தாயுமானவன் 19

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இருவர் மனம் சேரும் தருணம் அங்கு காதல் மலர்ந்தது.....
சரித்திரம் பேச ஒரு காதல் காவியம் பிறந்தது...
காதலென்ற ஒன்று எனைத் தீண்டிச் சென்றது அன்று...
உன்னை எண்ணி தவிக்கிறேன் உன்னவன் இன்று...
உன் தாயுமானவன்
...


ஆகாஷிற்கு உடனே மயூப் பார்க்க வேண்டுமென தோன்றியது...

பூப்போன்ற மென்மையவளை துட்சமென எண்ணிய குணசீலனைக் கொல்லும் வெறியே அவனுள் எழுந்தது...

மயூ ஏன் முன்னமே தன் கண்ணில் படவில்லை என்று தோன்றினாலும் அவள் நல்லபடியாக தன்னிடம் வந்து சேர்ந்ததற்கு இறைவனிடம் நன்றி சொன்னவன்...

"மச்சி எனக்கு மயூவ இப்பவே பார்க்கனும்... ஸோ நான் வீட்டுக்குப் போறன்... நீ எங்கயாச்சும் போ... பாய் டா..", என்று கூறியவன் சதீஸின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றான்...

(ஹீ😂 ஹீ😂 ஹீ😂 உனக்குலாம் ப்ரெண்டா வந்தான் பாரு அவன சொல்லனும்🙄🙄🙄 பிகருனு வந்தோன ப்ரெண்ட கலுட்டி விட்டுடியே செல்லமே🤣🤣🤣)

ஆகாஷின் மனதைப் போலவே அவனது வாகனமும் சாலையில் சீறிப்பாய்ந்தது...

மயூவைப் பார்த்தவுடன் கட்டியணைக்க அவன் உள்ளம் பரபரத்தது...

'நீ ரொம்ப கஷ்ட பட்டுட்ட செல்லம்... இனிமே உன் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான் இருக்கனும்...
நான் இருக்கறவரைக்கும் உன்ன நல்லா பார்த்துக்குவன்டி...
அப்படி நான் ஒரு நாள் இல்லாம போயிட்டா... என் இடத்துல இருந்து என் பேபி உன்ன பார்த்துப்பா டா...'
என்று நினைத்துக் கொண்டான்...

ஆகாஷின் வாகனம் அவனது வீட்டை அடைந்த போது மயூ தோட்டத்தில் பூக்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்...

"நீ நேத்தே பூத்திருப்பனு நினைச்சன்... இன்னிக்கு வரைக்கும் நீ பூக்கவே இல்ல பத்தியா... உன் பேச்சி கா... போ என்கூட பேசாத...", என்று ரோஜா மொட்டிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவளைப் பின்புறமாக இறுக அணைத்துக் கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்...

திடீரென்று ஏற்பட்ட ஸ்பரிசத்தில் திடுகிட்டவளாய் கத்த போனவளை

"ஏய் லூசு கத்திடாத... என்னைத் தவற வேற யாரு உன்கிட்ட வர போறாங்க மாங்கா... கத்தி அக்காட்ட மாட்டிவிட்டுறாதமா.. ப்லீஸ்..."

(அடேய் நல்லவனே😖😖😖 உன் அக்கா மெதல்ல வீட்ல இருக்காங்களானு பாருடா😭😭😭)

"டேய் நீ தான்டா லூசு.. காலைல இருந்து வித்யாசமா பேசுற... ஒரு மார்க்கமா நடந்துக்குற... இப்ப என்ன வந்து கட்டி புடிக்குற... தள்ளி போ பிசாசு..."

( அம்மினிக்கு கோவம் வந்துருச்சி அமுல் பேபி😝😝😝 இனி உன் கத கந்தல்தான்😌😌😌)


அவனை விடாமல் வசைப்பாடிக் கொண்டிருந்தவள் தன் கழுத்தில் ஆகாஷின் கண்ணீரை உணர்ந்ததும் மௌனமானாள்...

ஆகாஷ் அவள் கழுத்தில் மேலும் புதைந்து போனவனாய் தன் அழுகையைத் தொடர மயூ செய்வதறியாது திகைத்தாள்...

ஆகாஷின் கம்பீரத்தில் தான் தன்னை அவனிடம் தொலைத்தாள்...

அப்படியிருக்க இன்று அவனே உடைந்து போனவனாய் தன்னை நாடி வந்திருக்க அடுத்து என்ன செய்வதென்று புரியாதவளாய் அவன் தலையில் தன் விரல்களை அலைய விட்டாள்...

மயூவின் அரவணைப்பில் தன்னை மீட்டெடுத்தவனாய் அவளை விட்டு விலகியவன் அவளைத் தன் புறம் திருப்பினான்...

மயூவின் மதி முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்...

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலக்க...

"ஐ'ம் சாரிடி...", என்றான் மெய்யான வருத்தத்தோடு...

ஆகாஷ் என்ன சொல்ல விழைகிறான் என புரியாமல் விழித்தாள் மயூ...

அவளின் பாவணையில் ஆகாஷின் இதழோரம் சிறு புன்னகை எட்டிப் பார்க்க... மயூவை இழுத்தணைத்தவன்
"என்னை விட்டுடு எங்கையாவது போனும் நினைச்சா உன்னைக் கொன்றுவன்டி...", என்றான் வரவழைத்த கடுமை குரலில்...

(இவங்க விட்டா ஒரு நாள் முழுசும் ரொமேன்ஸ் பண்ணுவாங்க😂😂😂
நீங்க எல்லாரும் போலோ மீ😚😚😚மித்து அக்கா எங்கனு போய் பார்த்துட்டு வருவோம்😎😎😎)


மலை உச்சியில் மித்ரா கோபமாக கையைக் கட்டி கொண்டு நிற்க அவளை இரசித்தப்படி நின்றிருந்தான் ஒருவன்...

சண்டையிட்டு ஓய்ந்தவளாய் மித்ராவிற்கு மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கியது...

"ஏய் இப்போ என்னதான் சொல்ல வர... உனக்கு நான் வேணாம்னா சொல்லிரு நான் போயிட்டே இருக்கன்... பட் அதுக்கு முன்னாடி உன் கழுத்துல இருக்கே நான் கட்டுன தாலி அத கலட்டி குடுடி...

அதுக்கப்புறம் எப்பையும் உன் முகத்துல முழிக்கவே மாட்டன்... என் வழிய பாத்துட்டு நான் போறன் உன் வழிய பாத்துட்டு நீ போ...",
என்றான் உணர்ச்சியற்ற குரலில்...

மனதிற்குள்ளோ...
'அப்டி எதுவும் பண்ணி வெச்சிடாதடி மை குல்பி😣😣😣 உன் மேல மாமா உயிரையே வெச்சிருக்கன்😍😍😍', என்று நினைத்துக் கொண்டான்...

மித்ரா அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...

பல நாட்களாய் அவள் மனக்கண்ணில் வந்து ஏங்க வைத்த ஒரு முகம்...

இனி அவனை மீண்டும் பார்க்கவே முடியாதோ என ஒவ்வொரு கணமும் அவளை இரணமாய் கொன்றவனின் முகம்...

கல்லூரி காலத்தில் அவள் மனதில் காதலை விதைத்தவன்...

அவளைத் அவனுக்கு சொந்தமானவளாய் அவனின் மனைவியாய் மாற்றியவன்.....

திடீரென்று ஒரு நாள் அவளைப் பிரிந்தவன்... எங்கிருக்கிறான் எப்படியிருக்கிறான் என தினம் தினம் அவளை ஏங்க வைத்தவன்...

விக்ரம்...

(இது எந்த விக்ரம்னு ரொம்பலாம் மூளையைத் தட்டி யோசிக்காதிங்க ரீடர்ஸ்😉😉😉 சாட்சாத் மயூவோட அண்ணன் விகர்மே தான்😁😁😁)


சிறு வயதிலிருந்தே தன் தந்தை ருந்தரனை முன் உதாரணமாய் கொண்டு வளர்ந்தான்...

தந்தையின் வீரம் இவனிடமும் தேங்கி நிற்க...

காவல் துறையில் கால் பதிக்க எண்ணினான்...

அவனது இந்த ஆசை ருத்ரனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது...

துளசி இயல்பிலேயே பயந்தவள் என்பதால் அவளிடம் சொல்ல அவன் மனம் விழையவில்லை...

மயூவிடம் கூறினாலோ கத்தி ஆர்ப்பாட்டமே செய்துவிடுவாள்...

விக்ரமின் கனவு அவனது மனதிலே பத்திரமாய் பூட்டி வைக்கப்பட்டிருந்தது...

இப்படியாக அவன் தனது கல்லூரி வாழ்வில் காலடி எடுத்து வைத்தான்...

விக்ரமின் வாழ்க்கைப் புத்தகத்தின் பொற்காலம் அது..

நிறைய நண்பர்கள்...

சின்ன சின்ன கலாட்டா...

கல்லூரிக்கே உரிய லூட்டிகள்...

என ஒரு சீராய் போய்க்கொண்டிருந்த கல்லூரி வாழ்க்கையில் அவனை மின்னலேன தீட்டிச் சென்றாள் மித்ரா...

விக்ரம் கல்லூரி கலை விழாவில்தான் மித்ராவை முதன் முதலில் சந்தித்தான்...

அழகிய பட்டு சேலையில்
மேடையேறி குழலூதும் கண்ணனுக்கு பாடலை மித்ரா மெய் மறந்து பாட விக்ரம் அவளின் அழகில் மெய் மறந்து போனான்...

அன்று வரை அவன் முதல் பார்வையில் உண்டாகும் காதலை நம்பியதில்லை...

காதலே மாயையென வசனம் பேசுபவன் மித்ராவைக் கண்டவுடன் காதல் கொண்டான்...

(பார்ரா😚😚😚 கண்டதும் காதலா🤗🤗🤗 இதுக்கடுத்து உனக்கு கவிதை கனவு எல்லாம் வருமே😋😋😋 நீ மித்ராவ நினைச்சி லூசா அலைய என் வாழ்த்துகள்😂😂😂)

விழா முடிந்ததும் விக்ரம் அவளை அந்த கல்லூரி முழுதும் தேடினான்...

இருப்பினும் அவள் எங்கும் காணப்படாமல் போக அவனை ஏனோ வெறுமைச் சூழ்ந்து கொண்டது...

அவளை மீண்டும் பார்க்க வேண்டும் அவளோட பேச வேண்டும் என்ற எண்ணம் மெல்ல எழுந்து அவன் மனதை ஆக்கிரமிக்க விக்ரம் வியந்துதான் போனான்...

ஒரு பெண்ணாள் தன்னுள் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்றே விக்ரம் அன்றுதான் தெரிந்து கொண்டான்...

மித்ராவின் நினைவுகளோடு அவன் உலன்று கொண்டிருக்க பென்சில் பிடித்திருந்த அவன் கைவிரல் வெற்று தாளில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தது...

ஏதேதோ யேசனையில் இருந்ததால் அவன் தன்னைச் சுற்றி நடப்பதை உணர தவறினான்...

வீட்டின் மொட்டை மாடிக்குத் தனிமைத் தேடி வந்தவனை நிழல் ஒன்று தொடர்ந்தது...

அது அவன் அசந்த நேரம் அவன் கையிலிருந்த தாளைப் பிடிங்கி கொண்டு ஓடியது...

(வாடி என் ஊட்டி தக்காளி🍅🍅🍅 உன்னதான் எதிர்பார்த்தன்😆😆😆
அண்ணன் லவ் பண்ணா மட்டும் இந்த தங்கச்சிகளுக்கு எப்டிதான் அபாய சங்கு அடிக்குமோ தெரிலை🤣🤣🤣)

"ஏய் மீரா (மயூரி விக்ரம்கு மட்டும் மீரா)... அத என்கிட்ட குடுத்துட்டு போ... என் கைல மாட்டுன அவளோதான் சொல்லிட்டன்...",
என்று கத்தியவாறே மயூவைத் துரத்திக் கொண்டு ஓட அவள் இவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டு அவன் கையில் அகப்படாமல் அப்படியும் இப்படியுமாக ஓடினாள்...

"ஏய் பிசாசு என் கிட்ட குடுத்துருடி... ஐஸ்கிரீம் வேணும்னாலும் வாங்கி தரன்... என் செல்லக்குட்டி புஜ்ஜிகுட்டில... குடுத்துருடா...", சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிகாரன் காலில் விழுவதே உசிதம் என எண்ணினான் போலும்...

"போ தடியா... குடுக்கறதுக்கு முன்னாடி அம்மு... பட்டுனுவ... குடுத்துட்டா பிசாசு.. இராட்சசினு சொல்லுவ... நான் குடுக்க மாட்டன் போ... அப்பாகிட்ட போட்டு குடுக்குறன் இரு...

அன்பே ஆருயிரேவா...
ப்பாஆஆஆஆ என்னே கவிதை... ",
மயூ ருத்ரனின் அறை நோக்கி போக எத்தனிக்க...

"அவுச் அம்மா.. ", என்ற விக்ரமின் குரல் அவளைத் தடைச் செய்தது...

விக்ரம் காலைப் பிடித்துக் கொண்டு மாடிப் படியில் அமரந்துவிட...

மயூ மெல்ல அவனை நெருங்கினாள்...

"டேய் அண்ணா அடி பட்டுடுச்சாடா...", பதட்டமாக அவள் வினவ...

"பண்றதையும் பண்ணிட்டு இப்ப கேள்வி வேற கேக்குறையா...", விக்ரம் வரவழைத்த கடுமைக் குரலில் கேட்க...

"அண்ணா... சாரிடா... நான் வேணும்னு செய்லடா... ப்லீஸ்...", மயூவின் கண்ணீர் விக்ரமின் கையில் பட்டுத் தெறிக்க இப்போது திகைப்பது அவனது முறையானது...

"ஏய் லூசு எனக்கு ஒன்னும் இல்லடி... தோ பாரு நல்லாதான் இருக்கன்...", என்ற தோடு நில்லாமல் மயூவை தூக்கி இரண்டு சுற்று சுற்றினான்...

"டேய் எருமை... என்னைக் கீழவிடு... என் கூட யாரும் பேச வேணாம் போ...", என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டவள் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்...

மயூவை நோக்கி சிறு புன்னகையை வீசியவன் அவளருகே அமர்ந்து கொண்டு அவள் மடியில் தலைசாய்த்தான்...

"என்னடி நடக்குது இங்க தோம் அன்ட் ஜெரி ரெண்டும் இன்னிக்கு பாச மழை பொழியுதே இது சரியில்லையே...", என்ற சந்தேக பார்வையோடு அங்கு வந்து சேர்ந்தார் துளசி...

அவரை முறைத்துப் பார்த்தவள்..

"அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் ஆயிரம் இருக்கும் உனக்கென்ன வந்துச்சி... போ... போ... போய் சமையல கவனி தூசி.."

(துளசி தூசியாய் சுருங்கி விட்டார்)

"எல்லாம் என் நேரம்டி.. ",
என்று நொடித்தவர் சமயலறையை நோக்கி சென்றார்...

அவரின் தலை மறையும் வரை அமைதி காத்தவள்...

விக்ரமின் தலையைத் தன் மடியிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு தடதடவென படிக்கட்டில் ஏறி மாடிக்குச் சென்றாள்...


தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 19
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN