துளி 23

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே.. என் அன்பே…


மூவரும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும் ஸ்ரவ்யா தனக்கு பசிப்பதாக கூற அஜயும் சுற்றும் முற்றும் பார்க்க பாதைக்கு எதிர்புறம் ஒரு சிறு கடையிருந்தது... அதை பார்த்த தேவ்
“ஸ்ரேயா நீ அஜய் கூட இங்கேயே நில்லு.. நான் பிஸ்கட்டும் பால்பெக்கட்டும் வாங்கிட்டு வரேன்....” என்றவன் பாதையை கடக்கமுயல எங்கிருந்தோ வேகமாக வந்த லாரி தேவ்வை இடிக்கமுற்பட அஜயோ விரைவாக செயல்பட்டு அவனை திசைதிருப்பிட தேவ்வும் சுதாரித்து நகர்ந்த போதிலும் அவன் வலக்கை அடிப்பட்டிட வலி தாளாது கீழே விழுந்தான்... ஸ்ரவ்யா பயத்தில் தேவ் என்று அலறிட அஜயும் விரைந்து தேவ் விழுந்து கிடந்த இடத்திற்கு சென்றான்.....
கீழே விழுந்த தேவ்விற்கோ வலது கையில் நன்றாக அடிபட்டுவிட அவனால் வலக்கையை அசைக்க முடியவில்லை.....
அதற்குள் அங்கு சுற்றி நின்ற சிலர் தேவ்வை சூழ்ந்திட உடனடியாக ஆம்புலனஸ் வரவைக்கப்பட்டு தேவ் ஹாஸ்பிடல் அழைத்து செல்லப்பட்டான்.....
அஜய் பயத்தில் அழுதபடி நின்றிருந்த ஸ்ரவ்யாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பிடலுக்கு சென்றான்....
ஆக்சிடன்ட் வார்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட தேவ்விற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.... அவனுக்கு தோள்பட்டையில் நன்றாக அடிபட்டிருந்ததால் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. இரண்டு வாரங்களிற்கு கையை அசைக்காமல் பார்த்துக்கொள்ளச்சொன்னார்கள்....
அரசமருத்துவனை என்பதால் நோய் வீரியம் அதிகம் இல்லாதவர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற இயலாது... அதனால் தேவ்வையும் உடனே வீட்டுக்கு அழைத்துச்செல்ல கூறிட அஜய் அபிக்கு அழைத்து நடந்ததை கூறிட அபியும் தன்காரில் தேவ்வை அழைத்து செல்ல வந்தான்.....
ஸ்ரவ்யாவோ தன் அழுகையை நிறுத்தியபாடில்லை..
அஜயிற்கு ஸ்ரவ்யாவை சமாளிக்கமுடியவில்லை.... அவன் எவ்வளவு எடுத்துகூறிய போதிலும் அவள் தன் அழுகையை நிறுத்தவில்லை..... தேவ் வந்ததும் அவள் அழுகை அதிகரித்திட இரு ஆடவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர்...
தேவ்வோ
“ஸ்ரேயா... எனக்கு ஒன்றும் இல்லைமா..... ப்ளீஸ் அழாத... அடிபட்ட வலியை விட நீ அழுறது தான் ரொம்ப வலிக்கிறது...”
“இது.... இது.... அந்த... வக்கீலோட வேலை தான்... என்னால் தான் உனக்கு இப்படி நடந்தது....”
“இல்லை ஸ்ரயா.... நான் தான் அந்த லாரி வருவதை சரியாக கவனிக்கலை..... என்னோட கவனக்குறைவால் தான் இது நடந்தது....”
“இல்லை... இல்லை...அவன் தான் காலையிலேயே சொன்னானே.... என்னை கதறவிடுவேன்னு... இது அவன் வேலை தான்.... என்னால் தான் உனக்கு இப்படியானது...”
“ஸ்ரயா... சொன்னா புரிஞ்சிக்கோ இது எதிர்பாராமல் நடந்த ஒரு சின்ன ஆக்சிடன்ட்...”
“ஆமா பேபி.... தேவ் சொல்வது சரி தான்... இது எதிர்பாராமல் நடந்த ஆக்சிடண்ட்... தேவ்விற்கு கால் ஸ்லிப் ஆகாமல் இருந்திருந்தா இந்த ஆக்சிடண்ட் நடந்திருக்காது....” என்று இருவரும் ஸ்ரவ்யாவை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்க அப்போது அபியும் அங்கு வந்தான்....
அவனிடமும் ஸ்ரவ்யா இதையே சொல்லி புலம்ப அவனும் சமாதானப்படுத்த முயன்று தோற்றான்....
இவ்வாறு புலம்பியபடியிருந்தவள் திடீரென மயங்கி சரித்திர ஆடவர் மூவரும் பதறி அவளை ஓ.பி.டி இற்கு அழைத்து செல்ல அங்கிருந்த வைத்தியர் பரிசோதித்து விட்டு அவள் காலையில் எதுவும் உண்ணாததால் வந்த மயக்கம் என்று கூறியவர் சேலேன் ஏற்றி முடித்ததும் அழைத்து செல்லலாம் என்று கூறினார்..... அபியிடம் அஜய் தேவ்வை அழைத்து செல்ல கூற அவனோ மறுத்தான்...
அவனுக்கு இப்போது ஓய்வு தேவை என்று அபியும் வற்புறுத்த தேவ் கிளம்பத்தயாரானான்.... செல்லும் போது ஸ்ரவ்யாவை அபி வீட்டிற்கே அழைத்து வர சொன்னான் தேவ்.....
தேவ் சென்று சற்று நேரத்தில் ஸ்ரவ்யாவும் கண்விழித்திட தன்னருகே அமர்ந்திருந்த அஜயிடம்
“அஜூ ராகவ் எங்க??? எங்க போயிட்டான்???”
“அபி கூட்டிட்டு போயிருக்காரு... உனக்கு இப்போ எப்படி இருக்கு??”
“கால் பண்ணி ராகவ்வை வரச்சொல்லு.... நாங்க ஊருக்கே போறோம்.... இங்கே இருந்தால் அப்பு உயிருக்கு ஆபத்து.... எனக்கு எதுவும் வேண்டாம்... என் ராகவ் மட்டும் போதும்... ப்ளீஸ் அபி அண்ணாகிட்ட சொல்லி அப்புவை வரச்சொல்லு.... நான் அவன் கூட அத்தை வீட்டுக்கோ போயிடுறே
ன்...” என்று பயத்தில் கெஞ்சியவளின் வேதனை புரிந்த போதிலும்
“பேபி... முதலில் நீ ரிலேக்ஸாகு.... எதுக்கு இப்போ இவ்வளவு டெனஷனாகுற??? முதலில் உன்னோட ட்ரிப்ஸ் முடியட்டும். வீட்டுக்கு போனதும் மற்றதை எல்லாம் பேசிக்கலாம்... அதுவரை எதைபற்றியும் யோசிக்காமல் அமைதியாக இரு பேபி... உன் அஜூ சொல்றேன்ல...”
“இல்லை...இன்னைக்கு அப்புவை கொல்ல முயற்சி பண்ணவங்க நாளைக்கு உன்னையும் ஏதாவது செய்ய முயற்சிப்பாங்க... வேணாம் அஜூ... நீயும் இங்கே இருக்காத.... கனடாவிற்கே போயிடு.... உனக்கு ஏதாவது நடந்தா மாமாவும் மாமியும் தாங்கமாட்டாங்க.... நான் சொல்வதை கேளு அஜூ..... இந்த கேஸ் சொத்து எதுவும் வேண்டாம்..... எல்லாம் அவங்களே அனுபவிக்கட்டும்... ப்ளீஸ் அஜூ நான் சொல்வதை கேளுடா...”
“ஓகே... ஓகே.... நீ சொல்வதை நான் கேட்குறேன்...... நீ இப்போ ரிலேக்ஸ் ஆகு..... வீட்டுக்கு போனதும் மற்றதை பேசிக்கலாம்.......” என்று அவளை அப்போதைக்கு அமைதிப்படுத்தினான் அஜய்...
ஸ்ரவ்யாவிற்கு சேலேன் ஏற்றி முடித்ததும் அவளை அழைத்துக்கொண்டு அஜயும் அபியின் வீட்டை நோக்கி சென்றான்...
அபியின் வீட்டிற்கு வந்ததும் அபியும் அஜயும் ஸ்ரவ்யாவை ஓய்வெடுக்கச்சொல்ல அவளோ தேவ்வை பார்க்கவேண்டுமென சொல்லி பிடிவாதம் பிடிக்க அபியோ
“சூட்டி.. அவன் அசந்து தூங்குறான் மா.. நீயும் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு.... பிறகு அவனை பார்க்கலாம்..” என்று கூற
“ப்ளீஸ்னா... அவனை டிஸ்டர்ப் பண்ணாமல் நான் பார்க்குறேன்...” என்று சொல்லிவிட்டு ஸ்ரவ்யா அறையினுள் செல்ல அஜயும் அபியும் அவளை பின் தொடர்ந்தனர்.......
தேவ் கட்டிலில் நேராக படுத்திருந்தான்... அவன் வலக்கையில் மாவுகட்டு இருக்க அது கழுத்துடன் பாண்டேஜ் கொண்டு நிறுத்தப்பட்டிருக்க அதை அசைக்காது மார்பின் மீது வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தான்.
சத்தமில்லாமல் அவனருகே சென்றவருக்கு கண்ணீர் பெருக்கெடுக்கி அழுகையில் குலுங்கியவளை கைபிடித்து அங்கிருந்து வெளியே இழுத்து வந்த அஜய்
“என்ன பேபி பண்ணுற?? எதுக்கு இப்படி அழுற?? என்ன நடந்துபோச்சுனு இப்படி அழுதுட்டே இருக்க?? நீ அழுவதை பார்த்தால் தேவ் கஷ்டப்படுவாரு உனக்கு தெரியாதா??”
“ஆமா அஜூ.... நான் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்....”
“ஹேய் பேபி நான் என்ன பேசிட்டு இருக்கேன்... நீ என்ன சொல்லிட்டு இருக்க??”
“இல்லை அஜூ... இன்றைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்... நீ எல்லா கேசையும் வாபஸ் வாங்கு... இதுக்கு பிறகும் அந்த சொத்துக்காக உனக்கும் தேவ்விற்கும் எந்த ஆபத்தும் வரக்கூடாது... இனியும் என் புருஷன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்....”
“பேபி.. நீ.. என்ன சொல்லுற?? உன் ஹஸ்பண்டா??”
“ஆமா...” என்றவள் உள்ளே மறைத்துவைத்திருந்த அந்த மஞ்சள் கயிற்றினை எடுத்து காட்டினாள் ஸ்ரவ்யா..
அதை கண்டு அபியும் அஜயும் அதிர்ந்திருக்க ஸ்ரவ்யாவே அன்று நடந்த அனைத்தையும் கூறினாள்...
“பேபி... உன்னோட பயம் எனக்கு புரியிது... ஆனால் நீ தேவ் என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சுக்கணும் தானே பேபி....”
“ராகவ் எப்பவும் எனக்காகனு எந்த ரிஸ்க்கும் எடுக்க தயங்கமாட்டான்.... ஆனால் என்னுடைய சுயநலத்திற்கு அவனை பலி கொடுக்க முடியாது.... டைவர்ஸ் கிடைச்சிடுச்சு... இனிமேல் நான் தேவ் கூட சேர்ந்து வாழ்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை...நீ உடனே நாங்க நுவரேலியா போக ஏதாவது வெஹிகல் புக் பண்ணு.... இங்கு இருப்பது தேர்விற்கு பாதுகாப்பில்லை...... அபி அண்ணா நீங்களாவது அவனுக்கு எடுத்து சொல்லுங்க ப்ளீஸ்.....”
“பேபி நீ எப்பவும் நிதானமாகவே முடிவெடுக்கமாட்டியா??? எதற்கு எல்லா விஷயத்திலும் அவசரப்படுற??? உன்னோட அவசரம் தான் இதுவரை நடந்த எல்லா பிரச்சினைக்கும் முக்கிய காரணம்..... பிரச்சினை வரும்போதெல்லாம் கொஞ்சம் நிதானமாக யோசிச்சிருந்தால் இந்த பிரச்சினையை இவ்வளவு தூரத்திற்கு வரவிடாமல் தடுத்திருக்கலாம்...”
“அஜூ புரியாமல் பேசாத..... இப்போவே அவங்க ராகவை கொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.....இனி கேஸ் ஆரம்பித்ததும் எது வேணாலும் பண்ணுவாங்க.... அந்த சொத்துக்காக என்னுடைய தேவ்வின் உயிரை பணயம் வைக்க முடியாது....”
“ஆனால் உன் ராகவ் ஏற்கனவே உனக்காக அவன் உயிரை பணயம் வச்சிட்டான்...”
“நீ... நீ... என்ன சொல்லுற அஜூ....??”
“ஆமா பேபி.. நீங்க ஊரில் இருக்கும் போதே அந்த லாயரோட ஆட்கள் உன்னையும் தேவ்வையும் தேடி அங்கு வந்திருக்காங்க..... ஆனால் தேவ் அவங்களை திசை திருப்பி அழைச்சிட்டு போய் அவங்களை போலிஸ்கிட்ட மாட்டிவிட முயலும் போது அவனுங்க தேவ்வை தாக்க வந்திருக்காங்க.... அப்போ அந்த நேரம் சரியாக தேவ்வோட ப்ரண்ட்ஸ் வர அவங்க மூலமாக அவங்களை போலிஸிடம் ஹேண்டோவர் பண்ணியிருக்காரு தேவ்.....இது உனக்கு தெரியுமா??? அது மட்டும் இல்லை..... தேவ்வை இதற்கு முதலும் ஒரு முறையும் ஆக்சிடன்ட் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க..... இவ்வளவு நடந்தும் கூட தேவ் சொத்து விஷயத்தில் பிடிவாதமாக இருக்காருனா அதுக்கு காரணம் நீ மட்டும் இல்லை..... அத்தை தாத்தாவோட ஆசையும் தான்...... ஒரு மகள் வயிற்று பேரனாக தன் தாத்தாவோட ஆசையை நிறைவேற்றனும்னு தேவ் ஆசைப்படுறாரு...... இதை நீ புரிந்துக்கொள்ள முயற்சி பண்ணு பேபி.... உனக்கு தேவ் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தேவ்விற்கும் தன்னோடு தாத்தாவோட ஆசையை நிறைவேற்றனும்னு நினைக்கிறாரு... அதுக்கு நீ தடையாக இருப்பது சரியா??” என்று அஜய் தேவ்வின் நிலையை எடுத்துரைக்க ஸ்ரவ்யாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை . .. என்றுமே அவன் விருப்பத்திற்கு தான் தடையாக இருக்கக்கூடதென்று எண்ணியிருந்தவளுக்கு அஜயின் இந்த கருத்தை ஏற்பதில் பயம் மட்டுமே நிறைந்திருந்தது......
ஆபத்து நிறைந்திருக்கும் சூழலில் தேவ்வை அனுமதித்து அவனுயிரை பணயம் வைக்க ஸ்ரவ்யாவின் மனம் ஒப்பவில்லை.....
பணத்தாசை மிகையாயிருக்கும் மனிதர்கள் வேட்டை நாய்களை விட கொடியவர்கள்.... அப்படிபட்டவர்களை எதிர்க்கும் போது இவ்வாறு நிகழ்வது சாதாரணம் என்றபோதிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும் போது மனம் பதறுவது யதார்த்தமே.... ஸ்ரவ்யாவின் நிலையும் அதுவே.... உயிரில்லா பொருளிற்காக தன் உயிரானவனின் உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாதென்று பயந்தது அந்த பேதையின் மனம்....
“பேபி..... நீ என்ன நினைக்கிறது புரியிது..... இது எதிர்பாராமல் நடந்த ஒரு ஆக்சிடன்ட்... ஆல்ரெடி உனக்கும் தேவ்விற்கும் பாதுகாப்பிற்கு உனக்கு தெரியாமல் இரண்டு பார்டிகார்ட்சை ரெடி பண்ணியிருக்கேன்.... இது தேவ்விற்கும் தெரியும்... அதனால் தான் கொஞ்சம் அசால்டாக இருந்துட்டோம்...... இல்லைனா இன்னைக்கு இந்த ஆக்சிடன்ட் நடந்திருக்காது.....என்னை நம்பு பேபி.... இனி தேவ்விற்கு எந்த ஆபத்தும் வராது.... நீயும் தேவ்வும் இங்கிருந்து போகும் வரை உங்க பாதுகாப்புக்கு இரண்டு பார்டிகார்ட்ஸ் இருப்பாங்க.... அதோடு போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கோம்..... அவங்களும் தேவையான ஆக்ஷனை எடுப்பாங்க..... நீ அநாவசியமாக பயப்படாத பேபி..... ப்ளீஸ்... நான் சொல்வதை புரிஞ்சிக்கோ....” என்று அஜய் அனைத்தையும் விளக்க ஸ்ரவ்யாவும் யோசிக்கத்தொடங்கினாள்....
இவ்வாறு பயந்து பின்வாங்குவதில் எந்த பலனும் கிட்டப்போவதில்லை..... இப்போது விலகிப் போவதால் நிச்சயம் எதிர்காலத்தில் அவர்கள் தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்று கூறமுடியாது..... இதற்கான முடிவு தெரிந்தாலொழிய வேறு உபாயம் இல்லை என்று அவள் மனம் கூறியது..... அதோடு அஜய் கூறிய தேவ்வின் விருப்பமும் அவளை தடுத்திட அஜய் கூறியதை ஏற்பதற்கு அவள் மனம் ஒப்புக்கொண்டது....
“சரி அஜய்... நாங்க இங்கேயே இருக்கோம்.......ஆனால் தேவ்விற்கு எந்த ஆபத்தும் வராமல் நீ தான் பார்த்துக்கணும்...”
“சரி அதை நான் பார்த்துக்கிறேன்...... நீ எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.... புரியிதா??”
“ம்ம்.... சரி அஜூ....”
“சரி நீ போயிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.....நானும் அபியும் கொஞ்சம் வெளியில போயிட்டு வரோம்.... நீ ரெஸ்ட் எடு....” என்று கூற அபியும் அவளுக்கான அறையை காட்டிட ஸ்ரவ்யாவும் அங்கு சென்று ஓய்வெடுக்கத்தொடங்கினாள்..
அறையில் அஜய் கொண்டு வந்து வைத்திருந்த உடையை எடுத்து சென்று மாற்றிவந்தவள் கட்டிலில் விழ நித்திராதேவி அவளை அணைத்துக்கொண்டாள்.....
மாலை நான்கு மணியளவில் கண்விழித்தவளுக்கு பசியெடுக்க அறையிலிருந்து வெளியே வந்தாள்...
ஹாலில் அஜய் மட்டுமே இருக்க
“அஜூ...” என்றழைக்க
“எழுந்துட்டியா?? சாப்பிடுறியா பேபி???”
“பசிக்கிது அஜூ....”
“வா...சாப்பிடலாம்...” என்று கூற ஸ்ரவ்யாவும் சென்று ப்ரஸப் ஆகிவர அவளுக்கு வாங்கியிருந்த உணவுப்பொதியை அவளுக்கு கொடுக்க அதை கண்டவள்
“தேவ் சாப்பிட்டானா அஜூ...??”
“ஆமா பேபி... டேப்லட்ஸ் போடனும் பேபி... அதான் ஹேர்லியாவே அபி பீட் பண்ணிட்டாரு.... இப்போ மறுபடியும் அசந்து தூங்குறாரு....”
“ரொம்ப வலியிருக்கா அஜூ....”
“பெயின் கில்லர் கொடுத்திருப்பதால் இப்போ பரவாயில்லை பேபி.. நீ சாப்பிட்ட பிறகு போய் பார்த்திட்டு வா...” என்று அஜய் கூற ஸ்ரவ்யாவும் தன் பொதியை பிரித்து உணவுண்ணத்தொடங்கினாள்...
அப்போது அஜய்
“ஏன் பேபி உனக்கும் தேவ்விற்கும் மேரேஜான விஷயத்தை என்கிட்ட முன்னாடியே சொல்லலை...??”
“அது வந்து.... இப்போதைக்கு யாருக்கும் தெரியவேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தோம்.... அதான்.... அதோடு இது என்னோட மனத்திருப்திக்காக தேவ் கட்டியது..... அவனுக்கு இப்படி யாருக்கும் தெரியாமல் மேரேஜ் பண்ணுவதில் விருப்பம் இல்லை... ஆனா இதை என் பயத்தை போக்கனும்னு தான் என் கழுத்தில் கட்டினான்...... அதனால் தான் இது வெளியில் தெரியவேண்டாம்னு நான் தான் தேவ்விற்கு சொன்னேன்.....”
“விட்டுக்கொடுக்க மாட்டியே உன் அப்புவை...”
“ஆமா... அவனை எப்படி நான் விட்டுக்கொடுக்க முடியும்??”
“அதானே.... எல்லாம் சரி... இப்போதாவது உன் ஆளு உனக்கு ப்ரபோஸ் பண்ணாறா??”
“இன்னும் இல்லை... ஆனா பிளானெல்லாம் பக்காவா பண்ணி வச்சிருக்காரு.....”
“பிளானா?? அது எப்படி உனக்கு தெரியும்...??”
“அவன் டைரியில் படித்தேன்....”
“ம்ம்.. நீ எப்போ ப்ரபோஸ் பண்ண போற பேபி.... ??”
“அவனோட பர்த்டேக்கு...”
“அது எப்போ??”
“நெக்ஸ்ட் வீக் வருது...... வெளியில் கூட்டிட்டு போகலாம்னு தான் பிளான் பண்ணேன்... ஆனா இப்போ அவன் இருக்க நிலைமைக்கு வெளியில கஷ்டம்.... வீட்டுலேயே தான் ஏதாவது செய்யனும்....”
“என்ன செய்யனும்னு சொல்லு செய்திடலாம்...” என்று அஜய் கேட்க தன் திட்டத்தை கூறினாள் ஸ்ரவ்யா..
அதை கேட்டவன் தான் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதாக கூறி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான்....
அஜயோடு பேசியபடியே உணவை உண்டு முடித்தாள் ஸ்ரவ்யா...
பின் தேவ்வை சென்று பார்க்க அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்...
அவனை தொந்தரவு செய்யாது வந்து ஹாலில் அமர்ந்தவள் அஜயோடு கதையளந்தபடியிருந்தாள்....
இவ்வாறு ஒருவாரம் கடந்திருக்க என்றும் போல் அன்றும் காலையில் எழுந்ததிலிருந்து தேவ்விற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தாள் ஸ்ரவ்யா...
அன்று காலை அவள் வழமைக்கு மாறாக பரப்பரப்பாக இருப்பதை போல் உணர்ந்த தேவ் தனக்கு உணவூட்டிக்கொண்டிருந்தவளிடம்
“என்னாச்சு ஸ்ரயா ஏதாவது பிரச்சினையா??”
“அப்படி எதுவும் இல்லையே?? ஏன் கேட்குற??”
“இல்லை… நீ ஏதோ டென்ஷனாக இருக்கமாதிரி இருக்கே… அதான் கேட்டேன்….”
“அதெல்லாம் எதுவும் இல்லை… இன்னைக்கு ஆஸ்பிடல் போகனும்ல.. அதான்…”
“அதுக்கும் நீ டென்ஷனாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்???”
“அது… அது…. ஆ…உன்னை கூட்டிட்டு போக அஜய் கிட்ட வெஹிகல் அரேன்ஜ் பண்ண சொன்னேன்… ரெடி பண்ணானானு தெரியலை.. அதான் யோசிச்சிட்டு இருந்தேன்…” என்று ஸ்ரவ்யா கூற தேவ்வோ சிரிக்கத்தொடங்கினான்….
அவனது சிரிப்பில் குழம்பியவள்
“இப்போ… இப்போ நீ எதுக்கு சிரிக்கிற??”
“வேற என்ன பண்ண?? அபி கிளம்பும் போது தானே அவன் வந்து நம்மை ஹாஸ்பிடலிற்கு அழைச்சிட்டு போறதாக சொன்னான்… நீ இப்படி சொன்னா சிரிக்காமல் வேறு என்ன பண்ணுறது???”
“ஓ….. அண்ணா சொன்னாங்கல… மறந்துட்டேன்…..”
“ஏதோ என்கிட்ட மறைக்கிறது புரியிது… உன் மனசை பாதிக்கிற விஷயம்னா என்கிட்ட சொல்லிட்டு ஸ்ரயா….”
“இல்லை அப்பு… அப்படியெல்லாம் எதுவும் இல்லை…. நான்…. நான்…”
“சரி விடு…. எனக்கு போதும்... நீயும் போய் சாப்பிடு…. லேட்டாகிடுச்சு…..” என்று ஸ்ரவ்யாவை அனுப்பி வைத்தபோதிலும் தேவ்விற்கு ஸ்ரவ்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் தீரவில்லை. இது மாலை வரை தொடர இரவு எட்டு மணிக்கு மருத்துவமனைக்கு அபியோடு மருத்துவமனைக்கு சென்றவர்கள் அங்கிருந்து கிளம்ப இரவு பதினொரு மணியாகிவிட்டது.....
மூவரும் வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்...
அபி தன் வாகனத்தை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வருவதாக கூறிட ஸ்ரவ்யா தேவ்வை அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மண்டிற்கு அழைத்து வந்தாள்..... வீட்டு வாசலிற்கு வந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட
“ஓ மை காட்... இந்த நேரத்தில் கரெண்டை கட்பண்ணிட்டாங்களே.... இப்போ எப்படி தூங்குவது??”
“இன்னும் வீட்டுக்குள்ளேயே போகலை அதுக்குள்ள தூங்குறதை பற்றி கவலைபடுறியே அப்பு...??” என்று ஸ்ரவ்யா சிரிக்க
“பாரின் போயிட்டு வந்ததிலிருந்து ஏசி இல்லாமல் தூங்கமுடிறதில்லை.. ஊருல நைட்டான குளிர் அப்படீங்கிறதால ப்ராப்ளம் இல்லை... இங்கே ஏசி இல்லாமல் தூங்கமுடியாது... அதுவும் இன்னைக்கு வழமையை விட ஹீட் அதிகமாக இருக்கு...”
“ஏதாவது சின்ன ப்ராப்ளமாக இருக்கும் ராகவ்... கொஞ்ச நேரத்துல வந்திடும்னு நினைக்கிறேன்....”
“வந்தா நல்லது....” என்று பேசியபடி தன் மொபைலின் டார்ச் லைட்டை தேவ் ஆன் செய்ய ஸ்ரவ்யா அதன் உதவியோடு கதவை திறந்தாள்...
தேவ்வை அழைத்து சென்று சோபாவில் அமரவைத்தவள் அவன் மொபைலை அவனிடமிருந்து வாங்கி
“இரு ராகவ்.... கேண்டல் எங்கே இருக்குன்னு தேடி எடுத்துட்டு வரேன்....” என்றவள் டார்ச்லைட்டின் உதவியோடு உள்ளே சென்றாள்....
தேவ்வின் கண்களுக்கு இருட்டு ஒரு வித குறுகுறுப்பை கொடுத்திட சோஃபாவில் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டான்......
சற்று நேரத்தில் வெளிச்சம் அவன் கண்களை உறுத்த கண்விழித்துபார்த்தவன் அதிர்ந்தான்.....
வீடுமுழுதும் மெழுவர்த்தி கொண்டு ஒளியூட்டப்பட்டிருந்தது...
அதோடு வீட்டின் சுவர் முழுதும் தேவ்வும் ஸ்ரவ்யாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது.....
அதோடு நிலத்தில் அங்காங்கே ரோஜாப்பூக்கொத்தும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது....
ஸ்ரவ்யா பால்கனியில் நின்றிருக்க தேவ்வோ தன் அடிபடாத கையினால் அங்கிருந்த பூங்கொத்துக்களை எடுத்தவன் அதிலிருந்து கடிதத்தை எடுத்து படித்தான்........
முதல் கடிதத்தில்
முதல் நொடி
உன் விழிகளை
சந்தித்தபோது
இதுவே என் வாழ்வென்று
உணர்ந்தது
என் மனம்
என்றிருந்தது.... அடுத்ததாக இன்னொரு பூங்கொத்துடன் ஒரு கடிதமிருந்தது...
அதில்
என்னை அறியாமலே
என் மீது
உன் அன்பு
படிந்ததை
உணர நீ
எடுத்துக்கொண்ட
நொடிகள்
பல யுகங்களை
எனக்கு
உணர வைத்தது......
என்றிருந்தது...

மூன்றாவதாக இருந்த பூங்கொத்தில்
காதல் காதலிக்கப்படுவதால்
மட்டுமல்ல
காதலுக்காக
உருகும் வேளையிலும்
உணர முடியுமென்று
நான் உணர்ந்தது
உன் விழிகள்
என்னிடம்
காதல் யாசகம்
வேண்டி நின்ற போது....

என்றிருந்தது...
அடுத்த பூங்கொத்தில் இன்னொரு கவிதை இணைக்கப்பட்டிருந்தது...

அதட்டி உருட்டி
மிரட்டும்
அதரங்களுக்கு
கள்ளப் புன்னகையை
தவழவிடத்தெரியுமென்று
உணர்ந்தேன்
நான்
உன்னிடம்
சண்டையிட்ட நொடியில்......

என்றிருக்க அதை கண்டவனது இதழ்கள் இப்போது அந்த கள்ளப்புன்னகையை கொள்வனவு செய்திருந்தது..... கவியாய் ஸ்ரவ்யா கூறியிருந்தது உண்மையே... எப்போதெல்லாம் அவள் தேவ்விடம் சண்டையிடுகிறாளோ அவ்வேளைகளில் அவள் செயல் தேவ்விற்கு உவகையை உண்டு பண்ணும்... எங்கே வெளிக்காட்டினால் அவள் கோபம் இன்னும் அதிகரிக்குமோ என்று தேவ் வெளிப்படுத்துவதில்லை... சில வேளைகளில் அவனை மீறி புன்னகை வெளிப்படும் போது அவற்றை இதழ்களுக்குள்ளேயே மறைத்திட அவன் படாதபாடுபடவேண்டியிருக்கும்......அதையே ஸ்ரவ்யா இவ்வாறு கூறியிருந்தாள்........
அடுத்த பூங்கொத்தும் இன்னொரு கவியை தாங்கியிருந்தது....
கண்ணன் குழலோசை
ராதையின்
மனதை வருடும்
காதல் கீதம்
உன் கிட்டார்
தந்திகள் மீட்டும்
ஒலியோ
என்றும்
என் உயிரை
உறையவைக்கும்
ருத்ர கீதம்...

என்றிருந்தது...

அடுத்த பூங்கொத்தில்
உன் அணைப்பும்
உன் நெருக்கமும்
என் உடலும்
மனமும் மனமும்
விரும்பும்
பாதுகாப்பு கவசங்கள்...
என்றிருந்தது...

அடுத்த பூங்கொத்தில்
காதலன் கணவனாவதும்
கணவன் காதலனாவதும்
உலக வழமையே
நீயோ
அந்த உறவை
தாண்டி
எனக்கு அன்னை தந்தையாகி
என் இயக்கத்திற்கு
காரணமாகினாய்.....
என்றிருந்தது...

அடுத்த பூங்கொத்தில்
விழிகளும் செவிகளும்
உன் அருகாமையை
உணராத போதிலும்
என் இதயமும்
உயிரும்
உன் அருகாமையை
என்றும்
மறந்ததில்லை.....
என்றிருந்ததில்லை

அடுத்த பூங்கொத்தில்
வாழ்வின்
அர்த்தம்
உணர்ந்தேன்
உன் கரங்கள்
என் கழுத்தில்
அந்த மூன்று
முடிச்சுக்களை
இறுக்கமாயிட்ட
போதினில்...
என்றிருந்தது....

அதை கண்டவனது அதரங்கள் மீண்டும் ஒரு புன்னகையை மீண்டெடுத்தது....மீண்டுமொருமுறை அந்த கவியை படித்தவனுக்கு அந்த வரிகளிலிருந்த காதல் மெய்சிலிர்க்க வைத்தது...
இன்னுமொரு பூங்கொத்து மட்டும் மீதமிருக்க அதையும் கையிலெடுத்தான்....

அதில்
நினைவிழந்த போதிலும்
நெஞ்சம் மறக்கவில்லை
உன்னை
சுவாசிக்க மறந்த போதிலும்
உயிர் மறக்கவில்லை
உன்னை
துடிக்க மறந்த போதிலும்
இதயம் மறக்கவில்லை
உன்னை
மொத்தமாய்
என்னை ஆளும்
வல்லமை
படைத்த என்
உயிரான
என் கணாளனுக்கு
அவன் மனையாளின்
இதயம் கனிந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ......
என்றிருக்க அப்போது மணியை பார்க்க நேரம் பன்னிரெண்டை காட்டியது.. அப்போது தான் திகதியை பார்த்தவனுக்கு தன் பிறந்தநாள் என்ற நினைவு வர இந்த ஏற்பாட்டின் அர்த்தம் புரிந்தது...
கையில் வைத்திருந்த பூக்கொத்துக்களை ஒரு புறமாக வைத்தவனை கலைத்தது கீபோர்டின் ஒலி.....
உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர
வாழ்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
நான் உன் கூட…
உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்…
நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்
பெண்ணே பெண்ணே
வாழ்க நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN