துளி 13

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அழுகை எனும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும்
விளைந்தேனே...

அறையிலிருந்து வெளியே வந்த ஸ்ரவ்யா சுற்றுப்புறத்தில் யாருமில்லையென உறுதிப்படுத்திக்கொண்டு காரிடோரில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டாள்...
அவ்விடம் பாதி மறைக்கப்பட்டும் மீதி திறந்தவெளியாகவும் இருக்க நிலவின் ஒளி அவ்விடத்தில் விழுந்தது...... அந்த ஒளியே அவ்விடத்திற்கு வெளிச்சம் கொடுக்க அந்த நிலவின் ஒளிபாய்ச்சலை பார்த்தவளுக்கு மனதினுள் பல எண்ணங்கள்...
தனது வாழ்வும் இவ்வாறே இருண்டு பிறர் கண்களுக்கு தெரியாத வகையில் வரண்டிருந்தது... இந்த இருளை போக்கிய நிலவை போல் தன் வாழ்வின் இருளை தேவ் தன் அன்பெனும் ஒளியால் மறைத்து என் வரட்சியை சற்று காலத்திற்கு தளர்த்தியிருந்தான்... இந்த இருளிற்கு அமாவாசை நாளன்று மட்டுமே வரட்சி ... ஆனால் எனக்கு.... என்வாழ்விற்கு.... இந்த வரட்சி எத்தனை நாட்கள் இருக்கும்... எப்போது நீங்குமென்று அந்த கடவுளை தவிர வேறு எவருக்கும் தெரியாது.....
தன் வாழ்வு சுழலில் சிக்கிய சருகாய் திசைமாறி அடித்துச்செல்லப்பட்டது எதனால்.... நான் விரும்பிய எதுவும் என்னிடம் ஏன் நிலைக்கவில்லை...?? நிம்மதியில்லாத வாழ்வு வேண்டாமென்றே தற்கொலை செய்யமுயன்றேன்.... ஆனால் மரணத்திற்கு கூட என்னை பிடிக்கவில்லையே.....
அன்பிற்காக ஏங்கியே என் வாழ்நாள் முடிந்துவிடுமா????? நிம்மதியில்லாத வாழ்வு நரகவாழ்க்கை.... சத்தமிட்டு அழமுடியாத அளவுக்கு என் மனம் மறுத்துவிட்டதே... எவ்வாறு என் எண்ணக்குமுறல்களை களைந்தெழுவேன்..??? அது சாத்தியமான காரியம் தானா???? என் மனதின் ஆறா வடுக்கள் அதற்கு வாய்ப்பளிக்குமா?? எனது தற்போதைய நிலை என்னுடைய விதி என்று எண்ணிக்கொண்டாலும் என்னை முற்றுகையிடும் ஆபத்தில் தேவ்வும் இப்போது மாட்டிக்கொண்டானே... அவனை இதிலிருந்து எவ்வாறு மீட்பேன்.. அவனிடம் சொன்னால் நிச்சயம் நியாயம் கேட்பதாய் கிளம்பிவிடுவான்... ஆனால் இதை மறைத்து தன் திட்டத்தை செயல்படுத்துவது சரிதானா?? அஜய் சொன்னது போல் அநாவசியமாக பிரச்சினையை பெரிதாக்குகின்றோமா??? இப்பிரச்சினைகள் முடிந்தபின்னால் என் வாழ்வு தான் என்ன????? தேவ்வை பிரிவதென்பது தன்னால் எந்த ஜென்மத்திலும் முடியாத காரியம்... ஆனால் என்னுடைய சுயநலத்திற்காக அவன் வாழ்க்கையை பாழாக்கமுடியுமா???? அவனது வாழ்க்கை துணையாக எனக்கு எவ்வித தகுதியும் இல்லை...தகுதி இல்லையென மூளை உணர்ந்த போதிலும் இந்த பாழாய் போன மனம் அவனுக்காக ஏங்கித்தவிக்கிறதே.......... சில விடயங்களில் முடிவெடுக்கும் போது உணர்வு பூர்வமாகவே முடிவெடுக்கவேண்டும்..... இந்த விடயமும் அவ்வாறே... ஆனால் அந்த முடிவு இன்னொருவரின் வாழ்விற்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரிவதில்லை.. இல்லை என்ன நடந்தாலும் பரவாயில்லை ... .. எனக்கு தேவ் வேண்டும்... ஆனால் என்னால் அவன் வாழ்வு பாழாகக்கூடாது... அதற்கு ஒரே வழி நான் கடைசிவரை இப்படியே இருப்பதுதான்.... எனக்கு குணமான விடயம் அவனுக்கு எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் தெரியக்கூடாது..... தெரிந்தால் நிச்சயம் அனைத்தையும் உதறிவிட்டு எனக்காக போர்க்கொடி தூக்குவான்... அது அவனுக்கு இன்னலை உண்டுபண்ணும்..... இல்லை... முதலில் அவனுக்கு சேரவேண்டியதை அவனிடம் கையளித்துவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் பத்திரமாக இங்கேயிருந்து அனுப்பிவைக்க வேண்டும்... அதற்கு பின் அந்த மனிதரிடம் சிக்கியிருக்கும் சொத்துக்களை மீட்டு தாத்தாவின் ஆசைப்படி அதை ஏழை எளியவரிற்கு கொடுத்து உதவிடவேண்டும்.... அதோடு என்னுடைய இந்த நிலைக்கு காரணமான அந்த பரத்திற்கு சரியான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்...
இவ்வாறு தன்னுள் பல எண்ண ஊற்றுக்களின் அலைவீச்சில் உழன்றவளது தோளை தொட்டது ஒரு கரம்.....
திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் தன்னருகே நின்றிருந்த திவ்யாவை கண்டு அதிர்ந்துவிட்டாள்..
அவள் அதிர்ச்சியை கண்ட திவ்யா
“ஸ்ரவ்யா... பயப்படாத.. நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்..”
“திவி...”
“எனக்கு தெரியும் ஸ்ரவ்யா... உனக்கு நினைவு திரும்பிருச்சினு.... காலையில உன்னை பார்த்ததும் எனக்கு ஒரு டவுட்டு... உன்னை ஹக் பண்ணும் போது அந்த சந்தேகம் கிளியராகிடுச்சு...... ஆனா நீ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் உனக்கு குணமான விஷயத்தை மறைக்கிறனு புரிந்தது.. அதனால தான் நீயா சொல்லும் வரை எனக்கு தெரியும் எனும் விஷயத்தை காட்டிக்கலை...” என்று திவ்யா கூற தன் இருக்கையிலிருந்து எழுந்து இறுக்கி தன் தோழியை கட்டிக்கொண்டவளுக்கு இத்தனை நாட்களாய் மனதை அழுத்திய பாரம் குறைவது போல் உணர்ந்தாள்... தன் தோழியை கட்டிக்கொண்டு தன் மனக்குமுறல்களை அழுகையால் வெளிப்படுத்தியவளது தலையை கோதியபடியே சமாதானப்படுத்திய திவ்யா ஸ்ரவ்யாவை அமரவைத்து அவளருகில் அமர்ந்துகொண்டாள்..
“ஸ்ரவ்யா இத்தனை நாள் நீ அழுதது எல்லாம் போதும்.... இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கு... ஆனா எந்த விஷயமும் எனக்கு தெரியாது... நானும் உனக்கு எத்தனையோ தடவை உனக்கு கால் பண்ணேன்... ஆனா நீ போனை எடுக்கவே இல்லை. உன் வீட்டுல விசாரிச்சப்போ நீ இங்கயில்லைனு சொன்னாங்க... ஏன் ஸ்ரவ்யா ஒருகால் பண்ணி என்கிட்ட பேசியிருக்கலாமே... ஏதாவது பண்ணி உன்னை கூட்டிட்டு வந்திருப்பேனே... ஏன்டி என்னை மறந்த... நான் பொண்ணு.. என்னால எதுவும் பண்ண முடியாதுனு நினைச்சியா??”
“திவி... எனக்கு உன்னை பற்றி தெரியும்.. என்னால உனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுனு தான் நான் உன்கிட்ட சொல்லலை.... சொல்லியிருந்தா நிச்சயம் நீ என்னை தேடி வந்திருப்ப.... எனக்கே பாதுகாப்பில்லாத இடத்துக்கு உன்னை எப்படி திவ்யா வரவைப்பது???”
“ஸ்ரவ்யா... அவங்க உன் வாழ்க்கையோட விளையாடியிருக்காங்கடி.... அது சரியா??? நீ அவங்களை சும்மா விடலாமா?”
“தேவ் விட்டுட்டு போயிட்டாங்கிற விரக்தியில இருந்ததால் அப்போது எதையும் கவனிக்கிற மனநிலையில் நான் இருக்கவில்லை... அதனால் நடந்த எதையுமே என்னால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை..... சொல்லப்போனா உயிர் வாழுகின்ற ஆசை கூட எனக்கு இல்லை... ஆனால் எப்போ அந்த பொறுக்கி என் வாழ்க்கையை நாசம் பண்ணானோ அப்போவே செத்திடலாம்னு முடிவு பண்ணி தான் சூசைட் பண்ண ட்ரை பண்ணேன்.... அப்போ தான் லாயர் அங்கிள் கால் பண்ணாரு....”
ஸ்ரவ்யா தன் டையரியில் தான் தற்கொலை செய்யப்போவதாய் எழுதிவிட்டு தன் அறையில் இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை கணக்கில்லாமல் கையில் எடுத்துக்கொண்டு அதை அருந்த முற்படும் போது ஸ்ரவ்யாவின் குடும்ப வக்கீல் அழைத்திருந்தார்... முதலில் அழைப்பை தவிர்த்தவள் பின் இறுதியாக அவர் அழைப்பை ஏற்க
“ஸ்ரவ்யா என்னம்மா நடக்குது... உனக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடக்குதா???”
“எல்லாம் என் கைமீறி போயிருச்சு அங்கிள்... இனிமேல் என்னால எதுவும் பண்ணமுடியாது அங்கிள்.... என்னோட வாழ்க்கையையே என்னால காப்பாற்றிக்முடியலை அங்கிள்....”
“ஸ்ரவ்யா.... இப்போ பிரச்சினை வேற ரூபத்துல கிளம்பியிருக்கு.... உங்க அப்பா உன் பெயரில உள்ள மொத்த சொத்தையும் அவர் பெயரில் மாற்றி எழுத சொல்லியிருக்காரு..”
“தேவ்வோட கையெழுத்து இல்லாமல் அது முடியாதே அங்கிள்...”
“அதுக்கும் உங்க அப்பா ஒரு தகிடுதத்தம் பண்ணிட்டாரு... தேவ்வோட குடும்பம் உயிரோடு இல்லைங்கிறதுக்கான ஆதாரத்தை அவரு ரெடிபண்ணிட்டு இருக்காரு...”
“அது எப்படி அங்கிள் முடியும்...?? சரியான சாட்சி சமர்பிக்காமல் அது முடியாதே அங்கிள்...”
“பணம் இருந்தால் எல்லாம் முடியும் ஸ்ரவ்யா... அதோடு ஆதாரம் ஸ்ராங்காக இருக்கனும் அப்படீங்கிறதுக்காக போலியான டீ.என்.எ ரிப்போர்ட்டும் ரெடி பண்ண சொல்லியிருக்காரு...”
“என்ன அங்கிள் சொல்லுறீங்க??? இது எப்படி சாத்தியமாகும்...??”
“பணத்தை அள்ளி வீசுனா எந்த காரியத்தையும் செய்துமுடிக்க ஆட்கள் இருக்காங்க ஸ்ரவ்யா...”
“இவரை தடுக்கிறதுக்கு வேற வழியே இல்லையா??”
“ஒரு வழி இருக்கு ஸ்ரவ்யா... இப்போ நீ மட்டும் தான் அவரை தடுக்கக்கூடிய ஒரே வழி....”
“என்ன சொல்லுறீங்க அங்கிள்...??”
“ஆமா ஸ்ரவ்யா... உனக்கும் பரத்துக்கும் என்கேஜ்மண்ட் முடிந்திருந்தால் கூட நீயும் அவனும் ஒருவருடம் சேர்ந்து வாழ்ந்தா தான் சொத்து மொத்தமும் உன்னுடைய பெயருக்கு முழுதாக மாறும்..அதுவரை உன்னால சொத்தை இன்னொருவரின் பெயரிற்கு மாற்றி எழுதமுடியாது... இதுவும் உங்க அம்மாவோட ஏற்பாடு தான்.... இப்போ இந்த சொத்தை காப்பாற்றக்கூடிய ஒரே ஆள் நீ தான்...”
“ஆனா அங்கிள்... தேவ்வோட குடும்பம் வந்தால் இவங்களால் எதுவும் பண்ணமுடியாதே...”
“உண்மை தான் ஸ்ரவ்யா... ஆனா நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட...உங்க அப்பாவுக்கு சொத்துல பாதி தேவ்விற்கு என்ற விஷயம் இன்னும் தெரியாது... அது தெரிந்தால் அவரால் தேவ்விற்கும் அவன் குடும்பத்திற்கும் நிச்சயம் ஆபத்து இருக்கு...”
“அங்கிள்... இப்போ என்ன பண்ணுறது???”
“நீ தான் ஏதாவது செய்யனும் ஸ்ரவ்யா....”
“என்ன அங்கிள் செய்றது... இவங்களை எப்படி தடுக்கிறது???”
“ஸ்ரவ்யா ஒரு வழி இருக்கு..ஆனால்...”
“சொல்லுங்க அங்கிள்... “
“ஸ்ரவ்யா நான் சொன்னமாதிரி நீ ஒருவருஷம் பரத் கூட வாழ்ந்து அதற்கான ஆதாரத்தை காட்டினால் தான் சொத்துக்கான முழு உரிமை உனக்கு வரும்.... அது நடக்கக்கூடாது... அதுக்கு நீ பரத்கூட வாழமுடியாதபடியான ஒரு சூழ்நிலையை உருவாக்கனும்.....”
“அது எப்படி அங்கிள்... டிவோர்ஸிற்கு அப்ளை பண்ணனுமா???”
“அதுவும் ஒரு வழி தான்... ஆனா அது சாத்தியமில்லையே.... ஸ்ரவ்யா... உங்க அப்பா நிச்சயம் ஏதாவது உனக்கு எதிராக பண்ணிடுவாரு.... உன்னால் அவளை தனியாக எதிர்க்கமுடியாது....”
“வேறு என்ன பண்ணுறது அங்கிள்...???”
“நீ சுயநினைவு இல்லாமல் இருந்தால் இப்போதைக்கு இந்த பிரச்சினையை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடலாம்...”
“அங்கிள் நீங்க..”
“ஆமா ஸ்ரவ்யா... ஒருத்தர் சுயவுணர்வு இல்லாத நிலையில் இருக்கும் போது அவங்க மூலமாக எந்தவித சட்டரீதியான செயற்பாடுகளையும் செய்யமுடியாது.....”
“ஆனால் இது எத்தனை நாளைக்கு அங்கிள்...”
“கொஞ்ச நாளைக்கு தான் ஸ்ரவ்யா... எனக்கு இந்த சொத்தை விட உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.... உன்னை பத்திரமாக இங்கேயிருந்து அனுப்பனும்...”
“ஆனா அங்கிள்... நான் இங்கேயிருந்தே...”
“இல்லை ஸ்ரவ்யா... உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்... உன்னை முதலில் உங்க அப்பாவோட கண்காணிப்பு வட்டத்தில் இருந்து வெளியே எடுக்கனும்... அதுக்கு தான் இந்த பிளான்... உன்னை அங்கேயிருந்து அழைச்சிட்டு வந்துட்டேனா அவருக்கு தெரியாமல் உன்னை ஏதாவது ஒரு நாட்டு அனுப்பிருவேன்... அதற்கு பிறகு மற்ற விஷயங்களை கவனிக்க எனக்கு இலகுவாக இருக்கும்....”
“நான் போறதால எந்தவொரு நன்மையும் நடக்கபோறதில்லையே அங்கிள்..”
“இருக்கு ஸ்ரவ்யா.... உங்க தாத்தா சொத்து பாதுகாப்பாக இருக்கும்... உன்னுடைய வாழ்க்கையும் அந்த பரத் எனும் மிருகத்துக்கிட்டேயிருந்து தப்பிச்சிடும்....”
“சரி அங்கிள்... உங்களுக்காக செய்றேன்....” என்றவள் கூறியபடியே தற்கொலை முயற்சித்தது போல் மூர்ச்சையாகி ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டாள்....
ஆனால் அங்கு தான் ஸ்ரவ்யாவின் தந்தை தன் கைவரிசையை காட்டினார்....அங்கு வேலைசெய்யும் பணியாளர்களின் மூலம் சேலைன் போத்தலில் ஸ்லோ பாய்சனை கலந்துவிட சரியான நேரத்தில் டாக்டர்கள் அதை கண்டுபிடித்து அவள் உயிரை காப்பாற்றினர்... ஆனால் அதன் தாக்கம் அவள் நரம்பு மண்டலத்தை தாக்கிட அவளது நாடகம் நிஜமாகி அவள் வாழ்வில் விளையாடியது......
“அதுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக போயிருச்சு டி....” என்று ஸ்ரவ்யா அனைத்தையும் தன் நட்பிடம் கூற அவளும்
“லாயர் அங்கிள்...”
“தெரியலடி... எனக்கு ஹாஸ்பிடல் போனது மட்டும் தான் நியாபகம் இருக்கு.. அதற்கு பிறகு எதுவுமே நினைவில் இல்லை..... அங்கிள் தான் என்னை அந்த ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண ரெடி பண்ணாங்க.. அப்போ தான் எனக்கு ஏதோ நடந்திருக்கு...அஜூகிட்ட கேட்டா தான் என்ன நடந்ததுனு தெரியும்...”
“நடந்ததை விடு... இனி என்ன செய்ய போற???”
“என்ன செய்ய இருக்கு... இப்படியே இருக்கபோறேன்...”
“லூசு மாதிரி பேசாத..நீ சொல்லுற விஷயம் நடக்கக்கூடிய விஷயமா??”
“வேற என்னடி பண்ணுறது?? எனக்கு நினைவு திரும்பிடுச்சினு தெரிந்தால் நிச்சயம் அப்பா என்னை தேடிட்டு வந்திடுவாரு.. எப்படி இவ்வளவு நாள் என்னை விட்டு வச்சிருக்காருனு தெரியலை... லாயர் அங்கிளும் எப்படி இருக்காருனு தெரியலை....அவர்கிட்ட பேசுனா தான் அடுத்து என்னதுனு யோசிக்க முடியும்..”
“அது சரி.. ஆனா தேவ்...”
“அவனுக்கு என்ன???”
“அவனோட காதலுக்கு என்ன பதில்??” என்று வேறெங்கோயிருந்து ஒரு குரல் கேட்க ஸ்ரவ்யாவோ தான் அமர்ந்த இடத்திலேயே அதிர்ந்திருந்தாள்..
அந்த குரலுக்கு உரிமையாளன் தேவ்வே....
திவ்யா தேவ்வை பார்த்ததும் எழ அப்போது அவர்களருகே வந்த தேவ்
“ரொம்ப தேங்க்ஸ் திவ்யா..”
“பரவாயில்லை அண்ணா... நீங்க பார்த்துக்கோங்க நான் கிளம்புறேன்...” என்று விடைபெற்று திவ்யா சென்றிட ஸ்ரவ்யாவோ இருந்த இடத்திலிருந்து அசையவில்லை .. அவளருகே வந்த தேவ்வை நிமிர்ந்து பார்க்க திராணியற்று ஸ்ரவ்யா தலை குனிந்தபடியிருக்க அவனும் எதுவும் பேசாது அவளருகே அமர்ந்துகொண்டான்...
ஸ்ரவ்யா இன்னும் தான் இருந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்க தேவ்வோ அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை தன் மடிமீது படுக்கவைத்தான்..
அவள் செயலில் அதிர்ந்தவள் தலையை திருப்பி அவனை பார்க்க அவனோ
“எதுவும் பேசாத சூட்டி...கொஞ்ச நேரம் கண்மூடிட்டு இரு...நான் சொல்லும் வரை இப்படி இரு...” என்று உத்தரவிட அவளும் அதற்கு அடிபணிந்து கண்மூடி அவன் மடிமீது படுத்தவளுக்கு நீண்ட நாட்களுக்கு பின் எந்தவித கலக்கமும் இல்லாமல் மனம் நிர்மலமாய் இருந்தது...அவள் மனதிலிருந்து அத்தனை வேதனைகளும் மறந்திட அவளுணராமலேயே கண்ணயர்ந்தாள்....
ஆனால் தேவ்வோ மனதிலிருந்த பாரம் தீரும்மட்டும் அழுது தீர்த்தான்...
இத்தனை நாட்களால் ஸ்ரவ்யாவின் நிலையறிந்து அவன் மனம் கதறிய கதறல்களுக்கு இன்று விடுதலை கிடைத்திட அது தந்த நிம்மதியில் அழுது தீர்த்தான்....
அந்த அழுகை அவன் மனதில் ஒரு நிம்மதியையும் தெளிவையும் தந்திட அடுத்து செய்யவேண்டியவற்றை மனதில் பட்டியலிட்டவன் ஸ்ர்வ்யாவை பார்த்தான்..
குழந்தையாய் உறங்குபவளின் வாழ்வில் எத்தனை இன்னல்கள்... அனைத்தும் அவள் வாழ்வில் சதி செய்துவிட்டதே.... இனி யாரும் அவள் வாழ்வில் விளையாடவோ அவள் வாழ்வௌ பகடையாக்கவோ விடப்போவதில்லையென முடிவெடுத்தவன் அவள் தலையை ஆதரவாக தடவிக்கொடுத்தவன் அவள் நன்றாக உறங்குவதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளை மெதுவாக கையில் ஏந்தியவன் திவ்யாவின் துணையோடு இன்னொரு அறையை ஏற்பாடு செய்து அங்கு ஸ்ரவ்யாவை படுக்கையில் கிடத்தியவன் திவ்யாவை அவளின் துணைக்கு அவளோடு உறங்கச்சொன்னான்....
அவர்களது பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு கார்டின் ஏரியாவில் அமர்ந்தவன் பொழுது புலரும் வரை வானை வெறிக்கத்தொடங்கினான்...

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN