காற்றின் வாசம்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுள் புகுந்து
மாயங்கள் பல செய்து
என்னை வாழ வைப்பவளே!
உன்னை நிறுத்தி
கைகளுக்குள் அடக்கி
கன்னத்தை பிடித்து
முத்தம் வைக்க வருவதற்குள்
காற்றுக்குள் மறைந்து
என் மூச்சுக்குள் புகுந்து
உடலுக்குள் ஒளிந்துக்கொண்டாய்.
உன் இதழ் தீண்ட
நினைத்த என்
உயிரை தீண்டி
காற்றை சுவைக்கவைத்துவிட்டாயேடி...
காற்று பெண்ணே !
 
Back
Top