைவுகளையும் மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் இருத்திக் கொண்டு வாழப் பழகினாள்...

காலம் யாருக்கும் நிற்காமல் ஓட... துளசிக்கு அவளது தந்தை கட்டாய திருமணம் செய்து வைக்க பார்த்தார்...

அவள் எவ்வளவு கெஞ்சியும் அவர் செவி சாய்ப்பதாய் இல்லை...

திருமண நாளும் நெருங்கியது... துளசி நடைப்பிணமாய் மாறினாள்...

அவளது தாய்க்கு நடப்பது யாவும் புரிந்தாலும் அதை தடுக்கதான் முடியவில்லை...

வாயில்லாப்பூச்சியாய் கணவனின் சொல்லுக்கு அடங்கி போகியே பழகியவர் மகளுக்கு ஆதரவு கரம் நீட்ட முயற்சிக்கவில்லை....

திருமண நாளும் விடிந்தது..

ருத்ரனைத் தவிர்த்து வேறொருவனுக்குக் கழுத்தை நீட்ட அவள் மனம் இசையவில்லை..

சாவது ஒன்றே இதற்கு தீர்வாகும் என எண்ணினாள்...

தூக்கில் தொங்க போனவளைத் தடுத்து நிறுத்தினார் அவளது தாய்...

"ஏன்டி.. உனக்கு என்ன கேடு வந்துச்சினு தூக்குல தொங்க போற... பெத்த வயிரு பத்தி எறியுதுடி... உங்க அப்பனுக்கு வாக்கப்பட்டு நான் அனுபவிச்சது பத்தாதுனு... உன்னையும் எமனுக்கு பழி கொடுத்துட்டு நான் காலம் முழுக்க அழுகனுமாடி... நீ யான்டி சாவற..உன்ன பெத்த பாவத்து என்னை மெதல்ல கொன்னுருடி...", அவளது தாய் கதறி அழ...

துளசியிம் அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள்...

ருத்ரனைப் பற்றியும் அவளது கதலைப் பற்றியும் அழுகையுடனே சொல்லி முடித்தாள்...

தீர யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய்
" நீ அவன் கிட்டயே போயிடுடி.. இங்கயே இருந்தாலும் நீ சந்தோஷமா இருக்க மாட்ட... இஷ்டமில்லாம இவன கட்டிகிட்டாலும் உன்னால சந்தோஷமா இருக்க முடியாது... இனி உன்னோட வாழ்க்க உன் கைல தான்... சொல்லாதனால உன்னோட காதல் தோத்து போச்சினு நீ எதிர்காலத்துல நினைச்சிற கூடாது... வாழ்க்கைல எதிர்த்து நின்னு போராட கத்துக்கோ...", என்றார் அவர்...

துளசி அவளது தாயையே விழி அகலாது பார்க்க...

"என்னடா பேசுறது நம்ம அம்மாவானு பார்க்குறையா... பிள்ளையா புருஷனானு பார்த்தா... எனக்கு என்னோட பொண்ணு வாழ்க்க தான் முக்கியம்... சீக்கிரம் இங்கிருந்து போயிடு...",

துளசி அந்த கல்யாண வீட்டை விட்டு யார் கண்ணிலும் படாமல் வெளியேற உதவினார்...

"இனி உனக்கு எல்லாம் அந்த பையன்தான்... அவன் கூட உன்னோட வாழ்க்கைய நல்லபடியா அமைச்சிக்கோ... அவன் உன்னை ஏத்துக்குற நிலைமைல இல்லனாலும் இங்க திரும்பி வந்துடாத துளசி... நீ வெளிய தனி மனுஷிய வாழ்ந்தா கூட நிம்மதியா இருப்ப... உன்னைப் பெத்தவங்க இன்னியோட செத்துட்டாங்கனு நினைச்சி மனச தேத்திக்கோ...", என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தார்...

அதன் பின் நடந்தது அனைத்தும் உனக்கே தெரியும் என்பது போல் ருத்ரனையே பார்த்தாள்...

"சரி... சப்போஸ் எனக்கு கல்யாணம் ஆயிருந்துச்சினா என்ன பண்ணிருப்ப... திரும்பவும் போய் தூக்குல தொங்கிருப்பியா... இல்லை கிணத்துல குதிச்சிருப்பியா...", என்றான் வெறுமையாக..

துளசியின் மௌனமே மீண்டும் அவனுக்கு பதிலாக கிடைக்க...
இவளைக் கொஞ்சம் கொஞ்சமாகதான் மாற்ற வேண்டுமென்று நினைத்தான்..

"டைமாச்சி.. கொஞ்ச நேரமாவது... தூங்கு...", என்றான் மென்மையாக...

அவனது முகத்தை உற்று நோக்கியவள் "என்மேல கோபமில்லையே...", என்றாள் பாவமாக...

அவளது பாவணையில் சிரித்தவன் "ரொம்ப கோவம்தான்... நீ ஏன் என்கிட்ட முன்னாடியே லவ்வ சொல்லலனு... சொல்லிருந்தா...", என்று நிருத்தியவனின் பார்வை அவளை மெய்க்க துளசியை நாணம் தொற்றிக் கொண்டது...

"ஹலோ மேடம்... என்ன கன்னம் சிவக்குது... சொல்லிருந்தா முன்னாடியே மிஸஸ்.ருத்ரன் ஆகிருப்பிங்கனு சொல்ல வந்தன்..", என்றான் குறும்பாக...

தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN