தாயுமானவன் 29

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

கண்டு கொண்டேன் அன்பே...
நீ எனக்காக சிந்திய ஒற்றைக் கண்ணீர் துளியில்
உந்தன் காதலைக் கண்டு கொண்டேன் அன்பே...
உன் தாயுமானவன்...

விக்ரம் மீண்டும் சுயநினைவுக்கு வந்த செய்தி அனைவரையும் குதுகலபடுத்த மித்ரா மட்டும் எதையும் வெளிக்காட்டாமல் ஒரு மௌன நிலையிலே இருந்தாள்...

யாரிடம் அவள் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவில்லை.. வார்த்தையில்லா மௌனமே அவளது மனதை அமைதிபடுத்த தேவையானதாக...

விக்ரம் மூன்று நாட்களுக்குப் பின் தனியறைக்கு மாற்றப்பட்டான்...

மித்ரா மருத்துவமனையிலே தங்கி அவனை கவனித்துக் கொண்டாள்...

கண்ணும் கருத்துமாக அவள் அவனைக் கவனித்துக் கொண்ட விதம் தன் தாய் துளசியை அவனுக்கு நியாபகப் படுத்தியது...

இதைத்தான் தாய்க்குப் பின் தாரம் என்றனரோ என்று வியந்தாலும் மித்ராவிடம் இவனும் ஒரு வார்த்தைப் பேசவில்லை அவளாகவும் எதுவும் பேசவில்லை...

இருவரும் தங்களுக்கிடையே நிலவும் மௌனத்தை மனமுவந்து ஏற்றனர்...

ஒருவரின் அருகாமையை மற்றொருவர் சத்தமின்றி இரசிக்க அங்க மீண்டுமொரு காதல் கதை உதயமானது...

(அடப்பாவிகளா என்னால திரும்பவும் மொதல்ல இருந்து உங்க லவ் ஸ்டோரிய சொல்ல முடியாது டா)

ஆகாஷ், மயூ, சதீஸ், நிம்மி, மற்றும் ஜானகி என அனைவரும் விக்ரமை நலம் விசாரித்துச் சென்றனர்...

எப்பொழுதும் ஒரு இடத்தில் நில்லாது ஓடி திரிந்தவன் நோயாளியாய் படுக்கையில் கிடக்க மனம் வராமல் உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டுமென மருத்துவரை நட்சரிக்க தொடங்கினான்...

இவன் மருத்துவரிடன் சிறு குழந்தையாய் சிணுங்கி சண்டையிடும் காட்சி மித்ரா உதட்டோரம் ஒற்றைப் புன்னகையை தொற்றுவித்து மறையும்...

இப்படியாக இரண்டு மாதமும் கழிந்தது...

மயூ அப்பொழுது நிறைமாத கர்பிணியாக இருந்தாள்...

விக்ரமும் பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான்...

விக்ரம் மித்ராவின் உறவைப் பற்றிய கேள்வி இது நாள் வரை எழவில்லை...

மித்ரா விக்ரமைத் தன் வாழ்வின் சரிபாதியாக ஏற்றுக் கொள்வாளா இல்லையா என்ற கேள்வியே அவர்களை வண்டாய் கொடைந்தது...

(ஏத்துக்கலனா உருட்டு கட்டைலே ரெண்டு போடு போடுங்கபா டான்னு ஒத்துக்குவா)

விக்ரமை சதீஸ் தன்னோடு அழைத்து செல்வதாக சொல்ல அங்கு ஒரு பதட்டமான சூழல் உருவானது...

மயூ அவன் தன்னோடு தான் வர வேண்டுமென்று வாதிட...

சதீஸ் அது சரிவராது என கூற...

வாக்குவாதம் முற்றுவதற்குள் ஆகாஷ் களத்தில் இறங்கினான்...

"டேய் மச்சி கம்முனு இரு... விக்ரம் எங்களோடவே வரட்டும்... மித்து அக்கா அவன பார்த்துப்பாங்க.. இவ்வளோ நாள் அவங்க தான பார்த்துட்டாங்க... அப்புறம் என்ன... பிலஸ் நாளிக்கு மயூவோட வளைகாப்பு எங்க வீட்லையே சிம்பலா செய்ய போறன்... ஸோ விக்ரம் அங்க இருக்குறது தான் சரி வரும்...", என்றான் தீர்மானமாக...

"ஏன்டா எரும... இந்த இரணகளத்துலையும் உனக்கொரு குதுகலம் கேக்குது... தங்கச்சியே நடக்கவே ரொம்ப கஷ்டப்படுது... இதுல வளைக்காப்பு அது இதுனு வெச்சி வேற யான்ட அத கஷ்டப்படுத்துற... இன்னும் ஓன் வீக்ல பேபியே பிறந்துரும்... இதுலாம் உனக்கே கொஞ்சம் டூ மச்சா இல்ல...", என்று அலரினான் சதீஸ்...

"மிஸ்டர் நாரதர் உங்களோட திருவாய கொஞ்சம் மூடறிங்கலா... என்னோட செல்லத்துக்கு எப்போ என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்... அவ அம்மா அப்பா இருந்துருந்தா என்ன செய்வாங்களோ அதை தான் நான் இப்போ செய்றேன் புரியுதா..."
சதீஸை முறைத்துப் பார்த்தவன் மயூவைக் கைத்தாங்கலாக அவ்வறையை விட்டு அழைத்துச் சென்றான்...

(நீ நல்லவனா இல்ல கெட்டவனா அமூல் பேபி ஒன்னுமே புரியலையே)

"சதீஸ் விடு அவனுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும்... நீ இதுல தலையிடாத... நம்ம கூட மயூவ இந்த அளவுக்குப் பார்த்துக்க முடியாதுடா... பட் அவன்...", விக்ரம் கண்கலங்க சதீஸ் அவன் தோளை ஆதரவாக அழுத்தினான்...

மித்ரா விக்ரமை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்த போது அவ்வில்லமே இருண்ட குகைப் போல் காட்சியளித்தது...

'என்னடா இது எங்களுக்கு முன்னாடியே ரெண்டும் கிளம்பிருச்சிங்களே இன்னுமா வந்து சேரல...', யோசனையோடு சென்றவள் விக்ரமை அவளது தந்தையின் அறையில் தங்கிக் கொள்ள சொன்னாள்...

அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தவள் சத்தமின்றி அவ்வறையை விட்டு வெளியேற "மிது...", என்ற அழைப்பு அவளை உருக்கியது...

என்னவென்று திரும்பி பார்த்தவளைச் சிறகு விரித்த பறவையாய் தனக்குள் புதைத்துக் கொள்ளும் ஆவலோடு நின்றிருந்தான் அவளது காதல் கணவன் விக்ரம்...

மித்ரா இந்த இரண்டு மாத காலமாய் காத்திருந்தது அவனது ஒற்றை அழைப்பிற்கு தானே அவளும் விரும்பி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தாள்...

நேரம் நில்லாம் ஓடிக்கொண்டேயிருக்க மித்ராதான் அந்த அணைப்பை முதலில் களைத்தாள்...

விக்ரம் என்ன என்பதாய் ஒற்றை புருவத்தை உயர்த்த மித்ராவின் ஒற்றைக் கைவிரல் தடம் அவனது கன்னத்தில் அழகாய் தன்னை பதித்து மீண்டது...

விக்ரம் அவளைக் கலவரமாக நோக்க...

மித்ராவின் கண்களில் கண்ணீரின் சாயல்...

(மித்துகா நல்லாதான இருக்கஇல்ல உன்னையும் சந்திரமுகி பேய் எதும் புடிச்சிடுச்சா மாறி மாறி ரியக்ஷன் தறியே இது நியாயமா)

மித்ரா மீண்டும் அவனை அறைய போக அதை லாவகமாக தடுத்தவன்...
"ஏய் லூசு... என்னனு சொல்லிட்டு அடிடி...", என்றான் பாவமாக...

அவனிடமிருந்து திமிறி விலகியவள் தன் கை வலிக்கும் வரை அவனை அடிக்க தொடங்கினாள்...

உன்னைக் காணும் முன் காதலென்றால் வெறும் மாயையென்ற எண்ணம் கொண்டிருந்தேன்...
நீ என் விழியில் விழுந்த
அன்று உணர்ந்து
கொண்டேன் அன்பே... காதலென்றால் உயிரில்
கலந்து உணர்வை வதைக்கும் சுகமான சுமையென்று...

மித்ரா அவன் மீது தேக்கி வைத்திருந்த காதல், பிரிவின் வலி, இத்தனை நாளாய் வெளியிடாத வார்த்தைகளின் மௌனம் என அனைத்தையும் ஒன்றென திரட்டி விக்ரமை அடித்து தீர்த்தாள்...

அவளது ஒவ்வொரு அடியையும் வாங்கி கொண்டவனுக்கு அந்த அடிகள் வலிக்கவில்லை...

காதலில் ஊடலும் சுகமாக சுமைதானே...

சிறு பிள்ளையென இருக்கும் அவளைக் கண்டு முகத்தில் புன்னகை விரிய... அடித்தவளின் கைகளை ஒரு சேர இறுக பற்றியவன் அவளது இதழையும் சிறை செய்தான்...

இருவரும் உலகை மறந்து ஒருவர் நிழலில் மற்றொருவர் குளிர் காய கடிகார மணி ஓசை அவர்கள் நினைவுக்குக் கொண்டு வந்தது...

அந்தி வானமாய் சிவந்திருந்தவளின் முகத்தை இரசித்தவன்...

"இப்போதாவது சொல்லுங்க மேடம்... ஏன் இந்த அடி... பாவம் பையன் இப்போதான் தாரு மாறா அடிப்பட்டு எமன்கிட்ட போய்ட்டு வந்துருக்கான்னு கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா...", விக்ரம் விளையாட்டாக கூறியதில் அவள் மனது காயப்பட்டது...

மீண்டும் மௌனத்தை தன் ஆயுதமாக எடுத்துக் கொண்டாள்...

விக்ரம் 'இவளுக்கெல்லாம் அதிரடி தான் சரியா வரும்...', என்று நினைத்தான்...

"என்ன செல்லமே... திரும்பவும் என்னை விட்டுட்டு போயிடு... எனக்கு நீ வேணா... நான் உன்னை லவ் பண்ணல... அப்படினு சொல்ல போறியா...", என்றான் இறுகிய குரலில்...

(அடடே உலகமாக நடிப்புடா சாமி மித்து டார்லிங் அவனுக்கு இன்னும் ரெண்டு அடி குடுடா செல்லம்)

விக்ரமின் முகத்தில் எதையோ தேடியவள் அவனது குறும்புத்தனம் அறிந்தவளாய் அவனை அடிக்க பெரியதாய் ஏதுது கிடைக்குமா என தேட...

"அம்மாடியோ... நான் உன் புருஷன் மா... கொஞ்சமாவது கருணை காட்ட கூடாதா...", என்றான் நல்ல பிள்ளையாக...

விக்ரமின் கையை இறுக பற்றிக் கொண்டவள்...

"என்னைத் திரும்ப விட்டுட்டு போயிட மாட்டியே... நீ இல்லனா நானும் இருக்க மாட்டன்டா...", என்றாள் கலங்கிய குரலில்...

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறுவதைவிட பெரியதல்லவா நீயின்றி நானில்லை என்ற கூற்று...

வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் ஒருவரை மரணம் நம்மிடமிருந்து பிரிக்கும் பொழுது அந்த பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் மனம் அதை எதிர்த்து போராடி வாழ கற்றுக் கொள்கிறது...

ஆனால் காதலில் மட்டும் ஏன் அவனோ அவளோ இல்லாமல் போனால் நம்மையே மாய்த்துக் கொள்ள துணிகிறோம்...

காதல் பெற்றோரின் அன்பை விட பெரிதா...
உடன்பிறந்தோரின் பாசத்தைவிட புனிதா...

விடை தெரியாத புதிர்தானோ இந்த காதல்....

"ஏய் லூசு பொண்டாட்டி... உன்னை விட்டுட்டு எங்கடி போக போறன்... இனிமே உன் கூடவேதான் இருப்பன் சரியா...", என்றவனது குரலும் உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தது...

"நீ பொய் சொல்லுவ... விட்டுட்டு போகாதவன் ஏன்டா இந்தன வருஷமா என்னை தனியா விட்டுட்டு போன... உன்னை யாரு என்னை லவ் பண்ண சொன்னது... நான் உன்கிட்ட சொன்னனா என்னை லவ் பண்ணு கல்யாணம் பண்ணிக்கோனு.... நீயா என்னோட வாழ்க்கைல வந்த... என்னை உனக்குச் சொந்தமா மாத்திக்கிட்ட... அப்புறம் விட்டுட்டு போயிட்ட... திரும்ப வந்த என்கிட்ட சண்டை போட்ட... அப்புறம் என்னை நிறைய லவ் பண்ண... பட் திரும்ப என்னைத் தனியா விட்டுட்டு போவதான பார்த்த நீ... கொஞ்சமாவது என் மனச பத்தி நினைச்சி பார்த்தியா நீ...", கண்ணீரோடு அவள் கேட்கையில் அவனுக்குப் பதில் கூற நா எழவில்லை...

இவள் வாழ்க்கையில் நான் ஒரு பூகம்பத்தையே உருவாக்கி உள்ளேன்.. ஒவ்வொரு கணமும் என்னைப் பற்றி யோசித்தேனே ஒழிய இவளது மனதையும் அதிலிருக்கும் ஆசா பாசத்தையும் நினைக்க மறந்தேனே...

அப்படியிருந்தும் இன்று எனக்காக மட்டும் என்னைக் காதல் செய்யும் இவளது மனம் தான் எவ்வளவு மென்மையானது...

மித்ராவை தன் கை வளைவில் நிறுத்தியவன் அவள் கண்களை நோக்கியவாறு... "மிது உன்னை நான் ரொம்பவே கஷ்டபடுத்திட்டேனு புத்திக்குப் புரியுது... பட் என்னோட மனசு இன்னமும் அவ உன்னோட சொந்தம்... அவகிட்ட எல்லா உரிமையும் உனக்கு இருக்குனுதான் சொல்லுது... நான் கொஞ்சம் செல்பீஷ் தான் மிது ஒத்துக்குறன்... ஆனா இது உன் கிட்ட மட்டும் எனக்கு தோன்றிய உரிமை... நடந்தது எல்லாதையும் மறந்துரு... இன்னிக்குதான் நம்ம முதல் முதலா சந்திக்கிறோம்னு நினைச்சிக்கோ... திரும்ப லவ் பண்ணுவோம்... உனக்கு வேணும்னா திரும்ப கல்யாணம் கூட பண்ணிப்போம்... பட் பிரிவுன்ற வார்த்தை இனி நமக்கிடையே வரக்கூடாது... ஓகே வா...", என்றவன் அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்...

மித்ரா காடு மேடெல்லாம் சுற்றி இறுதியாய் தனக்கான இடத்தை அடைந்ததைப் போல் உணர்ந்தாள்... அவனது அணைப்பில் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு வேறெதிலும் கிடைக்காது என்பது அவளுக்கு உறுதியாய் தெரியுமாதலால் இன்னும் அழுத்தமாக தன்னை அவனுள் புதைத்துக் கொண்டாள்...

தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 29
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN