காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 36

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிறு புற்களின் நுனியில் வைரகிரிடங்களாய் பனிதுளி அலங்காரம் செய்திருக்க, இனிமையான பறவைகளின் ரீங்காரம் காலை வேலையை புத்துணர்ச்சியை கூட்ட பூத்துகுலுங்கும் பூக்களின் மத்தியில் மலர்ந்து இருக்கும் மலராய் இருந்தவளின் காலை வெகு அழகாக இருப்பது போல் உணர்ந்தாள். தன் காதல் நாயகனை காணும் இனிமையான தருணத்தை நினைத்து கனவில் இருந்தவளை அடுத்து அவனை என்ன காரணத்தை கூறி சந்திக்க செல்வது என்ற யோசனை மூளையை அறிக்க ஆரம்பித்து இருந்தது.

காலை எழுந்ததில் இருந்தே இதே யோசனை... மூளையை செயல் நிறுத்தம் செய்ய இயந்திரமாய் தன் வேலைகளை முடித்தவளின் கவனத்தை "உத்ரா" என்று வேதநாயகத்தின் குரல் கலைத்தது.

"ஹாங் என்னப்பா" என்று தட்டில் உணவை அளந்து கொண்டு தந்தையிடம் கேட்டவள் இன்னும் உணவினை கையில் எடுத்தபாடில்லை.

"மனசுல என்ன முக்கியமான விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு??" என்றார் அழுத்தபார்வையுடன்

"நத்திங் பா... ஒன்னுமில்லை அப்பா ,ஒன்னுமில்லை..." என்று பதட்டத்துடன் கூறியவள் மீண்டும் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளின் செய்கையை கவனித்தவர் “ம்ஹ்ம்” என்று தலையை இடவலமாக ஆட்டி "யோசிக்கரதை விட்டுட்டு முதல்ல சாப்பிடு" என்று கூறவும் தட்டில் இருந்த உணவினை சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டு இருந்தவள் விறுவிறுவென்று சாப்பிட ஆரம்பித்தாள் அவளின் செய்கை சாருகேஷிற்கு சந்தேகத்தை வரவழைக்க 'நேத்து மாதிரியே இன்னைக்கும் ஏதோ பிளான் பண்ண போறா போல இருக்கே காலையிலை இருந்தே இவ முழியே சரியில்லையே எதுக்கும் நாம கவனமா இருக்கனும்' என்று அவளை பார்த்தபடியே காலை உணவினை முடித்தவன் கல்லூரி கிளம்பி நிற்க அவனுக்கு முன்னதாக தனக்கு உதயமான அருமையான திட்டத்துடன் தந்தையின் முன்னால் வரவழைத்த தைரியத்துடன் போய் நின்றாள். காதல் என்று வந்துவிட்டாள் சிறு துரும்பும் கோடாரியாய் மாறுமோ இங்கே உத்ராவும் அதே போல் மாறித்தான் இருந்தாள்.

"அப்பா" என்றாள் உத்ரா தயக்கத்துடனே

மகள் கல்லூரி செல்லாமல் தன் முன் தயங்கியவாறே நிற்க என்னவென்று கேள்வியால் நோக்கியவர் தன் மடியில் இருந்த மடிகணினியை முடித்தவைத்து "என்ன உத்ரா" என்றார்.

"அப்பா... அது வந்து" என்று தடுமாற்றத்துடனே ஆரம்பித்தவள், அவளின் தடுமாற்றத்தை அவர் உணர்ந்துகொள்ளும் அவகாசம் கொடுக்காமல் "அப்பா என் ஃபிரெண்ட் காயுவோட பர்த் டே பார்ட்டி... இவினிங் 7 மணிக்கு அவங்க வீட்டுல கொண்டாடுறாங்க எங்க காலேஜ் ல இருக்க ஃபிரெண்ட்ஸ்க்கெல்லாம் அவ அஃப்டர்நூன் டீரிட் கொடுக்குறா என்னையும் கூப்பிட்டு இருக்கா ப்பா” என்று மடமடவென கூறிமுடித்தாள் உத்ரா கூறி முடித்ததும் அப்பாடா என்று இருந்தது தங்கு தடையில்லாமல் கூறியதற்கு அந்த கடவுளுக்கு மனதினிலே நன்றி கூறியவள் தந்தையின் பதிலுக்காக காத்திருந்தாள்.

அவர் யோசிக்க எடுத்துக்கொள்ளும் நேரமே அவளுக்கு முற்கள் மேல் நிற்கும் அவஸ்தையை கொடுத்தது ஒரு வேலை ‘நீ போக வேண்டாம்' என்று கூறிவிட்டால் பிறகு அவனை எவ்வாறு சந்திப்பது காலை சாருகேஷ் அழைத்து செல்ல மாலை கல்லூரி தோழிகளுடன் வீடு வந்து சேர்ந்துவிடுவாள் வாரத்தில் 2 ,3 நாட்கள் அஸ்வினை காண ஏதாவது பொய்களை கூறி தோழிகளிடம் இருந்தும் தப்பிப்பவள் அவனை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வாள். இப்போது மாலை அவனுடன் சென்றதும் வீட்டிற்கு வரநேரம் கடந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசனையுடனே தான் தந்தையின் முன் வந்து நின்றாள்.

சிறுது நேரம் யோசனையுடனே மகளை பார்த்தவள் “ம்….. நீ போறதை வேண்டாம்னு சொல்ல மாட்டேன் ஆனா உனக்குன்னு சில கட்டுபாடுகள் இருக்கு அதை மறந்துடாதே வீட்டிற்கும் நேரம் கடந்து வருவதை வழக்கமாக்கி கொள்ளாதே சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன்” என்று கூறி மகனையும் பார்த்தவர் அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தாற் போல சாருகேஷம் தலை அசைத்து தங்கையை அழைத்துக்கொண்டு சென்றான்.

போகும் வழியெல்லாம் அவளிடம் “எங்கே போறிங்க ?. ஃபிரெண்ட்ஸ் எத்தனை பேர் போறிங்க ?. யாருக்கு பர்த்டே ?.” என்று அறித்துக்கொண்டே வர “வண்டிய நிறுத்து” என்று அவனின் கைகளில் கிள்ளியவள் அவன் நிறுத்தியவுடன் இறங்கி விறுவிறுவென பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினாள்.

“ஏய் உத்ரா நில்றி” என்று சாருகேக்ஷ் அழைக்க காதில் விழாதவள் போல் வேகமாக நடந்தாள்.

அவள் முன்னால் பைக்கை கொண்டு நிறுத்தியவன் “இப்ப ஏன்டி வண்டிய நிறுத்த சொல்லிட்டு இறங்கி திபு திபுவென நடக்குற ?.” என்று சீறினான்.

“அப்பாவே ஓகே சொல்லிட்டாரு நீ என்னமோ கிராஸ் கொஸ்டீன் கேட்டுக்கிட்டு இருக்க என்னை நம்பாதவங்க கூட நான் ஏன் வரனும் ?.” என்று உம்மென்று முகத்தை திருப்பி வைத்துக்கொள்ள

அவள் நின்ற தோரனையை கண்டவன் கடுப்புடனே “உன்னை நம்பல.....” என்று ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டு “அம்மா தாயே தயவு செய்து வண்டியில ஏறு நீ இதுக்கும் சேர்த்து என்னை அப்பாகிட்ட திட்டு வாங்க வைக்காதே... இனி நானும் எதுவும் கேக்கல நீயும் எதுவும் சொல்ல வேண்டாம் ஏறி தொலை” என்றவுடன் சிரித்தபடியே “அது” என்றவள் அவனின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

வகுப்பு தொடங்கியதும் உத்ராவின் சிந்தனையை அவளின் அலைபேசியின் ஒளி கலைத்தது. வேண்டும் என்றே அலைபேசியை செயலிழக்கம் செய்யாமல் அதனை இயக்கி வைத்திருக்க அஷ்வினின் எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வர வகுப்பை எடுத்து கொண்டிருந்த ஆசிரியருக்குத்தான் கோபம் வந்தது.

“யாரது.. யாருடைய செல்போன் ?.” என்று ஆசிரியர் கடுகடுக்க தலை குனிந்தபடி எழுந்து நின்றவளை தான் மொத்த வகுப்புமே பார்த்துக்கொண்டு இருந்தது.

“டிட் யூ நோ ஹவ் டு பிஹேவ் மை கிளாஸ் திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங் கெட் அவுட் ஃப்ரம் மை கிளாஸ்” என்று கூற விட்டால் பொதுமென்று நினைத்தவள் தலை குனிந்தபடியே வகுப்பை விட்டு வெளியே சென்றுவிட்டாள். சென்றவள் “எனக்கு தலை ரொம்ப வலிக்குது நான் வீட்டுக்கு போறேன்” என்று தோழிக்கு குறுஞ்செய்தியை அனுப்பியள் அஸ்வினின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.

“ஹலோ அஸ்வின்”

“வந்துட்டியா உதிமா” என்றான் ஆவலாக.

“ம் இப்போதான் கிளாஸ் விட்டு வந்தேன். சாருகேஷ்கிட்டயும் அப்பாகிட்டயும் பர்த்டே பார்ட்டின்னு போய் சொல்லி இருக்கேன் அவனுக்கு சந்தேகம் வர்றதுக்குள்ள நான் காலேஜ் வந்துடனும் அஸ்வின்” என்றாள்

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன் “ஒன் ஹவர்ல வந்திடலாம் டா... நான் ஸ்ரீட் கார்னர்ல தான் இருக்கேன் நீ வந்திடு” என்றதும் படபடக்கும் இதயத்துடன் வெளியேறியவள். எவரும் கண்டுபிடிக்க இயலாதவாறு அவள் முகத்தினை மூடி அவன் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள்.

“அஸ்வின் சீக்கிரம்” என்று துரிதபடுத்தியவள் அவன் பின்னே அமர்ந்துகொண்டாள்.

“எங்க போறோம் அஷி” என்றவள் மனதிலோ சந்தோஷமும் பயமும் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது.

“சர்ப்ரைஸ் பேபி” என்றவன் மீண்டும் அவள் ஏதும் கேட்காத வண்ணம் பார்த்துக்கொண்டான்.

அதே நேரம் தன் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தின் காரணமாய் அதன் தொடர்பில் இருக்கும் ஒருவரை காண சென்றிருந்தான் கேஷவ்.

முகத்தில் கொஞ்சம் கூட தெளிவு இல்லாமல் இருந்தான் கேஷவ்

“கேஷவ் ஜஸ்ட் ரிலாக்ஸ். இந்த வருஷம் இல்லனா என்ன நெக்ஸ்ட் இயர் கர்ஃபார்மா நீ காம்படிஷன்ல கலந்துக்கலாம் உங்க காலேஜ்லதான் இதுக்கு அலோ பண்ணலன்னு சொல்றியே இந்த இயர் நீ படிப்ப முடிச்சிட்டா நெக்ஸ்ட் இயர் இதுவே உன் பிரொஃபஷனா எடுக்கலாமே” என்று அவனுக்கு புகைப்படத்தை எடுக்க உதவிபுரிபவர் யோசனை கூற.

அதுவும் அவனுக்கு சரி எனவே பட்டது. இம்முறை கல்லூரியில் நடந்த பிரச்சனையில் அதில் கலந்து கொள்ள அனுமதிக்காமல் செய்ததே அவன் சோர்வு கொள்ள காரணமாய் இருந்தது.

“ஓகே சார் நான் வெய்ட் பண்றேன் நீங்க தான் கைட் பண்ணனும் எனக்கு” என்று வேண்டுகோளோடு அவரிடம் இருந்து விடை பெற்றவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரவும்,

பயந்து மூச்சிவாங்கியபடி உத்ரா அவனை கடந்து வேகமாக ஓடவும் சரியாய் இருந்தது. உத்ரா மாதிரி இருக்கு என்று நினைத்தவன் அவள் உத்ரா தான் என்று உறுதியோடு உத்ரா.... உத்ரா.... என்று அவள் பெயரை உரக்க அழைத்தான் அவள் அவனை கண்டுகொள்ளாமல் வேகமாக படியில் இருந்து இறங்கவும் கால் இடறி கீழே விழுந்தவள் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து மயங்கி இருந்தாள்.

“என்ன ஆச்சு இவளுக்கு ?.” என்று பின்னோடு ஓடியவன் அவள் இருக்கும் நிலையை கண்டு அவளை உலுக்கினாலும் எந்த பலனும் இல்லாமல் போக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

விரைவாக சிகிச்சை அளித்து காயத்திற்கு மருந்து இட்ட மருத்துவர் “எதையோ பார்த்து பயந்தா மாதிரி இருக்காங்க. அடிபட்டதனால லேசான மயக்கம் இருக்கு. அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் அழைச்சிட்டு போகலாம்” என்று கூறியவர் அடுத்த அறைக்கு சென்று விட்டார்.

‘சாருகேஷ்க்கு சொல்லாமா வேண்டாமா ?.’ என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தான். ‘உத்ரா ஏன் அங்க வந்தா எதை பார்த்து பயந்தா ஒன்னும் புரியாம என்னன்னு சொல்றது மாப்பிளைக்கு தெரிஞ்சா ஆடிதீர்த்துடுவான் என்ன செய்யலாம்' என்று சிந்தனையில் இருந்தவன் அவள் விழித்ததை பார்த்து அருகில் சென்றான்.

அவனை வியப்பாக பார்த்தாள் தன்னை ஒருமுறை ஆராய்ந்து கொண்டாள் கேஷவ் தான் என்று தெரிந்தவுடன் “நீ .... நீங்க எப்படி.... நான் .... இங்க எப்படி” என்று ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமால் பேசினாள்.

“ஹே.... என்னை தெரியலையா... நான் நான்தான் கேஷவ்..... உனக்கு ஒன்னுமில்ல டா நீ நல்லா இருக்க அங்க எப்படி வந்த ? யார பாக்க வந்த? ஏன் ஓடின ?” என்று கேட்க.

அங்கு நடந்த சம்பவங்கள் வரிசையாய் கண்முன்னே வரிய கண்களில் இருந்து தானாய் கண்ணீர் வழிந்தது.

“சொல்லு உத்ரா ஏன் அப்படி ஓடிவந்த என்ன ஆச்சு ஏன் அழற” என்றான் அக்கரையாக என்ன ஆனதோ என்று பயந்தான்.

“அண்ணா அது அது...” என்றவள் எச்சிலை கூட்டி விழிங்கிக்கொண்டாள் ‘இப்படி ஒரு அயோக்கியனை காதலித்து ஏமாந்து போக இருந்தேன்னு சொன்னா நீ என்ன சொல்வ....” என்று உள்ளுக்குள் பேசியவள் ‘என் ஏமாற்றம் என்னோடவே போகட்டும் எப்பவும் நான் உங்களுக்கு பழைய உத்ராவாவே இருக்கேன் எதையும் மறைக்க தெரியாத உத்ராவாவே இருக்கேன்....... என்னை மன்னச்சிடுங்க அண்ணா' என உள்ளுக்குள் மறுகியவள் தயங்கியபடியே “நான் நான் என் ஃபிரெண்ட் வீட்டுக்கு நோட்ஸ் வாங்க வந்தேன் அந்த வீட்டுல நாய் இருக்கரது தெரியாம உள்ள போயிட்டேன் நாய பார்த்ததும் பயத்துல அடிச்சுபிடிச்சி ஓடிவந்துட்டேன்” என்று சரளமாக பொய் சொன்னாள்.

“காலேஜ் ஹவர்ல என்னடி நோட்ஸ் வாங்க வந்தேன்னு.. சாருகேஷ்க்கு தெரியுமா நீ இப்படி வந்தது...” என்றான்.

இதற்கு என்ன பதில் கூறுவாள் எதையோ ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் கூறி அவனை சமாளித்து இருந்தாள்.

“உனக்கு நாய்னா பயம்னு தெரியும் ல அப்புறம் ஏன் அந்த வீட்டுக்கு எல்லாம் போற அப்படி அவசியம் போகனும்னா என்னையோ இல்ல சாருகேஷையோ கூட்டிக்கிட்டு போக வேண்டியது தானே உனக்கு இப்ப என்ன நோட்ஸ் வேணும் அவ்வளவு தானே என்ன ஏதுன்னு டிடைல்ஸ் கொடு நான் போயி வாங்கிட்டு வறேன் அப்படியே அந்த நாயயும் ஒரு வழி பண்ணிட்டு வறேன்....” என்று கோபமாக கூறியவன் “இப்படி அடிபட்டு படுத்துகிடக்க மூஞ்சிய பாரு நல்லா... ச்சீ நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்... நல்லா வருது வாயில உன்னை...” என்று திட்டிக்கொண்டு இருந்தவனை கைபிடித்து எழுந்து அமரந்தவள் “டேய் கேஷவ்” என்று அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்... அவள் நாயை கண்டு மிகவும் பயந்து இருக்கிறாள் என்று நினைத்தவன் உத்ராவின் தலையை வருடியபடி “ச்சீ மண்டு இதுக்கு போயெல்லாம் பயப்புடுவாங்களா சியர் அப் டியர்” என்று தைரியம் கூறி அவளை எழுந்துக்கொள்ள உதவி செய்தவன் மருத்துவ மனையில் இருந்து கல்லூரி வாயிலில் இறக்கிவிட்டான்.

இவர்கள் இருவரும் வந்து இறங்குவதை பார்த்த சாருகேஷ் உத்ராவின் தலை காயத்தை பார்த்து அருகில் வந்தவன் “என்னடி ஆடிபட்டு இருக்கு.... என்ன நடந்துச்சு இரெண்டு பேரும் ஒன்னா வேற வர்றீங்க என்ன ஆச்சு” என்றான்

“ஒன்னும் இல்ல மச்சி நாய பார்த்து பயந்து விழுந்துட்டா” என்றதோடு முடித்துக்கொள்ள “சரி மச்சி நான் வரேன் வீட்டுக்கு போயிட்டு சாயந்திரம் வந்து பாக்குறேன் டா” கூறி சென்றுவிட்டான்.

கேஷவுடன் வந்ததை வைத்து ‘அவனுடன் சென்று இருக்கிறாளோ ?.’ என்ற நினைத்தவன் ‘ஃபிரெண்ட்ஸ் கூட இல்ல போறேன்னு சொன்ன குழப்பி விடுறாளே என்ன நினைச்சிட்டு செய்றா ஒருவேல உத்ரா அவனை விரும்புறாளா ?.’ என்று முதல் முறையாக சாருகேஷிற்கு உத்ராவின் மீது சந்தேகம் தோன்றியது. இதுவரையிலும் கேஷவை சாருகேஷின் முன்னால் ‘அண்ணா’ என்று அழைத்தது இல்லை ‘வா போ' என்றுதான் அழைப்பாள் இல்லை என்றால் ‘வாடா போடா' என்று அழைப்பாள் பெரிதாக கேஷவும் அவளை கண்டித்தது இல்லை தன் நண்பனை பற்றி தெரியும் ஆதலால் ஒரு வேளை கேஷவை ஒரு தலையாக காதலிக்கின்றாலோ என்று நினைத்தான் சீக்கிரமே அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சாருகேஷிற்கு தோன்றியது.

எப்போதும் தோழிகளுடன் வீட்டிற்கு வருபவள் இன்று அண்ணனுடன் வீட்டிற்கு வந்தாள் முகத்தில் எப்போழுதும் நிலைத்து இருக்கும் சிரிப்பில்லை, கண்ணில் உயிர்ப்பில்லை, எதையோ நினைத்து உள்ளுக்குள் மருகுபவள் போல் இருந்தாள். தலையில் வேறு காயம் இருப்பதுடன் கண்ணில் தெரிந்த பயத்தை ஜானகி இனம் கண்டு கொள்ள

“என்னடா தலையில என்ன ஆச்சு ஏன் ஒருமாதிரி இருக்கு முகம்” என்று பதறியபடி கேட்க அண்ணனிடம் கூறிய பொய்யையே தாயிடமும் கூறினாள் உத்ரா. இதுக்கெல்லாம் பயந்தா இப்படி கீழ விழுந்து வாருவ.. நல்ல பொண்ணுடா.. ரொம்ப வலிக்குதா டா ?. என்று தலைகோதி மகளுக்கு தைரியம் கூறி அவளை அவளது அறைக்கு சென்று படுக்க வைத்தார்..

சாருகேஷிற்கும் இவள் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது.. ‘அவள் முகமே சரியில்லையே' என்று நினைத்தாலும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை கேட்டாலும் உண்மையான பதிலை கூறுவாள் என்று நினைத்துதான் கேட்காமல் இருந்தான்.

இயந்திரம் போல் உண்டவள் அறைக்குள் வந்து அடைந்துகொண்டாள் மெத்தையில் படுத்தவள் ஜெபம் போல் கூறிக்கொண்டாள், ‘எதையும் நினைக்க கூடாது' என்று கண்களை மூடிக்கொண்டு படுத்தாள்... சிறுது நேரம் சென்றிருக்க பாழாய் போன உறக்கம் தான் வந்து தொலையவில்லை என்று சலித்துப்போய் அமர்ந்தவளின் தோல் வளைவில் யாரோ ஒருவரின் கை விழ திடுக்கிட்டு திரும்பினாள் அங்கே அஸ்வினின் உருவம்....

“வீல்” என்று பெருஞ்சத்ததுடன் தூக்கத்தில் இருந்து கத்தியவளின் அறைக்குள் ஜானகியும் வேதநாயகமும் நுழைய அவர்களை தொடர்ந்து சாருகேஷம் நுழைந்தான் வியர்வையால உடல் முழுவதும் நிறைந்து இருக்க நடுங்கிய உடலுடன் பயந்து வெளிறிய முகமாய் இருந்த உத்ராவை பார்த்தும் மூவருக்குமே சற்று படபடப்பாய் இருந்தது. “உத்ரா உத்ரா மா என்ன டா என்ன நடந்தது” என்று அன்னையின் உலுக்கலுக்கு பதில் அளிக்காமல் வெறித்து போய் நிலைகுத்தி இருந்தது அவளின் பார்வை “உத்ரா அம்மா உத்ரா இங்க பாருடா” என்று வேதநாயகம் மகளின் முகத்தை திருப்ப இன்று தந்தையின் கண்டிப்பான வார்த்தையும் உண்மை நிலவரத்தை புரிந்தவள் தந்தையின் மேல் சாய்ந்தவள் “அப்பா…. அப்பா……” என்று தேம்பினாள் மகள் ஏதோ கனவு கண்டுதான் பயந்து போய் உள்ளாள் என்று யூகித்தவர் “ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல” என்றவர் மகளை தனியாக விடாமல் “ஜானகி உத்ரா கூட இரு” என்றபடி மனைவியை அந்த அறையில் தங்கும்படி கூறியவர் தனது அறைக்கு சென்றுவிட்டார்.

அன்னையின் துணையுடன் படுத்தவள் நினைவில் இன்று நடந்தது ஓடிக்கொண்டு இருந்தது.

“எங்க போறோம் அஷி ?.”

“சர்ப்ரைஸ் டார்லிங்” என்று கூட்டிச்சென்றது அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு “இது யார் வீடு அஷி ?.” என்றாள் உத்ரா.

“இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம் டார்லிங்” என்று கூறியபடி படிகளில் ஏறியவன் தன்னிடமிருந்த சாவியை வைத்து அவளை வீட்டினுள் அழைத்து சென்றான். “வாவ் நல்லா இருக்கு அஷீ சூப்பரா மெயின்டன் பண்றீங்க” என்றபடி கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

“என்ன சாப்பிடற டார்லிங்” என்றபடி சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டியவனை கண்டவள் சங்கடத்தில் கண்களால் அவனை தவிர்த்தபடி வீட்டை ஒரு முறை அளந்தாள். நல்ல பெரிய ஹால் சமையற்கூடம் மேலும் இரு அறைகள் இருப்பது போல் தெரிந்தது.

அவளின பார்வை ஓட்டதை அறிந்தவன் கோணல் சிரிப்புடனே “2 மினிட்ஸ் பேபி” என்றபடி அவளுக்கான பழச்சாறை தயாரிக்க சென்றான் பெரிய கண்ணாடி கோப்பையில் பழசாற்றினை ஊற்றியவன் அவளுக்கு மயக்கத்தை தரும் மருந்தினையும் கலந்தான் கையில் மொபைலுடன் பால்கனிக்கு சென்றவன் “டேய் அவ வந்துட்டா நீ எங்க இருக்க ?.” என்றான் மெதுவாக.

“மச்சி சூப்பர்டா கலக்குற ம் மச்சக்காரன் டா நீ” என்று அவனுக்கு புகழாரம் சூட்டியவன் கீழே கிரௌண்ட் ஃப்ளோர்ல தான் மாப்ள வண்டிய பார்க் பண்ணிட்டு வந்துறேன். நீ எல்லாம் ரெடி பண்ணிட்ட தானே” என்றான் அவனுடைய நண்பன்.

“ம் மயக்கமருந்து கலந்த ஜீஸ் ரெடி அவ குடிச்சா போதும் நம்ம வேல பக்காவா ஃபினிஷ் பண்ணலாம் 5 மணி நேரம் அவ நம்ம கண்ட்ரோல் தான் மச்சி” என்று கோரமுகத்துடன் கூறியவன் அவளுக்கான பழசாற்றுடன் அவள் முன் வந்து நின்றான். இதை எதையும் அறியாதவள் அதை எடுத்து பருகும் சமயம் வீட்டு அழைப்பு மணி ஒளிக்க பதட்டத்தில் அப்படியே சாறு அவள் ஆடையில் கொட்டியது.

“ஒரு ஜீஸ் உன்னால ஒழுங்கா குடிக்கமுடியாதா” என்று கடிந்து கொண்டவனின் போக்கு விசித்திரமாய் பட்டது அவளுக்கு.

அவளை விடுத்து கதவை திறந்தவன் “டேய் எருமை ஒரு ஃப்வை மினிட்ஸ் பிறகு வந்து இருக்காலம் ல” என்று எகிற ஒன்றும் புரியாமல் விழித்த மற்றொருவன் உத்ராவை கண்டு கண்களில் மதுவை குடிக்காமலேயே போதை ஏறியது செப்புச்சிலையாய் இருந்தாள் அளவான இடை செதுக்கிய இதழ்கள் மெண்மையை உணருத்தும் பெண்மை என அழகின் உருவமாய் இருந்தவள் வந்தவனை போதைக் கொள்ள வைத்தாள் அவனின் பார்வையை கண்டு எரிச்சலுற்றவள் உடனே எழுந்துக்கொள்ள கதவினை சாத்திவிட்டு இருவரும் அவள் பக்கத்தில் வந்தனர்.

“உத்ரா இது என் ஃபிரெண்ட் உன்னை இன்ட்றட்யூஸ் பண்ணத்தான் வரசொன்னேன் என் குளோஸ் ஃபிரெண்ட் இவன்” என்று அறிமுகபடுத்தினான் பெயருக்கு சிரித்து வைத்தவள் அஸ்வினின் காதில் “இவரு எங்க இங்க வந்து இருக்காரு அவர் பார்வையே சரியில்ல நான் காலேஜ் போறேன் டைம் ஆச்சி” என்றிட.

“ஓகே டார்லிங் ஒரு டு மினிட்ஸ் டா காஃபியாவது குடி” என்று வற்புறுத்திட தலைவிதியை நொந்துகொண்டு அமர்ந்து இருந்தாள். எதிரில் அமர்ந்து இருப்பவனின் பார்வையோ சரியில்லை வாட்சை பார்ப்பதும் கிட்சனை பார்ப்பதுமாய் இருப்பவள் எதிரில் இருப்பவனை பார்ப்பதை தவிர்த்து வந்தாள். ஒரு கட்டத்தில் பொருக்க முடியாமல் “நான் கிளம்புறேன் அஸ்வின்” என்று குரல் கொடுத்துவிட்டு வெளியே செல்ல அடிகளை எடுத்து வைக்க வந்தவன் எதேட்சையாய் அவளின் ஷாலை பிடித்து “இருங்க” என்றான். அவனின் இந்த திடீர் செய்கை அவளுக்கு கோபத்தை வரவழைக்க பட்டென அவன் கன்னத்தில் அறைந்து விட்டவள் “அஸ்வின் அஸ்வின்” என்று கத்த ஆரம்பித்து இருந்தாள்.

“என்ன டார்லிங்” என்று காபியுடன் வெளியே வந்தவன் “ஃபிரெண்டோட லவ்வர்கிட்ட இப்படி தப்ப பிஹேவ் பண்றான் இவன் உங்க ஃபிரெண்டா ?.” என்று கத்த தொடங்கியளை வினோதமாக பார்த்தவன் “எல்லாம் பேசிக்கலாம் முதல்ல இந்த காஃபிய குடிமா” என்று நீட்டினான். அவனுக்கு அவன் வேலை ஆகவேண்டுமே அதனால்.

“இவ்வளவு சொல்றேன் காபிய நீட்டுறிங்க ச்சே” என்று அதனை தட்டி விட “முண்டம் முண்டம் அறிவுகெட்ட முண்டம்” என்று அவளை அறைந்தவன் “என்னடி என்ன அப்படி பாக்குற உனக்கு தெரியமா உன்னை அனுபவிக்க தான் இங்க கூட்டிட்டு வந்தேன். உனக்கு வலி வேதனை எதுவும் கொடுக்க வேண்டாம்னு நல்லெண்ணத்துல மயக்க மருந்து கலந்த ஜீஸ் கொடுத்தா அதையும் கொட்டின இப்போ காஃபியும் தட்டிவிடுற பெரிய கண்ணகின்னு நெனப்போ” என்று அவளை பட்டென்னு மறுமுறை அறைய பொத்தென சோஃபாவில் விழுந்தாள். அறைந்தது கூட வலிக்கவில்லை அவன் கூறிய வார்த்தைகள் குத்திட்டியாய் வலித்தது. என்ன கூறிவிட்டான் இவன் மயக்க மருத்து தந்து அனுபவிக்கவா என்னை இங்க அழைச்சிட்டு வந்தான் அவனை போய் நம்பி என் வாழ்க்கைன்னு நினைச்சேனே சே.. என்று மனது ஊமையாய் அழுதது. ஆனால் கண்களில் இன்னும் அந்த நிலை குத்திய பார்வை மாறவில்லை எப்படியாவது அவனிடம் இருந்து தன் பெண்மையை காப்பற்றூக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாளே தவிர அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை... “என்னடி போஸ் கொடுக்குற எழுந்திருடி நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரி 3 மாசத்துல கரெக்ட் பண்ணிட்டு கட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன் உனக்கு உனக்கு மட்டும் தான்டி தலைகீழ நின்னு தண்ணிய குடிச்சேன் என் கஷ்டத்துக்கு வட்டியோடு சேர்த்து வசூலிக்க போறேன் டி” என்று அவளின் கைகளை பிடித்து இழுத்து அருகில் கொண்டுவந்தவனை முடிந்தமட்டும் மொத்த சக்தியினையும் திரட்டி விளக்கி விட்டு திமிறி கொண்டு நின்றவள் சுற்றிலும் பார்வையை சுழல விட டைனிங் டேபிளில் ஒரு கத்தி இருக்க ஒரே தாவலில் அதை கைகளில் எடுத்தவள் “கிட்ட வராதடா என்னை குத்திக்குவேன்” என்று பயம் காட்டினாள்.

“என்னடி மிரட்டுற. குத்திக்கபோறியா குத்திக்கோ குத்திக்கோ நல்ல குத்திக்கோ” என்று அஸ்வினின் நண்பன் முன்னால் சென்று நின்று கேலியுடன் சிரித்தபடி அவளை வளைத்து பிடிக்க அவனிடம் இருந்து திமிரியவள் அவனின் விலாவில் கத்தியால் ஓங்கி குத்தியவள் அவன் வலியில் துடிக்கவும் கைகளால் அவனை தள்ளிவிட்டு அஸ்வினையும் கத்தியினைக்கொண்டு மிரட்டியப் படியே வாசல் கதவு வரையும் வந்தவள் கதவினை திறந்து கத்தியினை அவனை பார்த்து எரிந்தவள் அறையினை மூடி வெளியேற முடியாமல் தாழிட்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள் பின் படியில் கால் இடறி கீழே விழ கண்விழிக்கும் போது மருத்துவமனையில் இருந்தாள். “அங்க கேஷவ் மட்டும் வர்லனா என் கதி என்னவாகி இருக்கும் கடவுளே நினைக்கவே……..” நடுங்குவது போல் இருக்க அவளின் உடலின் வெப்ப நிலையையும் நடுக்கத்தையும் உணர்ந்த ஜானகி அவளை அணைத்தார் போல் படுத்துக்கொண்டு தட்டி கொடுக்க தாயின் கதகதப்பில் இருக்கும் சிறுகுழந்தையாய் உறங்கினாள்.

தொடரும்.
 
Last edited:

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 36
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN