அத்தியாயம் 12

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 12
OMR என்று செல்லமாக அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை. அதில் தான் சிவரஞ்சனியின் கார் சென்று கொண்டு இருந்தது. சாரி சாரி... அர்ஜூனின் கார்.
அர்ஜூனின் காரை சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வந்ததற்கு நிச்சயம் அவன் எதாவது கூறுவான் என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் அவனிடம் கூற அவள் விரும்பவில்லை. அவனின் இரத்த அழுத்தத்தை ஏற்ற எண்ணினாள்.
அது ஒன்றும் ஆடி காரோ பென்ஸ் காரோ இல்லை. சிவப்பு நிற ஹொன்டா சிவிக் மாடல் தான்... ஆனால் அதற்கும் அர்ஜூனுக்கும் உள்ள பிணைப்பு பற்றி அர்ச்சனா அவளிடம் ஒருமுறை கூறி இருக்கிறாள்.
ஒருமுறை விபத்துக்குள்ளான ஒரு சிறுமியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கூட்டி சேர்த்து அவளின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறதாம்... அதை அர்ச்சனா கூறும் போது சிவரஞ்சனிக்கு சிரிப்பு தான் வந்தது. நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தவன் அர்ஜூன். இதில் எங்கே இருந்து கார் உயிரை காப்பாற்றியது... என்று கேட்க, ஓடாமல் திடீரென நின்ற கார் அந்த சிறுமி ஏறியதும் ஓட ஆரம்பித்தது... என்று அவள் கூறினாள்.
அது சாதாரணமாக நடந்த செயலாக கூட இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் உதவிய இந்த மகிழுந்து அர்ஜூனின் சென்டிமென்ட் காராக மாறியது. சக்திக்கும் இது போன்று ஒரு சென்டிமென்ட் வாட்ச் இருக்கிறது... அதை தொட்டால் அடி பின்னிவிடுவான்... அர்ஜூன் அன்று மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டான். தற்போது எடுத்து வந்தது தெரிந்தால்... என நினைத்தவள் "நான் கைமா தான்..." என்று வாய்விட்டு கூறி சிரித்தாள்.
" முட்டாள்... நானா விட்டுட்டு ஓடிட நினைக்கிறேன். நீ நல்லா இருக்கனும்னு தானடா டிவேஸ் கேட்டேன்... எருமை மாடு... உன் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி சுத்திட்டு இருக்கேன். அத கண்டுக்கவே இல்ல... ஆனால் கல்யாணத்துக்கு முன்னாடி நிரஞ்சன் அத்தான அத்தான்னு கூப்பிட்டது தெரிஞ்சிகிட்டு ஆர்டர் போடரது... மக்கு பையனுக்கு பொசசிவ்னஸாசவது வந்துச்சே..." என அர்ஜூனை கழுவி ஊற்றியவள்,
"இந்த சக்தி பன்னி வேற என்ன பண்ணி தொலச்சான்னு தெரியல. எதுக்கு தான் மொபைல்னு ஒன்னு வச்சு இருக்கானோ தெரியல... முழு நேரமும் சைலண்ட்ல போட்டு வச்சு இருக்கிறதுக்கு அத வாங்காமலே இருந்து இருக்கலாம்... ஒருவேளை அர்ச்சனாட்ட ப்ரபோஸ் பன்னிட்டு இருப்பானோ..‌. டேய் என்னுடைய வாழ்க்கையில வந்து கும்மி அடிச்சுட்டு போயிடாதடா... இந்த மானங்கெட்ட மனசுக்கு வேற அர்ஜூன பிடிக்க ஆரம்பிச்சுடுச்சே..." காரை ஓட்டியபடி சிவரஞ்சனி வாய்விட்டே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அவள் காரை பள்ளி வளாகத்தில் நிறுத்தி விட்டு இறங்க அவளை பார்த்த ப்யூன் பணிவாக அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்.
"ஏய் ஷிவ்... வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ திடீன்னு வந்து இருக்க..." கரஸ்பாண்டன்டிற்காக என ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்த சிவரஞ்சனியிடம் அங்கு சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கால்கள் இரண்டையும் எதிரே இருந்த டேபிள் மேல் போட்டபடி அமர்ந்து இருந்த சக்தி அவளிடம் ஆச்சரியமாக கேட்டான்.
"எல்லாம் உன்னாலதான்டா... அர்ஜூன் உன்மேல செம கோபமா இருக்காரு... நிரஞ்சன் அத்தானையும் அவருக்கு பிடிக்கல... சரி அத்தான விடு... நீ என்ன பன்னி தொலச்ச..."
"நான் என்னடி பன்ன போரேன்... நீ நடந்ததை விவரமா சொல்லு..." என்று கேட்க அர்ஜூன் போட்டோவை உடைத்தது, சக்தியை பிடிக்கவில்லை என்றது, நிரஞ்சனை அத்தான் என்று சொல்லக்கூடாது என்று கூறியது என்று எல்லாவற்றையும் ஒப்பித்தவள் இறுதியில் அவர்கள் போட்ட சண்டையை குறிப்பாக மறைத்தாள்.
"மாமா ஸ்கூல்க்கு வந்தாரா... ஒருவேளை அர்ச்சனாட்ட பேசனதை பார்த்துட்டாரோ... ஆனா பேசனா என்ன தப்பு... என் அக்காவோட நாத்தனார் எக்ஸாம் எழுத போராங்கன்னு ஆல் த பெஸ்ட் சொன்னேன்... அவ்ளோ தான்... இதுல கோபப்பட என்ன இருக்கு..." சாமர்த்தியமாக சமாளித்த சக்தியை அவனுடன் ஒன்றாக பிறந்த சிவரஞ்சனி சற்றும் நம்பவில்லை.
"டேய் உன்ன என்ன நான் இன்னைக்கு நேத்தா பாக்கரேன்... உண்மைய சொல்லு... அர்ச்சனாட்ட ப்ரொபோஸ் பன்னிட்டியா...? "
"ஐயோ ஷிவ்... சத்தியமா நான் இல்லடி... அவதான்..." என்றவன் கைகளை தலைக்கு கொடுத்து சாய்ந்தபடி மேலே பார்த்து சிறிய வெட்க புன்னகையுடன் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்க, சிவரஞ்சனி வாயில் கைவைத்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
‌ ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு...
எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு...
அந்த மீனு தானா மாட்டிருக்கு...
யோசிக்காம அப்புடியே அமுக்கு...

‌ மேலே பார்த்தபடி பாடல் வேறு பாடி வைத்த சக்தியை கண்டு சிவரஞ்சனிக்கு கொலை வெறி வர எழுந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்தவள் "ஏன்டா... அவதான் சின்ன பொண்ணு... அவதான் வயசு கோளாறுல ப்ரொபோஸ் பன்னிட்டான்னா அவளுக்கு அட்வைஸ் பன்னி அவ மனசை மாத்திரது இல்ல... இந்த விஷயம் அர்ஜூனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சியாடா..." சிவரஞ்சனி இருக்கும் இடத்தை பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட கத்தியே விட்டாள்.
"அப்போ உனக்கு மாமா தான் முக்கியம். நான் இல்ல... சரி விடு இனி அர்ச்சனா பக்கம் நான் வரமாட்டேன். அவளும் வரமாட்டா... ஏன்னா நான் அவள்ட்ட சொல்லி இருந்தேன். ஸ்டேட் பஸ்ட் வந்தா தான் நான் உன்ன லவ் பன்னுவேன்னு. அது அவளால முடியாது... ஏன்னா கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருக்காம். லங்வேஷ் பேப்பரயே ரொம்ப கஷ்டமா ரெடி பன்னி இருக்காங்களாம். ஒரு இம்பார்டன்ட் கொஸ்டின் கூட வரலையாம். இன்பர்மேஷன் வந்துச்சு. அவளுடைய முகத்தை பாரு..." என்று அருகில் இருந்த டீவியில் ஓடிக்கொண்டு இருந்த சிசிடிவியின் லைவ் வீடியோவை காண்பிக்க, அதில் அர்ச்சனா தேர்வு எழுத தினறிக்கொண்டு இருந்தது நன்றாகவே தெரிந்தது. தலை குனிந்து இருந்ததால் அவளின் முகபாவனைகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை. ஆனால் ஒரு வரி எழுதுவதற்குள் அவள் எடுத்து கொண்ட நேரம் சொல்லாமல் சொல்லியது அவளுக்கு விடை தெரியவில்லை என்று.
"அப்போ நீ இன்னும் ஓகே சொல்லலையா... "என்று கேட்ட சிவரஞ்சனியிடம் மறுப்பாக தலையை ஆட்டியவன் "ஷிவ் உனக்கு வேணும்னா நான் மாமாக்கு பிறகுதான்னு இருக்கலாம். ஆனால் எனக்கு நீ தான் முதல்ல முக்கியம். உன்னுடைய வாழ்க்கை தான் முக்கியம். எனக்கு அர்ச்சனாவ பிடிக்கும் தான். ஆனா உன்ன அதைவிட அதிகமா பிடிக்கும். உனக்கும் மாமாக்கும் எந்த பிரச்சனையும் வராது. நீ கவலை படாம மாமா கூட ஹாப்பியா இரு... சரி நான் லைப்ரரிக்கு போய்ட்டு வரேன்..." என்றவன் வெளியே சென்றுவிட்டான்.
தாயின் கருவில் இருந்து கூடவே இருந்தவள் இப்போது திருமணம் ஆன பிறகு அவனிடம் பேசுவதை கூட குறைத்து கொண்டது அவனின் மனதை மிகவும் பாதித்தது. ராஜரத்தினத்தின் உடல்நிலை, அர்ச்சனாவின் தேர்வு, திடீரென அர்ஜூனிடம் ஏற்பட்ட பிடித்தம் எல்லாம் அவளை பிசியாகவே வைத்திருக்க அவளால் சக்தியிடம் ஒழுங்காக பேசமுடியாமல் போனது. அவன் வீட்டுக்கு வந்தாலாலொழிய அவனை சந்திப்பதும் கிடையாது. அதை அவனிடம் கூறவும் இல்லை.
அதனால் சக்தி, சிவரஞ்சனிக்கு அர்ஜூன் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து கொண்டான். அதுதான் எதார்த்தமும் கூட என்று இவ்வளவு நாள் விட்டு இருந்தவன் இப்போது சிவரஞ்சனி குரலை உயர்த்தி பேசவும் அவனும் பதிலுக்கு பதில் பேசிவிட்டு கிளம்பி அலுவலக அறைக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு புதிதாக கட்டிக்கொண்டு இருக்கும் பள்ளி நூலகத்தை பார்வையிட கிளம்பிவிட்டான்.
சிறிது நேரத்தில் தலைமை ஆசிரியர் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்து சிவரஞ்சனியிடம் பறக்கும் படை வந்து இருப்பதாக பரபரப்பாக தகவல் தெரிவிக்க, அவரின் பரபரப்பு சிவரஞ்சனியையும் தொற்றிக்கொண்டது.
கோவையில் உள்ள அவர்களின் பள்ளியில் சிவரஞ்சனி கணித ஆசிரியராகப் பணியாற்றி இருப்பதாலும் கல்வியியல் படிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் அவர்கள் வீட்டில் இருந்ததாலும் அவர்களை நல்லமுறையில் வரவேற்று அவர்களை பார்வையிட வைத்து அனுப்பி வைத்தாள். அவர்கள் பார்வையிட்டுவிட்டு சென்றபிறகே சிவரஞ்சனிக்கு ஆசுவாசமாக இருந்தது.
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தவள் தேர்வு முடிய போகும் நேரம் அறிந்து வெளியே வந்து அர்ச்சனாவிற்காக காரின் அருகில் காத்து கொண்டு இருக்க, வெளியே வந்த அர்ச்சனாவோ சிவரஞ்சனியை கவனிக்காமல் தன் உடைமைகளை கூட எடுக்காமல் ஏதோ இழந்தாற் போல் அவள்பாட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள்.
அவளை பார்த்த சிவரஞ்சனி அவளின் பெயரை அழைத்து கத்த, அது கேட்காத அர்ச்சனா அவள் பாட்டிற்கு நடக்க, சிவரஞ்சனி காரை கிளப்பிக்கொண்டு அவளிடம் விரைந்து அவள் செல்வதை தடுக்கும் படி அவளின் குறுக்காக காரை நிறுத்தினாள். மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பாமல் தேர்வு பற்றி வளவளத்து கொண்டு இருக்க வாயிலில் கூட்டம் இல்லாததால் சிவரஞ்சனி சீக்கிரம் சென்று அவளை பிடித்து விட்டாள். இல்லை என்றால் அவளுக்கு விபத்து கூட ஏற்பட்டு இருக்கும்.
"அர்ச்சனா... உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா... கொஞ்சம் விட்டு இருந்தா ரோட்டுக்கு போய் இருப்ப... சீக்கிரம் கார்ல ஏறு..." என்று அவளின் கையைபிடித்து அவளை உள்ளே அமர்த்த போன சிவரஞ்சனியின் கையை உதறி விட்ட அர்ச்சனா "அண்ணி... சக்திய நான் லவ் பன்னரேன்... அவன் என்ன லவ் பன்ன மாட்டான்... நான் வேஸ்ட் அண்ணி... எனக்கு வாழவே தகுதி இல்ல..." என்று அவள் புலம்பிக் கொண்டு இருக்க, ஒரு வலிய கரம் சிவரஞ்சனியை தள்ளிவிட்டு விட்டு அர்ச்சனாவின் முடியை கொத்தாக பிடித்து தன் கருப்பு நிற காருடன் இழுத்து சென்றது.
சிவரஞ்சனி சில நொடிகளுக்கு முன்பு அர்ச்சனா நடந்து சாலைக்கு செல்வதை தடுக்க இலகுவாக டிரைவர் அமரும் இடத்திற்கு பக்கத்து இடம் சாலை புறமாக இருக்கும்படி நிறுத்திய கார் அந்த கைக்கு சாதகமாக அமைந்தது.
பக்கத்து சீட்டில் அமர வைக்க சிவரஞ்சனி அர்ச்சனாவின் கையை பிடித்து அழைத்து வரும் போது சாலையை விட்டு விலகி உள்புறமாக வந்த ஒரு கருப்பு நிற காரில் அமர்ந்து இருந்தவன் சிவரஞ்சனியின் தோலை பற்றி தள்ளிவிட்டு விட்டு அர்ச்சனா சுதாரிப்பதற்குள் அவளின் முடியை கொத்தாக பிடித்து காரை கிளப்பிக்கொண்டு செல்ல அர்ச்சனா தன்னால் முடிந்த அளவுக்கு அவன் கையை எடுக்க போரடிக்கொண்டு கத்தியபடி அந்த காருடன் வேகமாக ஓடினாள்.
தள்ளியதால் கீழே விழுந்த சிவரஞ்சனி சுதாரித்து எழுவதற்குள் அர்ச்சனா கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டாள். சிவரஞ்சனி அர்ச்சனா என்று கத்தியபடி அவளின் பின்னால் ஓட, அந்த கரம் காரின் கூடவே ஓடி வந்து கொண்டு இருந்த அர்ச்சனாவை நான்கு சாலை சந்திக்கும் சாலையில் தள்ளிவிட்டுவிட்டு வலப்புறம் சென்றுவிட அர்ச்சனாவிற்கு இடப்புறமாக வந்த ஒரு கார் சிவரஞ்சனியின் கண்ணெதிரே அவளை அடித்து தூக்கியது.
சிவரஞ்சனி அழைக்க அழைக்க அர்ச்சனா சென்றுக்கொண்டே இருந்ததை தூரத்தில் இருந்து கண்ட சக்திக்கு ஏதோ தவறாக பட, அவன் அங்கு ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து இருந்தது. அவர்களை பிடிப்பது இப்பொழுது முக்கியம் இல்லை என்பதை உணர்ந்த சக்தி அங்கு கூடியிருந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து, அர்ச்சனாவை சோதித்து காலில் அடிப்பட்டு இரத்தம் வருவதை உணர்ந்து சிவரஞ்சனியின் முந்தானையை கிழித்து அவளுக்கு கட்டுகட்டி அவளை தூக்கிக்கொண்டு காரிடம் ஓடினான்.
" சக்தி... நான் சாகரதுக்குள்ள எனக்கு ஒரேயொரு முறை ஐ லவ் யூ ச்சுன்னு சொல்லுடா..." கண்ணீருடன் கேட்ட அர்ச்சனாவிற்கு அவனால் மறுக்க முடியவில்லை.
"ஐ லவ் யூ அச்சு... கொஞ்சம் பொருத்துக்கோ... பக்கத்துலதான் ஹாஸ்பிடல் இருக்கு..." அவனும் கண்கள் கலங்க தன் காதலை கூறிவிட்டு அவளை சிவரஞ்சனியின் மடியில் கிடத்திவிட்டு காரை கிளம்பி கொண்டு மருத்துவமனை விரைந்தான். அர்ச்சனாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சக்திக்கு தெரியும். ஆனாலும் அவள் கண்ணீருடன் இவ்வளவு வேதனையிலும் இவ்வாறு கேட்க அவனால் மறுக்க இயலவில்லை.
காயத்தை நேசித்தேனே....
என்ன சொல்ல நானும் இனி...
நான் கனவிலும் வசித்தேனே....
என்னுடைய உலகம் தனி.....
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம்
நினைவுகள் நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்...
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்கண்ணைத் துண்டாக்கி துள்ளும்....
***************
கைப்பேசியை வெட்டியாக நோண்டிக் கொண்டு இருந்த அர்ஜூனுக்கு ட்ரூ காலரில் இருந்து மருத்துவ மனையில் இருந்து அழைப்பு வருவதற்கான அறிவிப்பும், அதை தொடர்ந்து தொலைபேசி அழைப்பும் வர, ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்து உடனே எடுத்தான். அழைப்பு எடுக்கப்பட்ட பின்பும் அவன் ஹலோ கூறிய பின்பும் ஏன் பெயரை கூறிய பின்பும் கூட யாரும் போசாமல் இருக்க திரும்ப திரும்ப அவன் ஹலோ என்றே கூறிக்கொண்டு இருந்தான்.
மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த தொலைபேசி மூலமாக வரவழைத்து கொண்ட தைரியத்துடன் சிவரஞ்சனி அர்ஜூனிற்கு அழைக்க, அர்ஜூனின் குரல் கேட்ட பிறகு அவள் சற்று முன் வரவழைத்து கொண்ட தைரியம் எல்லாம் காற்றில் பறந்து போனது மட்டுமல்லாமல் வருத்தமும் உடன் சேர அவனுக்கு பதில் அளிக்காமல் வாயை பொத்திக்கொண்டு அழுதுகொண்டு இருக்க, அருகில் இருந்த வரவேற்பாளினி சிவரஞ்சனியின் நிலைமையை புரிந்து கொண்டு அவளிடம் இருந்து ரிசீவரை வாங்கி அர்ஜூனிடம் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறினாள்.
அவன் என்ன ஆயிற்று என்று கேட்டவனிடம் தகவலை கூறாமல் வெறுமனே அவனை வரும்படி கூற, பதறிய அர்ஜூன் பெற்றோரிடம் கூறாமல் அடித்து பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மனமெல்லாம் சிவரஞ்சனியை பற்றிய நினைவுகள் மட்டுமே இருந்தது. அவள் வெளியே சென்றதில் இருந்து ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டிருந்ததால் நேரம் சென்றதையே அவன் கவனிக்கவில்லை. தற்போது வெளியே சென்ற சிவரஞ்சனிக்கு தான் ஏதோ நடந்துவிட்டது என்று எண்ணி காரின் சாவியை தேட அவன் எப்போதும் வைக்கும் இடத்தில் அது இல்லை. சிவரஞ்சனி அவனின் சென்டிமென்ட் காரில் தான் சென்று இருக்க வேண்டும் என்று நினைத்தவன் மனதில் ஒரு சிறிய நிம்மதி.
பைக்கில் செல்லும் போதே சக்தியை அழைத்து பார்த்தான். அவன் கைப்பேசியை எடுக்காமல் போக விரைந்து சென்றவன் அங்கே சிவரஞ்சனி நின்றிருப்பதை பார்த்த பிறகே நிம்மதி அடைந்தான். சென்ற உயிர் மீண்டதை போன்ற நிம்மதி அவனுள் படர்வதை உணர்ந்தவனுக்கு நன்றாக புரிந்தது சிவரஞ்சனி அவன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய இடத்தில் இருக்கிறாள் என்பது.
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்...
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்...
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்....
நான் தரமாட்டேன்... நான் தரமாட்டேன்...
-இப்பகுதி உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் உங்கள் கருத்துகளை அளிக்கவும்... நன்றி...
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN