காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 27

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

ஹாய் பிரெண்ட்ஸ் என்மேல எல்லாரும் செம கோவத்துல இருப்பிங்கன்னு எனக்கு நல்லா தெரியுது ஆனா என்னால எதுவும் செய்ய முடியாத நிலைமையில இருக்கேன். வீட்டுல பசங்க கிட்டதான் மொபைல் மாட்டிக்குது. இருக்குற ப்ரி டைம்ல எழுதலாம்னா யோசிக்க கூட முடியாத அளவுக்கு மைன்ட் டோட்டல் பிளாங்க் என்ன சொல்றதுன்னே புரியுல இந்த எபிக்கு தேவையான சீன்ஸ் மட்டும் யோசிச்சி எழுதி இருக்கேன் இதுல ரொமமேன்ஸ் எதிர்பார்த்து வந்து இருந்தா சாரி எந்த இடத்துல தேவைபடுதோ அதுல மட்டுமே ரொமேன்ஸ் வரும் இதை படிச்சி பார்த்துட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் போடனும்னு கேட்டுக்குறேன்.

அன்புடன் பாகி

வேக எட்டுளுடன் அலுவலகத்தில் நுழைந்த கேஷவிற்கு அவனுக்காக காத்திருந்த கார்த்திக் கண்களில் பட அவனுடன் பேசியபடியே நடந்தான் கேஷவ். அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கேஷவின் அருகில் வந்து கொண்டிருந்த கார்த்திக் பரபரப்புடன் "கேஷவ் எல்லாரும் வந்துட்டாங்க இப்போ எதுக்கு இந்த மீட்டிங்ன்னு கேட்டு நச்சரிக்கிராங்கடா" என்றான்.

"எல்லாரும் கொஞ்சம் குழம்பட்டும் கார்த்திக்" என கேஷவ் சிரித்தபடியே கூற அவன் பதிலில் முறைக்க முயன்ற கார்த்திக்கும் சிரித்துக்கொண்டே "டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க அவனவன் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி மாள முடியல. நீ என்ன நினைச்சி இந்த மீட்டீங் அரேஞ்ச் பண்ணியோன்னு ஒவ்வொருத்தனுக்கும் வயித்துல புளிய கரைக்குது" என்றான் கொஞ்சம் நக்கலான தோனியில்".

"கரைக்கட்டும் கார்த்திக் நல்லா கரைக்கட்டும்... இவனால என்ன பண்ணமுடியும்னு தானே இந்த ஒரு மாசமும் நம்மல சுத்தல்ல விட்டாங்க. இன்னைக்கு நான் செய்ற வேலை அவனுகளுக்கு யாரையும் ஏமாத்தனுமுன்னு தோன்றக் கூடாது." என்று அவன் தோரணையிலேயே கூறியவன். "இப்போ இவனுங்க பயம் தான் நமக்கு வேணும். இவன் என்ன செய்ய கூப்பிட்டு இருக்கான் என்ன செய்வான் என குழம்பட்டும்" என்று கூறியவன் நியாபகம் வந்தவனாக "ஹாங் கார்த்திங் காலைலயே சக்தி பிரெண்ட் அருண் வரேன்னு சொன்னாரே வந்துட்டாரா??" என்றான்.

"ம் வந்துட்டார் கேஷவ்.. உன் கேபின்ல உட்கார வைச்சி இருக்கேன். உனக்காக தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு" என்றதும், "இன்னும் மீட்டிங் தொடங்க அரைமணி நேரம் இருக்கு கார்த்திக் அதுக்குள்ள நான் பேசிட்டு வந்திடுறேன்". என்று தனது அறைக்குள் நுழைந்தான்.

அவனுக்காகவே காத்திருந்த அருணை பார்த்ததும் "ஹாய் மிஸ்டர் அருண் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?" என்றபடி அறைக்குள் நுழைந்தவன் முகமன்னாக அவருக்கு கைகுலுக்கி வரவேற்றான்.

ஆறு அடிக்கும் குறையாமல் கம்பீரமாய் இருந்த அருண் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருபவன் கேஷவின் கேள்வியில் "இல்லை கேஷவ் இப்போ தான் வந்தேன். நீங்க கேட்ட டீட்டெய்ல்ஸ் இதுல இருக்கு" என்றவன் தன் கையில் இருந்த கோப்புகளை கேஷவிடம் கொடுத்தார்.

"ரொம்ப தெங்க்ஸ் மிஸ்டர் அருண்" என்றபடி கையில் இருந்ததை பெற்றுக்கொண்டான் கேஷவ் அதை புரட்டி பார்க்க ஆரம்பித்து இருந்தான்.

"இருக்கட்டும் கேஷவ் என் பிரெண்ட் சக்தி சொன்னால் இதை கூட செய்ய மாட்டேனா அதுவும் ஒரு டிடெக்டிவ்க்கு இது தானே வேலை கேஷவ்" என்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில பத்திரப்படுத்தி வைத்திருந்த பென்ரைவ்வை கொடுத்து "இதுல எல்லாம் பக்கவா இருக்கு" என்று கூறி நான் கிளம்பறேன் என்றான்.

"இருங்க அருண் டேக் சம் காஃபி" என்று உபசரிக்க

"பரவாயில்லை கேஷவ். இன்னொரு நாள் பாக்கலாம். இது சக்தி சொன்ன வேலை அதான் நானே நேர்ல வந்தேன். ஐ ஹவ் சம் அர்ஜன்ட் வொர்க் பை கேஷவ்" என்றபடி விடைபெற்றான்.

அருண் சென்ற அரைமணி நேரம் கழித்து மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தவன் தன் கம்பீரம் குரலில் சற்றும் குறையாமல் "ஹாய் குட் மார்னிங் எவ்ரி ஒன். வெல்கம் டூ ராஜன் குருப்ஸ் ஆப் இண்டஸ்டீரிஸ்" ....

"இந்த ராஜன் குருப்ஸ் எம் டி யா உங்களையெல்லாம் சந்திக்கிரதுல நான் ரொம்ப சந்தோஷபடுறேன் ஜென்டில் மேன்ஸ்..." என்று தன் முக உறையை இன்முகமாகவே வழங்கினான்.

"நான் இந்த மீட்டீங் எதுக்கு அரேஞ்ச் பண்ணி இருக்கேன்னு நினைச்சி உங்களுக்கு எல்லாம் குழப்பமா இருக்கும்..."

"அயம் சாரி நான் இந்த மீட்டிங்கை கூட்டவேண்டிய கட்டாயத்துல இருக்கேன்".

"என்னடா இவன் வந்து ஒரு மாசம் தானே ஆகுது... அதுக்குள்ள என்ன தெரிஞ்சி இப்படி கூட்டம் போடுறான்னு பலர் நினைச்சி இருப்பிங்க... பரவாயில்லை அப்படி நீங்க நினைக்கிறதுல தப்பும் இல்லை... இப்போ அதை எல்லாம் கொஞ்சம் ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு பேசலாமா ஜென்டில்மேன்ஸ்" என்றான் ஒரு அழுத்தமான பார்வையில்.

எங்கும் அமைதி குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அமைதியை சுமந்து கொண்டு இருந்தது அந்த அறை நடுநாயகமாய் அவன் மட்டுமே சிங்கத்தின் சீற்றத்துடன் உறுமிக்கொண்டு இருந்தான். அவன் பேச பேச ஒருவர் முகத்தை ஒருவர் கலவரமாக பார்த்து கொண்டனர் அமர்ந்திருப்பவர்கள்.

"என்னை நம்பி இந்த இண்டஸ்டிரிய ஒப்படச்சி இருக்க என் அண்ணனுக்கு அதை டெவலப் பண்ணி கொடுக்கனுமே தவிர இதை அதள பாதளத்துக்கு கொண்டு போக விரும்பல" என்றான் பூடகமாக

நீங்க கேக்கலாம் அதுக்கும் இந்த மீட்டிங்க்கும் எந்த சம்மந்தம்னு கண்டிப்பா சம்மந்தம் இருக்கு நான் இந்த தொழிலுக்கு புதுசுன்னு நீங்களே முடிவு பண்ணி தரம் இல்லாத மூலம்பொருட்களை அதிக விலைக்கு கொடுக்கரதும், ஆக்ரிமென்ட் போட்டு சப்ளை பண்ணிட்டு இருக்க பொருட்களை நிர்வாகம் கை மாறிடிச்சின்னு அதிக லாபம் பாக்க விலையை ஏத்தறதும் என் தொழிலுக்கும் நல்லது இல்லை எனக்கும் நல்லது இல்லை".

"இந்த ஆர்டர் முடியட்டும் என்று தான் இவ்வளவு நாளும் அதை பொருத்துக்கிட்டு இருந்தேன். இனி அதை சகித்துகொண்டு இருக்க வேண்டி அவசியம் இப்போ எனக்கு இல்லை..... சோ அதனால" என்று பேச்சை தடை செய்து நிறுத்தினான் கேஷவ்.

அனைவரும் அவன் வாயில் இருந்து உதிரும் வார்த்தைகளுக்காக அவனையே எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். அங்கு குழுமி இருந்தவர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் "அவங்களோட அக்கிரிமெண்டை கேன்சல் செய்துடம்னு முடிவுபண்ணி இருக்கேன்" என்றவன் "என்ன மிஸ்டர் பங்கஜ் நான் சொல்றது கரெக்ட் தானே நானும் நஷ்டத்துலயா ஃபேக்டீரிய ரன் பண்ண முடியும். வியாபாரி தானே நானும் லாபம் பாத்து நாலு காசு சேர்க்க வேண்டாமா?" என்று பங்கஜ்ஜை போலவே பேசி காட்டியதும் அவன் முகம் அவமானத்தில் சுருங்கியது.

சிறு துரும்பு என்று நினைத்திருந்தவன். இன்று கண்களை உறுத்த தொடங்கி இருந்தான் பங்கஜிற்கு.

அவனுக்கு இரண்டு நாற்காலி தள்ளி அமர்ந்து இருந்த தேவராஜ் கண்களில் பட "என்ன தேவராஜ் தரமில்லாத பொருட்களை ராஜன் குரூப்ஸ்க்கு கொடுத்து இதோட பேரை குலைய வைச்சிடலாம்னு எத்தனை நாள் திட்டம் போட்டு வைச்சி இருந்திங்க சொல்லுங்க" என்றான் சற்றே உயர்ந்த குரலில்.

"கேஷவ் .... என்று உரக்க குரலில் அவனை தடுத்த தேவராஜ் நீங்க ரொம்ப வார்த்தைய விடுரிங்க கேஷவ்.... தரமில்லாத பொருட்கள் வந்ததுன்னு எதை ஆதரமா வைச்சி சொல்றிங்க உங்ளுக்கு சப்ளை செய்த்து எல்லாமே நம்பர் ஒன் குவாலிட்டி தெரியுமா?? அதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு" என்று அவனும் எழுந்து நின்று அவேசமாய் பேசினான்.

"ஓ.... மிஸ்டர் தேவராஜ் உண்மையாவா சொல்றிங்க இது எங்களுக்கு தெரியாத தகவல்" என்று படு நக்கலாகவே கூறியவன் பக்கத்தில் நின்றிருந்த ஓருவனை தலை அசைத்து முன்னால் வர சொல்ல அவன் கொண்டு வந்து கொடுத்த பேப்பரை பார்த்தவரின் முகம் எல்லாம் வேர்த்து வழிந்தது. "இதுக்கு என்ன சொல்றீங்க தேவராஜ் பொய்யை உரக்க சொன்னா உண்மை ஆகாது. இனி நீங்க எங்களுக்கு சப்பை செய்ய வேண்டாம் நீங்க சப்ளை செய்த எல்லா பொருட்களையும் உடனே எடுத்துக்கிட்டு ரிட்டன் அமௌன்ட் செட்டில் பண்ணுங்க வித்தின் ஒன்வீக்" என்று சற்று மிரட்டலான தோனியிலே கூறினான் கேஷவ்.

நின்றிருந்த தேவராஜை விடுத்து அங்கு கூடியிருந்தவர்களின் மீது பார்வையை செலுத்திய கேஷவ் "எக்ஸ்கியூஸ்மீ ஜென்டில்மென்ஸ் இதுவரைக்கும் எங்க நிருவனத்துக்கு நீங்க கொடுத்து வந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் இனியும் கொடுக்கனும்னு நான் விரும்புறேன்".

"அன் தென் உங்களுக்கு அதுல விருப்பம் இல்லைன்னு வரும்போது தாராளமா நீங்களே விலகிக்கலாம் நாங்க தடுக்கமாட்டோம் அதை விட்டுட்டு எங்களுக்கு நஷ்டத்தையும் கெட்ட பேரையும் கொடுக்கனும்னு வேலைல இறங்கி இருந்து அதை நானா கண்டுபிடிச்சா நிறைய பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்".

"இதை நீங்க கோரிக்கையாகவும் எடுத்துக்கலாம் இல்ல எச்சரிக்கையாகவும் வச்சிக்கிலாம். அது உங்கள் சௌகரியம் எப்பவும் நான் உங்கள் நண்பனாகவே இருக்க ஆசைபடுறேன்". என்று கூறியவன் "தேங்கயூ தேங்கியூ சோ மச் ஃபார் யூவர் வொண்டர்புல் கோ ஆப்ரேஷன்" என்று கரம் கூப்பி அவர்களை வழி அனுப்பியவன் நேரே தேவராஜிடம் திரும்பி "உங்ககிட்ட பேசனும் கொஞ்ச வெய்ட் பண்ணுங்க" என்று அவரை மட்டும் நிறுத்தினான்.

ஏற்கனே ஆத்திரத்திலும் அதிர்ச்சியின் உச்சத்திலும் இருந்த் தேவராஜ் இவன் இருக்க சொல்லவும் மேலும் கலவரமானான். எல்லோரும் சென்றபின் தனியாக நின்றிருந்த தேவராஜின் எதிரே வந்து நின்ற கேஷவின் தோரணையில் சற்று நிலைகுலைந்து போயிருந்தான் தேவராஜ்.

"எதுக்கு தனியா நிக்க வச்சு இருக்கீங்க நீங்க தான் எல்லாத்தையும் சொல்லிட்டீங்கல இப்போ என்ன காரணத்துக்காக நிக்கவச்சி இருக்கீங்க நான் தெரிஞ்சுக்கலாமா.. ?. உங்களுக்கு ஏதாவது என்கிட்ட சொல்ல மறந்துவிட்டதா?" என்று மனதில் ஓரத்தில் நெருடல் இருந்தாலும் ஒரு அசட்டு தைரியத்தில் எள்ளலாகவே கேட்டான் தேவராஜ்.

"நிச்சயமா தேவராஜ் உன்கிட்ட பேச எனக்கு நிறைய இருக்கு. அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னை மட்டும் எனக்கு தெளிவுபடுத்திக்க வேண்டியது இருக்கு. எதுக்காக எங்களோட கம்பெனியில் இருக்க மெஷின் எல்லாம் நீங்க ரிப்பேர் பண்ண வச்சீங்க.... அதனால நீங்க என்ன லாபத்தை அடைஞ்சீங்க இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் எனக்கு நீங்க சொல்ல முடியுமா??? முடியும்னா இதை சொல்லிட்டு நீங்க தாராளமா கிளம்பிப் போகலாம்" என்று அதே நக்கல் கலந்த குரலில் கூறினான் கேஷவ்.

"என்ன உளறல் இது கேஷவ் உங்க மெஷினை நான் ரிப்பேர் பண்ணேனா?? நல்ல கதை கட்டுரீங்க பழியை என் தலை மேல தூக்கி போட்டு நீங்கதான் என் பெயரை குளைக்க பாக்குறிங்க" என்று எரிச்சாலாக கத்தினான்.

"ஹோ..... இது உனக்கு உளறல் மாதிரி தெரியுதா தேவராஜ். இதை உண்மைன்னு நிரூபிச்சா என்ன பண்ணுவிங்க என்று புருவத்தை உயர்த்தியவறே நான் போலீஸ்க்கு போக வேண்டாம் பார்க்கிறேன் நீங்களே உங்க வாயால உண்மையெல்லாம் சொல்லிடுங்க" என்றான் மிரட்டும் குரலில்

"கேஷவ்.... என்ன போலீஸ் பூச்சாண்டின்னு பயம் காட்டுறியா... நான் யார் தெரியுமா நேத்திக்கு இண்டஸ்டீரி உள்ள வந்துட்டு இந்த ஆட்டம் போடுற" என்றவன் நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பகிராங்கமா மன்னிப்பு கேட்க வைப்பேன். இந்த அவமானத்துக்கு நீ எனக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் கேஷவ்" என்று தேவராஜ் மறைமுக மிரட்டல் விடுத்தான்.

"உன்னால என்ன முடியுமோ பாத்துக்க எல்லாத்துக்கும் நான் தயாரா தான் இருக்கேன்". என்று அவனுக்கு சலைத்தவன் இல்லை என்று கேஷவும் கர்ஜிக்க அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகியிருந்தது.

"ஆதாரத்தோட சொன்னாதான் நீங்க எல்லாம் செய்த தப்பை ஒத்துக்குவிங்களா??" என்று ஒரு கோப்பை அவன் முன்னே தூக்கி ஏரிந்தவன் "இதை பார்த்துட்டு சொல்லு" என்றான்.

"கேஷவ் நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியல" என்று மறுபடியும் அதே பல்லவியை ஆரம்பிக்க கேஷவின் "கார்த்திக்" என்ற அழைப்பில் வெளி அறையில் இருந்து முகத்தில் வீக்கத்துடன் ஒருவனை கொண்டு வந்து நிருத்தி இருந்தான் கார்த்திக். அவனை பார்த்ததும் மறுப்பு கூற வந்த தேவராஜின் வார்த்தைகள் சட்டென தடைபட்டு நின்றது. இப்போது தானாய் கோப்புக்களை புரட்டியது அவன் கைகள்

'இவனை யாருன்னு தெரியுதா தேவராஜ்" என்ற கேஷவின் கேள்விக்கு

முகத்தின் வியர்வை துளிகளின் முத்துகள் அங்கங்கே துளிர்த்து இருந்தது தேவராஜிற்கு. கூடவே அழையா விருந்தாளியாய் பதட்டமும் ஒட்டிக்கொண்டது இவனை சாதாரணமாய் நினைத்தது விட்டேனோ என்று இம்முறை எண்ண தோணியது தேவராஜிற்கு இவன் விடக்கொண்டானாய் இருக்க இனி தப்ப முடியாது என்று தெரிந்தது.

தேவராஜின் நடுக்கத்தையும் பதட்டத்தையும் உணர்ந்த கேஷவ் மேசையின் மீது இருந்த தண்ணீர் டம்ப்ளரை அவன் முகத்திற்கு முன் நீட்ட அதை வாங்கி பருகிய தேவராஜ் கேஷவையே பார்த்திருந்தான்.

"இவன் தான் இந்த கம்பெனியோட குவாலிட்டி செக்கர் தேவராஜ் இவனோட ஃபோன் பில்லுல இருந்து இவன் கடைசியா உங்கள சந்திச்ச வரையிலும் டீட்டெய்ல்ஸ் இருக்கு இந்த ஆதாரம் போதுமா இல்ல இதுக்கும் மேல அவன் வாயாலேயே உண்மைய சொல்ல வைக்கட்டுமா" என்று மிரட்டாளாய் கேட்டான்.

அவன் மிரட்டலில் அவமானத்தோடு தலைகுனிந்த தேவராஜ் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு "உண்மைய நானே சொல்றேன் கேஷவ்.. இதுக்கு எல்லாம் காரணம் உத்ரவோட அண்ணா சாருகேஷ் தான்" என்றான் உத்ரா என்ற பெயரை கேட்டதும் பாதி புரிந்த கேஷவிற்கு இது சாருகேஷோட வேலை என்ற பதிலில் மீதியும் புரிந்தது.

மலேஷியா

ஜெய் மதுவை ரெஸ்டாரண்டில் சந்தித்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே அடுத்த சந்திப்பு அவனுக்காக காத்திருந்தது.

அவனுடைய போட்டிக்கான தீவிர பயிற்சியை முடித்தவன் சிறிது நேர ஆசுவாசத்திற்காக கடற்கரை வந்திருந்தான். மாலை இருள் சூழும் நேரம் மலேஷிய நகரமே வர்ண ஜாலங்களை நிகழ்த்தி கொண்டிருந்தது. அவன் வெளியே வந்தது வார இறுதி நாள் என்பதால் கடற்கரையில் எங்கும் திரும்பினாலும் மக்களின் தலைகளாக காட்சி அளித்து கொண்டிருந்தது. மாலை நேர கடல் காற்று உடலை தழுவி செல்ல கடல் அலையில் காலை நனைத்து கொண்டு இருந்தான் ஜெய். அந்நேரம் பார்த்து அவன் அலைபேசி ஒலி எழுப்ப எடுத்து பார்க்க அது கேஷவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

சிறு புன்னகையுடனே அலைபேசியை காதில் பொறுத்தியவன் "ஹாய் கேஷவ் எப்படி இருக்க?" என்று தனது வழக்கமான நல விசாரிப்புக்களுடன் ஆரம்பித்தான்.

அடுத்த பக்கத்தில் இருந்த கேஷவ் பற்களை கடித்தபடியே "சுத்தமா நல்லா இல்லடா ...." என்று அவனை வறுக்க ஆரம்பித்து இருந்தான்.

"என்ன கேஷவ் என்னடா இவ்வளவு சூடா பேசுற? என்ன விஷயம் ஏதாவது பிராப்ளமா டா...? உன்னை விட்டு அவன் எங்க போனான் எங்கடா கார்த்திக்?" என்று என்னவோ ஏதோ பிரச்சனையோ என விசாரித்தான்.

"எல்லாம் என் கூடத்தான் இருக்கான். ஆனா உன் ஆபிஸ்ல தான் கண்ட கழிசடையெல்லாம் வேலைக்கு வச்சி இருக்க.. அவனுங்கள பத்திய மொத்த டீட்டெயிலும் கைல இருக்கு ஒவ்வொருத்தனையும் துண்டை காணும் துணியை காணும்னு ஓட வச்சாச்சி இனி என்னை பழைய கேஷவா பாக்க போறனுங்க" என்று சரமாரியாய் எகிரிக்கொண்டு இருந்தான்.

"டேய் டேய்....... காம்பு சுத்தாதடா... காம் டவுன் கேஷவ் ஏன் இப்படி கோவபடுற பீ கூல் மேன்" என்று அவனை சமாதனப்படுத்த முயன்று கொண்டு இருந்தான் ஜெய்.

"ப்ச் நான் கூலாதான் இருக்கேன் நான் காண்டானேன் அவன் கதி அதோ கதிதான்" என்று எரிச்சலாய் கூறினான்.

"ப்ச் என்னடா என்னன்னு சொல்லி தொலை இப்படி பாதி புரிஞ்சும் புரியாமலும் பேசினா எப்படி டா?" என்று மண்டை காய்ந்தான் ஜெய்.

தேவராஜை பற்றி கூறியவன் இதில் சாருகேஷ் சம்பந்தப்பட்டு இருப்பதை முற்றிலும் தவிர்த்தான்.

"உஃப். கேஷவ் உனக்கு எது சரின்னு படுதோ அதை செய் நானோ அப்பாவோ உன் முடிவுகளை தடுக்கமாட்டோம்." என்று நெகிழ்வாய் கூறியவன் இத்தனை நாள் இதெல்லாம் யாரு செஞ்சாங்கனு எனக்கு தெரியாம போச்சு... எனக்கு இப்படி ஒரு துரோகி இருப்பான்னே நினைச்சது இல்லை... ஆனா பொருப்பெடுத்த ஒரே மாசத்துல அதுல இருந்த பிரச்சனைய கண்டுபிடிச்சிட்ட யு ஆர் கிரேட் பிசினஸ் மேன் டா" என்று புகழாரம் சூட்டினான் தம்பிக்கு. உன்னை இப்படி பழைய கேஷவா பாக்கறதுல எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா" என்று நெகிழ்வுடன் கூற

ஏனோ அதற்கு பதில் சொல்லாமல் சாருகேஷின் நினைவில் மவுனமாய் நின்றிருந்தான் கேஷவ். பழைய எண்ணத்தில் தம்பி உழலுகிறான் என நினைத்துக் கொண்ட ஜெய், அவன் எண்ணத்தை திசை திருப்பும் முயற்சியில் "கேஷவ் எனக்கு அப்பா அம்மாவ பாக்கனும் போல இருக்கு இன்னும் ஃபைனலுக்கு 13 நாள் தான் இருக்கு அம்மா கூட இருந்த பெட்டரா ஃபீல் பண்ணுவேன் உனக்கு பிரச்சனை இல்லனா அவங்களை மலேஷியா அனுப்பி வைக்கிறியா" என்று சிறு பிள்ளையின் சாயலில் கூறினான்.

அவன் கூற்றினில் நிகழுக்கு வந்தவன் "ஹா... ஹா... உனக்கு என்ன மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராஜாராமனையும் பாக்கனுமா... நீ ஒரு ஃபாக்டரிக்கு முதலாளி இன்னும் ஸ்கூல் பையனாவே இருக்கியேடா" ஜெய்யை என்று கிண்டலடித்தான் கேஷவ்

"டேய் தடிமாடு நான் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை தானே அது மாறிடுமா வாய் ஓவாரகிடுச்சி டா இன்னும் பொண்ணாட்டி கிட்ட அடிவாங்கல இல்ல அப்படிதான் பேசுவ... நான் உனக்கு ஸ்கூல் பையனா... உனக்கு முன்னாடி பிறந்தவன் டா அந்த ஒன்னுக்குக்காவது மரியாதை கொடுக்க தோனாதாடா?"என்று சிரிப்பூடன் கூறியவன் நக்கல் நையண்டிகளை அண்ணன் தமபிகள் இருவரம் ஒரம் கட்டி வைத்துவிட்டு சிறிது நேர அலுவலக பேச்சிற்கு பிறகு அலைபேசியை வைத்தான்.

கேஷவின் அதிரடி முடிவுகள் மாற்றங்களை பற்றி சிந்தித்த வண்ணம் இருந்த ஜெயந்தின் கண்களுக்கு கடலையே வெறித்துக் கொண்டிருந்த மது அகப்பட்டாள்.

அவள் முகம் ஏனோ அழுது அழுது வீங்கியது போல் இருக்க ஆளே ஒரு மாதிரி துவண்டு போய் இருந்தாள். பார்த்தவுடன் சட்டென அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மாறவில்லை என்றாலும் இரு நாட்களில் நிறைய மாற்றங்கள் கொண்டது போல் இருந்தது.

சற்றே பதட்டமாய் இருந்தவளை பார்த்தவன் அருகில் செல்ல ஏனோ மனம் உந்தியது அதற்குள்ளாகவே யாரோ ஒரு பெண் அவள் அருகில் வந்து பேசவும் சட்டென அவன் கால்கள் தடைபட்டு நின்றது.

வந்த அந்த புதிய பெண்ணோ ஏதோ சொல்வதும் அதற்கு மது அழுவதுபோல் இருக்க பிரச்சனை என்று மட்டும் என்று உறுதி செய்தவன் சிறிதும் தாமதிக்காது அவள் அருகில் சென்று இயல்பாய் "ஹாய் மிஸ் மதுவந்தி" என்று அழைத்தான்.

ஜெய்யை பார்த்தும் தன் கண்ணீரை துடைத்து சாதாரணமாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள் மதுவந்தி. "ஹாய் சார் நீங்க எங்க இங்க" என்று இயல்பாய் பேச துவங்கி இருந்தும் அவளையும் மீறி கண்களில் கண்ணீர் உடைப்பெடுக்க திரும்பி நின்று அதை மறைத்தாள். இரண்டு மூன்று முறையே சந்தித்த முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் பிரச்சனைகளை பகிர மனம் இடம் கொடுக்கவில்லை. அதனாலயே தனக்குள்ளே மூடிமறைத்தாள்.

மதுவின் அருகில் இருந்த நபரை பார்த்ததும் உறைந்து நின்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்த தோழியோ மது அவனிடம் இயல்பாக பேசுவதை பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்று இருந்தாள்.

ஜெயிடம் பேசிய மதுவை அருகில் இழுத்து "ஹே... உனக்கு எப்படி இந்த ஹேன்சம தெரியும்" என்று கிசுகிசுத்தாள்.

"ப்ச் கொஞ்சம் சும்மா இருடி" என்று அவளை அடக்கிய மது "என்ன சார் என்ன அப்படி பாக்குறிங்க.. இவ யாருன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா? அன்னைக்கு ரீசார்ஜ் கடையில உங்க பத்தி பேசினது இவதான் பெரு சீமா" என்று தன் தோழியை அறிமுக படுத்தி வைத்தாள் மது.

"ஹோ..." என்று நியாபக படுத்தியவனாக ஹாய் சீமா" என்று அவளுக்கு நட்புடன் கூறி மதுவிடம் திரும்பியவன் தன்னிடம் விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் விரும்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு "மதுவந்தி... சாரி எனக்கு சுத்தி வளச்சி பேச தெரியாது. நான் தூரத்தலையே உங்களை பார்த்துட்டேன் சரி தெரிஞ்ச முகமா இருக்கேன்னு ஒரு ஹாய் சொல்லலாம் னு தான் வந்தேன்".

"உங்ககிட்ட வரும்போது தான் நீங்க ஏதோ ஒரு பிரச்சனையில இருக்கா மாதிரி தெரிஞ்சது. நாம இரண்டு மூனு முறை சந்தித்து பேசி இருக்கோம் நல்ல நட்புன்ற முறையிலதான் என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேக்க வந்தேன்... உங்களுக்கு சொல்ல விரும்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்" என்று அவன் நினைத்ததை கூறினான்.

"இல்ல சார் எனக்கு பிரச்சனைன்னு ஏதும் இல்லை என்று கூற வரும் போதே அவன் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த சீமா "நீ கொஞ்சம் அடங்குறியா" என்று அவளை அடக்கியவள் "ஹலோ ஹன்சம் இவ ரொம்ப பெரிய தியாகின்னு பேரு வர அளவுக்கு வாழுரவ இவளுக்கு இன்னும் எவ்வளவு பட்டாலும் புத்தி வராது" என பொறிந்தவளின் வாயை அடக்க தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற மதுவை அதிசயமாய் பார்த்தான் ஜெய்.

"மது பீளிஸ்....அவங்கள சொல்ல விடுங்க நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... நீங்க சொல்லுங்க சீமா என்ன பிரச்சனை" என்று கேட்டான்.

"கேளுங்க ஹேன்சம் கேளுங்க இவளுக்கு குடும்பம்னு ஒன்னு இருந்தும் இப்போ இவ இருக்க இடம் இல்லாம நடுரோட்ல நின்னு தவிக்கிற?? இப்பவும் இவளுக்கு உண்மை என்னன்னு புரிய மாட்டங்குது... என் கூட இப்போ தங்க வைக்க முடியாத சூழ்நிலை நானே ஒரு ஃபிரெண்ட் கூட ரூம் ஷேர் பண்ணி இருக்கேன். என்னாலயும் ஒன்னும் பண்ண முடியல நான் கேட்ட இடத்துல ரெண்டு நாள் கழிச்சி ஒரு ஃபிளாட் காலி ஆகுதாம் அதுக்கு அப்புறம் நானும் அவளும் அங்க போகலாம்னு இருக்கோம் அது வரையிலும் இவளை எங்க தங்க வைக்கரதுன்னு தெரியல" என்று தோழியை நிலை கூறி வருத்தப்பட

"அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் அவங்களோட சூழ்நிலை அந்த மாதிரி நாம யாரையும் தப்பு சொல்ல முடியாது என்றவள் உங்களால முடிஞ்சா எனக்கு ஒரு ரெண்டு நாள் தங்க ஏதாவது நல்ல இடமா சொல்ல முடியுமா.. அதுக்குள்ள இவ பார்த்து இருக்க ஃபிளாட் கிடைச்சிடும்" என்று உறுதியுடன் கூற

அவள் கூறிய அடுத்த நொடி அவன் நண்பன் ஒருவனுக்கு அலைபேசியில் அழைத்தவன் சிறிது நேர பேச்சிற்கு பின் அவளிடம் வந்து "மது உங்க ஃபிளாட் ரெடி ஆகிடுச்சி நீங்க இரண்டு நாள் இல்ல ரெண்டு வருஷம் கூட அங்க தங்கலாம் அது என்னோட ஃபிரண்டோட ஃபிளாட் தான் இப்போ காலியாதான் இருக்கு சோ இப்போவோ வாங்க போகாலாம்" என்று கூற தயக்கமாக நின்றாள் மதுவந்தி.

"என்ன மது என்ன ஆச்சி" என்று கேள்வியாய் பார்த்தான் ஜெய்.

இரு கைகளை கூப்பியவள் "ரொம்ப ரொம்ப தெங்க்ஸ் சார் கண்ணை காட்டி காட்டுல விட்டா மாதிரி இருந்துச்சி இந்த நிமிஷம் எதுக்கு உயிரோட இருக்கோம்னு தோனுச்சி வாழ தகுதியே இல்லையோன்னு நினைச்சேன்... ரொம்ப தேங்க்ஸ்" என்று கூறவும் அவள் கைகளை ஒரு விரல் கொண்டு இறக்கி விட்டவன் "பொண்ணுங்க எதுக்கும் அழக்கூடாது மது. அழுகை ஆயுதம்னு சொல்வாங்க ஆனா என்னை பொறுத்தவரை பொண்ணுங்களோட ஒவ்வொரு துளி கண்ணீரும் அவங்களை பலவீனமாக்கும்.. எதுக்கும் துணிந்து இருங்க. இது என் நம்பர் எந்த ஹெல்ப் வேனும்னாலும் என்னை கூப்பிடுங்க" என்றவன் நண்பனின் ஃபிளாட்டிறக்கு அழைத்து சென்றான்.

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 27
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN