காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 53

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பகுதி 53

கோயம்பத்தூரில் பார்வசதியுடன் கூடிய புகழ்பெற்ற 5 நட்ச்சத்தர ஹோட்டலில் இருந்தான் அஷ்வின் கூடவே நிர்மலும் கோபமாக தான் இருந்தான்.
"ஏய் மேன் 1 எக்ஸட்ரா லார்ஜ்." என்று சொல்லிவிட்டு மறுபடியும் நிர்மலின் புறம் திரும்பிய அஷ்வின்.

"சொல்றா என்ன தேடி இங்கேயே வந்துட்ட?" என்று கையில் இருந்த காலி கிளாஸை கீழே வைத்தான் அவன்.

எடுத்த எடுப்பிலேயே "நீ வர்ஷினி போன் பண்ண ஏன்டா எடுக்கமாட்டன்ற? அவ எனக்கு போன் பண்ணி கேக்குறா நான் என்ன சொல்றது? எனக்கும் தெரியாதுன்னு சொல்லி இருக்கேன் உன்னை தேடி ஷாப் போயிருக்கா நீ இல்ல வீட்டுக்கு போயிருக்கா அங்கேயும் இல்ல ஏன்டா அந்த பொண்ண சுத்தவிடுற?" என்று கோபத்துடன் கேட்க

நிர்மலை ஒரு மாதிரியாக பார்த்த அஷ்வின் "என்னடா ரொம்ப இரக்கம் காட்டுற ஒருவேல நல்லவனா மாறிட்டியோ!? இல்லையே அது நடக்காத ஒரு விஷயம்." என்றவன் அவன் விளக்கத்தை கேட்க நிர்மல் முகத்தை பார்த்தான்.

"பச்.....டேய் நீ வேற உயிர வாங்காத நானே எரிச்சல்ல இருக்கேன் இதுல இந்த ஏழரைய வேற தனியா இழுத்து விட்டுக்க சொல்றியா?" என்று கத்தியவன் நான்கு ஐந்து நாட்களாக இருந்த மன அழத்ததிற்கு மருந்தாக பேரர் எடுத்து வந்திருந்த மதுவை ஒரே மடக்கில் தொண்டையில் சரித்து இருந்தான்.

சாருகேஷிற்கு உண்மை தெரிந்து விட்டது அவளை காதலித்து கைவிட்டவன் அஷ்வின் என்றும் அவனுடன் இன்னொரு பிரெண்டும் இருக்கான் என்றும் அவர்கள் ரெண்டும் பேரூம் செய்த வேலை ஒரு பொண்ணையே அழிச்சிடுச்சினு ரொம்ப கோவத்துல இருக்காங்க என்று தேவராஜ் கூறிவிட்டு அந்த இரெண்டு பேரும் யாருன்னு தெரிஞ்சா நானே அவனுங்கள லாரி ஏத்தி கொனுட்டு ஆக்ஸிடென்ட் சொல்லி போயிட்டே இருப்பேன் என்றதும் அந்த ஏசி அறையிலும் முகமெல்லாம் வியர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டான் நிர்மல்

அவனை என்ன என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்த அஷ்வின் விஷயம் தெரியாது எதுவோ அவன் மூட் அப்செட்டாக உள்ளான். என்று நினைத்து "மச்சி பீ கூல்டா." என்று முதுகில் கை வைக்க அவன் கையை தட்டி விட்டவன் "நீ என்னடா உன் பிரச்சனை என்னன்னு கேக்குறேன் நீ எங்கயேயும் இல்லன்னதும் அவ என்னை கேக்குற எனக்கு போன் பண்றா. என் வீட்டுக்கு வந்து நிக்குறா. உன்னை தேடி கண்டுபிடிச்சி கொடுன்னு." என்றான் மிகுந்த எரிச்சலாய்.

"தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே டா! அது என் வேலை இல்லைன்னு சொல்லு." என்று அவனுக்கு பதிலை சொல்லி தர கோவத்தில் இருந்தவன் "எனக்கு தெரியாததை சொல்லி தர வந்துட்டியா?" என்று கேட்டவன் "நீங்கதானே அவர் பிரண்டு எங்க போனாருன்னு உங்களுக்கு தெரியாம இருக்காது பீளிஸ் அண்ணா சொல்லுங்கன்னு வந்து வீட்டுல நிக்குறா." என்றவன் "நீ ஏன்டா இப்போ அவள அவாய்ட் பண்ற?" என்றான் நிர்மல்.

ஒரு அலட்சிய பார்வை பார்த்தவன் "காதல் முத்திடுச்சி அவளுக்கு." என்று நக்கல்தோணியில் கூறிய அஷ்வின் "அவளை அனுபவிச்சிட்டு விட தான் இருந்தேன் அவ அப்பன் மந்திரின்னு தெரியவும் சரி நம்ம செய்ற வேலைக்கு கொஞ்சம் அதிகாரம் செல்வாக்கு இவ மூலமா வரும்னு தான் அவளை கல்யாணம் பண்ணிக்குறதா அவங்க அப்பனையே அப்ரோச் பண்ணேன்... கூடவே எனக்கு இந்த ஃப்ராக்டிரி ஐடியாவும் இருக்க இது நடக்கும்னு நினைச்சேன். இப்போ நானே மட்டிக்குவேன்னு நிலமை வரும்போது ஒதுங்கரதுதானே மச்சி நல்லது... அவ அப்பன் கூட போயி ஜெயில்ல உக்கார சொல்றியா?" என்று கேட்டு தோளை குலுக்கியவன் "சரி நீ என்னடா இவ்வளவு டென்ஷனா இருக்க எதாவது பிரப்ளமா இந்த வர்ஷாவ தவிர்த்து?" என்றான்.

"என் டென்ஷனுக்கு காரணமே உத்ரா உத்ராதான்டா" என்று கூற

"செத்தவ உனக்கு எப்படி டா டென்ஷன் ஏத்துவா? அவ அண்ணன் உன்னை கண்டுபிடிச்சிட்டானா?" என்றதும்

"அவன் அண்ணன் கையால சாகுரத்துக்கு முன்னால எங்கண்ணன் கையால செத்துடுவேன் போல. விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி இதுவரை அவன் பிரெண்டு கேஷவ் தான் தப்பு பண்ணான்னு நினைச்சிட்டு இருந்தவன் அதுக்கு காரணம் அவன் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சி கூடவே நம்ம சரித்தர கதையும் தெரிஞ்சி இருக்கு. அவ இறப்பையும் அவளோட காதலன் முகத்தையும் தவிர்த்து." என்றான்

இது எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாலும் இதில் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற பாவத்திலையே பக்கத்து டேபிலில் இருக்கும் அழகியுடன் கடலையை கண்களாலையே வறுக்க

நண்பனின் பார்வையை கவனித்த நிர்மல் "பச் திருந்தமாட்ட போடா." என்று எழுந்து "நான் கிளம்புறேன் என்னால இதை எவ்வளவு நாள் சாமளிக்க முடியும்னு தெரியல. தேவாவோ அவன் யாருன்னு தெரிஞ்சா நானே லாரி ஏத்தி கொண்ணுடுவேன்னு சொல்றான். நீ யாருக்கும் பயப்படாம இருக்காலாம் என்னால முடியல... என்னைக்கு இது தெரிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு இந்த எண்ணத்துலயே பைத்தியம் புடிச்சிடும் போல." என்றவன் தலையை அழுந்த கோதி எழுந்து சென்று விட்டான்.

மருத்துவமனையில் இருந்த மாணிக்கத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. மாலேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய ராஜாராமனும் ஆதிநாரயணியும் (கேஷவின் பெற்றோர்) மருத்துவமனைக்கு வந்து நலன் விசாரித்தவர்கள் அவர்களுக்கு வேண்டியதை பார்ந்து பார்த்து செய்தனர். தினமும் இருவரும் வந்து பார்த்து பேசி மஞ்சுவின் மனநிலையை தேற்றி இருந்தனர். ஒருவாரம் கடந்த நிலையில் வீட்டிற்கு செல்லும் அளவு உடல் தேறி வந்திருந்தார் மாணிக்கம். இறுக்கமாக இருந்த சூழ்நிலை இயல்பாக மாறியது மகள்களும் தந்தை குணமாகி வருவதால் இயல்பாய் நடக்க தொடங்கி இருந்தனர். இருவருக்கும் விடுமுறை முடிந்து தேர்வு தொடங்கி இருக்க கவியின் தேர்வை மனதில் வைத்து அவளை மாணிக்கத்தின் வீட்டிலையே இருக்க வைத்து தினமும் சென்று பார்த்து வந்தான் கேஷவ்.

மருத்துவமனையில் நண்பர்கள் இருவரும் பழங்கதைகளை பேசியபடி இருக்க கேஷவும் சக்தியும் அறைக்குள் நுழைந்தனர். கேஷவ் தந்தையை பார்த்ததும் "என்னப்பா நீங்க இருக்கிங்க அத்தை அம்மா யாரும் இல்லையா?" என்று கேட்க

"அவங்க ரெண்டு பேரும் இங்க தான் இருந்தாங்க கேண்டீன் போயிருக்காங்க." என்றதும் ம் என்று தலையை ஆட்டியவன் மாணிக்கத்தை பார்த்து "எப்படி இருக்கிங்க மாமா?" என்றான்.

"பெட்டர் கேஷவ் நவ் பீல் கம்பர்ட்." என்று கூற அருகில் இருந்த சக்தி "குட் சார்... நீங்க இதுல இருந்து சீக்கிரமே குணமாகனும்..." என்று கூறியவன். சிறிது நேர இடைவெளி எடுத்து உங்களை ஆக்ஸிடென் பண்ண காரணமானவங்களும் பிடிச்சிட்டோம்... அவனுங்களும் உண்மையை ஒத்துக்கிட்டாங்க... அதோட மட்டும் இல்லாம கதிர் பத்திய எல்லாமும் தெரிஞ்சிடுச்சி அவனோட உடலையும் கூட ரெக்கவர் பண்ணிட்டோம்... போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் ல இது கீளின் மர்டர்னு தான் வருது... நீங்க எக்ஸ்பட் பண்ணது எல்லாமே சரியா இருக்கு." என்றான் சக்தி.

சக்தியின் கூற்றிற்கு "நிச்சயம் சீக்கிரமே குணமாகிடுவேன்..." என்று கூறியவர். கதிரின் விஷயம் பேசவும் "அவனை தான் காப்பத்த முடியல. அவனோட ஆசை அங்க இருந்து அவங்க யாரும் வெளியேற கூடாதுன்னு ஆனா அதை பார்க்க அவனுக்கு கொடுத்து வைக்கல. அவன் உயிர கொடுத்து இதை மீட்கனும்னு இருக்கு." என்று வருத்தமாக பேசியவர் சிறிது யோசித்து "அந்த பொண்ணு அவங்க பெயர் ம் ஸ்டெல்லா அவங்க என்ன ஆணாங்க அவங்க தான் இந்த கேஸ் முடிவுக்கு வர முக்கிய காரணம்." என்றதும் .

வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்ட சக்தி "நவ் ஷீ இஸ் பைன் சார்... பட் கதிர் பாடி கிடைச்ச 3 டேஸ் அவங்க நினைவு இல்லாம ஆஸ்பிட்டல்ல இருந்தாங்க... அதை டைஜிஸ்ட் பண்ண முடியல... மூச்சிவிட சிரமபட்டு சாவு வரைக்கும் போயிட்டு வந்துட்டாங்க... நவ் ஷீ இஸ் நார்மல் கதிரோட அம்மாவை அவங்க கூடவே அழைச்சிட்டு வந்துட்டாங்க." என்றான்.

"கிரேட் குட் ஜாப் பட் கதிரோட இழப்பு அந்த பொண்ணை ரொம்ப பாதிச்சி இருக்கும்... அவங்க அம்மாவுக்கும் யாரும் இல்லை கெட்டதுலையும் ஒரு நல்ல விஷயம் வயசான காலத்துல அவங்களுக்கு ஒரு துணை கிடைச்சி இருக்கு. ஆனா காலம் ஸ்டெல்லா மனசை மாத்தி நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்கனும்..." என்று பெரூமூச்சை ஒன்றை வெளியேற்றினார் மாணிக்கம்.

"அந்நேரம் பார்த்து மஞ்சுவும் ஆதியும் உள்ளே வர இவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் கேட்கவும் "இவங்கதான் பழைசை பேசுறேன்னு போஸீஸ் மிலிட்டரி கேஸ் கோர்ட்டு வக்கில்னு பேசறாங்கன்னு எரிச்சல்ல வெளியே எழுந்து போனா... நீயுமாடா!?" என்ற ஆதி மகனை பார்த்து "இப்போதான் எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் சகஜமா பேசுறாங்க மஞ்சு அண்ணி உங்களுக்கு அதுவும் பொருக்கலையா இங்கேயும் அந்த விஷயத்தை பேசனுமா?" என்று சக்தியையும் பார்த்து சொல்ல

"நல்லா சொல்லுங்க அண்ணி உயிர் போய் உயிர் வந்துச்சி.... இவருக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு இருக்கு அவளுக்கு ஒரு நல்லதை செய்து பாக்கலை எற்கனவே இந்த பிரச்சனையிலதான் கவியோட வாழ்க்கையே போக இருந்தது." என்று கண்ணை கலங்க

"மஞ்சுளா என்னமா நீ கவி தியா ரெண்டு பேரேயும் பத்தி அவன் நினைக்காமையா இருந்து இருப்பான் அவன் செய்ததுக்கும் காரணம் இருக்கதானே செஞ்சுது..." என்று ராஜராமன் பேச

மஞ்சுவின் கைகளை சமதானமாக பற்றிய மாணிக்கம் கண்களை மூடி "அப்படியெல்லாம் என்னிடம் இருந்து உன்னை பிரிக்க முடியாது மஞ்சுமா... நீ செய்ற சமையலை சாப்பிட்டு ஆயுள் தண்டைனைய அனுபவிக்கனும்னு ஆண்டவன் எழுதி வைச்சதை மாத்த முடியுமா?" என்று கூறியதும் ஏதோ மிகவும் தீவிரமாக பேச போகிறார் என்று பார்த்துக் தொண்டு இருந்தவர்கள் இதை கேட்டதும் கொள்ளென்று சிரித்து விட்டனர்.

அதுவரை அழுகையுடன் இருந்த மஞ்சுவும் சிரித்துவிட சத்தி சிரப்புடனே மச்சா அம்மா டோட்டலா என்னையும் டேமேஜ் பண்றாங்க சார் வேற நல்ல மூட் இருக்காரு மஞ்சு மேம் பார்க்குற பார்வையே சரியில்ல எதுனாலும் நீ வாங்கிக்கிட்டு வா நான் வெளியே போறேன் என்று சக்தி அவன் காதில் ரகசியம் பேச, சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் ஒரு மாதிரியாக இளித்து வைத்தான் கேஷவ்.

சக்தி மாணிக்கத்திடம் "சார் அப்போ நான் கிளம்புறேன் மீதி டீட்டயல்ஸ் கேதர் பண்ணிட்டு சொல்றேன்." என்றவன் ராஜராமிடமும் கூறிக்கொண்டு மஞ்சுவிடமும் ஆதியிடமும் விடைபெற்று வெளியில் செல்ல "வைட் பண்ணுடா நானும் வறேன்..." என்ற கேஷவ் "அம்மா நாளை மறுநாள் ஒரு முக்கியமான பங்கஷன் இருக்கு மறந்துடாதிங்க." என்றவன் மஞ்சுவிடமும் மாணிக்கத்திடமும் திரும்பி "அத்த மாமா நான் தியாவையும் பங்ஷனுக்கு கூட்டிட்டு போகட்டுமா?" என கேட்க

அதற்கு மஞ்சு சரி என்று கூறவும் மாணிக்கம் "கூட்டிட்டு போயிட்டு வா கேஷவ்." என்று கூறவும் சரி என்று தலையை ஆட்டியவன் தந்தையிடம் திரும்பி "அப்பா நீங்க..." என்று இழுத்து நிற்க என்ன என்பது போல் பார்த்தார் ராஜாராமன்

அவர் பார்வையை பார்த்த மாணிக்கம் "டேய் மாப்பிள்ளைய இப்படியா மிரட்டி வைப்ப? உங்ககிட்ட பேசவே பயப்புடுறாறே டா?" என்று நண்பனை முறைத்து பார்க்க

"டேய் இன்னுமா இந்த உலகம் இதை நம்புது?" என்றவர் "ஆளை பார்த்து எடை போடாதடா. அவனை பாரு செய்யாதேன்னா அதைதான் செஞ்சிட்டு வருவான் இப்பவும் அப்படித்தான் இருக்கான்." என்றவர் "கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இவன் அவனோட இஷ்டத்துக்கு இருந்துட்டு என் பேச்சை கேக்காம சண்டித்தனம் பண்ணிட்டு திரிஞ்சது நான் இவனை அடக்குறேன்னு பெயரை கொடுத்திடுச்சி." என்று தலையை ஆட்டி சொல்ல அங்கே சிரிப்பலை எழும்பியது...

தந்தையின் பேச்சில் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தவன். எதுவும் கூறாமல் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி அம்மாவை பார்த்து கண்ணடித்து சிரிக்க "பார்த்தியா பாரத்தியா இவனுக்கு அவளும் கூட்டு... இதுல நான் மிரட்டுறேன் உருட்டுறேன்னு என் மேல குறை சொல்றது..." என்றவர் "சரி சரி எத்தனை மணிக்கு பங்கஷன்? எல்லாம் கரெக்ட்டா உங்க அம்மா கிட்ட சொல்லிடு... இன்னுமும் கண்ணாடி முன்ன நின்னா ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகுது..." என்று மனைவியையும் வம்புக்கு இழுக்கவும் மறக்கவில்லை

கணவரின் கிண்டலை பார்த்த ஆதி என்ன? என்று பார்வையாலையே கணவரை முறைக்க "பார்த்தியா இவங்க எனக்கு அடங்குற மாதிரியா இருக்கு?" என்று நண்பரிடத்தில் கூறி சிரிக்க அங்கு சுழ்நிலையே அழகாய் மாறியது மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றவன் சக்தியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் விட்டுவிட்டு கவியை காண சென்றான்.

கையில் புத்தகத்துடன் மொட்டை மாடியில் இருந்த கவி உத்ராவின் எண்ணுக்கு அழைத்தாள். அவள் எடுத்ததும் "ஹாய் பேபி என்ன பண்ற பேபி?" என்றாள்.

கோவம் கொண்ட குரலில் "ஹலோ அண்ணி இன்னைக்கு வறேன் சொன்னிங்க... இன்னும் வரவே இல்ல." என்று குற்றபத்திரிக்கை வாசித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா.

அவள் கோபத்தை குறைக்க செல்லக்குரலாக "பேபி நான் ரெடி ஆயிட்டேன் டா பட் இந்த தியா இருக்காலே தியா அவ ஏதோ முக்கியாமன பிரெண்ட் பார்த்டேன்னு கிளம்பி போயிட்டா உங்க அண்ணா வேற ஹாஸ்பிட்டல் இருந்து கிளம்பிட்டாராம் எப்பவேனா இங்க வந்துடுவாரு டா அதான் வரமுடியல." என்று தன் பக்க விளக்கத்தை கொடுக்க

சிணுங்கலாக "ம் போங்க உங்க மேல கோவமாதான் இருந்தேன்... இருந்தாலும் ஓகே.. எங்க அண்ணா பேரை சொல்லி தப்பிச்சிட்டிங்க அதனால உங்களை சரின்னு விடுறேன்..." என்று பெரிய மனதுடன் மன்னித்து விட.

ம் என்று ஒரு நொடிப்புடன் "ரொம்ப தான் பெரிய மனசு..." என்று நக்கலுடன் கூறிய கவி "நாளைக்கு ஷார்ப்பா 11ஓ கிளாக் ரெடியா இரு நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்..." என்றாள்.

"நாளைக்கா!!!?" என்று குரலில் அதிரவை காட்டியவள் "எதுக்கு அண்ணி நீங்கதான் என்னை வெளியே வரவேண்டாம்னு சொல்லி இருந்திங்க நீங்களே கூப்பிட்டு போறிங்க!?" என்றாள் யோசனையாக

"அதை எல்லாம் நீ ஏன் யோசிக்கிற பேபி அதுக்கு எல்லாம் பக்கா பிளான் இருக்கு நீ நான் சொல்றத மட்டும் செய் கூடவே ஒரு அரைமெண்டல் இருக்கான் ல அவனையும் கிளம்ப சொல்லு..." என்று கூற

கவி கோபியை சொன்ன விதத்தில் உத்ரா கிளுக் என்று சிரித்து விட்டு தன்னை நிதானபடுத்தி விளையாட்டை கைவிட்டவளாக தன் மனதில் ஒரு வாரமாக இருக்கும் விஷயத்தை கவியிடம் கேட்க ஆரப்மித்தாள். "அண்ணி அண்ணாங்க என்னை பார்த்ததும் எப்படி பீல் பண்ணுவாங்கன்னு பாக்க ரொம்ப எக்ஸைட்மெண்டாவும் இருக்கு ஒரு சமயம் என்ன நடக்குமோன்னு பயமாவும் இருக்கு." என்றிட

"வைய் டார்லி.... நீ ஃபிரியா இரு... சரியா இன்னும் எதுவும் நடக்கலை... நடக்காததை நினைச்சி சங்கடமும் படாத, நடந்ததை நினைச்சி வருத்தமும் படாத... புரியதா?" என்று என்று அழுத்தம் கொடுத்து சொல்லவும் கொஞ்சம் தெளிந்து இருக்க வேண்டும் என்று ஊகித்த கவி

"கோபி இருக்கானா?" என்றதும் "ம் இருக்கார்..." என்றவள் அவனை தேடி சமயலறை சென்றாள் அவன் சமயலறையில் காய்களை நறுக்கவும் அவனிடம் நீட்டி "கவி அண்ணி..." என்றாள்.

காயை நறுக்கி கொண்டு இருந்தவன் என்ன என்று பார்வையால் கேட்க

"பேசனுமாம்." என்று கூற

கை வேலயாய் இருந்தவன் கையை துடைத்தபடி போனை வாங்கி அவளிடம் பேசியவன் "சரி சரி வறேன் மறக்கல சித்துவா அவனை எப்படி கூட்டிட்டு வர்ரது?" என்றதும் அவள் என்ன சொன்னாலோ முகம் கொஞ்சம் வெளிரியது... "இது எப்படி உனக்கு?" என்று நிறுத்தியவன் மேற்கொண்டு பேசாமல் "சரி சரி ஏகத்திக்கும் திட்டாத வறேன் நீயே சொல்ல வேண்டியது தானே? என்னையையே போட்டு நடுவுல பந்தாடுங்க... போங்கடா நீங்களும் உங்க பிரெண்ட்ஷிப்பும்..." என்று சிறிது கடுப்புடன் வைத்தான்.

"என்ன சொன்னாங்க?" என்றாள் அவன் முகம் பார்த்து

"ம் அவ சொல்லுவா சுரக்காய்க்கு உப்பு இல்லன்னு அவளுக்கும் வேலை இல்லை அவ தங்கைக்ககும் வேலை இல்லை என்னை போட்டு பாடுபடுத்தறதே இவங்க வேலை." என்றவன் "நடுவுல நான் இருக்கேன் நான் இருக்கேன்னு ஒருத்தன் என்னை உயிரோட சாகடிப்பான்..." என்றான் எரிச்சலாக.

"அது யாரு கோபி உங்களையே கடுப்பு ஏத்தரது?" என்று மிகவும் ஆர்வமாக கேட்க

"ம் என் உயிர எடுக்குற நண்பன்..." என்று நெஞ்சில் அடித்து சொன்ன வித்ததில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட அவளை முறைத்து பார்க்கவும் "கவி அண்ணி சொல்றது போல நீங்க அரைமெண்டல் ஆகிட்டிங்க கூடிய சீக்கிரமே முழு மெண்டல் அந்தஸ்த்துக்கு உயர வாழ்த்துக்கள்..." என்றவள் குடு குடுவென அந்த இடத்தை விட்டு ஒட ஒரு நிமிடம் அவள் சொன்னது புரியாது பார்த்தவன் அது புரிந்த அடுத்த நிமிடமே அவளை பின் இருந்து துரத்துவதை போல் ஒடிய கோபியை பார்த்து சிரித்தபடியே அவளின் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள்.

மொட்டை மாடியில் அமர்ந்து உத்ராவுடனும் கோபியுடன் பேசிக்கொண்டு இருந்தவள் பேச்சு சுவரஸ்சியத்தில் கேஷவின் கார் காம்பவுண்ட் கேட்டை தாண்டி உள்ளே வந்ததை கவனிக்காமல் பேசிக்கொண்டே இருக்க அவளை தேடியபடியே "பாரு... பாரு..." என அழைத்துக் கொண்டே வந்தவன் எங்கும் கவி இல்லாததால் மாடியில் இருக்க வாய்ப்புண்டு என நினைத்து மொட்டை மாடிக்கு அவளின் பெயரை அழைத்தபடி இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறியவனின் மனது வினாடிக்கும் அதிகமாய் துடித்தது. அவனின் அரவம் கேட்கவும் கோபியிடம் பேசி உடனே வைத்தவள் அவசர அவசரமாக திரும்பி "வா.... வாங்க..." என்று திணறினாள்.

"பாரு என்ன... என்ன அச்சி..." என்று உடல் நிலை சரியில்லையோ என்று நினைத்தவன் அவளின் நெற்றியின் மேல் கை வைக்க

"ஒன்னும் இல்லைங்க..." என்று கூறி கண்களை மூடிந்திறந்து சிரத்தவள். "உங்க குரல் ரொம்ப சத்தமா கேட்கவும் கொஞ்சம் அதிர்ந்துட்டேன் ரிலாக்ஸ் பா... படிக்க தான் மாடிக்கு வந்தேன் ரொம்ப அமைதியான இடத்துல அதிக சத்தம் கேட்டதும் அந்த மாதிரி படபடப்பா வந்துடுஞ்சி..." என்று மாற்றி கூற

கேஷவ் "சாரி சாரிடா உன்னை கீழே எல்லாம் தேடினேன் வீட்டுல யாரும் இல்லன்னுதும் எனக்கு பயமா ஆகிடுச்சி..." என்றிட

"பச் உங்ளுக்கு எதிரியா இருந்த சாருகேஷ் அண்ணா தான் இப்போ பிரெண்ட் ஆகிட்டாரே அப்பவோட எதிரியும் ஜெயில்ல இருக்கான் எதை நினைச்சி நீங்க பயந்திங்க?" என்றாள்.

"யாரை நினைஞ்சும் பயமில்லை டி எனக்கு உன்னை உன்னை நினைஞ்சி தான் பயம் இந்த அடாவடி ஆட்டோ பாம் சுவர் ஏறி குதிச்சி வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்க போயிட்டாலோன்னு..." என்று அவளின் காதை பிடித்தபடியே கூற

"ஆ... வலிக்குது விடுங்க..." என்றபோதும் விடாமல் பிடித்துக்கொண்டே இருக்க "விடுங்க விடு விடுடா..." என்று கத்தவுமே போனால் போகிறது என்பது போல் விட்டவன் அவளின் தோல் மேல் கையிட்டபடியே "எப்படி ஆட்டோபாம் சுவர் ஏறி குதிஞ்சி இந்த வேலையெல்லாம் பண்ண?" என்று சந்தேகமாக கேட்க

"உங்களுக்கு எப்படி தெரியும் யார் சொன்னாங்க?" என்றாள் பரிதவித்த விழிகளுடன்.

"இது நாள் வரை என்னை காயவிட்டதுக்கு எனக்குகொடுக்க வேண்டியதை வட்டியும் முதலுமா கொடு சொல்றேன்..." என்று அவன் கரார் பேர் வழியாய் நிற்க

"நீங்க சொல்லவே வேண்டாம் போங்க கொடுக்க முடியாது..." என்று கவியும் திரும்பி நிற்க

"நீ கொடுக்குற வரையும் என்கிட்ட இருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது ஆட்டோ பாம்..." என்று அவளை இழுத்து அருகில் நிறுத்த அவளை இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சில் மோதியவள் சட்டென விலகி "என்ன காரியம் பண்றிங்க சுத்தி பாருங்க ஓபன் பிளேஸ்..." என்று அவனை பார்த்து சிணுங்கியவள் "எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததும் தறேன் இப்போ சொல்லுங்க..." என்றாள் அவனின் கைகளை பிடித்து கல்மேடையில் அமர்ந்தபடி

"ராஜீ ஷீலா ஹாஸ்பிட்டல் வந்து இருந்தாங்க உன்னை பத்தி பேசவும் உன் வீரதீர பாரகரமத்தை எல்லாம் புட்டுபுட்டு வைச்சிட்டாங்க..." என்றான்..

"அச்சோ அம்மா அப்பாவுங்கு விஷயம் தெரியுமா?" என்று பதட்டத்துடன் கேட்க

"இப்போ அவங்க வரையும் விஷயம் போகல... இனியும் விஷயம் போகாம இருக்கனுமுன்னா நீ நடக்கரதை பொறுத்துதான் இருக்கு பாரு டியர்..." என்று அவள் இதழ்களை ஆர்வமாக பார்க்க

அவனின் கண்களை மூடியவள் "ரொம்பதான் இன்னைக்கு ஏதேதோ பேசறிங்க..." என்றவள் அவன் தோளில் வாகாய் சாய்ந்துகொண்டதும். கேஷவிற்கு அப்படி ஒரு நிம்மதி இது நாள் வரையில் பிரச்சனை பிரச்சனை என்று அதன் பின்னயே சுற்றி சுற்றி ஒடிக்கொண்டு இருந்தவன் இன்று நிம்மதியாய் இருக்க மனைவியை பார்க்க கவி அமைதியாய் யோசித்து கொண்டு இருந்தாள் அவள் முகத்தில் ஏதோ யோசனைகள் ஓடுவதை தெரிந்தவன் தன்னை நோக்கி அவளின் பார்வையை திரும்பி என்ன என்பது போல் கேட்க

"ஏங்க நீங்க சித்துவ பத்தி என்ன நினைக்கிறிங்க?" என்றாள்.

"இப்போ இதை ஏன் கேக்குற?" என்று கேஷவ் கேட்க "பச் சொல்லுங்க நீங்க என்ன நினைக்கிறிங்க?" என்பதற்கு "குட் அண்ட் ஸ்மார்ட் ஹீ இஸ் வேரி டேலண்டட் பர்சன் பேமலி அப்ரோஞ் நல்லா இருக்கும்..." என்று அடுக்கிக்கொண்டே போக "சித்து தியாவை லவ் பண்றான்..." என்றாள் பட்டென

"வாட்" என்று கூறியவன். "உன்கிட்ட சொன்னானா?" என்றான் கேஷவ்.

"இல்லை" என்று தலையை ஆட்டியவள் "நானே கண்டுபிடிச்சேன் ரெண்டு பேரூம் முகம் கொடுத்து பேசவே மாட்டாங்க இப்போ அவன் ஆர்வமா பாக்குறான்... இவ எதையோ பறிகொடுத்தவ மாதிரியே பாக்குறா... எனக்கு இதுல என்னவோ இருக்குன்னு தோனுது..." என்று கணவனிடம் கூறிவிட

"இருக்கலாம் பாரு..." என்று அன்னைக்கு மாணிக்கத்தினை தாக்க வந்ததை கூறி சித்துவின் கோபத்தையும் கூறி "எனக்கும் இப்போ கொஞ்சம் டவுட்டா இருக்கு." என்றவன் "அவன்கிட்ட பேசலாமா?" என கேட்க

"ம் பேசனும்ங்க பேசியே ஆகனும்..." என்றவளின் குரல் தீவிரமாக ஒலித்தது.

தொடரும்...

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 53
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN