Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 52
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

சித்துவின் தாத்தா மருத்துவமனையில் இருந்து இளையமகளின் வீட்டிற்கு அன்று மாலையே திரும்பி இருந்தார். பெற்ற மகனை பார்த்ததில் பாதி நோய் குணமாகி இருக்க இதுநாள் வரையில் தன் ஸ்பரிசம் படாமல் தள்ளி நிறுத்தி இருந்த பேரனை கண்டு விட்டதில் மொத்தமும் குணமாகி இருந்தது. வீட்டிற்கு வந்ததுமே அவர் கண்கள் முதலில் பேரப்பிள்ளையை தான் தேடியது.

மெத்தையில் படுத்திருந்தவர் "அம்மா ராதா சித்து எங்கம்மா??" என்றார்.

"மாமா… அவன் கோயம்பத்தூர் போயிருக்கான். ஒரு முக்கியமான் வேலை வந்திடுச்சி தவிர்க்க முடியல மாமா" என்று கூற பெரியவரின் முகம் ஏமாற்றம் நிறைந்து இருந்தது. இருந்தும் "சரிமா அவன் தொழில் நடத்துறவன் அவனுக்கும் வேலை இருக்கத்தான் செய்யும் பார்த்துட்டே வரச்சொல்லு" என்றார்.

"சரிங்க மாமா நான் சொல்றேன்" என்று கூறியவர் அவருக்காக கொண்டு வந்த கஞ்சியை ஆற வைத்து அவருக்கு புகட்டி விட நவநீதனின் தங்கையும் அவரது கணவரும் அறைக்குள் நுழைந்து தந்தையை பார்த்துவிட்டு, அவருக்கு வேண்டியதை கவனித்தவர்கள். "அண்ணி, என்ன இன்னைக்கும் சித்தார்த் நம்ம வீட்டுக்கு வரல? அவன் வருவான்னு நாங்க எல்லாம் எவ்வளவு ஆவளாய் இருந்தோம் தெரியுமா? அதுவும் மகா ஸ்பெஷலா அவனுக்குன்னு எல்லாம் பார்த்து பார்த்து அரேஞ்ச் பண்ணி இருந்தா!!" என்று நொடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார்.

'அய்யோ இவங்க என்ன சொல்ல போறங்களோ தெரியலையே காலையிலையே அண்ணன் கல்யாணம் பத்தி பேசினாரே' என்று வயிற்றில் புளியை கரைக்க மாமானாருக்கு உணவை புகட்டியபடி சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் அவஸ்தையாய் பேருக்கு அங்கு அமர்ந்திருந்தார் ராதா.

"என்ன அண்ணி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க பாட்டுக்கிட்டு அமைதியா இருக்கிங்க?" என்று மறுமுறை ஞாபகப்படுத்த "அது வந்து…. வந்து, அவனுக்கு வேலை இருக்குன்னு சொன்னான் ம்மா அதுவும் எங்க குடும்ப நண்பருக்கு ஆக்ஸிடென்ட் அதான் போயிருக்கான்" என்பதை மறைக்காமல் கூறி இருந்தார்.

"விடு மா கனகா ... மாப்பிள்ளைக்கு மறுக்க முடியாத வேலை இருக்கும் அடுத்த முறை வந்திடபோறாரு" என்றவர் "அது சரி கனகா, இனி மாப்பளைய பேர் சொல்லி எல்லாம் கூப்பிடுறது சரி இல்லை, கல்யாணம் முடிஞ்சா கூட இதே பழக்கமா ஆகிடும் அது நல்லா இருக்காது" என்று மனைவியை பார்த்து கூறிய நவநீதனின் தங்கை கணவர் ராதாவிடம் திரும்பி "தங்கச்சி மாமாவும் வீட்டுக்கு வந்துட்டார் என் பெரிய பொண்ணு மகாவும் படிப்பு முடிச்சிட்டு கல்யாணத்துக்கு இருக்கா ஒரு கல்யாணம் மூலமா பிரிஞ்ச நம்ம குடும்பம் இவங்க இரண்டு பேரோட கல்யாணம் மூலமா சேர்ந்திடும்" என்று அதிரடியாய் ஒரு குண்டை தூக்கி போட்டார்....

அவர் ஆசைபட்டது தானே சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது ஆனால் இன்று ஏனோ இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை என்பது போல் நடந்துக்கெண்டார் ராதா. ஏற்கனவே இங்கு வா என்று கூப்பிட்டதற்கு வேப்பில்லை இல்லாமல் மகன் சாமியாடிது நினைவில் வந்து அவருக்கு கிலியை ஏற்படுத்தியது.... இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் மகன் வானுக்கும் பூமிக்கும் குதித்து நெற்றிக்கண்ணை திறப்பது சந்தேகம் இல்லாமல் ஊர்ஜிதமாகி இருக்க. மருத்துவமனைககு வரவே மாட்டேன் என்று சொன்ன பிள்ளை எந்த சாமி சொல்லி அனுப்பியதோ உடனே வந்தவன் பட்டும் படாமலும் இருந்துவிட்டு சென்றான் அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை இதில் இதுபோன்ற கல்யாண பேச்செடுத்தால் விபரிதமாக முடியும் என்று மனதில் நினைத்து வருந்திய ராதா "அண்ணா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க கேட்டதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஆனா சித்துவ கேட்காம நாங்க எதுவும் முடிவு பண்ண முடியாது…. அதுவும் இல்லாம அவன் ஒருவருஷம் டைம் கேட்டு இருக்கான்.” என்றதும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

திருமண பேச்சை எடுத்ததுமே ராதாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதர்பார்க்காதவர் மாமனாரை பார்த்துவிட்டு "ஏம்மா தங்கச்சி எங்க சம்பந்தம் உனக்கு பிடிக்கலையா? இல்லை எங்கள் மகளை பிடிக்கலையா? இல்லை நீ சொன்ன மாப்பிள்ளை தான் கேட்டகமாட்டாரா ஏன் மா வேண்டாங்குற?” என்று ஆதங்கமாக அவர் கேட்கும் போது அங்கு நவநீதன் வர அவரின் தங்கை கனகா அண்ணிடம் சென்று "அண்ணா மகாவை உங்க மருமகளா ஏத்துக்க உங்களுக்கும் விரும்பம் இல்லையா??" என்று கேட்க மனைவியின் முகம் பார்த்த நவநீதன்.

"கனகா அவன் கல்யாண விஷயம் அதில் எங்களோட விருப்பு வெறுப்பை திணிக்கவும் முடியாதுமா. எங்கள் மகன் உனக்கு தான் மாப்பிள்ளை என்று நாங்க வாக்கு கொடுக்கவும் முடியாது மா” என்று தங்கள் நிலமையை விளக்கி இருக்க

"அட என்ன மச்சான் நீங்க... குடும்பம் சேரப்போகுது அதை பார்ககாம... என்னன்னமோ பேசறிங்க... நாம பெத்த பசங்க நம்ம பேச்சை மீறி நடக்கவா போறாங்க" என்று அசட்டையாக கூற

அவரின் பேச்சு ஏனோ ராதாவிற்கு பிடிக்கவில்லை “அண்ணா யார் எப்படியோ அது முக்கியம் இல்ல எங்க கல்யாணம் எங்க விருப்பப்படி நடந்ததோ அது போல தான் அவன் விருப்பப்டிதான் அவனுக்கு கல்யாணம் நடக்கும். பெத்தவங்க எங்களோட சந்தோஷத்துக்கு கல்யாணம் செய்துக்கிட்டாலும் ஆயுள் முழுசும் வச்சி வாழ போறவன் அவன் தான் அவனுக்கு பிடிச்சாதான் எதுவும் எங்களால் மேற்கொண்டு பேச முடியும். கொஞ்ச நாள் பொருமையா இருங்க மாமாவுக்கும் பூரணமா குணமாகட்டும் நாம நிதானமா பேசலாம்" என்று ராதா கூறிவிட

அனைத்து சம்பாஷணைகளையும் கேட்டுக்கொண்டிருந்த நவநீதனின் தந்தை "மாப்பிள்ளை என் காலம் தான் வீண் பிடிவாதம் அது இதுன்னு போயிடுச்சி இனி கல்யாணம் எல்லாம் பசங்க விருப்பப்படி செய்றதுதான் நல்லது...”

"இத்தனை வருஷம் என் ரத்தத்தை பிரிஞ்சி இருந்துட்டேன்... இனியும் இருக்க விரும்பல நாம ஆசைபடுவதை செய்றதை விட பேரப்பிள்ளை ஆசைப்படுவதை செய்து வைக்கலாம்... இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருக்க போறேன் இருக்க வரை நிம்மதியா இருக்க நினைக்கிறேன்". என்றவர் மகளை பார்த்து "கனகா வீண் ஆசையெல்லாம் பட்டு நீயும் உன் மனசை கெடுத்து மகாவிற்கும் மனசுல ஆசையை விதைக்காதே! புரியுதா??? சித்தார்த் வரட்டும் பேசி பார்ப்போம் பிடித்தால் கல்யாணம் செய்து வைக்கலாம் இல்லைனா இதோடு இந்த கல்யாண பேச்சை விட்டுடலாம்" என்றவர் "போய் வேலையை பாருங்க" என்று கூற பெற்றவர்கள் இருவருக்கும் இப்போதுதான் மூச்சே வந்தது.

நவனீதனின் கவலை மகனை சம்மதிக்க வேண்டுமே என்று அது இந்த ஜென்மத்தில் முடியாத விஷயமாச்சே என நினைத்துதான் இந்த பேச்சை கத்தரித்து விட்டுவது போல் பேசியிருந்தார். ஆனால் ராதாவின் மனதில் என்ன இருக்கிறது எதனால் இதை ஏற்காமல் தவிர்த்தார் என்றுதான் புரியாது இருந்தார் நவநீதன்.

ஜெயந்தின் தாய். தந்தையர் இருவரும் மாணிக்கத்திற்கு விபத்து என்பதை கேள்விபட்டவுடன் மறுநாள் காலையே இந்தியாவிற்கு செல்ல மதுவும் ஜெயந்தும் அவர்களை வழியனுப்பி விட்டு இருவரும் காரில் திரும்பி வந்துகொண்டு இருந்தார்கள் போகும்போது கூட ஏதோ நல்லவிதமாக வந்தவள் இப்போது வருத்த முகமாகவும் குனிந்த தலையை நிமிராமலும் ஏன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதை பொருக்காமல் ஜெய்ந்த் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான்.

நேற்று விபத்து நடந்த விஷயம் அறிந்தவுடன் இந்தியாவிற்கு செல்வதாக கூறியதும் வந்த வாட்டம் இது, எவ்வளவோ அறிவுறைகளையும் சமாதானங்களை எடுத்து கூறியும் அவர்களை அவனுப்ப மனமில்லாமல் இருந்தவள் புறப்படும் சமயம் அவர்களை சஞ்சலபடுத்த வேண்டாம், என்று அமைதிகாத்து வந்தாள் மதுவந்தி. ஆனால் இப்போதோ கண்ணீர் படலம் விழிதிரையை மறைத்து நிற்க அவளின் கையை அழுத்தமாக பிடித்த ஜெயந்த் "என்ன மதுமா? என்னடா இது? சின்ன குழந்தை போல அழ ஆரம்பிச்சிட்ட" என்று அவளை பார்த்து பரிவுடன் வினவவும்

சிறுபிள்ளையின் செய்கையைப்போல் மூக்கை உறிஞ்சி புறங்கையால் துடைத்து "அத்தையும் மாமாவும் ஊருக்கு போறது நினைச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு ஜெய் அவங்க போகுற சமயம் அழக்கூடாதுன்னு ரொம்ப கட்டுப்படுத்திட்டு இருந்தேன் என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல ஜெய்" என்று கண்களில் நிறைந்த நீர்மணிகளை கன்னத்தில் உருள விட்டாள்.

அவள் அழுவதை பார்த்ததும் சட்டென பிரேக் இட்டு வண்டியை ஒரு ஹோட்டலை நோக்கி விரட்டியவன் காரிலையே அமர்ந்தபடி “மதுமா.... மது.....” என்ற போதும் தலை நிமிர்ந்து பார்க்காமல் இருக்க "என்னை பாறேன்" என்று கூறி தழைத்திருந்த தலையை கைகொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான் ஜெயந்த்.

கன்னத்தில் கண்ணீரை கண்டதும் "பச் என்ன மதுமா? என்று கண்ணீரை துடைத்தவன் புருஞ்சிக்கடா எப்படி இருந்தாலும் எனக்கு இந்த மேட்ச் முடிஞ்சதும், அவங்க போய்தானே ஆகனும். இங்கேயே இருக்க முடியுமா? சொல்லு?" என்று உண்மையை விளக்க

அவன் அவ்வாறு கூறியதும் மேலும் கலவரமான கண்களுடன் "அது.. அது தான் ஜெய் எனக்கு பயமா இருக்கு. இதுவரை நான் எது மேலயும் இவ்வளவு ஆசைபட்டது இல்லை முதல்முறை உங்க மேல காதல் வந்துச்சி ஜெய்....

உங்க பேச்சு உங்க பண்பு உங்க குணம் உங்க குடும்பம் எல்லாம்… எல்லாம் எனக்கு பிடிச்சி இருந்தது. உண்மையில் மனசார உங்களை நான் விரும்புறேன் ஜெய்…. நீங்க இல்லன்னா நான் இல்ல இது உயிர் இல்லாத ஜடம் ஜெய்” என்றவள் உடனே அவன் கண்ணை பார்த்து தவிப்புடன் “இந்த போட்டி முடிஞ்ச ஒரு வாரத்துல நீங்களும் என்னை விட்டுட்டு போயிடுவிங்களா???” என்று அழுகையுடனே கேட்டவளை தன்னுடன் இழுத்து அணைத்தவன் “இல்லடா இல்ல... நான் நீ இல்லாம இந்த மலேஷியாவ விட்டு போகமாட்டேன் டா எனக்கு காம்பிடிஷன் முடிஞ்சாலும் இங்கேதான் இருப்பேன். இன்னும் இரண்டு மாசத்துல உன் டிகிரி முடிஞ்சதும் நாம ரெண்டு பேருமா தான் இந்தியா போறோம் மா" என்று அவளுக்கு ஆறுதாலாய் கூற.

அவ்வாறு கூறியதும் போன ஜீவனே திரும்பி வந்தது போல் நிம்மதி உணர்வுக்கொண்டவள் அவன் இதயத்தில் வாகாய் சாய்ந்து கொண்டு "தேங்கஸ் ஜெய்... ரொம்ப தேங்க்ஸ்" என்று கூறிட அங்கு பேரரும் வர சரியாய் இருக்க நெருக்கத்தில் இருந்து விலகியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் காதலும் போட்டிபோட தன்னவர்களின் பிம்பத்தை கண்களில் நிறைத்துக்கொண்டு உணவினை உண்டவர்கள் அங்கிருந்து கிளம்பினர். மதுவை அழைத்துக் கொண்டு சென்றவன் அப்பார்ட்மெண்டில் விட்டுவிட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுவிட்டான்.

வீட்டிற்கு வந்தவள் அலுப்பு தீர தூங்கி எழுந்து காபியுடன் சோபாவில் வந்து அமர வாசலில் வந்த அழைப்பு மணியின் ஓசையில் கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவளின் பெரியம்மாவும் அவளது அண்ணன் கிருபாகரனும் நின்றிருக்க மகிழ்ச்சியில் உறைந்து அப்படியே சிலையாய் இருந்தவளை ஹேய் மங்கி எப்படி டி இருக்க என்ற கிருபாவின் இருகிய அணைப்பில் இருக்க தன்நிலை உண்ர்வு பெற்றவள் “டேய் எருமை பன்னி மாடு உனக்கு தங்கச்சின்னு கொஞ்சமாச்சும் பாசம் இருக்காடா தடி மாடு, போனவ எப்படியோ போகட்டும் தானே விட்டுட்டு இருந்த பண்ணடா… ஒரு முறை வந்து பாத்தியா குரங்கே??” என்று அவனை தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவள் அவனை போட்டு மொத்து மொத்தென்று மொத்தி "போடா முள்ளம்பன்னி என் கூட பேசாத இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த??" என்று முகத்தை திருப்பி இருந்தவள்.

பெரியம்மாவை மட்டும் உள்ளே அழைத்து அவரை அணைத்து “எப்படி இருக்கிங்க அம்மா பெரியப்பா பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க??” என்று கேட்க அவளை திருஷ்டி கழித்து நெட்டி முறித்தவர் "நல்லா இருக்கேன்டா…. நீ அங்க ஏச்சும் பேச்சும் வாங்கி வாங்கி வாடி போயிருந்த…. இப்போதான் டா செல்லம் நீ நீயா இருக்க உன் அம்மா மாதிரி அவ்வளவு அழகா இருக்க டா தங்கம்" என்று கன்னம் தொட்டு முத்தம் வைத்தவர்

"எல்லாம் நல்லா இருக்காங்கடா... அவரும் அவருக்கு என்ன நல்லாதான் இருக்காரு… அவருக்கு காசு மட்டும் வந்தா போதும்.யாரு எக்கேடு கெட்டு போனா என்ன தான் நல்லா இருக்கனும் தான் பசங்க நல்லா இருக்கனும்னு அவரை சுயநல பேய் பிடிச்சி ஆடிக்கிட்டு நல்லாதான் இருக்காரு" என்று வருத்தப்பட்டு பேசினார்

அவரின் வருத்தத்தை கண்டு "விடுங்க மா அவர் குணம் தெரிஞ்சது தானே அதையே நினைச்சி ஏன் சங்கடப்படுறிங்க விடுங்க அப்புறம் பசங்கள கூட்டிட்டு வந்து இருக்காலாமே?" என்றவள் வாயில் புறம் திரும்பி பார்க்க அவளையே பாவமாய் பார்த்துக்கொண்டு இருந்த கிருபாவின் பார்வையை கண்டு மறுபடி முகத்தை திருப்பிக்கொள்ள.

இம்முறை அமைதியாய் இல்லாமல் கோபத்துடன் வீட்டில் நுழைந்தவன் 'ஹே மங்கி அந்த மான்ஸ்டர் குணம் தெரிஞ்சும் இப்படி கேக்குற!!! இது சரியில்ல நீ சரியில்ல…" என்றவன் “அந்த ஆளு மனுசன் மாதிரியா பேசுவார் சுத்த நான்சென்ஸ் அவர்கிட்ட சண்டை போட்டு போட்டு நான் அலுத்துட்டேன் பேபி டோட்டல் வேஸ்ட்”.

“நான் உன்னை வந்து பாக்கல அதுதானே உனக்கு கோவம் இங்க பாரு பேபி நீ போன அன்னைக்கு நானும் அவர்கூட சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்... அவர் எப்படி உன்னை தப்பா பேசலாம் நீயும் சும்மா வந்து இருக்க லெஃப்ட் அண்ட் ரைட் விட்டு வந்து இருக்கனும் மனுஷன் அப்பவாச்சி திருந்தி இருப்பார் நான் லேட்டா வந்தது அவருக்கு சாதகமா போச்சி பேபி…”

"உன்னை தேடினேன் நீ சீமா கூட இருக்கன்னு தெரிஞ்சிடுஞ்சி… நீ சேஃப் அதுதான் வேணும் எனக்கும்... சோ உனக்கு நானும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு தான் உன்னை வந்து பாக்கல…"

"நான் வந்து, உன் கூட இருந்தாலும் அந்த ஆளு அதுக்கும் பிரச்சனை பண்ணுவார்... தேவையா பேபி உனக்கு நீ எங்க இருந்தாலும் நிம்மதியா இருக்கனும் பேபி இப்போ உனக்கு கல்யாணம்னு கேள்விபட்டு தான் ஓடி வந்துட்டேன் தெரியுமா!?1" என்று விளக்கம் கொடுக்க தன் கணவரை போல் அல்லாமல் கிருபாவிற்கு மதுவின் மேல் உள்ள அன்பை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது.

அவன் கூறுவதும் உண்மை தானே பெரியப்பாவை பற்றி தெரிந்து வைத்திருந்தவள் அவனிடம் கோவிப்பது போல் பாசாங்கு செய்து விளையாடியவள் கிருபாவின் அவன் வராததற்கு விளக்கத்தை கூறவும் அவன் தலையை கலைத்து விட்டு "என் செல்ல அண்ணா சும்மா லொலொலாயிக்கு தான் கோச்சிக்கிட்டேன் சரி வா" என்று அவனை அமரவைத்தவள் "அம்மா இருங்க காஃபி எடுத்து வறேன்" என்று சென்றவளை தடுத்தவர் "இருடா உன்கிட்ட முக்கியமா ஒன்னு கொடுக்கனும் நேரம் ஆகுது அவருக்கு தெரியாமதான் வந்து இருக்கேன். தெரிஞ்சா போகவிடாம ஏதாவது திருட்டு வேலை பண்ணுவார் அதான் அவருக்கு எதுவும் சொல்லாம வந்துட்டோம்" என்று கூறியவர் தனது பேகில் எடுத்து வந்திருந்த வெள்ளை துணியில் இருந்த நகைகளை எடுத்து அவளின் கைகளில் வைத்தார்.

"என்னம்மா ஏன் இதை கொடுக்குறிங்க என்ன இது?" என்று கேட்க "இது எல்லாம் உனக்காக நான் சிறுகசிறுக சேர்த்து வைத்ததுடா" என்று கூறி... "என் சொந்த உழைப்பு இல்லடா நீ சம்பாதிச்சி தான் நீ உழைக்க ஆரம்பிச்ச முதலா இதை உனக்காக சேர்க்குறேன் டா இது உன் பணம், உன் சொத்து டா, இவர் புத்தி தெரிஞ்சதுனாலதான் உனக்குன்னு நான் தனியா நகை சேர்க்க ஆரம்பிச்சேன்". என்று விளக்க கொடுத்தவர் "இவ்வளவு நாள் இதை பத்திரமா அவர் கண்ணுக்கு படாம வைச்சிருந்தேன். ஆனா இதுக்கு மேலயும் என்னால இதை காப்பாத்த முடியுனு தோனல அதுவும் இல்லாம உன் கல்யாணம் போது இதை போட்டா எப்படி வந்ததுன்னு பேச்சு வரும். அதுவே இப்போ உன்கிட்ட இருந்துச்சினா அவருக்கு அதை பத்தி தெரியாது டா" என்று கூறி அவளிடம் ஒப்படைத்தார்.

அவஸ்தையுடனே இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த மதுவந்தி அவற்றை எல்லாம் அதே வெள்ளை துணியில் பத்திரப்படுத்தியவள் அவளின் பெரியம்மா கைகளிலேயே திணித்து “இதை எடுத்துட்டுப்போய் என் தங்கச்சிகளுக்கு நான் கொடுத்ததா கொடுத்துடுங்க மா" என்று கூறினாள்.

"இது உனக்கானதுடா உனக்கு சேரவேண்டியது, உன் உழைப்பு, நீ…. நீ, போற இடத்துல எல்லோரும் நல்லவங்கதான் நான் இல்லன்னு சொல்லல… ஆனா எது எப்படி இருக்கும்னு சொல்ல முடியாதுல… மாறவும் செய்யலாம் அப்போ என்ன எடுத்துட்டு வந்துட்டானு நாளைக்கு ஒர் சொல் வரக்கூடாது டா அதுக்குதான் உனக்குன்னு ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்கனும் டா என்னால பெருசா செய்ய முடியலனாலும் இதையாவது செய்றேன் டா" என்று அவளுக்கு புரியவைக்க முனைய

"யார் எப்படி மாறினாலும் இவங்க மாறமாட்டாங்கமா எனக்கு நம்பிக்கை இருக்கு… என்னை மருமகளா பாக்கல மா மகளா பாக்குறாங்க … இதை வாங்கினா அவங்க மேல நான் வச்சி இருக்க நம்பிக்கை குறைஞ்சிடுச்சின்னு அர்த்தம் வரும் மா இது எனக்கு வேண்டாம். என் தங்கைகளுக்கு கொடுத்துடுங்க” என்று உறுதியாய் கூற அவள் வாழப்போகும் வீட்டில் உள்ள நபர்களின் மேல் வைத்த நம்பிக்கையை பார்த்து பிரம்மித்தவர் “இந்த நம்பிக்கைக்கு அவங்க தகுதியானவங்கதான் மது...” என்று அவளை உச்சிமுத்தமிட்டு “நீ நல்லா இருக்கனும்டா” என்று வாழ்த்தினார்.

சாருகேஷின் மனமாற்றத்தை கண்டு அதிர்ந்த நிலையில் இருந்த சித்துவிற்கு தான் கண்பது கனவா நினைவா என்ற திகைப்பில் தான் இருந்தான். ஒரு முறை தன் கையை கிள்ளி பார்க்கவும் வலியில் “ஸ்...” என்றவன் ‘இது உண்மை தான் ஆனா எப்படி ஜென்ம விரோதி மாதிரி நடந்துக்குறான்ல கவி சொல்லிட்டு இருந்தா… உத்ரா வந்துதான் இவங்கள சேர்க்கனும், உண்மையை சொல்லி புரியவைக்கனும்னு இருந்தா... உத்ரா இல்லாமலையே சேர்ந்துட்டாங்க' என்று ஆச்சர்யபட்டுக் கொண்டு இருந்தான்.

"சாரி.... சாரி மச்சான் உன்னை தப்பா புரிந்துக்கிட்டு ரொம்ப காயப்படுத்திட்டேன் டா என்னை மன்னிச்சிரா மச்சான்" என்று மனம் வருத்துடன் கலங்கிய சாருகேஷ் கேஷவிடம் மன்னிப்பை வேண்ட

"டேய் மாப்ள…. என்னடா சாரி எல்லாம் கேட்டு என்னை அன்னியப்படுத்துற…. நீ என்னை எப்படி நினைச்சாலும் என் மனசுல நீ எப்பவும் என் ஃப்ரெண்ட் அதே சாருகேஷ் தாண்டா…. உன்னை எப்படி டா என்னால வெறுக்க முடியும் எனக்காக உயிரையும் கொடுக்குற ஒருத்தன்னா அது நீதானேடா" என்று அவனின் கண்களை துடைத்து கேஷவ் சமாதானப்படுத்த

" நான் அப்படி நடக்கலையே டா... அவ ஏதோ யாரையோ பத்தி எழுதி வைச்சிட்டு போனதை உன்னோட சம்பந்தப்படுத்தி உன்னையும் அவளையும் சேர்த்து வைச்சி அசிங்கபடுத்தி ரொம்ப பெரிய பாவத்தை பண்ணிட்டேன்டா.... உன் பேச்சை கேட்டு இருக்கனும்.... இல்லை உண்மை என்னன்னு விசாரித்து இருக்கனும்... எதுவும் பண்ணலியே டா கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு முடிவெடுத்து எல்லாருக்கும் கஷ்டத்தை கொடுத்து நானும் கஷ்டபட்டேன் டா.... உன்னை எப்படிடா நான் சந்தேகப்பட்டேன்…. நான் நல்ல ஃப்ரெண்ட் இல்லடா… நான் போலியா இருந்து இருக்கேன்... நான் கெட்டவனா மாறிட்டேன் டா…" என்று மனதில் தங்கையை நினைத்து வலியுடன் கூறியவன் தன்னையும் திட்டிக்கொண்டான்

"இல்லடா மாப்ள... உத்ரா இல்லன்ற ஆதங்கம்…. அவ இறப்பு கொடுத்த வலி உன்னை என்னன்னவோ பேச வைச்சிடுச்சி…. உன் நிலமையில யார இருந்தாலும் இதை விட மோசமா ரியாக்ட் பண்ணி இருப்பாங்க… ஏன் என்னை கொன்னே போட்டு இருப்பாங்க… விடு மாப்ள இப்பவாவது என்னை நம்பறியேடா அது போதும்…

உனக்கு மட்டும் இல்ல எனக்கும் அவ கூட பிறக்காத தங்கைடா அவளை இந்த கதிக்கு ஆளக்குனவன தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்… மாப்ள அவன் மட்டும் கையில் கிடைச்சான் அவன் சாவு ரொம்ப கொடூரமா இருக்கும் டா” என்று உணர்ச்சி வேகத்தில் கேஷவ் கூற

"மச்சான் அதை நான் பாத்துக்குறேன் டா… உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா இந்த எண்ணத்தை எல்லாம் உன் மனசுல இருந்து தூக்கி எரிஞ்சிடு உன்கிட்ட மட்டும் இல்லடா கவிகிட்டயும் என கோவத்தை காட்டிட்டேன் அவக்கிட்டயும் சாரி கேக்கனும்” என்று கூறியவன் அவனுக்கு குடும்பத்தை காரணம் காட்டி கேஷவின் அந்த எண்ணத்தை விடுமாறு கூறினான் சாருகேஷ் இந்த சம்பாஷணைகளில் பார்த்துக்கொண்டு இருந்த சித்துவுக்கு கவியிடம் இருந்து அழைப்பு வரவும் அதை எடுத்து காதில் பொருத்தி இருந்தான்.

“ஹலோ.... கவி” என்றான் சித்து

"சித்து எங்க இருக்கிங்க இன்னும் வீட்டுக்கு வரல அவர் எங்க அவருக்கு ஃபோன் பண்றேன் எடுக்கவே மாட்டேங்குறாரு" என்று பதட்டம் குறையாமல் கேட்க

"அம்மா தாயே ஒன்னு ஒன்னா கேளு... எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். ஒரே மூச்சில எல்லா கேள்வியும் கேட்டா என்ன செய்றது… இங்க நடக்குறத பாத்தே கண்ணு பிதுங்கி நிக்கிறேன் நீயூம் உன் பங்குக்கு வச்சி செய்யாத தேவதையே" என்று கடுபடிக்க

"பச் டேய் என் பயம் எனக்கு அவர் எங்க முதல்ல அதை சொல்லி தொலை ஆமா உனக்கு என்ன விழிபிதுங்கி நிக்கிறேன்ற அப்போ நீங்க இன்னும் கிளம்பளையா அங்கதான் சுத்திட்டு இருக்கிங்களா?" என்று விசாரிக்க

"கவி முடியலமா... ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு…. மூச்சி விடு நான் பாவம் ஏற்கனவே தலை சுத்தி கிடக்கேன்….உனக்கு அனுப்புறேன் எதனால லேட்டுன்னு உனக்கே தெரியும்" என்றவன் அணைத்தாற் போல் நின்று கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் ஃபோட்டோ எடுத்து அவளது வாட்சப்பிற்கு அனுப்பி வைத்தான். "இப்போ ஒரு போட்டோ உன் வாட்சப்புக்கு அனுப்பி இருக்கேன் ஓபன் பண்ணி பாரு" என்று கூற

"டேய் வர வர நீயும் அந்த வில்லங்கமானவன் கூட சேர்ந்து சேர்ந்து அவனை போலவே ஆகிட்டு வர" என்று கோபியை மனதில் வைத்து அவனிடம் வறுத்தவள் அந்த புகைப்படத்தை பார்த்ததும் வாயடைத்து நின்றாள்

எப்படியும் அதிர்ச்சியின் உச்சத்தில் தான் இருப்பாள் என்று யூகித்து இருந்த சித்தார்த் “கவி.... கவி... லைன்ல இருக்கியா இல்ல அதிர்ச்சியில எப்படி பேசறதுன்னு மறந்துடுச்சா" என்ற குரல் கேட்கவும் நடப்புக்கு வந்தவள் "என்னடா நடக்குது அங்க"? என்று வியப்பாய் கேட்க

"ஹங்... முதல்ல சகலைக்கு திருஷ்டி சுத்திப்போடுமா. முடியல. சகல கூட இருக்கும்போது கத்தி மேல நடக்குறா மாதிரியே ஃபீல் ஆகுது. இங்க ஹாலிவூட் ஆக்ஷன் படத்துல வர்ரா போல சீன்லாம் வருது” என்று கிண்டல் பாதியும் நக்கல் பாதியுமாய் கலந்து விட்டவன் கூடவே ஹிண்டாக அவன் உறவு முறையையும் ஒருவாறு உளறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான் .

சித்துவின் தோழியாய் இருக்கலாம் ஆனால் அவனை போல டியூப்லைட்டாகவா இருப்பாள் வந்ததிலிருந்து தங்கையையும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறாள் அவளது பேச்சு நடவடிக்கை என்று எல்லாவற்றிலும் மாற்றத்தையும் கண்களில் ஒரு சோகத்தையும் பார்க்க ஏதோ ஒன்று அவளுக்குள் உறுத்துவது புரிந்துக்கொண்டு தான் இருந்தாள். இதுவும் பத்தாதென்று அன்று கல்லூரிக்கு வந்த சித்தார்த் என்றுமில்லாத திருநாளாய் அவனின் பார்வை மொத்தமும் மாற்றங்களை சுமந்திருக்க ஒருவாறு யூகித்து இருந்தாள் ஆனால் இந்த அழைப்பு அனைத்தையும்.ஊர்ஜினமாக்கி குட்டை வெளிப்படுத்தி இருந்தது.

தங்கை எத்தனை நாளைக்கு தன்னிடம் சொல்லாமல் மறைத்து கொண்டு இருக்கிறாள் என்று பார்க்கலாம் உத்ராவின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தபின் இவளது பிரச்சனையை பார்க்கலாம் என்று தான் தள்ளி போட்டிருக்க எலியே வந்து பொறியில் சிக்கவும் இதற்கு தீர்வு சித்தார்த் தான் என்று கண்டு கொண்டாள்.

'வா.. மகனே வா.. அவரு உனக்கு சகல. ம்ம்ம்…. நீ நடத்துடா மகனே' என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டவள் எதுவும் கேளாதது போல் "என்ன சித்து என்ன சொன்ன எனக்கு எதுவும் கேக்கலடா லைன் கட்டாவது தள்ளி வந்து பேசு" என்று "விட்டு விட்டு கேட்காத மாதிரியே பேசவும் 'அப்பாடா சந்தோஷத்துல உளறிட்டோமே நல்லா வேலை அவளுக்கு எதுவும் கேக்கல' என்ற நிம்மதியில் இருந்தவன் "ஒரு நிமிஷம் கவி" என்று கூறி தள்ளி வந்து பேசியவன் "கவி இப்போ இப்போ கேக்குதா" என்றான்

"ம் கேக்குதுடா சரி சரி அவங்கள இங்க கூட்டிட்டு வா அப்புறம் உத்ரா கிடைச்சதை இப்போ சொல்லாத" என்றாள் கவி.

"ஏய் இவ்வளவு கஷ்ட்டபட்டு அவளை கண்டுபிடிச்சதே இவங்ககிட்ட சொல்ல தானே அதை ஏன் வேணாங்குற கவி"

"டேய் சொல்றத மட்டும் செய் சித்து" என்று கடுப்பானவள் "சரி நான் வைக்கிறேன் அவங்களை கூட்டிட்டு வந்து சேரு" என்று கூறி ஃபோனை வைத்துவிட்டாள். ஃபோனை துண்டித்ததும் அதே புகைப்படத்தை கோபிக்கும் அனுப்பினான் சித்து.

சாப்பிட்டு கொண்டு இருந்த கோபியின் மொபைலில் குறுஞ்செய்திக்கான சத்தம் வரவும் அதை திறந்தவன் கை அப்படியே அந்தரத்தில் நின்றது

அவனின் அதிர்ச்சியை பார்த்தவள் "கோபி... கோபி என்ன ஆச்சு??" என்று உத்ரா அவனை கேட்க.

ஃபோனை அப்படியே அவளிடம் திருப்பி காட்ட கேஷவை மட்டும் புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவனை அடையாளம் கண்டுகொண்டவள் "இதுல என்ன ஷாக் இருக்கு... கேஷவ் அண்ணா இருக்காங்க... அது யாரு பக்கத்துல ம்…" என்று யோசித்துவிட்டு வினவியபடியே சாப்பிட்டாள்.

அவள் யோசித்த முகம் பார்த்த கோபி "உனக்கு எங்கேயாவது பார்த்தமாதிரி இருக்கா உத்ரா??" என்று சந்தேகமாக கேட்க "ம்ஹூம் இல்ல கோபி எனக்கு ஞாபகம் வரல யார் இவங்க… இவங்க பிக் பார்த்து ஏன் ஷாக் ஆகுறிங்க??" என்று சாதாரணமாக கேட்க

"அய்யோ தெய்வமே நீ செத்துட்டதா நினைச்சி கேஷவை பழிவாங்குற உங்க அண்ணன் சாருகேஷ் இவன் தான்" என்று அவன் புகைப்படத்தை சுட்டிக் காட்ட அதை வாங்கி புகைப்படத்தை பெரியதாக்கியவள் அவள் அண்ணனையே பார்த்துக்கொண்டு இருக்க கண்களில் நீர் கோர்த்தது அதை கண்டதும் "உத்ரா.... உத்ரா…" என்று அவளை அழைத்தவன் "இப்போ எதுக்கு கண்கலங்குற" என்று கோபி கேட்டதும் கண்களை துடைத்தவள் இல்லை அழவில்லை என்பதாக தலை அசைத்து சமிக்ஞையில் கூற

"இங்க பாரு உத்ரா.... உன் கஷ்டம் புரியுது… நினைவு வரும்போது வரட்டும் அதுக்காக இவங்க ரெண்டுபேரும் உன் அண்ணனுங்க இல்லன்னு ஆகிடுமா சொல்லு? அவரோ உன் மேல் வைச்ச பாசத்தால தன் உயிர் நண்பனையே எதிரியா நினைச்சி பகையை வளர்த்து அழிக்க நினைச்சாரு. சோ நீ கவலைப்படுறதை விட்டுட்டு சந்தோஷமா இரு சரியா” என்றவன் புகைப்படத்தையே உத்து உத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனின் பார்வையில் சிரிப்பு வர “அப்படி என்ன தெரியுது அதுல போட்டோவையே பாத்துட்டு இருக்கிங்க??” என்று கோபியிடம் கேட்க

“அது நேருக்குநேர் படத்துல வர்ற விஜய் சூர்யா மாதிரி அடிச்சிக்கிட்டு இருந்தவங்க இப்போ ஃப்ரெண்ட்ஸ் படத்துல வர்ற விஜய் சூர்யா மாதிரி கட்டிபுடிச்சிக்கிட்டு இருக்காங்கல அதான் எப்படி??” என்று கிண்டலுடன் தனது எண்ணத்தை வெளிபடுத்த

அண்ணன்களை கலாய்த்ததில் அவனை முறைக்க ‘ஓ.... அங்க சுவிச் போட்டா இங்க லைட் எரியுமோ!!’ என்று நினைத்தவன் அவளை பார்த்து “ஹீ... ஹீ…” என்று இளித்தபடியே சாப்பிடுவது போல் தலையை குனிந்துக்கொண்டான்.

ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் என் வணங்கங்கள். உங்க கமெண்ட்ஸ்க்கு என்னால ரிப்லை பண்ண முடியல இன்னும் கொஞ்ச நேரத்தில் பண்ணிடுறேன் தொடர்ந்து படிக்கிறவங்க எப்படி இருக்குன்னு ஒரு சில வார்த்தைகள் பதிவிட்டால் நல்லா இருக்கும் முடிஞ்ச வரை ஓட் பண்ணுங்க தெங்க்ஸ் பிரெண்ட்ஸ்.

[QUOTE="Bhagi, post: 3784, member: 18"] சித்துவின் தாத்தா மருத்துவமனையில் இருந்து இளையமகளின் வீட்டிற்கு அன்று மாலையே திரும்பி இருந்தார். பெற்ற மகனை பார்த்ததில் பாதி நோய் குணமாகி இருக்க இதுநாள் வரையில் தன் ஸ்பரிசம் படாமல் தள்ளி நிறுத்தி இருந்த பேரனை கண்டு விட்டதில் மொத்தமும் குணமாகி இருந்தது. வீட்டிற்கு வந்ததுமே அவர் கண்கள் முதலில் பேரப்பிள்ளையை தான் தேடியது. மெத்தையில் படுத்திருந்தவர் "அம்மா ராதா சித்து எங்கம்மா??" என்றார். "மாமா… அவன் கோயம்பத்தூர் போயிருக்கான். ஒரு முக்கியமான் வேலை வந்திடுச்சி தவிர்க்க முடியல மாமா" என்று கூற பெரியவரின் முகம் ஏமாற்றம் நிறைந்து இருந்தது. இருந்தும் "சரிமா அவன் தொழில் நடத்துறவன் அவனுக்கும் வேலை இருக்கத்தான் செய்யும் பார்த்துட்டே வரச்சொல்லு" என்றார். "சரிங்க மாமா நான் சொல்றேன்" என்று கூறியவர் அவருக்காக கொண்டு வந்த கஞ்சியை ஆற வைத்து அவருக்கு புகட்டி விட நவநீதனின் தங்கையும் அவரது கணவரும் அறைக்குள் நுழைந்து தந்தையை பார்த்துவிட்டு, அவருக்கு வேண்டியதை கவனித்தவர்கள். "அண்ணி, என்ன இன்னைக்கும் சித்தார்த் நம்ம வீட்டுக்கு வரல? அவன் வருவான்னு நாங்க எல்லாம் எவ்வளவு ஆவளாய் இருந்தோம் தெரியுமா? அதுவும் மகா ஸ்பெஷலா அவனுக்குன்னு எல்லாம் பார்த்து பார்த்து அரேஞ்ச் பண்ணி இருந்தா!!" என்று நொடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார். 'அய்யோ இவங்க என்ன சொல்ல போறங்களோ தெரியலையே காலையிலையே அண்ணன் கல்யாணம் பத்தி பேசினாரே' என்று வயிற்றில் புளியை கரைக்க மாமானாருக்கு உணவை புகட்டியபடி சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் அவஸ்தையாய் பேருக்கு அங்கு அமர்ந்திருந்தார் ராதா. "என்ன அண்ணி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க பாட்டுக்கிட்டு அமைதியா இருக்கிங்க?" என்று மறுமுறை ஞாபகப்படுத்த "அது வந்து…. வந்து, அவனுக்கு வேலை இருக்குன்னு சொன்னான் ம்மா அதுவும் எங்க குடும்ப நண்பருக்கு ஆக்ஸிடென்ட் அதான் போயிருக்கான்" என்பதை மறைக்காமல் கூறி இருந்தார். "விடு மா கனகா ... மாப்பிள்ளைக்கு மறுக்க முடியாத வேலை இருக்கும் அடுத்த முறை வந்திடபோறாரு" என்றவர் "அது சரி கனகா, இனி மாப்பளைய பேர் சொல்லி எல்லாம் கூப்பிடுறது சரி இல்லை, கல்யாணம் முடிஞ்சா கூட இதே பழக்கமா ஆகிடும் அது நல்லா இருக்காது" என்று மனைவியை பார்த்து கூறிய நவநீதனின் தங்கை கணவர் ராதாவிடம் திரும்பி "தங்கச்சி மாமாவும் வீட்டுக்கு வந்துட்டார் என் பெரிய பொண்ணு மகாவும் படிப்பு முடிச்சிட்டு கல்யாணத்துக்கு இருக்கா ஒரு கல்யாணம் மூலமா பிரிஞ்ச நம்ம குடும்பம் இவங்க இரண்டு பேரோட கல்யாணம் மூலமா சேர்ந்திடும்" என்று அதிரடியாய் ஒரு குண்டை தூக்கி போட்டார்.... அவர் ஆசைபட்டது தானே சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது ஆனால் இன்று ஏனோ இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை என்பது போல் நடந்துக்கெண்டார் ராதா. ஏற்கனவே இங்கு வா என்று கூப்பிட்டதற்கு வேப்பில்லை இல்லாமல் மகன் சாமியாடிது நினைவில் வந்து அவருக்கு கிலியை ஏற்படுத்தியது.... இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் மகன் வானுக்கும் பூமிக்கும் குதித்து நெற்றிக்கண்ணை திறப்பது சந்தேகம் இல்லாமல் ஊர்ஜிதமாகி இருக்க. மருத்துவமனைககு வரவே மாட்டேன் என்று சொன்ன பிள்ளை எந்த சாமி சொல்லி அனுப்பியதோ உடனே வந்தவன் பட்டும் படாமலும் இருந்துவிட்டு சென்றான் அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை இதில் இதுபோன்ற கல்யாண பேச்செடுத்தால் விபரிதமாக முடியும் என்று மனதில் நினைத்து வருந்திய ராதா "அண்ணா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க கேட்டதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஆனா சித்துவ கேட்காம நாங்க எதுவும் முடிவு பண்ண முடியாது…. அதுவும் இல்லாம அவன் ஒருவருஷம் டைம் கேட்டு இருக்கான்.” என்றதும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். திருமண பேச்சை எடுத்ததுமே ராதாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதர்பார்க்காதவர் மாமனாரை பார்த்துவிட்டு "ஏம்மா தங்கச்சி எங்க சம்பந்தம் உனக்கு பிடிக்கலையா? இல்லை எங்கள் மகளை பிடிக்கலையா? இல்லை நீ சொன்ன மாப்பிள்ளை தான் கேட்டகமாட்டாரா ஏன் மா வேண்டாங்குற?” என்று ஆதங்கமாக அவர் கேட்கும் போது அங்கு நவநீதன் வர அவரின் தங்கை கனகா அண்ணிடம் சென்று "அண்ணா மகாவை உங்க மருமகளா ஏத்துக்க உங்களுக்கும் விரும்பம் இல்லையா??" என்று கேட்க மனைவியின் முகம் பார்த்த நவநீதன். "கனகா அவன் கல்யாண விஷயம் அதில் எங்களோட விருப்பு வெறுப்பை திணிக்கவும் முடியாதுமா. எங்கள் மகன் உனக்கு தான் மாப்பிள்ளை என்று நாங்க வாக்கு கொடுக்கவும் முடியாது மா” என்று தங்கள் நிலமையை விளக்கி இருக்க "அட என்ன மச்சான் நீங்க... குடும்பம் சேரப்போகுது அதை பார்ககாம... என்னன்னமோ பேசறிங்க... நாம பெத்த பசங்க நம்ம பேச்சை மீறி நடக்கவா போறாங்க" என்று அசட்டையாக கூற அவரின் பேச்சு ஏனோ ராதாவிற்கு பிடிக்கவில்லை “அண்ணா யார் எப்படியோ அது முக்கியம் இல்ல எங்க கல்யாணம் எங்க விருப்பப்படி நடந்ததோ அது போல தான் அவன் விருப்பப்டிதான் அவனுக்கு கல்யாணம் நடக்கும். பெத்தவங்க எங்களோட சந்தோஷத்துக்கு கல்யாணம் செய்துக்கிட்டாலும் ஆயுள் முழுசும் வச்சி வாழ போறவன் அவன் தான் அவனுக்கு பிடிச்சாதான் எதுவும் எங்களால் மேற்கொண்டு பேச முடியும். கொஞ்ச நாள் பொருமையா இருங்க மாமாவுக்கும் பூரணமா குணமாகட்டும் நாம நிதானமா பேசலாம்" என்று ராதா கூறிவிட அனைத்து சம்பாஷணைகளையும் கேட்டுக்கொண்டிருந்த நவநீதனின் தந்தை "மாப்பிள்ளை என் காலம் தான் வீண் பிடிவாதம் அது இதுன்னு போயிடுச்சி இனி கல்யாணம் எல்லாம் பசங்க விருப்பப்படி செய்றதுதான் நல்லது...” "இத்தனை வருஷம் என் ரத்தத்தை பிரிஞ்சி இருந்துட்டேன்... இனியும் இருக்க விரும்பல நாம ஆசைபடுவதை செய்றதை விட பேரப்பிள்ளை ஆசைப்படுவதை செய்து வைக்கலாம்... இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருக்க போறேன் இருக்க வரை நிம்மதியா இருக்க நினைக்கிறேன்". என்றவர் மகளை பார்த்து "கனகா வீண் ஆசையெல்லாம் பட்டு நீயும் உன் மனசை கெடுத்து மகாவிற்கும் மனசுல ஆசையை விதைக்காதே! புரியுதா??? சித்தார்த் வரட்டும் பேசி பார்ப்போம் பிடித்தால் கல்யாணம் செய்து வைக்கலாம் இல்லைனா இதோடு இந்த கல்யாண பேச்சை விட்டுடலாம்" என்றவர் "போய் வேலையை பாருங்க" என்று கூற பெற்றவர்கள் இருவருக்கும் இப்போதுதான் மூச்சே வந்தது. நவனீதனின் கவலை மகனை சம்மதிக்க வேண்டுமே என்று அது இந்த ஜென்மத்தில் முடியாத விஷயமாச்சே என நினைத்துதான் இந்த பேச்சை கத்தரித்து விட்டுவது போல் பேசியிருந்தார். ஆனால் ராதாவின் மனதில் என்ன இருக்கிறது எதனால் இதை ஏற்காமல் தவிர்த்தார் என்றுதான் புரியாது இருந்தார் நவநீதன். ஜெயந்தின் தாய். தந்தையர் இருவரும் மாணிக்கத்திற்கு விபத்து என்பதை கேள்விபட்டவுடன் மறுநாள் காலையே இந்தியாவிற்கு செல்ல மதுவும் ஜெயந்தும் அவர்களை வழியனுப்பி விட்டு இருவரும் காரில் திரும்பி வந்துகொண்டு இருந்தார்கள் போகும்போது கூட ஏதோ நல்லவிதமாக வந்தவள் இப்போது வருத்த முகமாகவும் குனிந்த தலையை நிமிராமலும் ஏன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதை பொருக்காமல் ஜெய்ந்த் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான். நேற்று விபத்து நடந்த விஷயம் அறிந்தவுடன் இந்தியாவிற்கு செல்வதாக கூறியதும் வந்த வாட்டம் இது, எவ்வளவோ அறிவுறைகளையும் சமாதானங்களை எடுத்து கூறியும் அவர்களை அவனுப்ப மனமில்லாமல் இருந்தவள் புறப்படும் சமயம் அவர்களை சஞ்சலபடுத்த வேண்டாம், என்று அமைதிகாத்து வந்தாள் மதுவந்தி. ஆனால் இப்போதோ கண்ணீர் படலம் விழிதிரையை மறைத்து நிற்க அவளின் கையை அழுத்தமாக பிடித்த ஜெயந்த் "என்ன மதுமா? என்னடா இது? சின்ன குழந்தை போல அழ ஆரம்பிச்சிட்ட" என்று அவளை பார்த்து பரிவுடன் வினவவும் சிறுபிள்ளையின் செய்கையைப்போல் மூக்கை உறிஞ்சி புறங்கையால் துடைத்து "அத்தையும் மாமாவும் ஊருக்கு போறது நினைச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு ஜெய் அவங்க போகுற சமயம் அழக்கூடாதுன்னு ரொம்ப கட்டுப்படுத்திட்டு இருந்தேன் என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல ஜெய்" என்று கண்களில் நிறைந்த நீர்மணிகளை கன்னத்தில் உருள விட்டாள். அவள் அழுவதை பார்த்ததும் சட்டென பிரேக் இட்டு வண்டியை ஒரு ஹோட்டலை நோக்கி விரட்டியவன் காரிலையே அமர்ந்தபடி “மதுமா.... மது.....” என்ற போதும் தலை நிமிர்ந்து பார்க்காமல் இருக்க "என்னை பாறேன்" என்று கூறி தழைத்திருந்த தலையை கைகொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான் ஜெயந்த். கன்னத்தில் கண்ணீரை கண்டதும் "பச் என்ன மதுமா? என்று கண்ணீரை துடைத்தவன் புருஞ்சிக்கடா எப்படி இருந்தாலும் எனக்கு இந்த மேட்ச் முடிஞ்சதும், அவங்க போய்தானே ஆகனும். இங்கேயே இருக்க முடியுமா? சொல்லு?" என்று உண்மையை விளக்க அவன் அவ்வாறு கூறியதும் மேலும் கலவரமான கண்களுடன் "அது.. அது தான் ஜெய் எனக்கு பயமா இருக்கு. இதுவரை நான் எது மேலயும் இவ்வளவு ஆசைபட்டது இல்லை முதல்முறை உங்க மேல காதல் வந்துச்சி ஜெய்.... உங்க பேச்சு உங்க பண்பு உங்க குணம் உங்க குடும்பம் எல்லாம்… எல்லாம் எனக்கு பிடிச்சி இருந்தது. உண்மையில் மனசார உங்களை நான் விரும்புறேன் ஜெய்…. நீங்க இல்லன்னா நான் இல்ல இது உயிர் இல்லாத ஜடம் ஜெய்” என்றவள் உடனே அவன் கண்ணை பார்த்து தவிப்புடன் “இந்த போட்டி முடிஞ்ச ஒரு வாரத்துல நீங்களும் என்னை விட்டுட்டு போயிடுவிங்களா???” என்று அழுகையுடனே கேட்டவளை தன்னுடன் இழுத்து அணைத்தவன் “இல்லடா இல்ல... நான் நீ இல்லாம இந்த மலேஷியாவ விட்டு போகமாட்டேன் டா எனக்கு காம்பிடிஷன் முடிஞ்சாலும் இங்கேதான் இருப்பேன். இன்னும் இரண்டு மாசத்துல உன் டிகிரி முடிஞ்சதும் நாம ரெண்டு பேருமா தான் இந்தியா போறோம் மா" என்று அவளுக்கு ஆறுதாலாய் கூற. அவ்வாறு கூறியதும் போன ஜீவனே திரும்பி வந்தது போல் நிம்மதி உணர்வுக்கொண்டவள் அவன் இதயத்தில் வாகாய் சாய்ந்து கொண்டு "தேங்கஸ் ஜெய்... ரொம்ப தேங்க்ஸ்" என்று கூறிட அங்கு பேரரும் வர சரியாய் இருக்க நெருக்கத்தில் இருந்து விலகியவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் காதலும் போட்டிபோட தன்னவர்களின் பிம்பத்தை கண்களில் நிறைத்துக்கொண்டு உணவினை உண்டவர்கள் அங்கிருந்து கிளம்பினர். மதுவை அழைத்துக் கொண்டு சென்றவன் அப்பார்ட்மெண்டில் விட்டுவிட்டு தான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுவிட்டான். வீட்டிற்கு வந்தவள் அலுப்பு தீர தூங்கி எழுந்து காபியுடன் சோபாவில் வந்து அமர வாசலில் வந்த அழைப்பு மணியின் ஓசையில் கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவளின் பெரியம்மாவும் அவளது அண்ணன் கிருபாகரனும் நின்றிருக்க மகிழ்ச்சியில் உறைந்து அப்படியே சிலையாய் இருந்தவளை ஹேய் மங்கி எப்படி டி இருக்க என்ற கிருபாவின் இருகிய அணைப்பில் இருக்க தன்நிலை உண்ர்வு பெற்றவள் “டேய் எருமை பன்னி மாடு உனக்கு தங்கச்சின்னு கொஞ்சமாச்சும் பாசம் இருக்காடா தடி மாடு, போனவ எப்படியோ போகட்டும் தானே விட்டுட்டு இருந்த பண்ணடா… ஒரு முறை வந்து பாத்தியா குரங்கே??” என்று அவனை தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவள் அவனை போட்டு மொத்து மொத்தென்று மொத்தி "போடா முள்ளம்பன்னி என் கூட பேசாத இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த??" என்று முகத்தை திருப்பி இருந்தவள். பெரியம்மாவை மட்டும் உள்ளே அழைத்து அவரை அணைத்து “எப்படி இருக்கிங்க அம்மா பெரியப்பா பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க??” என்று கேட்க அவளை திருஷ்டி கழித்து நெட்டி முறித்தவர் "நல்லா இருக்கேன்டா…. நீ அங்க ஏச்சும் பேச்சும் வாங்கி வாங்கி வாடி போயிருந்த…. இப்போதான் டா செல்லம் நீ நீயா இருக்க உன் அம்மா மாதிரி அவ்வளவு அழகா இருக்க டா தங்கம்" என்று கன்னம் தொட்டு முத்தம் வைத்தவர் "எல்லாம் நல்லா இருக்காங்கடா... அவரும் அவருக்கு என்ன நல்லாதான் இருக்காரு… அவருக்கு காசு மட்டும் வந்தா போதும்.யாரு எக்கேடு கெட்டு போனா என்ன தான் நல்லா இருக்கனும் தான் பசங்க நல்லா இருக்கனும்னு அவரை சுயநல பேய் பிடிச்சி ஆடிக்கிட்டு நல்லாதான் இருக்காரு" என்று வருத்தப்பட்டு பேசினார் அவரின் வருத்தத்தை கண்டு "விடுங்க மா அவர் குணம் தெரிஞ்சது தானே அதையே நினைச்சி ஏன் சங்கடப்படுறிங்க விடுங்க அப்புறம் பசங்கள கூட்டிட்டு வந்து இருக்காலாமே?" என்றவள் வாயில் புறம் திரும்பி பார்க்க அவளையே பாவமாய் பார்த்துக்கொண்டு இருந்த கிருபாவின் பார்வையை கண்டு மறுபடி முகத்தை திருப்பிக்கொள்ள. இம்முறை அமைதியாய் இல்லாமல் கோபத்துடன் வீட்டில் நுழைந்தவன் 'ஹே மங்கி அந்த மான்ஸ்டர் குணம் தெரிஞ்சும் இப்படி கேக்குற!!! இது சரியில்ல நீ சரியில்ல…" என்றவன் “அந்த ஆளு மனுசன் மாதிரியா பேசுவார் சுத்த நான்சென்ஸ் அவர்கிட்ட சண்டை போட்டு போட்டு நான் அலுத்துட்டேன் பேபி டோட்டல் வேஸ்ட்”. “நான் உன்னை வந்து பாக்கல அதுதானே உனக்கு கோவம் இங்க பாரு பேபி நீ போன அன்னைக்கு நானும் அவர்கூட சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்... அவர் எப்படி உன்னை தப்பா பேசலாம் நீயும் சும்மா வந்து இருக்க லெஃப்ட் அண்ட் ரைட் விட்டு வந்து இருக்கனும் மனுஷன் அப்பவாச்சி திருந்தி இருப்பார் நான் லேட்டா வந்தது அவருக்கு சாதகமா போச்சி பேபி…” "உன்னை தேடினேன் நீ சீமா கூட இருக்கன்னு தெரிஞ்சிடுஞ்சி… நீ சேஃப் அதுதான் வேணும் எனக்கும்... சோ உனக்கு நானும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு தான் உன்னை வந்து பாக்கல…" "நான் வந்து, உன் கூட இருந்தாலும் அந்த ஆளு அதுக்கும் பிரச்சனை பண்ணுவார்... தேவையா பேபி உனக்கு நீ எங்க இருந்தாலும் நிம்மதியா இருக்கனும் பேபி இப்போ உனக்கு கல்யாணம்னு கேள்விபட்டு தான் ஓடி வந்துட்டேன் தெரியுமா!?1" என்று விளக்கம் கொடுக்க தன் கணவரை போல் அல்லாமல் கிருபாவிற்கு மதுவின் மேல் உள்ள அன்பை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது. அவன் கூறுவதும் உண்மை தானே பெரியப்பாவை பற்றி தெரிந்து வைத்திருந்தவள் அவனிடம் கோவிப்பது போல் பாசாங்கு செய்து விளையாடியவள் கிருபாவின் அவன் வராததற்கு விளக்கத்தை கூறவும் அவன் தலையை கலைத்து விட்டு "என் செல்ல அண்ணா சும்மா லொலொலாயிக்கு தான் கோச்சிக்கிட்டேன் சரி வா" என்று அவனை அமரவைத்தவள் "அம்மா இருங்க காஃபி எடுத்து வறேன்" என்று சென்றவளை தடுத்தவர் "இருடா உன்கிட்ட முக்கியமா ஒன்னு கொடுக்கனும் நேரம் ஆகுது அவருக்கு தெரியாமதான் வந்து இருக்கேன். தெரிஞ்சா போகவிடாம ஏதாவது திருட்டு வேலை பண்ணுவார் அதான் அவருக்கு எதுவும் சொல்லாம வந்துட்டோம்" என்று கூறியவர் தனது பேகில் எடுத்து வந்திருந்த வெள்ளை துணியில் இருந்த நகைகளை எடுத்து அவளின் கைகளில் வைத்தார். "என்னம்மா ஏன் இதை கொடுக்குறிங்க என்ன இது?" என்று கேட்க "இது எல்லாம் உனக்காக நான் சிறுகசிறுக சேர்த்து வைத்ததுடா" என்று கூறி... "என் சொந்த உழைப்பு இல்லடா நீ சம்பாதிச்சி தான் நீ உழைக்க ஆரம்பிச்ச முதலா இதை உனக்காக சேர்க்குறேன் டா இது உன் பணம், உன் சொத்து டா, இவர் புத்தி தெரிஞ்சதுனாலதான் உனக்குன்னு நான் தனியா நகை சேர்க்க ஆரம்பிச்சேன்". என்று விளக்க கொடுத்தவர் "இவ்வளவு நாள் இதை பத்திரமா அவர் கண்ணுக்கு படாம வைச்சிருந்தேன். ஆனா இதுக்கு மேலயும் என்னால இதை காப்பாத்த முடியுனு தோனல அதுவும் இல்லாம உன் கல்யாணம் போது இதை போட்டா எப்படி வந்ததுன்னு பேச்சு வரும். அதுவே இப்போ உன்கிட்ட இருந்துச்சினா அவருக்கு அதை பத்தி தெரியாது டா" என்று கூறி அவளிடம் ஒப்படைத்தார். அவஸ்தையுடனே இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த மதுவந்தி அவற்றை எல்லாம் அதே வெள்ளை துணியில் பத்திரப்படுத்தியவள் அவளின் பெரியம்மா கைகளிலேயே திணித்து “இதை எடுத்துட்டுப்போய் என் தங்கச்சிகளுக்கு நான் கொடுத்ததா கொடுத்துடுங்க மா" என்று கூறினாள். "இது உனக்கானதுடா உனக்கு சேரவேண்டியது, உன் உழைப்பு, நீ…. நீ, போற இடத்துல எல்லோரும் நல்லவங்கதான் நான் இல்லன்னு சொல்லல… ஆனா எது எப்படி இருக்கும்னு சொல்ல முடியாதுல… மாறவும் செய்யலாம் அப்போ என்ன எடுத்துட்டு வந்துட்டானு நாளைக்கு ஒர் சொல் வரக்கூடாது டா அதுக்குதான் உனக்குன்னு ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்கனும் டா என்னால பெருசா செய்ய முடியலனாலும் இதையாவது செய்றேன் டா" என்று அவளுக்கு புரியவைக்க முனைய "யார் எப்படி மாறினாலும் இவங்க மாறமாட்டாங்கமா எனக்கு நம்பிக்கை இருக்கு… என்னை மருமகளா பாக்கல மா மகளா பாக்குறாங்க … இதை வாங்கினா அவங்க மேல நான் வச்சி இருக்க நம்பிக்கை குறைஞ்சிடுச்சின்னு அர்த்தம் வரும் மா இது எனக்கு வேண்டாம். என் தங்கைகளுக்கு கொடுத்துடுங்க” என்று உறுதியாய் கூற அவள் வாழப்போகும் வீட்டில் உள்ள நபர்களின் மேல் வைத்த நம்பிக்கையை பார்த்து பிரம்மித்தவர் “இந்த நம்பிக்கைக்கு அவங்க தகுதியானவங்கதான் மது...” என்று அவளை உச்சிமுத்தமிட்டு “நீ நல்லா இருக்கனும்டா” என்று வாழ்த்தினார். சாருகேஷின் மனமாற்றத்தை கண்டு அதிர்ந்த நிலையில் இருந்த சித்துவிற்கு தான் கண்பது கனவா நினைவா என்ற திகைப்பில் தான் இருந்தான். ஒரு முறை தன் கையை கிள்ளி பார்க்கவும் வலியில் “ஸ்...” என்றவன் ‘இது உண்மை தான் ஆனா எப்படி ஜென்ம விரோதி மாதிரி நடந்துக்குறான்ல கவி சொல்லிட்டு இருந்தா… உத்ரா வந்துதான் இவங்கள சேர்க்கனும், உண்மையை சொல்லி புரியவைக்கனும்னு இருந்தா... உத்ரா இல்லாமலையே சேர்ந்துட்டாங்க' என்று ஆச்சர்யபட்டுக் கொண்டு இருந்தான். "சாரி.... சாரி மச்சான் உன்னை தப்பா புரிந்துக்கிட்டு ரொம்ப காயப்படுத்திட்டேன் டா என்னை மன்னிச்சிரா மச்சான்" என்று மனம் வருத்துடன் கலங்கிய சாருகேஷ் கேஷவிடம் மன்னிப்பை வேண்ட "டேய் மாப்ள…. என்னடா சாரி எல்லாம் கேட்டு என்னை அன்னியப்படுத்துற…. நீ என்னை எப்படி நினைச்சாலும் என் மனசுல நீ எப்பவும் என் ஃப்ரெண்ட் அதே சாருகேஷ் தாண்டா…. உன்னை எப்படி டா என்னால வெறுக்க முடியும் எனக்காக உயிரையும் கொடுக்குற ஒருத்தன்னா அது நீதானேடா" என்று அவனின் கண்களை துடைத்து கேஷவ் சமாதானப்படுத்த " நான் அப்படி நடக்கலையே டா... அவ ஏதோ யாரையோ பத்தி எழுதி வைச்சிட்டு போனதை உன்னோட சம்பந்தப்படுத்தி உன்னையும் அவளையும் சேர்த்து வைச்சி அசிங்கபடுத்தி ரொம்ப பெரிய பாவத்தை பண்ணிட்டேன்டா.... உன் பேச்சை கேட்டு இருக்கனும்.... இல்லை உண்மை என்னன்னு விசாரித்து இருக்கனும்... எதுவும் பண்ணலியே டா கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு முடிவெடுத்து எல்லாருக்கும் கஷ்டத்தை கொடுத்து நானும் கஷ்டபட்டேன் டா.... உன்னை எப்படிடா நான் சந்தேகப்பட்டேன்…. நான் நல்ல ஃப்ரெண்ட் இல்லடா… நான் போலியா இருந்து இருக்கேன்... நான் கெட்டவனா மாறிட்டேன் டா…" என்று மனதில் தங்கையை நினைத்து வலியுடன் கூறியவன் தன்னையும் திட்டிக்கொண்டான் "இல்லடா மாப்ள... உத்ரா இல்லன்ற ஆதங்கம்…. அவ இறப்பு கொடுத்த வலி உன்னை என்னன்னவோ பேச வைச்சிடுச்சி…. உன் நிலமையில யார இருந்தாலும் இதை விட மோசமா ரியாக்ட் பண்ணி இருப்பாங்க… ஏன் என்னை கொன்னே போட்டு இருப்பாங்க… விடு மாப்ள இப்பவாவது என்னை நம்பறியேடா அது போதும்… உனக்கு மட்டும் இல்ல எனக்கும் அவ கூட பிறக்காத தங்கைடா அவளை இந்த கதிக்கு ஆளக்குனவன தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்… மாப்ள அவன் மட்டும் கையில் கிடைச்சான் அவன் சாவு ரொம்ப கொடூரமா இருக்கும் டா” என்று உணர்ச்சி வேகத்தில் கேஷவ் கூற "மச்சான் அதை நான் பாத்துக்குறேன் டா… உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா இந்த எண்ணத்தை எல்லாம் உன் மனசுல இருந்து தூக்கி எரிஞ்சிடு உன்கிட்ட மட்டும் இல்லடா கவிகிட்டயும் என கோவத்தை காட்டிட்டேன் அவக்கிட்டயும் சாரி கேக்கனும்” என்று கூறியவன் அவனுக்கு குடும்பத்தை காரணம் காட்டி கேஷவின் அந்த எண்ணத்தை விடுமாறு கூறினான் சாருகேஷ் இந்த சம்பாஷணைகளில் பார்த்துக்கொண்டு இருந்த சித்துவுக்கு கவியிடம் இருந்து அழைப்பு வரவும் அதை எடுத்து காதில் பொருத்தி இருந்தான். “ஹலோ.... கவி” என்றான் சித்து "சித்து எங்க இருக்கிங்க இன்னும் வீட்டுக்கு வரல அவர் எங்க அவருக்கு ஃபோன் பண்றேன் எடுக்கவே மாட்டேங்குறாரு" என்று பதட்டம் குறையாமல் கேட்க "அம்மா தாயே ஒன்னு ஒன்னா கேளு... எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். ஒரே மூச்சில எல்லா கேள்வியும் கேட்டா என்ன செய்றது… இங்க நடக்குறத பாத்தே கண்ணு பிதுங்கி நிக்கிறேன் நீயூம் உன் பங்குக்கு வச்சி செய்யாத தேவதையே" என்று கடுபடிக்க "பச் டேய் என் பயம் எனக்கு அவர் எங்க முதல்ல அதை சொல்லி தொலை ஆமா உனக்கு என்ன விழிபிதுங்கி நிக்கிறேன்ற அப்போ நீங்க இன்னும் கிளம்பளையா அங்கதான் சுத்திட்டு இருக்கிங்களா?" என்று விசாரிக்க "கவி முடியலமா... ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு…. மூச்சி விடு நான் பாவம் ஏற்கனவே தலை சுத்தி கிடக்கேன்….உனக்கு அனுப்புறேன் எதனால லேட்டுன்னு உனக்கே தெரியும்" என்றவன் அணைத்தாற் போல் நின்று கொண்டிருந்த நண்பர்கள் இருவரையும் ஃபோட்டோ எடுத்து அவளது வாட்சப்பிற்கு அனுப்பி வைத்தான். "இப்போ ஒரு போட்டோ உன் வாட்சப்புக்கு அனுப்பி இருக்கேன் ஓபன் பண்ணி பாரு" என்று கூற "டேய் வர வர நீயும் அந்த வில்லங்கமானவன் கூட சேர்ந்து சேர்ந்து அவனை போலவே ஆகிட்டு வர" என்று கோபியை மனதில் வைத்து அவனிடம் வறுத்தவள் அந்த புகைப்படத்தை பார்த்ததும் வாயடைத்து நின்றாள் எப்படியும் அதிர்ச்சியின் உச்சத்தில் தான் இருப்பாள் என்று யூகித்து இருந்த சித்தார்த் “கவி.... கவி... லைன்ல இருக்கியா இல்ல அதிர்ச்சியில எப்படி பேசறதுன்னு மறந்துடுச்சா" என்ற குரல் கேட்கவும் நடப்புக்கு வந்தவள் "என்னடா நடக்குது அங்க"? என்று வியப்பாய் கேட்க "ஹங்... முதல்ல சகலைக்கு திருஷ்டி சுத்திப்போடுமா. முடியல. சகல கூட இருக்கும்போது கத்தி மேல நடக்குறா மாதிரியே ஃபீல் ஆகுது. இங்க ஹாலிவூட் ஆக்ஷன் படத்துல வர்ரா போல சீன்லாம் வருது” என்று கிண்டல் பாதியும் நக்கல் பாதியுமாய் கலந்து விட்டவன் கூடவே ஹிண்டாக அவன் உறவு முறையையும் ஒருவாறு உளறிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான் . சித்துவின் தோழியாய் இருக்கலாம் ஆனால் அவனை போல டியூப்லைட்டாகவா இருப்பாள் வந்ததிலிருந்து தங்கையையும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறாள் அவளது பேச்சு நடவடிக்கை என்று எல்லாவற்றிலும் மாற்றத்தையும் கண்களில் ஒரு சோகத்தையும் பார்க்க ஏதோ ஒன்று அவளுக்குள் உறுத்துவது புரிந்துக்கொண்டு தான் இருந்தாள். இதுவும் பத்தாதென்று அன்று கல்லூரிக்கு வந்த சித்தார்த் என்றுமில்லாத திருநாளாய் அவனின் பார்வை மொத்தமும் மாற்றங்களை சுமந்திருக்க ஒருவாறு யூகித்து இருந்தாள் ஆனால் இந்த அழைப்பு அனைத்தையும்.ஊர்ஜினமாக்கி குட்டை வெளிப்படுத்தி இருந்தது. தங்கை எத்தனை நாளைக்கு தன்னிடம் சொல்லாமல் மறைத்து கொண்டு இருக்கிறாள் என்று பார்க்கலாம் உத்ராவின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்தபின் இவளது பிரச்சனையை பார்க்கலாம் என்று தான் தள்ளி போட்டிருக்க எலியே வந்து பொறியில் சிக்கவும் இதற்கு தீர்வு சித்தார்த் தான் என்று கண்டு கொண்டாள். 'வா.. மகனே வா.. அவரு உனக்கு சகல. ம்ம்ம்…. நீ நடத்துடா மகனே' என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டவள் எதுவும் கேளாதது போல் "என்ன சித்து என்ன சொன்ன எனக்கு எதுவும் கேக்கலடா லைன் கட்டாவது தள்ளி வந்து பேசு" என்று "விட்டு விட்டு கேட்காத மாதிரியே பேசவும் 'அப்பாடா சந்தோஷத்துல உளறிட்டோமே நல்லா வேலை அவளுக்கு எதுவும் கேக்கல' என்ற நிம்மதியில் இருந்தவன் "ஒரு நிமிஷம் கவி" என்று கூறி தள்ளி வந்து பேசியவன் "கவி இப்போ இப்போ கேக்குதா" என்றான் "ம் கேக்குதுடா சரி சரி அவங்கள இங்க கூட்டிட்டு வா அப்புறம் உத்ரா கிடைச்சதை இப்போ சொல்லாத" என்றாள் கவி. "ஏய் இவ்வளவு கஷ்ட்டபட்டு அவளை கண்டுபிடிச்சதே இவங்ககிட்ட சொல்ல தானே அதை ஏன் வேணாங்குற கவி" "டேய் சொல்றத மட்டும் செய் சித்து" என்று கடுப்பானவள் "சரி நான் வைக்கிறேன் அவங்களை கூட்டிட்டு வந்து சேரு" என்று கூறி ஃபோனை வைத்துவிட்டாள். ஃபோனை துண்டித்ததும் அதே புகைப்படத்தை கோபிக்கும் அனுப்பினான் சித்து. சாப்பிட்டு கொண்டு இருந்த கோபியின் மொபைலில் குறுஞ்செய்திக்கான சத்தம் வரவும் அதை திறந்தவன் கை அப்படியே அந்தரத்தில் நின்றது அவனின் அதிர்ச்சியை பார்த்தவள் "கோபி... கோபி என்ன ஆச்சு??" என்று உத்ரா அவனை கேட்க. ஃபோனை அப்படியே அவளிடம் திருப்பி காட்ட கேஷவை மட்டும் புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவனை அடையாளம் கண்டுகொண்டவள் "இதுல என்ன ஷாக் இருக்கு... கேஷவ் அண்ணா இருக்காங்க... அது யாரு பக்கத்துல ம்…" என்று யோசித்துவிட்டு வினவியபடியே சாப்பிட்டாள். அவள் யோசித்த முகம் பார்த்த கோபி "உனக்கு எங்கேயாவது பார்த்தமாதிரி இருக்கா உத்ரா??" என்று சந்தேகமாக கேட்க "ம்ஹூம் இல்ல கோபி எனக்கு ஞாபகம் வரல யார் இவங்க… இவங்க பிக் பார்த்து ஏன் ஷாக் ஆகுறிங்க??" என்று சாதாரணமாக கேட்க "அய்யோ தெய்வமே நீ செத்துட்டதா நினைச்சி கேஷவை பழிவாங்குற உங்க அண்ணன் சாருகேஷ் இவன் தான்" என்று அவன் புகைப்படத்தை சுட்டிக் காட்ட அதை வாங்கி புகைப்படத்தை பெரியதாக்கியவள் அவள் அண்ணனையே பார்த்துக்கொண்டு இருக்க கண்களில் நீர் கோர்த்தது அதை கண்டதும் "உத்ரா.... உத்ரா…" என்று அவளை அழைத்தவன் "இப்போ எதுக்கு கண்கலங்குற" என்று கோபி கேட்டதும் கண்களை துடைத்தவள் இல்லை அழவில்லை என்பதாக தலை அசைத்து சமிக்ஞையில் கூற "இங்க பாரு உத்ரா.... உன் கஷ்டம் புரியுது… நினைவு வரும்போது வரட்டும் அதுக்காக இவங்க ரெண்டுபேரும் உன் அண்ணனுங்க இல்லன்னு ஆகிடுமா சொல்லு? அவரோ உன் மேல் வைச்ச பாசத்தால தன் உயிர் நண்பனையே எதிரியா நினைச்சி பகையை வளர்த்து அழிக்க நினைச்சாரு. சோ நீ கவலைப்படுறதை விட்டுட்டு சந்தோஷமா இரு சரியா” என்றவன் புகைப்படத்தையே உத்து உத்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவனின் பார்வையில் சிரிப்பு வர “அப்படி என்ன தெரியுது அதுல போட்டோவையே பாத்துட்டு இருக்கிங்க??” என்று கோபியிடம் கேட்க “அது நேருக்குநேர் படத்துல வர்ற விஜய் சூர்யா மாதிரி அடிச்சிக்கிட்டு இருந்தவங்க இப்போ ஃப்ரெண்ட்ஸ் படத்துல வர்ற விஜய் சூர்யா மாதிரி கட்டிபுடிச்சிக்கிட்டு இருக்காங்கல அதான் எப்படி??” என்று கிண்டலுடன் தனது எண்ணத்தை வெளிபடுத்த அண்ணன்களை கலாய்த்ததில் அவனை முறைக்க ‘ஓ.... அங்க சுவிச் போட்டா இங்க லைட் எரியுமோ!!’ என்று நினைத்தவன் அவளை பார்த்து “ஹீ... ஹீ…” என்று இளித்தபடியே சாப்பிடுவது போல் தலையை குனிந்துக்கொண்டான். ஹாய் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் என் வணங்கங்கள். உங்க கமெண்ட்ஸ்க்கு என்னால ரிப்லை பண்ண முடியல இன்னும் கொஞ்ச நேரத்தில் பண்ணிடுறேன் தொடர்ந்து படிக்கிறவங்க எப்படி இருக்குன்னு ஒரு சில வார்த்தைகள் பதிவிட்டால் நல்லா இருக்கும் முடிஞ்ச வரை ஓட் பண்ணுங்க தெங்க்ஸ் பிரெண்ட்ஸ். [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே
காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 52
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN