Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 37
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

கல்லூரி செல்லும் அவசரத்தில் இருந்த சாருகேஷ் ஜானகியை உரக்க அழைத்தபடி உணவு மேசையின் முன் கைபட்டையின் கடைசி பகுதியை மடித்தபடி வந்து அமர்ந்தான்.

“இதோ வரேன் டா” என்று கையில் காலை உணவுடன் உணவுமேசை அருகில் வந்தவர் சாருகேஷிற்கு பரிமாற ஆரம்பித்தார்.

விடு முழுவதும் பார்வையை சுழல விட்டவன் “எங்கம்மா அவ.. காலையில இருந்து காணோம் இன்னும் எழுந்திருக்கலையா மகாராணி” என்றான் வாயில் உணவை வைத்தபடி

“சாரி....” என்று அவன் பேச்சை நிறுத்தியவர் “பாவம் புள்ள நைட்டெல்லாம் அனத்திக்கிட்டே இருந்தா. காய்ச்சல் வேற உடம்பு நெருப்பா இருக்கு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகனும். படுத்து இருக்கா நீ அவள கிண்டல் பண்ணிட்டு இருக்க” என்றார் ஜானகி.

“அப்படியா” என்று உணவினை விடுத்து எழுந்தவனை தோளில் கை வைத்து அமரவைத்தவர் “நீ சாப்பிடு சாரி அவளுக்கு மருந்து கொடுத்து இருக்கேன். சாப்பிட்டு போய் பாரு. அன்னத்துல கை வைச்சிட்டு பாதில எழுந்திரிக்க கூடாது” என்று தன்மையாகவே கூறினார்.

“ம் சரி மா” என்று அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் “அப்பா எங்கமா ?. அவரையும் காணோம்” என்றான்.

“இன்னைக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்காம் அதனால சீக்கரமாவே கிளம்பிட்டாரு” என்றவர் தட்டில் இன்னும் உணவினை பரிமாற ஜானகிக்கு ‘போதும்’ என்று கைகாட்டி நிறுத்தியவன் “போதும் மா நான் போய் அவள பார்த்துட்டு காலேஜ் கிளம்புறேன். நீங்க அவள கூட்டிட்டு ஹஸ்பிட்டல் தனியா போய்டுவிங்களா நான் வேணா கூட வரேனே ?” என்றான்.

“வேண்டாம் சாரி நானே போய் பாத்துட்டு வந்துடறேன் நீ காலேஜ் கிளம்பு” என்று கூறி அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருக்க, உத்ராவை பார்ப்பதற்காக அறைக்கு சென்றான் சாருகேஷ்.

கும் இருட்டு. இருளின் மத்தியில் பயமுக்ததுடன் ஒரு உருவம் தலைக்கு மேல் ஊசல் ஆடும் கத்தி இப்பவோ அப்பவோ என்று அந்த உருவத்தின் உயிரை குடிப்பதற்கு காத்திருப்பது போல் தொங்குவதாய் இருந்தது. கூறிய நகங்களை கொண்ட இரு கைகள் அந்த உருவத்தின் கழுத்தை நெருக்குவதற்கு அருகில் வரவர அந்த உருவத்தின் முகம் இப்போது சற்று மங்களாய் தெரிந்தது இருகைகளும் கழுத்தை நெறிக்க மங்களாய் தெரிந்த முகம் உத்ராவின் முகமாய் தெளிவாய் தெரிந்ததும் உடலெல்லாம் தூக்கி போடவும்,

சாருகேஷ் கதவினை திறந்து உள்ளே நுழையவும் சரியாய் இருக்க அவளின் உடல்நிலையை பார்த்தவன் அருகில் சென்று “உத்ராமா உத்ரா” என்று உலுக்க “அம்மா அம்மா என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று அலறி அடித்து துடித்து எழுந்தாள்.

“அண்ணா அண்ணா” என்று அவனை ஒன்டினாள் அவள் நிலையை பார்த்தவன் “அம்மா அம்மா இங்க வாங்க” என்று அன்னைக்கு குரல் கொடுத்தவன் “உத்ராமா உத்ரா என்ன டா ஏன் கத்தின என்ன ஆச்சு ?.” என்று தலையை வருடி விட்டான் அவளின் மிரட்சியை போக்க நினைத்தான்.

படபடப்புடன் இருந்தவளின் முகம் பயத்தில் மிரண்டு இருந்தது கைகால்கள் எல்லாம் நடுங்கியது வியர்வையில் குளித்தவள் போல் முகமெல்லாம் வியர்வை துளிகள் இடம் பிடித்து இருந்தது.

அவளின் நிலையயை பார்க்க சாருகேஷிற்கு பாவமாய் இருந்தது ‘எதை நினைத்து அல்லது கண்டு பயந்து அலறி இருப்பாளோ' என்று, அவளும் தெளிவில்லாமல் அவன் கைகளை இறுக பிடித்துக்கொள்ள அவளை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டவன் “ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல” என்று ஆறுதல் கூற அறைக்கு வந்த ஜானகிக்கு ஏதோ விளங்கியது போல் “மறுபடியும் கனவு கண்டியாமா ?.” என்று மகளிடம் வினவினார்.

“அண்ணா... அண்ணா எனக்கு பயமா இருக்கு என்னை விட்டுடாத எனக்கு பயமா இருக்கு” என்று அனத்தியபடி அவனிடம் ஒண்டினாள்.

அவளின் உளறலை கேட்டவர் “என்னடா இது, இப்படி நடுங்குறா. என்ன ஆச்சு இவளுக்கு நைட்டு கூட இரெண்டு மூனு முறை அலறி அலறி எழுந்துட்டா எங்க போய் எதை பார்த்து பயந்தான்னு தெரியலையே” என்று புலம்பியவர் விறுவிறுவென புஜை அறைக்கு சென்று சாமிபடங்களுக்கு முன் நின்று கைகூப்பி வணங்கி தட்டில் இருந்த விபூதியை எடுத்து வந்து மகளுக்கு வைத்து விட்டவர் “ஒன்னும் இல்லடா பயப்படாத பயப்படாத” என்றவர் மகளை பார்த்து பறிதவிக்க ஆரம்பித்துவிட்டார்.

“அம்மா ஒன்னுமில்ல மா நீங்களும் பயப்புடாதீங்க நான் அவள ஹால்பிட்டல் கூட்டிட்டு போறேன் நீங்க இருங்க” என்று கூற “இல்ல இல்ல நானும் வறேன் இல்ல நம்ம பேமலி டாக்டருக்கு ஃபோன் பண்ணு வரமுடியுமான்னு கேளு இல்லனா நாமளே போய் பார்த்துட்டு வந்திடுவோம் இதுக்கு மேல காத்திருக்க வேண்டாம் உடம்பு வேற தூக்கி தூக்கி போடுது காய்ச்சல் வேற குறையல” என்றவர் மகளின் பயந்த நிலையை கண்டு கலங்கிபோனார்.

அவளை பரிசோதித்த மருத்தவர் “ஏதோ அவங்க மனச ரொம்ப பாதிச்சி இருக்கு அதுதான் பயத்துக்கான காரணம் ஒன்னும் இல்ல அவங்கள தனியா விடாதீங்க பயந்து போய் இருக்காங்க” என்று கூறி சில மாத்திரை மருந்துகளும் கொடுத்தவர் அவள் உறக்கத்திற்க்காக ஊசியினையும் செலுத்தி அனுப்பினார்.

இரண்டு மூன்று நாட்கள் அதே மன அழுத்தத்துடன் இருந்தவள் சிறிது சிறிதாக வெளியே வர ஆரம்பித்தது இருந்தவள். முற்றிலும் அந்த சம்பவத்தை மறக்கமுடிமாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். அவள் சிரிப்பு பேச்சு ஆட்டம் பாட்டம் என அனைத்தும் ஒடுங்கியது காலையும் மாலையும் அண்ணனுடனே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள். தோழியோடும் அதிக கலகலப்பு இல்லை எதையோ இழந்தவள் போல இருந்தாள். உத்ராவின் நடவடிக்கைகளை கவனித்தபடி இருத்தாள் அவளின் தோழி அங்கிதா

“ஏய் உத்ரா. என்னடி எப்பவும் சைலட்டா இருக்க ?.”

“நான் நார்மலா தானே இருக்கேன் அங்கி*

“நீ நார்மலா..... சரி உத்ரா ஏதாவது பழைய தமிழ் சினிமா பாத்தியாடி ?” “என்ன அங்கி சம்மந்தமில்லாம என்ன டீ கேள்வி கேக்குற

பின்ன என்னடி லவ் ஃபெயிலியர் ஆன ஹிரோயின் மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு இருக்க எவ்வளவு கலகலப்பா இருந்தியோ அவ்வளவு சைலன்டா ஆயிட்டியேடி” என்றிட தோழியின் வார்த்தைகளில் மௌனமாய் கண்கலங்கி அமர்ந்தாள் உத்ரா.

“ஏய் என்னடி ஏன் இப்படி அழுகுற என்னமோ நடந்து இருக்கு என்னடி ஆச்சு”

“ஒன்னுமில்லாம யாராவது அழுவாங்களா ?” என்று அவளிடம் கேள்வியை தொடர

பதில் தர முடியாமல் எழுந்து செல்ல இருந்தவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தாள் அங்கீதா “நில்லு உத்ரா நேத்து ஆண்ட்டிய கோவில்ல பார்த்தேன் உன்னை பத்திதான் பேசிட்டு இருந்தாங்க. நீ ஏதோ மாதிரி இருக்க அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க சரிபண்ண முடியலையேன்னு கஷ்டப்பட்டாங்க” என்றாள் கண்டிப்புடன்.

உத்ராவின் கண்களில் வெறுமையான பார்வை குடியேறியது... அவளின் கைகளை விடுத்து அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தவளை சுற்றிலும் மரங்கள் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் இறங்கி இருந்தனர். அவர்களை நோக்கி வெறித்த பார்வையுடன் சிலையென அமர்ந்து இருந்தாள்.

“உன் மனசுல என்னமோ இருக்கு மறைக்க பாக்காத உன் மனசுல. இருக்கரத இறக்கி வைச்சிடு. ரொம்ப அழுத்தம் கொடுத்தா அது உன்னை மட்டும் பாதிக்காது உத்ரா உன் குடும்பத்தையும் பாதிக்கும்” என்று அறிவுறை கூறி அவள் மனதில் இருப்பதை வெளியே கொண்டு வர முயற்சியை மேற்கொண்டாள்.

“சரி உத்ரா சாரி உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்படியே இருக்கட்டும்... நான் நமக்காக தான் பேச வரை. நம்முடைய நட்பிற்காக பேசவந்தேன். என்னை அப்படி நீ நினைக்கலன்னும் போது சாரி உத்ரா உன்னை டிஸ்டர்ப் பண்ணல” என்று எழுந்து கொண்டவளை கட்டிபிடித்து உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள்.

தனக்குள்ளையே மூடி மூடி அழுதுகொண்டு இருந்தவள் இன்று அனைத்தையும் தோழியிடம் கொட்டி அழுதுகொண்டு இருந்தாள்.

அவள் இருக்கும் நிலையை அறிந்தவள் “எப்படி எப்படி அவனை காதலிச்ச யார் அவன்... அவன் பேரு என்ன நம்ம காலேட்ஜா ?.” என்று கேட்க

‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் அவனை பற்றிய தகவளை கூறாமல் அவனுடைய பெயரை மட்டும் கூறியிருந்தாள். “இப்படி ஒருத்தனை மனசார நெனஞ்சேன்னு நினைக்கும் போது செத்துடலாம் போல இருக்கு அங்கி அவன் என்னை ஏமாத்திடான்” என்று அழுதாள்.

“கண்ணை துடை டீ நீ ஏதுக்கு இப்போ அழுகுற உனக்கு நல்லது நடந்ததுன்னு நினைச்சிக்கோ உத்ரா... இவன் கிட்ட உன்னையே நீ இழந்து இருந்தா என்னாவாகி இருக்கும் சொல்லு... கண்டிப்பா உன்னால இதை ஏத்துக்கிட்டு இருக்க முடியுமா....”

‘அவள் கேள்வியும் சரிதானே தன்னால் இருந்திருக்க முடியுமா அவனை காதலித்ததையே ஏற்க மனம் இடம் கொடுக்காமல் வலியை கூட்ட அவனிடம் தன்னையே இழந்திருந்தால் உயிரோடு இருக்கவே மாட்டேன்.’ என்று நினைத்தாள்.

“உன் நல்ல நேரம் அவனை முன்னாலையே உனக்கு தெரிய வைச்சி இருக்கு இதை மறந்துடு அந்த நாய் இதோடு உன் வழியில குறுக்கே வராதுன்னு நம்புடா. அவன் கதை முடிஞ்ச ஒன்னு அதை நினைச்சி நீ கவலைபடுவது நல்லது இல்ல” என்று தோழிக்கு அறுதல் வார்த்தையை கூறி சமதானப்படுத்தினாள் அங்கிதா.

அங்கீதாவின் வார்த்தைகள் நல்ல விளைவையே கொடுத்தது உத்ராவின் எண்ணத்திற்கு.. கொஞ்சம் மனது தெளிந்தார் போல் ஆனது நாம தப்பிச்சிட்டோம் என்ற நினைப்பே அவளுக்கு பலம் கொடுக்க அவனை சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்து இருந்த சமயம் மீண்டும் ஒரு புயல் அவளை சுழற்றி அடிக்க நேரம் பார்ந்து இருந்தது.

இரண்டு மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல் அறைக்கு சென்று படுத்தவள் ஆழ்ந்த நித்திரைக்குள் செல்ல அவளின் அலைபேசியின் அழைப்பு மணி ஒலி எழுப்பியது.

இரண்டு மூன்று முறை அடித்த பின்னர் உறக்கத்தில் இருந்து எழுந்தவள் மொபைலில் இருக்கும் எண்களை பார்க்காமல் கண்கள் மூடிய நிலையில் போனை ஆன் செய்து காதில் வைத்தவளின் கண்கள் அதிர்ச்சியில் திறந்து கொண்டது பார்வை எதிர் முனையில் இருந்து வந்த குரளை கேட்டதும் நிலை குத்தியது போல் ஒரே இடத்தில ஸ்தம்பித்து நின்றது.

காதில் வைத்திருந்த அலைபேசி கையில் இருந்து நழுவி மெத்தையில் விழுந்தது பயப்பார்வையுடன் அதை எடுத்தவள் உடனே அணைத்து விட்டு கையில் கால்களை இறுக்க கட்டியபடி போனையே வெறித்து இருந்தாள்.

ஏசி அறையிலும் வியர்த்து கொட்டியது அழைப்பு மணி அடித்து அடித்து ஓய்ந்த நிலையில் வாட்ஸ்ப்பில் குருஞ்செய்தி ஒளி எழுப்ப அதை திறந்து பார்க்க மனம் தினைத்தாலும் கைகளை இயக்க முடியவில்லை அடுக்கடுக்காய் குறுஞ்செய்தி குவிய நடுக்கத்துடன் அதை எடுத்து திறந்து பார்த்தாள்.

“ஒழுங்கு மரியாதைய போனை எடு இல்ல உன் வீட்டுக்கு இப்போவே வருவேன்” என்று மிரட்டல் இருக்க அடுத்த நொடியே அழைப்பை ஏற்று காதில் பொறுத்தி இருந்தாள்.

அசாத்தியமான அமைதி ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவில் இருக்க அந்த அமைதியை எல்லாம் கிழித்தது போல் இருந்தது ஒளித்தது அவன் குரல்

“ஓரேயடியா ஒழிஞ்சிட்டான்னு நினைச்சி நிம்மதியா இருக்கியாடி கொலைகாரி” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியைப்போல் தாக்கி இருந்தது அவளை, “கொலையா......” என்றாள் அதிர்ச்சியாய்

“என்ன தெரியாத மாதிரியே கேக்குர ஒருத்தனை குத்திட்டு தப்பிச்சி வந்தியே அவன் இப்போ உயிரோடு இல்ல செத்துட்டான் காரணம் நீ” என்றான் அவள் மீது பழியை சுமத்தி.

“நான் நான் வேணும்னு செய்யல ப்ளீஸ் என்னை விட்டுடு” என்றாள் அழும் குரலில்.

“ஹேய் பேபி உன்னை விடவா நான் இவ்வளவு கஷ்டபட்டு உன் பின்னாடியே சுத்தி சூசைட் அட்டன் பண்ணி உன்னை மடக்கினேன்... நீ பச்ச புள்ள பேபி உனக்கு ஒன்னும் தெரியல” என்றான் கேலிக்குரலில்.

“அஸ்வீன் நான் உன்னை உண்மையா தானே லவ் பண்ணேன் அதுக்காகவாவது என்னை விட்டுடேன் என்னை ஏன் இப்படி பேசியே கொல்ற” என்றாள் பாவமாக.

அவள் அழுகையிலும் மனம் இளகாதவன் “என்ன பேபி காமெடியெல்லாம் பண்ற பட் நான் சிரிக்கிர மூட்ல இல்ல. ஏன் சொல்லு என் ஃபிரெண்ட் செத்துட்டான்” என்று நக்கலாக கூறியவன் “உன்னை விடுறதுனால எனக்கு என்ன யூஸ் டார்லிங் ??” என்றான்.

உத்ராவின் பக்கம் பலத்த அமைதி சிலையின் தோற்றமாய் அப்படியே இருந்தாள் இழுத்த பிடித்த மூச்சுடன் அமர்ந்து இருந்தாள்.

“பேபி.. ஹேய் பேபி லைன்ல தானே இருக்க நீ இருப்ப செல்லம் ஐ நோ. உன்னை பார்க்கும் போது எல்லாம் நீ இன்னைக்கு கிடைச்சிடுவ நாளைக்கு கிடைச்சிடுவன்னு எவ்வளவு ஆசை ஆசையாய் இருந்தேன் தெரியுமா...” என்றான் கிறங்கிய குரலில் அருவருப்பாய் உணர்ந்தவள் காதில் இருந்து போனை எடுத்து கண்களை இறுக்க மூடி அவன் பேச்சை சகிக்க முடியாமல் அழுதாள் இன்னும் சில அந்தரங்க விஷயங்களை கூற “ஷட் அப் அஸ்வின் நீ இவ்வளவு கெட்டவனா உன் கூட பழகினத நினைச்சி பார்க்கவே உடம்பு எல்லாம் கூசுது” என்று கத்த தொடங்கியவளை இடமறித்தவன் “புள்ளபூச்சி மாதிரி இருந்தவளா டீ நீ நல்ல பேசுற டீ அதான் எல்லாம் என்னை பத்தி தெரிஞ்சி போச்சே இனி மறைச்சி நல்லவனா நடிக்க என்ன அவசியம் இருக்கு சொல்லு அதெல்லாம் போகட்டும் இப்போ எதுக்கு ஃபோன் பண்ணேனா உன்னை நாளைக்கு நைட் ரூமுக்கு வந்துடுன்னு சொல்லத்தான் மறக்காம வந்துடு பேபி” என்று கூறினான்.

“பொறுக்கி நாயே வை டா ஃபோன என்ன தைரியம் இருந்த கூப்பிடுவ” என்று கத்த தொடங்கியவளை.

“ஸ்... பேபி ஏன் இவ்வளவு ஆவேசம் ஒரு கொலை பண்ணினத மறந்துட்டியா நாளைக்கு நைட் நீ வரலனா நாளை மறுநாள் போலீஸ் உன் வீட்டுக்கு வரும். நல்லா யோசிச்சிக்கோ உன் அப்பா அண்ணன் மானம் ஃப்ளைட் பிடிச்சி பறக்கும் டீ. என்னை மாட்டி விட்டுவிடலாம் தானே நினைக்கிற நான் மாட்டினாலும் அப்படியே ப்ளேட்ட திருப்பி போடுவேன் நீ தப்பு உன் கேரக்கடரே தப்புன்னு... சட்டத்துல ஆயிரம் வழி இருக்குடி நான் தப்பிச்சி வர... கொஞ்ச நாள்ள என் விஷயம் மறந்துடும் ஆனா நீ மாட்டினா பிரபல தொழில் அதிபர் மகள் காதல் கலியாட்டத்தில் வாலிபரை கொலை... ஹெட்டிங் எப்படி இருக்கு சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி நாளைக்கு நைட் இதே டைமுக்கு உனக்காக வெய்ட் பண்றேன் பேபி என்றவன் போனை கட் செய்து இருந்தான்.

தூக்கம் அவளை விட்டு தூர பறந்து இருந்தது. இந்த இரவு இப்படியே இருந்து விடாதா என்று அழுது கரைந்தாள். இரவு முழுவதும் அமர்ந்து இருந்தவளின் கண்கள் உறக்கத்தை மறந்து இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையறு நிலையில் ‘என்னை மாட்டிவிட்டாலும் பரவாயில்லை அதனால் எனக்கு கிடைக்கும் பெயரால் அண்ணன் தந்தையின் முகத்தில் எப்படி விழிப்பது' என்று பித்துபிடித்து போய் அமர்ந்து இருந்தாள். மூளை எங்கும் எதிரோலித்த ஒரே பெயர் ‘அஸ்வின்... அஸ்வின்... அஸ்வின்...’ அவனை நினைக்கவே கூடாது என்று உறுதி எடுத்து இருந்தவள் ஒரு நாள் இரவு முழுவதும் அவனையே நினைத்து கொண்டிருப்பதை என்னவென்று கூறுவாள். யாரிடம் கூறுவது அண்ணனிடம் கூறினாள் என்னை பற்றி என்ன நினைப்பானோ என்று எண்ணம் வர தந்தையிடம் செல்வோமா என்று நினைத்தாலும் ‘உன்னை நம்பி இருந்தேனே சீ நீ இவ்வளவு தானா' என்று ஒரு பார்வையே போதும் நான் உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கும்... ‘அம்மாவிடம் சொல்வோமா எனக்கும் மேல பயப்புடுவாங்களே. என்ன செய்ய.. என்ன செய்ய.. கேஷவ்.. கேஷவ்.. வேண்டாம் கோவத்துல ஏதாவது அவனை செஞ்சிட்டா என்னால கேஷவுக்கு தானே கஷ்டம்..... வேண்டாம்.... கடவுளே என்னை என்ன செய்ய காத்து இருக்க' என்று நினைத்து நினைத்து மறுகியவள் சித்தம் கலங்கிய நிலையில் தரையில் கையை அடித்து அழ. சட்டென அங்கீதாவின் நினைவு வர கடிகாரத்தை பார்த்தால் மணி 7 நெருங்க 5 நிமிடங்கள் இருக்க அலைபேசியை எடுத்து அவளுக்கு தொடர்பு கொண்டாள்.

இரண்டாவது அழைப்பிலையே பேசியை எடுத்துவிட “ஹலோ.. ஹலோ . அங்கி நான் நான் உத்ரா பேசுறேன் டீ” என்றாள் பதட்டமாக.

தூக்க கலக்கத்தில் இருந்தவள் இவளது பதட்டமான குரலை கேட்டதும் “என்னடி என்ன ஏன் இப்படி குரலெல்லாம் நடுங்குது ?.” என்றாள்.

“நான் பண்ண பாவம் என் பின்னாடியே சுத்துதுடி என்னை கொல்லாம விடாது போல டீ” என்றாள் அழும்குரலில்..

“புரியம்படியா சொல்லுடி நீ என்ன சொல்ல வர அஸ்வீன்., அஸ்வீனால பிரச்சனை யா ?.” என்றாள் குரலில் சந்தேகத்தை நிறைத்து

“ம்……” என்றான்

“என்னடி என்ன பண்ணான்”

நேற்று இரவு நடந்ததை பாதி கூறும் போதே உடைந்து விட “வெய்ட்ட நான் வரவா” என்றாள் அங்கீதா. “இல்ல அங்கி என்னால இங்க பேச முடியாது சிவன்கோவில் பக்கத்துல இருக்க பார்குக்கு வா” என்று உத்ரா கூறினாள். தோழியிடம் பேசினாள் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்பினாள்.

“உள்ள வாயேன் கேஷவ் வம்பு பண்ணிக்கிட்டு இருக்க” என்றார் ஆதி

“தயவுசெய்து ப்ளீஸ் அவர் இருக்க இடத்துல என்ன கூப்பிடாதமா” என்றான் பரிதாபமாக.

“டேய் அவர்கூட யாருடா நிக்க சொன்னா. என்கூட வந்து நில்லுடா” என்றார் கெஞ்சலாக.

“மா இன்னைகாவது சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறேன். அவர் முன்னாடி வந்து நின்னு கோவில்லையும் பேச்சு வாங்கனுமா ப்ளீஸ் மா ஃபிரெண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க நான் கிளம்புறேன் மா” என்றான்

“பிறந்த நாள் அதுவுமா கோவிலுக்கு வரலனா எப்புடிடா. அவர் கோவபடுவாருடா” என்று கூற அவரை கொஞ்சம் தள்ளி நிறுத்தியவன் அவர் கால்களில் விழுந்தவன் “எனக்கு எங்க அம்மாவோட ஆசிர்வாதம் எப்போவும் இருக்கும் இது உங்க திருப்திக்காக” என்றவன் கோவில் கோபுறத்தை பார்த்து ஒரு கும்பிடு பேட்டுவிட்டு “அவர்கிட்ட நீங்களே ஏதாவது சொல்லிடுங்க ப்ளீஸ்” என்று அவரை தாஜா செய்து பைக்கில் ஏறிவிட்டான்.

போகும் வழியில் சாருகேஷிற்கு கால் செய்ய அவன் ஃபோன் நாட் ரீச்சபில் என்ற செய்தியை அறிவித்தது. ‘காலையிலையே கால் பண்ணி இருக்கான் அட்டன் பண்ணல இப்ப நான் கால் பண்ணா இவன் அட்டன் பண்ணல எங்க போயிருக்கான்' என்று யோசித்தவாறே சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது. வண்டியை நிறுத்தியவன் அலைபேசி எடுத்து பார்க்க வேறு ஒரு நண்பன் தொடர்பு கொண்டிருந்தான். “மச்சி வந்துட்டிங்களாடா ??” என்றான். “எல்லோரும் ஆஜர் மச்சி சாருகேஷூக்கும் உனக்கும் தான் வெய்ட்டிங்” என்றான் அவன்.

“இன்னும் அவன் வரலயாடா ?.” என்றான் கேஷவ்.

“அவங்க அப்பாவ பிக்கப் பண்ண ஏர்போர்ட் போயிருக்கான் மச்சி இன்னும் ஹஃப்னவர்ல வந்துடுவான். நீ வா மச்சி வெய்ட்டிங்” என்று அவனுக்காக காத்திருப்பதாக கூற செல்லை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் கண்களில் அழுத முகத்துடன் பார்கில் இருந்து வெளியே வரும் உத்ரா விழுந்தாள். பைக்கை விடுத்து இறங்கியவன் அவள் வரும் வழியில் நின்றான். தன் போக்கில் நடந்து வந்தவள் அருகில் வரவர கேஷவ் நிற்பதை பார்த்து விட்டாள் உத்ரா...

விடாபிடியாய் மனதில் கொஞ்சமே கொஞ்சம் மிச்சமாய் இருந்து சக்தியும் கரைந்து இருந்தவளுக்கு கேஷவினை அங்கு பார்த்தும் ஏதோ பிடிப்பதற்கு பற்றுகோல் கிடைத்தது போல பிடிமானத்திற்காக அவனின் கையைபிடித்தவள் அப்படியே அவன் மீது சரிந்து இருந்தாள்.

சாலையின் பின் பக்கமாக தொலைவில் இருந்து இதை பார்ப்பவர்களுக்கு கேஷவின் மார்பில் உத்ரா சாய்ந்து பேசிக்கொண்டு இருப்பது போல தான் இருக்கும் அந்த தோற்றம். அப்போது அவ்வழியே ஏர்போர்ட்டில் இருந்து வந்த வேதநாயகத்தின் கண்களிலும் அப்படியே பட கோபம் நிறைந்த குரலோடு “காரை நிறுத்து சாரி” என்றார் வேதநாயகம்.

அப்பாவின் தீடீர் மாற்றத்தைக் கண்டவன் “என்னங்கப்பா” என்றான் வண்டியை நிறுத்த சொல்லியதற்கான காரணம் அறிய.

“என்ன நடக்குது இங்க.... என்ன கருமம் இதெல்லாம்” என்றார் அவர்கள் நிற்கும் இடத்தை கைகாட்டி.

கேஷவும் உத்ராவும் இருக்கும் நிலையை கண்டவன் “அப்பா எனக்கும் ஒன்னும் புரியல... இப்பதான் நானே பாக்குறேன்... அவங்க ஒருத்தர ஓருத்தர்………” என்று முடிக்கும் முன்னே “என்ன காதலிக்கிறாங்களா இதுக்கு நீயூம் சப்போர்ட்டோ !.” என்றார் கோவமாக “அண்ணன் செய்ற வேலையாடா இது ?.” என்றார்.

“அப்பா...” என்று தடுமாறியவன் “எனக்கும் இந்த விஷயம் தெரியாதுபா... அவ நடவடிக்கைய வைச்சிதான் தெரிஞ்சிக்கிட்டேன்... இன்னும் கேஷவ்கூட சொல்லல” என்றான் தனக்கு எதுவும் தெரியாது என்று உணர்த்த.

“சாரி....காதலிக்கரத தப்பு சொல்லல படிக்கிர வயசுல காதல் கீதல் கண்ட கண்ட கருமம் எல்லாம் வேண்டாம் தான் சொல்றேன்... இப்படி பப்ளிக் பிளேஸ்ல நடந்துக்கறது நல்ல இருக்கா !. ஊருல யாரை பத்தி பேசுவாங்க உன் தங்கச்சிய பத்தி தானே !.... எனக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சின்னு காட்டிக்காத வீட்டுக்கு வரட்டும் பாக்கலாம் இப்போ கிளம்பு” என்று கூற அவர்களை பார்த்துக்கொண்டே கூற வண்டியை கிளப்பினான் சாருகேஷ்.

இங்கு சாய்ந்தவளோ நிற்க தெம்பு இல்லாமல் அப்படியே சரிந்து விட்டிருந்தாள். சாதாரண மயக்கமாக இருக்க அந்த பார்க்கிலே அமரவைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான்.

மெல்ல கண்களை திறந்தவள் சுற்றிலும் தேடினாள்.

“என்னடி ஒவ்வொரு வாட்டியும் மயங்கி விழற இன்னைக்கு என்ன ஆச்சி எதை பார்த்து பயந்த ?.” என்றான் பக்கத்தில் அமர்ந்தபடி.

பலத்த அமைதி அவளிடத்தில்.

அவள் சோக முகம் பார்த்தபடி புருவம் உயர்த்தி “நீ ரொம்ப மாறிட்ட உத்ரா எதையோ மறைக்கிற” என்றான்.

அவனை நிமிர்ந்து கூட காணவில்லை கண்டாள் எங்கே அனைத்தையும் கொட்டிவிடுவாளோ என்ற பயம் அதனாலயே இன்னும் அமைதியாய் இருந்தாள்.

“ஏய் லவ் பண்றியா ?.” என்றான் தனக்கு எட்டிய அறிவிற்கு உதித்ததை வைத்து.

அவன் கண்டுகொண்டதும் பயத்தில் அவனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் ‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.

“சம்திங் ராங்....” என்று தலையை ஆட்டியது ‘உன்னை நம்பவில்லை' என்பதாய் இருந்தது. “சரி என்ன இங்க தனியா வந்து இருக்க அதுவும் இந்த அழுமூஞ்சி கோலத்தோட ?” என்றதும் மலுக்கென்று கன்னத்தில் உருட்டு ஓடியது இரு நீர்த்துளிகள்.

அவள் வாயை திறக்கவே இல்லை அமைதியாக நிலம் நோக்கியிருந்தாள். அன்று சனிக்கிழமை விடுமுறை தினமானதால் பிள்ளைகளின் இறைச்சல் நிறைந்த விளையாட்டுக்கள் வேறு இருந்ததால் அவன் அழைத்தது அவளின் செவிப்பாறையை தீண்டவில்லையே என்று “உத்ரா... உத்ரா.... நான் பேசுறது கேக்குதா ?.” என்று கைகளை குவித்து அவளின் காதின் அருகில் சென்று சத்தமாக அழைக்க எந்த சலனமும் இன்றி அவனை திரும்பி பார்த்தாள். “என்னடி இப்படி சோககீதம் வாசிக்கிற. இன்னைக்கு என்ன நாளாவது தெரியுமாடி காலைல இருந்து ஒரு ஃபோன் கூட பண்ணல எருமை” என்றான்.

அவள் என்னவென்று யோசிப்பாள். அவளைதான் அந்த பாதகன் அஸ்வீன் யோசிக்க விட வில்லையே அடுத்து என்ன செய்வது அங்கீதாவும் வரவில்லை அவளுக்கு முயற்சி செய்து செய்து விரல் ரேகை தேய்ந்து அழிந்து விட்டது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்க. இதில் அவன் கேட்ட கேள்விக்கு இவள் எங்கிருந்து பதிலை சொல்வது... பேய் முழி முழித்தவளை ஒரு மார்கமாக பார்த்தவன் “இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் உத்ரா” என்றான் ‘இது கூட நியாபகம் இல்லையா' என்ற அர்த்தத்தில்.

அவன் கூறியது கருத்தில் பதிந்ததே தவிர மூளைக்கு எட்டவில்லை அனிச்சை செயலாக “ஹேப்பி பர்த் டே கேஷவ்...” என்றவள் “நான் நான் கிளம்புறேன்” என கூற திரும்பி நடக்க. “இருடி வீட்ல விட்டுறேன்”. என்றவனை விடுத்து “நான் போயிடுறேன்” என்று விடாப்பிடியாக கிளம்பியவளை விச்சித்திரமாய் பார்த்தான் கேஷவ்.

“அன்னைக்கு தான் நான் உத்ராவ உயிரோட கடைசியா பார்த்தது மறுநாள் காலைல அவ இறந்துட்டான்ற நியூஸ் தான் எனக்கு வந்தது .... இடையில என்ன நடந்தது ஒன்னுமே புரியல அவ இறந்துட்டான்ற தகவல் கிடச்சதும் அவளை பாக்க ஓடினேன் அங்க நானே எதிர்பாக்கத அதிர்ச்சி எனக்காக காத்திட்டு இருந்தது”

ஒரு நிமிஷம் எங்களையெல்லாம் நினைச்சி பாக்கலையே இவ உன்னை உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என் நெஞ்சிலே நெருப்பை அள்ளி வைச்சிட்டு போயிட்டியே என்று ஜானிகியின் அழுகுரல் வீட்டையே நிறைத்து இருந்தது.

பாவம் இவ்வளவு சின்ன வயசு ஆக்ஸிடன்ட்ல செத்துடுச்சி பா என்றனர் சிலர்.... பெரிய இடத்து சமாசாரம்பா ஏதாவது அப்படி இப்படி இருந்து இருக்கும் வீட்டுல கண்டிச்சி இருப்பாங்க இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் எங்க கேக்குதுங்க அதான் இப்படி பண்ணிக்கிச்சி என்றனர் ஒருசிலர்.. சாவு வீட்டிற்குள் இருந்தும் இவர்களின் வம்பு வளர்க்கும் புத்தி என்றுதான் மாறுமோ தன் பின்னால் இருக்கும் அழுக்கை பார்க்காமல் அடுத்தவன் முதுகை பற்றி பேசம் கணவான்களே இந்த சமுதாயத்தில் அதிகம்.

துக்க வீட்டிற்குள் கேஷவின் குடும்பம் மொத்தம் வர கேஷவை கண்ட சாருகேஷின் கையில் இருந்த கடித்தை அவள் முகத்தில் விட்டெறிந்தான் கோபமாக.

“அநியாயமா என் தங்கச்சிய சாகடிச்சிட்டியேடா படுபாவி” என்று அவனின் சட்டையை பிடித்து அவனின் இரு இன்னங்களிலும் அடித்தான்.

ஒன்றும் புரியாமல் அப்படியே இடிந்து போய் இருந்தான் கேஷவ்... ஜெய்ந்தும் கார்த்திக்கும் சாருகேஷின் கைகளை விலக்கி விட “என்னப்பா என்னென்னமோ சொல்ற என்ன பா ஆச்சு” என்றார் ஆதி “உன் நண்பனை பற்றி உனக்கே தெரியாதா பா !.”

“இதோ இதோ இத படிச்சி பாருங்க உங்க பிள்ளையோட அருமை பெருமைகளும் அப்பதான் இவனோட உண்மையான முகமும் தெரியும்” என்று அதனை கைக்காட்ட அந்த கடிதத்தை எடுத்த ஜெயந்த் ராஜாராமனை பார்க்க அவர் கைகளில் கொடுத்தான் தம்பியின் முகத்தை பார்த்தபடி. நண்பன் கேட்ட அதிர்ச்சியில் இருந்து மிளாதவன் நண்பனையே பார்த்த வண்ணம் இருந்தான்.

“அன்புள்ள அண்ணாவிற்கு,

உன்னை அண்ணான்னு கூப்பிடறது உனக்கு ரொம்ப பிடிக்கும்ல சாரி.... எனக்கும் தான் ஆனா ஒவ்வொரு முறையும் உன்னை திட்டும் போதும் நீ செல்லமா அடிக்கிறது அதை விட பிடிக்கும் டா அதனாலதான் உன்னை வம்பு இழுத்துட்டே இருப்பேன் ணா

ஐ யம் சாரி டா அண்ணா இந்த சாரி எதுக்குன்னு பாக்குறியா உன்னை அம்மாவ அப்பாவ எல்லாரையும் ஏமாத்திட்டு இந்த உலகத்தை விட்டே போக போறேன்ல அதுக்குதான்...

என்னை சுத்தி இருக்கவங்க எல்லாருமே நல்லவாங்கன்னு நான் நம்பினேன் டா நான் உங்கிட்ட சொல்லி இருக்கனும். உண்மைய சொல்லி இருக்கனும் எல்லாரும் நல்லவங்கன்னு நினைச்சது பொய் ஆகிடுச்சே அண்ணா.... உன்னையும் அப்பாவையையும் போல என் கூட பழகனவனையும் நல்லவன்னு நினைச்சிட்டேன் டா அவன் என்னை ஏமாத்திட்டான் என்னை ஏமாத்திட்டான்.

நான் உயிரோடு இருந்து உங்க மானம் கௌரவம் போகறத விட நான் செத்து போறது நல்லுது ண்ணா அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கோ ண்ணா.. என்னை பத்தி தெரிய வேண்டாம் ரோம்ப கவலை பட்டு மனசு ஒடஞ்சி போயிடுவாங்க நான் போறேன் லவ்யூ ண்ணா இன்னொரு ஜென்மம் இருந்தா அதுலயாவது நான் உங்களுக்கு எல்லாம் உண்ணையா இருக்கனும்.

இப்படிக்கு

உத்ரா..

“அவ வேற ஒருத்தன்னு தானே போட்டு இருக்கா சாருகேஷ் இவன்னு மீன் பண்ணலியே”

இவன் இவன்னு போடலையா நல்லா படிச்சி பாருங்க ஜெய் அண்ணா நானும் அப்பாவும் தவிர்த்து அவ பழகிய ஒரு ஆம்பளனா அது கேஷவ் தான் அது போதாதா.... இரண்டு முனு முறை அவங்க தனியா சந்திக்கிறத நானே பாத்திருக்கேன்...” என்றான் கேஷவினை எறிக்கும் பார்வையோடு.

அவன் பக்க நியாயத்தை என்னவென்று கூறுவான்... ‘அவள் பயந்த முகமாய் தானே இருந்தாள் ஒரு வேலை இதை நினைத்து தான் பயந்து இருப்பதாலோ நான் தான் அவளை கவனிக்காமல் விட்டேனோ ... ஒருவனை நம்பி ஏமாந்தேன்னு ஏன் எங்கிட்ட சொல்லல அவ்வளவு முக்கியம் இல்லாதவனாய் இருந்துவிட்டேனா உத்ரா. சாருகேஷ் போலதானே நானும் உனக்கு' என்று கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்டு இருந்த அவள் உருவத்தையே கலங்கிய மனதோடு பார்த்தான் கேஷவ். சாருகேஷின் குற்றச்சாட்டினை மறுக்கவும் இல்லை அவனை தடுத்து பேசவும் இல்லை உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தவன் மூளை செயல்பாடுகளை நிறுத்தியது போல் அப்படியே நின்றிருந்தான்...

சாருகேஷ் மூர்க்கமாக இருக்க பெற்றவர்கள் இருவரும் மகளின் உருவத்தையே பார்த்திருந்தனர். வேதநாயகத்தின் அருகில் சென்ற ராஜாராமன் அவரின் தோளில் கைவைத்து ஆறுதல் அளிக்க கண்கலங்கி இருந்தார் அந்த பெரிய மனிதர். ஒரு பிள்ளையை பெற்று சீராட்டி பாலூட்டி வளர்த்து ஆளாக்கி அவளை சீறும் சிறப்புமாய் திருமணம் நடத்திவைக்க கனவு கண்ட உள்ளங்கள் அல்லவா இன்று எமனுக்கு பறிகொடுப்பது என்பது எவ்வளவு கொடுமையான வலி அதனை அனுபவித்து கொண்டு இருந்தனர் அந்த பெற்றவர்கள்.

“ஏதேட்சையா சந்தித்ததை வைத்து பேச கூடாது சாருகேஷ்” என்றான் ஜெயந்த் தம்பியை குற்றமற்றவனாய் நிரூபிக்க.

“நேத்து இதே இரெண்டு பேரும் ஓருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சிட்டு இருக்கரத இந்த கண்ணால பார்த்தேன் இல்லேன்னு சொல்ல சொல்லுங்க” என்று ஆக்கோரஷமாய் கத்தியவன் கேஷவின் சட்டையினை கொத்தாக பிடித்து அவன் கன்னத்தில் அறைந்தான்... அவன் அடித்தது கூட வலிக்கவில்லை அவன் கூறிய வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்றது தங்கையாய் நினைத்தவளை காதலியாக சித்தரித்து பேசுபவனை என்ன சொல்லி தன்னை நியாயபடுத்திக் கொள்வான்... ஜெயந்தும் கார்த்திக்குமே அவனை விலக்கி அவனை தாக்காதவாறு நின்றனர். “சாருகேஷ் உண்மை என்னன்னு தெரியவரும்போது ரொம்ப வருத்தபடுவே என் தம்பியபத்தி என்னை விட நண்பனா உனக்கு தெரியலைன்னு நினைச்சா கஷ்டமா இருக்கு” என்றான். அந்த இடமே சலசலத்து இருக்க சிறிது நேரத்திற்கு எல்லாம் போலீசுக்கு தகவல் பறக்க தக்க நேரத்தில் காவலர்கள் கேஷவினை காவல் நிலயத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

இதில் ஸ்தம்பித்த நிலைதான் கேஷவிற்கு ஒரு வார்த்தை பேசவில்லை.... உத்ராவின் இறப்பு அவற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அவளின் சாவிற்கான காரணம் இன்னும் மரணவலியை தந்தது.. மகனின் மௌனம் ராஜாராமனை கோபப்டுத்தியதால் அவனிடத்தில் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தார்.

“எங்க அப்பா அப்பாக்கூட பேசரத நிறுத்திட்டார்... இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லிட்டார்... என்னை அப்போ நம்பின மூனு ஜீவன்கள் ஒன்னு என் அம்மா ஜெய் கார்த்திக் இவங்க இல்லனா இப்போ நான் இல்ல... ஒரு இயந்திரமா இருந்தேன், நடந்தேன் வாழ்க்கையில பிடிப்பு இல்ல படிப்பு முடிஞ்சுது இங்க இருக்க இருக்க பழைய நியாபகம் செல்லு போல மனச அறிச்சி அறிச்சி நரக வேதனையா இருந்துச்சி” என்றான். அவள் புகைபடத்தை கையில் எடுத்து.

“இது முதன் முதலா நான் கேமிரா வாங்கினதும் உத்ரா என்கூட அடம்பிடிச்சி எடுத்த போட்டோ இதை எடுத்தது கூட சாருகேஷ் தான் அவளோட சம்மந்தபட்டது எதுவும் என்கிட்ட இல்ல இதை தவிர” என்று அவளின் புகைபடத்தால் முகத்தை மூடிக்கொண்டான்.

“என்னங்க பீளிஸ் என்னை என்னை…” என்று அவன் அருகில் சென்று அவனை தொட.

“ஜஸ்ட் ஷட் அப் பாரு... டோன்ட் டோன்ட் டச்..... லீவ் மீ அலோன் ப்ளீஸ் ஸ்டே அவே.... என்னோட கோவம் உன்னை காயபடுத்திட்டா அதை என்னால தாங்க முடியாது பாரு ப்ளீஸ் ஸீடே அவே...” என்றான் கர்ஜனையான குரலில்.

தொடரும்.

[QUOTE="Bhagi, post: 3763, member: 18"] கல்லூரி செல்லும் அவசரத்தில் இருந்த சாருகேஷ் ஜானகியை உரக்க அழைத்தபடி உணவு மேசையின் முன் கைபட்டையின் கடைசி பகுதியை மடித்தபடி வந்து அமர்ந்தான். “இதோ வரேன் டா” என்று கையில் காலை உணவுடன் உணவுமேசை அருகில் வந்தவர் சாருகேஷிற்கு பரிமாற ஆரம்பித்தார். விடு முழுவதும் பார்வையை சுழல விட்டவன் “எங்கம்மா அவ.. காலையில இருந்து காணோம் இன்னும் எழுந்திருக்கலையா மகாராணி” என்றான் வாயில் உணவை வைத்தபடி “சாரி....” என்று அவன் பேச்சை நிறுத்தியவர் “பாவம் புள்ள நைட்டெல்லாம் அனத்திக்கிட்டே இருந்தா. காய்ச்சல் வேற உடம்பு நெருப்பா இருக்கு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகனும். படுத்து இருக்கா நீ அவள கிண்டல் பண்ணிட்டு இருக்க” என்றார் ஜானகி. “அப்படியா” என்று உணவினை விடுத்து எழுந்தவனை தோளில் கை வைத்து அமரவைத்தவர் “நீ சாப்பிடு சாரி அவளுக்கு மருந்து கொடுத்து இருக்கேன். சாப்பிட்டு போய் பாரு. அன்னத்துல கை வைச்சிட்டு பாதில எழுந்திரிக்க கூடாது” என்று தன்மையாகவே கூறினார். “ம் சரி மா” என்று அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் “அப்பா எங்கமா ?. அவரையும் காணோம்” என்றான். “இன்னைக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்காம் அதனால சீக்கரமாவே கிளம்பிட்டாரு” என்றவர் தட்டில் இன்னும் உணவினை பரிமாற ஜானகிக்கு ‘போதும்’ என்று கைகாட்டி நிறுத்தியவன் “போதும் மா நான் போய் அவள பார்த்துட்டு காலேஜ் கிளம்புறேன். நீங்க அவள கூட்டிட்டு ஹஸ்பிட்டல் தனியா போய்டுவிங்களா நான் வேணா கூட வரேனே ?” என்றான். “வேண்டாம் சாரி நானே போய் பாத்துட்டு வந்துடறேன் நீ காலேஜ் கிளம்பு” என்று கூறி அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருக்க, உத்ராவை பார்ப்பதற்காக அறைக்கு சென்றான் சாருகேஷ். கும் இருட்டு. இருளின் மத்தியில் பயமுக்ததுடன் ஒரு உருவம் தலைக்கு மேல் ஊசல் ஆடும் கத்தி இப்பவோ அப்பவோ என்று அந்த உருவத்தின் உயிரை குடிப்பதற்கு காத்திருப்பது போல் தொங்குவதாய் இருந்தது. கூறிய நகங்களை கொண்ட இரு கைகள் அந்த உருவத்தின் கழுத்தை நெருக்குவதற்கு அருகில் வரவர அந்த உருவத்தின் முகம் இப்போது சற்று மங்களாய் தெரிந்தது இருகைகளும் கழுத்தை நெறிக்க மங்களாய் தெரிந்த முகம் உத்ராவின் முகமாய் தெளிவாய் தெரிந்ததும் உடலெல்லாம் தூக்கி போடவும், சாருகேஷ் கதவினை திறந்து உள்ளே நுழையவும் சரியாய் இருக்க அவளின் உடல்நிலையை பார்த்தவன் அருகில் சென்று “உத்ராமா உத்ரா” என்று உலுக்க “அம்மா அம்மா என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று அலறி அடித்து துடித்து எழுந்தாள். “அண்ணா அண்ணா” என்று அவனை ஒன்டினாள் அவள் நிலையை பார்த்தவன் “அம்மா அம்மா இங்க வாங்க” என்று அன்னைக்கு குரல் கொடுத்தவன் “உத்ராமா உத்ரா என்ன டா ஏன் கத்தின என்ன ஆச்சு ?.” என்று தலையை வருடி விட்டான் அவளின் மிரட்சியை போக்க நினைத்தான். படபடப்புடன் இருந்தவளின் முகம் பயத்தில் மிரண்டு இருந்தது கைகால்கள் எல்லாம் நடுங்கியது வியர்வையில் குளித்தவள் போல் முகமெல்லாம் வியர்வை துளிகள் இடம் பிடித்து இருந்தது. அவளின் நிலையயை பார்க்க சாருகேஷிற்கு பாவமாய் இருந்தது ‘எதை நினைத்து அல்லது கண்டு பயந்து அலறி இருப்பாளோ' என்று, அவளும் தெளிவில்லாமல் அவன் கைகளை இறுக பிடித்துக்கொள்ள அவளை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டவன் “ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல” என்று ஆறுதல் கூற அறைக்கு வந்த ஜானகிக்கு ஏதோ விளங்கியது போல் “மறுபடியும் கனவு கண்டியாமா ?.” என்று மகளிடம் வினவினார். “அண்ணா... அண்ணா எனக்கு பயமா இருக்கு என்னை விட்டுடாத எனக்கு பயமா இருக்கு” என்று அனத்தியபடி அவனிடம் ஒண்டினாள். அவளின் உளறலை கேட்டவர் “என்னடா இது, இப்படி நடுங்குறா. என்ன ஆச்சு இவளுக்கு நைட்டு கூட இரெண்டு மூனு முறை அலறி அலறி எழுந்துட்டா எங்க போய் எதை பார்த்து பயந்தான்னு தெரியலையே” என்று புலம்பியவர் விறுவிறுவென புஜை அறைக்கு சென்று சாமிபடங்களுக்கு முன் நின்று கைகூப்பி வணங்கி தட்டில் இருந்த விபூதியை எடுத்து வந்து மகளுக்கு வைத்து விட்டவர் “ஒன்னும் இல்லடா பயப்படாத பயப்படாத” என்றவர் மகளை பார்த்து பறிதவிக்க ஆரம்பித்துவிட்டார். “அம்மா ஒன்னுமில்ல மா நீங்களும் பயப்புடாதீங்க நான் அவள ஹால்பிட்டல் கூட்டிட்டு போறேன் நீங்க இருங்க” என்று கூற “இல்ல இல்ல நானும் வறேன் இல்ல நம்ம பேமலி டாக்டருக்கு ஃபோன் பண்ணு வரமுடியுமான்னு கேளு இல்லனா நாமளே போய் பார்த்துட்டு வந்திடுவோம் இதுக்கு மேல காத்திருக்க வேண்டாம் உடம்பு வேற தூக்கி தூக்கி போடுது காய்ச்சல் வேற குறையல” என்றவர் மகளின் பயந்த நிலையை கண்டு கலங்கிபோனார். அவளை பரிசோதித்த மருத்தவர் “ஏதோ அவங்க மனச ரொம்ப பாதிச்சி இருக்கு அதுதான் பயத்துக்கான காரணம் ஒன்னும் இல்ல அவங்கள தனியா விடாதீங்க பயந்து போய் இருக்காங்க” என்று கூறி சில மாத்திரை மருந்துகளும் கொடுத்தவர் அவள் உறக்கத்திற்க்காக ஊசியினையும் செலுத்தி அனுப்பினார். இரண்டு மூன்று நாட்கள் அதே மன அழுத்தத்துடன் இருந்தவள் சிறிது சிறிதாக வெளியே வர ஆரம்பித்தது இருந்தவள். முற்றிலும் அந்த சம்பவத்தை மறக்கமுடிமாமல் தவித்துக்கொண்டு இருந்தாள். அவள் சிரிப்பு பேச்சு ஆட்டம் பாட்டம் என அனைத்தும் ஒடுங்கியது காலையும் மாலையும் அண்ணனுடனே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள். தோழியோடும் அதிக கலகலப்பு இல்லை எதையோ இழந்தவள் போல இருந்தாள். உத்ராவின் நடவடிக்கைகளை கவனித்தபடி இருத்தாள் அவளின் தோழி அங்கிதா “ஏய் உத்ரா. என்னடி எப்பவும் சைலட்டா இருக்க ?.” “நான் நார்மலா தானே இருக்கேன் அங்கி* “நீ நார்மலா..... சரி உத்ரா ஏதாவது பழைய தமிழ் சினிமா பாத்தியாடி ?” “என்ன அங்கி சம்மந்தமில்லாம என்ன டீ கேள்வி கேக்குற பின்ன என்னடி லவ் ஃபெயிலியர் ஆன ஹிரோயின் மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு இருக்க எவ்வளவு கலகலப்பா இருந்தியோ அவ்வளவு சைலன்டா ஆயிட்டியேடி” என்றிட தோழியின் வார்த்தைகளில் மௌனமாய் கண்கலங்கி அமர்ந்தாள் உத்ரா. “ஏய் என்னடி ஏன் இப்படி அழுகுற என்னமோ நடந்து இருக்கு என்னடி ஆச்சு” “ஒன்னுமில்லாம யாராவது அழுவாங்களா ?” என்று அவளிடம் கேள்வியை தொடர பதில் தர முடியாமல் எழுந்து செல்ல இருந்தவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தாள் அங்கீதா “நில்லு உத்ரா நேத்து ஆண்ட்டிய கோவில்ல பார்த்தேன் உன்னை பத்திதான் பேசிட்டு இருந்தாங்க. நீ ஏதோ மாதிரி இருக்க அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க சரிபண்ண முடியலையேன்னு கஷ்டப்பட்டாங்க” என்றாள் கண்டிப்புடன். உத்ராவின் கண்களில் வெறுமையான பார்வை குடியேறியது... அவளின் கைகளை விடுத்து அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தவளை சுற்றிலும் மரங்கள் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் இறங்கி இருந்தனர். அவர்களை நோக்கி வெறித்த பார்வையுடன் சிலையென அமர்ந்து இருந்தாள். “உன் மனசுல என்னமோ இருக்கு மறைக்க பாக்காத உன் மனசுல. இருக்கரத இறக்கி வைச்சிடு. ரொம்ப அழுத்தம் கொடுத்தா அது உன்னை மட்டும் பாதிக்காது உத்ரா உன் குடும்பத்தையும் பாதிக்கும்” என்று அறிவுறை கூறி அவள் மனதில் இருப்பதை வெளியே கொண்டு வர முயற்சியை மேற்கொண்டாள். “சரி உத்ரா சாரி உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல அப்படியே இருக்கட்டும்... நான் நமக்காக தான் பேச வரை. நம்முடைய நட்பிற்காக பேசவந்தேன். என்னை அப்படி நீ நினைக்கலன்னும் போது சாரி உத்ரா உன்னை டிஸ்டர்ப் பண்ணல” என்று எழுந்து கொண்டவளை கட்டிபிடித்து உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள். தனக்குள்ளையே மூடி மூடி அழுதுகொண்டு இருந்தவள் இன்று அனைத்தையும் தோழியிடம் கொட்டி அழுதுகொண்டு இருந்தாள். அவள் இருக்கும் நிலையை அறிந்தவள் “எப்படி எப்படி அவனை காதலிச்ச யார் அவன்... அவன் பேரு என்ன நம்ம காலேட்ஜா ?.” என்று கேட்க ‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் அவனை பற்றிய தகவளை கூறாமல் அவனுடைய பெயரை மட்டும் கூறியிருந்தாள். “இப்படி ஒருத்தனை மனசார நெனஞ்சேன்னு நினைக்கும் போது செத்துடலாம் போல இருக்கு அங்கி அவன் என்னை ஏமாத்திடான்” என்று அழுதாள். “கண்ணை துடை டீ நீ ஏதுக்கு இப்போ அழுகுற உனக்கு நல்லது நடந்ததுன்னு நினைச்சிக்கோ உத்ரா... இவன் கிட்ட உன்னையே நீ இழந்து இருந்தா என்னாவாகி இருக்கும் சொல்லு... கண்டிப்பா உன்னால இதை ஏத்துக்கிட்டு இருக்க முடியுமா....” ‘அவள் கேள்வியும் சரிதானே தன்னால் இருந்திருக்க முடியுமா அவனை காதலித்ததையே ஏற்க மனம் இடம் கொடுக்காமல் வலியை கூட்ட அவனிடம் தன்னையே இழந்திருந்தால் உயிரோடு இருக்கவே மாட்டேன்.’ என்று நினைத்தாள். “உன் நல்ல நேரம் அவனை முன்னாலையே உனக்கு தெரிய வைச்சி இருக்கு இதை மறந்துடு அந்த நாய் இதோடு உன் வழியில குறுக்கே வராதுன்னு நம்புடா. அவன் கதை முடிஞ்ச ஒன்னு அதை நினைச்சி நீ கவலைபடுவது நல்லது இல்ல” என்று தோழிக்கு அறுதல் வார்த்தையை கூறி சமதானப்படுத்தினாள் அங்கிதா. அங்கீதாவின் வார்த்தைகள் நல்ல விளைவையே கொடுத்தது உத்ராவின் எண்ணத்திற்கு.. கொஞ்சம் மனது தெளிந்தார் போல் ஆனது நாம தப்பிச்சிட்டோம் என்ற நினைப்பே அவளுக்கு பலம் கொடுக்க அவனை சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்து இருந்த சமயம் மீண்டும் ஒரு புயல் அவளை சுழற்றி அடிக்க நேரம் பார்ந்து இருந்தது. இரண்டு மூன்று வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல் அறைக்கு சென்று படுத்தவள் ஆழ்ந்த நித்திரைக்குள் செல்ல அவளின் அலைபேசியின் அழைப்பு மணி ஒலி எழுப்பியது. இரண்டு மூன்று முறை அடித்த பின்னர் உறக்கத்தில் இருந்து எழுந்தவள் மொபைலில் இருக்கும் எண்களை பார்க்காமல் கண்கள் மூடிய நிலையில் போனை ஆன் செய்து காதில் வைத்தவளின் கண்கள் அதிர்ச்சியில் திறந்து கொண்டது பார்வை எதிர் முனையில் இருந்து வந்த குரளை கேட்டதும் நிலை குத்தியது போல் ஒரே இடத்தில ஸ்தம்பித்து நின்றது. காதில் வைத்திருந்த அலைபேசி கையில் இருந்து நழுவி மெத்தையில் விழுந்தது பயப்பார்வையுடன் அதை எடுத்தவள் உடனே அணைத்து விட்டு கையில் கால்களை இறுக்க கட்டியபடி போனையே வெறித்து இருந்தாள். ஏசி அறையிலும் வியர்த்து கொட்டியது அழைப்பு மணி அடித்து அடித்து ஓய்ந்த நிலையில் வாட்ஸ்ப்பில் குருஞ்செய்தி ஒளி எழுப்ப அதை திறந்து பார்க்க மனம் தினைத்தாலும் கைகளை இயக்க முடியவில்லை அடுக்கடுக்காய் குறுஞ்செய்தி குவிய நடுக்கத்துடன் அதை எடுத்து திறந்து பார்த்தாள். “ஒழுங்கு மரியாதைய போனை எடு இல்ல உன் வீட்டுக்கு இப்போவே வருவேன்” என்று மிரட்டல் இருக்க அடுத்த நொடியே அழைப்பை ஏற்று காதில் பொறுத்தி இருந்தாள். அசாத்தியமான அமைதி ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவில் இருக்க அந்த அமைதியை எல்லாம் கிழித்தது போல் இருந்தது ஒளித்தது அவன் குரல் “ஓரேயடியா ஒழிஞ்சிட்டான்னு நினைச்சி நிம்மதியா இருக்கியாடி கொலைகாரி” என்றான் எடுத்த எடுப்பிலேயே. அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியைப்போல் தாக்கி இருந்தது அவளை, “கொலையா......” என்றாள் அதிர்ச்சியாய் “என்ன தெரியாத மாதிரியே கேக்குர ஒருத்தனை குத்திட்டு தப்பிச்சி வந்தியே அவன் இப்போ உயிரோடு இல்ல செத்துட்டான் காரணம் நீ” என்றான் அவள் மீது பழியை சுமத்தி. “நான் நான் வேணும்னு செய்யல ப்ளீஸ் என்னை விட்டுடு” என்றாள் அழும் குரலில். “ஹேய் பேபி உன்னை விடவா நான் இவ்வளவு கஷ்டபட்டு உன் பின்னாடியே சுத்தி சூசைட் அட்டன் பண்ணி உன்னை மடக்கினேன்... நீ பச்ச புள்ள பேபி உனக்கு ஒன்னும் தெரியல” என்றான் கேலிக்குரலில். “அஸ்வீன் நான் உன்னை உண்மையா தானே லவ் பண்ணேன் அதுக்காகவாவது என்னை விட்டுடேன் என்னை ஏன் இப்படி பேசியே கொல்ற” என்றாள் பாவமாக. அவள் அழுகையிலும் மனம் இளகாதவன் “என்ன பேபி காமெடியெல்லாம் பண்ற பட் நான் சிரிக்கிர மூட்ல இல்ல. ஏன் சொல்லு என் ஃபிரெண்ட் செத்துட்டான்” என்று நக்கலாக கூறியவன் “உன்னை விடுறதுனால எனக்கு என்ன யூஸ் டார்லிங் ??” என்றான். உத்ராவின் பக்கம் பலத்த அமைதி சிலையின் தோற்றமாய் அப்படியே இருந்தாள் இழுத்த பிடித்த மூச்சுடன் அமர்ந்து இருந்தாள். “பேபி.. ஹேய் பேபி லைன்ல தானே இருக்க நீ இருப்ப செல்லம் ஐ நோ. உன்னை பார்க்கும் போது எல்லாம் நீ இன்னைக்கு கிடைச்சிடுவ நாளைக்கு கிடைச்சிடுவன்னு எவ்வளவு ஆசை ஆசையாய் இருந்தேன் தெரியுமா...” என்றான் கிறங்கிய குரலில் அருவருப்பாய் உணர்ந்தவள் காதில் இருந்து போனை எடுத்து கண்களை இறுக்க மூடி அவன் பேச்சை சகிக்க முடியாமல் அழுதாள் இன்னும் சில அந்தரங்க விஷயங்களை கூற “ஷட் அப் அஸ்வின் நீ இவ்வளவு கெட்டவனா உன் கூட பழகினத நினைச்சி பார்க்கவே உடம்பு எல்லாம் கூசுது” என்று கத்த தொடங்கியவளை இடமறித்தவன் “புள்ளபூச்சி மாதிரி இருந்தவளா டீ நீ நல்ல பேசுற டீ அதான் எல்லாம் என்னை பத்தி தெரிஞ்சி போச்சே இனி மறைச்சி நல்லவனா நடிக்க என்ன அவசியம் இருக்கு சொல்லு அதெல்லாம் போகட்டும் இப்போ எதுக்கு ஃபோன் பண்ணேனா உன்னை நாளைக்கு நைட் ரூமுக்கு வந்துடுன்னு சொல்லத்தான் மறக்காம வந்துடு பேபி” என்று கூறினான். “பொறுக்கி நாயே வை டா ஃபோன என்ன தைரியம் இருந்த கூப்பிடுவ” என்று கத்த தொடங்கியவளை. “ஸ்... பேபி ஏன் இவ்வளவு ஆவேசம் ஒரு கொலை பண்ணினத மறந்துட்டியா நாளைக்கு நைட் நீ வரலனா நாளை மறுநாள் போலீஸ் உன் வீட்டுக்கு வரும். நல்லா யோசிச்சிக்கோ உன் அப்பா அண்ணன் மானம் ஃப்ளைட் பிடிச்சி பறக்கும் டீ. என்னை மாட்டி விட்டுவிடலாம் தானே நினைக்கிற நான் மாட்டினாலும் அப்படியே ப்ளேட்ட திருப்பி போடுவேன் நீ தப்பு உன் கேரக்கடரே தப்புன்னு... சட்டத்துல ஆயிரம் வழி இருக்குடி நான் தப்பிச்சி வர... கொஞ்ச நாள்ள என் விஷயம் மறந்துடும் ஆனா நீ மாட்டினா பிரபல தொழில் அதிபர் மகள் காதல் கலியாட்டத்தில் வாலிபரை கொலை... ஹெட்டிங் எப்படி இருக்கு சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி நாளைக்கு நைட் இதே டைமுக்கு உனக்காக வெய்ட் பண்றேன் பேபி என்றவன் போனை கட் செய்து இருந்தான். தூக்கம் அவளை விட்டு தூர பறந்து இருந்தது. இந்த இரவு இப்படியே இருந்து விடாதா என்று அழுது கரைந்தாள். இரவு முழுவதும் அமர்ந்து இருந்தவளின் கண்கள் உறக்கத்தை மறந்து இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையறு நிலையில் ‘என்னை மாட்டிவிட்டாலும் பரவாயில்லை அதனால் எனக்கு கிடைக்கும் பெயரால் அண்ணன் தந்தையின் முகத்தில் எப்படி விழிப்பது' என்று பித்துபிடித்து போய் அமர்ந்து இருந்தாள். மூளை எங்கும் எதிரோலித்த ஒரே பெயர் ‘அஸ்வின்... அஸ்வின்... அஸ்வின்...’ அவனை நினைக்கவே கூடாது என்று உறுதி எடுத்து இருந்தவள் ஒரு நாள் இரவு முழுவதும் அவனையே நினைத்து கொண்டிருப்பதை என்னவென்று கூறுவாள். யாரிடம் கூறுவது அண்ணனிடம் கூறினாள் என்னை பற்றி என்ன நினைப்பானோ என்று எண்ணம் வர தந்தையிடம் செல்வோமா என்று நினைத்தாலும் ‘உன்னை நம்பி இருந்தேனே சீ நீ இவ்வளவு தானா' என்று ஒரு பார்வையே போதும் நான் உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கும்... ‘அம்மாவிடம் சொல்வோமா எனக்கும் மேல பயப்புடுவாங்களே. என்ன செய்ய.. என்ன செய்ய.. கேஷவ்.. கேஷவ்.. வேண்டாம் கோவத்துல ஏதாவது அவனை செஞ்சிட்டா என்னால கேஷவுக்கு தானே கஷ்டம்..... வேண்டாம்.... கடவுளே என்னை என்ன செய்ய காத்து இருக்க' என்று நினைத்து நினைத்து மறுகியவள் சித்தம் கலங்கிய நிலையில் தரையில் கையை அடித்து அழ. சட்டென அங்கீதாவின் நினைவு வர கடிகாரத்தை பார்த்தால் மணி 7 நெருங்க 5 நிமிடங்கள் இருக்க அலைபேசியை எடுத்து அவளுக்கு தொடர்பு கொண்டாள். இரண்டாவது அழைப்பிலையே பேசியை எடுத்துவிட “ஹலோ.. ஹலோ . அங்கி நான் நான் உத்ரா பேசுறேன் டீ” என்றாள் பதட்டமாக. தூக்க கலக்கத்தில் இருந்தவள் இவளது பதட்டமான குரலை கேட்டதும் “என்னடி என்ன ஏன் இப்படி குரலெல்லாம் நடுங்குது ?.” என்றாள். “நான் பண்ண பாவம் என் பின்னாடியே சுத்துதுடி என்னை கொல்லாம விடாது போல டீ” என்றாள் அழும்குரலில்.. “புரியம்படியா சொல்லுடி நீ என்ன சொல்ல வர அஸ்வீன்., அஸ்வீனால பிரச்சனை யா ?.” என்றாள் குரலில் சந்தேகத்தை நிறைத்து “ம்……” என்றான் “என்னடி என்ன பண்ணான்” நேற்று இரவு நடந்ததை பாதி கூறும் போதே உடைந்து விட “வெய்ட்ட நான் வரவா” என்றாள் அங்கீதா. “இல்ல அங்கி என்னால இங்க பேச முடியாது சிவன்கோவில் பக்கத்துல இருக்க பார்குக்கு வா” என்று உத்ரா கூறினாள். தோழியிடம் பேசினாள் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்பினாள். “உள்ள வாயேன் கேஷவ் வம்பு பண்ணிக்கிட்டு இருக்க” என்றார் ஆதி “தயவுசெய்து ப்ளீஸ் அவர் இருக்க இடத்துல என்ன கூப்பிடாதமா” என்றான் பரிதாபமாக. “டேய் அவர்கூட யாருடா நிக்க சொன்னா. என்கூட வந்து நில்லுடா” என்றார் கெஞ்சலாக. “மா இன்னைகாவது சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறேன். அவர் முன்னாடி வந்து நின்னு கோவில்லையும் பேச்சு வாங்கனுமா ப்ளீஸ் மா ஃபிரெண்ட்ஸ் வெய்ட் பண்றாங்க நான் கிளம்புறேன் மா” என்றான் “பிறந்த நாள் அதுவுமா கோவிலுக்கு வரலனா எப்புடிடா. அவர் கோவபடுவாருடா” என்று கூற அவரை கொஞ்சம் தள்ளி நிறுத்தியவன் அவர் கால்களில் விழுந்தவன் “எனக்கு எங்க அம்மாவோட ஆசிர்வாதம் எப்போவும் இருக்கும் இது உங்க திருப்திக்காக” என்றவன் கோவில் கோபுறத்தை பார்த்து ஒரு கும்பிடு பேட்டுவிட்டு “அவர்கிட்ட நீங்களே ஏதாவது சொல்லிடுங்க ப்ளீஸ்” என்று அவரை தாஜா செய்து பைக்கில் ஏறிவிட்டான். போகும் வழியில் சாருகேஷிற்கு கால் செய்ய அவன் ஃபோன் நாட் ரீச்சபில் என்ற செய்தியை அறிவித்தது. ‘காலையிலையே கால் பண்ணி இருக்கான் அட்டன் பண்ணல இப்ப நான் கால் பண்ணா இவன் அட்டன் பண்ணல எங்க போயிருக்கான்' என்று யோசித்தவாறே சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது. வண்டியை நிறுத்தியவன் அலைபேசி எடுத்து பார்க்க வேறு ஒரு நண்பன் தொடர்பு கொண்டிருந்தான். “மச்சி வந்துட்டிங்களாடா ??” என்றான். “எல்லோரும் ஆஜர் மச்சி சாருகேஷூக்கும் உனக்கும் தான் வெய்ட்டிங்” என்றான் அவன். “இன்னும் அவன் வரலயாடா ?.” என்றான் கேஷவ். “அவங்க அப்பாவ பிக்கப் பண்ண ஏர்போர்ட் போயிருக்கான் மச்சி இன்னும் ஹஃப்னவர்ல வந்துடுவான். நீ வா மச்சி வெய்ட்டிங்” என்று அவனுக்காக காத்திருப்பதாக கூற செல்லை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் கண்களில் அழுத முகத்துடன் பார்கில் இருந்து வெளியே வரும் உத்ரா விழுந்தாள். பைக்கை விடுத்து இறங்கியவன் அவள் வரும் வழியில் நின்றான். தன் போக்கில் நடந்து வந்தவள் அருகில் வரவர கேஷவ் நிற்பதை பார்த்து விட்டாள் உத்ரா... விடாபிடியாய் மனதில் கொஞ்சமே கொஞ்சம் மிச்சமாய் இருந்து சக்தியும் கரைந்து இருந்தவளுக்கு கேஷவினை அங்கு பார்த்தும் ஏதோ பிடிப்பதற்கு பற்றுகோல் கிடைத்தது போல பிடிமானத்திற்காக அவனின் கையைபிடித்தவள் அப்படியே அவன் மீது சரிந்து இருந்தாள். சாலையின் பின் பக்கமாக தொலைவில் இருந்து இதை பார்ப்பவர்களுக்கு கேஷவின் மார்பில் உத்ரா சாய்ந்து பேசிக்கொண்டு இருப்பது போல தான் இருக்கும் அந்த தோற்றம். அப்போது அவ்வழியே ஏர்போர்ட்டில் இருந்து வந்த வேதநாயகத்தின் கண்களிலும் அப்படியே பட கோபம் நிறைந்த குரலோடு “காரை நிறுத்து சாரி” என்றார் வேதநாயகம். அப்பாவின் தீடீர் மாற்றத்தைக் கண்டவன் “என்னங்கப்பா” என்றான் வண்டியை நிறுத்த சொல்லியதற்கான காரணம் அறிய. “என்ன நடக்குது இங்க.... என்ன கருமம் இதெல்லாம்” என்றார் அவர்கள் நிற்கும் இடத்தை கைகாட்டி. கேஷவும் உத்ராவும் இருக்கும் நிலையை கண்டவன் “அப்பா எனக்கும் ஒன்னும் புரியல... இப்பதான் நானே பாக்குறேன்... அவங்க ஒருத்தர ஓருத்தர்………” என்று முடிக்கும் முன்னே “என்ன காதலிக்கிறாங்களா இதுக்கு நீயூம் சப்போர்ட்டோ !.” என்றார் கோவமாக “அண்ணன் செய்ற வேலையாடா இது ?.” என்றார். “அப்பா...” என்று தடுமாறியவன் “எனக்கும் இந்த விஷயம் தெரியாதுபா... அவ நடவடிக்கைய வைச்சிதான் தெரிஞ்சிக்கிட்டேன்... இன்னும் கேஷவ்கூட சொல்லல” என்றான் தனக்கு எதுவும் தெரியாது என்று உணர்த்த. “சாரி....காதலிக்கரத தப்பு சொல்லல படிக்கிர வயசுல காதல் கீதல் கண்ட கண்ட கருமம் எல்லாம் வேண்டாம் தான் சொல்றேன்... இப்படி பப்ளிக் பிளேஸ்ல நடந்துக்கறது நல்ல இருக்கா !. ஊருல யாரை பத்தி பேசுவாங்க உன் தங்கச்சிய பத்தி தானே !.... எனக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சின்னு காட்டிக்காத வீட்டுக்கு வரட்டும் பாக்கலாம் இப்போ கிளம்பு” என்று கூற அவர்களை பார்த்துக்கொண்டே கூற வண்டியை கிளப்பினான் சாருகேஷ். இங்கு சாய்ந்தவளோ நிற்க தெம்பு இல்லாமல் அப்படியே சரிந்து விட்டிருந்தாள். சாதாரண மயக்கமாக இருக்க அந்த பார்க்கிலே அமரவைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான். மெல்ல கண்களை திறந்தவள் சுற்றிலும் தேடினாள். “என்னடி ஒவ்வொரு வாட்டியும் மயங்கி விழற இன்னைக்கு என்ன ஆச்சி எதை பார்த்து பயந்த ?.” என்றான் பக்கத்தில் அமர்ந்தபடி. பலத்த அமைதி அவளிடத்தில். அவள் சோக முகம் பார்த்தபடி புருவம் உயர்த்தி “நீ ரொம்ப மாறிட்ட உத்ரா எதையோ மறைக்கிற” என்றான். அவனை நிமிர்ந்து கூட காணவில்லை கண்டாள் எங்கே அனைத்தையும் கொட்டிவிடுவாளோ என்ற பயம் அதனாலயே இன்னும் அமைதியாய் இருந்தாள். “ஏய் லவ் பண்றியா ?.” என்றான் தனக்கு எட்டிய அறிவிற்கு உதித்ததை வைத்து. அவன் கண்டுகொண்டதும் பயத்தில் அவனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் ‘இல்லை’ என்று தலை ஆட்டினாள். “சம்திங் ராங்....” என்று தலையை ஆட்டியது ‘உன்னை நம்பவில்லை' என்பதாய் இருந்தது. “சரி என்ன இங்க தனியா வந்து இருக்க அதுவும் இந்த அழுமூஞ்சி கோலத்தோட ?” என்றதும் மலுக்கென்று கன்னத்தில் உருட்டு ஓடியது இரு நீர்த்துளிகள். அவள் வாயை திறக்கவே இல்லை அமைதியாக நிலம் நோக்கியிருந்தாள். அன்று சனிக்கிழமை விடுமுறை தினமானதால் பிள்ளைகளின் இறைச்சல் நிறைந்த விளையாட்டுக்கள் வேறு இருந்ததால் அவன் அழைத்தது அவளின் செவிப்பாறையை தீண்டவில்லையே என்று “உத்ரா... உத்ரா.... நான் பேசுறது கேக்குதா ?.” என்று கைகளை குவித்து அவளின் காதின் அருகில் சென்று சத்தமாக அழைக்க எந்த சலனமும் இன்றி அவனை திரும்பி பார்த்தாள். “என்னடி இப்படி சோககீதம் வாசிக்கிற. இன்னைக்கு என்ன நாளாவது தெரியுமாடி காலைல இருந்து ஒரு ஃபோன் கூட பண்ணல எருமை” என்றான். அவள் என்னவென்று யோசிப்பாள். அவளைதான் அந்த பாதகன் அஸ்வீன் யோசிக்க விட வில்லையே அடுத்து என்ன செய்வது அங்கீதாவும் வரவில்லை அவளுக்கு முயற்சி செய்து செய்து விரல் ரேகை தேய்ந்து அழிந்து விட்டது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்க. இதில் அவன் கேட்ட கேள்விக்கு இவள் எங்கிருந்து பதிலை சொல்வது... பேய் முழி முழித்தவளை ஒரு மார்கமாக பார்த்தவன் “இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் உத்ரா” என்றான் ‘இது கூட நியாபகம் இல்லையா' என்ற அர்த்தத்தில். அவன் கூறியது கருத்தில் பதிந்ததே தவிர மூளைக்கு எட்டவில்லை அனிச்சை செயலாக “ஹேப்பி பர்த் டே கேஷவ்...” என்றவள் “நான் நான் கிளம்புறேன்” என கூற திரும்பி நடக்க. “இருடி வீட்ல விட்டுறேன்”. என்றவனை விடுத்து “நான் போயிடுறேன்” என்று விடாப்பிடியாக கிளம்பியவளை விச்சித்திரமாய் பார்த்தான் கேஷவ். “அன்னைக்கு தான் நான் உத்ராவ உயிரோட கடைசியா பார்த்தது மறுநாள் காலைல அவ இறந்துட்டான்ற நியூஸ் தான் எனக்கு வந்தது .... இடையில என்ன நடந்தது ஒன்னுமே புரியல அவ இறந்துட்டான்ற தகவல் கிடச்சதும் அவளை பாக்க ஓடினேன் அங்க நானே எதிர்பாக்கத அதிர்ச்சி எனக்காக காத்திட்டு இருந்தது” ஒரு நிமிஷம் எங்களையெல்லாம் நினைச்சி பாக்கலையே இவ உன்னை உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என் நெஞ்சிலே நெருப்பை அள்ளி வைச்சிட்டு போயிட்டியே என்று ஜானிகியின் அழுகுரல் வீட்டையே நிறைத்து இருந்தது. பாவம் இவ்வளவு சின்ன வயசு ஆக்ஸிடன்ட்ல செத்துடுச்சி பா என்றனர் சிலர்.... பெரிய இடத்து சமாசாரம்பா ஏதாவது அப்படி இப்படி இருந்து இருக்கும் வீட்டுல கண்டிச்சி இருப்பாங்க இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் எங்க கேக்குதுங்க அதான் இப்படி பண்ணிக்கிச்சி என்றனர் ஒருசிலர்.. சாவு வீட்டிற்குள் இருந்தும் இவர்களின் வம்பு வளர்க்கும் புத்தி என்றுதான் மாறுமோ தன் பின்னால் இருக்கும் அழுக்கை பார்க்காமல் அடுத்தவன் முதுகை பற்றி பேசம் கணவான்களே இந்த சமுதாயத்தில் அதிகம். துக்க வீட்டிற்குள் கேஷவின் குடும்பம் மொத்தம் வர கேஷவை கண்ட சாருகேஷின் கையில் இருந்த கடித்தை அவள் முகத்தில் விட்டெறிந்தான் கோபமாக. “அநியாயமா என் தங்கச்சிய சாகடிச்சிட்டியேடா படுபாவி” என்று அவனின் சட்டையை பிடித்து அவனின் இரு இன்னங்களிலும் அடித்தான். ஒன்றும் புரியாமல் அப்படியே இடிந்து போய் இருந்தான் கேஷவ்... ஜெய்ந்தும் கார்த்திக்கும் சாருகேஷின் கைகளை விலக்கி விட “என்னப்பா என்னென்னமோ சொல்ற என்ன பா ஆச்சு” என்றார் ஆதி “உன் நண்பனை பற்றி உனக்கே தெரியாதா பா !.” “இதோ இதோ இத படிச்சி பாருங்க உங்க பிள்ளையோட அருமை பெருமைகளும் அப்பதான் இவனோட உண்மையான முகமும் தெரியும்” என்று அதனை கைக்காட்ட அந்த கடிதத்தை எடுத்த ஜெயந்த் ராஜாராமனை பார்க்க அவர் கைகளில் கொடுத்தான் தம்பியின் முகத்தை பார்த்தபடி. நண்பன் கேட்ட அதிர்ச்சியில் இருந்து மிளாதவன் நண்பனையே பார்த்த வண்ணம் இருந்தான். “அன்புள்ள அண்ணாவிற்கு, உன்னை அண்ணான்னு கூப்பிடறது உனக்கு ரொம்ப பிடிக்கும்ல சாரி.... எனக்கும் தான் ஆனா ஒவ்வொரு முறையும் உன்னை திட்டும் போதும் நீ செல்லமா அடிக்கிறது அதை விட பிடிக்கும் டா அதனாலதான் உன்னை வம்பு இழுத்துட்டே இருப்பேன் ணா ஐ யம் சாரி டா அண்ணா இந்த சாரி எதுக்குன்னு பாக்குறியா உன்னை அம்மாவ அப்பாவ எல்லாரையும் ஏமாத்திட்டு இந்த உலகத்தை விட்டே போக போறேன்ல அதுக்குதான்... என்னை சுத்தி இருக்கவங்க எல்லாருமே நல்லவாங்கன்னு நான் நம்பினேன் டா நான் உங்கிட்ட சொல்லி இருக்கனும். உண்மைய சொல்லி இருக்கனும் எல்லாரும் நல்லவங்கன்னு நினைச்சது பொய் ஆகிடுச்சே அண்ணா.... உன்னையும் அப்பாவையையும் போல என் கூட பழகனவனையும் நல்லவன்னு நினைச்சிட்டேன் டா அவன் என்னை ஏமாத்திட்டான் என்னை ஏமாத்திட்டான். நான் உயிரோடு இருந்து உங்க மானம் கௌரவம் போகறத விட நான் செத்து போறது நல்லுது ண்ணா அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கோ ண்ணா.. என்னை பத்தி தெரிய வேண்டாம் ரோம்ப கவலை பட்டு மனசு ஒடஞ்சி போயிடுவாங்க நான் போறேன் லவ்யூ ண்ணா இன்னொரு ஜென்மம் இருந்தா அதுலயாவது நான் உங்களுக்கு எல்லாம் உண்ணையா இருக்கனும். இப்படிக்கு உத்ரா.. “அவ வேற ஒருத்தன்னு தானே போட்டு இருக்கா சாருகேஷ் இவன்னு மீன் பண்ணலியே” இவன் இவன்னு போடலையா நல்லா படிச்சி பாருங்க ஜெய் அண்ணா நானும் அப்பாவும் தவிர்த்து அவ பழகிய ஒரு ஆம்பளனா அது கேஷவ் தான் அது போதாதா.... இரண்டு முனு முறை அவங்க தனியா சந்திக்கிறத நானே பாத்திருக்கேன்...” என்றான் கேஷவினை எறிக்கும் பார்வையோடு. அவன் பக்க நியாயத்தை என்னவென்று கூறுவான்... ‘அவள் பயந்த முகமாய் தானே இருந்தாள் ஒரு வேலை இதை நினைத்து தான் பயந்து இருப்பதாலோ நான் தான் அவளை கவனிக்காமல் விட்டேனோ ... ஒருவனை நம்பி ஏமாந்தேன்னு ஏன் எங்கிட்ட சொல்லல அவ்வளவு முக்கியம் இல்லாதவனாய் இருந்துவிட்டேனா உத்ரா. சாருகேஷ் போலதானே நானும் உனக்கு' என்று கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்டு இருந்த அவள் உருவத்தையே கலங்கிய மனதோடு பார்த்தான் கேஷவ். சாருகேஷின் குற்றச்சாட்டினை மறுக்கவும் இல்லை அவனை தடுத்து பேசவும் இல்லை உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தவன் மூளை செயல்பாடுகளை நிறுத்தியது போல் அப்படியே நின்றிருந்தான்... சாருகேஷ் மூர்க்கமாக இருக்க பெற்றவர்கள் இருவரும் மகளின் உருவத்தையே பார்த்திருந்தனர். வேதநாயகத்தின் அருகில் சென்ற ராஜாராமன் அவரின் தோளில் கைவைத்து ஆறுதல் அளிக்க கண்கலங்கி இருந்தார் அந்த பெரிய மனிதர். ஒரு பிள்ளையை பெற்று சீராட்டி பாலூட்டி வளர்த்து ஆளாக்கி அவளை சீறும் சிறப்புமாய் திருமணம் நடத்திவைக்க கனவு கண்ட உள்ளங்கள் அல்லவா இன்று எமனுக்கு பறிகொடுப்பது என்பது எவ்வளவு கொடுமையான வலி அதனை அனுபவித்து கொண்டு இருந்தனர் அந்த பெற்றவர்கள். “ஏதேட்சையா சந்தித்ததை வைத்து பேச கூடாது சாருகேஷ்” என்றான் ஜெயந்த் தம்பியை குற்றமற்றவனாய் நிரூபிக்க. “நேத்து இதே இரெண்டு பேரும் ஓருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சிட்டு இருக்கரத இந்த கண்ணால பார்த்தேன் இல்லேன்னு சொல்ல சொல்லுங்க” என்று ஆக்கோரஷமாய் கத்தியவன் கேஷவின் சட்டையினை கொத்தாக பிடித்து அவன் கன்னத்தில் அறைந்தான்... அவன் அடித்தது கூட வலிக்கவில்லை அவன் கூறிய வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்றது தங்கையாய் நினைத்தவளை காதலியாக சித்தரித்து பேசுபவனை என்ன சொல்லி தன்னை நியாயபடுத்திக் கொள்வான்... ஜெயந்தும் கார்த்திக்குமே அவனை விலக்கி அவனை தாக்காதவாறு நின்றனர். “சாருகேஷ் உண்மை என்னன்னு தெரியவரும்போது ரொம்ப வருத்தபடுவே என் தம்பியபத்தி என்னை விட நண்பனா உனக்கு தெரியலைன்னு நினைச்சா கஷ்டமா இருக்கு” என்றான். அந்த இடமே சலசலத்து இருக்க சிறிது நேரத்திற்கு எல்லாம் போலீசுக்கு தகவல் பறக்க தக்க நேரத்தில் காவலர்கள் கேஷவினை காவல் நிலயத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இதில் ஸ்தம்பித்த நிலைதான் கேஷவிற்கு ஒரு வார்த்தை பேசவில்லை.... உத்ராவின் இறப்பு அவற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அவளின் சாவிற்கான காரணம் இன்னும் மரணவலியை தந்தது.. மகனின் மௌனம் ராஜாராமனை கோபப்டுத்தியதால் அவனிடத்தில் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தார். “எங்க அப்பா அப்பாக்கூட பேசரத நிறுத்திட்டார்... இந்த வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லிட்டார்... என்னை அப்போ நம்பின மூனு ஜீவன்கள் ஒன்னு என் அம்மா ஜெய் கார்த்திக் இவங்க இல்லனா இப்போ நான் இல்ல... ஒரு இயந்திரமா இருந்தேன், நடந்தேன் வாழ்க்கையில பிடிப்பு இல்ல படிப்பு முடிஞ்சுது இங்க இருக்க இருக்க பழைய நியாபகம் செல்லு போல மனச அறிச்சி அறிச்சி நரக வேதனையா இருந்துச்சி” என்றான். அவள் புகைபடத்தை கையில் எடுத்து. “இது முதன் முதலா நான் கேமிரா வாங்கினதும் உத்ரா என்கூட அடம்பிடிச்சி எடுத்த போட்டோ இதை எடுத்தது கூட சாருகேஷ் தான் அவளோட சம்மந்தபட்டது எதுவும் என்கிட்ட இல்ல இதை தவிர” என்று அவளின் புகைபடத்தால் முகத்தை மூடிக்கொண்டான். “என்னங்க பீளிஸ் என்னை என்னை…” என்று அவன் அருகில் சென்று அவனை தொட. “ஜஸ்ட் ஷட் அப் பாரு... டோன்ட் டோன்ட் டச்..... லீவ் மீ அலோன் ப்ளீஸ் ஸ்டே அவே.... என்னோட கோவம் உன்னை காயபடுத்திட்டா அதை என்னால தாங்க முடியாது பாரு ப்ளீஸ் ஸீடே அவே...” என்றான் கர்ஜனையான குரலில். தொடரும். [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 37
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN