டிப்ளமோ முடித்த மாயாவும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மீனாவும் ஒன்றாக கல்லூரி படிப்பை தொடங்கினர். மீனா பொறியியல் கல்லூரியில் அவள் விரும்பிய கணினி துறையை தேர்வு செய்தால்.
மாயா, அவளுக்கு பிடித்த ஃபேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்து ஒரு சிறந்த கல்லூரியிலும் சேர்ந்து விட்டாள். பல கனவுகளுடன் கல்லூரி செல்ல தொடங்கினார்கள் இருவரும்.
சென்ற சில வாரங்களிலேயே கல்லூரி படிப்புடன், வடிவமைப்பதிலும் கூடுதல் அறிவைப் பெறுவதற்காக சில கூடுதல் வகுப்புகளிலும் சேர்ந்தால் மாயா.
அத்துடன் கூடுதல் வகுப்புகளில் கிடைத்த அறிவால் மீனாவுக்கு சில ஆடைகளையும் வடிவமைத்தாள். அனைவரும் வியக்கும் அளவுக்கு அவள் வடிவமைப்பு இருந்தது. இவ்வளவு குறுகிய நாட்களில் அதுபோன்ற ஒரு படைப்பை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆரம்பத்தில் கஸ்தூரி மாயா இந்த துறையை தேர்வு செய்ததில் சிறிது மன வருத்தத்துடன் இருந்தார், நாட்கள் செல்ல செல்ல அந்த துறையில் மாயாவிற்கு இருந்த ஆர்வம் அவர் மனதை மாற்றியது.
மாயாவின் நாட்கள் மகிழ்ச்சியுடன் சென்றன. அவள் கல்லூரி நாட்களையும் வடிவமைப்பு வகுப்புகளையும் மிகவும் ரசித்தாள்.
அன்று மாலை மாயா சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தாள். "என்னமா, இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கே" கஸ்தூரி பரிவுடன் கேட்டார். "ஒன்னும் இல்ல மா, இன்னிக்கு கொஞ்சம் அலைச்சல் அத்தோடு பஸ்ஸும் கிடைக்கல அதான்" என்றால் சோஃபாவில் அமர்ந்து. "எதுக்கு ரொம்ப கஷ்டப்படுறே, இப்போதானே ஃபர்ஸ்ட் இயர் பொறுமையா பண்ணு" அவள் தலையை வருடி அறிவுறுத்தினார்.
"சரி மா, இப்போ ஒரு கப் காபி, தல வலிக்குது" கெஞ்சலாக கேட்டால்.
கஸ்தூரி ஒரு கப் காபியைக் கொடுத்து, உடை மாற்றி பின் ஓய்வெடுக்க சொன்னார். மாயா சுவையான காபியை ரசித்து சுவைத்தாள். பின் அவள் தோராயமாக சில இசை சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தால். அதற்குள் மீனா உள்ளே வந்தாள், அவளும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். சில மணி நேரம் கழித்து ராஜாராமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார்.
அன்று ஞயற்று கிழமை,
"மீனு, என்ன பன்ற?" அறைக்குள் புன்னகையுடன் நுழைந்தாள் மாயா. "டிராயிங். இதோ, எப்டி இருக்கு?" என்று கூறி தன் கையில் இருந்த குறிப்பேட்டை காட்டினாள்.
"சூப்பரா இருக்கு மீனு, நீ ஒரு ஆர்டிஸ்ட்" என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டால்.
"அம்மா இங்க பாருங்க, மீனு டிராயிங். சூப்பரா இருக்கு" மகிழ்ச்சியாக கூறியபடி கஸ்தூரியை தேடி சென்றால்.
கஸ்தூரி, ராஜாராம் இருவரும் ஓவியத்தை பாராட்டினர்.
"என்னங்க, போன் ரிங்காகுதுணு நினைக்குறேன்" கஸ்தூரி கூற, ராஜாராம் தன் அறைக்கு சென்றார்.
"வள்ளி மா" அவர் குரல் உற்சாகத்துடன் ஒலித்தது. கஸ்தூரி வள்ளியின் பெயர் கேட்டு முகம் மலர்ந்தார்.
"அப்படியா மா, ஏன் இந்த வருஷம் வித்தியாசமா பண்ணுறீங்க..
ஓ.. சரி மா..
நாங்க கண்டிப்பா வரோம்..
மாறன் நல்லா இருக்கானா? எங்க போய்ட்டான்.. சரி மா, அவன் வந்தா நான் கேட்டேனு சொல்லு..
அண்ணி இருக்கா மா, இரு தரேன்" கஸ்தூரி இடம் கைபேசியை கொடுத்தார்.
கஸ்தூரி ஆவலாக வாங்கிக்கொண்டார். இருவரும் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
"அப்பா, அத்தையா?" ஆவலாக வந்தாள் மீனா. "ஆமா மா, அம்மா பேசிட்டு இருக்காங்க, அப்புறம் நீயும் பேசு" என்றார்.
"சரி பா, எதும் விசேஷமா பா?" ஆவலாக கேட்டாள். "ஆமா மா, கோவில் கும்பாபிஷேகமும் ஆண்டு விழாவும் ஒண்ணா வச்சிருக்காங்களாம். நாளைக்கு வீட்டுக்கு பத்திரிக்கை தர மாறன் வரானாம். இன்னிக்கு ராத்திரி டிரெயின்ல" என்றார் உற்சாகமாக.
"ஹை!!!! ஜாலி!!! மாமா வருவாங்க அப்புறம் நாம ஊருக்கு போவோம்" விசில் அடித்தாள்.
"என்ன டி, சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு" மாயா வர. "அக்கா நாம ஊருக்கு போக போறோமே!" என்றாள் குஷியாக.
"ஊருக்கா!!" கண்கள் விரிய கேட்டாள் மாயா. "ஆமா... அதுவும் ரெண்டு வாரம் அங்கதா. நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் வருவாங்க. ஜாலி!!" மீனா ஆர்வமாக கூறினாள்.
"ஆமா மீனு ரமேஷ் அண்ணா, தருண், வினித்தா, ரேணு, அஜய் இவுங்கல எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. எனக்கும் எல்லாரையும் பாக்கனும் போல இருக்கு" மாயா ஆசையாக கூறினாள்.
"ஆமா கா, நாம ஒவ்வொரு வருஷமும் பரிட்சை அது இதுன்னு சொல்லி போகவே இல்ல. இந்த வருஷம் எந்த தடங்கலும் இல்ல, நாம போறோம் என்ஜாய் பன்றோம்" என்று ஆனதமாய் கூச்சலிட்டாள்.
"ஆமா"
"மாமாவ பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. மாமாவயும் பாக்கப்போறோம்" மீனா உற்சாகமாக கூற மாயாவின் முகம் மாறியது.
"மீனா, இங்க வா அத்தை பேசுறாங்க" கஸ்தூரி அழைக்க, மீனா அவளிடம் சென்றாள்.
"ச்சே, அங்க போக எனக்கு பிடிக்காத ஒரே காரணம் அந்த கேரக்டர்தான். காட்ல இருக்க வேண்டிய ஜந்துவ அத்த வீட்டுல வளர்த்துட்டு இருக்காங்க" தலையில் அடிதுக்கொண்டாள்.
சிறு வயது முதலே இருவருக்கும் எழாம் பொருத்தம். இவள் கீரி என்றால் அவன் பாம்பு, பண்பு, திறன், குணம், விருப்பம் என அனைத்திலும் இருவரும் இரு வேறு துருவங்களாக நிற்பார்கள்.
மாயா, மாறனை விட ஏழு வயது இளையவள். அவள் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவன் இவளை விளையாட்டாக சீர, இவள் கோவதின் எல்லையை அடைந்து கல்லால் அவன் மண்டையை உடைத்துவிட்டாள்.
அனைவரும் பதறிப் போயினர், மாயாவை ஒரு முறைகூட அடிக்காத அவள் தந்தை அன்று அவளை அடித்ததை இன்றும் அவள் மறக்கவில்லை.
அதுவே அவள் அவனை கடைசியாக பார்த்த நாள். அதன் பின் அவள் அங்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாள். இருப்பினும் தன் மற்ற உறவினர்களை சந்திக்க மனம் விரும்பியதால் இன்று சம்மதித்தாள்.
.
.
"மாறா!!" வள்ளி அழைக்க,
"அம்மா!!" என்று ஆசையாக வந்தான் மாறன்.
"இப்போ தான் பா, மாமா கிட்ட பேசுனேன். இங்க திருவிழானு சொன்னேன். அவரும் குடும்பத்தோட வரேன்னு சொல்லிட்டாரு பா, இப்போதா எனக்கு நிம்மதியா இருக்கு. எவ்வளவு நாள் ஆச்சு என் மருமகள்கள பாத்து. ஒவ்வொரு வருஷமும் அண்ண அண்ணி வருவாங்க ஆனா அந்த புள்ளைங்கள பாக்கவே இல்ல இவ்வளவு வருஷமா" சோகமாக கூறினார்.
"அம்மா, அவுங்க படிச்சுட்டு இருந்ததால வரல, இதுக்கு ஏன் கவல படுறீங்க. இந்த வருஷம் வறாங்க, அத நினைச்சு சந்தோசமா பாத்துக்கோங்க. மீனு குட்டியும் வருவா, அவள தான் எனக்கும் பாக்கனும் போல இருக்கு" புன்னகையுடன் கூறினான்.
"சரி பா, இன்னைக்கு ராத்திரி கிளம்புற தானே. இப்போ போய் கொஞ்ச நேரம் தூங்கு. நா உன்ன எழுப்பி விடுறேன், ரொம்ப தூரம் பயணம் பண்ணனும்ல போ" என்று மகனை அனுப்பினார்.
ஊர் முழுவதும் சொந்தங்களுடன் இருந்தபோதிலும் தன் மூத்த அண்ணன் ராஜாராம் மீது வள்ளிக்கு அதிக பாசம். அவரும் அதே போலவே இருந்தார். தங்கை வள்ளியை தன் அன்னைக்கு நிகராக நேசித்தார். அவள் இளைய வயதில் வாழ்வை இழந்து நின்றதை பொறுக்க முடியாமல், தனக்கும் எந்த சந்தோசமும் வேண்டாம் என்று கூறி திருமணத்திற்கு மறுத்தார்.
மீண்டும் வள்ளியின் சொல்லுக்காகவே திருமணத்திற்கு சம்மதித்தார். கஸ்தூரியும் வள்ளியும் நாத்தனார் போல் இன்றி, ஒரு அக்கா தங்கை போலவே பழகினார்கள்.
ராஜாராம் பணி இடமாற்றம் காரணமாக பெங்களூர்க்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் வள்ளியை காண சொந்த ஊருக்கு வந்துவிடுவார்.
"இந்த தடவ போறப்போ, எல்லார்க்கும் புது துணி வாங்கிட்டு போகனும். கும்பாபிஷேகம் நடக்க போகுது, வேற எதாச்சும் வேணுமானு கேட்டுக்கோங்க" பரபரத்தார் கஸ்தூரி.
"எல்லா வாங்கிடலாம். தங்கச்சி போன தடவ போணப்போவே பிள்ளைகள பத்திதா அதிகமா விசாரிச்சா, அவளும் இவர்களை பாக்கணும்னு தான் ரொம்ப ஆசையா இருக்கா" என்றார்.
"ஆமாங்க, எனக்கும் புரிஞ்சுது. எவ்வளவு நாள் ஆச்சு. சரி இன்னும் ஒரு வாரம் தானே, எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க" கஸ்தூரி ஆமோதித்தார்.
.
.
.
.
"மாறா!! உள்ள வா பா... நல்லா இருக்கியா?" மலர்ந்த புன்னகையுடன் வரவேற்றார் கஸ்தூரி.
"நல்லா இருக்கேன் அத்த, நீங்க எப்படி இருக்கீங்க?" புன்னகையுடன் விசாரித்தான்.
"அத்த, மாமா இல்லைங்கலா?" மாறன் கேட்க, "அது எப்படி மருமகன் வரேன்னு சொல்லியும் அவரு வெளிய போவாரு. குளிச்சுட்டு இருக்காரு இப்போ வந்திருவாரு பா. நீயும் குளிச்சுட்டு வந்துரு சாப்பிடலாம்" அன்பாக கூறி விருந்தினர் அறையை காட்டினார்.
அவன் குளித்து முடித்து வர, ராஜாராம்மும் வெளியில் வந்தார். "மாமா, எப்படி இருக்கீங்க?" அவரை கண்டதும் அணைத்துக்கொண்டான்.
"நல்லா இருக்கேன் டா, மருமகனே. நீ எப்படி இருக்கே?" வாஞ்சையோடு அவன் நெற்றிக்கோதி கேட்டார்.
"நீங்களே பாக்குறீங்களே, சொல்லுங்க எப்படி இருக்கேன்??" என்று மாறன் புருவங்கள் உயர்த்தி கேட்டுக்கொண்டு இருக்க....
"கொரங்கு மாதிரி, அதானே ஹா...ஹா... ஹா "மாயா கைபேசியில் பேசியவாரு வீட்டுக்குள் நுழைந்தாள்.
.
.
Hi friends,
2 ஆம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Author: Arthi
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.