காலம் கொண்ட கோலத்தினால் நான் உன்னை
சந்தித்தேன் என நினைக்கையில்...
என் வாழ்வின் வரமோ நீ...
ஒவ்வொரு நொடியும் உன்னை சந்திக்க என்
மனம் துடிக்கையில்...
என் வாழ்க்கைத் துணையோ நீ..
உன் தாயுமானவன்...
மறுநாள் காலை அழகாக விடிய...
ருத்ரன் ஜமீன் கோட்டையையும் ரிஷிபுறத்தையும் விட்டு வெளியேரும் தருணமும் நெருங்கியது...
அந்த ஊரே கலையிழந்த கோவிலாய் காட்சியளித்தது... ருத்ரனைப் பிரியப்போகும் துக்கம் அனைவரையும் வாட்டி வதைக்க... குணசீலன் மட்டும் இன்பத்தில் திளைத்தான்...
இனி தன் வழியில் குறுக்கே நிற்க யாருமில்லையென்ற மமதை அவனுள் ஊற்றெடுத்தது...
இன்னாள் வரை அவனின் ஒவ்வொரு செயலையும் தடுத்து நிறுத்தியது ருத்ரன்தான்...
அவனே இல்லையெனில் தன்னை ஒருவராலும் கேள்வி கேட்க முடியாது என்ற கர்வம் இப்பொழுதே அவனிடம் துளிர்விட்டது...
ருத்ரனில்லாத ரிஷிபுறமும் ஜமீன் வம்சமும் இனி என்னாகும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் முதன்மையானதாக...
ருத்ரனின் மனதிலோ துளசி மட்டுமே...
அவளுக்கு நல்ல கணவனாகவும் இனி வரும் தன் சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கவே அவன் மனம் விரும்பியது...
சாரதாம்மா தன் மகனைப் பிரிய மனமில்லாமல் கண்ணீரில் மூழ்கியிருந்தார்...
"அம்மா நீ என்னை எப்படி பார்த்துக்குவியோ அதே மாதிரி உன்னோட மருமக என்னைப் பாத்துக்குவா... நான் வாழ்க்கையில எப்பையுமே சந்தோஷமா இருக்கனும்னு வாழ்த்தி அனுப்பிவைமா...", என்றான் கறகறத்த குரலில்...
எதற்கும் கலங்காத தன் மகன் இன்று தன் கண்ணீரில் துவழ்கிறான் என்பதை ஏற்க முடியாத அந்த தாய் உள்ளம் அவனுக்கு முழு மனதுடன் விடைக் கொடுத்தார்...
ருத்ரன் தன் புது மனைவியுடன் ரிஷிபுறத்தை விட்டுச் சென்றான்...
"ருத்ரா சித்தப்பா ரிஷிபுறத்தை விட்டு போயி 25 வருவஷமும் கடந்து போயிருச்சி ஆகாஷ்... அவரு தாத்தாக்கு கொடுத்த வாக்குறுதிபடி திரும்ப அந்த மண்ணுக்கு வரவேயில்லை... என் அப்பாவோட அராஜகமும் கட்டுகடங்காம போனுச்சிடா... அவரோட அம்மா அப்பாவையும் மதிக்கல என்னோட அம்மாவையும் ஒரு பொருட்டா நினைக்கல... நிம்மி பெறந்ததுக்கு அப்புறம் அம்மா அவரோட இருக்க மாட்டனு வந்துட்டாங்க... நிம்மிக்கு சின்ன வயசுலே அப்பா செத்துட்டாருனு சொல்லிதான் வளர்த்தாங்க... ", என்றான் சதீஸ்..
தன் குடும்ப வரலாற்றைக் கூறும் பொழுது அவன் முகத்தில் வந்து போன பல உணர்ச்சிக் குவியல் அவனது பேச்சில் பொய்யிலையென ஆகாஷிற்கு உணர்த்தியது...
(என்ன பேபி நீ லைட்டா அடி தடி குட்டி சண்ட எல்லாம் நடக்கும்னு நினைச்சன்இப்படி சொதப்பிட்டியே)
"நீ சொல்றது எல்லாத்தையும் உண்மைனே வெச்சிப்போம் சதீஸ்... மயூவோட பேமிலிய நீ திரும்ப எப்படி பார்த்த... அவ ஏன் உன்னை பார்த்து அப்படி பயப்படுறா... இதுக்கு பதில் சொல்லு...", என்றான் யோசனையாக...
ஆகாஷின் கேள்விக்கு சதீஸிடமிருந்து பெரு மூச்சொன்று வெளியானது...
"நான் ருத்ரா சித்தப்பாவோட பேமிலிய ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வடபழனி முருகன் கோவில்ல பார்த்தன் ஆகாஷ்... நிம்மிக்குதான் அவங்கல பத்தி ஒன்னும் தெரியாதே தவற எனக்கு எல்லாமே தெரியும்...
பார்த்தோன சித்தப்பானு போய் கட்டி புடிச்சிக்கனும்னு இருந்துச்சிடா... அதே கம்பீரத்தோட பாசமான அப்பாவ அவரோட பிள்ளைகளோட பேசிட்டு வந்தத பார்க்கவே அம்சமா இருந்துச்சிடா...
என் அப்பா மட்டும் சரியா இருந்திருந்தா சித்தப்பா குடும்பமும் நாங்களும் ரிஷிபுறத்துல இருந்துருப்போமேனு நினைக்கும் போதே அந்தாளு மேல கொல வெறி வந்துச்சி...
ஆன் சொல்ல மறந்துட்டன்ல சித்தப்பாக்கு ரெண்டு பசங்க... ஒன்னு மயூரி... இன்னொன்னு விக்ரம்... மயூவோட அண்ணன்... அவன் பார்க்குறதுக்கு அப்டியே ருத்ரா சித்தப்பா தான்டா... அதே நட... அதே முக அமைப்பு..." சதீஸ்
"டேய் வெண்ணை... உன்னோட வர்ணனைய அப்புறம் வெச்சிக்கோ... இப்ப மொதல்ல என்ன நடந்துச்சினு சொல்லுடா..", என்று பொரிந்தான் ஆகாஷ்...
(ஹீ ஹீ ஹீ செல்லாக்குட்டி பொறாமைல பொங்க கூடாதுஅவன் உன்னோட மச்சிய தான் புகழ்றான்)
"சரி... சரி... கொஞ்சமா பீலிங்ஸோட சொல்லலாம்னு பார்த்தா விடமாட்டியே கிராதகா..
எனக்கு சித்தப்பா குடும்பத்தோட பழகனும் ஆச வந்துருச்சி... ஸோ விக்ரமோட ப்ரெண்டா அந்த குடும்பத்துல ஒருத்தனா மாறுனன்... அம்மாக்கு கூட இந்த விஷயம் தெரியாம பார்த்துட்டன்...
உண்மையாடா... மயூ விக்ரம் மேல வெச்சிருந்த பாசத்த நிம்மிகூட என்மேல வெக்கலடா... அவங்க ரெண்டு பேரும் அவ்வளோ க்லோஸ்...
மயூக்கு ஒன்னுனா விக்ரம் துடிச்சே போயிருவான்... அவளும் அப்டிதான்...
டேய் அண்ணா... தடியானு... அவன் பின்னாடியே சுத்திட்டு இருப்பா...
மயூவோட குடும்பத்துல உண்மையான பாசம்னா என்னனு தெரிஞ்சிட்டன்டா...
ருத்ரா சித்தப்பா எனக்கும் ஒரு அப்பாவா இருந்தாரு...
அவரு முகத்த பார்க்குறப்பலாம் சித்தப்பாட்ட நான் யாருனு சொல்லிட நினைப்பேன்டா... பட் வார்த்ததான் வராது... மூனு வருஷம் நான் யாருனு சொல்லாமலே அவங்க குடும்பத்துல வாழ்ந்தன்டா... வாழ்க்க சந்தோஷமா போயிட்டு இருந்த அந்த நேரத்துல சித்தப்பா குடும்பத்துக்கு மொத அடி விழுந்துச்சிடா... என்ன ஏதுனே தெரியாம விக்ரம் ஒருநாள் மாயமா காணாம போயிட்டான்... " சதீஸ்
"அப்புறம் என்னாச்சிடா... விக்ரம்க்கு ஒன்னும் இல்லதான... அவன் எங்க போனான் என்ன ஆனான்னு ஏதாச்சும் தெரியுமா...", என்றான் ஆகாஷ் பதட்டமாக...
"ஹேய் ஆகாஷ் கூல் டவுன் மேன்... உனக்கு விக்ரம் பத்தி தெரியாது... எதையும் ஒன்னுக்குப் பத்து தடவ யோசிச்சி தான் செய்வான்... மாயமா மறையுர அளவுக்கு அவன் ஒன்னும் கோழையில்லை... வீரத்துக்கு மறு பேர்னா அது விக்ரம்தான்... பட் அவன் ஏன் இப்படி மறைஞ்சி வாழ்றான்னு தெரியல... ஏதோ இரகசியம் அதுக்குப் பின்னாடி இருக்கு பட் என்னனுதான் தெரியலை...", என்றவனின் குரலில் தன் தம்பியை, ஒரு நல்ல தோழனைப் பிரிந்து தவிக்கும் ஏக்கம் இருக்கவே செய்தது...
"சரி அதுக்கப்புறம் என்னாச்சினு சீக்கிரம் சொல்லுடா... விக்ரம் காணாம போனதுனாலதான் மயூ உன்னைப் பார்த்து பயப்படுறானு மட்டும் சொல்லிடாத... அத நம்புறத்துக்கு நான் ஒன்னும் சின்ன பாப்பா கிடையாது...", என்றான் எச்சரிக்கும் தொனியில் ஆகாஷ்...
(நீ சின்ன பாப்பா இல்ல டார்லிங் அமூல் பேபி எங்க இன்னொருவாட்டி சொல்லு அமூல் பேபி ஆன் இது தான் ரைட் இதுலே பிக்ஸ் ஆயிக்கோ என்னா)
"கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுடா தடியா... ஒடம்ப நல்லா வளத்து வெச்சா மட்டும் பத்தாது... கொஞ்சோன்டு மூளையும் வேணும்...
பொய் சொல்றவனா இருந்த இங்க உன் கிட்ட நின்னு பேசிட்டு இருக்கனும்ற அவசியமே இல்ல... மயூ மேல உள்ள காதல் உன்ன பைத்தியமா மாத்திருச்சி ஆகாஷி...", சீற்றமாய் தொடங்கியவன் கேலியாக முடிக்க..
ஆகாஷ் முகம் அஷ்ட கோனலாய் போனது...
'ஆமாம் ஆமாம் காதல் பையித்தியம்... உன் தங்கச்சி மயூ மேல பையித்தியம்...',என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டவன்..
"சரி... சரி... அப்புறம் என்னாச்சி...", என்றான் ஆர்வமாக..
"மயூ லைப்ல ஒன்னு ஒன்னா அதுக்கப்புறம் தான் மாறுனுச்சி...
விக்ரம் காணாம போன ரெண்டு மாசத்துல ரிஷிபுறத்துல இருந்து சித்தப்பாக்கு ஒரு லெட்டர் வந்துச்சி...
கோட்டைல வேல செய்ற அலமு பாட்டி எப்பையுமே சித்தப்பாக்கு இன்னொரு தாய் தான்... அவங்க போடுற லெட்டர்க்கு மட்டும் சித்தப்பா மறக்காம பதில் போடுவாருனு அவங்க குடும்பத்துக்குள்ள போனதும் தெரிஞ்சிட்டன்...
எப்பயும் சந்தோஷம் கலாட்டானு எதாச்சும் கலவையா எழுதற அலமூ பாட்டி லெட்டர்ல இந்த தடவ பெரிய ஷோக்கே இருந்துச்சி...
அது என்னனா... தாத்தாவும் பாட்டியும் இறத்துட்டதாவும் அவங்களோட இறுதி
சடங்குக்குச் சித்தப்பாவ வரச் சொல்லியிருந்துச்சி...
சித்தப்பா அப்டியே இடிஞ்சி போயிட்டாரு... அவரால அந்த தகவல ஏத்துக்க முடில...", சதீஸ் அந்த விஷயத்தை ஜீரணிப்பது போல சிறிது நேரம் நிறுத்தி நாதானிக்க... ஆகாஷ் ஆறுதலாய் அவனின் தோளை அலுத்தினான்...
கஷ்டப்பட்டு வரவழைத்த மென்னகையை அவன் புறம் வீசியவன்... மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்...
"மயூவ மட்டும் தனியாவிட்டுடு... சித்தப்பாவும் ரிஷிபுறத்துக்குப் போனாங்க....போனவங்க பிணமாதான் திரும்பி வந்தாங்க...", தலையை அலுத்த கோதி தன் உணர்ச்சியை அடக்க முயன்றவனை அணைத்துக் கொண்டான் ஆகாஷ்...
"டேய் அழுதுரு... உள்ளையே வெச்சிட்டு இருந்தா இன்னும் கஷ்டமாதான் இருக்கும்...", அந்த வளர்ந்த குழந்தைக்கும் ஆகாஷ் ஒரு தாயாய் செயல்பட்டான்...
சந்தோஷத்தில் உடனிருப்பவன் மட்டும் தோழனல்ல... துன்பம் ஏற்படும் பொழுது தோள் கொடுப்பவன்தான் உண்மையான தோழன்... நட்பின் சிறப்பும் அதுதான்...
"குருவி கூடு மாதிரி இருந்த குடும்பம்டா... கண்ண மூடி தொறக்கறதுக்குள்ள எல்லாம் அழிஞ்சு போச்சி... பட்டாம்பூச்சியா சுத்தி திரிஞ்சவ ஒரு வட்டத்துல சுருங்கிட்டா... யார் கிட்டையும் பேசுறதில்ல... சிரிப்புன்ற ஒன்றையே மறந்து போய் நடைபிணமா மாறிட்டா...
விக்ரம் இல்லாத தனிம அவள ரொம்பவே வாட்டுச்சி... தோள் சாய ஒரு தோழனும் மடி சாய ஒரு தோழியும் இல்லாம தவிச்சா... என்னதான் மயூ கலகலப்பான ஒருத்தினாளும் அவளுக்கு அவ குடும்பம்தான் எல்லாமே...
அம்மா அப்பா அண்ணன் அப்படின்ற உறவுகளோட மட்டுமே அதிக ஈடுபாடோட இருந்ததுனால அவளுக்கு ரொம்ப ப்ரெணட்ஸ் இல்ல...
நான் அவள அப்பப்போ போய் பார்த்துட்டு வந்தாலும் அவளோட தனிம மயூவ பயந்தவளா மாத்துனுச்சி... எல்லாத்துக்கும் மனசுதான்டா காரணம்... எனக்குனு யாருமில்ல... நான் தனியாயிட்டன் அப்டின்ற எண்ணமே அவள அப்டி மாத்திருச்சி...", என்றவனின் பார்வையில் உணர்ச்சியில்லை...
மயூவின் துன்பம் ஆகாஷின் மனதைச் சுக்கு நூறாய் சிதைத்தது... அவளை ஏன் நான் முன்னமே பார்க்கவில்லை என்ற எண்ணம் அவனின் சிந்தனையில் சுழன்றது...
கண்ணுக்கு எட்டாத மயூவின் சிரிப்பின் காரணம் இன்று அவனுக்கு புரிந்தது...
அனைத்துத் துன்பங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு அவளால் எவ்வாறு மகிழ்ச்சியாக வளைய வர முடிந்தது...
தன் குழந்தையின் மீது அவளுக்கிருக்கும் அன்பின் காரணம் இப்பொழுது நன்றாய் விளங்கிற்று...
தனிமையைப் போக்க அவளுக்கு இருக்கும் ஒற்றைச் சொந்தமென அந்த குழந்தையின் மீது அவளுக்கு ஏற்பட்ட இணைப்பும் பாசமும் ஆகாஷின் மனதைச் சிலிர்க்க வைத்தது...
தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.