ராஜூ குழப்பமான மனநிலையுடன் வீட்டிற்கு மருத்துவரை அழைத்துக்கொண்டு வர என்றும் இல்லாத திருநாளாய் வீட்டிற்குள் நுழைந்தவுடனே "ஒரு டாக்டரை அழைச்சிட்டு வர ஏன்டா இவ்வளவு நேரம்?" என்று கேட்டவரை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தான் ராஜூ.
ராஜூவிற்கு திருமணம் ஆன தினத்திலிருந்து இன்று வரை ஒரு வார்த்தை கூட மகனிடமோ மருமகளிடமோ பேசியது இல்லை. இன்று வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக இப்படி ஒரு கேள்வியை கேட்க ஒன்றும் புரிபடாமல் குழப்பத்துடன் அவரை ஏறிட்டான்.
அறையில் இருந்து வெளிபட்ட கண்ணன் அண்ணனை பார்த்ததும் கங்காராட்ஸ் அண்ணா என்று அருகில் வந்தான். அவன் வாழ்த்தியதும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் குழப்பமான முகத்துடன் அவனை பார்த்தவன். இப்போ அவசரமா எதுக்குடா டாக்டர கூட்டி வர சொன்ன? வாழ்த்து சொல்ற ? என்று கேட்டான் ராஜூ.
"அதை நான் சொல்றேன் டா முதல்ல அவரை உன் பொண்டாட்டியை செக் பண்ண விடு" என்று அவன் கேள்விக்கு பதிலாக ராஜூவின் தாயே பதிலளித்தார். "உள்ள தான் சார் இருக்கா போய் என்னன்னு பாருங்க... பேசிட்டு இருக்கும் போதே மயக்கமாகி விழுந்துட்டா, உள்ள படுக்க வைச்சி இருக்கோம்" என்று அவருக்கு விளக்கி கொண்டு இருக்க அதை கேட்டுக்கொண்டு இருந்த ராஜூ "வாட் ஷீலா மயக்கமாகி விழுந்துட்டால, ஏதாவது அடி பட்டுடுச்சா? அவளுக்கு என்ன?" என்று மருத்துவருக்கு முன்னால் அறையினுள் நுழைந்தான்.
"டேய், டேய்... ஒன்னும் இல்ல டா எல்லாம் நல்ல விஷயம் தான் நினைக்கிறேன்" என்று அவனை சமாதபடுத்த "எது அவ கீழே விழுந்தது நல்ல விஷயமா?" என்று தாயிடம் வினவியன் மனைவி மயக்கம் தெளிந்து படுத்து இருக்க அருகில் சென்றான்
அவளை பரிசோதித்து இருந்த மருத்தவரிடம் "என்ன ஆச்சி டாக்டர்" என்று வினவினான்.
அவளை பரிசோத்து இருந்தவர் "நத்திங் ராஜூ பயப்படும் படியா ஒன்னும் இல்ல... அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க இன்னைக்கு முழுசும் அவங்க ஆகாரம் எடுத்துக்காம இருந்து இருக்காங்க, அதான் இந்த மயக்கம் முதல்ல ஜூஸ் குடுங்க வேற எதுவும் பெருசா வேண்டாம். நல்ல வேல கிழே விழுந்ததுல எங்கேயும் அடிபடல" என்று கூறி வெளியேற
அதை கேட்டுக்கொண்டு இருந்த ராஜூவின் தாயிக்குதான் முகத்தில் சோகம் குடிகொண்டாது போல் ஆனது இருந்தும் டாக்டரிடம் வந்தவர் "நல்ல செக் பண்ணிங்களா டாக்டர் வெறும் மயக்கம் தானா வேற எதுவும் இல்லையா என்று விசாரிக்க
சாதாரண க தான் பயப்படும் படி ஒன்று இல்லை" என்று கூறி சென்று விட்டார்.
"மனைவியின் அருகில் அமர்ந்தவன் நீ இன்னைக்கு முழுசும் சாப்பிடலையா?" என்று தன் விசாரணையை ஆரம்பிக்க
தலையை குனிந்தவள் ம் என்றாள்.
"ஏன் என்ன ஆச்சி உனக்கு ஏன் சாப்பிடாம இருந்த?" என்று சற்று கடுமையான குரலில் கேட்கவும்
"இன்னைக்கு ஃபிரை டே அதனால ஃபாஸ்டிங் இருந்து அம்மனுக்கு விளக்கு ஏத்தினா மனசுல நினைச்சது நடக்கும்னு பேப்பர்ல படிச்சேன்... என்று தயங்கியபடி கூறியவள் இதுவரை நான் ஃபாஸ்டிங் இருந்தது இல்ல அதான் கொஞ்சம் பசில மயக்கம் வந்திடுச்சி" என்று கையை பிசைந்தபடி கூறியவளை முடிந்த மட்டும் முறைத்தவன்
"உனக்கு தான் இது எல்லாம் பழக்கம் இல்லல தெரியாதத ஏன் செய்ற ... சாமி சொல்லுச்சா.... ஷீலா, எனக்கு ஃபாஸ்டிங் இருந்து விளக்கு போட்டாதான் நான் உன்னை ஏத்துக்குவேன்னு... அடி தத்தி எந்த மதத்து தெய்வமும் பசியோட வந்து என்னை கும்பிடுன்னு சொல்லாது. என்று கூறி அவளுக்கு வேண்டிய ஜீஸை முன்னால் நீட்டி குடி என்று கூற
ஜூஸ் தம்பளரை விளக்கியவள் திக்கி திணறி பீளிஸ் வாங்க கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம் நான் வேண்டி இருக்கேன் விளக்கு போட்டே ஆகனும்" என்று கூற
ஹேய்... டென்ஷன் ஏத்தாதடி என்று கூறிக்கொண்டு இருக்க முதல்ல இந்த ஜீசை குடி அப்புறம் கோவிலுக்கு போகலாம் என்று வாசல் புறம் இருந்து ஒரு குரல் இருவரையம் திரும்பி பார்க்க வைத்தது.
அந்த குரல் வந்த திக்கில் அங்கு நின்றிருந்தவரை கண்ட ஷீலா ஒரே மடக்கில் மொத்த பழசாற்றையும் தொண்டையில் சரித்து இருந்தாள். அவளை பார்த்து வீட்டுலயே விளக்கு போட்டு விரதத்தை முடிச்சிக்க உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா என்று கூறியவர்வேறு யாரும் அல்ல சாட்சாத் ராஜூவின் தாய் தான். மகனையும் மருமகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ஏமாற்றத்தை மகனிடம் காட்டிக்கொள்ளாமல் அடுக்கலைக்குள் புகபோக அருகில் வந்த கண்ணன் அம்மா என்றான் கவலையாக.
வெறுமையான முகத்துடன் இருந்தவர் "எனக்கு எதுவுமே கொடுத்து வைக்கல டா... எல்லாம் நான் வாங்கி வந்த வரம்" என்று வருத்தமாய் கூறிவிட்டு வேலையை தொடர சென்றார்
தண்ணீர் எடுக்க வந்த ராஜூவின் செவிகளில் இச்சொல் விழவும் தம்பியின் அருகில் வந்தவன் "என்னடா அம்மா ஏன் இவ்வளவு வருத்தமா பேசிட்டு போறங்க... நீ ஏதாவது அவங்க வருத்தப்படுறமாதிரி பண்ணியா" என்று கேட்க
"டேய் அண்ணா, இன்னுமா உனக்கு விஷயம் புரியல!! அவங்க வருத்தமா பேசிட்டு போறது என் விஷயத்துக்கு இல்ல உன் விஷயத்துக்கு" என்றவன் சாயங்காலம் நடந்ததும் தாயின் எதிர்பார்ப்பும் தங்களுக்குள் நடந்த சம்பஷணைகளையும் கூற அவனுக்கு என்ன செய்வதென்றே என்றே புரியவில்லை கணத்த மனதுடன் மனைவியை தேடி சென்றவனோ யோசனையுடன் அமர்ந்திருக்க அதை கண்ட ஷீலா "என்னங்க என்ன யோசனை சாதாரண மயக்கத்துக்கா இப்படி முகம் போகுது பிளிஸ் இனி நான் இதுமாதிரி செய்யல" என்றதும் மனைவியின் கைகளை அழுத்தம் கொடுத்து தன்னை சமாதனப்படுத்திக் கொண்டான்..
அனைவரும் சாப்பிட்டு படுக்க சென்றதும் தன் அறைக்குள் வந்தவன் "இன்னைக்கு அம்மா என்கிட்ட பேசினாங்க ஷீலு" என்றான் சன்னல் புறம் பார்வையை பதித்து
மகிழ்ச்சியாக அவன் அருகில் வந்தவள் "என்கிட்டயும் பேசினாங்களே... என் வேண்டுதல் பளிச்சிடுச்சிங்க" என்று குதுகலிக்க சரெல் என்று அவளை திரும்பி பார்த்தவன் என்ன வேண்டிக்கிட்ட என்று கேட்க
"அத்தகிட்ட நீங்க பேசனும் அவங்க நம்மகூட சமாதானம் ஆகனும்னு வேண்டிக்கிட்டேன்" என்று கூறவும் பட்டென்று அருகில் சென்று சட்டென்று அணைத்தவன் மௌனமாய் இருந்தாலும் அவனுக்கு இது தேவையான ஒன்றாய் இருந்தது
என்றும் இதுபோல் அணைக்காதவன் இன்று சட்டென அணைத்ததும் ஏதோ ஒன்று அவளை உறுத்த ராஜூ "என்ன ஆச்சி என்னை பாருங்க என்னை பாருங்களேன்" என்று அவனை விளக்கி விட "ஐ லவ் யூ டி ஐ லவ் யூ" என்று உறுகினான்.
விடிவிளக்கின் வெளிச்சத்தில் தன் தாயின் மனதில் இருந்ததை மனைவியிடம் மறைக்காமல் கூறியவன் "அவங்க ஏமாற்றத்தையும் மறைச்சிக்கிட்டு நம்மக்கிட்ட பேசி இருக்காங்க" என்று கூற அவன் மடிமீது தலை வைத்து படுத்தவள் "பாவங்க அத்த எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்து இருப்பாங்க நாம அவங்ககிட்ட மன்னிப்பு கேககனும் ராஜூ " என்று ஷீலா அவரின் நிலை அறிந்து கூற "
"வேண்டாம் டா இப்படியே இருக்கட்டும் அம்மாவுக்கு இது தெரிஞ்சா இன்னும் வருத்தப்படுவாங்க... நாளடைவில் இது தானாவே சரி ஆகிடும் டா" என்றவனின் மனது வெகு நாட்களுக்கு பிறகு தாய் தங்களிடம் பேசியதில் அமைதியாய் எந்த வித சஞ்சலமும் இன்றி இருந்தது.
ஸ்டெல்லா வீட்டு வாசலில் நின்றிருந்த கேஷவையும் சக்தியையும் "உள்ள வாங்க சார்" என்று அழைத்து இருக்கையை கை காட்டியவள் எதிர் புறத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து சொல்லுங்க சார் என்றாள்.
"நீங்க தான் சொல்லனும் மிஸ் ஸ்டெல்லா
மாணிக்கம் சார் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்? கதிரை பத்தி உங்களுக்கு என்ன தெரிஞ்சது ?அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? எல்லா கேள்விகளுக்கும் விடையை நீங்கதான் சொல்லனும்" ஸ்டெல்லாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே கூறினான் சக்தி
"ஒரு நிமிஷம்" என்றவள் "கனி அக்கா காபி பிளீஸ்" என்றவள் "காபி ஓகே வா" என்று கேட்டு அதை உறுதிபடுத்தி பின் பேச ஆரம்பித்தாள்.
"ஃபஸ்ட் உங்க கேள்விக்கான பதில் மாணிக்கம் சாரை எனக்கு கதிர் மூலமாதான் தெரியும் அவர் பத்தி அவன் சொல்லி இருக்கான் பட் நேர்ல பார்த்தது இல்ல" என்றாள். அவள் பேச்சில் தெளிவும் நிமிர்வும் இருந்தது.
கேஷவும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"உங்களோட அடுத்த கேள்வி கதிர் பத்தி என்ன தெரியும் அதானே என்றவள் கதிர்... கதிர் இப்போ உயிரோட இல்ல அது மட்டும் தான் தெரியும்" என்றாள். கொஞ்சம் கரகரத்த குரலில்.
"வாட்... என்று கேஷவ் அதிர்ந்தாலும் உங்களுக்கு எப்படி தெரியும் கதிருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்" என்றான்.
ஒருசில நிமிடம் மௌனம் காத்தவள் "கதிரை கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டேன். அதுதான் எங்களுக்குள்ள இருந்த சம்மந்தம்" என்றவளின் குரல் மிகவும் உடைந்து இருந்தாலும் சற்றும் தளராது தனது உறுதியை கடைபிடித்தவள் "அவனை கொன்னவன் அனுஅனுவா சாகனும் சார்" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினாள்.
"சாரி மிஸ் ஸ்டெல்லா" என்று நிறுத்த "ஸ்டெல்லா ஆளவந்தான்...." என்று உறுதியோடு கூறினாள்.
"வாட்" என்று இருவரும்.சரெலேன எழுந்து விட "எஸ் அவர் தான் என் அப்பா. சமுதாயத்துல எங்களுக்குன்னு அங்கிகாரம் எதுவும் கொடுக்காத இரண்டம் மனைவியின் பொண்ணு தான் நான்... அவரோட பெயரை எந்த இடத்திலும் உபயோகித்தது இல்லை... இதை பகிரங்கமா தெரியபடுத்த வேண்டிய என் அம்மாவோ இப்போ உயிரோட இல்லை கதிரோட மரணத்தின் மூலமா வெளியே வந்திடுச்சி இதுதான் எனக்கும் ஆளவந்தான் என்ற பணமுதலைக்கும் இருக்கும் உறவு அந்த பணமுதலையின் பணத்தாசைக்கு தான் அநியாயமா என் கதிரை இழந்துட்டேன்". என்றவள் அன்றைக்கு மாணிக்கத்தின் வருகைக்காக காத்திருக்கும் போது தந்தையின் ஆட்கள் வரவும் அந்த இடத்தில் இருந்து வெளியேறியதை கூறினாள்.
கூடவே ஒரு மைக்கோ சிப் அடங்கிய மெல்லிய கவரையும் கொடுத்தாள். "என் அப்பாவின் பண்ணை வீட்டுக்கு போகும்போது அங்கு கதிரோட மொபைல் கிடைச்சிது. அதுல அவன் கடைசியா பேசினது இருந்தது அதைதான் இதுல காபி பண்ணி வைச்சி இருக்கேன். மாணிக்கம் சார்கிட்ட இதை கொடுக்கதான் வரசொன்னேன். நான் தனியா அவரை எதிர்த்து செய்யலாம் ஆனா எந்த பக்கபலமோ இல்லாத என்னை கொன்னு அவரோட இடத்தை தக்க வைச்சிக்க கூட அவர் தயங்கமாட்டார். எனக்கு என்னை விட கதிர்தான் முக்கியம் அவனோட இறப்பிற்கு அவர் பதில் சொல்லியே ஆகனும் அதை பார்க்க நான் உயிரோட இருக்கனும் அதுக்கப்புறம் எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை" என்றவள் "அதான் இதை உங்ககிட்ட தறேன் அவனோட சாவுக்கு நீங்கதான் நியாயத்தை வாங்கி தரனும்" என்றாள்.
பலமாக போடப்பட்ட முடிச்சிக்கள் ஒவ்வொன்றாய் தானாய் அவிழ்வதை போல உணர்வுடன் இருந்தனர் இருவரும். அவளிடம் இருந்த ஆதாரத்தை பெற்றுக்கொண்ட கேஷவ் "கதிரின் ஆசையை நிறைவேத்தி அந்த இடத்தில் ஃபாக்டரிய வரவிடாம பண்ண எல்ல முயற்சியும் எடுப்போம். அவன் இழப்புக்கு நியாயம் கிடைக்கும் ஸ்டெல்லா..அவன் எதற்காக உயிரை விட்டானோ அது நடக்கும் நாங்க வரோம் கவனமா இருங்க" என்றவர்கள் அவளிடம் விடைபெற்று வெளியே வர அன்நௌன் எண்ணில் இருந்து கேஷவிற்கு அழைப்பு வந்தது.
சற்றே யோசித்தவாறு அதை எடுத்து காதில் பொருத்தியவன் பொருமையோ காற்றில் பறந்தது.
"யாரு மிஸ்டர் கிரேட் பிஸ்னஸ்மேன் கேஷவ் ராஜராமனா" என்று எள்ளளாக ஒரு குரல் கேட்டது.
"எஸ் நீங்க" என்றான்.
"நான் யார்ன்னு தெரிஞ்சு என்ன பண்ண போற??? சரி நீ கேக்குற உன் மண்டைய சூடாக்காம சொல்றேன். தேவராஜ்.... சாருகேஷோட நண்பன் தேவராஜ்" என்றிட பற்களை கடித்து தன் கோபத்தை அடக்கியவன் "நீ யார வேனா இருந்துட்டு போ இப்போ எனக்கு எதுக்கு போன் பண்ண" என்றான் கேஷவ்.
"ஹோ... அதை சொல்ல மறந்துட்டேன் பாரு நல்ல வேலை நியாபக படுத்தின சரி சரி உன் பொண்டாட்டிக்கு ஏதோ ஆக்ஸிடென்ட் ஆகிடிச்சாமே... அடி பலமா இல்ல ஸ்பாட் அவுட்டா உனக்கு இன்னும் தெரியாத" என்றான் நக்கல் தோனியில்
"வாட் ரப்பீஷ் என்ன உளர்ற" என்று கோபமாக உறைத்துவிட்டு போனை கட் செய்து செக்கீயூரிட்டிக்கு அழைத்தவன் அங்கு நடந்த நிலவரங்களை கேட்க நடந்த உண்மைகளை அப்படியே கூறிவிட தன்னை சமன்படுத்தியவன் சக்தியிடம் ஸ்டெல்லா கொடுத்த சிப்பை மாணிக்கத்திடம் சேர்ப்பித்துவிடுமாறு கூறியவன் அவனிடம் தன் கோவத்தை காட்டிக்கொள்ளாமல் சக்தியை காவல் நிலையத்தில் இறக்கிவிட்டு மனைவியை காண காற்றாய் விரைந்தான்.
நண்பர்கள் இருவரும் சென்றுவிட மாடியில் தங்களது அறையில் இருந்தவள் கதவை திறக்கும் அரவம் கேட்க எழுந்து அமர்ந்தாள். தலையிலும் கைகளிலும் சிறுசிறாய்ப்பு இருக்க காயம் குறைவு என்று மனநிம்மதி அடைந்தாலும் தன் மனைவியின் உயிருக்கு குறி வைத்துள்ளானே என்று நண்பனின் மீது எல்லையற்ற கோபத்தில் இருந்தான் அவன்.
அவளின் காயங்களை பார்த்தவன் ஒரு நிமிடம் ஆஸ்வசமாய் மூச்சை வெளியேற்றினான் அப்பாட அவள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மனநிம்மதி இருந்தாலும் அப்படியே விடமூடியாது பரிதவித்து போனான். "இதுக்குதான், இதுக்குதான் சொன்னேன் அவன் வெறி பிடிச்சி போய் இருக்கான் நீ என் கூட இருக்க வேண்டாம் எனக்கு ஒரு பத்தே நாள் டைம் கொடு எல்லா பிரச்சனையும் முடிக்கிறேன்.... அது வரை உன் வீட்டுல போய் இருன்னு ஏன்டி சொல்றத கேக்கவே மாட்டியாடி" என்று கோபமாய் ஆரம்பித்தவன் இயலாமையாய் முடித்தான்.
"நான் அங்க இருந்தா மட்டும் உங்க மனைவி இல்லன்னு ஆகிடுமா??? இல்ல அங்க எனக்கு எந்த ஆபத்தும் வராம போயிடுமா ... இங்க வைச்சி செய்ய நினைக்கிறவன் அங்கேயும் செய்வான்ல... எங்க இருந்தாலும் நான் உங்க பொண்டாட்டி தாங்க" என்று இடக்காக கேள்வியை கேட்டு வைத்தாள் கவி
"நீ என் பொண்டாட்டி யா.... இல்ல சரியாண பாட்டியா.... இப்போதான் உட்கார்ந்து வியாக்கியானம் பேசுவியா என்று மனதில் அவளை தாளித்தவன் அடியேய் ராட்சசி நீ என்கூட இருக்கறதுல தான்டி... உனக்கு ஆபத்து வருது... அதுதான் உன்னை போக சொல்றேன்" என்று மேலே இருந்து பெட்டியை எடுத்து அவளின் துணிகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தவன். "நான் சொல்றத கேட்டுதான் ஆகனும் உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ கிளம்பி வீட்டுக்கு போய்தான் ஆகனும் உன் உயிருக்கே அவன் எமனா மாறிட்டான். இனி நீ இங்க வேண்டாம் என்னோடு வா" என்றான்.
"நான் ஏன் வீட்டை விட்டு போகனும் அவனுக்கு பயந்து எல்லாம் எங்கேயும் போக முடியாது... நான் எங்கேயும் போக மாட்டேன் உங்க கூட தான் இருப்பேன். எனக்கு எப்பவும் ஒரே பேச்சிதான் நீங்களே என்னை கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாலும் உங்களை விட்டு போக மாட்டேன்... போக மாட்டேன்... போகமாட்டேன்" என்று அவன் கைகளில் இருந்த பெட்டியை பிடுங்க சரெலேன வேகமாக எழுந்தவள் கட்டிலின் விலிம்பில் தையல்போட்ட இடத்தில் இடித்துக் கொண்டு வலியையையும் பொருட்படுத்தது தாங்கி தாங்கி நடந்து வர அவளின் நடையை பார்த்தவன் விழு போகிறாள் என்று சற்றும் தாமதிக்காமல் அவளை பிடித்து கட்டிலில் அமர வைத்திருந்தான்..
"ஏய் பாரு ஏன் தாங்கி தாங்கி நடக்குற கால்ல கூட அடி பட்டிருக்கா... லேசான அடிதான்னு பார்த்தா இப்படி இருக்க" எங்க காட்டு என்று கேட்க...
"ஒன்னும் இல்லங்க லேசான அடிதான்" என்று மறைக்க நினைத்தாள்.
"காட்டுன்னு சொல்றேன்ல.... லேசான அடியா இல்ல பலமான அடியான்னு நான் பார்த்துட்டு சொல்றேன் முதல்ல அடிபட்ட இடத்தை காட்டு" என்று அவளை கட்டாயப்படுத்தினான் கேஷவ்.
"தையல் போடப்பட்ட இடத்தின் வலியின் காரணமாய் கண்கள் குளமாக அதை அவனுக்கு தெரியாமல் மறைத்தவள் பீளிஸ்ங்க" என்று கெஞ்ச நீ காட்டு என்று கூற விடப்பிடியாய் அவளின் அடிப்பட்ட இடத்தை பார்க்க சதை கிழிந்து தையல் போடப்பட்டு பெரிய பிளஸ்டரால் மூடப்பட்டு இருந்தது எல்லாம் தான்னால் தானே என்னை பழிவாங்குறேன்னு சொல்லி உன்னை கஷ்டபடுத்துறானே என்று சாருகேஷின் மேல் கடுங்கோபம் கொண்டவன்.
என்ன கூறினாலும் புரிந்து கொள்ளாமல் குற்றம் சுமத்துபவனை என்ன செய்வது.... உண்மை தெரியாமல் அவனும் கழுத்தை அறுக்குறான், என்னை வீட்டு போக மாட்டேன்னு இவளும் அடம் பிடிக்கிறாள்... என்று நினைத்து கேஷவின் மனம் ஒரு நிலைபாட்டில் இல்லை வெளியே கிளம்பியவனின் பைக் சாலையில் சீறியது சாருகேஷின் மேல் இருந்த அத்தனை கோபத்தையும் பைக் அக்ஸிலேட்டரில் காட்டி இருந்தான். அவன் பைக் சாருகேஷின் வீட்டிற்கு முன்னாள் நின்றிருந்தது.
ஆத்திரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவன் சாருகேஷ் என்று கத்த அவனின் சத்தத்தில் அறையில் இருந்து வெளியே வந்த சாருகேஷின் சட்டையை கொத்தாக பற்றி "ஏன்டா ஏன்டா ஒரு உயிரோட விளையாடுற? உனக்கு உயிர் தான் வேனும்னா என்னை கொல்லுடா... உனக்கு நண்பனா இருந்த காரணத்துக்கு நான் சாக தயாரா இருக்கேன். உனக்கும் எனக்கும் என்ன பகைன்னே தெரியாத அவளை ஏன்டா கஷ்டப்படுத்துற? என்றான்.
"பச்... பச் .... என்று அலுத்தவன் எடுடா கைய... எடுடான்றேன்" என்று உரக்க கத்தியவனின் கைகள் கேஷவின் கைகளை சட்டையில் இருந்து உதறி தள்ளியது.... "ஓஹோ" என்று எள்ளலான குரலுடன் "உன் பொண்டாட்டியோட உயிர்னு இப்படி துடிக்கிரியோ இன்னும் துடிப்படா" என்றவனின் குரலில் சினம் வெளிபட்டது
"என்ன சொன்ன... என்ன சொன்ன... உன் உயிர எடுத்துக்கவா சீ.... உன் உயிர் எனக்கு எதுக்குடா ஒரே நாள்ல எல்லாம் மறஞ்சிடும்... நீ நிம்மதியா போயிடுவ அதுக்காகவா இத்தனை வருஷம் சும்மா இருந்தேன்... உன்னை குடும்பத்தோட ஒட்டவிடாம செஞ்சேன்... அனுபவிச்சல நரகத்தை பார்த்தல்லா அவங்க இல்லாம.... நான் என் குடும்பத்தை இழந்து நிக்கிறமாதிரி தனி மரமா நீயும் நிக்கனும் டா"
"ஒரு உயிர் போனதுக்கு நீ கஷ்ட்டபட்டே ஆகனும் டா முதல்ல உன் பொண்டாட்டிய அனுப்பி நீ நல்லவன்னு சொல்லி ஒரு கட்டுக்கதை கட்டி உன்னை விட சொல்லி கெஞ்சவைச்சே... இப்போ நீ வந்து அவளை விட சொல்லி கெஞ்சிற என்ன மானங்கெட்ட பொழப்புடா உனக்கு" என்று எள்ளி நகைத்தவாறு பேசவும் அதுவரை இழுத்துபிடித்த பொறுமையுடன் இருந்தவன்
"யூ..... ஷட்டப்... உன் இழப்பு ரொம்ப பெருசுடா அதான் பொறுமையா இருந்தேன். நான் பொறுமையா இருந்ததுனால எல்லாத்தையும் பொறுத்து போவேன்னு நினைக்காத என் பார்கவிக்கு ஒன்னுன்னா பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு கனவு கானாத... நான் பழைய கேஷவா மாறவும் தயங்க மாட்டேன்..." என்றவன் "இதுவரை நண்பனுக்கு முக்கியத்துவம் கொடுத்து முட்டாளா இருந்துட்டேன் இனி அந்த முட்டாள் தனத்தை என்கிட்ட எதிர்பார்க்காத"
"நான் நல்லவன்னு நீ நம்பனும்னா அது உத்ராவே உயிரோட வந்து சொன்னா மட்டும் தான் நடக்கும் சொல்ல வேண்டியவளோ உயிரோட இல்ல உயிரோட இருக்கவளையோ கொள்ள பாக்குர" என்றான் விரக்தியாய்
"அவள தான் கொன்னுட்டியே டா உருத்தெரியாம அழிச்சி மூட்டியா தானேடா கொண்டு வாந்தாங்க உன்னை நம்பி அவ போயிட்டா டா" என்று மறுபடியும் பழியை சுமத்த
"சாருகேஷ் போதும் நிறுத்து அவளை நானும் தங்கையா தான் நினைச்சிட்டு இருந்தேன். அவளை இன்னொரு முறை என்னோடு சம்மந்தபடுத்தி பேசின இது எனக்கு மட்டும் இல்ல அவளுக்கும் கலங்கத்தை தான் கொடுக்கும். இனி நானும் சும்மா இருக்க மாட்டேன் உன்னோட ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு மைன்ட் இட்" என்றவன் புயலென வந்த வேகத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
கேஷவ் சென்றதும் சாருகேஷின் மூளையில் உதித்தது ஒன்றே ஒன்று தான் இன்னைக்கு அவளுக்கு என்ன நடந்தது நான் எதுவும் செய்யல ஒருவேல தேவா.... தேவராஜோட வேலையோ என்று சிந்தித்தபடியே இருந்தவன் நடந்த சம்பாஷணைகளில் உணர்ச்சிவசப்பட்டு தவறுதலாக அடிபட்டிருந்த கரத்தினாலேயே தலையை அழத்தமாக கோதிவிட கையில் இருந்த காயம் வலியை உணர்த்த மற்றதை மறந்தான்.
கார்கால மேகமாய் இருளை சுமந்துக்கொண்டு இருந்த வானம் தன் நிலவு காதலியை கண்டு அவளை அணைத்திட ஆவல் பிறந்து தன் கருமேகத்திற்குள் மூழ்க வைத்திட முயற்சித்துக் கொண்டிருந்தது..
கவியின் சிறு மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் கேள்விகான பதிலின் பெட்டகமான கேஷவின் உதடுகளோ பூட்டிய படி இருந்து கேள்வி கேட்பதை தடுத்து இருந்தது. இரவு கேஷவின் தாமதமான வருகையை அவள் எதிர் பார்த்ததுதான் அவனின் இறுக்க முகம் கொஞ்சமும் அவளை அச்சம் கொள்ள வைக்கவில்லை மாறாக அவன் மேல் காதல் பெறுக வைத்தது தனக்காக இவன் பார்த்து பார்த்து செய்யும். ஒவ்வொரு செயல்களிலும் அவன் காதலே தெரிய அவனை விட்டு பிரியும் எண்ணம் கூட வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டாள்.
இருவருக்கும் இடையே மௌனமொழி ஆட்சிசெய்ய தன் அறைக்கு சென்று உடைமாற்றி புத்துணர்வு பெற்று வந்தவன் அப்படியே மெத்தையில் காலை நீட்டி தலைக்கு கைகள் இரண்டையும் முட்டுக்கொடுத்து கண்களை மூடி படுத்துவிட்டான். அவன் வரும்போதே அவனுக்காக உணவினை எடுத்து வைத்தவள் கேஷவிற்காக காத்திருந்தாள். படுத்தவனின் மனநிலையோ இன்று மிகவும் மோசமனதாக இருந்தது. பார்கவியின் மேல் பலமடங்கு கோவத்தில் இருந்தான்.
மேலே உடை மாற்றி வர சென்றவன் வரவை எதிர்பார்த்து அமர்ந்து இருக்க அவன் வருவதற்கான அறிகுறியே இல்லை பொறுத்து பொறுத்து பார்த்தவளின் பாதங்கள் மாடிப்படியை நோக்கி தாங்கி தாங்கி சென்றது. அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தவளின் வரவை அறிந்தவன் கண்களை திறவாமலேயே படுத்திருந்தான் மனதில் அத்தனை கோபம் இருந்தும் அவளிடம் காட்ட கூடாது என்ற மனோபாவத்தில் அமைதியை தத்தெடுத்து படுத்திருந்தான்.
அவளின் இருப்பை உணர்த்த ம் என்று தொண்டையை கனைத்து தன் வரவை அவனுக்கு உணர்த்த கண்களை திறவாது இருந்தான். இப்போ என்னவந்துன்னு இப்படி படுத்து இருக்கார். எல்லாமே எதிர்பார்த்தது தானே என்று மனதில் புலம்பியவள் அவன் தலையில் கை வைத்து என்னங்க என்று அழைக்க அவளின் ஸ்பரிசம் தன் மேல் இருப்பதை உணரந்தவன் கண்களை திறந்தான் நல்ல செந்நிறமாக சிவந்து இருந்த கண்களை பார்த்தவள் என்னங்க உடம்புக்கு என்ன என்று பதட்டத்துடன் அருகில் அமரந்தாள்.
செய்றதையெல்லாம் செய்துட்டு எப்படி இப்படி இருக்கா!! என்று பெருமூச்சி ஒன்றை வெளியேற்றியவன் "நான் உனக்கு சொன்னது எல்லாம் காத்துல விட்டுடுவியா பார்கவி" என்றான் அழுத்தம் திருத்தமாக அவன் பார்கவி என்றதும் சுதாரித்தவள் ஏதோ நம்மமேலதான் சொல்லபோறான் இன்னும் வீட்டுக்கு போறதை பத்தி பேசுவானோ இல்ல கார்த்திக் அண்ணா நான் விசாரிச்சதை சொல்லிட்டாரோ என்று மனதில் பேசியவளின் முகம் வெளியே சகஜநிலையில் தான் இருந்தது.
"என்னங்க என்ன நீங்க சொன்னத விட்டுட்டேன் நீங்கதானே சொன்னிங்க உங்கள விட்டு நான் போக கூடாதுன்னு அதைதானே இப்ப செய்றேன்." என்று ஒன்றும் தெரியாதவள் போல் சொல்லிக்கொண்டே கையில் கொண்டுவந்த உணவு தட்டினை அவன் புறம் நீட்டினாள். இப்போ இதை சாப்பிட்டு எனர்ஜியா என்கூட பேசுங்கங்க கண்ணுல பசி தெரியுது மச்சி என்றாள் அவளின் கைகளில் உணவினை திணித்து
பச் என்று சலித்தவன் அந்த உணவினை அப்படியே டேபிளில் வைத்தவன். எனக்கு பசியில்ல என்று கூறியபடியே அவளின் விளிப்பில் அதிர்ச்சியான முகபாவத்தை காட்டி இருந்தான்.
இந்த ரணகலத்திலும் அவனின் பாவனைகளை ரசித்தவள் "என்ன மச்சி வொய் கண்ணு பெரிசாக்கி இந்த ஷாக்கிங்" என்றவள் வாய் தான் பசிக்கலன்னு சொல்லுது ஆனா "உங்களோட கண்ணு எனக்கு பசிக்குதுடின்னு சொல்லுதே" என்று கண்ணடித்தாள் ஒன்றும் நிகழாதவள் போல்
'எதுக்கு ஷாக்குன்னு தெரியாதவ மாதிரியே கேக்குறா இதுல கண்ணுவேற அடிக்குறா பாரு பச் முடியலடி' என்று மனதில் அவளை திட்டியவன் பேச்சை மாத்தாத என்றிட
"மச்சி நீங்க சாப்பிட்டு என்ன கேள்வி கேட்டாலும் பதில் டான்டான்னு வரும்" என்று கூறி டேபிளில் இருந்ததை கைகளில் எடுத்த உணவினை அவனின் வாயருகே கொண்டு சென்று ஊட்டிவிட எவ்வளவு நேரம் தான் அவளை முறைப்பது போன்ற பாவனையிலையே இருப்பது அவனின் மனம்திருடிய கள்ளியின் செயல்களில் மனம் லேசாக மற்றதை புறந்தள்ளியவன் உணவினை பெற்றுக்கொள்ள ஒருமனமித்த அன்னோன்யமான தம்பதிகளாக அங்கே காட்சியளித்தனர் இருவரும்.
உணவு முழுவதும் உண்டு முடித்து பசி அடங்கியதும் கோபமும் கொஞ்சம் மட்டுபட்டிருந்தது. கைகளை கழுவி தட்டை ஒதுக்கி வைத்தவள் அவனின் பக்கத்தில் நன்றாக அமர்ந்து "இப்போ சொல்லு மச்சி என்மேல என்ன என்ன தப்பு ஒன்னு ஒன்னா சொல்லுங்க கணக்கு பண்ண வசதியா இருக்கும்" என்றாள் கொஞ்சம் சிரிப்பை மறைத்தபடி.
மறந்து இருந்தவனின் சினம் வெளிப்பட "உன்னை யாரு சாருகேஷ் வீட்டுக்கு போக சொன்னது. அவன்கிட்ட நடந்த விஷயத்தை சொல்ல சொன்னேனா.. ஏன் இப்படி பண்ண பாரு" என்றான் கேஷவ்
'பச் இதுதானா நான் வேற என்னன்னமோ நினைச்சேன்' என்று கண்களை ஆறுதலாக மூடி திறந்தவள் "நீங்க இப்படி நிம்மதி இல்லாம செய்யாத தப்புக்கு வருத்தப்படுறது என்னால தாங்கிக்க முடியாம தான் அவர் வீட்டுக்கு போனேன்.... ஆனா அங்க போன பிறகுதான் தெரிஞ்சது எதையுமே ஏத்துக்கவோ உணரவோ அவர் தயாரா இல்லைன்னு..." என்று தன் மனதில் இருப்பதை கூறினாள்.
மனைவி தனக்காகத்தான் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்று தெரியவர அவளை நெஞ்சோடு "அணைத்து பீளிஸ் டா உன்னை விட்டு எனக்கு மட்டும் பிரிஞ்சி இருக்கனும்னு ஆசையா... ஒரு நாள் கூட உன் வாசம் இல்லாத இந்த அறையில என்னாலையும் நிம்மதியா இருக்க முடியாதுடா... கல்யாணம் ஆகும் முன்னாடியே உன்னை வாழ்கையா நெனச்சவன்டா... என் வாழ்க்கையான உன்னை ஒருத்தான் அழிக்க பாக்குறான்னா அதை என்னால எப்படி ஜீரணிக்க முடியும் மா" என்றவன் மனைவியின் தலையை வருடிக்கொடுத்தான்.
கணவனின் மார்பில் சாய்ந்தவளின் மனமோ தன் கணவனுக்காக அடித்துக் கொண்டது... "என்னாலையும் உங்களை விட்டு இருக்க முடியாது... பீளீஸ் மச்சி" என்று மேலும் அவனை ஒன்றியவளின் விழி நீர் அவன் நெஞ்சை நனைத்தது
மனைவியன் வார்த்தைகள் மனதில் சாரலாய் அடித்தது இதயம் குளிர்ந்து சிறு புன்னகையுடன் கவியின் நாடியை நிமிர்த்தியவன் என் கண்ணம்மாவை விட்டு நானும் பிரியமாட்டேன் டா இது தற்காலிகமான ஒன்னு தான் அதுவும் ஒரு பத்து நாளுக்கு மட்டுமே பீளிஸ் டா... உன் மச்சி உன்னை அப்படியே விட்டுடுவேனா என் மனநிலையை புரிஞ்சிக்க டா உன்னை இழக்க என்னால் முடியது மா" என்றவனின் அணைப்பு இறுக்கியது... அவளின் உடல் வலியில் துவண்டு போக அதை உணர்ந்தவன் அணைப்பை தளர்த்தி அவளுக்கு படுக்கையை சரிசெய்து என் மடியில் படுத்துக்க டா என்று அவளை மடி தாங்கி படுக்க வைத்தவன் தலையை வருடி கொடுக்க சற்று நேரத்திற்கு எல்லாம் கண்ணயர்ந்தாள் அவளின் கரம்பிடித்தவள்.
மாமனாரின் அலைபேசிக்கு அழைத்தவன் மதிய இடைவேலையில் ஸ்டெல்லவை சந்தித்ததை பற்றி பேசி கவியின் பரிட்ச்சையை காரணம் காட்டி அவளை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்து போனை துண்டித்து இருந்தான்.
இரவெல்லாம் துயில் கொள்ள மறுத்து விழியின் மணியை இமைபாதுகாப்பது போல் அவளை பாதுகாத்துக்கொண்டு இருந்தான் அவளின் அருமை காதலன்.
தொடரும்.

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 45
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.