மலேஷியா
மதுவந்தியின் மன மாற்றத்திற்காவும் அவளின் தனிமையை போக்குவதற்காகவும் அவளை ஷாப்பிங் என்று பெயர் சொல்லி வெளியே அழைந்து வந்தவன் அவளின் மனமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தான்.
அவள் சோர்ந்து தனக்குள்ளே ஒடுங்கும் சமயம் ஏதாவது கதைகளை பேசி அவளின் நிலையை மறக்க செய்து இருந்தான்.. மதிய உணவை முடித்தவர்கள் மீண்டும் காரில் பயணம் செய்தனர்.
கார் நிதானமான வேகத்துடன் சென்றது கடற்கரை ஓரம் நிறுத்திய ஜெயந்த் "மதுவந்தி.. இஃப் யூ டோன்ட் மைன்ட், கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாமா ?. என்று அவளிடம் கேட்க.
"ம்.." என்றவள் அவனுடன் சேர்ந்து நடக்க துவங்கி இருந்தாள். அலையின் இறைச்சல் அதிகம் இல்லை அமைதியாய் காலை தொட்டு விளையாடி கொண்டு இருந்தது கடல் அலைகள் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டி இருந்தவன் அலைகளில் பார்வையை பதித்து இருந்தான்.
"ரொம்ப தெங்கஸ் ஜெய்" என்றாள் அமைதியான குரலில்..
அவளின் முகத்தினை பார்த்தவன் யோசனையாய் "வேண்டாம்" என்று தலையை ஆட்டினான்.
சிறிது நேர அமைத்திக்கு பின் "நான் ஒரு அனாதை ஜெய். எனக்கு சொந்தங்கள் இருந்தும் அனாதை" என்றாள் மன வருத்தத்துடன்.
இது அவனுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை மாறாய் எவ்வளவு வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறாள் என்ற எண்ணத்தையே கொடுத்தது.
"சின்ன வயசுல எங்க குடும்பம் நல்ல சந்தோஷமா இருந்தது ஜெய். நான் அம்மா அப்பா எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்லை ஒரு நாள் அப்பாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சி ஹாஸ்பிடல்ல சேர்த்து பார்த்தப்போ தான் அவருக்கு பிரைன் ட்யூமர்னு தெரியவந்துச்சி ஜெய்... அம்மா ரொம்ப ஒடஞ்சி போயிட்டாங்க அப்போ எனக்கு 8 வயசு இருக்கும். ஏன் அழுகறாங்க எதுக்கு அழறாங்கன்னு தெரியல ஆனா ஒன்னே ஒன்னே மட்டும் தெரிஞ்சிது அப்பாவுக்கு ஏதோ ஆகிடுச்சின்னு மட்டும் தெரிஞ்சது... இருக்க பணம் நகைன்னு ஒன்னுவிடாம எல்லாத்தையும் வைச்சி அப்பாவுக்கு வைத்தியம் பார்த்தாங்க அம்மா... அப்பாவோட பிரைன் ட்யூமர் கடைசி கட்டத்துல இருந்ததால அவரை காப்பாத்த முடியாம போயிடுச்சி இதையே நினைச்சி நினைச்சி எங்க அம்மாவும் கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க... அந்த சின்ன வயசுல என்ன செய்றதுன்னு தவிச்சிட்டு இருந்த நேரத்துலதான் பெரியம்மா ஆதவு கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.... எனக்கு கடவுளா தெரிஞ்சாங்க பாசமா இருந்தாங்க ஆனா பெரியப்பாவிற்கு என்னை அழைச்சிட்டு வந்ததுல சுத்தமா விருப்பம் இல்லை வளர்ந்த பிறகும் இதே நிலைதான்... இதில் எனக்கு வருந்தமோ இல்லை கஷ்டமோ இருந்தது இல்லை.. அதுவே பழகிடுச்சி பிடிக்கலனாலும் வெளியே துரத்தாம வீட்டுல வைச்சிருந்தாங்க பெரியப்பா அதுக்காவே அவர் மேல நான் பாசமா தான் இருந்தேன் ஜெய்".
"அப்புறம் எப்படி நீங்க வெளியே வந்திங்க ஐ மீன் பிரச்சனை எப்படி வந்தது" என்றான் கொஞ்சம் பிசிறு தட்டிய குரலில் அவளது கண்ணீரால் வந்த மாற்றமோ அவனே அறியான்.
"அதுக்கும் வேட்டு வைக்க ஒருத்தன் வந்தான் ஜெய்.... நான் வேலை பார்த்த இடத்தில் சேம்னு ஒருத்தன் இருந்தான் உலகத்துல இருக்க எல்லா கெட்டபழக்கத்துக்கும் சொந்தகாரன் அவன்.
உங்கள பார்த்த அன்னைக்கு தான் சேம் சப்வேல என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான். யாரோ கடவுள் மாதிரி அந்த நேரத்துல அங்க வந்தாங்க அதை வைச்சி அவன்கிட்ட இருந்து தப்பிச்சி வீட்டுக்கு போனேன்"... என்றதும் ஜெயந்திற்கு அன்றைக்கு சப்வேயில் நடந்தது நினைவிற்ககு வந்தது.
"வீட்டுக்கு போன பிறகுதான் தெரிஞ்சது சேம் வீட்டில் என்னை பற்றி தப்பான செய்தியை சொல்லி சில போட்டோ கொடுத்து பிரளயத்தையே உண்டு பண்ணிருக்கிறது... எவ்வளவு கதறியும் பெரியப்பா நம்பல அம்மா சொல்லியும் கேட்கல வீட்டைவிட்டு அப்பவே வெளியே போக சொல்லிட்டாங்க கெஞ்சி கதறி 2 நாள் டைம் கேட்டேன் அதுக்கு பெரியப்பா உன்னை பார்த்து என் பொண்ணுங்களும் தப்பா போயிடும் முதல்ல வெளியே போ அப்படின்னு சொல்லி வெளியே போக வைசிட்டாரு ஜெய் என்னை பார்த்தா தப்பான பொண்ணா தெரியுதா நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல ஜெய்" என்று உடைந்து அழது விட.
"மது பீளிஸ் அழாதிங்க கண்ணை துடைங்க" என்றவன் "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுக்க மாட்டிங்களே உங்களை வளர்த்தாங்கன்னு சொல்றிங்களே அவங்களுக்கு உங்களோட குணம் உங்க நடவடிக்கை பத்தி தெரியாதா உங்களை முழுசா வெளியே அனுப்பனும்னு இதை ஒரு காரணமா பயன்படுத்தி இருக்காங்க மதுவந்தி..
இப்போ எவ்வளவோ அட்வான்ஸ் ஆகிடுச்சி உலகம் டிஜிட்டால மாறிடிச்சி எவ்வளவோ போலியா தயாரிக்க அரம்பிச்சகட்டாங்க ஒரு போட்டோவ தயாரிக்க முடியாத சொல்லுங்க... நீங்க இதுவரை அங்க இருந்தது தான் பெரிய விஷயம்... மனச விட்டுடாதிங்க இனிதான் நீங்க தைரியமாவே இருக்கனும்... உங்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் வேனும்... ஒரு பொண்ணு நினைச்சா எதுவும் செய்யலாம் உங்களை பலமா வைச்சிக்கோங்க நீங்க படிச்ச படிப்பு உங்களுக்கு துணையா இருக்கு" என்று தைரியம் கூறினான்.
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மது ?. அன்னைக்கு முதல் நாள் சந்திச்ச நாம இரண்டாம் முறையும் சந்திக்க வேண்டி சந்தர்பத்துல இருந்து இருக்கோம்... சப்வே ல இருந்தது உங்களுக்கு இரெண்டு பேர் குரல் கேட்டது ல மது அன்னைக்கு சவுண்டா பேசிட்டு வந்தது நானும் என் பிரெண்டும் தான்".... என்று கூறியவன் "உங்களுக்கு நாங்க இருக்கோம் மது". என்று உரைக்க கண்கள் கலங்க அவனை பராத்தாள்.
"அன்னைக்கு நீங்க மட்டும் இல்லனா" என்று கூற வந்தவளின் வார்த்தையை தடைசெய்தவன் "நான் இல்லனா என்ன மது கடவுள் இருக்கார் நிச்சயம் கைவிட்டு இருக்க மாட்டார்". என்றவன் "நீங்க முதல்ல கண்ணை துடைங்க உங்களை வேண்டாம் சொன்னவங்கள நீங்க ஏன் இதுவரை நினைச்சிட்டு அவங்களுங்காக உங்களை நீங்களே கஷ்ட்டபடுத்திங்கிறிங்க... இனி உங்களுக்காக வாழுங்க. உங்களுக்குன்னு ஒரு லைஃப் இருங்கு அதை பாருங்க" என்று அவளை தேற்றினான்.
சிறிது நேர உரையாடலுக்கு பிறகு "இப்போ ஏதோ பாரம் இறக்கி வைச்சா போல ஃபீரியா இருக்கு ஜெய் மனசை அழுதிட்டு இருந்தது உங்ககிட்ட சொன்னபிறகு ஆறுதலா இருக்கு ஏன் சொன்னேன் எதுக்கு சொன்னேன்னு கேட்டா தெரியல உங்ககிட்ட என் மனசுல இருக்கரது சொல்லனும்னு தோனிச்சி சொல்லிட்டேன் தேங்கஸ்" என்று கூற
"இனி ஒரு கண்டிஷன் மது இதுக்கு நீங்க சரின்னு சொன்னாதான் இனி நான் உங்க கிட்ட பேசுவேன்" என்றவன் "என்ன" என்பதாய் அவன் முகம் பார்க்க "தேங்கஸ் சாரி இதை நீங்க ரொம்ப யூஸ் பண்றிங்க இனிமேட்டு சொல்லமாட்டேன் சொல்லுங்க அப்போதான் உங்ககிட்ட பேசுவேன்" என்று பேரம் பேசினான்
"ம்" என்று கூறியவள் "டைம் ஆச்சு எத்தனை மணிக்கு ஃபிளைட் ?." என்று கேட்க
"6 மணி ஃபிளைட் மது டைம் இருக்கு ரிலக்ஸா இருங்க ஃப்ரியா பேசுங்க உங்களுக்கு எப்பவும் நான் இருக்கேன்." என்று கூறியவன் "வாங்க போகலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட் சென்றான். அவர்களை அதிக நேரம் தாமதிக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் விமானமும் வந்துவிட அவர்ளுக்கான வழிமுறைகளை முடித்து வெளியே வந்தவர்களை மதுவும் ஜெயந்தும் ஒருசேர சென்று வரவேற்றனர்.
புதிதாக ஒரு பெண்ணை தாயிடத்தில் அறிமுகபடுத்த போகிறோம் என்ற பதட்டமோ இல்லை அவர் என்ன நினைத்துக்கொள்வார் என்ற பயமோ இன்றி வெகு இயல்பாக மதுவந்தியை அழைத்து செல்ல அவனின் பெற்றோர்களுக்காக வாங்கிய மலர்கொத்துக்களை பரிசாய் அவர்களுக்கு கொடுத்தவள் "உங்களை மலேஷியாவிற்கு வரவேற்கிறேன் அங்கிள் ஆண்டி" என்று இன்முகமாக வரவேற்க அவளிடம் இருந்து இன்முகமாகவே பெற்றுக்கொண்ட தம்பதியினர் மகனின் முகத்தை ஆராய்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"வாங்க அம்மா வாங்க அப்பா" என்று வந்தவர்களை வரவேற்றவன் பெற்றவர்களின் ஆராய்ச்சி பார்வையில் யாரும் அறியாமல் சிரித்து கொண்டே "அம்மா இவங்க பேரு மது இவங்க என் ஃபிரெண்ட் உங்களுக்காக தான் வந்து இருக்காங்க" என்றவன் "மது இவங்க என் ஸீவிட் அம்மா அப்பா" என்று மதுவிற்கு அறிமுகபடுத்தி வைத்தான் ஜெயந்த்.
ஆதி அவளிடம் பாசத்துடன் பேசவும் எந்த வித சங்கடமும் இன்றி நன்றாகவே பேசி நெருங்கி இருந்தாள் மதுவை அவளின் அப்பார்ட்மென்டில் சீமா வந்ததை அறிந்துகொண்டு அவளை இறக்கி விட்டுவிட்டு தங்களது ஃபிளாட்டிற்கு வந்து சேரந்தனர் மூவரும்.
ஊட்டி
'காதல் வைத்து காதல் வைத்து காந்திருந்தேன். காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.'
என்று பாடல் வரிகள் டிவியில் ஒலித்துக்கொண்டு இருக்க அதன் வரிகளின் ஆழத்தில் ழுழ்கி இருந்தாள் தியா
"தியா குட்டி தியா மா" என்று கையில் பழச்சாற்றுடன் அறையில் நுழைந்தார்.
கண்களை மூடி பாடலில் லயித்து இருந்தவள் மெத்தையில் இருந்து எழுந்து அமர முயன்றாள். அவளுக்கு உதவிய "ராதா என்னடா ரொம்ப படுத்தி எடுக்குதா இந்த வயித்துவலி... என் தங்கம் ஒரே நாள்ல வாடி போயிட்டாலே"... என்று அவளை கன்னம் தொட்டு கொஞ்சினார்.
ராதா இவ்வாறு கூறவும்.அன்னையின் ஞாபகம் வர ராதாவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் தியா
"என்னடாம்மா பசிக்குதா ?." என்று கேட்டதும் 'இல்லை' என்று தலை ஆட்டியவள் "உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா அத்தை ?" என்று கேட்க.
"இதுக்கு நீ கேட்கனுமா தியாகுட்டி படுத்துகோ மா அதுக்குமுன்ன இந்த ஜீச குடிச்சிட்டு படுக்கனும்" என்றதும் அதை வாங்கி ஒரே மடங்கில் குடித்தவள் அவரின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள்.
அவளின் தலையை பாசமாக தடவியபடி இருந்தவர் "என்னடா மஞ்சு ஞாபகம் வந்துடுச்சா" என்றதும் அவளின் மனதினை அறிந்தது கொண்டதற்க்காக அவரின் முகம் பார்க்க.
"தெரியும் டா எலிக்குட்டி இந்த செல்லத்த இந்த வயசுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேனே. எந்த நிமிஷம் உன் மனசு எப்படி மாறும்னு எனக்கு தெரியாதா ?." என்று அவளிடம் சிரிந்தவர் "இப்போ கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு உனக்கு வலி குறைய இன்ஜக்க்ஷன் பண்ணி இருக்காங்க ஈவினிங்குள்ள வலி சரியாகிடும் அங்கிள் கூட தியா குட்டிக்கு என்ன ஆகிடுச்சோன்னு பயந்துட்டாரு" "ஆண்டி ஆங்கிளுக்கும் விஷயம் சொல்லிட்டிங்களா ?." என்று சங்கடமாய் முகத்தை வைத்துக்கொள்ள அதே நேரம் கதவை திறந்து தியா எப்படி இருக்கா என்று பார்க்க வந்தான்.சித்து
"இங்க பாரு டி எலிகுட்டி அங்கிளுக்கு தெரிஞ்சா என்ன இது எல்லா ஆம்பளைங்களுக்கும் தெரிஞ்ச விஷயம் தான்... ஒரு பொண்ணு தாயா மகளா மனைவியா அக்காவா தங்கையா எல்லாமுமா இருக்கா ஒரு மகனுக்கோ தகப்பனுக்கோ கணவனுக்கோ அண்ணன் தம்பிக்கோ அந்த நாள்ல அவ படுற கஷ்டம் தெரியனும் அவளோட வேலைகளை பகிரந்துக்கனும் முடிஞ்ச அளவு அவள பாத்துக்கனும் இப்படியான நேரங்கள்ல உதவனும் அவன் தான் உண்மையான ஆண்" என்று அவர் கூற
திறந்த கதவினை அப்படியே சாற்றியபடி வெளியேறி விட்டான் சித்து சிறிது நேரம் கழித்து ராதா அறையில் இருந்து வெளியே வருவது தெரிந்ததும் அவளை காண வேண்டும் என்று தோன்ற அறைகதவை திறந்து உள்ளே நுழைந்தவன் ஆழ்ந்த உரக்கத்தில் இருந்த தியா தான் தெரிந்தாள் சிறு பெண்ணாய் அவனிடம் வம்பு இழுக்கும் தியா சண்டை போடும் தியா அம்மாவிடம் திட்டு வாங்க வைக்கும் தியா சேட்டைகள் செய்யும் தியா என் அவன் கண் முன்னே வந்து போய்கொண்டு இருந்தாள். இறுதியாய் அவனிடம் அழுதபடி பேசிய தியாவும் வந்தாள். உடல் முழுதும்.போர்வையால் மூடி இருக்க அன்னையின் வார்த்தைகள் காதில் ஒலித்து அவள் அருகே அமர்ந்தவன் அவள் கால்களை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தான். கால் வலியிலும் அவதிபட்டு கொண்டு இருந்தவள் இப்போது சுகமாய் உணர்ந்தாள். அவளுக்கு செய்யும் செயலில் எந்த வக்கிரமான எண்ணங்களும் இல்லை சக மனுஷியயாய் பாவித்தான். "தியா" என்று குரல் கொடுத்தபடி.உள்ளே வர வாயில் கை வைத்து "உஷ்" என்று சத்தம் கொடுத்து ராதாவின் பேச்சை நிறுத்தியவன் செய்கின்ற வேலையை நிறுத்தவில்லை அவரும் விகல்பமாய் நினைக்கவில்லை அவரை வெளியே அழைத்து வந்தவன் "அம்மா நைட்லாம் வலில தூங்கவே இல்ல போல கண்ணெல்லாம் ரெட்டா இருந்துச்சி இப்போ எதுக்கு அவசரமா வந்து எழுப்புற ?." என்றான்.
"சரிதான்டா தெரியாம செஞ்சிட்டேன்". என்று சிரித்தவர் "உன்னை ஒட ஒட வெரட்டினாலும் நீ அவகிட்டதான்டா சரண்டர் ஆகுர" என்று கிண்டலடித்தவரை முறைத்தவன் "நீங்கதானே இப்போ அவளுக்கு ரெஸ்ட் வேணும்னு சொன்னிங்க அதுக்கு சொன்னா கலாய்கிறிங்க என் நேரம்" என்றவன் "இப்போ என்னமா வேணும் ?." என்றான்.
"தியாகுட்டி சாப்பிட என்ன வேணும்னு கேக்கதான்" என்றதும்.
"அவ இந்த டைம்ல எந்த மாதிரி சாப்பிடனும் மஞ்சு ஆண்டிக்கு போன் பண்ணுங்க அவங்க சொல்லுவாங்க இவளுக்கு என்ன தெரியும்" என்று கூற
"டேய் அது எனக்கே தெரியும் அவளுக்கு என்ன வேணும்னு கேக்கதான்டா போனேன்" என்றதும்
"ம் விளங்கடும்"
"அவ என்ன சாப்பிடனுமன்னு சொல்லுங்க நான் செய்யுறேன். அதை செய்றேன் இதை செய்றேன்னு கோதாவில் குதிக்காதிங்க" என்று அன்னையை விலக்கியபடி இவனே சமயலறைக்குள் புகுந்து அவளுக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தான்.
மதிய சாப்பிடுவதற்காக எழுப்பி அவளுக்கு உணவினை கொடுக்க அதன் சுவையில் ஈர்க்க அனைத்தையும் சாப்பிட்டாள்.
"ஆண்டி செம டேடஸ்டா இருக்கு சூப்பர்" என்று அவயின் கன்னத்தில் முத்தம் வைக்க.
"சீ... சீ.. போடி அந்தபக்கம்" என்று வெக்கபடுவது போல் அவளை விளக்கிய ராதா "எலிக்குட்டி இன்னைக்கு ஃபுல் பிப்பரேஷன் சித்துதான் அவன் தான் உனக்காக பாத்து பாத்து ஜீஸ் முதல்கொண்டு எல்லாம் பண்ணான்." என்று கூற ஆகாயத்தில் பறந்தாள் தியா.
கண்ட கனவு பலித்தது போல் ஒரு ஆனந்தம் அவனே நேரில் நின்று அவளை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.
"தியா மா வலி எப்படி டா இருக்கு ?." என்றதும் "இப்போ இல்ல ஆண்டி நல்லா இருக்கேன் உள்ள இருக்கறது தான் ஒரு மாதிரி இருக்கு கொஞ்சம் வெளியே போகலாம்" என்றதும் "இரு அங்கள்கிட்ட சொல்லிட்டு வர்றேன்" என்று கூறியவர் நவநீநனிடம் கூறிவிட்டு தியாவை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பார்க் வரை சென்றனர்.
"ஆண்டி இந்த பிளேஸ் நல்லா இருக்குல" என்றதும்
"ம் ஆமாடா" என்றவர் "எனக்கு எப்போ எல்லாம் மனசுல கஷ்டமா இருக்கோ அப்போலாம் இங்க வந்துடுவேன் இப்போ அடிக்கடி வரேன்" என்றார் ஒரு வெறுமையுடன்
"ஆண்டி நீங்க.. !." என்றாள் அவரின்.முகம் நோக்கி.
"நாங்கதான் ஒரு சொந்தம் இல்லாம இருந்துட்டோம் எங்களுக்கு அடுத்து என் பிள்ளைக்காவது சில சொந்தங்கள் கிடைக்கனும்னு ஆசைபடுறேன் தியா
"அது நடக்குமான்னு தெரியல நான் நல்லா இருப்பதற்குள்ள எங்க சொந்தத்துல ஒரு பொண்ண அவனுக்கு பேசி முடிச்சிட்டா என் மனபாரமெல்லாம் இறங்கிடும்... அவரும் நானும் சொந்தங்கள் இல்லாத அனாதையா சாகுறதல எனக்கு விருப்பம் இல்லடா... இந்த ஒரு கோரிக்கையாவது ஏத்துப்பாரான்னு தெரியல அந்த கடவுளு" என்று ஆகாயத்தை பார்க்க.
ஒன்றும் பேசாமல் அமைதியானாள் தியா அவளது மனதில் மட்டும் ஒரு பூகம்பமே உருவாகி இருக்க இதயம் சுக்குநூறாய் சிதறியது போல் இருந்தது. நெஞ்சில் வாள் கொண்டு அறுப்பது போன்ற வலி வாய் அடைத்து மறுவார்த்தை வெளிவர மறுத்தது.... நடை பயின்று வந்த பிறகு அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை நவநீதன் கூட இரண்டு முன்று முறை போய் அவளை அழைத்து விட்டு வந்தார். அனைவருக்கும் விதவிதமாய் பேசி சமாளித்து அனுப்பியவள் காலை முதல் வேலையாய் தயாராகி அனைவரிடமும் கூறிக்கொண்டு ஹோட்டலுக்கு செல்ல தயாராகி விட்டாள்.
"அம்மா வண்டி சொல்லவா ?." என்ற அவன் கேள்விக்கு "ஒன்னும் வேணாம் டா உன் வண்டியில கூட்டிட்டு போயிடு" என்று கூற அவளை வலுகட்டயமாக அமர வைத்து அழைத்து சென்றான்.
வண்டியின் சைட் மிரரில் அவளை பார்த்தவன் "விது" என்றான் அவளின் குரல் வராமல் சிந்தனையில் இருக்க "விது.... உன்னைதான் விது" என்று அழைக்க என்னவென்று பார்க்க "இப்போ பெய்ன் எப்படி இருக்கு ?." என்றான்.
அவனின் நீளமான கேள்விக்கு ஒற்றை வரியில் "ம்" என்ற பதிலோடு மீண்டும் யோசனையில் இருக்க ஹோட்டலில் வண்டியை நிறுத்த வண்டியில் இருந்து இறங்கியவள் அவன் முகம் பார்க்காமல் அவள் அறையை நோக்கி ஓடினாள்.
அவள் அறையை அடைந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை உடைபெடுக்க கண்ணீர் ஊற்றாய் பெருகியது.
கோவை
கண்களை மூடி கட்டிலில் துயில் கொண்டு இருந்தவனின் கைகள் மனைவியின் அணைப்பை வேண்டி மெத்தையில் துழவ அவள் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லமால் இருக்க கண்களை திறந்து எழுந்து அமர்ந்தான்.
"எங்க போனா ?." என்று வாய்விட்டு புலம்பியவன் குளியலறையில் பார்த்தான் அங்கேயும் காணவில்லை 'இவ்வளவு சீக்கிரமே எழுந்துக்கறவ இல்லையே' என்று நினைக்க.. நேற்று சாருகேஷ் கூறியது கேஷவின் கண்முன்னே நிழலாடியது நெஞ்சம் திக் திக் என்று இருக்க "பார்கவி.... பார்கவி....." என்று உரைக்க கத்தியபடி மாடி அறையில் இருந்து விருவிருவென்று படிகளை இரண்டு இரண்டு எட்டுக்களாக தாவி இறங்கியவன் சமயலறையில் சத்தம் கேட்க படியில் இருந்தவன் இருந்த இடத்தில் இருந்தே அவளை எட்டி பார்த்தவனின் மூச்சி அப்போது தான் சீரானது ஆசுவாசமாய் மூச்சை வெளியேற்றியவன் "பாருமா.. ஒரு காபி" என்று சத்தமாக கேட்டவன் அறைக்கு சென்றான்.
சமயலறையில் இருந்து எட்டி குரல் வந்த திசையை கண்டவள் 'பாருமாவா.. அது யாரு டேய் என்னடா என் பேரே தெரியாத ஒரு நாள் கவி ஒரு நாள் ஆட்டோபாம் ஒரு நாள் ராட்சசி ஒரு நாள் பார்கவி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பேரு இன்னைக்கு உனக்கான நாள் சோ இன்னைக்கு நான் எதுவும் சொல்லமாட்டேன் நாளைக்கு இருக்குடா உனக்கு மண்ட கசயம் நானும் போனா போகுதே இவ்வளவு நாள் படுத்திட்டோம் இனிமே கொஞ்சம் குடும்ப இஸ்திரிய இருக்கலாம்னு பாத்தா
விடமாட்டான் போல இருக்கே" என்று முனுமுனுத்தவள் அவனுக்கான டிரேவை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள்
அறையில் உள்ளே நுழைந்து பார்க்க அறையே காலியாக இருந்தது. அறை முழுக்க பார்வையால் துழவியவள் திரும்பி பார்க்க மறந்துவிட்டாள்.
"ஹலோ மேடம்" என்று கழத்து அருகில் முகம் புதைத்து பின் இருந்து அணைத்தவன் "காலையிலேயே என்னை தனியா விட்டு எங்கடி போயிட்ட ?." என்று அவள் தலையில் முட்டினான்.
அவன் அணைத்தும் சற்று திடுங்கிட்டவள் அவன் தான் என்று தெரிந்ததும் "என்ன சார் காலையிலையே ரொமேன்ஸா" என்று அவள் தலையாலையே அவனை முட்ட.
"ஆ... வலிக்குதுடி" என்று அவளை விடுத்து தலையை தேய்த்தவன் "காலையிலையே ரொமேன்ஸ் பண்ணாதான் என்ன ?. என்று அவளை சீண்ட
"ம்.. என்கிட்ட ரொமேன்ஸ் பண்ணிட்டு பாருன்னு யாருக்கிட்டயோ காபி கேட்டு இருந்திங்க அதான் கேட்டேன்" என்றதும்
"பாரு.. பாருவா சொன்னேன்.. கவி தானே சொன்னதா ஞாபகம்" என்றவன் அவள் முறைத்ததும் "அடி மக்கு பொண்ணாட்டி உன் பேர் பார்கவி தானே கவின்னு சட்டுனு வரலடி பாருன்னு தான் வந்துச்சி ஆட்டோபாம்" என்று கூறினான்.
"ஓ..." என்று ராகம்பாடி அதை ஆமோதித்தவள் கையில் இருந்ததை அவனிடம் நீட்டினாள்.
காபிக்கு பதிலாய் பால்பாயசமும் ஒரு கவரும் இருக்க டிரேவையும் பார்த்து அவளை பார்த்தவன் "என்னது இது காலையிலையே ?." என்றான்
கண்களாலையே 'பிரிச்சி பாருங்க' என்று சைகை செய்ய கவரை எடுத்து பிரிக்க சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் மனைவியை தூக்கி சுற்றி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.
"இதுக்கு நான் எவ்வளவு கஷ்ட்டபட்டேன் தெரியுமா ஆட்டோபாம் நான் நினைச்சி கூட பாக்கல இந்த கான்டஸ்டுல வின் பண்ணுவேன்னு என் ஃபோட்டோகிராஃப் வேல்ட் நம்பர் ஒன் மேகஸின்ல வரேன்னு நினைக்கும் போது எப்படி என் சந்தோஷத்த சொல்றதுன்னே தெரியலடா...." என்று முகம் முழுக்க பிரகாசமாய் இருக்க அவன் சிரிப்பில் தன்னை இழந்தவள் அவன் மீது சாய்ந்து "இதை சொல்லதான் நேத்து அவ்வளவு ஆசை ஆசையா வைட் பண்ணிட்டு இருந்தேன் எல்லாம் சொதப்பிடுச்சி" என்றாள் உள்சென்ற குரலில்.
அவளின் முகத்தினை பார்த்து "சாரி சாரி டா நேத்து நீ ஃபோன் எடுக்கலன்ற டென்ஷன்ல அப்படி நடந்துகிட்டேன்.." என்று அவளை தன் கைவளைவில் கொண்டு வந்தான்.
"ஆஹஹா....ரூட்டு மாறுதே இப்படியே விட்டுடலாம்னு பாக்குறிங்களா
இந்த வேலை இங்க நடக்காது எதுக்கு அடி போடுறிங்கன்னு தெரியும் ஏமாத்தமா
இந்த சந்தோஷத்த எப்படி கொண்டாட போறிங்க ?......" என்று அவனிடம் இருந்து விலக
"ஹா. ஹா..." என்று நகைத்தவன்.. "இன்னைக்கு ஃபுல்டே உன்கூடதான் ஆனா உனக்கு காலேஜ் ?." என்று நிறுத்த
"இந்த விஷயம் தெரிஞ்சதும் அப்போவே இன்னைக்கு நாள் உங்க கூடதான்னு முடிவு பண்ணிட்டேன் மை ஸீலிட் ஹார்ட்" என்றவள். "காலையிலையே ஷீலாவுக்கு ஃபோன் பண்ணி காலேஜ் லீவ்னு சொல்லிட்டேன்.... அத்தை கால் பண்ணாங்க இந்த விஷயத்தை சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க நீங்க தூங்குரிங்கன்னு சொன்னேன் அப்புறம் பேசுறேன்னு சொன்னாங்க..." என்று கூறி "நான் கீழே போறேன் நீங்க ரெடி ஆகி வாங்க உங்களுக்கு பிடிச்சது சமைச்சி இருக்கு" என்றதும் மகிழ்வாய் இருந்த முகம் மாறியது கேஷவிற்கு
அவனின் முக மாற்றத்தை கண்டு கொண்டவள் "சமையல் செய்றவங்க வந்துட்டாங்க தைரியமா வந்து சாப்பிடுங்க.... ம்கூம்" என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.... "நேத்து சட்னி காரம் தானே சொல்லி இருக்கலாம்ல ஏன் சொல்லமா இருந்தீங்க ?." என்று அவனிடம் கேட்க
"இதோ இதோ இப்படி நீ அப்செட் ஆகிட கூடதேன்னுதான்டா சொல்லல" என்று கூறியவன் ஞாபகம் வந்தவனாக ஒரு "3 ஹவர்ஸ் மட்டும் ஆபீஸ் போயிட்டு வந்துடட்டுமா ஒரு இம்பார்டன்ட் டீலர்ஸ் மீட்டிங் இருக்கு டா எனக்கு விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா கேன்சல் பண்ணி இருப்பேன் டா இப்போ எதுவும் செய்ய முடியாது...". என்று அவளின் பதிலுக்காக காத்திருக்க
நீங்க வெளியே போனாதானே என்னோட சர்பிரைஸ் கிப்ட் தரமுடியும் டபுள் ஓகேடா கஞ்சி பவுடர் என்று நினைத்தவள் அவளிடம் கட்டவுடனே "என்கிட்ட பர்மிஷன்லாம் கேக்குறிங்க" என்று ஆச்சரியம் காட்டி இதுக்கு ஏதாவது செய்யனுமே என்று தாடையை தட்டியவள் அவன் எதிர்பாராத சமயத்தில் எம்பி அவன் கன்னத்தில் முத்திடமிட அவள் முத்தம் தரும் சமயம் கேஷவின் உதட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தான் அவளின் உதட்டினை இந்த தீடிர் முத்ததில் சிக்கியவள் "ஃபிராடு ஃபிராடு" என்று அவனை பிடித்து தள்ளிவிட்டு "சீக்கிரம் வந்திடுங்க" என்று அறையைவிட்டு சென்றாள்.
அலுவலகத்திற்கு கிளம்பி சென்றவன் அன்றைய நாளில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கார்த்திக்கிடம் ஒப்படைத்தவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதை கூற மகிழ்ச்சியுடன் அவனை வாழ்த்தினான்.
"கார்த்திக் இன்னைக்கு டீலர்ஸ் மீட்டிங் மட்டும் முடிச்சிட்டு போறேன் நீ மத்தத பார்த்துக்க ஏதாவது இம்பார்டன்ட்னா கால் பண்ணு" என்றான்.
கேஷவ் மகிழ்வாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைந்து இருப்பது போல உணர்ந்த கார்த்திக் அவன் முகத்தினை ஆராய.
"என்ன கார்த்திக் அப்படி பாக்குற சம்திங் டிஃப்ரண்ட் இன் மை ஃபேஸ்" என்று சிரித்தபடி கேட்க.
"உன் முக்ததுல இருக்க சிரிப்பு உன் கண்ணுக்கு எட்டல கேஷவ் ஏதாவது பிரபளமாடா ?." என்றான் அக்கரையாக
பெருமூச்சை ஒன்றை வெளியேற்றியவன் "ம்" சாருகேஷின் நடவடிக்ககளை கூறினான்.
"என்ன சொல்ற கேஷவ் இனியும் சும்மா இருக்க முடியாது வீட்டுல யாரும் இல்லாத சமயத்துல இப்படி பண்ணி இருக்கான் ராஸ்கல்" என்று கோபத்துடன் கூறினான்.
"அதான் அவள தனிய விட முடியல இப்போ நான் வீட்டுக்கு போறேன்" என்று கிளம்ப .
"ஒவ்வொரு நாளும் என்ன ஆகுமோன்னு வீட்டுலயே இருக்க முடியுமா கேஷவ் உன்னால" என்று எரிச்சலாக கேட்க
"எனக்கு தெரியுது காரத்திக் அதுக்கும் ஒரு ஏற்பாடு பண்ணிட்டு தான் வந்தேன் அவளுக்கு தெரியாமலையே செக்கீயூரிட்டி அரேஞ்ச் பண்ணிட்டேன் என்றவன் இன்னும் தெளிவில்லாமல் இறுக்கமாய் இருந்த கார்த்திக்கை பார்த்தான் "நான் பாத்துக்குறேன் கார்த்திக் நீ வொரி பண்ணிக்காத" என்று அவனுக்கு நம்பிக்கையாக கூறி வீட்டிற்கு கிளம்பினான். வீட்டில் அவனுக்கான அதிர்ச்சி காத்து கொண்டிருப்பது தெரியாமல் சென்றுகொண்டு இருந்தான்.
Hi frds good evening yellarukum story pora vidam pidichi irukum nu ninaikiren.... evalavu fast ha nan ud potadhu illa ungalukaga dhan 3 days once or two days once ud poduren.... pls support and frds and unga comments kuda reply panna mudiyala comments pota yellorukkum rombha rombha thanks.... thank you so much frds ...

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 32
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.