Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
Yuvanika's Completed Novels
உறவாக வேண்டுமடி நீயே...
உறவாக வேண்டுமடி நீயே 5
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

உறவு – 5

பபுலுவுடன் இப்போது வந்துள்ள கேபிரா ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர். அரபு நாட்டைச் சேர்ந்தவள். திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுடன் இருக்கிறாள்.

வரும் வழியெல்லாம் பேசிக் கொண்டு வந்தது போதாது என்று வீட்டிற்கு வந்தும் தன் திருவாயை மூடவில்லை பபுலா.

ஐந்து வருடம் கழித்துப் பார்ப்பதால் அவனுக்குத் தங்கத்திடம் கேட்க, பேச நிறைய இருந்தது. அவர் மடிமீது படுத்துத் தோள் மேல் சாய்ந்து அவன் பேசிக்கொண்டேயிருக்கவும்

“ஸ்ஸ்ஸ்.... ஸப்பா சாமி! என்ட குருவாயூரப்பா! உனக்குத் தொண்டைத் தண்ணி வற்றியதோ இல்லையோ எனக்கும் அம்மைக்கும் காது ஜவ்வு அறுந்து போய் ரத்தமே வந்துவிட்டது. போதும் டா நீ எங்களுக்காகப் பாசமா ஓட்டின ரீல். அதெல்லாம் ஐந்து வருடத்திற்கு முன்பே அறுந்து போச்சு டா” என்று மூக்கையும் முகத்தையும் சுருக்கிய படி நந்திதா நண்பனை கெஞ்சியபடி வார

“what is this queen? அது எப்டிபட்ட offer? அதும் canada போய் work பண்ற chance.. அது எப்டி நான் மிஸ் பண்வேன்னு நினைத்த சொல்லு” என்று ஆரம்பித்தவன் பிறகு அதைப் பற்றி இரண்டு பக்கத்திற்குக் கட்டுரை வாசிக்க

“அம்மே ப்ளீஸ்! என்னால் முடியவில்லை. இவன் வாயை அடைக்க முன்பு நீங்கள் எப்பொழுதும் செய்வீர்கள் இல்லையா வெந்தய களி? அதை இனி மூன்று வேலையும் செய்யுங்கள். அப்பொழுதாவது இவன் வாய் அடைகிறதா என்று பார்ப்போம்”.

“என்னதூ வெந்தய களியா? ஐயோ சாமீ! என்ட குருவாயூரப்பா!” பபுல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆடு திருடின திருடனைப் போல் முழிக்க

அதில் விழுந்து விழுந்து சிரித்தவள் “ஆமா அது தான்! உனக்கு உணவு உண்மையாவே என் மேலேயும் அம்மே மேலேயும் பாசம் இருந்தா சாப்பிட்டுத் தான் ஆகணும். அம்மே! உங்களுக்கும் தான் இந்த மகள் மேல் பாசமிருந்தால் நீங்கள் அதைத் தான் இவனுக்கு செய்து கொடுக்கணும்.. எப்படி?” என்ற படி இவள் கெத்தாக காலரைத் தூக்கி விட

மிரண்ட படி “ஹோ.. மை ஜீசஸ்!” என்று ஒரு சிலுவையைப் போட்டவன் “என்ற பட்டி! எந்தா பரஞ்ஞது?” என்ற படி அவளை அடிக்கத் துரத்த, இவளோ எழுந்து அவனுக்குப் போக்கு காட்டிய படி சுற்றி வந்தாள்.

நந்திதா பெரிய மனுஷியாக ஆன பொழுது எலும்பிற்கு வலு சேர்ப்பதற்காகத் தங்கம் அவளுக்கு உளுந்து களி செய்து தர அதை இருவருக்கும் தெரியாமல் வெண்ணை திருடிய கண்ணனைப் போல் பபுலு களியைத் திருடித் திண்பது வாடிக்கையானது. ஒரு நாள் தங்கம் தனக்கென்று வெந்தயக் களியை செய்திருக்கவும் அதை இவன் உளுந்தங்களி என்று நினைத்து கபளீகரம் செய்ய அப்போது உடைந்தது இவன் குட்டு. பின்னர் அதிலிருந்து உளுந்தங் களியையே வெறுத்து விட்டவன் அதன் பக்கம் செல்வதேயில்லை. நந்திதா மட்டும் அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அதைக் கொடுத்து சாப்பிடச் சொல்லி அவனைக் கொடுமைப் படுத்துவாள். எங்கே அது இப்போது நடந்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு

நந்திதாவே குறி என்று துரத்தியவனுக்கு எதிரில் வந்த போதும்பொண்ணு தெரியாமல் போக, அதன் விளைவாக அவளை மோத அதில் இருவரும் மோதிய படி விழுந்து கட்டிப்பிடித்து உருளாத குறையாக புரள, அதிலிருந்து முதலில் மீண்டு எழுந்த பொண்ணுவோ “யாருடா இது பொச கெட்டவன்! மண்டைக்குள்ற மூளைக்கு பதில் மட்டி கிடக்கோ! அறிவு இருக்காடே உனக்கு? கண்ணு என்ன பொடரியிலா கிடக்கு?” கிராமத்து பெண்களுக்கே உள்ள துடுக்குத் தனத்துடன் அவள் கேள்வியுடன் சத்தம் போட

அவள் வார்த்தையில் விழித்தவன் “what is mean by பொடரி? நீ கேட்ட கண்ணு என் மூஞ்சில தான் இர்க்கு. ஆனா அது என் பேச்சு கேட்காம இந்த செகண்டிலியிருந்து உன் பின்னாடி தான் சுத்தும்னு நெனக்கிறன்” இவன் கபடு இல்லாமல் சொல்ல

“சுத்தும் சுத்தும்.. அப்படி சுத்துற உங்க கண்ணாம் முழிய நோண்டி சூப்பு வச்சி சொன்ன அந்த வாய்க்கே கொடுத்துப்புடுவா இந்த போதும்பொண்ணு! சாக்கிரத!” என்று ஏசிய படி திரும்பியவள் அங்கு கண்ணில் சுவாரசியத்துடன் கையால் வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த நந்திதாவைப் பார்த்தவள்

“மன்னிச்சிப்புடுங்க ராணிமா!” பபுல் நந்திதா நண்பன் என்று தெரியும் ஆனால் தன் இயல்பான துடுக்கு தனத்துடன் பேசிவிட்டாள் என்பதால் இவள் மன்னிப்பு கேட்க

“அவன் கொஞ்சம் ஜாலியா பேசுவான். மற்ற படி மனசில் எதுவும் இருக்காது பொண்ணு” என்று இவள் நண்பனுக்காகப் பேச.

அவள் விலகியதும் “ஓய் குயீன்! இதெலாம் சரியே இல்ல. இடிச்து என்ன.. பட் அவ சாரி உன் கிட்ட கேட்டா எப்டி?”

“அவள் என்ன சொன்னாள் கேட்ட இல்ல? கண்முழி சூப் வேண்டுமா?” தோழி ஞாபக படுத்த

“ம்ம்ம்...” தீவிரமாக யோசித்த படி தாடையைச் சொறிந்தவன் “அந்த சூப் எப்டி இருக்கும்னு டேஸ்ட் பாக்கணும் குயீன்”. இவனும் தீவிரமாக பதில் தர

“பாம்பு தவக்களை பூரானென்று ஆராய்ச்சி பண்ற நீ இப்படி ஒரு நாள் வந்து சொல்வாய் என்று நினைத்தேன். என்ன, இப்போ அதையெல்லாம் தின்றுவிட்டுத் தான் வந்திருக்கிறாயா?”

“எஸ்.... எஸ்...எஸ்.... செம்ம டேஸ்ட். உன்கும் அதெலாம் குக் பண்ணி தரவா?”

“ஐயோ….. என்று முகத்தை அஷ்ட கோணல் ஆக்கியவள் என்ட குருவாயூரப்பா! உவ்வே..... ராசா நீ இங்கிருக்கும் வரை எனக்கு பியூர் வெஜ் தான் டா. சரி போ… சீக்கிரம் போய் குளித்துவிட்டு வா சாப்பிடலாம்”

“எது குயீன்? அந்த பூரான் கிரேவிதான?”

“அப்பா! ஆளை விடு நான் போகிறேன்” என்றவள் சொன்ன படி ஓடியும் விட்டாள் நந்திதா. அதன் பிறகு குளித்து முடித்தவன்

“அம்மே! செம்ம பசி…” என்ற படி டைனிங் டேபிளுக்கு வர, அங்கிருந்த வேணியோ

“அம்மா அங்கிள்கு பசிக்குதாம்.. புவா வை” என்று வேணி மழலையில் ஆர்டர் போட , குழந்தையைப் பார்த்து பறக்கும் முத்தத்துடன் கண்சிமிட்டி சிரித்தவன்

“இது யாரோட பேபி குயீன்? உன்னை பார்த்து அம்மா சொல்து!” அவன் சாதாரணமாகக் கேட்க

“என்னுடைய குழந்தை தான் பபுல்..” இவள் குரல் குற்ற உணர்வில் ஒலித்தது.

“வாட்?!” தட்டில் கை வைக்கப் போனவன் அப்படியே நின்று விட்டான். அவன் முகத்திலும் குரலிலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. “say again.. இப்ப நீ என்ன சொன்ன?” அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை.

“நீ தெளிவாகத் தான் கேட்ட பபுல். அவள் என் குழந்தை தான். பெயர் திருவேணி!” இவள் நிதானமாகச் சொல்ல, கேப்ரியா முன்பே சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கப் போய் விட்டதால் இங்கே இருவருக்குள்ளும் இப்படி ஒரு பேச்சுகள் தொடர்ந்தது.

“நா உன்ன என் ஃபிரண்ட்கு மேலே நினைத்திருக்கேன். ஆனா நீ என்ன அப்டி பார்க்கலை தானே?” என்றவன் அப்பொழுது அங்கு வந்த தங்கத்திடம் “நீங்க கூட என்ன ஏமாத்திட்டிங்க இல்லம்மே? உங்களுக்கும் நான் யாரோ தானா?” அவன் குரலில் வேதனை ஒளிரவும்

“அதொண்ணும் இல்ல டா.. ராணிமா தான்...” அவர் தயங்க பின்னே அவரால் வேறு என்ன சொல்ல முடியும்?

“அவர்கள் மேல் எந்த தப்பும் இல்லை. நான் தான் சொல்லவேண்டாமென்று சொன்னேன். உன்னிடம் சொல்லக் கூடாது என்று இல்லை. நேரில் பார்க்கும்போது சொல்லலாம் என்று தான்...”

“அப்போ ஏன் பாத்ததும் சொல்லல?” அவனுக்கு மனதே ஆறவில்லை. எப்படி எல்லாம் தன் காதலைப் புரியவைக்க வேண்டுமென்று நினைத்திருந்தான். ஆனால் இப்படியாக நடந்தால்?

“இந்த வினாடியோட நமக்கான நேரம் முடிந்துவிட்டதா என்ன? எப்படியும் உன்னிடம் தானடா சொல்லுவேன்.. எனக்கு மட்டும் யார் இருக்கா.. அம்மாவா அப்பாவா அண்ணனா?” இப்படி கேட்கும் போதே நாக்கு பிழன்று தொண்டை அடைத்தது அவளுக்கு. அதை கேட்டு இவனுக்கு இதயமே வலித்தது. ஆனாலும்..

“அப்ப இப்ப சொல்லு”

“நீ முதலில் சாப்பிடு”

“இல்ல.. என்க்கு இப்பவே தெர்யணும். அப்ப தான் எத்துவும்!” அவன் குரலில் பிடிவாதத்தைப் பார்த்தவள்

“என் கூட வா சொல்கிறேன்” என்ற படி அவனை இழுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று அவனைப் பிரிந்த பிறகு இந்த ஐந்து வருடத்தில் ஆதியிலிருந்து அந்தமாய் அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

“அம்மேக்கு கூட இப்போ சொன்னதுல ஒரு சிலது தெரியாது. ஆனால் உன்னிடம் நான் எதையும் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லையடா..” அவள் கண்ணில் வலியுடன் கலங்கி நிற்கவும் தாவி வந்து தோழியை அணைத்துக் கொண்டான் அவளின் நண்பன்.

“அலுவாத டா.. அதான் நான் இர்க்கேன் இல்ல? வேணி இனி என் பொண்ணு. நாம ரெண்டு பேரும் சேந்து அவள பாத்துக்கலாம். அதுக்கு as soon as possible நாம மேரேஜ் பண்ணிக்கலாம்” இதுவரை தோழியாய் இருந்தவளை இனி தன் வாழ்க்கைத் துணையாய் அமரவைத்து அவளை அவன் காக்க நினைக்க

“நோ...நோ... அது வேண்டாம். நான் ஒன்றை நோக்கிப் போய் கொண்டிருக்கேன். அதற்கு ஒரு தோழனாய் நீ எனக்கு தோள் மட்டும் கொடு” இவளிடம் உறுதி இருந்தது.

“அப்டி உன்க்கு என்ன ஆச்சுனு நீயும் அதையே நென்சிருக்கப் போறியா? Forget it queen” இவனிடம் இப்பொழுது கோபம் துளிர் விட்டது.

“நிச்சயம் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கு நடந்ததற்கு மன்னிப்போ விளக்கமோ கூட நான் கேட்கவில்லை. ஆனால் எனக்கு நடந்ததை அவன் வாயாலே இந்த உலகிற்கு அவன் பறைசாற்ற வேண்டும். குறைந்த பட்சம் அவன் குடும்பத்திற்காகவாது தெரிய படுத்த வேண்டும். அது மட்டும் தான் இப்போதைக்கு என் எண்ணம்” என்று உறுதி பட கூறியவள் “தெரியவில்லை இது எப்போது நடக்குமென்று. அதை அப்போ பார்ப்போம்…”

“ஓகே குயீன்! I will wait for that” நண்பனின் குரலில் உறுதியை பார்த்தவள்

“வேண்டாம்.. வேண்டாம்…. அதற்கு பதில் என் சுமையில் ஒன்றை உன் தோளில் வைக்கலாம் என்று இருக்கிறேன். தப்பு தான்.. ஆனால் ஏற்றுக்கொண்டு சுமக்க நீ தயாரா?” இவளிடம் ஒரு எதிர்பார்ப்பு.

“sure.. why not? என் குயீனுக்கு செய்யாம வேற யார்க்கு செய்ப்போரன் சொல்லு?” அவன் குரலில் செய்ய கடமை பட்டு இருக்கும் சேவகனின் உறுதி!

“promise?”

“jesus மேல promise!”

“இப்போது வேண்டாம். நேரம் வரும்போது நானே சொல்கிறேன். சரி சாப்பிட வா”

‘நான் போகாமல் இருந்திருந்தால் இப்படி இவள் வாழ்க்கை திசை மாறி இருக்காதே..’ என்று இவனும் ‘இவன் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா?’ என்று இவளும் நண்பர்கள் என்ற பந்தத்திலிருந்து இருவராலும் அப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

காலை மணி பத்தரை.. அபி தன் அலுவலகத்தில் இருக்க, உள்ளே வந்த துருவன் “அண்ணா! பதினோரு மணிக்கு போர்டு மீட்டிங் ணா!” என்று ஞாபகப்படுத்த, லேப்டாப்பிலிருந்து பார்வையை விலக்காமலே

“எஸ் டா.. இதோ கிளம்பிவிட்டேன்” என்றவன் “பார்த்தசாரதி சாரும் கிரண் சாரும் அவரவர்கள் ஷேரை விற்று விட்டார்கள் போல! யாரிடம் என்று any ஐடியா?” என்று இவன் லேப்டாப்பில் பார்வையையை வைத்தபடியே கேட்க

“ஆமாண்ணா! நீங்கள் மொரிஷியஸ் போயிருந்த போதே இது சம்பந்தமான தகவல்கள் வந்தது. பட் பார்டிஸ் யாரென்று இதுவரை தெரியவில்லை. இரண்டு பேருமே அதை சீக்ரெட்டாக வைத்திருப்பதாகப் பேச்சு. அதை லீக் அவுட் செய்யத்தான் இந்த மீட்டிங் ணா”

“ம்ம்ம்...” புருவ மத்தியில் முடிச்சு விழ, “அவர்கள் இரண்டு பேர் ஷேர் each 30% percent தான். சோ நமக்கு எதுவும் பாதிப்பு இல்லை. Then anyway.. பார்ப்போம்.. lets go” என்றவன் தன் சேரின் பின்புறமிருந்த கோட்டை எடுத்து அணிந்து கொண்டு தம்பியுடன் மீட்டிங்குக்குக் கிளம்பினான் அபி.

பல தொழில் அதிபர்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை வேறு ஒரு தொழிலில் சிறு பங்காக முதலீடு செய்வது வழக்கம். அப்படி தான் அபியும் ஒரு கம்பெனியில் ஒரு சிறிய பங்கை முதலீடு செய்திருந்தான். அவன் தான் மேஜர் ஷேர் ஹோல்டர். நாற்பது சதவிகிதம் அவனுடையது. அதன்பின் பார்த்தசாரதி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முப்பது சதவிகிதமும் அதே போல் கிரண் ஒரிசாவைச் சேர்ந்தவர் முப்பது சதவிகிதமும் பங்குதாரர்களாக இருந்தார்கள். வடக்கு தெற்கு என்பதால் இருவருக்குமே எப்போதும் ஒத்து வராது. அதனால் அபி பேச்சுக்கு இருவரும் கட்டுப்பட்டே இருந்தனர். அதனால் தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பங்கை விற்கும் போது கூட அவன் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த பிரம்மாண்ட மீட்டிங் ஹாலுக்குள் அபி நுழைய, அங்கு அவனுக்கு முன்பே பார்த்தசாரதியும் கிரணும் பக்கத்தில் ஒருவராக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் தங்கள் சகாக்களுடன் எதிரெதிர் துருவமாக அமர்ந்திருப்பவர்கள் இன்று இப்படி இருக்கவும் அதைப் பார்த்தவனுக்கு இன்று இரண்டாவது முறையாக புருவ மத்தியில் மறுபடியும் முடிச்சு விழுந்தது. அவன் வந்து இருபுறத்திற்கும் நடுநாயகமாக இருந்த சேரில் அமரவும் பார்த்தசாரதி தான் எழுந்து நின்று முதலில் பேசினார்.

“எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய ஷேர்சை நான் விற்கப்போவது பற்றி கொஞ்ச நாட்களாக உங்களுக்கு செய்தி வந்திருக்கும். அது உண்மை தான். நான் மட்டும் இல்லை..” என்றவர் திரும்பி பக்கத்தில் அமர்ந்திருந்த கிரணைப் பார்க்க, “நீங்களே சொல்லிவிடுங்க சம்மந்தி” என்று அவர் வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, அதில் இவரும் வாயெல்லாம் பல்லாக, “கிரண் சாரும் அவர் பங்கை விற்பதாக இருந்தார். இது ஒரு மாதமாகவே நடந்து வந்த பேச்சுவார்த்தை. அது சம்பந்தமாக போன வாரம் தான் ஒரு முடிவெடுத்தோம்.

அப்புறம் இன்னோர் சந்தோஷமான விஷயம். இதுவரை தொழில் முறை நண்பர்களாக இருந்த நாங்கள் இனி சம்மந்திகளாகப் போகிறோம்” இதைச் கேட்ட அனைவரும் மகிழ்ச்சியில் கை தட்டினர். “அதனால் எங்கள் இருவருடைய பங்கையும் ஒருவரே வாங்கிவிட்டார்”. இதைக் கேட்ட அபி பல்லைக் கடித்த படி தம்பியைப் பார்க்க, அவனோ தலை குனிந்தான்.

“இன்னும் சிறிது நேரத்தில்அதை வாங்கியவர் வந்துவிடுவார். நாளைக்கு இதனையொட்டி ஒரு சிறு விருந்து வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் எல்லோரும் வரவேண்டும்” அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கப் பட, (இந்த இடத்தில் மங்காத்தா bgm உங்கள் மனதில் ஓடவிடுங்கள் வாசகர்களே!) ஒரு பட்டத்து ராணியின் தோரணையுடன் அந்த சபையினுள் நுழைந்தாள் யுகநந்திதா.

பார்க்கும்போதே தெரிந்தது கிரீடம் தரிக்காத இளவரசி அவள் என்று! அவளுக்கு முன்பே அவளுடைய கார்ட்ஸ் சென்று அவளுக்கான நாற்காலியை அபி பக்கதிலேயே போட, அவனை வெற்றி கொண்ட பார்வை பார்த்த படி மந்தகாசப் புன்னகையுடன் பெண் சிங்கமென அவன் பக்கத்தில் அமர்ந்தாள் நந்திதா.

உள்ளே வந்தவளை கிரண் சார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றவர் “இவர் தான் மிஸஸ். யுகநந்திதா! துரை கம்பனியின் சேர்மன். எங்கள் இருவரின் பங்கையும் வாங்கி இருப்பவர் இதுவரை எங்களுக்குக் கொடுத்த ஒத்துழைப்பை இனி இவர்களுக்கும் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று அவளை அறிமுகப்படுத்த, அபியை ஒரு பார்வை பார்த்து விட்டு இன்முகத்துடன் வரவேற்பை ஏற்றவள், அவளைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்லி விட்டு

“நான் இந்த கம்பனியின் மேஜர் ஷேர் ஹோல்டராக இருந்தாலும் உங்கள் அனைவரின் நியாயமான வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் ஏற்பேன்” என்றவள் அபி பக்கம் திரும்பி ‘நிச்சயம் உன் பேச்சை மட்டும் கேட்க மாட்டேன்’ என்ற சமிக்ஞை தாங்கிய பார்வையைப் பார்க்க, அதில் பாம்பைப் போல் உஷ்ண மூச்சுகளை வெளியிட்டான் அபி. கூடவே என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன்னை நடக்க வைக்கிறேனா இல்லையா பார் என்ற சவாலும் அதில் மறைந்திருந்தது.

எல்லாம் பேசி முடிய, கிரண் நந்திதாவுடன் அபியிடம் வந்தவர் “இனி நீங்க இரண்டு பேர் மட்டும் தான் ஷேர் ஹோல்டர்ஸ். சோ, அபி! Be a friendly moment man!” என்று அவர் எடுத்துச் சொல்ல, “ஷ்யூர் சார்!” என்று அவருக்குப் பதில் கொடுத்தவன்

“ஹாய்!” என்ற படி நந்திதா முன் அவன் கை நீட்ட, இப்பொழுது தவிர்க்க முடியாமல் அவள் கை குலுக்க, கிரண் சார் ஒதுங்கி விட்டதை அறிந்தவன் பற்றிய கையை விடாமல் பிடித்து இவன் இறுக்க,

“ஸ்ஸ்...” என்று தன்னை மீறி சுனங்கியவள் அவன் முகத்தின் தீவிரத்தைப் பார்த்து ஒரு முடிவுடன் தன் நகத்தால் இவள் அவன் விரல்களில் கீறல் போட “ஹேய்...” என்ற சொல்லுடன் தன் கையை விலக்கிக் கொண்டவனிடம் “இனி அதிகம் ஹேய் சொல்வீர்கள் போல மிஸ்டர் அபிரஞ்சன்! அதாவது இனி பல அடிகளை வாங்குவீர்கள் என்று சொல்கிறேன். உங்களை எனக்குக் கீழே கொண்டு வந்துவிட்டேன் பார்த்தீர்களா? இனி தானே கேம் ஆரம்பம்!” அவள் உதட்டோர வளைவில் அவனுக்குக் கை மட்டும் இல்லை உள்ளமும் எரிந்தது.

“ஹேய்! எப்படி எப்படி? என்ன அந்த பிஸினஸில் எதுவும் செய்ய முடியவில்லை என்று இப்படி ஒரு குறுக்கு வழியில் என்னை நெருங்கப் பார்க்கிறாயா? இங்கேயும் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது” இறுமாப்புடன் அவன் பதில் கொடுக்க,

“ம்ஹும்... அப்படியா?” இவள் ஆரம்பித்த நேரம் பார்த்தசாரதி அவர்களிடம் வர, அதன் பிறகு அப்படி இப்படி என்று பேச்சுக்கள் செல்ல இருவரும் தனித்து இல்லாமல் ஆனார்கள்.

ஆனால் அபிக்கு மட்டும் உள்ளே கனன்று கொண்டேயிருந்தது. ‘ச்சே..... யார் வாங்கினார்கள் என்பதை சீக்ரெட்டாக வைத்திருக்கும் போதே நான் சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இவள் விஷயத்தில் நான் அசால்டாக இருந்தது தப்பாகிப் போனது. சீக்கிரம் உனக்கு முடிவு கட்டுகிறேன் டி!’ அலுவலகத்திற்கு வந்த பிறகும் அவனுக்கு ஆத்திரம் மட்டுப்படவில்லை.

‘என்னமா கேம் விளையாடிட்டா! இவள் தான் வாங்கியிருக்கிறாள் என்பதை மறைத்து லாஸ்ட் மினிட்டில் வெளியே தெரியப்படுத்தி இருக்கிறாள். அதுவும் நேற்றைய எங்களுடைய மீட்டிங்கிற்குப் பிறகு! அதிலும் கேம் started mr அபினு என் கிட்டவே சொல்றா.... ராஸ்கல்! என்னைப் பற்றி தெரிந்திருந்தும் என்கிட்டவே விளையாடுகிறாளா? நானும் காட்டுகிறேன் டி யாரென்று! பிசாசு மாதிரி கையை வேறு கீறி வைத்துவிட்டா!’ என்னென்னமோ புலம்பியவனுக்கு அவளுக்குத் திரும்ப பதிலடி கொடுக்க யோசித்த பிறகுமே அவன் மனது அமைதி பெறாமல் இருக்கவும் உடனே நேற்று பார்த்த அந்த முயல் குட்டியைத் தேடி இன்றும் கிளம்பி விட்டான் அபி.

அந்த மான் குட்டியோ தன் தாய் அவனுக்கு கொடுத்த எரிச்சலை எல்லாம் தன் கடமை போல தன் எச்சிலாலும் தன் மழலைப் பேச்சாலும் அபியை குளிர்வித்தாள் திருவேணி!

மறுநாள் மதியம் செவென் ஸ்டார் ஹோட்டலில் அபி மதிய உணவில் இருக்க, அவனுக்கு சற்றுத் தள்ளி இன்னோர் டேபிளில் பாரதி ஒரு முக்கியமான க்ளையன்டுடன் பேச்சு வார்த்தையில் இருந்தாள். அவளுக்கு உண்மையாகவே கம்பெனி விஷயமாக அப்பாய்ட்மெண்ட் இருந்தது. ஆனால் அபிக்கு அப்படி இல்லை. ஒரு நண்பரைப் பார்க்க வந்தவன் அப்படியே இங்கு அமர்ந்து விட்டான். பாரதி நந்திதாவின் பி.ஏ என்பது நேற்று தான் அவனுக்குத் தெரியும். அதனால் என்ன தான் நண்பனுடன் அவன் பேச்சு வார்த்தையில் இருந்தாலும் அவன் பார்வை அவ்வப்போது பாரதி மேல் தான் இருந்தது.

இங்கு அபி இப்படி என்றால் அண்ணன் இங்கிருப்பது கூடத் தெரியாமல் வேறொரு இடத்தில் துருவன் அமர்ந்து பாரதியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இங்கு வருவது அவனுக்கு தெரியும். அந்த கிளையன்ட் தான் வந்த வேலை முடியவும் சென்று விட, இவள் மட்டும் தனித்திருக்கவும், அவள் எதிரில் வந்தமர்ந்த துருவன் “ஹாய்!” என்க

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “ஹலோ துருவன்! how r u?” என்னதான் அவனிடம் பேசினாலும் பார்வை என்னமோ அவள் கையிலிருந்த கைப்பேசியிலேயே தஞ்சம் அடைந்திருந்தது.

“நன்றாக இல்லை” அவன் சோகமாக பதில் தர, அவன் பதிலில் இவள் கேள்வியாய் பார்க்க

“நேற்று பார்த்து இன்று இப்படி கேட்டால்? அதான்.. சும்மாவேனும் நான் நன்றாக இருக்கேனென்று சொல்வதற்கு வரவில்லை” இவன் பேச்சை வளர்க்க நினைக்க

“ஓ.... அப்போ ஐம்பது கிலோ சிமெண்ட் மணல் மூட்டை ஓகே வா? எங்கள் வீட்டில் சிறிய கட்டுமான வேலை இருக்கு. அதற்கு வாங்கிக்கொண்டு போகவேண்டும். சும்மா என்று சொன்னீர்களே.. நீங்கள் வேண்டுமானால் அதை சுமந்துகொண்டு வாருங்களேன்” என்று இவள் அவனைக் கலாய்க்க

அவன் கண்ணில் சுவாரசியத்துடன் “சிமெண்ட் மண் மூட்டையென்றால் வேண்டாம். அதற்கு பதில் பிஃப்டி கே.ஜி தாஜ்மஹால் என்றால் என் கரங்களில் ஏந்தி தங்கள் வீடுவரை சுகமாக சுமக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு இளவரசியின் அனுமதி கிடைக்குமா?...” அவளை ஐம்பது கிலோ தாஜ்மஹால் என்று இவன் வர்ணிக்க

அவன் பதிலில் கடுப்பானவள் “மனதில் என்ன பெரிய கவிஞர் வைரமுத்து என்று நினைப்பா?”

“ஐயோ! நான் அவரளவிற்கு இல்லைங்க அம்மணி! நான் இப்பொழுது தான் பாரதி எனும் தீயில் புதிதாக பூத்த கவிஞன் துருவன்!” அவன் கண்களில் முதல் முறையாக காதல் வழிந்தது. அது பாரதி மட்டுமல்லாமல் தள்ளியிருந்த அபி பார்வையிலும் விழுந்தது.

நந்திதாவின் பி.ஏ என்ற முறையில் நேற்று தான் அபி பாரதியை முதன் முதலாகப் பார்த்தான். அந்த களேபரத்திலும் தம்பியின் பார்வை அடிக்கடி பாரதியிடம் சென்று வந்ததையும் குறித்துக் கொண்டவனுக்கு இன்றைய துருவனின் பார்வை ஐயம் திரிபுர புரிந்தது இவன் பாரதியை விரும்புகிறான் என்று.

பாரதி அவனுக்கு வேறு விதமாக பதில் கொடுக்க வரவும் “அம்மா தாயே! போதும் நிறுத்து. நீ இப்பொழுது என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும். நாங்களெல்லாம் நடுத்தர வர்க்கம்.உங்களை மாதிரி பணக்காரர்களுக்கு எங்களைக் கண்டால் பரிகாசம், அதிகாரம் செய்யத்தான் தெரியும். இந்தியாவில் எங்களின் பொருளாதார நிலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் முக்கியமா இந்திய பொருளாதார நிலை என்ன தெரியுமா என்று சொற்பொழிவு ஆற்றப் போகிறாய்.. அதானே? அவன் கும்பிடு போட்டுப் பயந்த பாவனையுடன் ஏற்ற இறக்கத்துடன் கேட்கவும், இவள் வாய் விட்டுச் சிரிக்கவும் கூட சேர்ந்து சிரித்தான் துருவன் .

“அப்புறம் feautre plan என்ன? நமக்கும் கொஞ்சம் சொன்னால் வசதியாக இருக்கும்..” அவன் தூண்டில் போட, அதை உணர்ந்தவள்

“பெரிதாக ஒன்றும் இல்லை. ஏதாவது ஒரு இஸ்ரோ அல்லது நாசா விஞ்ஞானியாகப் பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது தான். இப்போதைக்கு அதுதான் plan” அவள் சிரிக்காமல் சொல்ல

“யார்? தன்னோட பெயர் கூட ஞாபகம் இல்லாமல் எந்நேரமும் ராக்கெட் சிந்தனையில் சுற்றுவாங்களே அவர்களா? ஐயோ! அப்புறம் அவர் உங்களைக் கல்யாணம் செய்ததையும் நீங்கள் தான் அவர் மனைவி என்பதைக் கூட மறக்க சாத்தியம் இருக்கு பாரதி!” என்று பதறிய படி இவன் பேசவும்

“பரவாயில்லை.. அது என் பாடு.. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒன்றும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” என அவள் தீவிரமாகச் சொல்லவும்

“ஏனுங்க! இந்த தொழில் அதிபர் எல்லாம் வேணாமுங்களா?” இவனும் அதே தீவிரமாகக் கேட்க

“அட நீங்கள் வேறு.. இபொழுதெல்லாம் இந்த புண்ணாக்கு விற்பவன் கூட தன்னைத் தொழில் அதிபரென்று சொல்லிக்கொள்கிறான். நீங்கள் சொல்வது அவர்களையா?” என்று இவள் படு தீவீரமாகக் கேட்க, இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, அவன் முழிப்பதைப் பார்த்து இவள் பக்கென்று சிரித்து விட

“ப்பூஉ... என்னங்க அப்போ சும்மா தான் சொன்னீர்களா?” அவனிடம் நிம்மதிப் பெருமூச்சு.

“ம்ம்ம்...” அவள் தலையைக் குனிந்து கொண்டாள். இதுவரை துருவன் இப்படியெல்லாம் அவளிடம் பேசியது இல்லை. அவளும் இவனைத் தவிர வேறு யாரென்றாலும் இப்படிப் பேச இடம் கொடுத்திருக்க மாட்டாள். ஏனோ துருவன் அவளுக்குத் தனி என்று பட்டது. அதற்காக இது காதல் எல்லாம் இல்லை என்பதை அவளே சொல்லிக் கொண்டாள். ஆனால் துருவன் காதல் என்று தான் உறுதியாக நம்பினான். அதனால் தான் இன்று அதை மறைமுகமாக சில வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.

அதே நேரம் “excuse me! may i join with you?” என்ற கம்பீரமான குரலில் இருவரும் நிமிர்ந்து பார்க்க, துருவனுக்கு வியர்த்தது என்றால் பாரதியோ

[QUOTE="yuvanika, post: 274, member: 4"] [B][SIZE=5]உறவு – 5[/SIZE][/B] [SIZE=5][B]பபுலுவுடன் இப்போது வந்துள்ள கேபிரா ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர். அரபு நாட்டைச் சேர்ந்தவள். திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுடன் இருக்கிறாள். வரும் வழியெல்லாம் பேசிக் கொண்டு வந்தது போதாது என்று வீட்டிற்கு வந்தும் தன் திருவாயை மூடவில்லை பபுலா. ஐந்து வருடம் கழித்துப் பார்ப்பதால் அவனுக்குத் தங்கத்திடம் கேட்க, பேச நிறைய இருந்தது. அவர் மடிமீது படுத்துத் தோள் மேல் சாய்ந்து அவன் பேசிக்கொண்டேயிருக்கவும் “ஸ்ஸ்ஸ்.... ஸப்பா சாமி! என்ட குருவாயூரப்பா! உனக்குத் தொண்டைத் தண்ணி வற்றியதோ இல்லையோ எனக்கும் அம்மைக்கும் காது ஜவ்வு அறுந்து போய் ரத்தமே வந்துவிட்டது. போதும் டா நீ எங்களுக்காகப் பாசமா ஓட்டின ரீல். அதெல்லாம் ஐந்து வருடத்திற்கு முன்பே அறுந்து போச்சு டா” என்று மூக்கையும் முகத்தையும் சுருக்கிய படி நந்திதா நண்பனை கெஞ்சியபடி வார “what is this queen? அது எப்டிபட்ட offer? அதும் canada போய் work பண்ற chance.. அது எப்டி நான் மிஸ் பண்வேன்னு நினைத்த சொல்லு” என்று ஆரம்பித்தவன் பிறகு அதைப் பற்றி இரண்டு பக்கத்திற்குக் கட்டுரை வாசிக்க “அம்மே ப்ளீஸ்! என்னால் முடியவில்லை. இவன் வாயை அடைக்க முன்பு நீங்கள் எப்பொழுதும் செய்வீர்கள் இல்லையா வெந்தய களி? அதை இனி மூன்று வேலையும் செய்யுங்கள். அப்பொழுதாவது இவன் வாய் அடைகிறதா என்று பார்ப்போம்”. “என்னதூ வெந்தய களியா? ஐயோ சாமீ! என்ட குருவாயூரப்பா!” பபுல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆடு திருடின திருடனைப் போல் முழிக்க அதில் விழுந்து விழுந்து சிரித்தவள் “ஆமா அது தான்! உனக்கு உணவு உண்மையாவே என் மேலேயும் அம்மே மேலேயும் பாசம் இருந்தா சாப்பிட்டுத் தான் ஆகணும். அம்மே! உங்களுக்கும் தான் இந்த மகள் மேல் பாசமிருந்தால் நீங்கள் அதைத் தான் இவனுக்கு செய்து கொடுக்கணும்.. எப்படி?” என்ற படி இவள் கெத்தாக காலரைத் தூக்கி விட மிரண்ட படி “ஹோ.. மை ஜீசஸ்!” என்று ஒரு சிலுவையைப் போட்டவன் “என்ற பட்டி! எந்தா பரஞ்ஞது?” என்ற படி அவளை அடிக்கத் துரத்த, இவளோ எழுந்து அவனுக்குப் போக்கு காட்டிய படி சுற்றி வந்தாள். நந்திதா பெரிய மனுஷியாக ஆன பொழுது எலும்பிற்கு வலு சேர்ப்பதற்காகத் தங்கம் அவளுக்கு உளுந்து களி செய்து தர அதை இருவருக்கும் தெரியாமல் வெண்ணை திருடிய கண்ணனைப் போல் பபுலு களியைத் திருடித் திண்பது வாடிக்கையானது. ஒரு நாள் தங்கம் தனக்கென்று வெந்தயக் களியை செய்திருக்கவும் அதை இவன் உளுந்தங்களி என்று நினைத்து கபளீகரம் செய்ய அப்போது உடைந்தது இவன் குட்டு. பின்னர் அதிலிருந்து உளுந்தங் களியையே வெறுத்து விட்டவன் அதன் பக்கம் செல்வதேயில்லை. நந்திதா மட்டும் அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அதைக் கொடுத்து சாப்பிடச் சொல்லி அவனைக் கொடுமைப் படுத்துவாள். எங்கே அது இப்போது நடந்துவிடுமோ என்ற பயம் அவனுக்கு நந்திதாவே குறி என்று துரத்தியவனுக்கு எதிரில் வந்த போதும்பொண்ணு தெரியாமல் போக, அதன் விளைவாக அவளை மோத அதில் இருவரும் மோதிய படி விழுந்து கட்டிப்பிடித்து உருளாத குறையாக புரள, அதிலிருந்து முதலில் மீண்டு எழுந்த பொண்ணுவோ “யாருடா இது பொச கெட்டவன்! மண்டைக்குள்ற மூளைக்கு பதில் மட்டி கிடக்கோ! அறிவு இருக்காடே உனக்கு? கண்ணு என்ன பொடரியிலா கிடக்கு?” கிராமத்து பெண்களுக்கே உள்ள துடுக்குத் தனத்துடன் அவள் கேள்வியுடன் சத்தம் போட அவள் வார்த்தையில் விழித்தவன் “what is mean by பொடரி? நீ கேட்ட கண்ணு என் மூஞ்சில தான் இர்க்கு. ஆனா அது என் பேச்சு கேட்காம இந்த செகண்டிலியிருந்து உன் பின்னாடி தான் சுத்தும்னு நெனக்கிறன்” இவன் கபடு இல்லாமல் சொல்ல “சுத்தும் சுத்தும்.. அப்படி சுத்துற உங்க கண்ணாம் முழிய நோண்டி சூப்பு வச்சி சொன்ன அந்த வாய்க்கே கொடுத்துப்புடுவா இந்த போதும்பொண்ணு! சாக்கிரத!” என்று ஏசிய படி திரும்பியவள் அங்கு கண்ணில் சுவாரசியத்துடன் கையால் வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த நந்திதாவைப் பார்த்தவள் “மன்னிச்சிப்புடுங்க ராணிமா!” பபுல் நந்திதா நண்பன் என்று தெரியும் ஆனால் தன் இயல்பான துடுக்கு தனத்துடன் பேசிவிட்டாள் என்பதால் இவள் மன்னிப்பு கேட்க “அவன் கொஞ்சம் ஜாலியா பேசுவான். மற்ற படி மனசில் எதுவும் இருக்காது பொண்ணு” என்று இவள் நண்பனுக்காகப் பேச. அவள் விலகியதும் “ஓய் குயீன்! இதெலாம் சரியே இல்ல. இடிச்து என்ன.. பட் அவ சாரி உன் கிட்ட கேட்டா எப்டி?” “அவள் என்ன சொன்னாள் கேட்ட இல்ல? கண்முழி சூப் வேண்டுமா?” தோழி ஞாபக படுத்த “ம்ம்ம்...” தீவிரமாக யோசித்த படி தாடையைச் சொறிந்தவன் “அந்த சூப் எப்டி இருக்கும்னு டேஸ்ட் பாக்கணும் குயீன்”. இவனும் தீவிரமாக பதில் தர “பாம்பு தவக்களை பூரானென்று ஆராய்ச்சி பண்ற நீ இப்படி ஒரு நாள் வந்து சொல்வாய் என்று நினைத்தேன். என்ன, இப்போ அதையெல்லாம் தின்றுவிட்டுத் தான் வந்திருக்கிறாயா?” “எஸ்.... எஸ்...எஸ்.... செம்ம டேஸ்ட். உன்கும் அதெலாம் குக் பண்ணி தரவா?” “ஐயோ….. என்று முகத்தை அஷ்ட கோணல் ஆக்கியவள் என்ட குருவாயூரப்பா! உவ்வே..... ராசா நீ இங்கிருக்கும் வரை எனக்கு பியூர் வெஜ் தான் டா. சரி போ… சீக்கிரம் போய் குளித்துவிட்டு வா சாப்பிடலாம்” “எது குயீன்? அந்த பூரான் கிரேவிதான?” “அப்பா! ஆளை விடு நான் போகிறேன்” என்றவள் சொன்ன படி ஓடியும் விட்டாள் நந்திதா. அதன் பிறகு குளித்து முடித்தவன் “அம்மே! செம்ம பசி…” என்ற படி டைனிங் டேபிளுக்கு வர, அங்கிருந்த வேணியோ “அம்மா அங்கிள்கு பசிக்குதாம்.. புவா வை” என்று வேணி மழலையில் ஆர்டர் போட , குழந்தையைப் பார்த்து பறக்கும் முத்தத்துடன் கண்சிமிட்டி சிரித்தவன் “இது யாரோட பேபி குயீன்? உன்னை பார்த்து அம்மா சொல்து!” அவன் சாதாரணமாகக் கேட்க “என்னுடைய குழந்தை தான் பபுல்..” இவள் குரல் குற்ற உணர்வில் ஒலித்தது. “வாட்?!” தட்டில் கை வைக்கப் போனவன் அப்படியே நின்று விட்டான். அவன் முகத்திலும் குரலிலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. “say again.. இப்ப நீ என்ன சொன்ன?” அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. “நீ தெளிவாகத் தான் கேட்ட பபுல். அவள் என் குழந்தை தான். பெயர் திருவேணி!” இவள் நிதானமாகச் சொல்ல, கேப்ரியா முன்பே சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கப் போய் விட்டதால் இங்கே இருவருக்குள்ளும் இப்படி ஒரு பேச்சுகள் தொடர்ந்தது. “நா உன்ன என் ஃபிரண்ட்கு மேலே நினைத்திருக்கேன். ஆனா நீ என்ன அப்டி பார்க்கலை தானே?” என்றவன் அப்பொழுது அங்கு வந்த தங்கத்திடம் “நீங்க கூட என்ன ஏமாத்திட்டிங்க இல்லம்மே? உங்களுக்கும் நான் யாரோ தானா?” அவன் குரலில் வேதனை ஒளிரவும் “அதொண்ணும் இல்ல டா.. ராணிமா தான்...” அவர் தயங்க பின்னே அவரால் வேறு என்ன சொல்ல முடியும்? “அவர்கள் மேல் எந்த தப்பும் இல்லை. நான் தான் சொல்லவேண்டாமென்று சொன்னேன். உன்னிடம் சொல்லக் கூடாது என்று இல்லை. நேரில் பார்க்கும்போது சொல்லலாம் என்று தான்...” “அப்போ ஏன் பாத்ததும் சொல்லல?” அவனுக்கு மனதே ஆறவில்லை. எப்படி எல்லாம் தன் காதலைப் புரியவைக்க வேண்டுமென்று நினைத்திருந்தான். ஆனால் இப்படியாக நடந்தால்? “இந்த வினாடியோட நமக்கான நேரம் முடிந்துவிட்டதா என்ன? எப்படியும் உன்னிடம் தானடா சொல்லுவேன்.. எனக்கு மட்டும் யார் இருக்கா.. அம்மாவா அப்பாவா அண்ணனா?” இப்படி கேட்கும் போதே நாக்கு பிழன்று தொண்டை அடைத்தது அவளுக்கு. அதை கேட்டு இவனுக்கு இதயமே வலித்தது. ஆனாலும்.. “அப்ப இப்ப சொல்லு” “நீ முதலில் சாப்பிடு” “இல்ல.. என்க்கு இப்பவே தெர்யணும். அப்ப தான் எத்துவும்!” அவன் குரலில் பிடிவாதத்தைப் பார்த்தவள் “என் கூட வா சொல்கிறேன்” என்ற படி அவனை இழுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று அவனைப் பிரிந்த பிறகு இந்த ஐந்து வருடத்தில் ஆதியிலிருந்து அந்தமாய் அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் அவள். “அம்மேக்கு கூட இப்போ சொன்னதுல ஒரு சிலது தெரியாது. ஆனால் உன்னிடம் நான் எதையும் மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லையடா..” அவள் கண்ணில் வலியுடன் கலங்கி நிற்கவும் தாவி வந்து தோழியை அணைத்துக் கொண்டான் அவளின் நண்பன். “அலுவாத டா.. அதான் நான் இர்க்கேன் இல்ல? வேணி இனி என் பொண்ணு. நாம ரெண்டு பேரும் சேந்து அவள பாத்துக்கலாம். அதுக்கு as soon as possible நாம மேரேஜ் பண்ணிக்கலாம்” இதுவரை தோழியாய் இருந்தவளை இனி தன் வாழ்க்கைத் துணையாய் அமரவைத்து அவளை அவன் காக்க நினைக்க “நோ...நோ... அது வேண்டாம். நான் ஒன்றை நோக்கிப் போய் கொண்டிருக்கேன். அதற்கு ஒரு தோழனாய் நீ எனக்கு தோள் மட்டும் கொடு” இவளிடம் உறுதி இருந்தது. “அப்டி உன்க்கு என்ன ஆச்சுனு நீயும் அதையே நென்சிருக்கப் போறியா? Forget it queen” இவனிடம் இப்பொழுது கோபம் துளிர் விட்டது. “நிச்சயம் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கு நடந்ததற்கு மன்னிப்போ விளக்கமோ கூட நான் கேட்கவில்லை. ஆனால் எனக்கு நடந்ததை அவன் வாயாலே இந்த உலகிற்கு அவன் பறைசாற்ற வேண்டும். குறைந்த பட்சம் அவன் குடும்பத்திற்காகவாது தெரிய படுத்த வேண்டும். அது மட்டும் தான் இப்போதைக்கு என் எண்ணம்” என்று உறுதி பட கூறியவள் “தெரியவில்லை இது எப்போது நடக்குமென்று. அதை அப்போ பார்ப்போம்…” “ஓகே குயீன்! I will wait for that” நண்பனின் குரலில் உறுதியை பார்த்தவள் “வேண்டாம்.. வேண்டாம்…. அதற்கு பதில் என் சுமையில் ஒன்றை உன் தோளில் வைக்கலாம் என்று இருக்கிறேன். தப்பு தான்.. ஆனால் ஏற்றுக்கொண்டு சுமக்க நீ தயாரா?” இவளிடம் ஒரு எதிர்பார்ப்பு. “sure.. why not? என் குயீனுக்கு செய்யாம வேற யார்க்கு செய்ப்போரன் சொல்லு?” அவன் குரலில் செய்ய கடமை பட்டு இருக்கும் சேவகனின் உறுதி! “promise?” “jesus மேல promise!” “இப்போது வேண்டாம். நேரம் வரும்போது நானே சொல்கிறேன். சரி சாப்பிட வா” ‘நான் போகாமல் இருந்திருந்தால் இப்படி இவள் வாழ்க்கை திசை மாறி இருக்காதே..’ என்று இவனும் ‘இவன் மட்டும் இருந்திருந்தால் எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா?’ என்று இவளும் நண்பர்கள் என்ற பந்தத்திலிருந்து இருவராலும் அப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை. காலை மணி பத்தரை.. அபி தன் அலுவலகத்தில் இருக்க, உள்ளே வந்த துருவன் “அண்ணா! பதினோரு மணிக்கு போர்டு மீட்டிங் ணா!” என்று ஞாபகப்படுத்த, லேப்டாப்பிலிருந்து பார்வையை விலக்காமலே “எஸ் டா.. இதோ கிளம்பிவிட்டேன்” என்றவன் “பார்த்தசாரதி சாரும் கிரண் சாரும் அவரவர்கள் ஷேரை விற்று விட்டார்கள் போல! யாரிடம் என்று any ஐடியா?” என்று இவன் லேப்டாப்பில் பார்வையையை வைத்தபடியே கேட்க “ஆமாண்ணா! நீங்கள் மொரிஷியஸ் போயிருந்த போதே இது சம்பந்தமான தகவல்கள் வந்தது. பட் பார்டிஸ் யாரென்று இதுவரை தெரியவில்லை. இரண்டு பேருமே அதை சீக்ரெட்டாக வைத்திருப்பதாகப் பேச்சு. அதை லீக் அவுட் செய்யத்தான் இந்த மீட்டிங் ணா” “ம்ம்ம்...” புருவ மத்தியில் முடிச்சு விழ, “அவர்கள் இரண்டு பேர் ஷேர் each 30% percent தான். சோ நமக்கு எதுவும் பாதிப்பு இல்லை. Then anyway.. பார்ப்போம்.. lets go” என்றவன் தன் சேரின் பின்புறமிருந்த கோட்டை எடுத்து அணிந்து கொண்டு தம்பியுடன் மீட்டிங்குக்குக் கிளம்பினான் அபி. பல தொழில் அதிபர்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை வேறு ஒரு தொழிலில் சிறு பங்காக முதலீடு செய்வது வழக்கம். அப்படி தான் அபியும் ஒரு கம்பெனியில் ஒரு சிறிய பங்கை முதலீடு செய்திருந்தான். அவன் தான் மேஜர் ஷேர் ஹோல்டர். நாற்பது சதவிகிதம் அவனுடையது. அதன்பின் பார்த்தசாரதி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முப்பது சதவிகிதமும் அதே போல் கிரண் ஒரிசாவைச் சேர்ந்தவர் முப்பது சதவிகிதமும் பங்குதாரர்களாக இருந்தார்கள். வடக்கு தெற்கு என்பதால் இருவருக்குமே எப்போதும் ஒத்து வராது. அதனால் அபி பேச்சுக்கு இருவரும் கட்டுப்பட்டே இருந்தனர். அதனால் தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பங்கை விற்கும் போது கூட அவன் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த பிரம்மாண்ட மீட்டிங் ஹாலுக்குள் அபி நுழைய, அங்கு அவனுக்கு முன்பே பார்த்தசாரதியும் கிரணும் பக்கத்தில் ஒருவராக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் தங்கள் சகாக்களுடன் எதிரெதிர் துருவமாக அமர்ந்திருப்பவர்கள் இன்று இப்படி இருக்கவும் அதைப் பார்த்தவனுக்கு இன்று இரண்டாவது முறையாக புருவ மத்தியில் மறுபடியும் முடிச்சு விழுந்தது. அவன் வந்து இருபுறத்திற்கும் நடுநாயகமாக இருந்த சேரில் அமரவும் பார்த்தசாரதி தான் எழுந்து நின்று முதலில் பேசினார். “எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய ஷேர்சை நான் விற்கப்போவது பற்றி கொஞ்ச நாட்களாக உங்களுக்கு செய்தி வந்திருக்கும். அது உண்மை தான். நான் மட்டும் இல்லை..” என்றவர் திரும்பி பக்கத்தில் அமர்ந்திருந்த கிரணைப் பார்க்க, “நீங்களே சொல்லிவிடுங்க சம்மந்தி” என்று அவர் வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, அதில் இவரும் வாயெல்லாம் பல்லாக, “கிரண் சாரும் அவர் பங்கை விற்பதாக இருந்தார். இது ஒரு மாதமாகவே நடந்து வந்த பேச்சுவார்த்தை. அது சம்பந்தமாக போன வாரம் தான் ஒரு முடிவெடுத்தோம். அப்புறம் இன்னோர் சந்தோஷமான விஷயம். இதுவரை தொழில் முறை நண்பர்களாக இருந்த நாங்கள் இனி சம்மந்திகளாகப் போகிறோம்” இதைச் கேட்ட அனைவரும் மகிழ்ச்சியில் கை தட்டினர். “அதனால் எங்கள் இருவருடைய பங்கையும் ஒருவரே வாங்கிவிட்டார்”. இதைக் கேட்ட அபி பல்லைக் கடித்த படி தம்பியைப் பார்க்க, அவனோ தலை குனிந்தான். “இன்னும் சிறிது நேரத்தில்அதை வாங்கியவர் வந்துவிடுவார். நாளைக்கு இதனையொட்டி ஒரு சிறு விருந்து வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் எல்லோரும் வரவேண்டும்” அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கப் பட, (இந்த இடத்தில் மங்காத்தா bgm உங்கள் மனதில் ஓடவிடுங்கள் வாசகர்களே!) ஒரு பட்டத்து ராணியின் தோரணையுடன் அந்த சபையினுள் நுழைந்தாள் யுகநந்திதா. பார்க்கும்போதே தெரிந்தது கிரீடம் தரிக்காத இளவரசி அவள் என்று! அவளுக்கு முன்பே அவளுடைய கார்ட்ஸ் சென்று அவளுக்கான நாற்காலியை அபி பக்கதிலேயே போட, அவனை வெற்றி கொண்ட பார்வை பார்த்த படி மந்தகாசப் புன்னகையுடன் பெண் சிங்கமென அவன் பக்கத்தில் அமர்ந்தாள் நந்திதா. உள்ளே வந்தவளை கிரண் சார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றவர் “இவர் தான் மிஸஸ். யுகநந்திதா! துரை கம்பனியின் சேர்மன். எங்கள் இருவரின் பங்கையும் வாங்கி இருப்பவர் இதுவரை எங்களுக்குக் கொடுத்த ஒத்துழைப்பை இனி இவர்களுக்கும் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று அவளை அறிமுகப்படுத்த, அபியை ஒரு பார்வை பார்த்து விட்டு இன்முகத்துடன் வரவேற்பை ஏற்றவள், அவளைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்லி விட்டு “நான் இந்த கம்பனியின் மேஜர் ஷேர் ஹோல்டராக இருந்தாலும் உங்கள் அனைவரின் நியாயமான வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நான் ஏற்பேன்” என்றவள் அபி பக்கம் திரும்பி ‘நிச்சயம் உன் பேச்சை மட்டும் கேட்க மாட்டேன்’ என்ற சமிக்ஞை தாங்கிய பார்வையைப் பார்க்க, அதில் பாம்பைப் போல் உஷ்ண மூச்சுகளை வெளியிட்டான் அபி. கூடவே என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன்னை நடக்க வைக்கிறேனா இல்லையா பார் என்ற சவாலும் அதில் மறைந்திருந்தது. எல்லாம் பேசி முடிய, கிரண் நந்திதாவுடன் அபியிடம் வந்தவர் “இனி நீங்க இரண்டு பேர் மட்டும் தான் ஷேர் ஹோல்டர்ஸ். சோ, அபி! Be a friendly moment man!” என்று அவர் எடுத்துச் சொல்ல, “ஷ்யூர் சார்!” என்று அவருக்குப் பதில் கொடுத்தவன் “ஹாய்!” என்ற படி நந்திதா முன் அவன் கை நீட்ட, இப்பொழுது தவிர்க்க முடியாமல் அவள் கை குலுக்க, கிரண் சார் ஒதுங்கி விட்டதை அறிந்தவன் பற்றிய கையை விடாமல் பிடித்து இவன் இறுக்க, “ஸ்ஸ்...” என்று தன்னை மீறி சுனங்கியவள் அவன் முகத்தின் தீவிரத்தைப் பார்த்து ஒரு முடிவுடன் தன் நகத்தால் இவள் அவன் விரல்களில் கீறல் போட “ஹேய்...” என்ற சொல்லுடன் தன் கையை விலக்கிக் கொண்டவனிடம் “இனி அதிகம் ஹேய் சொல்வீர்கள் போல மிஸ்டர் அபிரஞ்சன்! அதாவது இனி பல அடிகளை வாங்குவீர்கள் என்று சொல்கிறேன். உங்களை எனக்குக் கீழே கொண்டு வந்துவிட்டேன் பார்த்தீர்களா? இனி தானே கேம் ஆரம்பம்!” அவள் உதட்டோர வளைவில் அவனுக்குக் கை மட்டும் இல்லை உள்ளமும் எரிந்தது. “ஹேய்! எப்படி எப்படி? என்ன அந்த பிஸினஸில் எதுவும் செய்ய முடியவில்லை என்று இப்படி ஒரு குறுக்கு வழியில் என்னை நெருங்கப் பார்க்கிறாயா? இங்கேயும் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது” இறுமாப்புடன் அவன் பதில் கொடுக்க, “ம்ஹும்... அப்படியா?” இவள் ஆரம்பித்த நேரம் பார்த்தசாரதி அவர்களிடம் வர, அதன் பிறகு அப்படி இப்படி என்று பேச்சுக்கள் செல்ல இருவரும் தனித்து இல்லாமல் ஆனார்கள். ஆனால் அபிக்கு மட்டும் உள்ளே கனன்று கொண்டேயிருந்தது. ‘ச்சே..... யார் வாங்கினார்கள் என்பதை சீக்ரெட்டாக வைத்திருக்கும் போதே நான் சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இவள் விஷயத்தில் நான் அசால்டாக இருந்தது தப்பாகிப் போனது. சீக்கிரம் உனக்கு முடிவு கட்டுகிறேன் டி!’ அலுவலகத்திற்கு வந்த பிறகும் அவனுக்கு ஆத்திரம் மட்டுப்படவில்லை. ‘என்னமா கேம் விளையாடிட்டா! இவள் தான் வாங்கியிருக்கிறாள் என்பதை மறைத்து லாஸ்ட் மினிட்டில் வெளியே தெரியப்படுத்தி இருக்கிறாள். அதுவும் நேற்றைய எங்களுடைய மீட்டிங்கிற்குப் பிறகு! அதிலும் கேம் started mr அபினு என் கிட்டவே சொல்றா.... ராஸ்கல்! என்னைப் பற்றி தெரிந்திருந்தும் என்கிட்டவே விளையாடுகிறாளா? நானும் காட்டுகிறேன் டி யாரென்று! பிசாசு மாதிரி கையை வேறு கீறி வைத்துவிட்டா!’ என்னென்னமோ புலம்பியவனுக்கு அவளுக்குத் திரும்ப பதிலடி கொடுக்க யோசித்த பிறகுமே அவன் மனது அமைதி பெறாமல் இருக்கவும் உடனே நேற்று பார்த்த அந்த முயல் குட்டியைத் தேடி இன்றும் கிளம்பி விட்டான் அபி. அந்த மான் குட்டியோ தன் தாய் அவனுக்கு கொடுத்த எரிச்சலை எல்லாம் தன் கடமை போல தன் எச்சிலாலும் தன் மழலைப் பேச்சாலும் அபியை குளிர்வித்தாள் திருவேணி! மறுநாள் மதியம் செவென் ஸ்டார் ஹோட்டலில் அபி மதிய உணவில் இருக்க, அவனுக்கு சற்றுத் தள்ளி இன்னோர் டேபிளில் பாரதி ஒரு முக்கியமான க்ளையன்டுடன் பேச்சு வார்த்தையில் இருந்தாள். அவளுக்கு உண்மையாகவே கம்பெனி விஷயமாக அப்பாய்ட்மெண்ட் இருந்தது. ஆனால் அபிக்கு அப்படி இல்லை. ஒரு நண்பரைப் பார்க்க வந்தவன் அப்படியே இங்கு அமர்ந்து விட்டான். பாரதி நந்திதாவின் பி.ஏ என்பது நேற்று தான் அவனுக்குத் தெரியும். அதனால் என்ன தான் நண்பனுடன் அவன் பேச்சு வார்த்தையில் இருந்தாலும் அவன் பார்வை அவ்வப்போது பாரதி மேல் தான் இருந்தது. இங்கு அபி இப்படி என்றால் அண்ணன் இங்கிருப்பது கூடத் தெரியாமல் வேறொரு இடத்தில் துருவன் அமர்ந்து பாரதியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இங்கு வருவது அவனுக்கு தெரியும். அந்த கிளையன்ட் தான் வந்த வேலை முடியவும் சென்று விட, இவள் மட்டும் தனித்திருக்கவும், அவள் எதிரில் வந்தமர்ந்த துருவன் “ஹாய்!” என்க நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “ஹலோ துருவன்! how r u?” என்னதான் அவனிடம் பேசினாலும் பார்வை என்னமோ அவள் கையிலிருந்த கைப்பேசியிலேயே தஞ்சம் அடைந்திருந்தது. “நன்றாக இல்லை” அவன் சோகமாக பதில் தர, அவன் பதிலில் இவள் கேள்வியாய் பார்க்க “நேற்று பார்த்து இன்று இப்படி கேட்டால்? அதான்.. சும்மாவேனும் நான் நன்றாக இருக்கேனென்று சொல்வதற்கு வரவில்லை” இவன் பேச்சை வளர்க்க நினைக்க “ஓ.... அப்போ ஐம்பது கிலோ சிமெண்ட் மணல் மூட்டை ஓகே வா? எங்கள் வீட்டில் சிறிய கட்டுமான வேலை இருக்கு. அதற்கு வாங்கிக்கொண்டு போகவேண்டும். சும்மா என்று சொன்னீர்களே.. நீங்கள் வேண்டுமானால் அதை சுமந்துகொண்டு வாருங்களேன்” என்று இவள் அவனைக் கலாய்க்க அவன் கண்ணில் சுவாரசியத்துடன் “சிமெண்ட் மண் மூட்டையென்றால் வேண்டாம். அதற்கு பதில் பிஃப்டி கே.ஜி தாஜ்மஹால் என்றால் என் கரங்களில் ஏந்தி தங்கள் வீடுவரை சுகமாக சுமக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு இளவரசியின் அனுமதி கிடைக்குமா?...” அவளை ஐம்பது கிலோ தாஜ்மஹால் என்று இவன் வர்ணிக்க அவன் பதிலில் கடுப்பானவள் “மனதில் என்ன பெரிய கவிஞர் வைரமுத்து என்று நினைப்பா?” “ஐயோ! நான் அவரளவிற்கு இல்லைங்க அம்மணி! நான் இப்பொழுது தான் பாரதி எனும் தீயில் புதிதாக பூத்த கவிஞன் துருவன்!” அவன் கண்களில் முதல் முறையாக காதல் வழிந்தது. அது பாரதி மட்டுமல்லாமல் தள்ளியிருந்த அபி பார்வையிலும் விழுந்தது. நந்திதாவின் பி.ஏ என்ற முறையில் நேற்று தான் அபி பாரதியை முதன் முதலாகப் பார்த்தான். அந்த களேபரத்திலும் தம்பியின் பார்வை அடிக்கடி பாரதியிடம் சென்று வந்ததையும் குறித்துக் கொண்டவனுக்கு இன்றைய துருவனின் பார்வை ஐயம் திரிபுர புரிந்தது இவன் பாரதியை விரும்புகிறான் என்று. பாரதி அவனுக்கு வேறு விதமாக பதில் கொடுக்க வரவும் “அம்மா தாயே! போதும் நிறுத்து. நீ இப்பொழுது என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும். நாங்களெல்லாம் நடுத்தர வர்க்கம்.உங்களை மாதிரி பணக்காரர்களுக்கு எங்களைக் கண்டால் பரிகாசம், அதிகாரம் செய்யத்தான் தெரியும். இந்தியாவில் எங்களின் பொருளாதார நிலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் முக்கியமா இந்திய பொருளாதார நிலை என்ன தெரியுமா என்று சொற்பொழிவு ஆற்றப் போகிறாய்.. அதானே? அவன் கும்பிடு போட்டுப் பயந்த பாவனையுடன் ஏற்ற இறக்கத்துடன் கேட்கவும், இவள் வாய் விட்டுச் சிரிக்கவும் கூட சேர்ந்து சிரித்தான் துருவன் . “அப்புறம் feautre plan என்ன? நமக்கும் கொஞ்சம் சொன்னால் வசதியாக இருக்கும்..” அவன் தூண்டில் போட, அதை உணர்ந்தவள் “பெரிதாக ஒன்றும் இல்லை. ஏதாவது ஒரு இஸ்ரோ அல்லது நாசா விஞ்ஞானியாகப் பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது தான். இப்போதைக்கு அதுதான் plan” அவள் சிரிக்காமல் சொல்ல “யார்? தன்னோட பெயர் கூட ஞாபகம் இல்லாமல் எந்நேரமும் ராக்கெட் சிந்தனையில் சுற்றுவாங்களே அவர்களா? ஐயோ! அப்புறம் அவர் உங்களைக் கல்யாணம் செய்ததையும் நீங்கள் தான் அவர் மனைவி என்பதைக் கூட மறக்க சாத்தியம் இருக்கு பாரதி!” என்று பதறிய படி இவன் பேசவும் “பரவாயில்லை.. அது என் பாடு.. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒன்றும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” என அவள் தீவிரமாகச் சொல்லவும் “ஏனுங்க! இந்த தொழில் அதிபர் எல்லாம் வேணாமுங்களா?” இவனும் அதே தீவிரமாகக் கேட்க “அட நீங்கள் வேறு.. இபொழுதெல்லாம் இந்த புண்ணாக்கு விற்பவன் கூட தன்னைத் தொழில் அதிபரென்று சொல்லிக்கொள்கிறான். நீங்கள் சொல்வது அவர்களையா?” என்று இவள் படு தீவீரமாகக் கேட்க, இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, அவன் முழிப்பதைப் பார்த்து இவள் பக்கென்று சிரித்து விட “ப்பூஉ... என்னங்க அப்போ சும்மா தான் சொன்னீர்களா?” அவனிடம் நிம்மதிப் பெருமூச்சு. “ம்ம்ம்...” அவள் தலையைக் குனிந்து கொண்டாள். இதுவரை துருவன் இப்படியெல்லாம் அவளிடம் பேசியது இல்லை. அவளும் இவனைத் தவிர வேறு யாரென்றாலும் இப்படிப் பேச இடம் கொடுத்திருக்க மாட்டாள். ஏனோ துருவன் அவளுக்குத் தனி என்று பட்டது. அதற்காக இது காதல் எல்லாம் இல்லை என்பதை அவளே சொல்லிக் கொண்டாள். ஆனால் துருவன் காதல் என்று தான் உறுதியாக நம்பினான். அதனால் தான் இன்று அதை மறைமுகமாக சில வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.[/B][/SIZE] [B][SIZE=5]அதே நேரம் “excuse me! may i join with you?” என்ற கம்பீரமான குரலில் இருவரும் நிமிர்ந்து பார்க்க, துருவனுக்கு வியர்த்தது என்றால் பாரதியோ[/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
Yuvanika's Completed Novels
உறவாக வேண்டுமடி நீயே...
உறவாக வேண்டுமடி நீயே 5
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN