கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்தியன் காஃபி ஷாப்பில் நல்ல வாட்டசாட்டமான உயரமும் அதற்கேற்ப உடல்வாகும் வடக்கத்திய சாயலில் இருந்த ஒருவன் வாட்சை பார்ப்பதும் வரும் வழியை பார்ப்பதுமாய் முகத்தில் கடுகடுப்புடன் அமர்ந்து இருந்தான். தலையை துப்பட்டாவல் சுற்றியபடி கண்களுக்கு கூலர்ஸை அணிந்து விறுவிறுவென நடந்து வந்தவளை பார்த்ததும் பிரகசமாய் ஆனவன் முகத்தில் இன்ஸ்டண்ட் சிரிப்பையும் வரவழைத்துக்கொண்டான்.
குரலில் மென்மையை கலந்தவன் "என்ன உதிமா இவ்வளவு நேரம் வெய்ட் பண்ண வைச்சிட்ட உனக்காக வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணி எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கடா" என்று நியாயம் கேட்க
"சாரி சாரி அஸ்வின்" என்று கண்களை சுருக்கி தலையை ஆட்டி அண்ணாகிட்ட பொய் சொல்லி அவனை நம்பவைச்சிட்டு வர்ரத்துக்குள்ள.. ப்பா.... போதும் போதுன்னு ஆகிடுச்சி...." என்று பெரூமுச்சி விட்டவள் தாமதமான வருகைக்கும் அவனிடம் மன்னிப்பு கேட்டு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
"நீ எதுக்கு பேபி பொய் சொல்ற என் லவ்வர பாக்கபோறேன்னு சொல்லிட்டு வர வேண்டியது தானே செல்லம்" என்று அவள் கன்னத்தை தடவினான்.
கன்னத்தில் இருந்த அவன் கையை வெடுக்கென தட்டிவிட்டவள் "என்ன வேலை இது அஸ்வின் பப்ளிக்பிளேஸ்ல டிசன்டா பிகேவ் பண்ணுங்க" என்று காரமாக உரைத்தாள்.
"பேபி இது என் வோன் பிளேஸ் மா.." என்று அவள் கன்னத்தை சுட்டி காட்டியவன்... "நம்மல யாரு கவனிக்க போறா டியர். அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும் நீ நார்மலா இரு பேபி" என்று அவளை நெருங்கி அமர்ந்தான்.
"நீ எதுக்கு வர சொன்ன அஸ்வின் அதை சொல்லு நான் பிரெண்ட் கூட வெளியே போறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். டைமுக்கு வீட்டுக்கு போகனும்" என்று அவனிடம் தன்மை மாறாமல் அவளின் நிலையையை விளக்கினாள்.
அவள் கூறியதும் எரிச்சலுடனே உத்ராவினை பார்த்தவன் "கிளம்பு கிளம்பு" என்று அவளை விரட்ட.
"அஸ்வின்... என்ன பண்ற.. ?." என்று அடிக்குரலில் எவர் கவனத்தையும் கவராமல் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.
"பின்ன.. சின்ன ஸ்கூல் பொண்ணு போல அப்பா திட்டுவாரு அண்ணன் அடிப்பான் அது இதுன்னு வந்ததுல இருந்து போகனும் போகனும்னு சொல்லிட்டே இருந்த எப்படி பேச தோனும் உதிமா.... எவ்வளவு ஆசை ஆசையா வந்தேன் தெரியுமா அத்தனையும் ஸ்பாயில் என் மூடே கெட்டுச்சி" என்று அவளிடம் கோபம் கொண்டான்.
அவன் கோவத்தையும் ஆசையாய் பேசிய நாவால் அவளை திட்டிக்கொண்டு இருப்பதை கேட்கவும் கண்கள் கலங்கி தலைகுனிந்தே தன் அழுகையை அடக்கியவள் அவனை சமாதானபடுத்த வழிதெரியாமல் பாவமாக அவன் முகத்தினை நிமிர்ந்து பார்த்து "பிளீஸ் அஸ்வின்" என்று அவன் கைகளை பிடித்தாள்.
அவள் கைகள் தானாய் அவன் கரத்தை தொட்டதும் பளீர் சிரிப்பாக, வரவழைத்த நிதானத்துடன் கோபத்தை மறைத்து முகத்தை சாதாரணமாக்கிய அஸ்வின். "ஏய் பேபி என்னடா இதுக்கு போய் அழுவாங்களா !." என்று பிடித்து அவளின் கரங்களை மறுகையால் பிடித்து முகத்தருகே கொண்டு சென்றான்.
அடுத்து அவனின் செய்ய போகும் செயலை முன்பே யூகித்தவள் "அஸ்வின்......." என்று அழைத்து நாணத்துடன் கூடிய அவஸ்தையில் நெளிந்து "பிளிஸ் அஸ்வின்" என்று இறங்கிய குரலில் பார்வையால் கெஞ்சி அவனிடம் இருந்து தன் கைகளை உறுவிக்கொண்டாள்.
"சே..... தொடகூட விடமாட்டாறா ஆறு மாசம் அவ பின்னாடியே திரிஞ்சி கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணாக்கூட என்னை நம்பி தொடவிட மாட்டறாளே !." என்று உள்ளுக்குள் குமைந்தவன் வெளியே காட்டிக்கொளாளாமல் இயல்பாகவே இருந்தான்.
'இது வேலைக்கு ஆகாது' என்று நினைத்தவன் "வா பேபி எழுந்துரு போகலாம்" என்று அவள் பிடித்திருந்த கையை மேலே உயரத்தி எழுப்ப.
அவனையே பாத்திருந்தவள் "எங்க அஸ்வின் எங்க போறோம் ?." என்றாள்
"ப்ச்....." என்று சலித்தவன் "தயவுசெய்து கேள்வி கேட்காம வண்டில ஏறு அப்புறம் டைம் ஆச்சி சொன்ன கடுப்பாகிடுவேன்" என்று கூறிவிட.
"இங்க பாரு அஸ்வின் என்னால தனியா வெளியே எல்லாம் வர முடியாது யார்னா பார்த்துட்டா பிராப்ளம் ஆகிடும் நான் பொய் சொல்லிட்டு வந்திருக்கேன் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்" என்று கூற.
பெருமூச்சை ஒன்றை வெளியேற்றியவன் "இவள.......!." என்று கோபம் வந்தாலும் "நீ பேசின நேரம் கிளம்பி இருங்கலாம்... வண்டில ஏறு உதிமா" என்றான்.
"நீ முதல்ல விஷயத்தை சொல்லு" என்றபடி ஷாப்பை விட்டு வெளியே நடந்தாள்.
'என்ன பண்றது எது சொன்னாலும் 100 கேள்வி கேக்குறா நம்ம நினைச்சது நடத்துறது ரொம்ப கஷ்டம் போலயே விட்றா விட்றா பாத்துக்கலாம்.... எத்தனையோ ஃபிகர்ஸ மடக்குன உனக்கு இது எல்லாம் சாதாரணம்' என்று தனக்கு தானே எனர்ஜியை ஏற்றிக்கொண்டவன் குழையும் குரலுடனே "ஒகே உதிமா நாம ஒரு 15 மினிட்ஸ் அப்படியே ஒரு ரைட் போயிட்டு வரலாம் இது உன் லவ்வரோட ஆசை" என்று கண்களை சுருக்கி "பிளீஸ் டியர்" என்றான்.
அரைமனதுடனே சம்மதித்த உத்ரா, அஸ்வினுடன் நின்றிருந்த காபிஷாப்பை கடந்து கேஷவின் பைக் செல்ல, முகத்தை முடிய துப்பட்டாவை சரிசெய்து அவன் பைக்கிற்கு திரும்பும் சமயம் கேஷவ் அவளை பார்த்து விட 'இங்க என்ன செய்றா ?.' என்ற யோசனையுடனே அவள் முன்னே பைக்கை 'சரேல்' என சத்ததுடன் வந்து நிறுத்தினான் கேஷவ். வேகமாக பைக் வந்து நின்றதும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்துது.
திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவளை அழைத்துக்கொண்டு செல்லவும் முடியாமல் இவன் யார் என்று தெரியமாலும் அங்கு இருவரையும் பார்த்தும் பார்க்காதபடி அஸ்வின் திரும்பி நின்று பைக்கை கவனிப்பது போல் இருந்தான்
"என்னடி இங்க நிக்குற ?." என்றபடி இறங்கி அவளிடம் வந்தவன் "என்ன இது ஆளையே கண்டுபிடிக்க முடியல கொள்ளை கூட்ட தலைவி மாதிரி இது என்னடி வேஷம் !." என்று கிண்டலுடனே கேட்டான்.
திரு திருவென முழித்தபடி "அது ..... அது..." என்று மென்று முழுங்கியவள் அவன் சந்தேகபட்டுவிட கூடாது என நினைத்தவள் "ஃபிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் வந்தேன்டா" என்று கூற.
அவள் பின்னால் எட்டி பார்த்தவன் "ஃபிரெண்டா எங்க ஒரு ஈத்தரை மூஞ்சியும் காணோம் !." என்று கிண்டல் செய்ய அதை உணரும் மனநிலமையில் கூட இல்லை அவள் பெயருக்கு சிரிப்பை உதிர்த்தவள் "சரிடா டைம் ஆச்சி நான் கிளம்பறேன்" என்று கூறி தெருவில் இறங்கி நடக்க.
"ஏய் நில்லு டைம் என்ன்னு தெரியுமா இப்போவே அங்கில் திட்டிட்டு இருப்பாரு கிளம்பு டிராப் பண்றேன்."
"இல்ல வேணா"
"பிச்சிடுவேன் உட்காருடி" என்று மிரட்டி உட்கார வைத்தவன் வீட்டு வாயலில் நிறுத்தி "உள்ளே போ" என்றான்.
"நீயும் வாயேன்டா" என்று அழைக்க.
"எனக்கு ஏற்கனவே மிஸ்டர் ராஜாராமன் அர்ச்சனைகளை ஆரம்பிச்சி இருப்பார் நீ மட்டும் போய் வாங்கிக்கோ" என்று கூறி அவளை மட்டும் அனுப்பி வைத்தவனின் வாகனம் சாலையில் வழுக்கி சென்றது.
இவர்கள் இருவரும் ஒருசேர வந்து இறங்கியதை பார்த்த சாருகேஷ் 'இவ என்ன கேஷவ் கூட வர்ரா ஃபிரெண்ட் கூட போறேன்னு சொல்லிட்டு போனா ஏதாவது பிராபளமா !." என்று நினைத்துக்கொண்டே மாடியில் இருந்து கிழே இறங்கி வந்தான்.
வீட்டுற்குள் சென்றவள் பூனைநடையாக மெல்லமாக ஹாலை கடந்து உள்ளே செல்ல "எங்க உள்ள போற ?." என்று குரல் ஹை டெசிபலில் ஒலித்தது .
குரல் வந்த திசையை பார்த்து திரும்பியவள் சோபாவில் அமர்ந்திருந்த வேதநாயகத்தை பார்த்ததும் விரல்கள் தந்தியடிக்க ஆரம்பித்தது. வரவழைத்த தைரியத்துடனே "அப்பா........" என்றாள்.
வேதநாயகம் ஊரில் பெரியமனிதர் நேர்மையான பிஸ்னஸ்மேன் சாயலில் சரத்பாபுவை நியாபகபடுத்த கூடிய தோற்றம். கொஞ்சம் அல்ல நிறைய கண்டிப்புமிக்கவர். அவர் மனைவி ஜானகி அன்பானவர் சாந்த சொருபினி கணவன் சொல்லுக்கு மாற்று கருத்து இல்லை என்று இருப்பவர் அவர்களின் பிள்ளைகள் தான் சாருகேஷும் உத்ராவும். மூன்று வருட இடைவெளியில் பிறந்தவர்கள்.
"காலேஜ் எப்ப முடிஞ்சது ?." என்றார் அதே கரார் ஆன குரலில்
"இவினிங் 4. 00 மணிக்குப்பா" என்றாள் பயத்துடனே.
"இப்போ வந்து நிக்குற டைம் என்ன ?." என்றார் கொஞ்சம் கண்டிப்புடனே.
"அது ஃபிரெண்ட்ஸ் கூட..." என்றதும் அவர் முறைத்ததில். "நான் அண்ணா கிட்ட கூட சொல்லிட்டு தான் பா......." என்று கூற
இடையில் பேச்சை நிறுத்திய வேதநாயகம் "ஷட்-அப் உத்ரா. திஸ் இஸ் யுவர் லிமிட்... ஊர் உலகம் இருக்குற நிலைமையில இப்படி சேஃப் இல்லாம அன் டைம்ல வர்ரது நாட் குட்..." என்றார் தலையை இடவலமாக ஆட்டி.
"அப்பா நான் சேஃபா தான் பா வந்தேன்.. கேஷ்ஷ்ஷ்ஷ்......." என ஆரம்பித்தவள்., சொ'ன்னா இன்னும் திட்டு விழும்' என்று நினைத்து வாயை இறுக்க மூடிக்கொண்டாள்.
அவளை முறைப்புடனே நோக்க அதே நேரம் கீழே வந்த சாருகேஷ் "என்னடி ஏன் லேட் ?." என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்
அங்க என்ன பேச்சி என்று அதட்டியவர் "உன்னை வெளியவே போகவேண்டாம்னு சொல்ல நான் கட்டுபடுத்தி வைக்கற மனுஷன் இல்லை ஆனாலும் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கவும் முடியாது புரியுதா உன்னோட ஷாப்பிங் அது இது எல்லாம் டே டைம்ல வைச்சிக்க அதுவும் சிட்டி லிமிட் குள்ளதான்... இந்த மாதிரி இனி ஒரு முறை நடந்தா என்கிட்ட பொறுமை இருக்காது பாத்துக்க" என்று எச்சரிக்கை செய்து விட்டவர்
சாருகேஷிடம் திரும்பி "நீ இருக்குற காலேஜ்ல அவள படிக்கவைச்சது எதுக்கு நீ பாத்துக்குவேன்னுதானே அவ கேட்டதும் ஒகே சொல்லி அனுப்பி வைச்சிட்டியோ தினம் தினம் நீயூஸ் பாக்குற படிக்கிறல அப்புறம் என்ன தைரியத்துல அனுப்பி வைச்ச ?!." என்று அவனை கண்டித்தார்.
தங்கையை பார்த்தவன் "இனி பாத்துக்குறேன் பா" என்று கூறி அவரிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று உள்ளே சென்றான்.
அவள் கிச்சனுக்குள் புகுந்துவிட "அம்மா ரொம்ப பசிக்குது" என்று தட்டை எடுத்து தாளம் போட.
அவளின் காதை பிடித்து திருகிய ஜானகி "ஏன்டி இன்னைக்கு லேட். ?. வாசலுக்கும் வீட்டுக்கும் நடையா நடந்தது எனக்கு மட்டும் தான் தெரியும்" என்று கூற.
"அம்மா ஃபிரெண்ட்ஸ் ரொம்ப கம்பல் பண்ணாங்க மா அதான் மறுக்க முடியல. இனி போகமாட்டேன் மா. என்று அவரின் கழுத்தை கட்டிக்கொள்ள.
"அப்படியே அந்த கரண்டியிலையே ரெண்டு போடுங்கம்மா நான் வேணா வேணான்னு சொல்ல கேக்காம போய்ட்டு கடைசிலல என்னை மாட்டி விட்டுட்டா" என்றான்.
"எதுலயும் ஒரு சாமர்த்தியம் வேணும் அது உன்கிட்ட இல்ல நான் என்ன பண்ண" என்று நக்கலடித்து இரண்டு மூன்று அடிகளை வாங்கியவள் அவனை துரத்திக்கொண்டு செல்ல அவளின் அலைபேசி ஒலி எழுப்பியது அதை எடுத்து பார்த்தவள் "அம்மா ஃபிரெஷ் ஆகிட்டு வறேன்" என்று அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு ஃபோனை ஆன் செய்து காதில் பொறுத்தினாள்.
"ஹலோ..."
"......."
"ஹலோ.... என்ன அமைதியா இருக்க அஸ்வின்"
"......."
"பேசு அஸ்வீன்"
"........"
"சாரி அஸ்வீன்..."
"பேசாத உத்ரா சாரி சாரி எல்லாத்துக்கும் ஒரு சாரிய ரெடிமேடா வைச்சி இருக்க" என்று எரிந்து விழுந்தான் அவன்.
"அஸ்வீன் நடந்தது நானே எதிர்பாக்கததுடா" என்று வருத்ததுடன் கூற.
"நீ எதிர் பாக்கலயா முதல்ல இருந்தே நீ வரல வரலன்னு தானே சொல்லிட்டு இருந்த... யாருடி... யாரு.. அவன்... வந்தான் நின்னான் வாடி போடின்னு பேசினான் பைக்குல ஏறுன்னு சொன்னான் போயிட்டே இருக்கான் யாரு அவன் ?." என்று கோவம் கொண்டு கேட்டான்.
"அஸ்வி.. அது என் அண்ணனோட ஃபிரெண்டுடா நீ நினைக்கற மாதிரி எல்லாம் அவன் இல்ல என்னை தங்கச்சி மாதிரி தாண்டா பார்ப்பான்" என்றாள் அவனைப்பற்றி அஸ்வின் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து.
ஃபிரெண்டு உன் அண்ணனுக்கு மட்டும் தானே உனக்கு இல்லையே என் கூட பைக்குல வர அப்படி யோசிச்ச அவன் ஏறுன்னு சொன்னதும் ஏறிட்ட. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா செருப்பல அடிச்சா மாதிரி இருந்துச்சி டீ அவ்வளவு வலிச்சது உனக்கு நான் முக்கியம் இல்லன்னு தெரிஞ்சபோது" என்று ஏகத்தகற்க்கும் நடித்தான் அவன்.
"அஷீ இங்க பாருடா நீ நீ மட்டும் தான் டா என் லைஃப் ப்ளீஸ் டா இப்படி எல்லாம் பேசாத" என்று உத்ரா உறுக.
'மாட்டிக்கிச்சி டா' என்று காற்றில் கைகளை குற்றியவன், "எனக்கு வைஃப் லைஃப் எல்லாமே நீதான்டீ" என்று மேலும் ஜஸ் பார்களை அடுக்கி அவளை கரைத்தான் .
அவன் பேச்சில் உருகி திளைத்தவள் சந்தோஷ வானில் சிறகடித்து பறந்தாள்.
"பேபி நாளைக்கு என்ன நாள் தெரியுமா நாம காதலிக்க ஆரம்பிச்சி நாளையோட நூறாவது நாள் டா நாம சந்தோஷமா செலபரேட் பண்ணணும் உனக்கு ஒரு சர்பிரைசும் இருக்கு டியர்" என்று பேசி அவளை வரவழைக்க அடிபோட்டான்.
"ம்... கண்டிப்பா வரேன் ஆனா என்ன டைமுக்கு அனுப்பிடனும்" என்று கண்டிஷனுடனே சம்மதித்தவள் நாளைய கனவில் மிதந்தாள்.
"டேய் நாயே சரக்குல ஏண்டா இவ்வளவு தண்ணிய மிக்ஸ் பண்ற ?." என்று கண்ணாடி மதுகோப்பையை உள்ளே இறக்கினான் அஸ்வின்.
"நம்ம மிக்ஸிங் கரெக்டா இருக்கும் மாப்ளா நீ அட்றா" என்றான் அஸ்வினுடைய நண்பன்.
"அந்த உத்ரா மேட்டர் என்னடா ஆச்சி ?. டேட் எப்போ பிக்ஸ் பண்ணி இருக்க ?." என்றான் நண்பன்.
கைவிரல்களுக்கு இடையில் சொருகி இருந்த சிகரெண்டின் புகையை காற்றில் கலக்க விட்டவன் "நாளைக்கு தான் மச்சி... இவள கரெக்ட் பண்ணவே 6 மாசம் ஆச்சி இனியும் விட்டுவைக்க முடியாது. நாளைக்கு ரெடியா இரு மாப்ள விருந்து நம்மள தேடி வருது" என்று கூறியவன் உத்ரா காதலித்து அஸ்வின் தான்.
அஸ்வின் வடநாட்டை சேர்ந்த பணக்கார குடும்பத்து பிள்ளை. கோவையில் நகைவிற்பனை செய்து வருகின்றது அவனது குடும்பம். நல்ல உயரம், வாட்டசாட்டமான உடல், அப்பாவி முகம் இது அனைத்தும் அவனது தகுதியாக அமைய பல பெண்தளை காதல் எனும் மாய வலையில் சிக்கவைத்து ஆசைதீர்ந்தபின் பணத்தை காட்டியும் மிரட்டியும் கழட்டிவிடும் உயரந்த வேலையை செய்பவன்.
உத்ராவின் பின்னால் சுற்றி திரிந்து விஷம் குடிப்பது போல பாசாங்கு செய்து அவளின் காதலை பெற்றவன் நாளை அவளை அனுபவிக்க பல திட்டங்களை தீட்டியுள்ளான் அவன் கைகளில் அகப்படுவாளா உத்ரா ?. அடுத்த பதிவில்.............
தொடரும்....

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 35
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.