காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 46

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சித்தார்த்தை சந்தித்த பின் தியா எப்படி அவனுடன் பைக்கில் வந்தாள். எப்படி வீட்டிற்குள் சென்றாள் என்றே அவளுக்கு தெரியவில்லை அவன்கொடுத்த முத்த அதிர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொண்டு இருந்தவளுக்கு சோபாவில் அமர்ந்திருந்த மாணிக்கம் "வாடா தியா... மஞ்சு, தியா குட்டி வந்துட்டா பாரு" என்று கூறியதோ இல்லை தாய் "ஏன்டி ஒரு மாதிரி பேயடிச்ச போல இருக்க" என்று விசாரித்தையோ இல்லை பெயருக்கு கொறித்துவிட்டு அறைக்கு சென்றதையோ எதையும் அறியாமல் இயந்திரத்தனமாய் செய்தவள் மெத்தையில் தனது உடலை சரித்து கொண்டு புரண்டு படுத்தவள் உறக்கம் வராமல் தவித்தாள்.

அவனை தேடி வலிய சென்று காதலை உறைத்த நிகழ்வெல்லாம் கண்முன்னே விரிந்தது... இன்று அதே பாணியை அவன் கையில் எடுத்து அவளை அணைத்து முத்தமிட்டது வரை ஒவ்வொன்றாக நினைத்து பார்க்க மனம் இன்ப அவஸ்தையில் மறுகியது என்றால் அவனை வேண்டாம் என்று மறுத்தது கனலாய் சுட்டது.

அவனையே நினைத்திருந்த க்ஷனம் அவளின் அலையேசியில் குறுந்தகவல் வந்ததற்கான அறிகுறி தெரிய அதை எடுத்து பார்த்தவளின் இதழ்கள் தன்னையும் அறியாமல் அவன் பெயரை மென்மையாய் உச்சரித்தது.

"ஹாய் மை ஸ்வீட் ஏஞ்சல்... எதையும் நினைக்காம நிம்மதியா தூங்கு... உன் சித்து எப்பவும் உன் கூடாதான் இருப்பான். லவ்யூ வதுமா... ஹேவ் ய வொண்டர்பூல் நைட் டீயர்..." என்று இரண்டு ஹார்டின்களையும் இதழ்முத்தம் கொடுக்கும் ஸ்மைலிகளையும் அனுப்பி இருந்தான் சித்தார்த்.

அவன் அனுப்பிய வார்த்தைகளை கை கொண்டு தடவியவள் சித்துவின் புகைபடத்தை போன் கலேரியில் இருந்து எடுத்து அதனை பார்த்தவாறே மெத்தையில் படுத்தவள் இரண்டு முத்தங்களை அவன் புகைபடத்திற்கு வழங்கிவிட்டு கண்களை மூட, இதுவே சித்துவின் அருகாமையில் உறங்கியதாக தோன்றிய கணம், மனம் காற்றை விட லேசாய் மாறி பாராங்கல்லாய் இருந்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போனது.

நிம்மதியாக உறங்கியவளின் நெற்றியில் சித்து இதழ்பதிப்பது போல் வந்த கனவில் துயில் கலைந்து கண்திறந்தவளுக்கு தூக்க கலக்கததில் தன் முகத்திற்கு அருகே சித்துவின் முகம் தெரிய அதே நிலையில் "ஐ லவ்யூ மாமா" என்று பிதற்ற "மீ டூ பேபி" என்று அவளின் தலை வருடி கொடுக்க ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள், விடியும் வேலையில் அடித்த அலைபேசயின் ஒலியில் கண்விழித்தாள்.

விழிகளை திறக்காமலேயே போனை எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றதும் பச் பச் பச் என்று முத்த சத்தத்தின் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தவள் பேச வார்த்தைகள் எழாது சமைந்து இருந்தாள். "ஹலோ வதுமா நைட் நல்லா தூங்கினியா... மாமா கனவு வந்தேனா..." என்று பாதி சிரிப்பும் மீதி குழைவாகவும் கேட்டவனின் குரலில் தன்னை மீட்டவள் இதை இனியும் வளர விடுவது முறையல்ல என்று தோன்றியது. அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும் அவனை கோப படுத்த வேண்டும் அதுவே வெறுப்பாய் மாறும் என்று நினைத்தவள் அவன் மேல் கோப முலாமை பூசிக்கொண்டு பேச ஆரம்பித்தாள் தியா.

"ஏய் ..நீ.. நீ... என்ன ரொம்ப அதிகமா போற ஏதோ ஷாக்ல உன்னை அப்படியே விட்டுட்டேன் அதுக்குன்னு இதை சொல்லி காலையிலையே இரிட்டேட் பண்ண தான் போன் பண்ணி டார்ச்சர் பண்றியா..." என்று இவளும் எகிறினாள்... சொல்ல போனால் எகிறுவதைப்போல நடித்துக்கொண்டு அவனை விலக்குவதாக நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டு இருந்தாள்.

அவளின் குரலை வைத்து அவளை கண்டு கொண்டவன் "நானா!! டார்ச்சரா!!! என் வது பேபிய போய் டார்ச்சர் பண்ணுவேனா...!!! என்று சிரிப்புடன் கூறியவன் "அது சரி ஹனி காலையிலையே ஏன் இவ்வளவு கூலா பேசுற என்ன பேபி எனிதிங் ஸ்பெஷல் ஃபார் சித்து மாமா..." என்றான் தன்னை முன்னிறுத்தி

"சித்து......" என்று பற்களை கடித்து தன் கோபத்தை வெளிபடுத்தியவள் "ஏன்டா இப்படி அராஜகம் பண்ற என்னை பார்த்த கூலா பேசுறவா மாதிரியா தெரியுது?? உன் மேல கொலை வெறியில இருக்கேன் மரியாதையா போனை வைச்சிடு" என்று சிடுசிடுத்தாள்.

"ஹா.... ஹா.... என்ன பேபி இப்படி பொய் சொல்ற காலையிலையே...." என்றவன் "என்னைக்கு நீ எனக்கு மாரியாதை கொடுத்து இருக்க???? நினைச்சி பாரு" என்று நக்கலாக கூறி "நீ தான் என்னை தினம் தினம் கொல்றியேடி" என்று காதலாய் பேசினான்.

அவளுக்கு அப்படியே தன் மனம் பனிமழையை போல் கரைவதைக் கண்டு திடுக்கிட்டு பேச்சின் போக்கை மாற்ற எண்ணி "தேவை இல்லாத பேச்சை எல்லாம் போசாத உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல இந்த உளறளை இத்தோட நிறுத்து... அப்புறம் உன்னை தினம் தினம் ஓட விட்டத எல்லாம் மறந்துடத" என்று தன் வீரதீர சாகசங்களை பேசிட

அவளின் நினைவில் சிரித்தவன் "அயம் ஆல்வேஸ் வைட்டிங் பேபி" என்று கூறியவன் "உன்னை அப்படி பாக்கத்தான்டி பிடிச்சிருக்கு இந்த அழுமூஞ்சியை பிடிக்கல பேபி சீக்கிரமே என் வது பேபிய எதிர்பார்க்கிறேன் டார்லிங்" என்றவன் "லவ் யூ வதுமா" என்று அலைபேசியை அனைத்துவிட அவளுக்குத்தான் சித்துவை நினைத்து ஹாயாசமாக இருந்தது. அவனை விட்டு ஒரு அடி விலக நினைத்தாலும் அதைவிட ஆயிரம் மடங்கு வேகமாக அவனுள் தான் ஆழ புகுத்துவது போல ஒரு பிரம்மை உருவானது அதை நினைத்த கலங்கியபடியே குளியலறைக்குள் சென்றாள்.

~

"அத்த, மாமாவுக்கு காரம் எப்படி இருக்கனும்" என்று சமையலறையில் இருந்து சத்தம் கொடுத்தபடி சமைத்துக் கொண்டு இருந்தாள் மதுவந்தி

"மதுமாஅவருக்கு எல்லாம் காரம் மண்டையில உறைக்கனும்... வட பாயசம் செய்தா கூட வடையில ஏண்டி பச்சை மிளகாய போடலன்னு கேப்பாரு... பறக்கறதுல பிளையனையும் மிதக்கறதுல கப்பளையும் விட்டுட்டு உப்பு மிளகாய் போட்டு எதை கொடுத்தாலும் வக்கனையத்தான் சாப்பிடுவாறு மா... நீ ஜெய்க்கு ஏத்தமாதிரி சமைடா" என்று கூறிக்கொண்டு இருந்தார் ஆதிநாரயணி.

"ஹா... ஹா... என்று வாய்விட்டு நகைத்தவள் "ஜெய்.. ஜெய்"
என்று திணறியவள் "அவருக்கு என்ன அத்தை பிடிக்கும்" என்று கேட்க அவளின் தவிப்பில் புன்னகை புரிந்தவர் "காரம் மிதமா இருக்கனும். ருசிக்கு சாப்பிடரதை விட பசிக்கு சாப்புடுறவன். அவனுக்கு எண்ணெய் ஐயிட்டம் அறவே ஒத்துக்காது... எப்போதும் பிட்டா இருக்கனும்னு நினைப்பான்" என்று கூற

"ம் சரிங்க அத்த பாத்துக்குறேன்.." என்று தன் மாற்றத்தையும் அவன் பால் வந்துள்ள புது வித ஈர்ப்பையும் நினைத்து சிரித்தபடியே "நேற்று இல்லாத மாற்றம் என்னது" என்ற பாடலின் வரிசைகளை ஹம் செய்தபடியே சமைத்துக்கொண்டு இருந்தவளிடம் "அம்மாடி மதுவந்தி நான் கேஷவ்க்கு போன் பேசி இரண்டு நாளாகுது ஒரு போனை பேசிட்டு வந்துட்றேன்" என்று ஆதி அறைக்கு சென்றார்.

"சரிங்க அத்தை காபி ஏதாவது வேனுமா?" என்றிட "அதான் விருந்தே செய்றியேடா காபி குடிச்சா பசி போயிடும். இதோ வந்துடுறேன்". என்றவர் அறைக்குள் சென்றார். மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாடலை தொடர்ந்தவளின் புன்னகை வழக்கத்தை விட அழகாய் இருந்தது புதுமலராக ஜொலித்து கொண்டிருந்தாள் இது என் இடம்... இவர்கள் என் சொந்தம்... இவர் என் உரிமையானவர்... என்று நினைக்கவே ஒரு வித கர்வத்துடன் நிமிர்ந்து நின்றாள் அதுவே அவளுக்கு மேலும் வைரகீரிடமாய் அழகு சேர்த்தது.

உடற்பயிற்சியையும் தனது பாக்ஸிங் பயிற்சியையும் முடித்து வீட்டிற்குள் நுழைந்தவனை மதுவந்தயின் இனிமையான பாடல் தான் வரவேற்றது... அந்த குரல் வந்த திசைநோக்கி கால்கள் நகர்ந்தது அவளை சமையலறையில் பார்த்தவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி சுவற்றில் சாய்ந்து நின்றான். தோள்வரை புரண்ட முடியை சென்டர் கிளிப்பிள் அடக்கி இருக்க காதில் அணிந்த வளையமும் அவளின் தலை ஆட்டலுக்கு சேர்த்து நடனமாட ஆகாய வண்ண நீல நிறத்தில் டாப்பும் அதற்கு தோதாக நீல நிற ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து இருந்தவளின் கைகள் ஒரு பக்கம் தன் வேலையை செவ்வனோ செய்ய அவளை ரசித்தபடி பாடலில் கரைந்து கொண்டு இருந்தான் ஜெய்.

ஆழ்ந்து நோக்கியவனின் பார்வையில் ஏதோ குறுகுறுப்பு தோன்ற மெல்ல தலையை திருப்பி பார்க்க ஜெய்யை கண்டதும் ஒரு வித நாணம் குடியேற பாடலை நிறுத்தியவள் "வா... வாங்க எப்போ வந்திங்க? என்றாள் அவன் கண்களை பார்க்க வெட்கம் கொண்டு இதுவரை இல்லாத வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டு அவளை பாடாய் படுத்தியது அவனிடம் தலை நிமிர்ந்து பேசியே பழக்கப்பட்டவள் இன்று அவன் கண்களை சந்திக்க நாணம் கொண்டு தலை குனிந்தாள்.

அவளின் நாணத்தில் தன்னை தொலைத்தவன் இதழில் குறுநகை தவழ இரண்டு எட்டுகளை வைத்து முன்னால் "வந்தவன் இப்போதான் வந்தேன்..." என்றிட இவள் கால்கள் தன்னிச்சையாக இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்து நகர்ந்து மேசையில் இடித்துக்கொள்ள அவளுக்கு எங்கே சூடு பட்டு விடுமோ என்று ஏய் மது என்று அவளை இடையில் கைகொண்டு தன்னுடன் இழுத்து வேறு புறம் நின்றான்.

ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் அவன் செய்கையில் திகைப்பில் இருந்தவள் விழி விரித்து அவனை காணவும் உனக்கு ஏதாவது சூடு பட்டுடுச்சா மா என்று அக்கரையாய் கைகளையும் அவளையும் ஆராய்ந்த படி கேட்க அவளையே பார்த்திருந்தவள் "இ.... இல்லை ஜெய்" என்றிட தாங்கள் இருந்த நெருக்கநிலையில் ஒருவர் அருகாமை ஒருவர் புது வித உணர்வில் அசைவற்று அதே நிலையில் இருந்தனர். குக்கரின் விசில் சத்தத்தில் தன்னை மீட்டவள் அவனிடம் இருந்து மெல்ல விலக அவனும் விடுவதாய் இல்லை "ஜெய் அத்த மாமா இருக்காங்க பீளிஸ்" என்று கண்களால் கெஞ்சிகொஞ்சி கேட்க மனமிறங்கியவன் அவளை விட்டு சற்று தள்ளி நின்றபடி "அயம் சாரி மது" என்றான் அழ்ந்த குரலில்

அவன் வார்த்தையில் பதறியவள் சட்டென அவன் இதழை கைகளால் மூடி "ஜெய் என்ன சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு உங்களுக்கு உரிமையனவகிட்டதானே இப்படி நடந்துக்கிட்டிங்க" என்று அவனை சமன்படுத்த

"என்ன இருந்தாலும் உன் அனுமதி இல்லாம உன்னை அணைத்தது தப்புதானே மது" என்றான் தலையை வேறுபுறம் திருப்பியவாறு

அவன் வருத்தப்படுவதை விரும்பதவள் ஜெய் அருகே நெருங்கி
"நீங்க வருத்தப்படுறா மாதிரி எந்த சம்பவமும் நடக்கல உங்க அருமையில் நானும் என்வசம் இழந்து தான் இருந்தேன் சோ இரண்டு பேருமே இதுக்கு பொறுப்பு நீங்க மட்டும் காரணம் இல்லை பா... "என்றாள் அவனுக்கு தெளிவிக்கும் பொருட்டு

"தெங்க்ஸ் மது நீ என்னை என்ன நினைச்சிடுவியோன்னு ஒரு நிமிஷம் பதறிட்டேன். இது என்னை அறியாம நடந்தது" என்று விளக்கம் கொடுத்தான்.

"உங்கள தெரியாதவங்க கிட்டதான் உங்களோட விளக்கத்தை கொடுக்கனும் ஜெய்... என்கிட்ட இல்ல நீங்க ஒரு ஜெம் உங்க மனசை திறந்து என்கிட்ட உங்க சம்மதத்தை சொல்லும் போது நான் விழுந்துட்டேன்..... இன்னும் அதுலயே நீச்சலடிச்சிட்டு இருக்கேன் இன்னும் இன்னும் என்னை காதலில மூழ்க வைக்காதிங்க" என்று சாதரணமாய் ஆரம்பித்து கிண்டலாய் முடிக்க

அவள் பதிலில் குறுநகை இதழ் விரிந்த சிரிப்பாய் மலர்ந்தது அவன் சிரிப்பில் மயங்கி நின்றவள் தன்நிலைபெற மிகவும் பிரம்ம பிராயத்தனம் பட்டாள். பேசிக்கொண்டே இருந்தவள் "ஐய்யோ உங்களுக்கு எதுவுமே கொடுக்கலையே இருங்க காபி கலக்குறேன்" என்று பதட்டமாக செயல்பட

"மது வைட் வைட் நான் பிரெஷ் ஆகிட்டு வந்ததும் கொடு" என்று திரும்ப முயல ஜெய் ஒனுநிமிஷம் என்று இழுத்தாள் மதுவந்தி

"என்னமா" என்றான் ஜெயந்த் கனிவுடன்

"அது வந்து" என்று மதுவந்தி தயங்க

"என்னம்மா என்கிட்ட உனக்கு என்ன தயக்கம் எதுவா இருந்தாலும் சொல்லு" என்று அவளை ஊக்க

"சேம் பத்தி அத்த மாமாவுக்கு சொல்லனும் அந்த போட்டோவ பத்தி பேசனும், பெரியப்பாவும் கூட என்னையும் அவனையும் சேர்த்து வச்சி பேசிட்டாங்க இதை பத்தி நான் தெளிவா அத்தைகிட்ட நான் பேசனும் சொல்லும் போது நீங்களும் கூட இருக்கனும்" என்றாள் எச்சிலை விழிங்கியபடி

"ஹே... தையரிமா என்கிட்ட தன் மனசுல இருக்கரத சொன்ன மதுவந்தி எங்கே போனா?" என்று நாளா புறமும் பார்வையை சுழற்ற ஜெய்... என்று சினுங்கியவளை உச்சியில் கைவைத்து தலையைய ஆட்டியவன் "நீ அம்மா அப்பாவுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது இல்ல மது. அவங்க நூறு மடங்கு உன் மேல் நம்பிக்கை வைச்சதாலதான் இந்த கல்யாண பேச்சையே எடுத்தாங்க மா.. சேம் அண்ட் உங்க பெரியப்பா மட்டும் இல்ல வேற எந்த கொம்பாதி கொம்பன் வந்து சொன்னாலும் நீ தான் அவங்க மருமக" என்றான் தன்மையாய் அவள் மனதை குளிர்விக்கும் பொருட்டு

"ஜெய்" என்று அவளையும் மறந்து அவனை அணைத்துவிட மது உணர்ச்சிவசப்பட்டுள்ளால் என்பதை உணர்ந்தவன் இந்த அணைப்பும் ஆறுதலும் தேவை என்பதை உணர்ந்து அவளுக்கு தலையை வருடி விட்டாவன் அன்னை யாரேனும் வந்து விடுவறோ என்று நினைத்து "நீ இப்படியே என்கிட்ட இருந்தா என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியாது மதுமா" என்று சிரிப்புடனே கூற அவன் மார்ப்பில் குத்தியவள் சட்டென அவனிடம் இருந்து விலகி அவனை பார்க்க வெட்கம் கொண்டு திரும்பி நிற்க அவனும் சன்னமாக விசிலடித்தபடியே தனது அறைக்கு சென்றான்.
~

விஜய் நிர்மல் என்ற பெயரை தாங்கிய 5 அடுக்கு மருத்துவ மனையில் நுழைந்தவன் முகம் மட்டும் வெளிரி போய் இருந்தது.

குட்மார்ணிங் நிர்மல் சார் என்ற தினமும் தான் ஜொல்விடும் ரிசஷப்ஸ்னிட் வணக்கத்திற்கு கூட பதில் சொல்லாமல் தனது அறைக்கு வந்தவனின் நினைவுகள் காலையில் சாருகேஷ் வீட்டில் பார்த்த உத்ராவின் புகைபடத்திலையே இருந்தது..

வயிற்றில் இருந்த கட்டை விரல் அளவு தழும்பை மேல் சட்டையில் தடவியபடி அவளோட போட்டோ எப்படி அங்க வந்தது அவருக்கு ஏதாவது உறவா இருக்குமோ... என்ற கேள்வியோடு சிந்தித்து இருந்தவன்.

இந்த அண்ணன் வேற நேரம் காலம் தெரியாம வான்னு சொல்லிட்டாரு காலங்காத்தால எவ்வளவு ஷாக் ஒரு வேலையும் ஓடல கடங்காரன் நேரம் பார்த்து இந்த அஸ்வின் பயலும் ஊர்ல இல்ல ஒரு முறை கூட இவளை தொடலை ஆனாலும் உயிர் பயத்தை காமிச்சவளாச்சே என்று இதுவரை மறந்து இருந்த உத்ராவினை நினைத்து பார்த்தவனின் முகம் வியர்வையால் குளித்து இருக்க தலையை பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்துவிட்டான்...

~

மாணிக்கம் இல்லம்

வாசலில் அழைப்பு மணி அடிக்க உள் வேலையாய் இருந்த மஞ்சு "தியாமா யாருன்னு போய் பாரு" என்று உள்ளிருந்து குரல் கொடுத்து வேலை தொடர்ந்தார்.

"இதோ போறேன்மா" என்று தியாவும் சென்று கதவை திறக்க அங்கே கவியும் கேஷவும் நின்று கொண்டு இருந்தனர்.

"ஹேய் கவி..." வறேன்னு சொல்லவே இல்லையே என்று மகிழ்ந்தபடி கூறியவள் "மாமா வாங்க வாங்க அம்மா அம்மா அக்கா மாமா வந்து இருக்காங்க" என்று கூறியபடியே உள்ளே சென்றாள்.

அலுவலக அறையில் இருந்த மாணிக்கமும் சின்ன மகளின் ஆர்பாட்டத்தை கண்டு வெளியே வந்தவர் "வாட கவி குட்டி வாங்க கேஷவ்" என்று அவர்களை வரவேற்க மஞ்சுவும் சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் "வாங்க மாப்ள வா கவி" என்று மகளிடம் வந்தார்.

அவர்கள் அனைவரும் அழைத்தும் வாசலிலையே நின்று இருந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தயங்கி நிற்க "ஏன் அங்கயே நிக்கரிங்க உள்ள வாங்க" என்று அழைக்க கணவனின் கையை பிடித்தபடி தாங்கி தாங்கி நடக்க மாணிக்கம் மஞ்சு இருவரும் ஒருசேர என்ன ஆச்சி ஏன் இப்படி நடக்கற என்று அதிர்ச்சியை வெளி காட்டினர் என்றால் தியாவோ "கவி நேத்து காலேஜ் ல கூட நல்லதானே இருந்த எப்ப அடி பட்டது" என்று கேட்டு இருந்தாள்.

"ஒன்னும் இல்ல மாமா பயப்படாதிங்க அவ மாடிபடி ஏறும் போது தடுக்கி விழுந்துட்டா அத்த லேசான அடிதான் வீட்டுல வேற யாரும் இல்ல இவ தனியா இருப்பான்னு தான் இங்க அழைச்சிட்டு வந்தேன்". என்றபடி மனைவியை சோபாவில் அருகில் அழைத்து வந்து அமர வைத்திருந்தான் கேஷவ்.

"ஏன்மா பாத்து வரக்கூடாத இப்படியா அடிபடுற அளவுக்கு வேகமா வருவ" என்று மாணிக்கம் மகளின் அருகில் அமர்ந்தார் அவளின் தலையை வருடிவிட்டார்..

தந்தையின் பாசத்தில் நெகிழ்ந்தவள் "நான் பார்த்துதான் பா போனேன் கால் இடறி பேலன்ஸ் இல்லாம விழுந்துட்டேன்". என்று வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விட்டு இருந்தாள் கவி.

மஞ்சுவோ மகளிடம் பேச வேண்டும் என்று இருந்தாலும் வீட்டு மருமகனை கவனிக்கும் பொருட்டு அவருக்கும் மகளுக்கும் காபியை கலந்து எடுத்து வர அதை எடுத்து கொண்டதும் மகளிடம் வந்தவர் காயத்தினை பற்றியும் அவர்களின் நலனை பற்றியும் விசாரித்து விட்டு கேஷவிடமும் ஒரிரு வார்த்தைகள் விசாரித்தவர் அவர்களின் பெற்றோர் நலனையும் கேட்டு தெரிந்து கொண்டு காலை உணவினை தயாரிப்பதாக கூறி அடுபடிக்கு சென்றார்.

மாமனாரிடம் பேச வேண்டும் என்று நினைத்து தியா நீ அக்காவ உள்ள அழைச்சிட்டு போறியா அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று கூற கேஷவ் கூற

"ம் பாருடா எங்க மாமாவுக்கு பொண்டாட்டி மேல எவ்வளவு அக்கரை... ம் நீங்க உண்மையாவே சந்தர்ப்ப வசத்தால கல்யாணம் ஆன ஜோடியா பார்த்த அப்படி தெரியலையே!!!" என்று ஏற இறங்க இருவரையும் பார்த்து என்று நெட்டி முறித்தாள் தியா.

தியாவின் மேல் போலியாக கோபம் கொண்ட கவி "அப்பா பாருங்க பா இவள எப்படி கிண்டல் பண்றான்னு" என்று தியாவினை மாணிக்கத்திடம் கூற

சிரித்தபடியே மனைவியின் சினுங்களை ரசித்தவனின் மனதில் அழகான ஓவியமாய் மாறினாள் கவி. அட்டகாசமான சிரிப்புடன் மகள்களின் செல்ல சண்டைகளை ரசித்தவர் ஹா... ஹா... "கேஷவ் அக்கரை காட்டாம வேற யார் காட்டுவா தியா குட்டி... கேஷவ்க்கு அடுத்தது தான நாம எல்லோரும்... இந்த விதி கவிக்கு மட்டும் இல்ல, நாளைக்கு உனக்கும் கல்யாணம் ஆகி புருஷன்னு ஒருத்தன் வந்துட்டா நீயும் இப்படி தான் நாங்களெல்லாம் உனக்கு இரண்டாம் பட்சம் தான்" என்று சிறித்தபடி உண்மையை உறைக்க

அந்த நிமிடம் ஏனோ சித்துவின் முகம் மன கண்முன் வந்து போனது அவரின் பேச்சில் அப்பா என்று அவரின் தோள் வளைவில் சாய்ந்து கொள்ள

அட.அட.என்ன ஒரு பாசமலர் சீன் ஒடுது என்று கோபியின் குரலில் அனைவரும் வாசலில் திரும்பி பார்க்க கோபியின் அருகில் இருந்த சித்துவை பார்த்ததும் முட்டை கண் இரண்டும் வெளியே தெரித்து விழும் அளவில் விழித்து வைத்தாள் தியா என்கின்ற விந்தியா

கோபியின் கூற்றில் சிரித்த மாணிக்கம் வா... சித்து வா. கோபி உள்ளவாங்க என்று வரவேற்க்க கோபியின் அருகில் இருந்த சித்தார்த் எப்போதும் உதட்டில் இருக்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் எப்படி இருக்கிங்க அங்கிள் ஹாய் நண்பா எப்படி இருக்கிங்க உங்கள எதிர்பார்க்கல என்றபடி அருகில் வந்தான்

வா சித்து நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க அம்மா அப்பா எப்படி இருக்காங்க என்று பெற்றோர் நலத்தையும் விசாரித்தார் மாணிக்கம் உக்காரு சித்து. தியாமா சித்துக்கும் கோபிக்கும் காபி கொண்டு வா என்று கூறியவிட்டு அமர்ந்தார்.

ஹே.. மேன் வாட் எ சர்பிரைஸ் எப்போ வந்திங்க ஒரு வார்த்தை கூட சொல்ல சித்.... நான் நல்லா இருக்கேன் கோபி நீங்க எப்படி இருக்கிங்க என்று இருவரையும் விசாரித்து கையை குலுக்கி அனைத்து விடுவித்தவன் தானும் அருகில் அமர்ந்தான்.

தொடரும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN