காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 41

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மலேஷியா

காலநிலை மாற்றமோ இல்லை மதுவந்தியின் மன மாற்றமோ சுற்றி இருந்த சூழல் யாவும் அவள் கண்களுக்கு அழகாய் மாறியது. ஒரு வாரமாய் மனதையும் உடலையும் வறுத்திய கவலை நோய்க்கு நம்பிக்கை என்ற மருந்தினை கொடுத்து சரிபடுத்தி இருந்தான் ஜெயந்த். காரின் ஸ்யரிங்கில் கைகளை சுழலவிட்டபடி ஆடியோவில் சிறிய வால்யூமில் ஏ.ஆர். ரகுமானின் மெல்லிசையில் ஒலித்த மார்கழி பூவே பாடல் அவளின் இதயத்தை கட்டி போட்டு இருந்தது.

கார் கண்ணாடியின் வழியே சாலைகளில் பார்வையை பதித்து
பாடலை கேட்டுக்கொண்டே வந்தவள் சற்று நேரத்தில் இசையோடு
பயணிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.

ஜெய்யின் கைவிரல்கள் பாடலின் தாளத்திற்கு ஏற்ப கார் ஸ்யரிங்கில் தாளம் போட்டபடியும் சாலையில் கவனம் செலுத்தி காரை இயக்கிக்கொண்டும் இருக்க... பாடல் வரிகளோடு அருகில் அமர்ந்து இருந்த மதுவின் குரலும் சேர்ந்து வர அவளை திரும்பி பார்த்தான். அவளுக்கு இவன் முன்னால் பாடுகிறோம் என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் வரிகளில் ஒன்றிட தேனாய் அவள் குரலும் உறுகி கரைந்து ஓடியது.

கண்களை மூடி பாடலில் மூழ்கி இருந்தவள் பாடலின் இறுதி வரியில் கண்களின் ஓரத்தில் இருந்து ஒரு துளி நீர் வழிந்தது. அவள் பாடிமுடித்ததும் "வாவ் சூப்பர் வாய்ஸ் அண்ட் அழகா பாடினிங்க மது . உங்க வாய்ஸ் சோ ஸ்வீட் " என்று அவளுக்கு பாரட்டுகளை வழங்கியவன்" பாட்டு கத்துக்கிட்டிங்களா?" என்ற தன் ஐயத்தை வினவினான் அவள் குரல் செய்த ஜாலத்தால்.

அவன் பாராட்டை முகம் மலர்ந்து ஏற்றுக்கொண்டவள் போல் தலை குனிந்து கையை அசைத்து ஆட்டியவள் எனக்கு பாடுறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஜெய்.... கண்களை மூடி ஒரு நிமிடம் அசாத்திய அமைதிக்கு பின் தன் மனதில் உருவமாய் செதுக்கிய அன்னையின் நினைவில் " எங்க அம்மா அழகா பாடுவாங்க அந்த பாக்கியம் எனக்கு இல்ல" என்றாள் கொஞ்சம் கரகரப்பான குரலில்.

அவள் குரல் மாறுதலை அறிந்தவன் அவளின் முகத்தை பார்க்க சோகமோ அல்லது வருத்தமோ இல்லை அதற்கு மாறாய் நிம்மதி இருந்தது.

"ஆனா அவங்க பாடினது எல்லாம் எனக்கு மனசுல பதிஞ்ச ஒன்னு.. இப்போ அவங்க நியாபகமா எனக்கு இருக்க ஒரு சொத்து இந்த குரலும் இவங்க பாடிய பாடலும் தான்... எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து நான் பாடுவதை குறைச்சிக்கிட்டேன் ஜெய்". என்று கூறியவளை ஏன் என்பது போல் ஜெயந்த் பார்க்க "என் பெரியப்பாவுக்கு நான் பாடினா பிடிக்காது அம்மா போலவே பிள்ளைன்னு அம்மாவதான் திட்ட ஆரம்பிப்பார்... யாருக்குதான் அம்மாவ திட்டினா தாங்கிக்க முடியும். நானும் கேட்டேன். அதுக்கு பரிசாதான் இது கிடைச்சது" என்று தலையில் இருந்த வெட்டு காயத்தை காட்டினாள் மது. ஆழமாய் வெட்டியது போல் ஒரு அங்குளம் அளவு நெற்றியின் மேல் தையல் இட்ட தழும்பு ஒன்று இருந்தது.

அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் தன் பார்வையை ஓட்டியவன் அவளின் இளமை பருவம் எவ்வளவு வலி நிறைந்தது என்று வருத்தம் கொண்டான். அவனின் எண்ணப்போக்கை அறியாதவள் மேலும் தொடர்ந்தாள்.

"பெரியப்பாவை தவிர்த்து எல்லாரும் என் மேல பாசமாதான் இருப்பாங்க ஆனா ஏதோ கண்ணுக்கு தெரியாத திரையா ஒரு விலகல் இருந்துட்டே இருக்கும் ஜெய்".

"பெரியம்மாவுக்கு நான்னா உயிர் அவங்க தங்கை மாதிரியே இருக்கேன்னு என்னை ரொம்ப பிடிக்கும்... நானும் அம்மான்னு தான் கூப்பிடுவேன் ஆனா பெரியப்பா முன்னாடி எதையும் காட்டிக்க மாட்டாங்க" என்று கூறும் போது அவள் முக பாவனைகளையே பார்த்திருந்தான்... இப்போது கவலை இல்லை கொஞ்சம் வருத்தம் மட்டுமே இருந்தது போல் தெரிந்தது.

காரை செலுத்தயபடியே இருந்தவன் "அவங்கள பிரிஞ்சி வந்தத நினைச்சி பீல் பண்றிங்களா மது" என்று தன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டு வைத்தான்.

"சே..சே.. இல்லன்னு பொய்யான வார்த்தைய சொல்ல மாட்டேன்பா" என்றாள் இது அவளை அறியாமலேயே வந்து விழுந்த முதல் நெருக்கமான வார்த்தை ஜெயந்திடம் நட்பென்னும் நெருக்கத்தில் வர அதை இருவருமே கண்டு கொள்ளவில்லை

"எப்படி பீல் பண்ணமா இருப்பேன் ஜெய்... இத்தனை வருஷம் உறவா நினைச்சிட்டு இருந்தேனே அந்த பீலிங் மனச போட்டு உறுத்துது... ஆனா ஒருவகையில இது என்னோட நிதர்சனத்தை எனக்கு உணர்த்தி இருக்கு... இதுதான் என் வாழ்க்கைன்னு எனக்கு புரியவைச்சி இருக்கு... வாழனும் எனக்காக வாழனும்னு எண்ணம் வருது" என்று கூறியவளின் முகம் ஆயிரம் நட்சத்திங்களின் மத்தியில் ஒளிவீசும் நிலவினை போல மெருகேறி இருந்தது.

"தட்ஸ் குட்" என்று அவளின் கூற்றிற்கு மறுமொழி கூறியவனின் கார் அவன் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து நின்றது.

இருவரும் பேசியபடியே தங்கி இருந்த பிளாட்டின் முன் நின்று கதவை தட்ட ஆதி கதவை திறந்து அவர்களை உள்ளே அழைத்திருந்தார்.

"ஹாய் ஆண்டி என்று அவருடைய கால்களை தொட சென்றவளின் தோலில் கைவைத்து, அவளை தடுத்து சோபாவில் அமரவைத்தவர் "என்ன இது கால்ல எல்லாம் விழ்ந்துகிட்டு, நீ எப்பவும் நல்லா இருக்கனும் மது" என்று அவளின் தலையில் கை வைத்து வாழ்த்தியவர் " அவளை அக்கறையாய் விசாரித்தார்.

உள் அறையில் இருந்து வெளியே வந்த ராஜராமனை பார்த்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற மது "எப்படி இருக்கிங்க அங்கிள்" என்று விசாரித்து இருந்தாள்.

"நல்லா இருக்கேன் மா நீ எப்ப வந்த" என்று அவளிடம் வினவியருக்கு கர்ம சிரத்தையாக பதில் கூறியவளின் பாங்கு அவருக்கு பிடித்து இருந்தது.

"நீ உக்காரு மது" என்று அவளை அருகில் அமர்த்திக் கொண்டு அவளிடம் பேச மதுவிடம் வந்த ஜெயந்த் "ஜஸ்ட் எ மினிட் மது" என்று உள் அறைக்குள் செல்ல அவனை தொடர்ந்து இருந்த மதுவின் பார்வையை "சாப்பிட்டியா மது" என்று தன் பேச்சால் திசை திருப்பி இருந்தார் ஆதி.

"சாப்பிட்டேன்ஆண்டி".. என்று இளநகையுடன் கூறியவள், "நீங்க இன்னும் கிளம்பளையா?" என்றாள்

"உனக்காகதான் மா வெய்ட் பண்ணோம். இதோ இப்போ கிளம்பளாம்" என்று கூறிக்கொண்டிருக்கையில் கையில் ஒரு காபி கப்புடன் வெளியே வந்திருந்தான் ஜெயந்த்.

"இந்தா மது" என்று அவளிடம் நீட்டியவன் தானும் உடன் அமர்ந்தான். அவனிடமிருந்து கப்பை வாங்கியவள் "உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றாள். "பயப்படாத மது ஒரளவு குடிக்கிறாமாதிரி தான் இருக்கும்" என்று ஆதி கூற இதழில் ஓரத்தில் சிரிப்பை மறைத்தான் ஜெய்.

அதை வாயில் வைத்து ஒரு மிடறு விழுங்கிய மதுவந்தி "நாட் பேட் ஆண்ட்டி சூப்பராவே இருக்கு" என்று அதை ரசித்து பருகி முடிக்க அனைவரும் கிளம்பி இருந்தனர்.

ராஜாராமன் முன் இருக்கையிலும் ஆதி மற்றும் மதுவந்தி பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு பேசியபடியே வர ஜெயந்த் காரை செலுத்தினான். ஆதியின் மனதிற்கு மதுவந்தியின் பேச்சும் குணமும் அவ்வளவு பிடித்திருந்தது. இந்த மாதிரி ஒரு பொண்ணு ஜெயந்திற்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும் எண்ணம் வரும் அளவிற்கு பிடித்தம் வந்தது.

நவநாகரீகத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவளின் பண்பு ஆதியை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். இதுவரை ஜெயந்திடம் அளவாக பேசி வந்தவள் ஆதியிடம் அதையும் தாண்டி ஒரு ஒட்டுதல் வர சுழற்றி விட்ட சோழியை போல கலகலப்புடன் இருந்தது மதுவின் பேச்சும் சிரிப்பும்.

மதுவின் மாதுளை அதரங்களில் இருந்து சிதறிய சிரிப்பின் ஒலியில் காரின் ரியர் வியூவ் மிரரில் மதுவை பார்த்தவனின் மனதில் நிறைந்தது அவளின் சிரித்த முகம். நிமிடத்திற்கு ஒரு தரம் அவனின் பார்வை மதுவை தொட்டு சென்றது. ராஜராமன் ஜெயந்திடம் பயிற்சியை பற்றியும், கேஷவ் திறம்பட செயல்படுத்திக் கொண்டு இருக்கும் கம்பெனி மற்றும் ஃபேக்ட்டரி விஷயங்களை பற்றியும், அளவளாவி வந்தாலும் மனதில் என்னமோ அது எல்லாம் பதிவேனா!! என்று சண்டித்தனம் செய்து, அவளையே பார்க்க கட்டளை இட்டது.

முதலில் அருகில் இருக்கும் சில இடங்களுக்கு அழைத்து சென்றவள் அதன் பெருமைகளும் வரலாற்றையும் அவர்களுக்கு புரியும் அளவில் விவரித்துக்கொண்டே வந்தாள். அந்த இடத்தை காட்டிலும் அவர்கள் இதயத்தில் பச்சென்று ஒட்டிக்கொண்டது மதுவின் அழகுதமிழும் அவளது பாவமும் தான்.

மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூர் சுற்றுல தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரம். இந்த நகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பெட்ரோனாஸ் டவர் இருப்பது மேலும் கூடுதல் சிறப்பு. உலகிலேயே உயரமான கட்டிங்களில் இந்த டிவின் டவரும் ஒன்று. அதன் உயரத்தையும் கண்டு வியந்தவர்கள் அடுத்து சென்ற இடம் பத்துமலை முருகர் கோவில் தமிழ்கடவுள் முருகனை 140அடி உயரமுள்ள சிலையாய் வடித்து 247 படிகளை கொண்ட குகைக்குள் முருகன் அருள் புரிந்து கொண்டிருந்தார்.

ஒருவழியாய் அதனையெல்லாம் வியப்புடனும் பக்தியுடனும் பார்த்து சேவித்து உணர்வுபூர்வமாய் அனுபவித்து இருந்தனர் தம்பதியர் இருவரும். சாமி தரிசனம் முடிந்து வெளியே வரவும் மதுவும் ஜெயந்துடன் ஒன்றாக வெளியேற மதுவந்தியை நோக்கி ஓடி வந்த சிறுவன் அவள் கால்களை "அக்கா" என்று இறுக்கமாக கட்டிக்கொள்ள அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் அவனை வாரி எடுத்து முத்தம் கொடுக்க தம்பதிகள் இருவரும் அவளையும் அவளின் பரவசத்தையும் பார்த்து இருந்தனர்.

எங்கிருந்தோ "மனோ" என்ற கர்ஜனையுடன் வந்த குரலுக்கு சொந்தகாரர் அவனை மதுவிடம் இருந்து பிரித்து இருந்தார்.

"அப்பா... என்று கூற வந்தவள் பெரியப்பா மனோ.. மனோ என்று அவனை பார்த்து கேட்க

"வெட்டி விட்ட உறவு இப்போ புதுசா முளைக்குதோ" என்றவர்

"புடிடீ இவனை" என்று மனைவியிடம் பிள்ளையை கொடுத்தவர். "உறவே இல்லன்ற இவளை சொந்தம் கொண்டாடிட்டா போறான்" என்று பெற்ற மகனை அடிக்க

"பீளிஸ் பெரியப்பா அவனை அடிக்கதிங்க" என்று தடுக்க வந்தாள் மதுவந்தி. "இன்னொரு முறை பெரியப்பான்னு சொன்ன அறைஞ்சி பல்லை தட்டிடுவேன்" என்று கொதிக்க

"என்னங்க இது கோவில் இங்கேயுமா ?அவள தான் அனுப்பிட்டிங்கள்ல வாங்க நாளுபேர் முன்னாடி மானத்தை வாங்காதிங்க" என்று அவரை கிளப்பினார் மதுவின் பெரியம்மா

"அவளை அனுப்பலனா உன் ரெண்டு பொண்ணுங்களும் அவள மாதிரிதான் அடங்காம கண்ட கண்டவனோட ஊர் சுத்துவாங்க... நேத்து ஒருத்தன், இதோ இன்னைக்கு இன்னொருத்தன் தினமும் ஒருத்தன் கூட சுத்துரவ மானம் நான் பேசிலனா மட்டும் போகாதா" என்று நரம்பற்ற நாக்கு ஈவு இரக்கம் இல்லாமல் அபாண்டமாய் பேசியது.

"என்னங்க அதான் அவ போயிட்டா இல்ல உங்க பொண்ணு புள்ளைங்க பாதுகாப்பா தானே இருக்காங்க... அவளை பத்தி நீங்க கவலை படுறேன்னு அவ மேல மண்ணை அள்ளி போடாதிங்க வாங்க என்று அவரை இழுத்துக் கொண்டு மதுவின் பெரியம்மா திரும்ப

"நான் ஏன் மண்ணை போடனும் அவதான் அவ அம்மா மாதிரி தானே கண்டவனை இழுத்துட்டு வந்து நிகாகிறாளே" என்று கூறிய மறு நொடி பெரியப்பா என்று அவரின் சொல்லை மறுத்து கத்தி இருந்தாள் மது.

"என்ன... என்ன... அம்மாவ சொன்னதும் கோவம் வருதோ நாங்க என்னதான நல்லபடியா சொல்லி சொல்லி வளர்த்தாலும் உன் அம்மாவோட புத்தியால தானே இப்படி ஆன" என்று அவர் மறுபடியும் வார்த்தகளை தீயாய் அவள் மீது வாரி இறைத்தார்.

சுற்றி இருந்தவர்களின் பார்வை தன் மேல் கேளியாய் விழுவது போல் உணர்ந்தவளின் உள்ளமும் சேர்ந்து உடைய பேசமுடியாமல் பெரியம்மாவின் அழுகையையும தாளாமுடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

குத்தி குத்தி ரணமாக்கிய இதயத்தை மீண்டும் துன்புறுத்தும் வலியை உதட்டை கடித்து அழுகையை அடக்கினாலும் அவளையும் மீறி கண்ணீர் கன்னத்தில் இறங்கி நெஞ்சை சுட்டது. அவரை இழுத்து வைத்து கன்னத்தில் அரைய வேண்டும் போல் இருந்தது ஜெயந்திற்கு ஏன் இந்த பொண்ணு இவ்வளவு பொறுமையா இருக்கா என்று அவள் மேல் கோவம் வர

"மிஸ்டர்... வாயிக்கு வந்தபடி பேசாதிங்க... மூனாவது மனுஷனான என்னை வைச்சிட்டு நீங்க.இந்த பொண்ணை அசிங்கபடுத்துவது நல்லால...என்ன தெரிஞ்சி நீங்க இங்க பேச வந்திங்க ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியல எப்படா துரத்தி.விடலாம்னு எதிர்ப்பாரத்து ஒரு காரணம் கிடைச்சவுடனே துரத்திவிட்ட நீங்க எல்லாம் அவள பாத்து பேச கூடாது" என்று சற்று குரலை உயர்த்தி இருந்தான் ஜெயந்த்.

"ஏய்... யார் யார் இவன் ... என்று மதுவை பார்த்து கேட்டவர் நீ யாரா இருந்தா எனக்கு என்ன பச் நீ யாரு உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு .. நீ.என்ன இவளுக்கு வக்காளத்தா போ அந்த பக்கமா முதல்ல... இவ கூட அந்த சேம் சுத்திட்டு இருந்தான். அவன் காரியம் முடிஞ்சதும் அவனை விட்டுட்டு இப்போ உன்னோட சுத்தரா... அதுவாவது தெரியுமா உனக்கு அவளை பத்தி முழுசா தெரிஞ்சதுனாலதான் வீட்டை விட்டே வெளியே அனுப்பினேன்" என்று எள்ளலாக அவளை பற்றி உறைக்க

எதையோ பேச வந்த ஜெயந்தை தடுத்த ஆதி "நான் இவனோட அம்மா... நீங்க பேசுறது ரொம்ப கேவலமா இருக்கு.. பெரியமனுஷன்னா வயசு மட்டும் பத்தாது கொஞ்சம் மனசும் இருக்கனும். அவளுக்கு பெரியப்பாவா இருக்கலாம். நீங்க கடவுள் இல்ல.. எதை பார்த்திங்க எதை வைச்சி பேசுறிங்க...". என்று கேட்ட ஆதியை நன்றியாக பார்த்தார் அவரின் பெரியம்மா எதுவும் எதிரித்து பேசமுடியாமலும் அவரை எதிர்க்க முடியாமலும் இருந்தார்.

"என் பையன் உன்னை எதிர்த்து பேசினான்னு இவங்க ரெண்டு பேரையும் இணைச்சி வைச்சி பேசிறிங்களே உங்களுக்கு உடம்பு கூசல யாருன்னு தெரியாம எப்படி உங்க யூகத்துல ஒருத்தரை தப்பா பேசமுடியும். எனக்கு இந்த பொண்ண பார்த்த ரொம்ப பாவமா இருக்கு உங்களமாதிரி ஒரு ஆளுக்கிட்டத வளர்ந்தத நினைச்சா வேதனையா இருக்கு" என்று தன் ஆற்றாமையால் பேசினார்.

"பழகின ரெண்டு நாள்ல அவளை பத்திய நல்லது மட்டுமேதான் என் கண்ணுக்கு தெரிஞ்சது. நீங்க பாக்குற கண்ணுலதான் இருக்கு உங்களோட நல்லது. உங்க பார்வை தப்பு உன் பேச்சு தப்பு நீங்க அந்த பொண்ணை தப்பு சொல்றிங்களா??" உரக்க குரல் கொடுக்காமல் அதி அழுத்தம்கொடுத்து அவரை அதிர வைத்திருந்தார் ஆதி. அவர் கண்களில் எரிக்கும் சக்தி இருந்தால் மது பெரியப்பாவின் நிலை அந்தோ பரிதாபம் தான்.

ஆதியின் பேச்சில் முற்றிலும் ஆடி போனவர் ஒருவாறு தன்னை சமாளித்து ஏளன சிரிப்பினோடே "ம் எல்லாரும் வக்காளத்து வாங்களாம் மா வாழ்கை பூரா வைச்சி காப்பாத்த முடியுமா?" இவளை என்றார் மனித தன்மையே இல்லாமல்

அவரை அற்ப புழுவை பார்ப்பது போல் பார்த்தாள் மது தன் காதுகளால் கேட்ட செய்தி உண்மையா எனக்கு உதவி செய்ய வந்து அவரு அசிங்கபடுறாறே என்று கலங்கி தவித்தாள்.

கேட்டுக்கொண்டு இருந்த ஆதிக்கு இம்மியும் அதிர்ச்சி இல்லை இதுவரையிலும் மனைவியின் பேச்சில் இருந்த நியாத்தை வைத்து பேசாமல் இருந்த ராஜாராமன் மகனையும் மனைவியையும் பார்க்க இருவர் முகத்திலும் எந்த வித உணர்வினையும் வெளிக்காட்டவில்லை

அது... என்று அவளின் பெரியப்பாவிடம் பேச ஆரம்பித்த ராஜாராமனின் கையை பிடித்த ஆதி "நான் என்ன முடிவு எடுத்தாலும அது சரியா இருக்கும்னு நீங்க நம்புரிங்களா??" என்றார் ஆம் என்று ராஜாராமன் தலை ஆட்டியதும் "அது நம்ம மகனை பாதிக்காதுன்னு நம்புறிங்களா?" என்று கேட்க

ம். என்று தலை ஆட்டியவர் "ஆதி எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு ஆனா.." என்று மகனை பாரக்க... பெற்றவர்கள் இருவரையும் பார்த்தவன் கண்தளை மூடி திறந்து தனது சம்மதத்தை வெளிபடுத்த

மிகவும் மகிழச்சியுடனே பேச்சை ஆரம்பித்த ஆதி "இந்த முருகன் கோவில்ல வைச்சி சொல்றேன் உங்க தங்கை பொண்ணு மதுவந்தி தான் என் வீட்டோட மூத்த மருமக என் மகனும் இவளை தான் கல்யாணம் பண்ணிக்குவான். அதுவும் மதுவந்தியோட முழு சம்மதத்தோட தான்" என்று மதுவின் பெரியம்மாவிடம் சத்தியம் செய்து கொடுக்க முகத்தில் ஈ ஆடாமல் நின்றிருந்தார் மதுவின் பெரியப்பா
~

தோட்டத்து மல்லிகையின் வாசம் நாசியில் எட்டி இருந்தாலும் இருக்கும் மனநிலையில் அதை எல்லாம் சுகிக்கும் எண்ணம் இல்லாமல் தோட்டத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்து இருந்தாள் கவி. மனம் என்னமோ கொஞ்சம் இளகுவாய் இருந்தது மன்னவன் வரும் பாதையில் பார்வையை பதித்து இருந்தவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் அவளின் கண்ணாலனின் கார் வந்து நின்றது வரும்போதே செக்கியூரிட்டி அனைத்து விவரங்களையும் கூறி தன்னை கண்டுவிட்டதையும் கூறி இருக்க கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும் என்று நினைத்தபடிதான் வீட்டிற்கு வந்தான்.

அவனின் அடிபட்ட கையால் கவனமில்லாமல் கார் கதவை சாத்த வலியில் முகம் சுருக்கியவனை பார்த்தவள்.ஓடி சென்று அவன் கை காயத்தை பார்வையிட அவளிடம் இருந்து கைகளை உறுவியவன் "நத்திங்" என்றபடியே வீட்டிற்குள் வந்து இருந்தான்.

அவன் பின்னே நடந்து வந்தவள் அவனிடம் இருந்து பேகை வாங்க நானே கொண்டு போறேன் என்று அவளிடம் கூறியவன் சோபாவில் அமர்ந்து பேகை டிபாயின் முன்னால் வைத்தான். அவனுக்கு முன்னாள் அடுக்கலைக்குள் புகுந்தவள் காபியுடன் அவன் முன் வந்து நிற்க அதை மறுக்காமல் வாங்கியவன் "உன்கிட்டகொஞ்சம் பேசனும்" என்று ஆரம்பித்தான்.

அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவள் அவன் தன்னிடம் பேச வேண்டும் என்று கூறியதும் மனதில் பல சிந்தனைகள் ஓடியது 'இன்னைக்கு ஆபிஸ் போறேன்னு எங்க போயி இருப்பார் கேட்டா பிரச்சினை வருமோ இப்போ அதை பத்தி பேச கூப்பிட்டு இருப்பாரோ இல்லை காலையில் சாருகேஷ் வீட்டுக்கு போயிட்டு வந்தது தெரிஞ்சி அதை பத்தி பேசதான் கூப்பிடுராரோ!!' என்று பலவாறாக ஓடியது.

"ம்.. "என்று கனைத்தவன் "பார்கவி நீ உங்க வீட்டுக்கு கிளம்பு ஒரு பத்துநாள் தங்குறது மாதிரி துணி எடுத்துக்க" என்றான்.

"எங்க வீட்டுக்கா?.... இப்போ அதுக்கு என்ன காரணம்?? என் மேல உங்களுக்கு இன்னும் கோவம் போகலியா? என்னை வெறுத்துட்டிங்களா? அதான் என்னை அனுப்புறிங்களா?" என்று சத்தமிட்டு கொண்டிருக்க.

"லிசன் பார்கவி.. நீ கேட்டது எதுவும் தப்பு இல்ல... அதுக்காகவும் நான் உன்னை போக சொல்லல... எனக்கு இந்த பத்து நாள் டே அன்ட் நைட் வொர்க் இருக்கு. முக்கியமான பிராஜக்ட் எப்ப வருவேன் எப்போ போவேன் சொல்ல முடியாது".
பேசும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் பார்வை ஊசியாய் குத்தியது அந்த கருவண்டாய் குடையும் கண்களுக்குள் ஓடி ஒளிந்துக்கொள்ள மனம் துடித்தது. இருந்தும் தன் எடுத்த காரியத்தில் இவளை கவனிக்காமல் ஒதுக்கியதாக நினைக்க கூடாது என்று அவளை அனுப்பி வைக்க நினைத்துக்கொண்டு தான் வீட்டிற்கு வந்தான்.

அவளின் கண்களை பார்ப்பதை தவிர்த்தவன் "அப்கோர்ஸ் உன்னை தனியா இந்த வீட்டுல விட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது.... உனக்கு எப்போ எந்த ரூபத்துல சாருகேஷ் கிட்ட இருந்து ஆபத்து வரும்னு நெனச்சிக்கிட்டு வேலைய சரியா செய்ய முடியாது" என்றான் வேறு புறம் திரும்பி

"அதான் எனக்கு ரெண்டு செக்கீயூரிட்டி ய போட்டு இருக்கிங்களே.. அவங்க பாத்துப்பாங்க நீங்க நிம்மதியா உங்க வேலைய பாருங்க.. ஆனா என்னை அனுப்புற எண்ணத்தை மட்டும் மாத்திக்குங்க" என்றாள்.

தன் கையில் இருந்த கப்பை டிபாயில் வைத்தவன் "சொன்ன புரிஞ்சிக்கவே மாட்டியா பார்கவி பிரச்சனைன்னு தெரிஞ்சும் அவனை பார்த்துட்டு வந்து இருக்க.. நீயும் உன் பாதுகாப்பும் ரொம்பவும் முக்கியம்". என்றதும் அவனின் அந்த முக்கியம் என்ற சொல் குற்றால சாரலாய் அவளை சிலிர்க்க வைத்தது.

"என்ன பார்த்துக்கிட்டு இருக்க வீட்டுக்கு கிளம்பு உன்னை விட்டுட்டு வறேன். என்று கூற நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த வீட்டையும் உங்களையும் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். பத்து நாள் தானே அதுவரையும் நான் பாதுகாப்பா பத்திரமா இருந்துக்குறேன்". என்று அவனுக்கு பதிலுறைத்தவள் இங்கே அமர்ந்திருந்தாள் எப்படியும் மனதை மாற்றி விடுவான் என்று தோன்ற வேறு வேலை இருப்பது போல உள்ளே சென்று அவனை எட்டி பார்க்க யோசனையாய் அமர்ந்து இருந்தவன் சட்டென அவளை பார்த்ததும்
தலையை உள் இழுத்துக்கொண்டு ஓடியே விட்டாள். 'இது சரி இல்லையே அங்க போய் என்ன பண்ணிட்டு வந்து இருப்பாளோ?" என்று அலுப்பாய் இருந்தது.

அவள் தன் சொல் பேச்சு கேட்கும் வரை கொஞ்சம் கூட இளக்கம் காட்ட கூடாது என்று மனதில் நினைத்து முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு இருந்தான் அவன் பயமே இவளை தனியாய் விட்டு செல்வது தான் அவளோ எங்கே நாமாய் போய் பேசினால் வீட்டிற்கு அனுப்பிவிடவானோ என்று அவளும் பேசுவதை தவிர்த்து தான் விட்ட சவாலில் ஜெயித்து கணவனை பழியில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாள்.

இருவரும் மௌனமாய் ஒருவரை ஒருவர் பாராமல் பார்த்துக்கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்ட கேஷவ் லேப்டாப் கையுமாய் அறையில் மெத்தையில் அமர்ந்து வேலை பார்க்க அறைக்கு திரும்பியவளின் பார்வை அவனையே மொய்த்து இருந்தது 'மூஞ்சி பாரு கடு கடுன்னு அய்யானாரு மாதிரி இருக்கு... அறுவால் ஒன்னுதான் குறை கொடுத்த நீயும் அவரும் ஒன்னுதான்... தாடி வைச்சிட்டு ரொம்பதான் சீன் போடுற.. இருந்தும் நீ அழகன்டா என் மனச திருடின அழகன்..'. என்று அவனை பார்த்து புன்னகை அரும்ப அவளின் கள்ள விழி பார்வை உறுத்த அவளை திரும்பி பார்த்தான் சட்டென தலையை குனிந்து புத்தகத்தில் கண்ணை பதித்து இருந்தாள். தன் மாயையோ என்று நினைத்தவன் கருமமே கண்ணாக அனைத்து வேலைகளையும் முடிக்க இரவு பதினோரு மணியை தொட்டது நாற்காலியில் அமர்ந்து இருந்தவள் அமர்ந்த வாக்கிலே துயில் கொள்ள அவள் அருகில் வந்தவன் "ரொம்ப படுத்தரடி" என்று அவளை அள்ளி மெத்தையில் கிடத்தி அவளை அனைத்தவாறாக படுக்க மறுபக்கம் கண்களை திறந்தவள் 'திருடா உன்னை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் டா நீ இல்லாம என்னால மட்டும் இல்ல நான் இல்லாம உன்னாலயும் இருக்க முடியாது' என்று உள்ளுக்குள் அவனுக்கு கொட்டு வைத்தவள் அந்த சுகத்திலேயே கண் அயர்ந்தாள்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 41
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN