தாயுமானவன் 26

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலும் வந்து என்னைத் தீண்டிச் சென்றது....
புத்தனாய் இருந்த நானும் பித்தனாய் மாறிப்போனேன்...
திரும்பிய பக்கமெல்லாம் உன் மதி முகம் கண்டேன்...
வாழும் ஆசையினில் உன்னிள் பாதியாய் எந்தன் நினைவுகளை விதைத்தேன்...
உன் தாயுமானவன்...


ஆகாஷைக் கண்டு மயூ உறைந்து போய் நிற்க... அந்த சந்தர்பத்தைச் சரியாய் பயன்படுத்திக் கொண்டவனாய் வேக எட்டுகளோடு அவளை நெருங்கியவன் அவள் எங்கும் ஓடிவிடாதபடி மடக்கி பிடித்து கையில் ஒளித்து வைத்திருந்த பாலை அவள் வாயில் வைத்து பருக்கிவிட்டான்...

ஆகாஷின் இந்த அதிரடி செயலில் திக்குமுக்காடி இரண்டுவாய் குடித்துவிட்டு புரையேரி நின்றவளின் தலையில் தட்டியவாறே ஒரு நமுட்டு சிரிப்பையும் சிரித்து வைத்தான்...

மயூ ஆகாஷை முறைத்துப் பார்க்க... "மீதி பால நீயே குடிக்கிறியா இல்லை...", வில்லதனமான பார்வையோடு அவன் வினவ... "நானே குடிச்சிக்குறன் குடு...", அவனிடம் சிலிப்பிக் கொண்டவள் பால் டம்ளரை அவனிடமிருந்து பிடிங்கினாள்...

(ஆகாஷ் நல்லா பாரு🙄🙄🙄அவ உனக்கு டிமிக்கி காட்டிட்டு திரும்ப ஓடிட போறா😂😂😂)

அவன் தீவிரமாக மயூவையே பார்த்துக் கொண்டிருக்க 'எல்லாம் என்னோட நேரம்...', என்று சலித்துக் கொண்டு சத்தமின்றி மிச்சமிருந்த பாலைக் குடித்துவிட்டு அவனிடம் காலி டம்ளரைக் கொடுத்தாள்...

"ஹேய் செல்லம் கோவமாடி... எல்லாம் நம்ம பேபிக்காக தானே.. ", ஆகாஷ் பாவம் முகத்தை வைத்துக் கொண்டான்...

"யாரும் ஒன்னும் என்கிட்ட பேச வேணாம்..." மயூ முகத்தை திருப்பி கொண்டாள்...

"ஓ அப்படியா... அப்போ ஓகே... நான் இன்னிக்கு உன்னோட ப்ரெண்ட்ஸ பார்க்க மித்து அக்காவோட அன்பு இல்லத்துக்கு போலாம்னு நினைச்சன்... நீ தான் கோவமா இருக்கியே...", ஆகாஷ் அவளது ஆர்வத்தைத் தூண்டிவிட...

"ஏய் ஆகாஷ் உண்மையாவே கூட்டிட்டு போவியா...", சிறு குழந்தையாய் குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணியவளை தன்னோடு அணைத்தவன்

"ஏய் லூசு குதிச்சி வைக்காதடி... உள்ள இருக்குற பேபி இப்போயே வெளிய குதிச்சி வந்துட போது..." ஆகாஷ் கேலியாய் கூறிட

"அதலாம் ஒன்னும் வர மாட்ட என்னோட செல்லம்... அப்டியே வந்தாலும் பார்த்துக்க தான் நீ இருக்கியே..." என்று கிரக்கமாய் கூறியவளின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்தவன்...

"இப்படியே எதாவது சொல்லியே என்ன மயக்கிடுடி... மோகினி பிசாசு..." இவர்கள் சுற்றுப்புறத்தை மறந்து தங்கள் உலகில் மூழ்கிருக்க...

"நாங்க யாரும் எதையும் பார்க்கல எதையும் கேட்கல நாங்க இங்க இல்லவே இல்ல..." நிம்மியின் கேலி குரலில் அவர்களின் கனவு களைந்து நிதார்சனம் கண் முன்னே விரிந்தது...

(உன்ன நான் திட்டகூடாது திட்டகூடாதுனு பார்த்தா😏😏😏 கேட்டு வாங்குறியா நீ🙄🙄🙄 அடியே அரச்ச மாவு😈😈😈 அங்கதான் ரொமேன்ஸ் நடக்குதுனு தெரியுதுல😒😒😒அப்புறம் என்ன😏😏😏)

குரல் வந்த திசையில் நிம்மி, சதீஸ், மற்றும் விக்ரம் மூவரும் தத்தம் கண்களை மூடிக்கொண்டு நின்றிருக்க... மயூவை வெட்கம் பிடிங்கி தின்றது... ஆகாஷின் பிடியிலிருந்து மெல்ல விலகியவள் அவன் பின்னே மறைந்து நின்றாள்...

"ஏய் பார்டா எங்க வீட்டு ஜான்சி ராணிக்கு வெட்கப்பட கூட தெரியுது...", விக்ரம் மயூவை சீண்ட...

மயூ மௌனமாய் ஆகாஷின் பின்னே நின்றிக்க... "ஹலோ போதும் போதும்... என் செல்லத்த யாரும் கலாய்க்கா வேணாம்
சொல்லிட்டன்...",
என்றாவன் சொன்னதோடு நில்லாமல் மயூவை முன்னே இழுத்து அவள் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு... "என்னோட பேபிக்கு நான் எத்தன கிஸ் வேணாலும் குடுப்பன் உங்களுக்கு என்ன...", என்றான் திமிராக...

"இதுகலாம் தேறாத கேசு அண்ணாஸ்... வாங்க நம்ம மித்து அக்காவ போய் பார்போம்...", என்று நிம்மி அவர்கள் இருவரையும் தள்ளிக் கொண்டு சென்றாள்...

அங்கு மித்ரா மருத்துவமனைக்குச் செல்ல தயாராகி கொண்டிருந்தாள்...

"ஹாய் மித்துக்கா... எப்படி இருக்கிங்க???" என்று அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் நிம்மி...

"ஹேய் வாலு... நீ எப்படி இருக்க??? கொஞ்ச நாளா ஆளையே காணும்... உன்னோட அண்ணன் வீட்டுக்குள்ளயே கிட்நப் பண்ணி வெச்சுட்டானா...", என்று நிம்மியிடம் கேள்விகளைத் தொடுத்தாலும் பார்வை என்னமோ விக்ரமைத் தான் வருடிச் சென்றது...

'உனது பார்வையும்... அதனுள் பெதிந்திருக்கும் அர்த்தமும் நானறிந்ததுதான் பெண்ணே...', என்று எண்ணியவனாய் விக்ரம் மென் சிரிப்பொன்றை உதிர்த்தான்...

"அப்படிலாம் ஒன்னும் இல்லக்கா... என் அண்ணாஸ பத்தி தப்பா சொல்லக்கூடாது ஆமா... அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா..." நிம்மியின் மாற்றம் அவள் குரலில் நன்றாக பிரதிபலித்தது...

"சரி சரி உன்னோட அண்ணன் புராணத்த அப்புறம் பாடு... இப்போ யான் இந்த திடீர் விஜயம்னு சொல்றியா செல்லம்..." மித்ரா கேள்வியாய் வினவிட

"ஈஈஈஈ... ஒன்னும் இல்லக்கா சும்மா... " நிம்மி மென்று முழுங்கினாள்...

"நீ சும்மானு சொன்னாலே எதாவது விஷயம் இருக்குமே என்னனு சொல்லு..." மித்ரா விடாமல் அழுத்தம் கொடுக்க

"அது வந்துக்கா... சதீஸ் அண்ணாக்கு உங்க ப்ரெண்ட் டாக்டர் ஜானகிய ரொம்ப பிடிச்சிருக்காம்... அவங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு விரும்புறாங்க அதான்...", நிம்மி விஷயத்தை பட்டென்று போட்டு உடைக்க சதீஸ் திருதிருவென்று முழித்தான்...

"டேய் மச்சி நீயுமா...??" கூக்குரலிட்டபடிய ஆகாஷ் வந்து சேர... அனைவரும் ஒன்று சேர்ந்து சதீஸை கலாய்த்தனர்...

அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க மித்ரா மட்டும் ஏதோ யோசனையில் இருந்தாள்...

மித்ராவின் மௌனத்தை உணர்ந்து கொண்டவனாய் விக்ரம் அவளைத் தனியே இழுத்துச் சென்றான்... யாரும் அறியா வண்ணம் தான்...

"யான்டி நீ தான் கல்யாணம் புருஷன்னு ஒரு கமிட்மன் எடுத்துட்டு வாழ மாட்ட... அதுக்காக உன்னோட ப்ரெண்டும் அப்படிதான் இருக்கனுமா... நீ இவ்வளோ சுயநலமா இருப்பனு நான் நினைக்கவே இல்லை...", விக்ரம் தன் எண்ண போக்கில் அவளைத் திட்டிக் கொண்டிருக்க மித்ரா அவனிடமிருந்து தன் முகத்தை மறைத்தவாரே தன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

அவளின் சிறு விசும்பலைக் கேட்டு திகைத்தவன்... வலுக்கட்டயமாக மித்ரா அவன் புறம் திருப்ப அவளது கண்கள் கலங்கி சிவந்திருந்தது...

(டேய் சும்மா சும்மா யான்டா அவள அழ வெக்குற😡😡😡 ரொம்ப பண்ண உன்னோட கேரக்டர்க்கு காவி டிரஸ் குடுத்து சந்நியாசியா போக வைச்சிருவன் பார்த்துக்கோ😏😏😏)

'ஐய்யயோ... இப்போ கொஞ்ச நாளாதான் ஏதோ பார்த்துச் சிரிக்குற அளவுக்கு முன்னேறி இருந்தா... இதுல திரும்ப அழ வெச்சிட்டேனா... சுத்தம் வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிருமே... ஏய் விக்ரம் உன்னோட நிலமை இப்படியா ஆகனும்...',
மனதினுள்ளே புலம்பியவன் மித்ராவை சமாதானப்படுத்த முயன்றான்...

"மிது செல்லம் சாரிடா... என்னோட புஜ்ஜில... தங்கம்ல... பட்டுல... அழாதடி... மாமா உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரன்... அழாதமா...", விக்ரம் சீரியஸாக கமெடி பண்ண மித்து பொங்கி வந்த சிரிப்பைத் தன் உதடினுள் மறைத்தவளாய் அவனை முறைத்துப் பார்த்தாள்...

'எப்பாக சாமி... நார்மல் போர்முக்கு வந்துட்டாடா...", என்றவனின் நினைப்பைப் பொய்யக்குவதைப் போல் மித்ரா அடுத்த சுற்று அழ தயாராக விக்ரம் தவித்துப் போனான்...

'எல்லாம் நல்லாதானே போயிட்டு இருந்துச்சி...', விக்ரம் தன்னைத் தானே நொந்துக் கொள்ள

"ஏன் விக்கி... என்னைப் பத்தி நீ புரிஞ்சிட்டது அவ்வளவு தான்ல... என்னோட ப்ரெண்டு வாழ்க்கைக்கு நானே தடையா இருப்பன்னு நினச்சிட்டல... ஜானகிய பத்தி உனக்கென்ன தெரியும்னு நீ பெருசா பேச வந்துட்ட...", மித்ரா ஆவேசமாய் அவனை உலுக்கினாள்...

"மிது நான் வந்து..." வார்த்தைகள் வெளிப்படாமல் திக்கி திணறினான்...

"போதும் நிருத்து... இப்போ என்ன சொல்ல போற.. நான் தெரியாம சொல்லிட்டன் மன்னிச்சிரு அதானே...

நான் தெரியாமதான் கேக்குறன் கொஞ்சமாவது என்னைப் பத்தி நினைச்சியா நீ... எனக்கும் மனசிருக்கும் அந்த மனசுல ஆசைகள் இருக்கும்னு உனக்கு தோனவே இல்லைல...

காதலைச் சொன்னது அதிரடி...
கல்யாணம் செஞ்சிட்டது அதிரடி... என்னைத் தனியா தவிக்க விட்டுட்டு போனதும் அதிரடி... சப்போஸ் நான் வேற யாரையாவது லவ் பண்ணிருந்தா நீ கட்டுன இந்த தாலி கயிறே என் கழுத்துக்குத் தூக்கு கயிறா மாறியிருக்கும்...",
மித்ராவின் கண்ணீருக்கும் அவள் குரலிலிருந்த சீற்றத்திற்கும் கொஞ்சமும் சம்மதம் இல்லை...

"ஏய் யான்டி இப்டிலாம் பேசுற... நான் செஞ்சது தப்புதான்... பட் அது எல்லாத்துக்கும் காரணம் நான் உன் மேல வெச்சிருக்குற பாசம் காதல்... நீ என்னோட வாழ்க்க முழுக்க வரணும்ற ஆசை... அதுனாலதான் கண் மூடிதனமா நடந்துக்கிட்டன்...", விக்ரம் தவறு செய்த குழந்தையாய் மித்ராவின் முன்னே தலைகுனிந்து நிற்க...

அவனைக் கண்ட மித்ராவின் காதல் மனம் பாகாய் உருகிற்று...

'நானும் உன்ன மன்னிச்சு ஏத்துக்கனும்தான் நினைக்குறன் விக்கி... பட் ஏதோ ஒன்னு தடுக்குது... ' மித்ராவின் மனம் இவ்வாறு யோசிக்க

"எனக்கு டைம் வேணும் விக்கி... நடந்தது எல்லாத்தையும் ஏத்துக்க உன்னை என்னோட வாழ்க்கைல ஒரு அங்கமா மாத்திக்க எனக்கு டைம் வேணும்... ப்லீஸ்..." மித்ரா கெஞ்சுதலாக கேட்டாள்...

"ம்ம்ம்... ஓகே மிது... உனக்கு வேணும்ற டைம்ம எடுத்துக்கோ... நான் உன்னை கம்பல் பண்ண மாட்டன்... பட் உன்னை விட்டு தள்ளி போகவும் மாட்டன்... ஏன்னா நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ... ஒன்லி மைன்", விக்ரமின் ஆளுமை குணம் மீண்டும் தலை தூக்க மித்ராவினுள் அபாய சங்கு ஒலித்தது...

"சரி நான் போறன் போ...", என்றவள் அவனை விட்டு விலகி ஓட பார்க்க...

அதை அனுமானித்தவனாய் அவளின் கையைப் பிடித்து இழுக்க பூக்குவியலாய் அவன் மீதே மோதி நின்றாள்...

விக்ரமின் செயலில் விக்கித்துப் போனவளாய் அவனை முறைத்துப் பார்க்க முயன்று அது முடியாமல் போக அவன் முகம் காண நானி கண்களைத் தாழ்த்தினாள்....

அவளின் பாவணையில் விக்ரமின் மனம் குளிர்ந்த நிருற்றானது... மித்ராவின் மனம் மெல்ல மெல்ல அவன் பக்கம் சாய்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்...

தன் ஒற்றை விரலால் அவள் முகத்தில் கோலம் போட்டவன் அவள் காதருகே குனிந்து "ஐ லவ் யூடி பொண்டாட்டி..." என்றான் காதலாக...



தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN