யாசிக்கிறேன் உன் காதலை -3

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாசிக்கிறேன் உன் காதலை -3
மாலை நான்கு மணி போல் அகிலாவின் குடும்பம் வந்திருந்தனர். அனைவரும் அவர்களை வரவேற்றனர் சிறிது நேரத்தில் தாத்தாக்கள் மற்றும் சித்தப்பாக்கள் வெளியே சென்றனர். பாட்டிகள் உள்ளே சென்றனர்.

"எங்கம்மா பாப்பா ரெண்டு பேரையும் ஆள காணோம்" என்றார் முத்துலட்சுமி (அகிலாவின் அம்மா) பாசமாக.

"மேல இருக்காங்க ம்மா சின்னவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல".

"என்னாச்சு???" என்றனர் நான்கு (அகிலாவின் அப்பா, அம்மா,அண்ணா,அண்ணி) பேரும்.

"ஒன்னும் இல்ல அந்த நாட்டுக்கும் இந்த நாட்டுக்கும் அவளுக்கு நேரம் ஒத்து வரல ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும், ரவீன் எங்க?? வந்துட்டானா??" என்றார் குணா.



"மாமா நா வந்துட்டேன்" என்றான் சிரிப்புடன் ஒர் இளைஞன் உள்ளே வந்து.

"வாடா வா" என்று அனைவரும் வரவேற்றனர்.

"ம்ம்.. மாமா நானே!! பேபிடாலையும் அபியையும் கூப்பிடுறேன் ரெண்டு பேரும் ஓடி வருவாங்க பாருங்க" என்று சிரிப்புடன் தாழ்வாரம் சென்றான். பெரியவர்கள் சிரிப்புடன் வேறு பேச ஆரம்பித்தனர்.

"பேபிடால்.... அபி..." என்று கத்தினான்.

அவன் சத்தத்தில் சிறியவர்கள் அனைவரும் கீழே வந்தனர். அபி மற்றும் பேபிடால் சிரிப்புடன் கீழே ஓடிவந்தனர். "வா" என்றான் கைவைத்து இருவரும் ஓடி சென்று அவன் இரு தோள்களிலும் சாய்ந்து கொண்டனர். சிறியவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். சிரிப்புடன் இருவரும் விலகினர்.

"மை டியர் பேபிடால் ஹவ் ஆர் யூ???" என்றான் அவளை அணைத்து.

"ஃபைன் ரவீன் இதான் நீ வர நேரமா??? " என்று விலகி வயிற்றில் குத்தினாள்.

"ஆ... ஹேய்!! நா ஊருக்கு வந்ததும் பேக்கை வச்சுட்டு இங்கதான் வந்தேன்" என்று அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.

"நம்புற மாதிரி இல்ல மேன்" என்றாள் பொய்யான முறைப்புடன்.

"டேய்!! மாமா அவள பார்த்த என்னைய கண்டுக்கவே!! மாட்டியே!!" என்றாள் அபி முறைப்புடன்.

"ஹேய்!! டார்லிங் உன்ன அப்படி விடுவானா?? செஃப வந்துட்டியா?? டா" என்றான் அவளை அணைத்து.

"ம்ம்.. ம்ம்.. நா உன்ன வெயிட் பண்ணி என் கூட வர சொன்னேன் நீ தான் முன்னாடியே?? போயிட்ட" என்றாள் பொய்யா முறைப்புடன் விலகி.

"என்ன ரவீன் பதில் சொல்லாம அப்படியே!! நீக்கிற கேட்குறல்ல சொல்லு" என்றாள் பேபிடால் குறும்பாக.

"ஹேய்!! மாட்டிவிடாத அபி டார்லிங் நா தான் ஆபீஸ் வொர்குன்னு சொன்னேன்ல டி" என்றான் பாலமாக.

"அபி கேளு கேளு என்னைய விட ஆபீஸ் தான் முக்கியமான்னு கேளு" என்றாள் குறும்பாக.

'அபியும் ரவீன்னும் ரொம்ப க்ளோசா?? இல்ல பேபிடாலும் ரவீன்னுமா?? ' என்று துருவா மனதிலே பட்டிமன்றம் நடத்தினான்.

"அடியே!! உனக்கு புண்ணியமா போயிடும் வாய மூடு" என்று கையெடுத்து கும்பிட்டான். சிறியவர்கள் அனைவரும் சிரித்தனர்‌.


அபியும் பேபிடாலும் ஹை-ஃபை அடித்து,"பொழச்சி போ" என்றனர் சிரிப்புடன்.

"ஹேய்!! பேபிடால் நீ எப்படி ரெண்டு நாள்ல தமிழ் இவ்ளோ!! நல்லா பேசுற" என்றான் ரவீன் ஆச்சிரியமாக.

"நீதான் தமிழ் மூவி சப்டைட்டில் வச்சு பாக்க சொன்னால அத பார்த்து கத்துட்டேன்(கத்துக்கிட்டேன்) ரவீன்" என்றாள் சிரிப்புடன்.

"கத்துக்கிட்டேன்குறது கூட ஒழுங்கா சொல்ல வரல பேச்ச பாத்தியா இவளுக்கு" என்றான் அபியிடம்.

"ஹேய் மேன் கத்துக்கிட்டத கேட்காமலயே! சொல்ற", என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி.

"சரி.. சரி.. நீ கத்துகிட்ட வித்தைய கொஞ்சம் இறக்கு கேக்கலாம்" என்றான் கிண்டலாக.

"நாயே! தடிமாடு நீல்ல எதுக்கு பிறந்திருக்க பூமிக்கு பாரம்மா?? என் உயிரை வாங்குற, நீ நல்லாவே இருக்க மாட்ட எக்ஸ் எக்ஸ் எக்ஸ்" என்று பச்சை பச்சையாக திட்ட ஆரம்பித்தாள்.

"அய்யோ!! போதும்டி இனிமே உன்கிட்ட பேச சொல்லி கேட்க மாட்டேன்" என்று வாயை பொத்தினான். சிறியவர்கள் அனைவரும் சிரித்தனர்.

"உன்ன எத கத்துக்க சொன்னா?? எத கத்து வச்சிருக்க இனிமே! நீ பேசக்கூடாது" என்று கையை விலக்கினான்.

"நா பார்த்த மூவில இப்படி தான் வந்தது நா பேசுவேன் மேன் உனக்கு என்ன??" என்றாள் முறைப்புடன்.

"டாலு நீ கடைசியா பேசுனது எல்லா பேட் வேர்ட்ஸ்" என்றான் துரு பக்கத்தில் வந்து.

"அப்படியா?? இனிமே! பேச மாட்டேன்" என்றாள் வேகமாக.

"என்ன ரவீன் அண்ணா கொஞ்சம் கேப் விட்டா நாங்க பேசலாம் நினைச்சோம் கேப்பே விட மாட்டேங்கிறீங்களே!" என்றான் ரிஷி கிண்டலாக.

"ஈஈஈஈஈ.. இல்லடா இவளுகள பார்த்த எக்சைட்ல பேசிட்டேன்" என்று ஆண்கள் ஐந்து பேரையும் அணைத்து விடுவித்து அனைவரிடமும் நலம் விசாரித்தான்.

"ஆமா மாமா உனக்கு எப்படி இவங்க ரெண்டு பேரையும் தெரியும்?? நாங்களே இப்பதான் மீட் பண்றோம்" என்றான் நந்து.

"நா ஓர்க் விஷயமா அமெரிக்கா போனேன்டா, மூன்னு மாசம் அத்த வீட்டில்தான் தங்கி இருந்தேன். பெரியவங்க என்னதான் பேசக்கூடாது அது இதுன்னு சொன்னாலும் நா கேட்காம அங்க போயிட்டேன்" என்றான் சிரிப்புடன்.

"ஆமா மாமா நாங்களும் தாத்தா பேச்சுக்கு கட்டுப்படாமல் இவங்க கிட்ட பேசிருந்த இன்னும் க்ளோஸாகி இருப்போம், என் தங்கச்சியும் எங்க கூட ரொம்ப க்ளோசா இருப்பாங்க" என்றான் சந்தோஷ் சிரிப்புடன். மற்றவர்களும் அதனை ஏற்பது போல் தலையாட்டினார்.

"ரவீன் எனக்கு என்ன வாங்கிட்டு வந்த??" என்றாள் பேபிடால் ஆர்வமாக.

"பேபிடால் எத்தன தடவை சொல்றது நேம் சொல்லி கூப்பிடாதன்னு உங்களையும் அப்படிதான் கூப்பிறாளா??" என்றார் அகிலா துரு, விரு, ரிஷி மற்றும் சந்தோஷ் நான்கு பேரையும் பார்த்து. நான்குபேரும் முழித்தனர்.

"அத்த அவளுக்கு எப்படி கூப்பிடனும் தோணுதோ! அப்படியே! கூப்பிடட்டும்" என்றான் துரு வேகமாக.

"அப்படி சொல்லு துரு" என்றாள் சிரிப்புடன்.

"ஆத்தி.. இவங்க ரெண்டு பேரும்தான் என் பேத்திங்களா?? இவ்ளோ!! அழகா இருக்காங்க, இத்தன நாளும் பார்க்காமலே!! இருந்ததுதானே!!" என்றார் முத்துலட்சுமி(அகிலாவின் அம்மா) வந்த கண்ணீரை முந்தானையை துடைத்தபடி.

"பேபிடால் அபி இவங்க என் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி அப்புறம் ரவீன்ன ஏற்கனவே தெரியும்" என்று சிரிப்புடன் அறிமுகம் செய்தார். இருவரும் நான்கு பேரையும் அணைத்து முத்தமிட்டு, ஆசிர்வாதம் வாங்கினார். பெரியவர்கள் அனைவரும் சிரிப்புடன் பார்த்தனர்.

"அத்த மாமா நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க எங்களுக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு பார்க்குறோம்" என்றார் பார்வதி (முதல் அத்தை) மரியாதையாக.

"சரிமா" என்றதும் அகிலாவை தவிர மற்ற பெண்கள் அனைவரும் உள்ளே சென்றனர்.

"மித்ரா குட்டி காலேஜ் எப்படி போகுது??" என்றான் ரவீன்.

"சூப்பரா போகுது அண்ணா" என்றாள் சிரிப்புடன்.

"ஆமா ரவீன் உனக்கு எப்படி இவங்க எல்லாரையும் தெரியும்??" என்றாள் அபி குழப்பமாக.

"அபி நாங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே பழக்கம். நானும் துருவும் சேம் செட், திருவிழாவுக்கு வரப்ப இங்க நா வருவேன். இவங்க அங்க வீட்டுக்கு வருவாங்க. உங்கள மட்டும் தான் நம்ம வீட்டுல கான்டெக்ட் பண்ணாம இருந்தாங்க நாங்க எல்லாரும் ஒன்னா தான் இருந்தோம்" என்றான் விளக்கமாக.

"இதெல்லாம் ஓவரா தெரியல எங்க நாலு பேரையும் மட்டும் தனியா விட்டுட்டிங்க" என்றாள் பேபிடால் முறைப்புடன்.

"தங்கம் அப்படிலாம் இல்லடா நாம எல்லாரும் சொந்தக்காரங்க தான் உங்க தாத்தா(நேசமணி) உங்கள ஏத்துக்காம நாங்க மட்டும் எப்படி உங்க கூட உறவா இருக்க முடியும்?? அதான் நாங்க பேசல" என்றார் முருகன் (அகிலாவின் அப்பா) வருத்தமாக.

"சரி விடுங்கப்பா அதான் இப்ப ஒன்னா சேர்ந்துட்டோம்ல" என்றார் அகிலா ஆறுதலாக.

"அட வந்த விஷயத்த பாக்காம எதுக்கு இதுல்ல ரவீன் நீ வாங்குனது எடுத்துட்டு வந்தேன், அத்த மாமாவுக்கு டிரஸ் வந்ததும் கொடுத்தாச்சு" என்றார் சீதா (ரவீனின் அம்மா).

"ஆமால்ல" என்று அவர் கையில் இருந்த கவரை வாங்கி அபி மற்றும் பேபிடாலிடம் கொடுத்தான். இருவரும் வாங்கிப் பிரித்துப் பார்த்தனர். அதில் ஒரே மாதிரி புடவை மற்றும் அதற்கேற்றார் போல் நகையும் இருந்தது.


"வாவ்.."என்றனர் இருவரும் சந்தோஷமாக.

"பிடிச்சிருக்கா??" என்றான் சிரிப்புடன்.

"யா" என்று இருவரும் இரு தோளில் சாய்ந்து விட்டு விலகினர்.

"ரவீன் உனக்கு எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கணும் தோணுச்சு??" என்றார் அகிலா.

"என் அத்த பொண்ணுங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான் அத்த அதான் வாங்கினேன்" என்றான் சிரிப்புடன்.

"சூப்பர் டா சரி நா போய் குடிக்க கொண்டு வரேன்" என்று உள்ளே சென்றார். அவருடன் பாட்டியும் சீதாவும் சென்றனர். தாத்தா, ராமன்(ரவீனின் அப்பா) , குணா மூவரும் ஓரத்தில் இருந்த சோபாவில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். சிறியவர்கள் வேறு மூளையில் உள்ள சோபாவில் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

"டாலு நவ் யூ ஃபீல் பெட்டர்??" என்றான்.

"ம்ம்..எஸ் துரு" என்றாள். அகிலா வந்து அனைவருக்கும் ஸ்நாக்ஸ் மற்றும் டீயை குடித்து விட்டு சென்றார்."ரவீன் நா உன் கூட உன் வீட்டுக்கு வரட்டா??" என்றாள் பேபிடால் டீயை குடித்து முடித்ததும். அனைவரும் லேசான அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"ஷார் பட் இப்பதானே நீ இங்க வந்த, அங்க ஸ்டே பண்ண தாத்தா விடானுமே!! ஆல்ரெடி நீ டுடேஸ் வீட்ல இல்லான்னு அத்த போன் பண்ணுனாப்ப சொன்னாங்க, இப்பவும் நீ தங்களான எப்படி??" என்றான் குழப்பமாக.


"இல்ல ரவீன் இங்க இருக்குறாவங்களுக்கு நா கூட இருக்குறது அண்ட் கம்பட்டபுள இருக்குற மாதிரி ஃபீல் பண்றாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் தயங்கியபடி.

"என்ன உலருர??" என்றான் துரு கூர்மையான பார்வையுடன்.

"யாரும் உன்ன அப்படி நினைக்கல" என்றான் விரு வேகமாக.

"உனக்கு என்னச்சுடா??" என்றான் சந்தோஷ்.

"இல்ல நா வந்து டூடேஸாச்சு மித்ரா மார்னிங் அபிய அண்ணின்னு உறவு முறை வச்சுக் கூப்பிட்டா நானும் அவள விட பெரியவ தானே!! என்னைய ஏன் அப்படி கூப்பிடலா??" என்றாள் மித்ராவை பார்த்து. அபி,ரவீன்,பேபிடால் தவிர மற்றவர்கள் மித்ராவை முறைந்தனர்.

"அது.. அது.. உன்ன பார்த்தா எனக்கு ஃப்ரெண்டா தான் தோணுச்சு, அபி அக்கா வந்து என்னைய விடப் பெரியவங்கல அதான்" என்றாள் மித்ரா திக்கி திணறி.

"ஏய்!! என்னைய பாத்தா உனக்கு அப்படியா தோணுது??" என்றாள் அபி வேகமாக.


"இல்லல்ல அப்படி சொல்லல" என்றாள் தலையை சொறிந்தபடி.

"பேபிடால் இதுக்காகவா நீ போறேன்னு சொல்ற" என்றான் ரிஷி பேச்சை மாற்றி.

"அக்கா அவ ஒரு லூசு" என்றான் நந்து.


"இட்ஸ் ஓகே!! நோ ப்ராப்ளம் ரவீன் கூட போய் தங்கிட்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,


"அங்க எதுக்கு நீ போகணும் இப்பதானே!! வந்திருக்க ஒரு வாரம் கழிச்சு அங்க போய் தங்குறத பத்தி யோசிக்கலாம்" என்றார் நேசமணி அந்த இடத்திற்கு வந்து முடிவாக. அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.

"தாத்தா அவ சும்மா சொன்னா நீங்க போங்க" என்றான் துரு அவசரமாக.

"துரு நா உண்மையத்தான் சொல்றேன் தாத்தா எனக்கு ஒரு டவுட்டு அதாவது சந்தேகம்" என்றாள் கூர்மையான பார்வையுடன்.

குணா நேசமணி அங்கு நிற்பதைப் பார்த்ததும் வேகமாக பக்கத்தில் வந்தார்.


"என்ன??" என்றார் மிடுக்கான குரலில்.


"எனக்கு ஏன் காலையில அபிக்கு கூடுத்த மாதிரி டிரஸ் ஜூவல்ஸ் குடுத்து வரவேற்ற மாதிரி வரவேற்கல" என்றாள் கூர்மையான பார்வையுடன்.

"உனக்கும் அப்படித்தான்" என்று அவர் சொல்ல வரும்போதே,


"ஸ்டாப்.. ஸ்டாப்.. தாத்தா அப்ப எனக்கு வாங்குன டிரஸ், ஜூவல்ஸ்ல எங்க???" என்றாள் கூர்மையான பார்வையுடன்.

"இவ விதண்டாவாதம் பண்றதுக்குனே!! பேசுற" என்றார் கோவமாக.


"பேபிடால் தாத்தா கிட்ட இப்படி பேசாத" என்றார் குணா கண்டிப்பான குரலில்.

"டாட் நீங்க தானே சொல்லி இருக்கீங்க தப்பு பண்ணா தட்டி கேட்கணும்னு சொல்லுங்க டாட் அபிக்கும் எனக்கும் எதுக்கு இந்த டிஃபரண்ட்?? அபிக்கு எவ்ளோ!! வேணாலும் பண்ணுங்க, அவமேல எனக்கு பொறாமை எல்லாம் இல்ல, எனக்கு ஏன் பண்ணல அதுமட்டும்தான் டாட் என் கொஸ்டீன் அப்பறம் கிரக்கர்ஸ் அதாவது பட்டாசுல இனிமே!! வேணா அதுல்லாம் பொல்யூஷன்" என்று முடித்துக் கொண்டாள். சிறியவர்கள் கடைசியாக அவள் சொன்னதை கேட்டதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

"இனிமே!! என் முன்னாடி இப்படி எல்லாம் கேள்வி கேட்காத, என்னைய கேள்வி கேட்குற துணிச்சல் யாருக்கும் இருக்கக்கூடாது, குணா சொல்லிவை இனிமே!! இவ இப்படி பேச கூடாது" என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியே சென்றார். பேபிடால் தூசி தட்டுவது போல் மேலே தட்டிக் கொண்டிருந்தாள்.

குணா முறைக்க வந்தவர் அவள் முகத்தை பார்த்ததும் சிரித்துக்கொண்டே,"பேபிடால்.. பேபிடால்.. செமயா கேட்ட இந்த மாதிரி விஷயம் எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது, அப்படியே!! உன் தாத்தா குணம் உனக்கு இருக்கு, ரவீன் வீட்டுக்கு அப்புறம் போகலாம், தாத்தாவ இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தனும் அதுக்கு நீ இங்க தான் இருக்கணும்" என்றார் அவளை அணைத்து.

"ஓகே! டாட்" என்று சிரிப்புடன் விலகினாள்.

"குணாப்பா தாத்தாவ நாங்களும் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு இருக்கோம்" என்றான் நந்து கண்ணடித்து.


"எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க??" என்றார் கிண்டலாக.


"நானு நானு" என்று சிறியவர்கள் சத்தம் போட்டனர் துரு, அபி ரவீனை தவிர.

"பண்ணுங்கடா பண்ணுங்க நீங்க பண்ணாம யாரு பண்ணப் போறா உங்க தாத்தாவ" என்றார் சத்தமாக சிரித்துக்கொண்டே.


"ரவீன் கிளம்பலாமா??" என்று வந்தார் சீதா.

"அத்த ரவீன் இங்கேயே! இருக்கட்டும்" என்றாள் டேபிடால் சோகமாக.


"நாளைக்கு மீட் பண்ணலாம் டா வீட்டுக்கு வந்ததும் இங்க வந்துட்டேன், அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ஆதியும் தியாவும் (நம்ம கதையில்ல எப்போதுமே எல்லாருக்குமே பேர் இருக்கும் இந்த கதைலையும் அப்படி தான் யாரும் கன்பியூஸ் ஆகாதீங்க) கால் பண்ணுங்க நைட்டு பேசுங்க" என்றான் ரவீன் அபி மற்றும் பேபிடாலை பார்த்து. இருவரும் தலையாட்டினர்.

ரவீனின் குடும்பத்தினர் கிளம்பி சென்றனர். அனைவரும் தாழ்வாரத்தில் கீழே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


"மாமா இவ நேமே பேபிடால் தானா?? இவ ஒரிஜினல் நேம் என்ன??" என்றான் துரு சந்தேகமாக.

அகிலா, குணா, அபி ,பேபிடால் நான்குபேரும் சிரித்தனர். மற்றவர்களும் கேள்வியாக பார்த்தனர்.


"அபி நேம் அபிராமி என்கின்ற அபிவேதரசி, அபி-குறது அபிராமியோட சுருக்கம், வேத-குறது வேதவல்லி சுருக்கம், அரசி-குறது அரசி, என் மூன்னு அம்மாவோட நேம் சேர்ந்த என் முத பொண்ணோட நேம்" என்றார் குணா விளக்கமாக.

"அப்ப பேபிடால்" என்றான் சந்தோஷ் சந்தேகமாக.


"பேபிடாலோட ஒரிஜினல் நேம் அபிநேகவதி அபி-குறது அபிராமி, நே-குறது நேசமணி,க-குறது கந்தன், வ-குவது வரதன், தி-குறது என் பாட்டி திலகம் இதான் என் ரெண்டாவது பொண்ணோட நேம்" என்றார் குணா சிரிப்புடன்.

"மாமா குணாப்பா நேம் செம்ம" என்றனர் சிறுவர்கள் சத்தமாக. பெரியவர்கள் அனைவரும் குணாவின் பாசத்தை பார்த்ததும் வருத்தமும் சந்தோஷமாக கண்கலங்கினார்.


"அபி அப்படியே பாட்டிங்க மாதிரி தான் ரொம்ப மென்மையானவ ஆனா பேபிடால் அப்படி இல்ல குறும்புக்காரி, மென்மை கலந்த கோபக்காரி அப்படியே தாத்தா மாதிரி தான், இவ கூட அபி சேர்ந்துட்டா குறும்பு பண்ண ஆரம்பிச்சுடுவா" என்றார் அகிலா சிரிப்புடன்.

"அப்ப ஏன் பேபிடால்னு கூப்பிடுறீங்க??" என்றாள் மித்ரா சந்தேகமாக.


"பேபி டால் அமெரிக்கால தான் பிறந்த நா இங்க தான் பிறந்தேன், நிறைய ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க எல்லாருமே ஒவ்வொரு லாங்குவேஜ், அங்க இருக்குறதுலையே நேகா தான் குட்டி பாப்பா அவ அப்ப அப்படியே டால் மாதிரி தான் இருப்பா, அவள பார்க்குற அத்தன பேருமே பேபிடால்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க, அதுவே நீக் நேமா மாறிப்போச்சு, இவளால இன்னும் நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க, என்னைய எல்லாருமே பேபிடால் சிஸ்டர்னு தான் சொல்லுவாங்க" என்றாள் அபி பெருமையாக‌.

"இப்ப மட்டும் என்ன டால் மாதிரி தானே இருக்கா" என்றான் துரு சிரிப்புடன் பக்கத்திலிருந்த பேபிடாலின் தலைமுடியை கலைத்து.

"ஹேர்ஸ்டைல கலைக்காத மேன்" என்றாள் அவன் கையை தட்டி விட்டு தலை முடியை சரிசெய்து.


"எது ஹேர்ஸ்டைல்?? முடிய விரிச்சு போட்டு வந்து உட்கார்ந்திருக்கியே!! இதுவா" என்றான் விரு கிண்டலாக.

பேபிடால் விருவை முறைத்தாள்.
"நா அப்படித்தான் பண்ணுவேன்" என்று மீண்டும் அவள் தலை முடியை இரு கைகளால் கலைத்து விட்டான்.

"துரு அப்ப உன் ஹேர்ஸ்டைல் அவ்ளோ!! தான்" என்று முட்டிக்கால் போட்டு அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

"அடியே!! வலிக்குதுடி" என்று இழுத்து உட்கார வைத்து அவள் முகத்தை இரு கைகளால் பிடித்து அவள் நெற்றியில் இடித்துவிட்டு நொடியில் விலகினான்.

"ஆ.... " என்று தலையை தேய்த்தாள். மற்றவர்கள் இவர்கள் விளையாட்டை பார்த்து சிரித்தனர். "உன் தலைல என்ன ஸ்டோனா வச்சுருக்க???" என்றாள் தலையை தேய்த்தபடி.

"இல்ல களிமண்ணு" என்றான் ரிஷி கிண்டலாக.

"களிமண் அப்படினா??" என்றாள் அபி புரியாமல்.


"இதோ!! இவன் தான்" என்று சந்தோஷ் நந்தனை காட்டி.


"அக்கா" என்று சொல்லி விட்டு சந்தோஷ் அடித்தான். இவர்களும் இருவரும் மாறி மாறி சண்டை போட ஆரம்பித்தனர். அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தனர்.

"டாக் உன்னால வலிக்குது" என்றாள் பேபிடால் துருவை முறைத்தபடி.

"இன்னுமா வலிக்குது உனக்கு??" என்று அவள் நெற்றியை தேய்த்துவிட்டு,"ரொம்ப டெட்டியா இருக்க கோ அண்ட் பாட்" என்றான் கிண்டலாக.

"ஐயோ!! ஆமா துரு தூங்கி எழுந்ததும் ரவீன் சத்தம் கேட்டுச்சு அப்படியே!! ஓடி வந்துட்டேன் ரொம்ப டெட்டியாவ இருக்கேன்??" என்றாள் அவன் காதில் ரகசியமாக.

துரு விஷமமாக சிரித்துக்கொண்டே,"நீ தள்ளிப்போ பேட் ஸ்மெல் கம்மிங்" என்றான் சத்தமாக. மற்றவர்களும் இவர்களை திரும்பிப் பார்த்தனர்.

"ஹேய்!! இப்படியா மாட்டி விடுவா" என்று அவன் தோளில் அடித்தாள்.

"என்ன சண்ட ரெண்டு பேருக்கும்?? பேபிடால் எதுக்கு அடிக்கிற??" என்றார் அகிலா.


"அத்த நா சொல்றேன் ஸ்மெல் டாலு" என்று அவன் ஆரம்பிக்கும்போதே முட்டிக்கால் போட்டு அவன் வாயை பொத்தினாள்.

"அத்த இவ மேல" என்று வாயில் இருந்த அவள் கையை அகற்றி சொல்லப்போனான்.


"சொல்லாத நா போறேன் மீ ஐ அம் கோ டூ பாட்" என்று வேகமாக எழுந்து மாடிக்கு ஓடினாள்.

"ஏய்!! டாலு சொல்லல வா" என்று சத்தம் போட்டான்.


"கோ மேன்" என்று கத்திவிட்டு சென்றாள். அனைவரும் இவள் ஓடுவதை பார்த்து சத்தமாக சிரித்தனர்.

"துருவா என்னடா விளையாட்டு?? அவள இப்படி ஓட விட்டுட்டியே!!" என்றார் பார்வதி சிரிப்புடன்.


"சும்மா மா" என்றான் சிரித்துக்கொண்டே.


"அபிராமி" என்று கத்திக்கொண்டு நேசமணி வந்தார். அவருடன் அவர் பாடிகாட் தம்பிகள் பின்னாலயே! வந்தனர்.

"என்ன எல்லாரும் உக்காந்து இருக்கீங்க சமையல் வேலை முடிஞ்சா எடுத்து வைக்கலாம்ல, அபி மா நீ இன்னும் குளிக்கலையா?? அதே துணியோட இருக்க, போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம், இன்னைக்கு உங்க நாலு பேருக்கும் வேலை இல்லையா??" என்றார் துரு, விரு, ரிஷி மற்றும் சந்தோஷத்தை பார்த்து.

"கொஞ்சம் ஃப்ரீ தான் தாத்தா" என்றான் துரு.

"சரி.. சரி.." என்றார். அனைவரும் கலைந்து சென்றனர்.

பேபிடால் கீழே வரும்போது அடுத்த பிரச்சனை வரப்போகிறது அதை அவள் அறிவாளா?? துருவின் பட்டிமன்றத்திற்கு தீர்வு கிடைக்குமா?? ஆதி மற்றும் தியா யார்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....



யாசிப்பு தொடரும்.........
 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை -3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN