காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 54

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"பேசனுங்க பேசியே ஆகனும்" என்றவளின் குரல் தீவிரமாக இந்த காதல் பிரச்சனைக்கு தீர்வு தெரிந்தே ஆகவேண்டும் என்ற ரகத்தில் இருக்க ஒலித்து இருந்தது.

அவளின் குரலில் தெரிந்த தீவிரத்தை கண்டு கண்களை மூடி "ஏன் பாரு அவங்க கல்யாணம் பண்றது உனக்கு" என்று ஆரம்பிக்கவும் அவனை முறைத்து பார்த்தவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அறிந்தவள் போல் வெடுக்கென அவனிடம் இருந்து விலகி அமர்ந்து "என்ன.. என்ன... எனக்கு பிடிக்கலையான்னு கேக்குறிங்களா... ?" என்று கோவமாக கேட்க

அவள் விலகி அமர்ந்த அதிர்ச்சி இருந்தும் கொஞ்சமும் முக மாற்றமின்றி புன்னகை முகமாகவே இருந்தவன் விலகியவளின் இடையில் கையிட்டு "இப்படியே உட்கார்ந்து பேசலாம் டி ஆட்டோபாம் தப்பில்ல" என்று அருகில் இழுத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு "அவங்க கல்யாணம் பண்றது உனக்கு பிடிச்சி இருக்கான்னு கேட்க வந்தேன்... அதுக்குள்ள அவசரகுடுக்கை மாதிரி கோவம் மூக்கு மேல வந்து என்னமா சிவப்பாகுது முகம்..." என்று செல்லமாக அவளின் கன்னத்தில் கடித்து முத்தம் வைக்க அந்த முத்தத்தில் கிறங்கியவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து "சாரிங்க நா தப்பா புரிஞ்சிக்கிட்டு கோவமா பேசிட்டேன்" என்றிட அவளின் கழுத்தில் முகம் வைத்து அந்த நிமிடத்தை ரசித்தபடி எதுவும் பேசாத இப்போ இந்த நிமிஷத்தை மட்டும் ரசி வேற எதுவும் சொல்லாதடி ஆட்டோபாம்" என்று கண்களை மூடி அவளுள் கரைந்து போனான்.

இரவு, மணி ஏழை நெருங்கி கொண்டிருக்க நண்பர்களுடன் பர்த்டே டீரிட்டுக்காக ரெஸ்ட்டாரண்ட் வந்திருந்த தியா நேரம் சென்றது தெரியாமல் வெகுநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்து மகிழ்ந்து இருக்க.ஏதோ நினைவு வந்தவளாக மணியை பார்க்க தலையில் தட்டிக்கொண்டவள் "சாரி கைஸ் ரொம்ப லேட் ஆகிடுச்சி நான் கிளம்புறேன்" என்று பேகை எடுத்துக்கொண்டு இடத்தை விட்டு எழுந்து நிற்க

"ஹேய் என்ன டி எப்பவோ ஒரு நாள் தான் இது எல்லாம் என்ஜாய் பண்ண முடியும்... இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போ தியா" என்று தோழி ஒருத்தி கையை பிடித்து அவளை இருத்திக் கொள்ளவும்

"நோ பேபி ஆல்ரெடி லேட் அயிடுச்சி டீ..... இதுக்கு மேல இருக்க முடியாது பேபி" என்று கிளம்ப எத்தனிக்க

"பீளீஸ் யா இன்னும் கொஞ்ச நேரம்" என்ற தோழியின் வற்புறுத்தலை தொடர்ந்து

"நீங்க எல்லாம் கம்பல் பண்ணதுக்காக தான் கவி என்ன அனுப்பி விட்டா அவ வேற வீட்டுல தனியா இருப்பா... மாமா வந்தாரான்னு கூட தெரியல ரொம்ப ப்ராப்ளத்துக்கு அப்புறம் தான் ஏதோ கொஞ்சம் நிம்மதியா பீல் பண்றேன்... தெங்க்ஸ் கைஸ்" என்று அனைவரையும் பார்த்து கூறியவள் "நான் கிளம்புறேன் டி பர்த்தடே பேபி ஸ்டே ப்ளஸ் டீ" என்று கூறி அவளை வாழ்த்தி ஹேன்ட் பேக்கை எடுத்துக்கொண்டவள் டேபுளின் மேல் வைத்திருந்த போனை எடுக்க மறந்து போனாள். தோழிகளும் பேச்சும் அரட்டையும் என்று சுவரஸ்மாக சென்றதால் அவர்களும் கவனிக்க தவறி இருந்தனர்.

மெயின் ரோட்டில் இருந்து பத்து நிமிட பயணத்திற்கு பிறகு தான் விதி சதி செய்யவே ஆரம்பித்தது அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி ஆப் ஆகி விட சிறிது நேர போராட்டத்திற்கு பின் இது ஆகிற வேலை இல்லை என்று நினைத்தவள் கைபையில் இருந்து மொபைலை தேட அது இல்லை என்றுதும் பதட்டமாகி போய்விட நண்பர்களிடம் பேசியதில் மொபைலை எடுக்க தவறியதை நினைத்து தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.

பக்கத்தில் பார்க்க வாகன இறைச்சல் ஒரளவு இருக்க கொஞ்சம் தைரியமும் இருந்தது... சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இருட்டு கொஞ்சம் அச்சம் கொடுக்க திரும்பி நண்பர்களிடமும் போக முடியாமல் வீட்டிற்கும் போக முடியாமல் நடுவில் நின்றபடி கையை பிசைந்து கொண்டு இருந்தாள்.

சரி வண்டியை இங்கேயே ஓரமாய் விட்டுவிட்டு ஆட்டோவில் செல்லலாம் என்றாள் சமீபகாலமாக கண்ணில் படும் செய்திகள் யாவும் பயங்கரமாக இருக்க பஸ்ஸில் பயணம் மேற்கொள்வது என்று முடிவு எடுக்க சிறிது தூரம் நடந்து செல்ல ஒரு பேருந்து நிலையம் கண்ணில் பட அங்கே போய் நின்று கொண்டாள்.

இப்போது மணியை பார்க்க பெரிய முள் பதினொன்றை நெருங்கி இருந்தது. அவ்வளவாக வாகனங்கள் பயணிக்காத சாலை வேறு.... தான் நேரம் போனது தெரியாமல் இருந்ததால் தான் இந்த இடத்தில் மாட்டிக்கொண்டோம் என்று தன்னை தானே திட்டி கொண்டவள் அக்கம் பக்கம் பார்க்க ஆட்கள் அதிகம் இல்லை பக்கத்தில் இரண்டு பேர் மட்டும் பேருந்திற்காக காத்திருக்க அவர்களின் பார்வை மேயும் இடங்களை கவனித்த தியாவிற்கு பயத்தை கொடுத்தது.... நடந்தே வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தாலும் வீடு நடக்கும் தூரம் இல்லையே அருகே டெலிபோன் பூத் என்று பார்க்க எதுவும் கண்ணில் படவில்லை பயத்தில் யார் எண்ணும் அவளுக்கு நினைவுக்கு வருமா என்பது கூட அவளுக்கே தெரியவிலலை சில்லென்று அடித்த காற்றில் கூட தியாவிற்கு வியர்த்து வழிந்தது.

கடவுளே இங்க இருந்து எப்படியாவது வீட்டுக்கு போயிடனும் முருகா உன்னை கோடி முறை கும்பிடுறேன் உன் கோவிலுக்கு வந்து சூரை தேங்கா விடுறேன். என்னை எந்த சேதாரமுய் இல்லாம வீட்டுக்கு அனுப்பி வைச்சிடு தெய்வமே என்று வேண்டுதலுடனே கண்ணை இறுக்க மூடி நின்றிருந்தவளின் காதுகளில் பைக் சத்தம்வெகு அருகில் கேட்பது போல் இருக்க நடுங்கும் கால்களுடன் நின்றிருந்தவள் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க அவள் கண் முன்னே சித்து பைக்குடன் நின்றிருக்க அவன் ஏறு என்று சொல்வதற்கு முன் குடுகுடுவென வந்து அவள் ஏறி அமர்ந்த தோரணையில் சிரித்து விட்டவன் தலையை இடவலமாக ஆட்டி நைட்டு எட்டு மணி தான் ஆகுது உன்னை கிராஸ் பண்ணி அத்தனை வண்டி போகுது பக்கத்துல நிக்கரவனுங்க ஊதினா காத்துல பறந்து போறா மாதிரி இருக்கானுங்க அவனுங்கள பாத்து பயம் இருக்கு ஆனா வெளியே சண்டி ராணியாட்டம் சுத்திட்டு என்னை மிரட்டி உன் வேலை என்மேல ஏவி விட்டுக்கிட்டு இருக்க வேண்டியது என்று நினைத்து சிரித்தபடியே வண்டியை கிளப்பியவன். பக்கத்தில் இருந்த ஐஸ்கிரீம் பாலருக்கு வெளியே பக்கை நிறுத்தி இருக்க இங்க ஏன் நிறுத்துகிறான் என்ற கேள்வியுடனே இறங்கியவள் அவனையே பார்த்தாள்.

உன் கிட்ட பேசனும் உள்ள வா என்று அதிகாரமாக கூற அய்யா ரொம்பத்தான் அதிகாரம் தூள் பறக்குது என்று மனதில் அவனை கருவியபடியே பார்லருக்கு உள்ளே நுழைந்தாள் தியா.. காலியாக இருந்த டேபிள் அமர்ந்த சித்து அவளையும் கை காட்டி அமர சொல்லி இருந்தான்.

முகத்தை தூக்கி வைத்தபடி இருந்தவள் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள் அவளுக்கு கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது அவன் எப்படி அங்கு சரியான நேரத்தில் வந்தான் என்று தெரியாமல் வருகின்ற வழியெல்லாம் அதேயே யோசித்து கொண்டு வந்திந்திருந்தாள். அவனே வாய்திறந்து சொல்லுவான் என்று எதிர் பார்த்தவளுக்கு சித்து எதுவும் பேசாமல் வந்தது ஏமாற்றமாகவும் இருந்தது. சரி இங்கு அதை சொல்லுவான் என்று எதிர்பார்த்து இருந்தாள்.

இன்று இரவு தியாவை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த சித்து அவள் மொபைலுக்கு அழைக்க அது அவளின் தோழியிடம் இருக்க அவர்களிடம் விஷயத்தை கேட்டு அறிந்தவன் கவியின் எண்ணுக்கு அழைக்க கவி தன்னிடம் தியாவை பற்றிய விஷயத்தை மறைத்துவிட்டான் என்ற கடுப்பை மனதில் வைத்து அவனை வறு வறு என்று காரணமே இல்லாமல் வறுத்து கொட்டியவள் கூடவே தியா இன்னும் வீடு திரும்பவில்லை என்று கூற

அப்போதே கிளம்பி விட்டவள் இந்நேரம் வீட்டை அடைந்திருக்க வேண்டும் என்று யூகித்தவன் அவளை தேடி செல்ல வழியில் பேரூந்து நிலையத்தில் கண்களை இறுக்க மூடி நிற்கும் தியாவை பார்த்தும் முதலில் கோபம் வந்தாலும் அவள் செய்த செயலில் சிரிப்பை உதிர்த்து இருந்தான்.

அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்தவன் ஐஸ்கிரீம் பார்லரில் நிறுத்தி உள்ளே வந்து அமர்ந்து அவளையும் அமர சொல்லியவன் முகம் கொஞ்சம் கடுமைக்கு மாறி இருந்தது.

இவன் எதுக்கு இப்போ முகத்தை உர்ன்னு வைச்சிட்டு இருக்கான் ஏதாவது திட்டுவானோ என்று நினைத்தவள் என்ன என்பது போல் அவனை பார்த்தாள்.

"என்ன பார்வையாலையே கேள்வி கேக்குறியா?" என்று நக்கலாக கேட்டவனை பார்த்து லேசாக புன்னகை வந்தாலும் அவன் எதிரில் காட்டிக்கொள்ள கூடாது என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

"உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கேன்றதுனால என்னை பார்த்தா கேவலமா இருக்கா வது" என்றான் அழுத்தமான குரலில்

'ஏன் இப்படி கேக்குறான்... இது என்ன புது கேள்வி கேவலமானவனா!!!! அதுவும் என் சித்துவை போய் கேவலமானவானா நினைப்பேன்!!!' என்று அவனை உற்று நோக்கியவள் "பின்ன என்ன வது உன் பின்னாடியே சுத்தி வறேன் காதலை எப்படி எப்படியோ சொல்லிட்டு இருக்கேன்... ஆனா நீ என்ன வேணா பண்ணிக்கோடா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லன்றா மாதிரி அமைதியா இருக்க.... நான் சுவத்தால அடிச்ச பந்து மாதிரி ஆரம்பிச்ச இடத்துலேயே வந்து நிக்கிறேன்" என்றான் கோவமாய்

"இதுல என்" என்று அவள் ஆரம்பிக்கவும் "தயவுசெய்து அமைதியா இருந்துடு ஏற்கனவே பயங்கர கடுப்புல இருக்கேன் அறைஞ்சேன் வை பல்லு அத்தனையும் பறந்துடும் சும்ம போறவனை லவ்வ சொல்லி சுத்தி சுத்தி வந்துட்டு இப்போ என்னை சுத்தல்ல விடுற உன்னை" என்று கைகளை இறுக்கியவன்

"உனக்கு என்ன பிரச்சினைன்னு இன்னும் என்னல கண்டுபிடிக்க முடியலடி... நீயே உன் வாய தொறந்து சொல்லி தொலைக்கவும் மாட்டன்ற" என்று தலையை அழுந்த கோதியவன் 'ஆல்ரெடி பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சி அம்மா கேட்டை போட்டு நிப்பாட்டி வைச்சி இருக்காங்க எப்போ உடைச்சிக்கிட்டு வெளியே வருன்னு தெரியல' என்று மனதில் நினைத்தவன் 'இதுல இவ வைற ஏன் இப்படி பண்ற' என்று வருத்தினான்.

அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தால் அது தியா அல்லவே "இப்போ என்ன உங்களை என் பின்னால சுத்தி வாங்கன்னு சொன்னேனா உங்களுக்கு நான் ஒத்து வரமட்டேன்னு தானே சொல்லிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறமும் இங்க வந்து ஏன் பேசிட்டு இருக்கிங்க உங்களுக்கு நான் செட் ஆகாமட்டேன்னு தெரிஞ்சதுனாலதானே வேண்டான்னு சொல்லி உதறி விட்டிங்க இப்போ நீங்க வந்து காதல் அது இதுன்னு சொன்னவுடனே சரி சரின்னு தலையை ஆட்டி சம்மதிக்கனும்னு கனவு காணுறிங்க" என்று சற்று அழுத்தமாகவே கேட்க

"ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல... ஒட்டி ஒட்டி வந்துட்டு இப்போ வெட்டி விட்டு பேசிட்டு இருக்க நீ எது பேசினாலும் எப்பவும் போல சும்மாவே போவேன்னு இருக்காத" என்று சற்று காட்டமாகவே கூறியவன் "இங்க பாரு இன்னும் ஒரு வாரத்துல நீ உன் முடிவை சொல்ற இல்ல நான் சொல்ல மாட்டேன் டீ செஞ்சி காட்டிடுவேன்" என்றவன் அவளுக்கு ஆர்டர் செய்தது வரவும் அவளிடம் நகற்றி பார்வையால் எடுத்துக்கொள்ள கூறியவனை தீ பார்வையால் சுட்டவளை அழுத்தமாகவே எடுத்து சாப்பிடு என்று கூற முதலில் வேண்டா வெறுப்பாய் அதை சுவைக்க ஆரம்பித்தவள் முழுவதும் காலி செய்த பிறகே நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவளை சாப்பிடசொன்னவன் விழி அகற்றாமல் அவளையே பார்வையால் சுகித்துகொண்டு இருந்தவனுக்கு இடையில் கவியிடம் இருந்து கால் வர என்கூட தான் இருக்கா கவி பைக் ரிப்பேர் ஆள் கிட்ட சொல்லிட்டேன் நாளைக்கு காலைல கொண்டு வருவான் என்று தகவலை கூறியவன் அவளையே ரசித்து அமர்ந்து இருந்தான்.

அவன் பார்வையில் கண்ணம் சூடேற இனியும் அங்கு இருப்பது சரியில்லை என்று மனம் உறுத்த மீறினால் இதயத்தில் இருக்கும் காதல் அவளையும் அறியாமல் வெளிப்பட்டுவிடும் என்று பயந்தவள் முதலில் இடத்தை விட்டு எழுந்து கொள்ள அவளை சிரிப்புடனே பின் தொடர்ந்தவன் வரும் டி ஒரு நாள் கட்டாயம் வெளியே வரும் அப்போ பார் நான் என்ன பண்றேன்னு என்று மனதில் கூறியவன் வண்டியை கிளப்பி இருந்தான்.

மா.... அம்மா.... என்று அழைத்துக்கொண்டு வாட்சை கையில் கட்டியபடி கீழே இறங்கி வந்தவன் ஆதி சமையலறையில் இருப்பதை எட்டி பார்த்து அவர் அருகில் சென்று மா... சாருகேஷ் இரண்டு முறை கால் பண்ணிட்டான் நான் கிளம்புறேன் நீங்க அப்பாக்கூட வந்துடுங்க என்று கூறியபடியே வெளியேறியவனை சாப்பிட்டு போட என்று ஆதி அழைக்க அம்மா அயம் ஆல்ரெடி ரொம்ப லேட் மா அவன் வேற கால் மேல் கால் போட்டுக்கிட்டே இருக்கான் என்று தாயிடம் கூறிக்கொண்டு கூடத்திற்கு வர

கையில் தினசரியுடன் சோபாவில் அமர்ந்திருந்த ராஜாராமனை பார்த்தவன் அப்பா உங்களையும் அம்மாவையும் கார்த்திக் வந்து பிக்கப் பண்ணிக்குவான் உங்களுக்கு டைம் இருந்ததுன்னா கவியையும் தியாவையும் பிக்கப் பண்ணிக்கிங்க இல்ல சித்துக்கிட்ட சொல்றேன் அவன் கூட்டிட்டு வருவான் என்று கூற

பாக்குறேன் டா அப்படியும் லேட் ஆகுறாமாதிரி இருந்துச்சினா உனக்கு இன்பார்ம் பண்றேன் சித்துக்கிட்ட சொல்லிடு என்றவர் மறுபடி பேப்பரில் மூழ்க அவரிடமும் விடை பெற்றவன் வண்டியை கிளப்பியவன் சாலையில் புள்ளியாய் தேய்ந்து இருந்தான்.

வண்ண மலர்களையும் அலங்கார வேலைபாடுகளுடனும் அந்த விஸ்தாரமான பெரிய கட்டிடத்தில் கூட்டம் வந்து கொண்டிருந்தது. பெரிய மனிதர்களையும் தொழிலதிபர்களையும் ஒரு பக்கம் உள்ளடக்கியது என்றால் மற்றோரு பக்கம் குழந்தைகள் மகளிர் வயதானவர்கள் என்று நிறைந்து இருந்தது.

சாம்பல் நிற கோட்சூட்டுடனும் திருத்திய கேசமும் அடர்ந்த தாடியை வெட்டி பிரெஞ்ச் பியருடனும் கண்களில் உயிர்புடனும் முகத்தில் மகிழ்ச்சியுடனும் வந்தவர்களை வரவேற்றபடி தனது நண்பனின் வரவிற்காக காத்திருந்தான் சாருகேஷ். இதுநாள் வரையில் மனதில் இருந்த கவலைகளை மறந்து தனது ஆருயிர் நண்பனை கண்டுகொண்டதில் முன்னை காட்டிலும் சுறுசுறுப்புடனும் இருந்தது அவனுக்கு மேலும் கம்பீரத்தை கூட்டி இருந்தது. கேஷவை எதிர்பார்க்க அவன் வரவில்லை என்றதும் தன் கையில் இருந்த பேசியில் எண்களை தட்டி காதில் பொருத்தியவனுக்கு நண்பனுக்கு லைன் கிடைக்காமல் போக நேரே கார்த்திக்கின் எண்களை தொடர்பு கொண்டான்.

முதல் அழைப்பிலேயே எடுத்து காதில் பொருத்திய கார்த்திக் ஹலோ சொல்லு சாருகேஷ் என்றிட.

ஆங்....கார்த்திக் அண்ணா இன்னும் கேஷவ் வரலை அவனுக்கு லைன் போகலை அதான் அவன் கிளம்பிட்டானன்னு கேக்க கால் பண்ணேன் என்று கூற.

கேஷவ் கிளம்பிட்டான் சாருகேஷ் அங்கதான் வந்துட்டு இருப்பான். ஒருவேலை டிராப்பிக்ல மாட்டி இருக்காலாம் என்றதும்.

சரி ணா அவனுக்காக தான் வைட் பண்றேன் நீங்களும் மறக்காம வந்துடுங்க என்று கூற நான் ராஜாராம் சாரையும் ஆண்டியையும் பிக்கப் பண்ணிட்டு வந்துடுறேன் என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே அந்த வளாகத்தினுள் கேஷவின் கார் நுழைவதை கண்டுகொண்டவன் அண்ணா கேஷவ் வந்துட்டான் நீங்க பாத்து வாங்க என்று கூறி வந்தவன் நண்பனை வரவேற்க முன்னேறினான்.

மச்சி வெல்கம் டா என்று அவனை அணைத்து வரவேற்று உள்ளே அழைத்து வர அங்கே அவனுக்கு முன்னரே தேவராஜின் பக்கத்தில் நிர்மலும் அஸ்வினும் அமர்ந்திருந்தனர்.

உள்ளே வந்த சாருகேஷ் பேசியபடியே கேஷவை தேவராஜின் அருகே அழைத்து வந்து நிற்க அவர்களை பார்த்து தயக்கத்துடன் எழுந்து நின்ற தேவராஜினை பார்தது கேஷவ் இது தேவா தேவராஜ் என்று அறிமுகப்படுத்த.

ஹா... ஹா.... தேவராஜை நல்லா தெரியுமே என்று அவனுக்கு கை குலுக்கியபடி முகமன்னாக புன்னகையை உதிர்க்க சற்று சங்கடத்துடன் நின்றிருந்த தேவராஜை பார்த்த சாருகேஷ் கேஷவ் இவரை உனக்கு தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் பட் இவன் நான் சொல்லி தான் அந்த தப்பை செய்தான் என்று நண்பனை தவறாக எண்ணிவிட கூடாதே என்று விளக்கம் கொடுத்தவன்.

தன் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் விதமாக கேஷவ் தப்பு எல்லாம் என் மேல தான் தேவா எந்த தப்பும் பண்ணல அவன் பண்ணதுக்கு எல்லாம் நான் தான் காரணம் நம்பிக்கை துரோகம் பழிவாங்குறது இது எல்லாம் வேண்ணானு தான் சொன்னான் ஆனா நான் தான் அவனை ஃபோர்ஸ் பண்ணி செய்ய வைச்சேன்... அதுக்காக நான் உன்கிட்ட சாரி கேக்குறேன் என்று கூறி

மன்னிப்பை வேண்ட அதுவரை அமைதியாய் இருந்த கேஷவ்

எனக்கு எல்லாம் தெரியும் டா தெரிஞ்சி தானே எதுவும் செய்யாம அமைதியா இருந்தேன்... விடு டா தேவாவை நான் வாட்ச் பண்ண வரையிலும் எனகிட்ட மட்டும் தான் அவர் வேலையை காட்டி இருக்கார் அப்பவே புரிஞ்சிடுச்சி உனக்கும் அவருக்கும் இருக்க பிரெண்ட்ஷிப்போட ஆழம். தப்புன்னு தெரிஞ்சும் உனக்காக செய்து இருக்கார் இதுல அவர் வியாபரமும் போகும் அவர் நேமும் ஸ்பாயில் ஆகுன்று தெரிஞ்சும் நடந்து இருக்கார்.... கிரேட் தேவா.... என்று தயக்கத்துடன் இருந்த தேவராஜின் கையை பற்றி குலுக்கிய கேஷவ். பிரெங்கா சொல்றேன் எனக்கு எந்த கோவமும் உங்க மேல இல்லை தேவா என்றவன் உங்களை தேவான்னு கூம்பிடலாம்ல என்று கேட்க

ஓ.... தாரளாமா என்றவன் தன் தரப்பிலும் அவனிடம் மன்னிப்பை வேண்ட டேய் ஏண்டா இப்படி படுத்துறிங்க பங்ஷன் பண்ண வந்திங்களா இல்ல என்கிட்ட மாத்தி மாத்தி மன்னிப்பு கேக்க வந்திங்களா முடியலடா என்று அலுப்பாய் கூற நண்பர்கள் இருவரும் சிரித்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் பேசி சிரிப்பதை பார்த்துக்கொண்டு இருந்த நிர்மலுக்கு தான் பயபந்து தொண்டைக்கும் வயிற்றிற்கும் உருண்டு கொண்டு இருந்தது. மனதிற்கு ஏனோ இன்று பெரியதாய் ஒன்று நிகழ இருப்பது போல் தோன்றியது பக்கத்தில் இருந்த அஷ்வின் நண்பனின் முகம் போன போக்கை பார்த்து ஏண்டா இன்னைக்கும் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி முகத்தை உர்ன்னு வைச்சிக்கிட்டு இருக்க என்று கிண்டல் செய்ய அவனை கடுப்புடன் பார்த்தவன் டேய் பொண்ணுங்க மேல மட்டும் கண்ணை வைச்சிக்கிட்டு உட்காரமா சுத்தி என்ன நடக்கதுன்னு பாரு எங்க அண்ண பக்கத்துல அந்த கேஷவ் நின்னு சிரிச்சி பேசிக்கிட்டு இருக்கான் என்றதும் எட்டி நண்பனின் அருகில் இருந்த கேஷவை பார்த்தவன்.

டேய் இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று கூற

இவன் தான்டா கேஷவ் உத்ராவ ஏமாத்தினதா நினைச்சது இவனை தான் என்று கூறவும்

அப்போதுதான் நியபாகம் வந்தவனாக ஹோ.... அந்த ரசகுல்லா கூட டூ த்ரி டைம்ஸ் பாத்து இருக்கேன் டா சரி அவன் இருந்த என்னடா உனக்கு... எப்படியோ விஷயம் அவனுகளுக்கு தெரியபோறது இல்லை இதுல ஏண்டா நீயும் பயந்து கூட இருக்கரவன் உயிரையும் வாங்குர என்று அடிக்குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் திட்டிவிட்டு இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு இருந்தேன் நகை கடை முதலாளின்னு எங்க அப்பனுங்கு இனிவிடேசன அனுப்பி தொலைஞ்சி அவன் கிட்ட நான் மாட்டி இங்க வந்து நிக்கிறேன் என்று சலித்துக் கொண்டவனின் பார்வையை இளமை கொண்ட கன்னிகள் இருக்கும் இடங்களுக்கு தாவியது.

ஏண்டா சொல்ல மாட்ட என்று சலித்துக் கொண்டவன் அவன் பார்வை செல்லும் இடத்தை பார்த்து அடப்பாவி எவ்வளவு கூலா வந்த வேலைய பாக்குறான் இவன் கூட பழகுனதுக்கு பயந்தே சாகனும் போல இருக்கே இவ்வளவு விஷயம் தெரிஞ்சிடுச்சி யார் கண்டா அவ இவனால தான் செத்தான்ற விஷயமும் எப்படியாவது தெரிஞ்சிட்டா அதானே பயப்புடுறேன் மூதேவி எதுக்கும் பயப்படாம எப்படி ரவுண்டு கட்டி ஜொல்லுவிடுறான் என்று அவனை மனதில் கடிந்து கொண்டவன்

அடேய் எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா இங்க வந்து உட்கார இந்த டிரஸ்ட் ல இருக்கவங்க மருத்துவம் பாக்குறதே எங்க ஹாஸ்பிட்டல் மூலமாதானே நான் வரவில்லைனாலும் தேவா சும்மா இருப்பானா ஏன் வரல எதுக்கு வரல என்ன வேலைன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு தொலைப்பான் அப்புறம் நான் உளறனும் தேவையா எனக்கு என்று கேள்வியை எழுப்ப

பார்வையை இவன் புறம் திறப்பாமலே பேசாம உங்க அண்ணனை டைவர்ஸ் பண்ணிடு மச்சி உன்னை போய் கேள்வி கேக்குறான் அப்படி பட்ட அண்ணனனே உனக்கு வேண்டாம் என்று கூற

இவன் என்ன பைத்தியமா என்று பார்த்த நிர்மலை கண்ணடித்து விட்டு மாப்ள பயந்தா நாம நினைச்சதை பண்ண முடியாது மச்சி நோ டென்சன் லெட்ஸ் என்ஜாய் மாப்ள ஆயிரம் பட்சிங்க உட்கார்ந்து இருக்கு இதுல ஒன்னாவது நமக்கு தேறுமான்னு பாக்கலாம் என்று காரியத்தில் கண்ணாய் இருக்க

அவனை முறைத்தவன் நண்பனையும் அண்ணனையும் மனதில் கருவியபடி அமர்ந்து இருந்தான்.

கேஷவின் பெற்றவர்களும் வர அவர்களையும் வரவேற்ற சாருகேஷ் இருக்கைகளில் அமரவைத்தான். கேஷவிடம் கவியை பற்றி கேட்க கவியையும தியாவையும் சித்து அழைத்து வருவதாக கூறியவன் சாருகேஷுடன் இணைந்து நின்று மற்றவர்களையும் வரவேற்று இருந்தவர்கள் கலக்டர் வரவும் அவருடன் இணைந்து மேடை அருகே பேச சென்று விட்டனர்.

ஆதி இந்த பயலும் சாருகேஷும் சேர்ந்தது கண்ணுக்கு எவ்வளவு நிறைவா இருங்கு தெரியுமா என்று அவர்களை கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்ந்து கூற

கண்களில் துளிர்த்த ஈரத்தை முந்தனையை தொண்டு துடைத்த ஆதி இன்னும் அந்த உத்ரா குழந்த இருந்தா மனசுக்கும் இன்னும் நிறைவா இருந்திருக்கும் பாவம் வாழுற வயசுல பாதில் போயிட்டா மனசே கேக்கல என்று வருத்ததுடன் கூற.

நடந்ததை யாராலையும் மாத்த முடியாது ஆதி உத்ராவ நினைச்சி மனசை கஷ்டபடுத்திக்காம அவ பிறந்த நாள் அதுவுமா அவளாள பிரிந்த அண்ணனுங்க இன்னைக்கு ஒன்னா நண்பர்களா சேர்ந்து இருக்காங்க அதை கண்ணாற பார்த்து மனசார சந்தோஷமா இதுல கலந்துக்க எங்க இருந்தாலும் அந்த குழந்தை இதை பார்த்து சந்தோஷபடும் என்று ஆறுதலை கூறி வாசலை பார்க்க அவரின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது.

அவரின் பார்வை ஏதோ ஒன்றின் மேல் நிலைத்து இருந்ததை பார்த்த ஆதி பார்வை சென்ற திக்கை பார்க்க கண்களில் நீர் வழிய பேச்சற்ற நிலையில் உறைந்து போய் இருந்தார் அவரும்.

அவர்களின் அருகே வந்த பார்கவி உடன் இருந்த உத்ராவை அருகே நிற்க வைத்து அத்தை அத்தை என்று அவரை நிகழ் உலகிற்கு கொண்டு வர கவி.. கவி.... இது இவ என்று திக்கி திணரி கேட்க வந்ததை கேட்க முடியாமல் கேட்க கண்கள் இரண்டையும் அழகாய் மூடி ஆம் என்று தலையை அசைத்தவள் உங்களுக்கு எல்லாம் சொல்றேன் அத்த அவர் எங்க சாருகேஷ் அண்ணாவையும் காணும் என்று கேட்க

உத்ராவை பார்த்தபடியே கலெக்ட்ர் கிட்ட பேச போய் இருக்காங்க என்றவர் உத்ராவையே பார்த்திருக்க அவருக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தது கண்ணில் கண்டதை நம்பவும் முடியவில்லை ராஜாராமனும் பேச்சற்ற நிலையில் ஸ்தம்பித்து கேள்வி கேட்கவே மறந்து போய் நின்றிருந்தார் அவருக்கும் இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை... அவர்களின் தெளிவில்லாத முகங்களை கண்டவள்

அத்த நான் உத்ராவை பத்தி எல்லாம் விளக்கமா சொல்றேன் அதுக்கு முன்னாடி அவரையும் சாருகேஷ் அண்ணாவையும் ஆபீஸ் ரூம் வர சொல்லுங்க பீளீஸ் என்று கூறியவள் அத்த மாமா நீங்களும் வாங்க என்று கூறி உத்ராவின் கையை பிடித்து யார் கண்களையும் கவராமல் முன்னே நடந்து அலுவலக அறையை நோக்கி சென்றாள்.

அண்ணி எனக்கு நர்வசா இருக்கு என்று அலைபாயும் கண்களுடன் கூறியவளின் கைகளை தன் கைகளுக்குள்ளே பொதித்துக்கொண்டு தட்டி கொடுத்தவள் டென்ஷன் ஆகாத பேபி என்றவள் அங்க போய் நில்லு அன்று அவளை மறைவான பகுதியில் நிற்க வைத்துவிட்டு அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள்.

கதவை திறந்தபடி உள்ள வந்த கேஷவ் என்ன கவி பங்ஷன் டைம்ல தனிய பேசனும்னு வர சொல்லி இருக்க அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று கேட்க

அவன் காதில் எக்கி மச்சி பீ கூல் சொல்றேன் சொல்றேன் அதுக்கதானே எல்லாரையும் வர சொல்லி இருக்கேன் எனறவள் சொன்னா எனக்கு என்ன தருவிங்க என்று பேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவை திறந்துக்கொண்டு ராஜாராமன் சாருகேஷ் கடைசியாக ஆதி உள்ளே நுழைந்து இருந்தனர். அவர்கள் உள்ளே வரும்பேதே அவனிடமிருந்து விலகி நின்றவிட்டாள் பார்கவி

அவளை பார்த்துக்கொண்டு உள்ளே வந்த சாருகேஷ் என்ன கவிமா எனிதிங் சீரியஸ் என்னடா பேசனும்னு சொன்னியாம் ஆண்டிக்கிட்ட என்று அன்பாய் கேட்க அவனின் அருகில் வந்தவள் நீங்க ரெண்டு பேரும் கண்ணை மூடுங்க உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் என்று மகிழ்ச்சியுடன் கூற

மனைவி வேண்டும் என்றே விளையாடுகிறாள் என்று நினைத்தவன் பச் என்ன பார்கவி விளையாடுறியா பங்கஷன் ஸ்டார்ட் பண்ண போற டைம் எல்லா கெஸ்ட்டும் வந்துட்டாங்க சீப் கெஸ்ட் கூட வந்துட்டாங்க அங்க இருக்க வேண்டிய நேரத்தில இங்க கூட்டிட்டு வந்து நிக்கவைச்சி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க என்றான் அழுத்தமாக

சீப் கெஸ்ட்டா.... நோ... நோ.... இந்த பங்கஷனுக்கு இவங்கதான் இவங்கதான் சீப் கெஸ்ட் பா... நீங்க பாத்திங்க அப்படியே அசந்துடுவிங்க தெரியுமா இவங்க இல்லன்னா இந்த பங்கஷனே இல்ல இவங்க இல்லாம ஆரம்பிச்சிடுவிங்களா என்று பீடிகையுடன் நக்கலாய் கேட்டவள் கண்கள் சிரிப்பில் மின்னின

அது யாருடா எங்களுக்கே தெரியாத அவ்வளவு பெரிய ஆளு என்று இருவரும் நினைக்க பீளிஸ் பீளீஸ் எனக்காக ஒரே ஒரு முறை கண்ணை மூடுங்களேன் பீளீஸ் என்றுகண்களை சுருக்கி இருவரிடமும் கேட்ட விதத்தில் நேரம் போகிறதே என்று கேஷவ் முறைத்து நிற்க சாருகேஷ் சிரித்தபடி

டேய் என்னடா சத்தம்போட்டு எகிரிக்கிட்டு இருக்க என்று நண்பனை கவிக்காக கடிந்தவன் நீ ஏன் கெஞ்சிற கவிமா கண்ணை மூடுங்கடான்னு சொன்னா ரெண்டு பேரூம் மூட போறோம் என்றவன் டேய் கண்ணை மூடுடா என்று நண்பனுக்கும் கட்டளையாய் கூறி தானும் கண்களை பொத்தி கொண்டு இப்போ சொல்லு கவி என்ன சர்பிரைஸ் வைச்சி இருக்க எங்களுக்காக என்று கேட்கவும் அவர்கள் முன்னால் உத்ராவை நிறுத்திய கவி இப்போ கண்ணை திறங்க என்றாள்.

கண் முன்னே கண்ட காட்சியை நம்ப முடியாமல் அப்படியே திகைத்து போய் இருந்த இருவரும் சுயத்தை பெற சில நாழிகைகள் தேவைப்பட உத்ரா இவர்களை பரிதவிப்போடு பார்த்து நின்றாள்.

பேச்சற்று இருந்த அவர்களின் நிலையை புரிந்த பார்கவி " உங்க தங்கை தாங்க , சாருகேஷ் அண்ணா உங்க உத்ரா தான் " என முகம் மலர்ந்த முறுவலோடு கூற

தங்களின் தங்கை உத்ரா போலவே அச்சு அசலாக தங்கள் கண் முன் ரத்தமும் சதையுமாய் நின்றிருந்தவளை கண்டு ஆண்கள் இருவரும் மின்சாரத்தால் தாக்குண்டவர்களை போல் ஸ்தம்பித்து நின்றிருந்தனர்

கேஷவின் மனநிலையை அறிந்த பார்கவி தன் கணவனின் தோள் பட்டையில் மெல்ல வருடியவள் " கேஷவ் ரிலாக்ஸ் உண்மையாவே இவ உங்க தங்கை தான் " என மென்மையாக கூறிட

மனைவியின் தொடுகையில் சுய உணர்வு பெற்ற கேஷவ் அதிர்ச்சி விலகாத பார்வையால் உத்ராவை பார்த்தபடியே " க... கவி இ.. இது எப்படி சாத்தியம் நான் என் கண்ணால் உத்ராவோட டெட் பாடியை பார்த்தனே அதோட கடைசி காரியம் வரை கூட இருந்தனே... எப்.. எப்படி இப்போ உத்ரா திரும்ப வர முடியும் ? .... " என தன் மனதில் இருந்ததை திக்கி தினறி பேசிக்கொண்டே போனவன் நினைவு வந்தவனாக வேகமாக மனைவியின் புறமாக பார்வையை திருப்பி " உனக்கு எப்படி உத்ராவை தெரியும் ? நீ தான் அவளை பார்த்ததே இல்லையே நான் சொல்லி தானே அவ பெயரே உனக்கு தெரியும் அவ ஃபோட்டோ கூட நான் தானே உனக்கு காட்டினேன் இந்த பொண்ணு எங்க உத்ரா இருக்கவே முடியாது எ... எங்க உத்ரா செ.. செத்து போய்ட்டா " என கண்களில் தழும்பிய கண்ணீரோடு சொன்னான்.

சாருகேஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் தான் நின்றிருந்த நிலையிலையே உத்ராவை பார்த்தபடியே நின்றிருந்தான். ஆதிக்கும் அந்த சந்தேகம் தான் தங்கள் முன் தானே அனைத்தும் நிகழ்ந்தது இவள் எப்படி இது எப்படி சாத்தியம் என்றே பார்த்திருக்க அதை ராஜாராமன் வாய்விட்டே கேட்டுவிட்டார்.

சொல்றேன் மாமா அதுக்குதான் அவளை கூட்டிட்டு வந்தது என்றவள் அவனின் கண்ணீர் ஆவேசம் அனைத்தும் எல்லை மீறிசென்று கொண்டு இரும்பதை பார்த்தவள் அவனை கைகளை பற்றியபடி " கேஷவ் பீளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் எமோஷன் ஆகாதீங்க சாருகேஷ் அண்ணாவை பாருங்க இன்னும் ஷாக்கில் இருக்காங்க அவங்களை முதலில் நார்மல்க்கு கொண்டு வாங்க அப்போ தான் நான் எல்லாம் சொல்ல முடியும் அவ எப்படி யார் மூலமா எங்க கிடைச்சான்னு சொல்ல முடியும் " என பொறுமையாக கூறவும்

மனைவியின் பேச்சில் சற்று தெளிந்து வந்திருந்தவளின் விவரத்தை அறிந்திட வேண்டும் என் நினைத்த கேஷவ் நண்பன் தோளை பற்றியவன் தன்னருகே நிற்கவைத்து " சாருகேஷ் அமைதியா இரு கவி ஏதோ சொல்லனுமாம் பீளீஸ் அமைதியா இரு என்ன சொல்றான்னு கேட்போம் " என தொடர்ந்து கூறி ஆறுதலாக கூறி நண்பனை அருகே இருந்த நாற்காலியில் அமர வைத்து நீர் எடுத்து தந்து

ஆசுவாசப்படுத்தியவன் " நீ சொல்லு கவி " என மனைவியிடம் கூறி விட்டு நண்பன் அருகே அமர்ந்தவன் பார்வை மறுபடியும் மனைவி அருகே நின்ற உத்ராவிடம் நிலைத்து அவன் மனது நம்ப முடியாமல் தவித்தது.

பார்கவி தான் உத்ராவை கண்டறிந்த விதம் பற்றியும் அவள் டாக்டர் தயாபரனின் உதவியால் உயிர் பிழைந்தது சென்னையில் இருந்தது முதல் அவளை சித்தார்த் அழைத்து வந்தது வரை கூறினாள்.

பார்கவி கூறியதை கேட்டு இரு ஆண்களும் அயர்ந்து போயினர். ராஜாரமனுக்கு இது கடவுளின் செயல் என்றே பட்டது இதுநாள் வரை இறந்ததாக நினைத்து இருந்தவள் இன்று கண்முன்னே உயிரோடு இருக்கிறாள் என்றாள் இதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் இருப்பதாக அவர் உள்ளுணர்வு கூறியது ஆதியின் கண்களும் கலங்கி இருக்க சாருகேஷால் எதுவும் பேச முடியவில்லை

கேஷவ் கண்கள் எதையோ கண்டு யோசனையோடு சுருங்கி " கவி நீ சொல்றது எல்லாம் சரிம்மா இது உத்ரான்னா அவ ஏன் எங்களை பார்க்கும் பார்வையில் ஒரு அன்னியம் இருக்கு ஓடி வந்து கேஷவ் சாருகேஷன்னு வந்து நிக்கல பரிச்சையம் இல்லாத மாதிரி மலங்க விழிக்குறாளே எங்கள பார்த்து பயப்படுறாலே ஏன் சாருகேஷ்கிட்ட சட்டுனு பேசலைனாலும் என்கிட்ட வாய் ஓயாம பேசுறவ ஏன் இப்படி வெறிச்ச பார்வையோட இருக்கா உண்மையை சொல் இவ எங்க தங்கை தானா ? " என தன் மனதில் இருந்த சந்தேகம் அனைத்தையும் வேக வேகமாகவே கேட்டு முடித்தான்.

கேஷவ் என்னடா இவ்வளவு சந்தேகம் அவளை பாரு நம்ம உத்ராதாண்டா அந்த முகம் உன்னை ஏமாத்துவது போல இருக்க என்று ஆதி மகனை கண்டிப்பது போல் கூற

அம்மா அவ ஏமாத்துறான்னு சொல்லல மறுபடியும் எங்களாள ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியாதுன்னு தான் கேக்குறோம் என்று நிதர்சனத்தை உறைக்க ஆதி அமைதியாகிவிட அத்தை நான் அவர் கேள்விக்கு பதில் சொல்றேன் நடந்தது விபத்து மட்டும் இல்ல இது சொல்லவே கஷ்டமா இருக்கு பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க அதனால் நடந்த விபத்தால் தான் உத்ரா தன் கடந்த காலத்தை மறந்து தன்னை பற்றியே தெரியாமல் வாழ்ந்துகிட்டு இருக்கா என்று அவளுடைய அவல நிலையை கூறி முடித்தவள் சாருகேஷ் அருகே சென்று " அண்ணா இன்னும் சந்தேகமா இருங்குன்னா உங்க தங்கை உத்ராவோட வலது தோள் பட்டையில் ஒரு பட்டை மச்சம் இருக்கு இல்லையா ? என்றிட சாருகேஷிற்கு பெருத்த அதிர்ச்சி அவன் முகத்தில் இருந்தே யூகித்தவள் எனக்கு எப்படி தெரியும்னு அதிர்ச்சியா இருக்கா?

இந்தாங்க அவளோட மெடிக்கல் ரிப்போர்ட் அதுல அவளுடைய அடையளம்ன்னு போட்டுருக்க இடத்துல பாருங்க .... என்றவள் யாருன்னே தெரியாத பொண்ணு ஏதாவது ஆதாரம் வேணும்னு இதை என்கிட்ட சொல்லி இருந்தாங்க தயாபரன் சாரோட மருமகள் என்று கூறி முடித்தவள் இப்ப சொல்லுங்க உங்க தங்கை உத்ராவிற்கு மச்சம் இருக்கா இல்லையா என்று கேள்வியை எழுப்ப

சாருகேஷ் இயந்திரதனமாய் ஆம் என்று தலையசைக்க

பார்கவி அருகே நின்ற உத்ராவை அழைத்தவள் அவள் வலது பக்கமாக சுடிதாரை சற்று நெகிழ்த்தி தோள் பட்டையில் இருந்த மச்சத்தை காட்டியவள் " இதுக்கு மேலேயும் உங்களுக்கு சந்தேகம்னா சிம்பிள் இருக்கவே இருக்கு டி.என்.ஏ டெஸ்ட் அதை எடுத்து பார்த்துடலாம் " என கூலாக கூறி முடித்தாள்.

உத்ராவின் தோளில் இருந்த மச்சதை பார்த்து சாருகேஷ் மெல்ல அதிர்ச்சியில் இருந்து தெளிந்தவன் " உத்ரா " என கதறலோடு அவளது கரம் பற்றி அதை தன் முகத்தில் வைத்து அழுத்தி கொண்டு அழுது விட்டான். என்றால் கேஷவின் நிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை இதுவரையிலும் தான் அனுபவித்த அத்தனை வலிகளுக்கும் மருந்தினை தந்தவளின் கைகளை பற்றி எழுந்தவன் தன்னவளின் கைகளை நெஞ்சில் வைத்து தெங்க்ஸ் அப்படின்னு சொல்லி உன்னை அன்னியபடுத்த மாட்டேன் டா நீ நீயும் நானும் வேற வேற இல்ல உனக்கு நன்றி சொல்றது எனக்கு நானே சொல்றா மாதிரி என்று நெகிழ்ந்து கூறி

நண்பனையும் உத்ராவினையும் நெருங்கி இருந்தவன் சாருகேஷின் முதுகை வருடி சமாதனபடுத்தி உத்ராவின் தலையை பிடித்து செல்லமாய் அழுத்தி விட்டு 4 வருஷம் அழவைச்சிட்டியே டி என்று கண்களில் நீருடன் கூற அவன் கூற்றில் நெகிழ்ந்தவள் சாரி ணா என்று அவன் தோள்களில் சாய பார்ரா தலையில் அடிபட்டாதான் மரியாதையெல்லாம் வருது என்று சூழலை இலகுவாக்க அவளை சீண்ட அதில் சினுங்கியவள் நீங்க எல்லாம் என்னை எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியாம மனசு ஒருமாதிரியா இருந்துச்சி இப்போதான் என் கூட்டுக்குள்ள வந்தாமாதிரி இருக்கு அண்ணா என்று சாருகேஷையும் கேஷவையும் பார்த்துக் கூறி

பார்கவியிடம் வந்து தேங்க்ஸ் அண்ணி என்று அவள் கால்களில் விழப்போக ஏய் ஹேய் பேபி என்ன இது நான் உன்னை விட சின்னபொண்ணு என்னை கிழவி ஆக்குறியா என்னு சிணுங்க அங்கு நடப்பவைகளை பார்த்துக்கொண்டு இருந்த ராஜாராமனும் ஆதி அம்மாவும் விழியகற்றாமல் அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் சின்னா பொண்ணா இருந்தாலும் என் பசங்களோட மனசை குளிரவைச்சிட்டியேடா என்று உச்சி முத்தம் வைத்து அவளை அணைத்துக்கொள்ள

கவிமா உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாதுடா யாரும் இல்லாத அனாதைன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு உன் ரத்த சொந்தமே இருக்குடான்னு இவளை அழைச்சிட்டு வந்த நீ எனக்கு சாமி மாதிரி டா என்று அவளை வணங்கி மண்டியிட அண்ணா என்று அவனின் கை பற்றி தூக்கி விட்டவள் எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுறிங்க அவ எனனடான்னா கால்ல விழறா.நீங்க என்னடான்னா மண்டி போடுறிங்க போங்க என்று கோபமாய் திரும்பியவளை ஆசையாய் அவளையே பார்த்தான் கேஷவ் கணவனின் கண்களில் தெரிந்த ஆசையில் வெட்கம் கொண்டு ஆதியின் தோளில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

முக்கிய பிரமுகர்கள் மேடையில் நார்காலியை அலங்கரித்த வண்ணம் அமர்ந்திருக்க பார்கவி ஆதி ராஜாராமனுன் மேடைக்கு கீழே போட்ட இருக்கையில் அமர இருபுறமும் விருந்தினர்கள் அமர்ந்து இருக்க நடுநாயகமாக கேஷவ் ஒரு புறமும் சாருகேஷ் மறுபுறமும் உத்ரா நடுவிலும் நடந்து வந்து மேடை ஏறியவள் இருவருக்கும் இடையில் அமர்ந்தாள்.

அவள் நடந்து வரும்போதே அரங்கில் சிறு சலசலப்பும் எழ திரும்பி பார்த்த நிர்மலின் இதயமே நின்றுவிட அஷ்வினோ இவள் இன்னும் சாகலையா என்ற கேள்வியோடு அவளை நோக்கியவன் தன்னை பார்த்து விடாமல் இருக்க முகத்தில் வியர்வையை ஒத்தி எடுப்பது போல் கைகுட்டையால் மறைத்துக்கொண்டான்.

கீழே இருந்த அவர்களையெல்லாம் அவள் கொண்டுகொள்ளாது தன் அண்ணன்களுடன் மகிழ்வாய் இருந்தவள் ஒரு மகாராணியின் தோரணையில் மேடையில் அமர்ந்திருந்தாள்.

மனம் நிறைந்த மகிழ்வுடன் ஹாய் எவரி ஓன் என்று உறையை தொடங்கிய சாருகேஷ் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எங்களது வணக்கத்தையும் நன்றியையும் தெரித்துக்கொள்கிறேன். இன்னைக்கு எங்க வாழ்க்கையிலையை முக்கியமான நாள் என் தங்கை உத்ராவின் பிறந்த நாள் அவள் எங்களுக்கு திரும்பி கிடைச்ச இந்த நல்ல நாள்ல அவள் பெயரில் இந்த டிரஸ்ட் ஆரம்பித்து இதன் மூலமா பலபேர் பயனடைஞ்சி இருக்காங்கன்னு நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்றவன் தங்கையின் புறம் திரும்பி இங்க வாடா என்று தங்கையை அழைத்தவன் இவ தான் எங்க தங்கை உத்ரா இத்தனை நாளா எங்களை தவிக்கவிட்டு இருந்த கடவுள் இன்னைக்கு எங்ககிட்டயே சேத்துடுச்சி என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவன் கண்களால் மீண்டும் ஒரு முறை பார்கவிக்கு நன்றி கூறியவனின் முகத்தில் சொல்லொன்னா மகிழ்ச்சி கேஷவின் கண்களும் கலங்கி இருந்தது.

அவனை தொடர்ந்து விழா மேடையில் கலக்டர் இந்த டிரஸ்டின் முலம் நிழ்த்திய சேவையையும் அதன் மூலம் ஆதரவற்றவர்தள் பெற்ற உதவிகளையும் கூறி பாராட்டியவர் இதுபோன்ற இளைஞர்களின் நல்ல செயல்களையும் ஊக்கபடுத்த வேண்டும் என்றும் மேலும் வியாபாரிகள் தொழிலதிபர்களும் உதவ முன் வர வேண்டும் என்று கூறி தனது உரையை முடிக்க அரங்கத்தில் கர ஒலி எழும்பி அடங்க.

அரங்கமே ஆரவரமாக இருந்தாலும் கலவரமுகத்துடன் அமர்ந்திருந்த இருவருக்கும் மூச்சே நின்று விடும் நிலையில் இருக்க உத்ராவை பற்றிய விஷயம் முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவளின் கண்ணில் படக்கூடாது என்று கணக்கிட்டவன் உடனே அரங்கத்தை விட்டு வெளியேற எண்ண, பயமுகத்துடன் அமர்ந்திருந்த நிர்மலின் கையையும் பற்றி அவனையும் இழுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 54
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN