Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 24
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

தேவ் பால்கனிக்கு செல்ல அங்கும் சுற்றி மெழுகுவரத்திகள் ஏற்றப்பட்டிருக்க ஸ்ரவ்யாவோ ஐபேட்டில் கீபோர்ட் ஆப்பின் மூலம் வாசித்துக் கொண்டிருந்தாள்.....

அவளருகே தேவ் சென்றதும் வாசிப்பதை நிறுத்தியவள்

“ஹாப்பி பர்த்டே புருஷா...” என்று கூறியபடியே அருகில் வைத்திருந்த இன்னொரு ரோஜாப்பூ மலர்கொத்தை தேவ் முன் நீட்ட அவனும் சிரித்தபடியே அதை வாங்கிக்கொண்டவன்

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி..”

“நீ இதை எதிர்பார்க்கலை தானே??”

“நிஜமாகவே எதிர்பார்க்கலை... சொல்லப்போனா இன்னைக்கு எனக்கு பர்த்டேங்கிற விஷயமே எனக்கு நினைவில் இல்லை.....”

“ஆனா எனக்கு நியாபகம் இருக்கு..... உன்னை வெளியில் கூட்டிட்டு போகலாம்னு தான் நினைத்தேன்... ஆனா அடிபட்ட கையோடு உன்னை அலைக்கழிக்கவேண்டாமேனு தான் வீட்டுலயே என்னால் முடிந்தளவு உன்னை சப்ரைஸ் பண்ணனும்னு முடிவு பண்ணேன்.... உனக்கு பிடிச்சிருந்தது தானே???”

“ஆமா...... ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.......”

“ சரி சரி வா அப்பு கேக் கட் பண்ணலாம்..” என்று அவன் கை பிடித்து அழைத்து வந்தவள் கேக்கை எடுத்து வந்து மேசை மீது வைத்தாள்.... அதில் கேன்டில் ஏற்றியவள் அவனை வெட்டச் சொல்ல தேவ்வும் கத்தியை எடுத்தவன்

“நீயும் வா ஸ்ரயா சேர்ந்து கட் பண்ணலாம்.....” என்று கூற ஸ்ரவ்யாவும் அவன் கைபிடிக்க இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினர்....

கேக் துண்டொன்றை எடுத்த ஸ்ரவ்யா தேவ்விற்கு ஊட்டியபடியே

“ஹேப்பி பர்த்டே புருஷா....” என்று மறுபடியும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க தேவ்வும் நன்றி கூறினான்....

“ஏன் அப்பு உனக்கு சப்ரைஸ் பர்த்டே பார்ட்டி எல்லாம் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்..... ஒரு நன்றி கூட சொல்லமாட்டியா??”

“நமக்கு நெருக்கமானவங்களுக்கு நன்றி சொல்லக்கூடாதுங்கிறது என்னோட பாலிசி.... அது நமக்கும் அவங்களுக்கும் இடையிலான உறவை தூரப்படுத்தும்னு நான் நம்புறேன்....”

“அப்படியா... அப்போ நன்றி சொல்லாத.... ஆனாலும் நீ எனக்கு தேங்க் பண்ணனும்.... அது எப்படின்னு நீ தான் யோசிக்கனும்....”

“ஓ.... அப்படி... சரி சரி புரிஞ்சிடுச்சு....”

“என்ன புரிஞ்சிது உனக்கு??”

“அதான் மா நீ சொன்னது புரிந்ததுனு சொன்னேன்...”

“என்ன புரிந்ததுனு சொல்லு பார்ப்போம்....”

“சொல்லுறேன்... அதுக்கு முதலில் நீ கொஞ்சம் கிட்ட வா...” என்று தேவ் கூற ஸ்ரவ்யாவும் அவனை நெருங்கத்தொடங்க அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கரம் பற்றி இழுத்திட ஸ்ரவ்யா தேவ் மீது விழுந்திட ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்தான்...

அவனது திடீர் செயலில் அவள் உள்ளம் தாறுமாறாக துடிக்க உடலோ ஒருவித நடுக்கத்தை தத்தெடுத்திருந்தது....

பயத்தில் ஸ்ரவ்யா கண்மூடிக்கொள்ள தேவ்வோ அவள் செயலில் உள்ளுக்குள் சிரித்தான்....

அவன் கையில் மயங்கி நின்றவளின் முன்னுச்சியில் மென்மையாய் முத்தமிட்டமிட்டவன்

“லவ்யூ டி பொண்டாட்டி.....” என்று கூறி அவளை மெதுவாக விடுவிக்க ஸ்ரவ்யாவோ கண்களை திறந்தபாடில்லை...

அந்த இருள் சூழ்ந்த வேளையில் அவளுள் பல ரசாயன மாற்றங்கள் நிகழ அதன் தாக்கத்தின் விளைவால் அவளுள் எண்ணிலடங்கா மாற்றங்கள்...

இவ்வாறு தேவ் அவளை அணைப்பது இதுவே முதல் முறை... இதற்கு முன் அவன் அணைப்பில் அன்பை தவிர வேறெதும் இருந்ததை அவள் உணர்ந்ததில்லை... ஆனால் இன்றைய அணைப்பில் கணவன் என்ற உரிமையும் அதையும் மீறிய அழுத்தமும் இருந்ததை அவள் மனம் உணர்ந்தது.... அதன் தாக்கமே இந்த பயமும் படபடப்பும்...

தேவ் விடுவித்ததும் மெதுவாய் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவள் தன்னிலை மீண்டு கண்களை திறக்க தேவ்வோ அவளெதிரே நின்று அவள் செய்கைகளை ரசித்தபடியிருந்தான்.....

அவனுக்கு அவளின் செயலிற்கான அர்த்தம் புரிந்தது..... அதனாலேயே அவன் அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.... அவன் மனமும் அந்த அணைப்பிற்காக ஏங்கியிருக்க எங்கே அந்த ஏக்கம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுவிடுமோ என்ற பயத்திலேயே அவன் அவளை விடுவித்திருந்தான்.....

தன் விழிகளை திறந்து எதிரிலிருந்தவனை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்ன மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் ஸ்ரவ்யா..

அவள் செயலில் சிரித்த தேவ்

“என்ன ஸ்ரயா என் நன்றி எப்படி இருந்தது??” என்று கேட்க அவளோ ம்ம்ம் என்று கூறிட

“என்ன என் பொண்டாட்டி திடீர்னு சைலண்டாகிட்டா??? சரியில்லையே ....”

“ஆமா... நீ தான் சரியில்லை......”

“நான் என்னம்மா சரியில்லை.... நீ தானே தேங்க்ஸ் சொல்லனும்னு சொன்ன??? அதான் சொன்னேன்... இதுல என்ன இருக்கு??”

“அப்பு... நீ இன்றைக்கு ரொம்ப ஓவரா பண்ணுற???”

“அப்படியா ஸ்ரயா.....?? சரி நீயே சொல்லு எப்படி ஓவரானதை குறைப்பதுனு...”

“அது... அது.... நீ என்னை கிண்டல் பண்ணுற...”

“ஹேய் நான் சீரியஸாக தான் கேட்குறேன்..... சொல்லு...”

“ஒன்றும் வேண்டாம்.... நீ இரு... நான் உனக்கு ஒரு கிஃப்ட் வைத்திருக்கேன்... அதை எடுத்துட்டு வர்றேன்.....” என்றவள் அங்கிருந்து நகர அவள் செயலில் சிரித்தான் தேவ்....

சற்று நேரத்தில் வந்தவளது கையில் ஒரு பரிசுப்பொதியிருக்க அதை தேவ்வின் புறம் நீட்டினாள் ஸ்ரவ்யா....

அதை வாங்கியவன் அவளையே பிரித்துக் காட்ட சொல்ல ஸ்ரவ்யாவும் அந்த பொதியை பிரிக்கத்தொடங்கினாள்...

உள்ளே ஒரு வெள்ளை நிற பெரிய பந்தும் ஸ்டேண்டும் இருந்தது.... அது 3டி மூன் பால் லைட்......அதை எடுத்து பொருத்தியவள் அதன் ஸ்விட்சை இயக்க அது நிலா போல் ஒளியை வெளியிடத்தொடங்கியது... அதில் தேவ்வும் ஸ்ரவ்யாவும் சேர்ந்து எடுத்து கொண்ட படமொன்று பென்சில் ஸ்கெட்ச் போல் தென்பட அதன் கீழ் “ஹேப்பி பர்த்டே மை டியர் லவ்” என்று தென்பட்டது... அந்த இரவின் வெளிச்சத்தில் அந்த அமைப்பு அழகாயிருந்தது......

மண்டியிட்டு அதை பார்த்த தேவ்

“ஸ்ரேயா சூப்பரா இருக்குமா.... இது எப்போ ரெடி பண்ண??”

“ஆன்லைன்ல ஆர்டர் பண்ணேன்.... நானா ஏதாவது செய்யனும்னு தான் யோசிச்சேன்.... ஆனா உன்னை தனியாக விட்டுட்டு என்னால் எதுவும் பிளான் பண்ண முடியலை.... அதான் ஆன்லைன்லயே டிசைன் செலெக்ட் பண்ணி ஆர்டர் கொடுத்தேன்.... அவங்களும் நான் கேட்டபடியே இன்னைக்கு மார்னிங் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க....”

“நல்லா இருக்கு...... ஆனா எதுக்காக இதை செலெக்ட் பண்ணனு தெரிந்துக்கொள்ளலாமா??”

“சொல்லுறேன்... அந்த பாலை பாரு தூரத்தில் இருந்து பார்த்தா நிலா மாதிரி தானே இருக்கு...”

“ஆமா....”

“இந்த இருட்டில் கூட அதோடு ஒளி பிரகாசமாக தெரியிதா??”

“ஆமா தெரியிது.....”

“ம்ம்ம்..... அதே மாதிரி... நம்ம வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் நம்ம காதல் என்றும் இந்த மூன் பால் மாதிரி ஒளி வீசி பிரச்சினையை இல்லாமல் பண்ணிடனும்.... அதை சிம்பளைஸ் பண்ணுறதற்கு தான் இதை வாங்கினேன்.... இது நமக்கு மட்டும் உரித்தானதாக இருக்கனும்னு தான் நம்ம பிக் போட்டு இருக்கேன்.....”

“ஹேய் சூப்பர்பா..... உன் கிப்டை விட உன் விளக்கம் சூப்பராக இருந்தது....”

“தேங்க்ஸ்டா புருஷா.... அது சரி உனக்கு இது பிடிச்சிருக்கா??”

“என் வீட்டுக்காரம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்??”

“சரி வா..... உனக்கு இன்னொரு சப்ரைசும் இருக்கு....” என்றவள் அவனை உள்ளே அழைத்து சென்றவள் சோஃபாவில் அமரச் செய்து ஒரு பென்ட்ரைவை எடுத்து வந்து அதை டீவியில் பொருத்தியவள் அதை இயக்கிட அதில் ஒரு காணொளி ஆரம்பித்தது ..

அதில் தேவ்வின் பெற்றோர் முதற்கொண்டு அவனின் சகோதரர்கள், நண்பர்கள்,கனடாவில் அவனது ஹவுஸ் ஓனர் அங்குள்ள நண்பர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தினர்....

இறுதியாக ஸ்ரவ்யாவின் வாழ்த்தோடு முடிவடைந்திருந்தது அந்த காணொளி...

அதை கண்டவனுக்கு அத்தனை மகிழ்ச்சி... பல வருடங்களாய் அவன் பார்க்காதவர்கள் கூட அவனுக்கு வாழ்த்து தெரிவித்திருத்தினர்...

இத்தனைக்கும் காரணமானவள் அவனருகில் சிரிப்புடன் அமர்ந்திருக்க அதை கண்டவன்

“எப்படி....இது...??”

“அபி அண்ணாவும் அஜூவும் தான் ஹெல்ப் பண்ணாங்க.. உனக்கு பிடிச்சிருக்கா???”

“ரொம்ப பிடிச்சிருக்கு....நான் மிஸ் பண்ண நிறைய பேரோட விஷஸ் எனக்கு கிடைச்சிருக்கு... லவ் யூ புஜ்ஜிமா....” என்று ஒரு கையால் அவளை அணைத்தான்...

அவனது மகிழ்ச்சியை கண்டவளுக்கு புன்னகை மேலிட

“சரி வா... லேட்டாச்சு.... நீ இன்னும் டேப்லட் குடிக்கலை....”

“ம்ஹூம்... இன்னைக்கு நான் மருந்து குடிக்கிறதாக இல்லை..... ஏன்னா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்......”

“சந்தோஷமாக இருந்தா மருந்து குடிக்ககூடாதா??”

“இல்லை.... குடித்தால் சீக்கிரம் தூக்கம் வந்திடும்.. பிறகு எப்படி நான் இன்றைக்கு நடந்த விஷயங்களை எண்ணி சந்தோஷப்படுறது??”

“அதை நாளைக்கு கூட செய்யலாம்... இப்போ நான் டேப்லட் எடுத்துட்டு வர்றேன்.. நீ அதை குடிச்சிட்டு தூங்கு..”

“அதெல்லாம் முடியாது.... எதையும் அந்த உடனே அனுபவித்தால் தான் அதோட தாக்கம் இரு மடங்காக இருக்கும்... நாளைக்குனு ஆறப்போட்டால் அதோட சுகம் குறைஞ்சிடும்...”

“அப்பு... வரவர நீ ரொம்ப பேசுற...”

“உன்னை சமாளிக்க பேசிதானே ஆகனும் ஸ்ரயா..”

“கிண்டல் பண்ணுறியா?? உன்னை...” என்றவள் அவன் தலையில் கொட்ட முயல அவனோ அதற்குள் அங்கிருந்து எழுந்து சென்று தன் அறைக்குள் அடைந்து கொள்ள ஸ்ரவ்யாவும் பின்னாலேயே வந்தாள்....

பின் ஏதோ நியாபகம் வந்தவனாக தேவ்

“ஆமா அபியும் அஜயும் எங்க????”

“அவங்க அந்த வீட்டுல தங்கிக்கிறேன்னு சொன்னாங்க....”

“சரி வா..நாம தூங்கலாம்.... நீயும் டயர்டாக இருக்க...” என்ற ஸ்ரவ்யாவை அழைக்க இருவரும் உடைமாற்றிவிட்டு வந்து உறங்கினர்....

ஆறு மாதங்களிற்கு பின்.......

மறுநாள் திருமணத்திற்காக இரு வீட்டினரும் தயாராகிக்கொண்டிருந்தனர்.....

திருமணத்தை தேவ்வின் விருப்பப்படி கொழும்பிலேயே நடாத்திட முடிவு செய்திட இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுத்து இருவீட்டினரும் தங்கியிருந்தனர்.....

மாலை ஏழரை மணியளவில் பெண்ணிற்கு பரிசம் போட்டு நிச்சயம் முடித்துவிட்டு மணமகன் வீட்டில் தாலிக்கூரை படைத்தனர்....

திருமணத்திற்கு முதல்நாள் சடங்குகள் அனைத்தும் முடிந்திட ஸ்ரவ்யாவோ அவள் அறையில் தேவ்வின் தங்கைகளுடனும் உறங்கியபடியிருக்க அவள் அலைபேசி அவள் உறக்கத்தை கலைத்தது...

அதை எடுத்து பேசியவள்

“ஹலோ....”

“பேபி தூங்கிட்டியா??”

“ஆமா அஜூ.... சொல்லு என்ன விஷயம்??”

“பேபி... பேபி.. தேவ்....” என்று கூற அவள் மொத்த தூக்கமும் கலைந்தது....

“தேவ்க்கு என்ன அஜூ.. சொல்லு.....”

“தேவ்வை காணலை... பேபி...”

“என்ன அஜூ சொல்லுற??”

“ஆமா பேபி... தேவ் பேச்சுலர்ஸ் பாட்டி தர்றேன்னு இங்கே பக்கத்துல உள்ள ×××××××× ரிசோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.... ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்னு சொன்னாரு...... ஆனா போனவரை ஆளையே காணோம்.... நாங்களும் ரிசோர்ட் முழுசும் தேடிட்டோம்... ஆனா அவரை காணவில்லை.. இப்போ என்ன செய்றதுனு தெரியலை..”

“நீ.. நீ... என்ன சொல்லுற அஜூ... ப்ளீஸ் விளையாடாத அஜூ....”

“இல்லை பேபி... நான் உண்மையாக தான் சொல்லுறேன்....நீ....”

“இரு நானும் வர்றேன்...” என்றவள் அழைப்பை துண்டித்த வழுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை...

உடையை கூட மாற்றத்தோன்றாது கிளம்பியவளை தடுத்த திவி

“ஹேய் என்னடி ஆச்சு....”

“திவி... நிவி... தேவ்வை காணோம்னு அஜூ கால் பண்ணான்...”

“என்னடி சொல்லுற??” என்று திவி கேட்க அஜய் கூறியதை கூறினாள் ஸ்ரவ்யா....

“சரி நீ பதட்டப்படாமல் இரு..... நாம போயிட்டு பார்த்துட்டு வரலாம்... அதுக்கு முதலில் நீ இந்த நைட்டியை மாற்றிட்டு வா...” என்று கூற ஸ்ரவ்யாவும் நைட்டியை மாற்றிவிட்டு லாங் ஸ்கர்ட் டாப்புடன் திவியோடு கிளம்பினாள்..

வீட்டிலிருந்தவர்களின் கண்ணில் படாமல் வெளியே வந்தவர்கள் திவியின் ஸ்கூட்டியில் அஜய் கூறிய ரிசோட்டை வந்தடைந்தனர்...

ரிசோர்ட் வாசலிற்கு வந்ததும் வாசலில் அஜய் நின்றிருக்க அவனருகே சென்ற ஸ்ரவ்யா

“அஜூ... தேவ் வந்துட்டானா??”

“இல்லை பேபி.. நாங்களும் ரிசார்ட் முழுதும் தேடிட்டோம்... அவரை காணலை.... அதான் அபியும் அவர் ப்ரெண்ஸ்சும் வெளியில் தேடிப்பார்த்துட்டு வர்றதாக போயிருக்காங்க... நீ வருவியேனு தான்... நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்......”

“வா அஜூ.. நாம மறுபடியும் ஒரு தடவை தேடிபார்க்கலாம்....”

“ம்ம்... சரி... நீ அந்த சீசைட் பக்கம் போய் பாரு... நானும் திவியும் அந்தப்பக்கம் போய் பார்க்கிறோம்....” என்றுவிட்டு அஜய் திவியை இழுத்துக்கொண்டு செல்ல ஸ்ரவ்யாவும் அஜய் கூறியபடி கடற்புரம் சென்று தேடத்தொடங்கினாள்.....

தூரத்தில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிய அருகில் சென்று பார்க்க அங்கு தேவ் அமர்ந்திருந்தான்.....

அவனருகே சென்றவள்

“தேவ்...” என்றழைக்க அவனோ தன் மடியில் வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து மறுபுறம் திரும்பி நின்றுக்கொண்டு இசைக்கத்தொடங்கினான்....

வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?

அருகே வந்தால் பூ கம்பம் தானா ?

தீயா நீரா தீராத மயக்கம்

தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்

அணைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயமே

வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்

மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்

விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்

விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்

நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்

வெண்ணிலவே தரையில் உதித்தாய்

ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்

நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்

உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

என்று தேவ் வாசித்து முடிக்க இத்தனை நேரம் அவன் இசையில் கட்டுண்டு இருந்தவள் நினைவு பெற்று

“அப்பு...” என்று அழைக்க

தேவ்வோ அவள் புறம் திரும்பி கண்களாலே என்னவென்று கேட்க

“இதெல்லாம்....”

“பின்னாடி திரும்பி பாரு...” என்று தேவ் கூறிட பின்னாடி திரும்பிப்பார்த்தவள் அங்கு நிறுத்துவைக்கப்பட்டிருந்த பல தடுப்புக்களையும் அதன் மேல் ஏதோ இருப்பதையும் கண்டாள்..

“என்ன தேவ் இது??” என்று கேட்க அவனோ

“கிட்ட போய் பாருமா...” என்று கூறிட ஸ்ரவ்யாவும் அந்த தடுப்புக்கள் அருகே செல்ல அங்கு ஆளுயரத்திற்கு அவளும் தேவ்வும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தது.....

ஒவ்வொரு படத்தின் முன்பும் ஒரு தாங்கி பொருத்தப்பட்டு அதில் ஒற்றை ரோஜாப்பூவும் ஒரு சிறு பொதியும் இருந்தது...

முதல் ரோஜாப்பூவை எடுத்தவள் அந்த பரிசுப்பொதியை பார்க்க அதில் ஒரு பெட்டியிருந்தது....

அதை திறந்து பார்க்க அதனுள் ஒரு சில்வர் வாட்சும் ஒரு கடிதமும் இருந்தது......

அந்த கடிதத்தை பிரித்து படித்தாள் ஸ்ரவ்யா... அதில்

என் கடிகாரத்தின்

நேரத்தினை மறக்கடித்தவளுக்கு

இடைவிடாது

ஓடும்

இரு முட்களின்

இருப்பிடத்தை

பரிசளிக்கிறேன்...

என்றிருந்தது......

அதை படித்தவளது இதழ்கள் புன்னகையால் விரிந்திட அடுத்த படத்திற்கருகே சென்றாள்...

அதிலும் அவ்வாறே ஆளுயுர புகைப்படத்திற்கு முன் ஒரு ரோஜாப்பூவும் ஒரு பரிசுப்பொதியும் இருந்தது....

அந்த பரிசுப்பொதியில் ஒரு தங்கக்கொலுசும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது..

பஞ்சுப்பொதியாய்

நிலத்தில்

பதியும்

அந்த வெண்பஞ்சு பாதங்களை

தங்கத்தால்

அலங்கரிக்க

தங்க மணிகளின்

கோர்வையை

பரிசளிக்கிறேன்....

என்றிருந்தது.....

அந்த கொலுசை கையில் எடுத்தவள் அதன் அழகில் மயங்கினாள்.... அவள் வெண்பாதங்களுக்கென்றே செய்து எடுத்தது போல் இருந்த தங்கக்கொலுசு அவள் மனதை பெரிதும் கவர்ந்தது...

அடுத்த ஆளுயர படத்தின் முன்னும் ஒற்றை ரோஜாவும் ஒரு பரிசுப்பொதியும் இருந்தது..

அந்த பரிசுப்பொதியில் ஒரு தங்க மூக்குத்தியும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது....

அந்த கடிதத்தில்

கோபத்தில் மட்டுமே சிவக்கும்

அந்த நாசி

என்னை கண்டு சிவந்தபோது

முடிவெடுத்தேன்

அதற்கான கடிவாளம்

இடவேண்டுமென...

அந்த கடிவாளத்தை

பரிசளிக்கிறேன்...

என்று இருந்தது.. அது வெள்ளை நிற ஒற்றைக்கல் பதித்த மூக்குத்தி.... அவள் இதுவரை காலமும் மூக்குத்தி அணிந்ததில்லை.... இன்று இதை கண்டதும் உடனேயே மூக்குத்தி அணியவேண்டுமென்ற அவா எழுந்தது... அதை பத்திரப்படுத்தியவள் அடுத்த படத்தின் முன் சென்று அங்கிருந்த ஒற்றை ரோஜாவையும் பரிசுப்பொதியையும் எடுத்தாள்...

அந்த பொதியில் ஒரு தங்கச்செயின் இருந்தது.. அதிலிருந்து லெட்டரை எடுத்தவள்

வெற்றிடமாய்

படர்ந்து கிடந்த

அந்த மேடு பள்ளம்

நிறைந்த நிலப்பரப்பை

பட்டயம் போட

இவ்வேலியை

பரிசளிக்கிறேன்....

என்றிருந்தது...

அதை வாசித்தபோது அவளுள் எழுந்த சிரிப்பை அவளால் கட்டுப்படுத்தமுடியவில்லை..... ஸ்ரவ்யா எப்போதும் கழுத்திற்கு எதுவும் அணியமாட்டாள்.... தேவ்விடம் இதற்காக திட்டுவாங்கியதும் உண்டு... ஆனால் அவளுக்கு ஏதும் அணிவதில் விருப்பமில்லை.... இப்போது கூட தேவ் கட்டிய அந்த மஞ்சள் கயிறு மட்டுமே அவள் கழுத்தில் இருந்தது...

அதை நினைத்தபடியே இறுதியாய் நடுவே இருந்த அந்த படத்தினருகே சென்றாள்...அதில் தேவ்வும் அவளும் சேர்ந்து நிச்சயத்திற்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.....

அதில் ஒரு ரோஜா பூங்கொத்தும் சற்று பெரிய பரிசுப்பொதியும் இருந்தது...

அந்த பொதியில் மயில் பச்சை நிற பட்டு சேலையொன்று இருந்தது.. அதோடு இருந்த கடிதத்தில்

வண்ணமயிலாய்

வலம் வருபவளின்

தரிசனம்

பெற்றிட

பட்டு பூச்சுக்களின்

தேகங்களை

பதப்படுத்தி

போர்வையாக்கி

பரிசளிக்கின்றேன்...

என்றிருந்தது... அதைபடித்தவள் அக்கடிதத்தோடு தேவ் நின்றிருந்த இடத்திற்கு வந்தாள்..

அதுவரை அவளை ரசித்தபடியிருந்தவன் அவள் அருகில் வந்ததும்

“என்ன ஸ்ரயா... உனக்கு பிடிச்சிருக்கா??”

“ஆமா.....”

“இது மட்டும் தான் பிடிச்சிருக்கா....?? இல்லை..”

“இப்போ நான் என்ன சொல்லனும்னு சார் எதிர்பார்க்குறீங்க??” என்று அவள் கேட்க தேவ்வோ சற்று தடுமாறினான்....

அவன் தடுமாற்றத்தை கண்டு சிரித்தவள்

“இவ்வளவு அழகாக எல்லாம் ப்ளான் பண்ணிட்டு ப்ரபோஸ் பண்ண மட்டும் ஏன் அப்பு தடுமாறுற??”

“ஹப்பாடா... நீயே கண்டுபிடிச்சிட்டியா?? எனக்கு வேலை மிச்சம்.....”

“ஹாஹா...”

“சிரிக்காத ஸ்ரயா.. எனக்கு வரமாட்டேங்குது.. நான் என்ன பண்ணுறது?? நானும் எவ்வளவு ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தேன் தெரியுமா?? ஆனா பார்த்தியா எப்படி சொதப்பிட்டேன்னு....”

“ஹாஹா.... பஸ்ட் டைம் தானே... அதான் இப்படி.... இப்போ நான் சொல்லுற மாதிரி செய்.... கண்ணிரண்டையும் மூடு...”

“எதுக்கு...??”

“நீ மூடு... நான் சொல்லுறேன்....” என்று ஸ்ரவ்யா சொல்ல தேவ்வும் தன் கண்களை மூடினான்...

“இப்போ என்னை நினைச்சுக்கோ... என்கிட்ட என்ன சொல்லனும்னு நினைக்கிறியோ அதை சொல்லு....” என்று ஸ்ரவ்யா சொல்ல தேவ்வும் அவன் மனம் கவர்ந்தவளை நினைத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்....

“நான் பேச நினைத்தது எல்லாம் உன்னை பார்த்ததும் மறந்துபோயிடுது.... இது இப்போ மட்டும் இல்லை... எப்பவும் நடக்கிறது தான்... அதனால் தான் சில சந்தர்ப்பங்களில் நான் உன் கண்ணை பார்த்து பேசமாட்டேன்.... ஏன் அந்த கருவிழி இரண்டும் என் வாயை உருட்டி மிரட்டி கட்டுபடுத்திடும்..... உன்னை பிடித்ததற்கான காரணம்னு நான் நிறைய காரணம் உன்கிட்ட சொல்லியிருக்கேன்... ஆனால் இந்தநொடிவரை உன்மீது காதல் வந்ததற்கான காரணம் எனக்கு தெரியாது....... நமக்கானவர்களை மனம் கண்டுகொள்ளும்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்....... அது உண்மை தான்....நீ தான் எனக்கானவள்னு என மனசு புரிந்துக்கொண்டது.... அதனால் தான் நான் உன்மீது பாசசிவ்வாக இருந்தேன்.... நீ பாசசிவ்வாக இருந்தபோதும் ரொம்ப ஹேப்பியாக ஃபீல் பண்ணேன்......ஆனால் இவ்வளவு காதல் இருந்தபோதிலும் நமக்குள்ள பிரிவு எதனால் வந்தது என்று எனக்கு இன்னும் வரை புரியலை. ஆனால் அது கூட நல்லது தான்... நம்ம காதலை இன்னும் பலப்படுத்தியிருக்குனு நினைக்கிறேன்... அதுமட்டும் இல்லை.... எதிர்காலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் நாம் இரண்டு பேரும் சேர்ந்து முகம் கொடுப்பதற்கான தைரியத்தை கொடுத்திருக்கு....... சோ அதுவும் நன்மைக்கு தான்... நீ என்னை அப்புனு கூப்பிடறதுக்கான காரணத்தை சொன்ன... அதை கேட்டப்போ உனக்கு அது சந்தோஷம்னு நினைத்தேன்... ஆனால் அதை நீ எத்தனை வலியோடு சொன்னனு தெரிந்தப்போ நீ ஆசைப்பட்ட மாதிரியே நான் உனக்கு அப்புவாக இருக்கனும்னு நினைத்தேன் .. ஆமா. ..நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணுறேன்... உன்னை என் குழந்தை மாதிரி பார்த்துப்பேன்... நீ உன் அம்மாகிட்ட எதையெல்லாம் மிஸ் பண்ணியோ அதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் கொடுப்பேன்... எந்த நொடியும் உனக்கு யாருமில்லைனு நீ ஃபீல் பண்ண விடமாட்டேன்... உனக்கு எப்பவும் நான் உன் அப்பு இருப்பேன்.... உனக்கு அப்பா அம்மா ப்ரெண்ட் எல்லாமே நான் இருப்பேன்.... ப்ராமிஸ்... நீ விரும்பும் கடற்கரையின் நிலாவின் ஒளியை சாட்சியாக வைத்து சொல்லுறேன்.......” என்றவன் கண்களை திறந்து அவளை நெருங்கியவன்

“ஐ லவ் யூ ஸ்ரேயா........” என்றவன் தாமதிக்காது அவள் இதழ்களை கல்வியிலும் தான்.....

இரவின் சதியாலும் தனிமையின் துணையாகவும் முத்த யுத்தம் தங்குதடையின்றி தொடர்ந்தது....

தன் மொத்த காதலையும் அந்த முத்தத்தில் வெளிப்படுத்திட முயன்றவனின் வேகத்திற்கு ஸ்ரவ்யாவும் தாக்குபிடிக்க முத்த யுத்தம் நீடித்த கணங்கள் நிமிடங்களாவது.....

ஒருகட்டத்தில் இருவருக்கும் மூச்சு முட்ட இருவரும் விலகினர்....

ஸ்ரவ்யாவோ வெட்கத்தில் தேவ்வை நிமிர்ந்து பார்க்காது குனிந்த தலை நிமிராதிருக்க தேவ்வோ இன்னும் அந்த முத்தத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை....

அவனுக்கு தன்னை அந்த மோகநிலையிலிருந்து மீட்டுக் கொள்ளவே பல விநாடிகள் தேவைபட்டது....

ஒருகட்டத்தில் இருவரும் தம்மை மீட்டுக்கொண்டனர்...

அப்போது தேவ் சற்று தயக்கத்துடன்

“ஸ்ரேயா.... உ..உனக்கு பிடிச்சிருந்ததா??”என்று தயக்கத்துடன் கேட்க அவளும் தயக்கத்துடன்

“ம்ம்ம்...” என்று கூறிட தேவ்வோ

“நீ.. நீ.. எதை சொல்லுற??”

“நீ.. எதை... கேட்குறா....??”

“நா.நா..நான் எல்லாத்தையும் தான் கேட்குறேன்....” என்று திக்கி திணறி கூற ஸ்ரவ்யாவோ வெளிவந்த சிரிப்பை அடக்கியபடி

“நானும் எல்லாத்தையும் பிடிச்சிருக்குனு தான் சொன்னேன்...” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி எத்தனிக்க அவள் கரம் பற்றி தடுத்தான் அவளை தன்புறம் இழுக்க கையிலிருந்த பொருட்களோடு அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்...

“எங்க ஓடுறீங்க மேடம்???”

“இ...என்..என்னை விடு அப்பு....”

“உன்னை விடுறதுக்கா அங்கேயிருந்து பிளான் பண்ணி வரவைத்தேன்....”

“என்னது பிளான் பண்ணியா?? அப்போ அந்த அஜூ சொன்னதெல்லாம் பொய்யா?? நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா??? நீ... ரொம்ப மோசம்... போ..போ... உன்கூட பேசமாட்டேன் போ....” என்று ஸ்ரவ்யா ஒரு கையால் அவன் மார்பில் குத்த தேவ்வோ அவளை தடுக்காது அவள் செயலை தடுக்காது ரசித்தபடியிருந்தான்.......

சற்று நேரத்தில் ஓய்ந்தவள்

“ஆனாலும் எனக்கு இது பிடிச்சிருக்கு....??”

“மேடமுக்கு எது பிடிச்சிருக்கு??”

“எல்லாமே... இந்த நல்லவனை ரொம்ப பிடிச்சிருக்கு... அவனோட காதல் ரொம்ப பிடிச்சிருக்கு.... அவன் எனக்கு சப்ரைஸ் பண்ண நினைத்தது ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்காக அவன் தேடி வாங்கியிருக்க கிஃப்ட் எல்லாம் பிடிச்சிருக்கு... எனக்காக அவன் எழுதுன கவிதையெல்லாம் பிடிச்சிருக்கு.... ப்ரபோஸ் பண்ணுறதா அவன் சொதப்புனது ரொம்ப பிடிச்சிருந்தது...... இப்போ வரை காதல் மன்னனாக மாறத்தெரியாமல் முழிச்சிட்டு இருக்கிற அவன் இன்னசன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... சொல்லப்போனா அவனை எனக்கு மொத்தமாக பிடிச்சிருக்கு.....” என்று கூறி அவன் கன்னத்தில் மீண்டுமொரு முத்திரையை பதிக்க தேவ்வும் அவளது செயலில் சிரித்தான்....

என்றும் போல் அவள் எதிர்பார்ப்பில்லாத காதல் அவளை கட்டிப்போட அவளை அணைத்தபடியே

“உனக்கு என் மேல் கோபமே வராதா ஸ்ரயா???”

“வரும்... நீ என்னை கண்டுக்காமல் இருந்தா கோபம் வரும்... நீ என்னை சூட்டினு கூப்பிடும் போது தாறுமாறாக கோபம் வரும்... என்னை பார்த்தா உனக்கு சூட்டி மாதிரி இருக்கா??” என்று மீண்டும் தேர்வை அடிக்க அவனோ சிரித்தபடி

“உன்னை பார்த்ததும் உன்னோட பெயர் எனக்கு தியாகத்தில் வரவில்லை... அதான் சூட்டினு கூப்பிட்டேன்.....நம்மை விட சின்னவங்களை சூட்டினு தான் கூப்பிடுவாங்க... அதான் முதல் தடவை உன்னை பார்த்ததும் சூட்டினு கூப்பிட்டேன்... ஆனா இப்போ அழகாக ஸ்ரயானு தானே கூப்பிடுறேன்....”

“ஆமா... ஆனா... நீ இனி எப்பவும் சூட்டினு கூப்பிடக்கூடாது புரியிதா???”

“அபி கூப்பிடுவானே.....”

“நான் உன்னை தான் கூப்பிடவேண்டாம்னு சொன்னேன்....”

“அது ஏன் அப்படி??”

“அது... அது... நீ என்னோட ஹஸ்பண்டா...”

“அதுக்கு....”

“நீ என்னை ஸ்ரயானு தான் கூப்பிடனும்... புரியிதா??”

“உத்தரவு மேடம்....” என்று தேவ் பவ்வியமாக கூற ஸ்ரவ்யாவோ அவன் செயலில் சிரித்தாள்...

“சரி.. வா... உனக்கு இன்னொரு கிப்ட் இருக்கு..... அதையும் பார்த்திடலாம்.....” என்று அவளை ரிசாட்டினுள் அழைத்துசென்றான்...

இதயம் இந்த இதயம்

இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ

இதயம் இந்த இதயம்

இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு

இது தத்தளித்து துடிக்கிறதே

காயம் யாவையும் தேற்றி கொண்டு

இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்

எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே

வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே

வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்

வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

இது தவித்திடும் நெருப்பா

இல்லை குளிர்ந்திடும் நீரா

இது பனி ஏறி மழையா

இதை அறிந்தோர் யாருமில்லை

உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை

உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே

ஏங்கும் போதோ இது வெடிக்கும்

தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்

வேண்டும் என்றே இது நடிக்கும்

இது கடவுளின் பிழையா

இல்லை படைத்தவன் கொடையா

கேள்வி இல்லா விடையா

இதை அறிந்தோர் யாருமில்லை

இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்

கண்ணீர் என்னும் வார்த்தையை மொழி இழக்கும்

இதயம் இந்த இதயம்

இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ

இதயம் இந்த இதயம்

இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

[QUOTE="Anu Chandran, post: 2997, member: 6"] தேவ் பால்கனிக்கு செல்ல அங்கும் சுற்றி மெழுகுவரத்திகள் ஏற்றப்பட்டிருக்க ஸ்ரவ்யாவோ ஐபேட்டில் கீபோர்ட் ஆப்பின் மூலம் வாசித்துக் கொண்டிருந்தாள்..... அவளருகே தேவ் சென்றதும் வாசிப்பதை நிறுத்தியவள் “ஹாப்பி பர்த்டே புருஷா...” என்று கூறியபடியே அருகில் வைத்திருந்த இன்னொரு ரோஜாப்பூ மலர்கொத்தை தேவ் முன் நீட்ட அவனும் சிரித்தபடியே அதை வாங்கிக்கொண்டவன் “தேங்க்ஸ் டி பொண்டாட்டி..” “நீ இதை எதிர்பார்க்கலை தானே??” “நிஜமாகவே எதிர்பார்க்கலை... சொல்லப்போனா இன்னைக்கு எனக்கு பர்த்டேங்கிற விஷயமே எனக்கு நினைவில் இல்லை.....” “ஆனா எனக்கு நியாபகம் இருக்கு..... உன்னை வெளியில் கூட்டிட்டு போகலாம்னு தான் நினைத்தேன்... ஆனா அடிபட்ட கையோடு உன்னை அலைக்கழிக்கவேண்டாமேனு தான் வீட்டுலயே என்னால் முடிந்தளவு உன்னை சப்ரைஸ் பண்ணனும்னு முடிவு பண்ணேன்.... உனக்கு பிடிச்சிருந்தது தானே???” “ஆமா...... ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.......” “ சரி சரி வா அப்பு கேக் கட் பண்ணலாம்..” என்று அவன் கை பிடித்து அழைத்து வந்தவள் கேக்கை எடுத்து வந்து மேசை மீது வைத்தாள்.... அதில் கேன்டில் ஏற்றியவள் அவனை வெட்டச் சொல்ல தேவ்வும் கத்தியை எடுத்தவன் “நீயும் வா ஸ்ரயா சேர்ந்து கட் பண்ணலாம்.....” என்று கூற ஸ்ரவ்யாவும் அவன் கைபிடிக்க இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினர்.... கேக் துண்டொன்றை எடுத்த ஸ்ரவ்யா தேவ்விற்கு ஊட்டியபடியே “ஹேப்பி பர்த்டே புருஷா....” என்று மறுபடியும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க தேவ்வும் நன்றி கூறினான்.... “ஏன் அப்பு உனக்கு சப்ரைஸ் பர்த்டே பார்ட்டி எல்லாம் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்..... ஒரு நன்றி கூட சொல்லமாட்டியா??” “நமக்கு நெருக்கமானவங்களுக்கு நன்றி சொல்லக்கூடாதுங்கிறது என்னோட பாலிசி.... அது நமக்கும் அவங்களுக்கும் இடையிலான உறவை தூரப்படுத்தும்னு நான் நம்புறேன்....” “அப்படியா... அப்போ நன்றி சொல்லாத.... ஆனாலும் நீ எனக்கு தேங்க் பண்ணனும்.... அது எப்படின்னு நீ தான் யோசிக்கனும்....” “ஓ.... அப்படி... சரி சரி புரிஞ்சிடுச்சு....” “என்ன புரிஞ்சிது உனக்கு??” “அதான் மா நீ சொன்னது புரிந்ததுனு சொன்னேன்...” “என்ன புரிந்ததுனு சொல்லு பார்ப்போம்....” “சொல்லுறேன்... அதுக்கு முதலில் நீ கொஞ்சம் கிட்ட வா...” என்று தேவ் கூற ஸ்ரவ்யாவும் அவனை நெருங்கத்தொடங்க அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கரம் பற்றி இழுத்திட ஸ்ரவ்யா தேவ் மீது விழுந்திட ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்தான்... அவனது திடீர் செயலில் அவள் உள்ளம் தாறுமாறாக துடிக்க உடலோ ஒருவித நடுக்கத்தை தத்தெடுத்திருந்தது.... பயத்தில் ஸ்ரவ்யா கண்மூடிக்கொள்ள தேவ்வோ அவள் செயலில் உள்ளுக்குள் சிரித்தான்.... அவன் கையில் மயங்கி நின்றவளின் முன்னுச்சியில் மென்மையாய் முத்தமிட்டமிட்டவன் “லவ்யூ டி பொண்டாட்டி.....” என்று கூறி அவளை மெதுவாக விடுவிக்க ஸ்ரவ்யாவோ கண்களை திறந்தபாடில்லை... அந்த இருள் சூழ்ந்த வேளையில் அவளுள் பல ரசாயன மாற்றங்கள் நிகழ அதன் தாக்கத்தின் விளைவால் அவளுள் எண்ணிலடங்கா மாற்றங்கள்... இவ்வாறு தேவ் அவளை அணைப்பது இதுவே முதல் முறை... இதற்கு முன் அவன் அணைப்பில் அன்பை தவிர வேறெதும் இருந்ததை அவள் உணர்ந்ததில்லை... ஆனால் இன்றைய அணைப்பில் கணவன் என்ற உரிமையும் அதையும் மீறிய அழுத்தமும் இருந்ததை அவள் மனம் உணர்ந்தது.... அதன் தாக்கமே இந்த பயமும் படபடப்பும்... தேவ் விடுவித்ததும் மெதுவாய் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவள் தன்னிலை மீண்டு கண்களை திறக்க தேவ்வோ அவளெதிரே நின்று அவள் செய்கைகளை ரசித்தபடியிருந்தான்..... அவனுக்கு அவளின் செயலிற்கான அர்த்தம் புரிந்தது..... அதனாலேயே அவன் அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்தான்.... அவன் மனமும் அந்த அணைப்பிற்காக ஏங்கியிருக்க எங்கே அந்த ஏக்கம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுவிடுமோ என்ற பயத்திலேயே அவன் அவளை விடுவித்திருந்தான்..... தன் விழிகளை திறந்து எதிரிலிருந்தவனை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்ன மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் ஸ்ரவ்யா.. அவள் செயலில் சிரித்த தேவ் “என்ன ஸ்ரயா என் நன்றி எப்படி இருந்தது??” என்று கேட்க அவளோ ம்ம்ம் என்று கூறிட “என்ன என் பொண்டாட்டி திடீர்னு சைலண்டாகிட்டா??? சரியில்லையே ....” “ஆமா... நீ தான் சரியில்லை......” “நான் என்னம்மா சரியில்லை.... நீ தானே தேங்க்ஸ் சொல்லனும்னு சொன்ன??? அதான் சொன்னேன்... இதுல என்ன இருக்கு??” “அப்பு... நீ இன்றைக்கு ரொம்ப ஓவரா பண்ணுற???” “அப்படியா ஸ்ரயா.....?? சரி நீயே சொல்லு எப்படி ஓவரானதை குறைப்பதுனு...” “அது... அது.... நீ என்னை கிண்டல் பண்ணுற...” “ஹேய் நான் சீரியஸாக தான் கேட்குறேன்..... சொல்லு...” “ஒன்றும் வேண்டாம்.... நீ இரு... நான் உனக்கு ஒரு கிஃப்ட் வைத்திருக்கேன்... அதை எடுத்துட்டு வர்றேன்.....” என்றவள் அங்கிருந்து நகர அவள் செயலில் சிரித்தான் தேவ்.... சற்று நேரத்தில் வந்தவளது கையில் ஒரு பரிசுப்பொதியிருக்க அதை தேவ்வின் புறம் நீட்டினாள் ஸ்ரவ்யா.... அதை வாங்கியவன் அவளையே பிரித்துக் காட்ட சொல்ல ஸ்ரவ்யாவும் அந்த பொதியை பிரிக்கத்தொடங்கினாள்... உள்ளே ஒரு வெள்ளை நிற பெரிய பந்தும் ஸ்டேண்டும் இருந்தது.... அது 3டி மூன் பால் லைட்......அதை எடுத்து பொருத்தியவள் அதன் ஸ்விட்சை இயக்க அது நிலா போல் ஒளியை வெளியிடத்தொடங்கியது... அதில் தேவ்வும் ஸ்ரவ்யாவும் சேர்ந்து எடுத்து கொண்ட படமொன்று பென்சில் ஸ்கெட்ச் போல் தென்பட அதன் கீழ் “ஹேப்பி பர்த்டே மை டியர் லவ்” என்று தென்பட்டது... அந்த இரவின் வெளிச்சத்தில் அந்த அமைப்பு அழகாயிருந்தது...... மண்டியிட்டு அதை பார்த்த தேவ் “ஸ்ரேயா சூப்பரா இருக்குமா.... இது எப்போ ரெடி பண்ண??” “ஆன்லைன்ல ஆர்டர் பண்ணேன்.... நானா ஏதாவது செய்யனும்னு தான் யோசிச்சேன்.... ஆனா உன்னை தனியாக விட்டுட்டு என்னால் எதுவும் பிளான் பண்ண முடியலை.... அதான் ஆன்லைன்லயே டிசைன் செலெக்ட் பண்ணி ஆர்டர் கொடுத்தேன்.... அவங்களும் நான் கேட்டபடியே இன்னைக்கு மார்னிங் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க....” “நல்லா இருக்கு...... ஆனா எதுக்காக இதை செலெக்ட் பண்ணனு தெரிந்துக்கொள்ளலாமா??” “சொல்லுறேன்... அந்த பாலை பாரு தூரத்தில் இருந்து பார்த்தா நிலா மாதிரி தானே இருக்கு...” “ஆமா....” “இந்த இருட்டில் கூட அதோடு ஒளி பிரகாசமாக தெரியிதா??” “ஆமா தெரியிது.....” “ம்ம்ம்..... அதே மாதிரி... நம்ம வாழ்க்கையில் எந்த பிரச்சினை வந்தாலும் நம்ம காதல் என்றும் இந்த மூன் பால் மாதிரி ஒளி வீசி பிரச்சினையை இல்லாமல் பண்ணிடனும்.... அதை சிம்பளைஸ் பண்ணுறதற்கு தான் இதை வாங்கினேன்.... இது நமக்கு மட்டும் உரித்தானதாக இருக்கனும்னு தான் நம்ம பிக் போட்டு இருக்கேன்.....” “ஹேய் சூப்பர்பா..... உன் கிப்டை விட உன் விளக்கம் சூப்பராக இருந்தது....” “தேங்க்ஸ்டா புருஷா.... அது சரி உனக்கு இது பிடிச்சிருக்கா??” “என் வீட்டுக்காரம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்??” “சரி வா..... உனக்கு இன்னொரு சப்ரைசும் இருக்கு....” என்றவள் அவனை உள்ளே அழைத்து சென்றவள் சோஃபாவில் அமரச் செய்து ஒரு பென்ட்ரைவை எடுத்து வந்து அதை டீவியில் பொருத்தியவள் அதை இயக்கிட அதில் ஒரு காணொளி ஆரம்பித்தது .. அதில் தேவ்வின் பெற்றோர் முதற்கொண்டு அவனின் சகோதரர்கள், நண்பர்கள்,கனடாவில் அவனது ஹவுஸ் ஓனர் அங்குள்ள நண்பர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தினர்.... இறுதியாக ஸ்ரவ்யாவின் வாழ்த்தோடு முடிவடைந்திருந்தது அந்த காணொளி... அதை கண்டவனுக்கு அத்தனை மகிழ்ச்சி... பல வருடங்களாய் அவன் பார்க்காதவர்கள் கூட அவனுக்கு வாழ்த்து தெரிவித்திருத்தினர்... இத்தனைக்கும் காரணமானவள் அவனருகில் சிரிப்புடன் அமர்ந்திருக்க அதை கண்டவன் “எப்படி....இது...??” “அபி அண்ணாவும் அஜூவும் தான் ஹெல்ப் பண்ணாங்க.. உனக்கு பிடிச்சிருக்கா???” “ரொம்ப பிடிச்சிருக்கு....நான் மிஸ் பண்ண நிறைய பேரோட விஷஸ் எனக்கு கிடைச்சிருக்கு... லவ் யூ புஜ்ஜிமா....” என்று ஒரு கையால் அவளை அணைத்தான்... அவனது மகிழ்ச்சியை கண்டவளுக்கு புன்னகை மேலிட “சரி வா... லேட்டாச்சு.... நீ இன்னும் டேப்லட் குடிக்கலை....” “ம்ஹூம்... இன்னைக்கு நான் மருந்து குடிக்கிறதாக இல்லை..... ஏன்னா நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்......” “சந்தோஷமாக இருந்தா மருந்து குடிக்ககூடாதா??” “இல்லை.... குடித்தால் சீக்கிரம் தூக்கம் வந்திடும்.. பிறகு எப்படி நான் இன்றைக்கு நடந்த விஷயங்களை எண்ணி சந்தோஷப்படுறது??” “அதை நாளைக்கு கூட செய்யலாம்... இப்போ நான் டேப்லட் எடுத்துட்டு வர்றேன்.. நீ அதை குடிச்சிட்டு தூங்கு..” “அதெல்லாம் முடியாது.... எதையும் அந்த உடனே அனுபவித்தால் தான் அதோட தாக்கம் இரு மடங்காக இருக்கும்... நாளைக்குனு ஆறப்போட்டால் அதோட சுகம் குறைஞ்சிடும்...” “அப்பு... வரவர நீ ரொம்ப பேசுற...” “உன்னை சமாளிக்க பேசிதானே ஆகனும் ஸ்ரயா..” “கிண்டல் பண்ணுறியா?? உன்னை...” என்றவள் அவன் தலையில் கொட்ட முயல அவனோ அதற்குள் அங்கிருந்து எழுந்து சென்று தன் அறைக்குள் அடைந்து கொள்ள ஸ்ரவ்யாவும் பின்னாலேயே வந்தாள்.... பின் ஏதோ நியாபகம் வந்தவனாக தேவ் “ஆமா அபியும் அஜயும் எங்க????” “அவங்க அந்த வீட்டுல தங்கிக்கிறேன்னு சொன்னாங்க....” “சரி வா..நாம தூங்கலாம்.... நீயும் டயர்டாக இருக்க...” என்ற ஸ்ரவ்யாவை அழைக்க இருவரும் உடைமாற்றிவிட்டு வந்து உறங்கினர்.... ஆறு மாதங்களிற்கு பின்....... மறுநாள் திருமணத்திற்காக இரு வீட்டினரும் தயாராகிக்கொண்டிருந்தனர்..... திருமணத்தை தேவ்வின் விருப்பப்படி கொழும்பிலேயே நடாத்திட முடிவு செய்திட இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுத்து இருவீட்டினரும் தங்கியிருந்தனர்..... மாலை ஏழரை மணியளவில் பெண்ணிற்கு பரிசம் போட்டு நிச்சயம் முடித்துவிட்டு மணமகன் வீட்டில் தாலிக்கூரை படைத்தனர்.... திருமணத்திற்கு முதல்நாள் சடங்குகள் அனைத்தும் முடிந்திட ஸ்ரவ்யாவோ அவள் அறையில் தேவ்வின் தங்கைகளுடனும் உறங்கியபடியிருக்க அவள் அலைபேசி அவள் உறக்கத்தை கலைத்தது... அதை எடுத்து பேசியவள் “ஹலோ....” “பேபி தூங்கிட்டியா??” “ஆமா அஜூ.... சொல்லு என்ன விஷயம்??” “பேபி... பேபி.. தேவ்....” என்று கூற அவள் மொத்த தூக்கமும் கலைந்தது.... “தேவ்க்கு என்ன அஜூ.. சொல்லு.....” “தேவ்வை காணலை... பேபி...” “என்ன அஜூ சொல்லுற??” “ஆமா பேபி... தேவ் பேச்சுலர்ஸ் பாட்டி தர்றேன்னு இங்கே பக்கத்துல உள்ள ×××××××× ரிசோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.... ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்னு சொன்னாரு...... ஆனா போனவரை ஆளையே காணோம்.... நாங்களும் ரிசோர்ட் முழுசும் தேடிட்டோம்... ஆனா அவரை காணவில்லை.. இப்போ என்ன செய்றதுனு தெரியலை..” “நீ.. நீ... என்ன சொல்லுற அஜூ... ப்ளீஸ் விளையாடாத அஜூ....” “இல்லை பேபி... நான் உண்மையாக தான் சொல்லுறேன்....நீ....” “இரு நானும் வர்றேன்...” என்றவள் அழைப்பை துண்டித்த வழுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை... உடையை கூட மாற்றத்தோன்றாது கிளம்பியவளை தடுத்த திவி “ஹேய் என்னடி ஆச்சு....” “திவி... நிவி... தேவ்வை காணோம்னு அஜூ கால் பண்ணான்...” “என்னடி சொல்லுற??” என்று திவி கேட்க அஜய் கூறியதை கூறினாள் ஸ்ரவ்யா.... “சரி நீ பதட்டப்படாமல் இரு..... நாம போயிட்டு பார்த்துட்டு வரலாம்... அதுக்கு முதலில் நீ இந்த நைட்டியை மாற்றிட்டு வா...” என்று கூற ஸ்ரவ்யாவும் நைட்டியை மாற்றிவிட்டு லாங் ஸ்கர்ட் டாப்புடன் திவியோடு கிளம்பினாள்.. வீட்டிலிருந்தவர்களின் கண்ணில் படாமல் வெளியே வந்தவர்கள் திவியின் ஸ்கூட்டியில் அஜய் கூறிய ரிசோட்டை வந்தடைந்தனர்... ரிசோர்ட் வாசலிற்கு வந்ததும் வாசலில் அஜய் நின்றிருக்க அவனருகே சென்ற ஸ்ரவ்யா “அஜூ... தேவ் வந்துட்டானா??” “இல்லை பேபி.. நாங்களும் ரிசார்ட் முழுதும் தேடிட்டோம்... அவரை காணலை.... அதான் அபியும் அவர் ப்ரெண்ஸ்சும் வெளியில் தேடிப்பார்த்துட்டு வர்றதாக போயிருக்காங்க... நீ வருவியேனு தான்... நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்......” “வா அஜூ.. நாம மறுபடியும் ஒரு தடவை தேடிபார்க்கலாம்....” “ம்ம்... சரி... நீ அந்த சீசைட் பக்கம் போய் பாரு... நானும் திவியும் அந்தப்பக்கம் போய் பார்க்கிறோம்....” என்றுவிட்டு அஜய் திவியை இழுத்துக்கொண்டு செல்ல ஸ்ரவ்யாவும் அஜய் கூறியபடி கடற்புரம் சென்று தேடத்தொடங்கினாள்..... தூரத்தில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிய அருகில் சென்று பார்க்க அங்கு தேவ் அமர்ந்திருந்தான்..... அவனருகே சென்றவள் “தேவ்...” என்றழைக்க அவனோ தன் மடியில் வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து மறுபுறம் திரும்பி நின்றுக்கொண்டு இசைக்கத்தொடங்கினான்.... வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன் வெண்ணிலவை விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன் அழகே நீ ஓர் பூகம்பம் தானா ? அருகே வந்தால் பூ கம்பம் தானா ? தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் அணைத்திட எரிந்திடும் பெண்தேகம் அதிசயமே வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய் மறுநாள் என்னை கண்டேனே புதிதாய் விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன் விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன் நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன் என்று தேவ் வாசித்து முடிக்க இத்தனை நேரம் அவன் இசையில் கட்டுண்டு இருந்தவள் நினைவு பெற்று “அப்பு...” என்று அழைக்க தேவ்வோ அவள் புறம் திரும்பி கண்களாலே என்னவென்று கேட்க “இதெல்லாம்....” “பின்னாடி திரும்பி பாரு...” என்று தேவ் கூறிட பின்னாடி திரும்பிப்பார்த்தவள் அங்கு நிறுத்துவைக்கப்பட்டிருந்த பல தடுப்புக்களையும் அதன் மேல் ஏதோ இருப்பதையும் கண்டாள்.. “என்ன தேவ் இது??” என்று கேட்க அவனோ “கிட்ட போய் பாருமா...” என்று கூறிட ஸ்ரவ்யாவும் அந்த தடுப்புக்கள் அருகே செல்ல அங்கு ஆளுயரத்திற்கு அவளும் தேவ்வும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தது..... ஒவ்வொரு படத்தின் முன்பும் ஒரு தாங்கி பொருத்தப்பட்டு அதில் ஒற்றை ரோஜாப்பூவும் ஒரு சிறு பொதியும் இருந்தது... முதல் ரோஜாப்பூவை எடுத்தவள் அந்த பரிசுப்பொதியை பார்க்க அதில் ஒரு பெட்டியிருந்தது.... அதை திறந்து பார்க்க அதனுள் ஒரு சில்வர் வாட்சும் ஒரு கடிதமும் இருந்தது...... அந்த கடிதத்தை பிரித்து படித்தாள் ஸ்ரவ்யா... அதில் என் கடிகாரத்தின் நேரத்தினை மறக்கடித்தவளுக்கு இடைவிடாது ஓடும் இரு முட்களின் இருப்பிடத்தை பரிசளிக்கிறேன்... என்றிருந்தது...... அதை படித்தவளது இதழ்கள் புன்னகையால் விரிந்திட அடுத்த படத்திற்கருகே சென்றாள்... அதிலும் அவ்வாறே ஆளுயுர புகைப்படத்திற்கு முன் ஒரு ரோஜாப்பூவும் ஒரு பரிசுப்பொதியும் இருந்தது.... அந்த பரிசுப்பொதியில் ஒரு தங்கக்கொலுசும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது.. பஞ்சுப்பொதியாய் நிலத்தில் பதியும் அந்த வெண்பஞ்சு பாதங்களை தங்கத்தால் அலங்கரிக்க தங்க மணிகளின் கோர்வையை பரிசளிக்கிறேன்.... என்றிருந்தது..... அந்த கொலுசை கையில் எடுத்தவள் அதன் அழகில் மயங்கினாள்.... அவள் வெண்பாதங்களுக்கென்றே செய்து எடுத்தது போல் இருந்த தங்கக்கொலுசு அவள் மனதை பெரிதும் கவர்ந்தது... அடுத்த ஆளுயர படத்தின் முன்னும் ஒற்றை ரோஜாவும் ஒரு பரிசுப்பொதியும் இருந்தது.. அந்த பரிசுப்பொதியில் ஒரு தங்க மூக்குத்தியும் அதோடு ஒரு கடிதமும் இருந்தது.... அந்த கடிதத்தில் கோபத்தில் மட்டுமே சிவக்கும் அந்த நாசி என்னை கண்டு சிவந்தபோது முடிவெடுத்தேன் அதற்கான கடிவாளம் இடவேண்டுமென... அந்த கடிவாளத்தை பரிசளிக்கிறேன்... என்று இருந்தது.. அது வெள்ளை நிற ஒற்றைக்கல் பதித்த மூக்குத்தி.... அவள் இதுவரை காலமும் மூக்குத்தி அணிந்ததில்லை.... இன்று இதை கண்டதும் உடனேயே மூக்குத்தி அணியவேண்டுமென்ற அவா எழுந்தது... அதை பத்திரப்படுத்தியவள் அடுத்த படத்தின் முன் சென்று அங்கிருந்த ஒற்றை ரோஜாவையும் பரிசுப்பொதியையும் எடுத்தாள்... அந்த பொதியில் ஒரு தங்கச்செயின் இருந்தது.. அதிலிருந்து லெட்டரை எடுத்தவள் வெற்றிடமாய் படர்ந்து கிடந்த அந்த மேடு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பை பட்டயம் போட இவ்வேலியை பரிசளிக்கிறேன்.... என்றிருந்தது... அதை வாசித்தபோது அவளுள் எழுந்த சிரிப்பை அவளால் கட்டுப்படுத்தமுடியவில்லை..... ஸ்ரவ்யா எப்போதும் கழுத்திற்கு எதுவும் அணியமாட்டாள்.... தேவ்விடம் இதற்காக திட்டுவாங்கியதும் உண்டு... ஆனால் அவளுக்கு ஏதும் அணிவதில் விருப்பமில்லை.... இப்போது கூட தேவ் கட்டிய அந்த மஞ்சள் கயிறு மட்டுமே அவள் கழுத்தில் இருந்தது... அதை நினைத்தபடியே இறுதியாய் நடுவே இருந்த அந்த படத்தினருகே சென்றாள்...அதில் தேவ்வும் அவளும் சேர்ந்து நிச்சயத்திற்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது..... அதில் ஒரு ரோஜா பூங்கொத்தும் சற்று பெரிய பரிசுப்பொதியும் இருந்தது... அந்த பொதியில் மயில் பச்சை நிற பட்டு சேலையொன்று இருந்தது.. அதோடு இருந்த கடிதத்தில் வண்ணமயிலாய் வலம் வருபவளின் தரிசனம் பெற்றிட பட்டு பூச்சுக்களின் தேகங்களை பதப்படுத்தி போர்வையாக்கி பரிசளிக்கின்றேன்... என்றிருந்தது... அதைபடித்தவள் அக்கடிதத்தோடு தேவ் நின்றிருந்த இடத்திற்கு வந்தாள்.. அதுவரை அவளை ரசித்தபடியிருந்தவன் அவள் அருகில் வந்ததும் “என்ன ஸ்ரயா... உனக்கு பிடிச்சிருக்கா??” “ஆமா.....” “இது மட்டும் தான் பிடிச்சிருக்கா....?? இல்லை..” “இப்போ நான் என்ன சொல்லனும்னு சார் எதிர்பார்க்குறீங்க??” என்று அவள் கேட்க தேவ்வோ சற்று தடுமாறினான்.... அவன் தடுமாற்றத்தை கண்டு சிரித்தவள் “இவ்வளவு அழகாக எல்லாம் ப்ளான் பண்ணிட்டு ப்ரபோஸ் பண்ண மட்டும் ஏன் அப்பு தடுமாறுற??” “ஹப்பாடா... நீயே கண்டுபிடிச்சிட்டியா?? எனக்கு வேலை மிச்சம்.....” “ஹாஹா...” “சிரிக்காத ஸ்ரயா.. எனக்கு வரமாட்டேங்குது.. நான் என்ன பண்ணுறது?? நானும் எவ்வளவு ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்தேன் தெரியுமா?? ஆனா பார்த்தியா எப்படி சொதப்பிட்டேன்னு....” “ஹாஹா.... பஸ்ட் டைம் தானே... அதான் இப்படி.... இப்போ நான் சொல்லுற மாதிரி செய்.... கண்ணிரண்டையும் மூடு...” “எதுக்கு...??” “நீ மூடு... நான் சொல்லுறேன்....” என்று ஸ்ரவ்யா சொல்ல தேவ்வும் தன் கண்களை மூடினான்... “இப்போ என்னை நினைச்சுக்கோ... என்கிட்ட என்ன சொல்லனும்னு நினைக்கிறியோ அதை சொல்லு....” என்று ஸ்ரவ்யா சொல்ல தேவ்வும் அவன் மனம் கவர்ந்தவளை நினைத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.... “நான் பேச நினைத்தது எல்லாம் உன்னை பார்த்ததும் மறந்துபோயிடுது.... இது இப்போ மட்டும் இல்லை... எப்பவும் நடக்கிறது தான்... அதனால் தான் சில சந்தர்ப்பங்களில் நான் உன் கண்ணை பார்த்து பேசமாட்டேன்.... ஏன் அந்த கருவிழி இரண்டும் என் வாயை உருட்டி மிரட்டி கட்டுபடுத்திடும்..... உன்னை பிடித்ததற்கான காரணம்னு நான் நிறைய காரணம் உன்கிட்ட சொல்லியிருக்கேன்... ஆனால் இந்தநொடிவரை உன்மீது காதல் வந்ததற்கான காரணம் எனக்கு தெரியாது....... நமக்கானவர்களை மனம் கண்டுகொள்ளும்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்....... அது உண்மை தான்....நீ தான் எனக்கானவள்னு என மனசு புரிந்துக்கொண்டது.... அதனால் தான் நான் உன்மீது பாசசிவ்வாக இருந்தேன்.... நீ பாசசிவ்வாக இருந்தபோதும் ரொம்ப ஹேப்பியாக ஃபீல் பண்ணேன்......ஆனால் இவ்வளவு காதல் இருந்தபோதிலும் நமக்குள்ள பிரிவு எதனால் வந்தது என்று எனக்கு இன்னும் வரை புரியலை. ஆனால் அது கூட நல்லது தான்... நம்ம காதலை இன்னும் பலப்படுத்தியிருக்குனு நினைக்கிறேன்... அதுமட்டும் இல்லை.... எதிர்காலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் நாம் இரண்டு பேரும் சேர்ந்து முகம் கொடுப்பதற்கான தைரியத்தை கொடுத்திருக்கு....... சோ அதுவும் நன்மைக்கு தான்... நீ என்னை அப்புனு கூப்பிடறதுக்கான காரணத்தை சொன்ன... அதை கேட்டப்போ உனக்கு அது சந்தோஷம்னு நினைத்தேன்... ஆனால் அதை நீ எத்தனை வலியோடு சொன்னனு தெரிந்தப்போ நீ ஆசைப்பட்ட மாதிரியே நான் உனக்கு அப்புவாக இருக்கனும்னு நினைத்தேன் .. ஆமா. ..நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணுறேன்... உன்னை என் குழந்தை மாதிரி பார்த்துப்பேன்... நீ உன் அம்மாகிட்ட எதையெல்லாம் மிஸ் பண்ணியோ அதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் கொடுப்பேன்... எந்த நொடியும் உனக்கு யாருமில்லைனு நீ ஃபீல் பண்ண விடமாட்டேன்... உனக்கு எப்பவும் நான் உன் அப்பு இருப்பேன்.... உனக்கு அப்பா அம்மா ப்ரெண்ட் எல்லாமே நான் இருப்பேன்.... ப்ராமிஸ்... நீ விரும்பும் கடற்கரையின் நிலாவின் ஒளியை சாட்சியாக வைத்து சொல்லுறேன்.......” என்றவன் கண்களை திறந்து அவளை நெருங்கியவன் “ஐ லவ் யூ ஸ்ரேயா........” என்றவன் தாமதிக்காது அவள் இதழ்களை கல்வியிலும் தான்..... இரவின் சதியாலும் தனிமையின் துணையாகவும் முத்த யுத்தம் தங்குதடையின்றி தொடர்ந்தது.... தன் மொத்த காதலையும் அந்த முத்தத்தில் வெளிப்படுத்திட முயன்றவனின் வேகத்திற்கு ஸ்ரவ்யாவும் தாக்குபிடிக்க முத்த யுத்தம் நீடித்த கணங்கள் நிமிடங்களாவது..... ஒருகட்டத்தில் இருவருக்கும் மூச்சு முட்ட இருவரும் விலகினர்.... ஸ்ரவ்யாவோ வெட்கத்தில் தேவ்வை நிமிர்ந்து பார்க்காது குனிந்த தலை நிமிராதிருக்க தேவ்வோ இன்னும் அந்த முத்தத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை.... அவனுக்கு தன்னை அந்த மோகநிலையிலிருந்து மீட்டுக் கொள்ளவே பல விநாடிகள் தேவைபட்டது.... ஒருகட்டத்தில் இருவரும் தம்மை மீட்டுக்கொண்டனர்... அப்போது தேவ் சற்று தயக்கத்துடன் “ஸ்ரேயா.... உ..உனக்கு பிடிச்சிருந்ததா??”என்று தயக்கத்துடன் கேட்க அவளும் தயக்கத்துடன் “ம்ம்ம்...” என்று கூறிட தேவ்வோ “நீ.. நீ.. எதை சொல்லுற??” “நீ.. எதை... கேட்குறா....??” “நா.நா..நான் எல்லாத்தையும் தான் கேட்குறேன்....” என்று திக்கி திணறி கூற ஸ்ரவ்யாவோ வெளிவந்த சிரிப்பை அடக்கியபடி “நானும் எல்லாத்தையும் பிடிச்சிருக்குனு தான் சொன்னேன்...” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி எத்தனிக்க அவள் கரம் பற்றி தடுத்தான் அவளை தன்புறம் இழுக்க கையிலிருந்த பொருட்களோடு அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்... “எங்க ஓடுறீங்க மேடம்???” “இ...என்..என்னை விடு அப்பு....” “உன்னை விடுறதுக்கா அங்கேயிருந்து பிளான் பண்ணி வரவைத்தேன்....” “என்னது பிளான் பண்ணியா?? அப்போ அந்த அஜூ சொன்னதெல்லாம் பொய்யா?? நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா??? நீ... ரொம்ப மோசம்... போ..போ... உன்கூட பேசமாட்டேன் போ....” என்று ஸ்ரவ்யா ஒரு கையால் அவன் மார்பில் குத்த தேவ்வோ அவளை தடுக்காது அவள் செயலை தடுக்காது ரசித்தபடியிருந்தான்....... சற்று நேரத்தில் ஓய்ந்தவள் “ஆனாலும் எனக்கு இது பிடிச்சிருக்கு....??” “மேடமுக்கு எது பிடிச்சிருக்கு??” “எல்லாமே... இந்த நல்லவனை ரொம்ப பிடிச்சிருக்கு... அவனோட காதல் ரொம்ப பிடிச்சிருக்கு.... அவன் எனக்கு சப்ரைஸ் பண்ண நினைத்தது ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்காக அவன் தேடி வாங்கியிருக்க கிஃப்ட் எல்லாம் பிடிச்சிருக்கு... எனக்காக அவன் எழுதுன கவிதையெல்லாம் பிடிச்சிருக்கு.... ப்ரபோஸ் பண்ணுறதா அவன் சொதப்புனது ரொம்ப பிடிச்சிருந்தது...... இப்போ வரை காதல் மன்னனாக மாறத்தெரியாமல் முழிச்சிட்டு இருக்கிற அவன் இன்னசன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... சொல்லப்போனா அவனை எனக்கு மொத்தமாக பிடிச்சிருக்கு.....” என்று கூறி அவன் கன்னத்தில் மீண்டுமொரு முத்திரையை பதிக்க தேவ்வும் அவளது செயலில் சிரித்தான்.... என்றும் போல் அவள் எதிர்பார்ப்பில்லாத காதல் அவளை கட்டிப்போட அவளை அணைத்தபடியே “உனக்கு என் மேல் கோபமே வராதா ஸ்ரயா???” “வரும்... நீ என்னை கண்டுக்காமல் இருந்தா கோபம் வரும்... நீ என்னை சூட்டினு கூப்பிடும் போது தாறுமாறாக கோபம் வரும்... என்னை பார்த்தா உனக்கு சூட்டி மாதிரி இருக்கா??” என்று மீண்டும் தேர்வை அடிக்க அவனோ சிரித்தபடி “உன்னை பார்த்ததும் உன்னோட பெயர் எனக்கு தியாகத்தில் வரவில்லை... அதான் சூட்டினு கூப்பிட்டேன்.....நம்மை விட சின்னவங்களை சூட்டினு தான் கூப்பிடுவாங்க... அதான் முதல் தடவை உன்னை பார்த்ததும் சூட்டினு கூப்பிட்டேன்... ஆனா இப்போ அழகாக ஸ்ரயானு தானே கூப்பிடுறேன்....” “ஆமா... ஆனா... நீ இனி எப்பவும் சூட்டினு கூப்பிடக்கூடாது புரியிதா???” “அபி கூப்பிடுவானே.....” “நான் உன்னை தான் கூப்பிடவேண்டாம்னு சொன்னேன்....” “அது ஏன் அப்படி??” “அது... அது... நீ என்னோட ஹஸ்பண்டா...” “அதுக்கு....” “நீ என்னை ஸ்ரயானு தான் கூப்பிடனும்... புரியிதா??” “உத்தரவு மேடம்....” என்று தேவ் பவ்வியமாக கூற ஸ்ரவ்யாவோ அவன் செயலில் சிரித்தாள்... “சரி.. வா... உனக்கு இன்னொரு கிப்ட் இருக்கு..... அதையும் பார்த்திடலாம்.....” என்று அவளை ரிசாட்டினுள் அழைத்துசென்றான்... இதயம் இந்த இதயம் இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு இது தத்தளித்து துடிக்கிறதே காயம் யாவையும் தேற்றி கொண்டு இது மறுபடியும் நினைகிறதே உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம் எத்தனையோ கடலை இது விழுங்கும் வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே இது தவித்திடும் நெருப்பா இல்லை குளிர்ந்திடும் நீரா இது பனி ஏறி மழையா இதை அறிந்தோர் யாருமில்லை உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை தூங்கும் போதும் இது துடித்திடுமே ஏங்கும் போதோ இது வெடிக்கும் தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வி இல்லா விடையா இதை அறிந்தோர் யாருமில்லை இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும் கண்ணீர் என்னும் வார்த்தையை மொழி இழக்கும் இதயம் இந்த இதயம் இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Anu Chandran's - Novels
இசைத்தூறலாய் என்னுள்ளே நீ
துளி 24
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN