மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக மனைவியை பைக்கில் அமர்த்தி வண்டியை கிளப்பினான். பைக்கில் ஏறியதில் இருந்து உள்ளுக்குள் முனுமுனுத்தவாறே வந்தவள் பொறுமை இழந்து. "ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்றிங்க?? எங்க போறோம்னு சொல்லாமலேயே கூட்டிட்டு போறிங்க??" என்று சலிப்பாக கேட்டாள்.
"அமைதின்னா என்னான்னே தெரியாதா டி உனக்கு... கொஞ்சம் கூட பொறுமையே இல்ல டி..."என்று வேண்டும் என்றே வம்பிழுப்பது போல் பேசி அவளின் கோபத்தை மேலும் கிளறி விட அதில் அவனின் முதுகை முறைத்தவறே மௌனமாகி சாலையை வெறிக்க ஆரம்பித்து இருந்தாள்.
அந்நேரம் பார்த்து அவனுக்கு போனில் மெசேஜ் டோன் விழ பைக்கை ஓரமாய நிறுத்தி எடுத்து பார்த்தவன் மனைவியை ரீவர்வீயூ மிரரில் பார்க்க அவனை முறைத்து முனுமுனுத்தவாரே வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் செய்கையில் சிரித்தவாறே பைக்கை கிளப்பினான் ராஜீ.
அவன் மேல் இருந்த கோவத்தில் வண்டி சென்ற திசையை கூட கவனிக்காமல் அமர்ந்து இருந்தவள் பைக் நின்ற இடத்தை பார்த்ததும் ஒரு நிமிடம் ஆடியேபோனாள்.
பதற்றத்துடன் அவனின் கையை பிடித்தவள் "என்னங்க இங்க கூட்டிட்டு வந்து இருக்கிங்க? யாரவது பார்த்த என்ன ஆகும்? வேண்டாம்ங்க வாங்க போயிடலாம்" என்றவாறு படபடத்தாள்.
அவன் சற்றும் பதற்றபடாமல் "கூல் கூல் பயப்படாத டா நான் இருக்கேன் ல தைரியமா போ" என்று அவளின் கைகளில் இருந்து தன் கையை உறுவியபடி அவளை செல்ல சொன்னான்.
கலவரத்துடன் அவன் முகத்தினை பார்த்தவள்" ராஜீ உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை இப்போ இருக்க சூழ்நிலையில் நம்மல இங்க பார்த்து பெரிய பிரச்சனை ஆகிடுச்சின்னா நினைக்கவே பயமா இருக்கு ராஜீ... நாம இங்க நிக்க வேண்டாம் வாங்க போகலாம்" என்று திரும்பி நின்றாள்.
மனைவியின் கண்களில் பயத்தை கண்டவன் அவளின் தலையை ஆதுரமாய் வருடியபடி "நான் இருங்கும் போது என் குட்டிமா பயப்படலாமா? ம்?.... என் பிரெண்ட் மூலமா நல்லா விசாரிச்சிட்டு தான் டா உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்.... என் குட்டிமாவோட ஆசைய நிறைவேத்தனும் இல்லையா?..." என்று அவளையே பார்த்தான்.
ஷீலா பயம்படுவதற்கும் காரணங்கள் இருக்கத்தான் செய்தது அவர்கள் இருப்பது அவளின் பெற்றோர் வீட்டு வாசலின் முன் அல்லவா. "ராஜீ சொன்னா கேளுங்க இவங்க எல்லாம் நியாவதிங்க இல்ல நாம எதுக்கு வந்தோம்னு கூட தெரிஞ்சிக்க விருப்பபடமாட்டாங்க. இப்படி ஒரு அவமானம் தேவையா உங்களுக்கு... நான் அவமானப்படலாம் ஆனா என்னால நீங்க" என்று அவள் சொல்லமுடியால் நிறுத்த
சிறுபுன்னகையுடன் மனைவியை பார்த்து 'நீ பயப்படர அளவுக்கு இங்க ஒன்னும் நடக்காது டா... நீ யாரை நினைச்சி பயப்படுறியோ அவரு இங்க இல்ல.... உங்க அப்பாவும் அவரோட அல்ல கைகளும் ஏதோ வேலையா வெளியே போய் இருக்காங்க வர இரண்டு மூனு மணி நேரத்துக்கு மேல ஆகும்... நான் எல்லாவற்றையும் விசாரிச்சிட்டு தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன்... உள்ள ஆன்டியும் பாட்டியும் தான் இருக்காங்க நீ போயி பேசிட்டு வா" என்று அவளை உள்ளே செல்ல வழி காட்டினான்.
சிறு குழந்தையின் மகிழ்ச்சியுடனே அவன் கன்னங்களை பிடித்து ஆட்டியவள் அப்படியே தன் இருகைகளையும் எடுத்து முத்தம் கொடுத்து வீட்டிற்குள் ஓட நியாபகம் வந்தவளாக "அப்பாதான் இல்லையே நீங்களும் என்கூட உள்ள வாங்களேன் ராஜீ" என்று சிறுகுழந்தையின் சாயலில் அவனை உள்ளே அழைத்தாள் ஷீலா.
அவள் செயலில் கீற்றாக புன்னகை உதட்டில் தவழ அவளையே பார்த்திருந்தவன் "இல்ல ஷீலுமா அது சரிவராது டா நீ ரொம்ப பீல் பண்ணவும் தான் உன்னை இங்கே அழைச்சிட்டு வந்தேன். அவரே நம்ம ரெண்டு பேரயும் முறைப்படி அழைக்கும் நேரம் வரும் அப்போ வறேன்". என்றவன் வண்டியை மறைவாக நிறுத்தி "நான் இங்க இருக்கேன் உங்க வீட்டுக்கு யாரவது வர்ரது தெரிஞ்சா உனக்கு சிக்னல் கொடுக்குறேன் வந்துடு" என்று அவளுக்கு ஒன்று 10 முறை விளக்கமாக கூறியவன். ஷீலாவை உள்ளே அனுப்பிவிட்டு பைக்கில் சாய்ந்தவாககில் நின்றுக்கொண்டு மொபைலை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கூறிய காரணங்கள் சரியாக இருப்பினும் இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டிற்குள் வராமல் வெளியே நின்றிருப்பது மனதினை உறுத்த அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி உள்ளே சென்றாள்.
அதுவரையிலும் கணவன் வரவில்லையே என்ற உறுத்தலில் இருந்தவள். வீட்டிற்குள் நுழைந்ததுமே பாட்டியை காண்டதும் ஆனந்தத்தில் அனைத்தையும் மறந்து ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டாள்.
அப்பத்தா... அப்பத்தா என்று வார்த்தைகள் தந்தி அடிக்க அவரை கட்டிக்கொண்டவளை தலையை வருடியவாரே "என் கண்ணு... எப்படி இருக்கடா? எப்படிடா வந்த?" அவருமே பேத்தியை கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.
"நான்...நான் நல்லா இருக்கேன் அப்பத்தா... நீ எப்படி இருக்க நான் இங்க இருந்து போனதும் என்னை மறந்துட்டல? ஒரு முறை கூட என்னை பாக்கனும் தோனலல? உன் மகனுக்கு பயந்து என் கூட பேசாமாலேயே இருந்துட்டல?" என்று கோபம பாதியும் அழகை மீதியுமாய் கேட்டாள் ஷீலா.
"என் செல்ல பேத்திய நான் மறப்பேனா சொல்லு கண்ணு அவன் உன் பேச்சிய எடுத்தாலே வெட்டுறத்துக்கும் குத்தறத்துக்கும் அறுவால தூக்கிட்டு குதிக்கிறானே டா.... உன் அப்பன் கோவம் உனக்கு தெரியாதா கண்ணு" என்று அவளை சமாதபடுத்தியவர் "ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ பெத்துக்கொடு கண்ணாற கண்டுட்டு போய் சேரும் இந்த கட்ட. அப்பறம் என்ன உன் அப்பன் சுண்டைக்காய் பைய அவன் என்ன சொல்றது என் பேரனுக்கோ பேத்திக்கோ இல்லாத உரிமையா அவனுக்கு" என்று கேலியாய் பேசிகொண்டு இருக்க ஷீலாவின் தாயும் சத்தம் கேட்டு வெளியே வர மகளை கண்டனும் முதலில் மகிழ்ச்சியாய் இருந்தவர் அவள் அருகில் சென்றதும் சற்று கோபத்துடன் அவளை அறைந்துவிட அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள் ஷீலா.
பாட்டிக்குமே அதிர்ச்சிதான் இருவரும் ஸ்தம்பித்து நின்றுவிட முதலில் நடப்பிற்க்கு வந்தது பாட்டியே "என்ன பண்ற சாரதா அவள எதுக்கு அடிச்ச" என்று கோபமாக கேட்க
"அத்தா இவ பண்ண வேலைக்கு என் புருஷன் தலை குனிஞ்சி நின்னத பாத்துக்கிட்டு தானே இருந்திங்க இவளுக்கு முனு வருஷமா தெரிஞ்ச காதலன் பெரிசா போகும் போது இவர்கூட 25 வருஷமா வாழறேன் எனக்கு அவர் தான் முக்கியம். போக சொல்லுங்க அவளை" என்று மாமியரை பார்த்தபடி பேசிய ஷுலாவின் தாய் உள்ளே செல்ல அம்மா அம்மா என்று அவளை பின் இருந்து கட்டிக்கொண்டுவள் "சாரி மா... சாரி மா" என்று பிதற்றியபடி இருந்தாள்.
"சாரதா நீ வெளியே அனுப்பனும்னு நினைச்ச அவளை போகவிட்ட என்னைதான் நீ முதல்ல வெளியே அனுப்பனும். எனக்கும் என் புள்ள மேல பாசம் இருக்கு... அதுக்குன்னு அவன் பண்ற எல்லாத்துக்கும் என்னால ஒத்து ஓத முடியாது என் பேத்திய அந்த அக்யோகிய நாயி குடும்பத்துல கொடுக்க முடியாது அவ வாழ்க்கை எனக்கு முக்கியம்.... புள்ள ஆசையா வந்து இருக்கு நீ பாசமா கூப்பிடனாலும் பரவாயில்லை அவ மனசில நெருப்பை அல்லி கொட்டி அனுப்பாதே" என்று மருமகளை அடக்க
"அம்மா பிளிஸ் மா என்னை மன்னிச்சிடும்மா" என்று அன்னையை விடப்பிடியாய் பிடித்திருப்பவளின் கைகளை விளக்கியவர் அவளின் முதத்தினை வருடி "எனக்கு மட்டும் பாசம் இல்லைன்னு நினைச்சியா எவ்வளவு அருமை பெருமையா வளர்த்து இருப்போம் ஒரே ஒரு நிமிஷம் என்னை நினைச்சு பாத்தியாடி" என்று கேட்டவர் அவளின் கண்களை துடைத்து அணைத்துக்கொள்ள "அம்மா என்னை மான்னிச்சிடுமா" என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"அழதடி என் கண்ணு" என்று அவளின் கண்களை துடைத்தவர் "வா இப்படி உக்காருமா... நீ எப்படி இருக்க மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கரார.... உங்க வீட்டுல எல்லாரும் நல்ல பேசுராங்களா" என்று அடிக்கிக்கொண்டே இருந்தவரை "சாரதா புள்ள ரோம்ப நாள் கழிச்சி வந்திருக்கு இப்படி பேசிக்கிட்டே இருக்க போறியா? உன் கையால ஏதாவது என் பேத்திக்கு செய்து கொடு" என்று பாட்டி கூற
"நா வேற வந்த புள்ளைக்கு என்ன வேனும் ஏது வேனுன்னு கேக்காம... இரு உனக்கு பிடிச்ச கேசரி செய்து தறேன்" என்று எழுந்தவரின் கைகளை பற்றி பக்கத்தில் இருத்திக்கொண்டவள் "ம்மா இன்னைக்கு என்ன நாள் தெரியுமா" என்றாள்.
"என்ன நாளுடி நீ போனதுல இருந்து ஒரு நல்ல நாள் பெரிய நாள் எதுவும் இல்லடி எங்களுக்கு" என்று உள் சென்ற குரலில் கூற
"சாரி மா இன்னைக்கு உங்களுக்கு கல்யாண நாள் என்னால தானே மறந்திட்டிங்க" என்றாள் கண்ணீருடன்
"பாரு சாராதா என் பேத்திய அவ அங்க இருந்தாவும் நெனப்பு பூர இங்கதான் வாடி என் கண்ணு" என்று அவளை உச்சி முத்தமிட்டார்.
தியாவை பார்த்தவன் அவள் அடித்த லூட்டியின் காரணமாய் அலுத்து போய் அங்கு இருக்க முடியாமல் பதினோரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டான் சித்து பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் நுழைந்து சோபாவில் அமர கையில் பழைய பொருட்களை ஆராய்ந்த வண்ணம் இருந்த நவனீதன் "என்ன சித்து அதுக்குள்ள வந்துட்ட இந்நேரம் வரமாட்டியே எதாவது உடம்புக்கு முடியலையா?" என்றார் ஒரு தந்தையாக மகன் மீது அக்கரையுடன்.
"ம் கொஞ்சம் தலைவலி... அதான் வந்துட்டேன் ஆமா அம்மா எங்க? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என்றான் அவர் கையில் இருக்கும் பொருட்களை பார்த்தபடி.
"பச் ஒன்னுமில்லைப்பா பொழுது பொகல அதான் பழைய குப்பைய கிளறிக்கிட்டு இருக்கேன்." என்றவர் "நம்ம மாணிக்கம் பொண்ணு தியா உன் ஹோட்டல்லாதான் வந்து இருக்காமே டா இப்போ தான் போன் பண்ணி சொன்னார் மாணிக்கம். போன் வந்தவுடனே அடுபடிங்குள்ள புகுந்தவதான் என்ன பண்றான்னு கேக்க கூட பயமா இருக்கு" என்று கூடுதல் தகவலாக கூறினார்.
"உஃப் இந்த அம்மா மறுபடியும். ஆரம்பிஞ்சகட்டாங்களா?" என்று சோபாவில் பின்னிருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் சித்து. அடுப்பங்கரையை விட்டு வெளியே வந்த ராதா "டேய் சித்து வந்துட்டியா உன்னைதான் நினைச்சிட்டே இருந்தேன் பார்த்தா நீயே வந்துட்ட" என்றவர் புடவையை சரிசெய்தவாறே சரி சரி "கிளம்புவோமா" என்றார்.
"என்னம்மா எங்க கூப்பிடுறா இப்போதானே வந்தேன். காபி கிபி ஏதாவது குடிக்கிரியான்னு கேட்டியா வந்தவுடனே கிளம்மளாமான்னு கேக்குற என்னம்மா நடக்குது இங்க" என்று தியாவின் மேல் இருந்த கோபத்தை ராதாவின் மேல் காட்ட
கணவரை பார்த்தவர் என்னங்க என்று சைகையால் கேட்க அவரும் தலையில் கைவைத்து தலைவலி என்று சமிக்ஞை செய்தார்.
ஓ... என்று சப்தம் எழுப்பாமல் வாயை அசைத்தவர் "என்ன கண்ணா தலைவலிக்குதா காபி போடட்டுமா" என்று வினவ ம் என்றதும் காபியின் மணம் கமகமக்க கொண்டு வந்து கொடுத்தவர்.
"எப்படி இருக்காடா அந்த எலி" என்று பேச்சை தொடங்கினார் ராதா
அறுந்த வாலா இருக்கவளுக்கு எலின்னு பேரா என்று நினைத்தவன் ம் "இருக்கா" என்றான்.
நம்ம ஹோட்டல்லாதான் இருக்காளாமே என்ற அடுத்த கேள்விக்கு
அதை எதுக்குடா ஒத்துகிட்டோம் என்ற அளவுக்கு பீல் பண்ண வைச்சிட்டா என்று நினைத்தவன் "ஆமா" என்றான் ஒற்றை சொல்லில்.
"குழந்தை பொண்ணு துரு துருன்னு இருப்பா கள்ளம் கபடு இல்லாதவ" என்று தனக்கு தானா பேசியபடி கையில் பேகுடன் நின்று கொண்டிருந்தார்.
அவளா கள்ளம் கபடு இல்லாதவ என்ன பேச்சி பேசுறா வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசுறா பொண்ணு மாதிரியா நடந்துகிட்டா யப்பா.... இன்னைக்கு அவன் கூட ஒட்டி உரசி பேசிக்கிட்டு ம் பொண்ணுக்குன்னு ஏதாவது ஒரு லட்சணமாச்சும் இருக்கா... எனக்கு முன்னாடியே நீ ரூம மாத்திட்டியான்னு கேக்குறா அவன்கிட்ட... வர்ர கோவத்துக்கு இழுத்து நாலு அறை விட்டிருக்கனும் அங்கிள் ஆண்டி முகத்துக்காக விட்டேன். என்று மனதிற்குள் புலம்பியவன் அம்மாவின் கையில் இருந்த பேகையே பார்க்க அதை பார்த்த ராதா "என்ன சித்து அப்படி பாக்குற தியாக்கு பிடிக்கும்னு வெஜ் புலாவும் கத்திரிக்காய் பச்சடியும் செய்திருக்கேன்டா... அவகிட்ட கொடுத்துட்டு அப்படிமே அவளயும் பார்த்துட்டு வரளாமேன்னு கிளம்பினேன்" என்ற காரணத்தை கூறினார்.
அது ஒன்னுதான் மகாராணிக்கு குறைச்சல் என்று உள்ளுக்குள் புகைந்தாலும் அவளுக்கு பிடிக்கும் என்று தெரிந்தவுடன் முதல் ஆளாய் வண்டியை நோக்கி சென்றான் சித்து.
இதற்கிடையில் ஷீலாவின் தந்தை வீட்டிற்க்கு வர. தெருமுனையில் நுழைவது தெரிய விசிலடித்து மனைவியை வெறியேற சிக்னல் தர அனைத்தையும் மறந்து அன்னை அப்பத்தாவுடன் அளவளாடியவள் கணவனின் சங்கேத குறிப்பை மறந்தாள். நல்ல வேலையாய் அந்த வீட்டின் பக்கத்தில் ஒரு தெரு போக வண்டியை காம்போண்டை ஒட்டி நிறுத்தியவன் ஒன்றுபுரியாமல் நிற்க அதற்குள் வண்டியும் அந்த பாதிதூரத்தை கடந்துவிட்டது இனி பொருமையாக இருந்தால் விபரிதம் ஆகிவிடும் என்று தெரியவும் பைக்கின் மீது ஏறி கம்போன்ட் சுவரை தாண்டி குதித்தவன் பின்வாசல் வழியாய் வீட்டிற்குள் நுழைந்து மின்னலென அவளை கையினை பற்றி பரபரப்புடன் வெளியேறிவன். "ஆண்டி அங்கிள் வந்துட்டாங்க நாங்க கிளம்புறோம். போன் பண்றேன் எடுங்க" என்று போகிற போக்கிலே கூறியபடி மனைவியுடன் வெளியேறிவிட வீட்டிற்குள் நுழைந்து விட்டார் டேவிட் வெளியே ஆட்கள் இல்லாததால் பின் பக்கத்தில் இருந்து தோட்டத்து வழியாக பதுங்கி வந்தவர்கள் மெயின் கேட்டின் வழியாக வெளியே சென்று விட்டனர்.
"ப்பா.....ஒரு திரில்லர் சினிமா படம் போல இருந்துச்சி டி உங்க அப்பா வந்ததும் அவர்கிட்ட உன்னை மாட்டவிடாம தப்பிக்க வைக்க நினைச்சதும் .... நிஜமா திக்கு திக்கு ன்னு இருந்துச்சிடி... மாட்டி இருந்தா நம்ம கதை அம்பேல் தான்" என்றபடி வண்டியை ஓட்டிவந்தவன் மனைவியின் சத்தம் வெளிவராமல் இருக்க பைக்கை ஒரு பார்க்கின் முன் நிறுத்தினான்.
"இப்போ என்னடி இது..... உம்முன்னு இருக்க உள்ள போகும்போது கூட நல்லாதானே போன" என்று அவளை பார்த்து கேட்க
சுற்றி முற்றி பார்த்தவள்" வெளியிடமா போயிடுச்சி இல்லானா" என்று அவன் கைகளை பிடித்து கண்களில் ஒத்திக் கொண்டாள்.
ஏய் குட்டிமா என்னடி இது இப்படி சரண்டர் ஆகிட்ட.. ஆன்னை ஏதாவது வம்மு பண்ணி என்னோட கிப்ட வாங்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டியே" என்று அவளை வம்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தவன் "இப்போ அடிக்கிர வெய்யிலுக்கு சில்லுன்னு குளுகுளுன்னு ஒரு ஐஸ்கீரிம் பார்லருக்கு போவோமா?" என்று அவளை அழைக்க
"எங்கேயும் போகவேண்டாம் நேர வீட்டுக்கு போவோம் எனக்கு உங்க மடிமேல தலைவைச்சி படுக்கனும்" என்று அவளின் மனநிலையை விளக்க
"சரி எங்கேயும் போக வேண்டாம் வீட்டுக்குதான் போகபோறோம் அதுக்கு முன்னாடி கொஞ்சம் இரு வறேன்" என்று அவளை நிற்க வைத்து சென்றான்.
பின்னாடி யாரோ அழைப்பது போன்று இருக்க திரும்பிபார்த்தாள் அங்கே நின்றிருந்தது அம்புஜ மாமி. அவளை கண்டும் காணதது போல் திரும்பி நிற்றுகொள்ள அரக்க பரக்க வெய்யிலில் வந்தவளாய் "என்னடியம்மா கூப்பிட்டுண்டே இருக்கேன் நோக்கு காது கேக்கலியோ எங்காத்து பையனை ஏமாத்தி கல்யாணம் பண்ணிண்டியாடி" என்று கிண்டலாக கேட்க
"ஆமா மாமி ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் அவரே சும்மா இருக்கும் போது நீங்க ஏன் கால்ல சலங்கைய கட்டி ஆடுறிங்க..." என்றவள் "எனக்கு ஒரு சந்தேகம் ஆமா அவர் உங்க பையனா இல்ல உங்க பிரெண்டோட பையனா அக்கரை உறுகி ஊத்துது... அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கரத விடுங்க" என்று ஆத்திரமாய் பதில் உரைத்தாள்.
அதிர்ச்சியில் வாயில் கைவைத்தபடி "ஊமை ஊரை கேடுக்குமாம் பெருச்சாலி வீட்டை கேடுக்குமாம் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அமைதியா இருந்தவ நீ தானா வாயப்பாரு பெரியவா சின்னவா மதிப்பில்லாம பேசுற" என்று கடுகடுக்கத்தார்.
"பெரியவங்க பெரியவங்கமாதிரி நடக்காம சில்லறத்தனமா கேள்வி கேட்டா இது போலதான் பதில் வரும் அடுத்த வீட்டு பொண்ணபத்தி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு.. அன்னைக்கு கண்ட கண்ட கழிசடைகளெல்லாம் பேசினதுக்கு கேக்கம விட்டது நாளதான் பாருங்க இப்போ நீங்க கூட வந்து கேக்குறிங்க" என்று வெடுக்கென்று பேசிவிட முகம் சிறுத்து இன்னும் தான் நின்றிருந்தாள் மீதம் இருக்கும் மானமும் காற்றோடு போய்விடும் என்று நடையை கட்டினார்.
இவையணைத்தையும் ஐஸ்கீரிம் கப்புகளுடன் நின்று கேட்டுக் கொண்டிருந்த ராஜீவிற்க்கு மனைவியை தூக்கி சுற்ற வேண்டும் போல் இருக்க குட்டிமா ரொம்ப ஹேப்பியா இருக்கேன் டா உடனே வீட்டுக்கு போய் நம்ம ரூம்ல இதை கொண்டாடியே ஆகனும் என்று கண்ணடிக்க...
"ம்....மூஞ்சிய பாரு என்று அழகு காட்டி கொண்டாங்க இப்படி என்று கப்புகளை வாங்கி சுவைத்தவள் வாங்க போலாம்" என்று உடன் நடந்தாள்.
....................................................................
ராதாவை ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன் அவனுக்கென பிரேத்தியேமாக பயன்படுத்தும் அலுவலக அறையில் அவரை அமரவைத்துவிட்டு தியாவை அழைத்து வர சென்றான்.
அவளுடைய பேராசிரியரிடம் அனுமதி வாங்கியவன் அவள் வருகைக்காக காத்திருக்க அதிக நேரம் தாமதிக்க வைக்காமல் சிக்கிரமே அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். வந்தவள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன் பேசவில்லை என்று அவனும் கேட்கவில்லை இவளும் சொல்லவில்லை இருவர் பார்வைகளுமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் பாவனையில் இருந்தது. அவன் முகத்தில் எல்லும் கொள்ளும் வெடித்தது என்றால் இவள் முகத்தில் பச்சைமிளாகாயை கடித்தது போன்ற காரத்தில் இருந்தது.
எங்கே போகிறோம். என்று அவனும் சொல்லவில்லை இவளும் கேட்கவில்லை அவன் பின்னோடு. அவன் மனமறிந்து நடந்தாள் தியா.
அலுவலக அறைமுன் நின்றவன் கதவை திறக்க உள்ளே நுழைந்த தியா வை பார்த்த ராதா "ஏய் எலிகுட்டி வா வா... எப்படி இருக்க" என்று அவளை கட்டிக்கொள்ள.
ம்.... எலிகுட்டி ரொம்ம கோவமா இருக்கேன் என்று இருகைகளாலும் அவர் கன்னத்தை சுரண்டினாள் தியா... "அய்யோ இந்த மூஞ்சி பார்க்க அப்படியே எலிக்குட்டி மாரித்தியே இருக்கு ஹவ் ஸ்வீட்" என்று அவள் தாடையை பிடித்து ஆட்டினார் ராதா.
"முகத்தை அழுவதை போல் வைத்துக் கொண்டவள் இப்படியே ஒரு பத்து வாட்டி ஆட்டினா என் கன்னத்துலிருக்க சதை உங்க கைக்கு வந்திடும் ஆண்டி அப்புறம் பிளஸ்டிக் சர்ஜரி பண்ண வேண்டிய செலவை நீங்க தான் ஏத்துக்க வேண்டி இருக்கும்". என்று கேளியாய் இடுப்பில் கைவைத்து முறைப்பது போல் நின்றாள்.
அவள் நின்ற தோரனை அவனுக்கு சிரிப்பு வர போஸ பாரு சண்டி ராணியாட்டம் எங்க அம்மாவுக்கும் ஈக்குவளா வாயடிக்கிறத பாரு என்று கேளியாய் நினைத்துக்கொண்டான் சித்தார்த்.
"ஏற்கனவே செஞ்சா மாதிரி தானேடி இருக்கு இதுவே பார்க்க சகிக்கல இதுல இன்னொன்னா தாங்கதுடி இந்த ஹார்ட்" என்று ராதா நெஞ்சை பிடித்துக்கொள்ள
"இந்த மூஞ்சிக்கு இந்த மூஞ்சி பெட்டரா லான் இருக்கு போதும் ம்கூம்" என்று அவரை அழகுகாட்டி முகத்தை திருப்பிக்கொள்ள
"சரி சரி நாம சாவகாசம சண்ட போடலாம் இப்படி உட்காரு" என அவளை அமரசொல்லி பேகை திறக்க அதனை வாசம் பிடித்தவள் "ம்... வாசனையே தூக்குது நாம் இங்க உட்காந்து சாப்பிடுறது போர் ஆண்டி வரும்போதே பார்த்தேன் கார்டன் செமையா இருந்தது கிளைமேட் வேற பக்கவா இருக்கு நாம் அங்க இருக்க சேர்ல உட்காந்து சாப்பிடுவோமா"? என்று அழகாய் கண்களை அசைத்து கேட்க ஏனோ சிறுவயது தியா நினைவில் வந்து போனாள்.
"ம்... தாரளமா" என்றவர் அவளை அழைத்துக்கொண்டு கார்டன் ஏரியாவிற்கு வந்தார். தானே தட்டில் சாதத்தை போட்டவர் அவளுக்கு ஸ்பூனில் ஊட்டி விடுவதை பார்த்தவன்
சின்ன பாப்பா சாப்பிட கூட தெரியாது என்னாமா நடிக்கிறா ஒன்னுமே தெரியாத அப்புறாணியாட்டம். என்று நினைக்க மறு மனமோ அவ இன்னும் குழந்தை தானேன்னு நினைச்சி அவளை வேண்டாம்னு சொன்ன இப்போ அவளை நீ என்ன சின்ன குழந்தையான்னு கேக்குற ஒரு மாசத்துல வளந்துட்டாளா உனக்கு என்று உள் மனம் குத்தி காட்ட
சட்டென அமைதியானான். இதுவரை அவன்முகத்தில் வந்து போன பல்வேறு பாவனைகளை வைத்து காலையில் சற்று குழப்பி விட்டது வேலை செய்கிறது என்று நினைத்தவள். சட்டென அவன் முகம் உணர்வுகளற்று தெரிய ஷ்ப்பா என்று ஆனது மறுபடியும் அவனை சிந்திக்க வைக்க மேற்க்கொள்ளும் முயற்சிகளை நினைத்து.
முகத்தை தீவிரமாக வைத்து யோசனையில் இருக்க ராதா சொல்லிய அனைத்தையும காற்றில் மிதக்க விடடவள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரானாள்.
அவள் தோட்டத்தில் இருப்பதை பார்த்து வந்த அஜெய் "என்னடி எருமை இங்க கொட்டிக்கிற" என்று கேட்டபடி சாதரணமாக அருகில் ஆமர்ந்தான்.
இதுவரை உணர்ச்சிகளற்று இருந்த சித்தார்த்தின் முகம் அஜெய் வந்தவுடனே மாற்றங்களை தத்தெடுத்துக்கொண்டது.
இதனை கவனித்தபடி இருக்க "அட மொடா முழுங்கி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போம்ல" என்ற அவன் கிண்டலுக்கு "இப்போ மட்டும் என்னவாம் இந்தா வாங்கிக்கோ பா" என்று அவனுக்கும் ராதா கொடுக்க அதை சுவைத்தவன் "செம டேஸ்ட் ஆண்டி" என்று பாராட்டியபடி சாப்பிட்டவன். "இந்த சாப்பாட்டை நினைச்சிதான் இந்த லொடலோடா டப்பா முகத்துல இவ்வளவு பிரகாசமா என்று கிண்டலடிக்க அவனை ஒரு கொட்டு கொட்டினாள் தியா.
"பாருங்க ஆண்டி பேசிட்டு இருக்கும் போதே அடிக்கிறா" என்று சொல்லிக்கொண்டே அவள் கைகளில் கிள்ளினான். "எருமை எருமை கிள்ளுறான் பாரு பன்னி" என்று அங்கு இருக்கும் வாலியை தூக்கிக்கொண்டு அடிக்க துரத்தினாள்.
"ஏய் ஏய் வேணாம் டி" என்று பின்னால் சென்றவன் சித்துவின் பின்னால் நின்றுக்கொண்டு இந்தபக்கம் அந்தபக்கம் என பார்க்க சித்துவை நடுவில் வைத்து இருவரும் கபடி ஆடியபடி இருந்தனர். இதகல் பார்வையாளராக இருந்த ராதா சிரித்துக்கொண்டே இருக்க சித்துவிற்குத்தான் கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஒரு கட்டத்தில் சித்துவை விடுத்து அவளை ஏமாற்றியவன் அவள் பின்பக்கம் வந்து தியாவை உரசியபடி இருகைகளையும் பற்றிக்கொள்ள சுறுசுறுவென சித்தார்த்திற்கு கோபம் எல்லையை தாண்ட பெறும் சப்தத்துடன் மரபலகை ஒன்று கீழே விழுந்தது. விளையாடிய இருவருமே அப்படியே நின்றுவிட வேலை செய்வதற்காக அடுக்கி வைத்திருந்த மரபலகைகள் சரிந்திருக்க அதை அடுக்கியபடி தியாவை முறைத்தான் சித்து அந்த ஒற்றை பார்வையை வைத்து செய்தது அவனே என்று கண்டுபிடித்து விட்டாள் தியா.......
போக போக இன்னும் மணம் பரப்பும் இந்த மலர் .....
பந்தை தண்ணீரில் எவ்வளவு நேரம் தான் முக்கி வைத்தாலும் அதன் இயல்பை தொலைக்காமல் மேலே எழும்பும் அதுபோல உண்மையான நேசமும் எவ்வளவு மறைத்து வைத்தாலும் ஒரு நாள் தெரியவரும்

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 28
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.