காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 55

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வானில் நீலம் மறைந்து இருள் சூழத் தொடங்கிய மாலை நேரம் அது, மனமோ இன்னும் இன்னும் அவளை நினைத்தே சுற்றியது... ‘எப்படி வந்தாள்...??? அவள் தானே….???? செத்தவ எப்படி உயிரோடு வந்தா...???’ என்ற கேள்வியே மனதை வண்டாய் குடைந்து கொண்டு இருந்தது.

தனக்கு எதிரில் இருந்த நிர்மலை சந்தேகக் கண்ணோடு பார்த்தவன் அவன் சட்டையைப் பிடித்து “உனக்கு தெரியும்... உனக்கு தெரியும் எப்படி வந்தா அவ?? நீதானே சொல்லிக்கிட்டே இருந்த அவளைப் பத்தி அப்போ உனக்கு தெரியும் அவ வருவான்னு. உனக்கு தெரியும் தானே” என்று உலுக்க.

இறந்ததாக நினைத்தவளை நேரில் கண்ட அதிர்ச்சியில் சித்தம் கலங்கிவிட்டதோ என்று நினைத்த நிர்மல் “விட்றா விட்றா என்னை” என்று அவன் கைகளை தன் சட்டையில் இருந்து உதறியவன் “எனக்கு எப்படி டா தெரியும் அவ வருவான்னு.!!!. பைத்தியகாரன் மாதிரி உளறாதடா அவளை கொன்னுட்டேன்னு தானேடா நீ சொன்ன அப்புறம் எப்படி அவ உயிரோட வந்தா...??? எனக்கு உன் மேல தான் டவுட்டா இருக்கு” என்று அவனையே எதிர் கேள்வி கேட்க.

கையில் இருந்த ஆல்கஹாலை ஒரே மடக்கில் குடித்து காலி கிளாசை சுவற்றில் வீசி எறிந்தவன் “ச்சே….” என்று எதிரில் இருந்த பால்கனியில் போய் நின்றுக்கொண்டு கீழே தெரிந்த வாகன நெரிசலை வெறித்துக் கொண்டு இருந்தவனின் மூளை நிலைதடுமாற இருகைகளாலும் தலையை பிடத்தபடி நின்றிருந்தான் என்றால் நிர்மலின் நிலையோ அந்தோ பரிதாபம்

ஒரே மாதத்தில் எத்தனை அதிர்வைத் தான் தாங்குவான் முதலில் உத்ரா யார் என்பதை தேவாவின் மூலம் அறிந்தவன் அவளின் இறப்பில் சாருகேஷின் பார்வை கேஷவ் புறம் உள்ளது என்ற நிம்மதியில் இருக்க அண்ணனின் வாய்மொழியாலே அதில் இருவர் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய, நிம்மதி இல்லாமல் அலைந்தவன் இன்று இறந்ததாக நினைத்த உத்ரா அவன் முன்னால் உயிர்கொண்ட பதுயைமாய் இருவரின் நடுவிலும் வந்தவளைப் பார்த்ததும் அவன் மூச்சே நின்று போனது போல் உணர்ந்தவன், தன் நண்பன் அஷ்வின் பிரகாஷின் கெஸ்ட்ஹவுசில் சோர்ந்து போய் நாற்காலியில் தான் உடலை பொருத்தி தலை கவிழ்ந்து கைகளால் முட்டு கொடுத்தபடி இதயம் படபடக்க அமர்ந்து இருந்தான்.

இறுவரும் வெவ்வேறு மனநிலையில் உழன்றுக்கொண்டு இருக்க கதவை ‘படார்’ என்று திறந்துக்கொண்டு ஆளவந்தானின் மகள் வர்ஷா உள்ளே நுழைய அவளைத் தொடர்ந்து அந்த வீட்டு வேலையாளும் “அம்மா. அய்யா இல்லீங்க” என்று குரல் கொடுத்தபடியே நுழைந்து வர அந்த சத்தத்தில் தலையை உயர்த்தி பார்த்தான் நிர்மல்..

வெறித்தப் பார்வையுடன் திரும்பி இருந்த அஷ்வினின் காதுகளிலும் வேலையாளின் சத்தம் விழ திரும்பி பார்த்த அஷ்வின் பிராகஷ் முன்னால் வந்த வேலையாள் “அய்யா நான் சொல்ல சொல்ல கேட்காம இவங்க வந்துட்டாங்க” என்று கூறி தலையை சொறிய அவனை முறைத்துக்கொண்டே அஷ்வின் தலையை ‘வெளியே போ' என்பது போல் அசைக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று விரைவாக வெளியேறினான் அந்த வேலையாள்.

வேலையாளின் சொல்லை கேட்டு அவனை முறைத்தபடியே நின்றிருந்த வர்ஷா என்ன “அவன்கிட்டயும் சொல்லி வைச்சிட்டிங்களா நான் வந்தா உள்ளே விடாத,... நான் இல்லைன்னு சொல்லி வெளியே அனுப்புன்னு…., இன்னும் என்ன என்ன செஞ்சி இருக்கிங்க என்கிட்ட இருந்து விலகி போக?” என்று கோவமாக கேட்க

உன் கேள்வி எல்லாம் எனக்கு அனாவசியம் என்பது போல் ஒரு பார்வையை அவள் புறம் செலுத்தியவன் “இப்போ எதுக்கு இங்க வந்து இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க?” என்று சீறியபடி கேள்வியை உதிர்க்க

அவ்வளவு நேரம் எங்குதான் அடக்கி வைத்து இருந்தாளோ அத்தனை கோவத்தை, பாய்ந்து அவன் சட்டையில் கை வைத்தவள் “என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல” எதுக்கு வந்தன்னு இப்போ கேக்குற, மொத்தமா ரெண்டு வாரம் டா உன்னை எங்க எங்கல்லாம் தேடினேன் தெரியுமா!!! என்னை ஏமாத்த தானே முயற்சி பண்ற?” என்று அவனை உலுக்கு உலுக்கு என்று உலுக்கியவள் நிர்மலிடம் திரும்பி

“அய்யா நல்லவரே. ஃப்ரெண்டுக்காக அவன் தப்பே செஞ்சாலும் துணை போற உத்தமனே. எத்தனை வாட்டி உன் வீட்டுக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் நடையா நடந்து இவனை பத்தி ஏதாவது தெரியுமான்னு கேட்டேன். வாய துறந்து ஒரு வார்த்தையாவது சொல்லி இருப்பியா இவனோட சேர்ந்தவன் தானே நீயும். அப்படித்தானே இருப்ப” என்று நிர்மலையும் சாடியவள்

அஷ்வினிடம் வர அவளின் கையை பிடித்து “ஏய் என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற. நீ என்னமோ உத்தமி மாதிரி சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க. நான் கேட்டேன் நீ அக்சப்ட் பண்ணிக்கிட்ட அவ்வளவுதான் நமக்குள்ள நடந்தது எல்லாம். இதுல நான் உன்னை என்ன ஏமாத்திட்டேன்னு கதைவிட்டுகிட்டு இருக்க!!! மரியாதையா சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு வெளியே போடி” என்று அவளை தள்ளி விட.

அவன் தள்ளி விட்டதில் வர்ஷா டேபிளின் மேல் விழுந்து நிற்க முடியாமல் நிற்க, நிர்மல் அஷ்வின் கைகளை பற்றிக்கொண்டு “ஏற்கனவே ஒரு தப்பை பண்ணிட்ட. அது உண்மையா இல்லையான்னு கூட தெரியலடா அதே மாதிரி இன்னொரு தப்பை பண்ணி ஆயுள் முழுதும் என்னையும் உன் கூட சேர்த்துஜகளியை திண்ண வைச்சிடாதடா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறியவன்

வர்ஷாவின் புறம் திரும்பிய நிர்மல் “வர்ஷா நீ வீட்டுக்கு போ இங்க நிலைமை சரியில்ல அப்புறம் பேசலாம். உன்னை அவன் கைவிடாமல் நான் பாத்துக்குறேன்” என்று தன்மையாக கூறி அவளை வீட்டுக்கு போக சொல்ல,

தீயாய் அவனை பார்த்தவள் “என்ன என்ன நிலைமை சரியில்ல??? இங்க என் நிலமை தான் சரியில்ல நான் தான் சரியில்லை” என்று தன் முகத்தை மூடி அடித்துக்கொண்டு அழுதவள் “என் வாழ்க்கையையே சிதைச்சிட்டியேடா நாயே” என்று அவனை அறைய வர.

அவள் கூறிய சொற்களின் கோபம் கொண்டவன் வர்ஷாவின் கைகளை பிடித்து வளைத்து அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்து அவள் கைகளை பின்புறப் திருப்பி “ஆமாடி உன்னை கழட்டிவிட தான் ப்ளான் பண்றேன். என்னடி செய்வ…. என்ன செய்வ…. உன்னால முடிஞ்சத பாத்துக்கடி... உன்னை கல்யாணம் பண்ணி உன் அப்பன் கூட காலம் முழுக்க என்னை கம்பிய எண்ண சொல்றியாடி?... அதுக்கு வேற எவனாவது இளிச்சவாயன் இருப்பான் போடி” என்று என்று வாசல் புறம் தள்ள

“டேய் அஷ்வின்” என்று அவனை தடுக்க வந்த நிர்மலையும் அடக்கியவன் “ஒரு வார்த்தை பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன். கொலைகாரனை தான் பார்ப்ப” என்று சீற, அழுதபடியே இடத்தை விட்டு அகன்றவள் அவள் தந்தையை காண சிறைச்சாலையை நோக்கி சென்றாள்.

இங்கு வீடு முழுக்க பலவித மலர்களால் அலங்கரித்து வானவில்லின் வர்ணஜாலமாய் காட்சியளிக்க ஆலம் சுற்றி வரவேற்று வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் உத்ரா. வீட்டை சுற்றி பார்வையை சுழற்றியவளுக்கு தாய் தந்தையருடன் குடும்பமாக எடுத்த புகைப்படம் கண்களில் சிக்கியது… தன்னிச்சையாக அதன் அருகே சென்றவளின் விரல்களும் கண்களும் அதனை வருட இமைகளில் நீர் துளிர்த்தது.

அவள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து உத்ராவினையே பார்த்துகொண்டு இருந்த சாருகேஷ் அவளின் கண்ணீரை பார்த்தவுடன் தங்கையின் தலை மீது ஆதுரமாக கைவைத்து வருடிவிட அந்த வருடலில் அவன் தோள்களின் மேல் சாய்ந்தவளின் கண்ணீரை துடைத்தவன். எதிரில் இருந்த பூஜை அறையை காட்டி அதில் தெய்வமாய் வீற்றிருந்த பெற்றவர்களின் படங்களுக்கு விளக்கை ஏற்ற சொல்லியவன் அவர்களுடனே இருந்த உத்ராவின் புகைப்படத்தில் இருந்து மாலையை அகற்றி அதனை கையோடு எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

தாய் தந்தையரின் இறப்பிற்கு தானும் ஒருவகையில் காரணமாக ஆனோம் என்ற குற்றவுணர்வின் பிடியில் சிக்கி இருந்தவளின் மனதினை அறிந்த கவி அவளின் மனநிலையை மாற்ற எண்ணி சிறிது நேரம் அவளிடம் வேறு விஷயங்களை பேசி அதனை மறக்க செய்தவள் அவளை உண்ணவைத்து அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு கேஷவும் சாருகேஷும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் இடத்திற்கு வந்தவள்

“அண்ணா சாப்பிடுறிங்களா?? எடுத்து வைக்கவா??? கேஷவ் உங்களுக்கு???” என்று இருவருக்கும் உணவினை பற்றி கேட்க

“வேணாம் கவிமா. இன்னைக்கு மனசும் வயிறும் நிறைஞ்சி இருக்கு டா” என்று சாருகேஷ் உணவினை மறுக்க

“வேணாம் டா பசியில்லை” என்று கேஷவும் மறுத்துவிட்டான்.

பின் நினைவு வந்தவனாக “கவிமா உத்ரா சாப்பிட்டாலடா” என்று சாருகேஷ் கேட்கவும். “அவளுக்கும் வேண்டாம் தான் சொன்னா ஆனா அவ ரெஸ்ட்லஸா ஃபீல் பண்ணா. அதான் அவளை கட்டாயபடுத்தி சாப்பிட வைச்சி படுக்க அனுப்பினேன்” என்றவள் உணவினை மூடி வைத்துவிட்டு வந்து அவர்களுடன் அமர்ந்தாள்.

சாருகேஷ் முகத்தினை பார்த்தவள் சொல்லவந்த விஷயத்தை தயங்கி சொல்லாமல் நிற்க அதனை பார்த்துவிட்ட கேஷவ் “என்ன பாரு அவனை பாக்குற யோசிக்குற தயங்குற!!! என்ன விஷயம் ஏதாவது முக்கியமான விஷயமா” என்று மனைவியை கேட்க 'நானே கேட்க யோசிக்கிறேன் இதுல பெரிய இவராட்டும் என்னை கண்டுபிடிச்சத சொல்லி காமிக்கிரிங்களா மூஞ்சி வீட்டிக்கு வாங்க வாயிலையே சூடு போடுறேன்' என்று கணவனை முறைத்தவள்

சாருகேஷிடம் திரும்பி தயக்கமாக “அது… அது எல்லாம் ஒன்னும் இல்ல ஜஸ்ட் சின்ன சஜஷன்” தான் அண்ணா என்றவள் “உங்களுக்கே தெரியும் இந்தாலும் எனக்கு தோனுனதை நான் சொல்றேன்... நடந்தது எல்லாத்தையும் மறந்துடுங்க. அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல இது மறதி தற்காலிகமான ஒன்னுதான். சீக்கிரமே அவளுக்கு எல்லா ஞாபகம் வந்துடும்ன்னு தயாபரன் சார் நம்பிக்கையாக சொல்லி இருக்கார்” என்றவள் “உத்ராவை சந்தோஷமா பாத்துக்கரது மட்டும் தான் நம்மோட வேலை. அவளுக்கு எப்போ பழசு ஞாபகம் வருதோ வரட்டும். அதுவரை அவ மனசு சங்கடப்படுறா மாதிரி எதுவும் நடந்திடக்கூடாது” என்று கூற கேஷவும் அதற்கு அமோதிப்பதாய் தலை அசைத்தவன் அவளை தொடர்ந்து “இன்னும் கூட என் கண் முன்னால நடக்குறதை நம்ப முடியலடா. எல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தெரியுது” என்று அந்த நிமிடத்தை அனுபவித்து கூற

“ம்…. மாயாஜாலம் தான் பார்கவிங்குற தேவதை பெண் செய்த மாயாஜாலம்” என்று கூறிய சாருகேஷ் அவளை நன்றி பார்வை பார்க்க

“ப்ச் அண்ணா…. இதை நான் மட்டும் பண்ணல. இதுக்கு காரணமே சித்துவும் அவளை பாதுகாப்பாய் தங்க வைச்சி இருந்த கோபியும் தான்… பாராட்டனும்னா நீங்க அவங்களை தான் பாராட்டனும். நான் சும்மா ராமருக்கு உதவிய அணில் போல, அஷ்வின்னு ஒரு தெரு நாயை தேட சொல்லி வேலையை அவனுங்களுக்கு கொடுத்தேன். நம்ம அதிர்ஷ்டம் உத்ராவே நமக்கு கிடச்சிட்டா” என்றிட

தன் மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த கேஷவிற்கு அவளை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட பரபரத்த கைகளையும் இதயத்தையும் நண்பனின் இருப்பை உணர்ந்து அடக்கியவன் முயன்று வேறு புறம் பார்வையை திருப்பி இருந்தான்.

உத்ரா கிடைத்த சிலநாட்களாக பார்கவியின் மனதில் பெருத்த சந்தேகம் எழும்பி இருக்க அதை சாருகேஷிடமே எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் தான் இருந்தாள் சரி மனதில் அரித்த விஷயம் கேட்டுதான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் “அண்ணா எனக்கு ஒரு டவுட். ஆனா நீங்க எப்படி எடுத்துக்குவிங்களோன்னு” என்று தயங்க

“கவிமா உனக்கா தயக்கம்? இவன் சொல்லும் போது கூட நம்பல…. என்கிட்ட உனக்கு என்ன தயக்கம் சும்மா கேளு” என்று கூறிட.

“அண்ணா நீங்க இறந்து போனது உத்ரா தான்னு முடிவுக்கு எப்படி வந்தீங்க? அவ உங்களுக்கு எப்படி கிடைச்சா?” என்ற சந்தேகத்தை கேட்க, கேஷவிற்கும் அந்த சந்தேகம் இருக்க அவனும் சாருகேஷின் பதிலுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

~
ஆத்திரத்துடன் இருந்த அஷ்வினிடம் “டேய் நீ நடந்துக்கரது கொஞ்சம் கூட சரியில்லை. முதல்ல அவசரப்பட்டு அடிக்கரதை நிறுத்து. ஒன்னுகிடக்க ஒன்னு நடந்தா நீதான் மாட்டனும் ஏற்கனவே ஒன்னுல மாட்டி முழி பிதுங்கி நிக்கிறோம்”

“ப்ச்…. விடுடா என்னடா சும்மா பயம் காட்டிக்கிட்டு. ஆமா அவள நான்தான் அடைய ஆசைப்பட்டேன் இல்லைன்னு சொல்லலையே அவளா போய் மேல இருந்து கீழே குதிச்சி விழுந்தா, செத்ததா நினைச்சேன்... அவ வீட்டுலயும் இறந்தவ உடம்பை வைச்சி தானே எல்லா காரியமும் பண்ணாங்க அதை நம்பிதான் சொன்னேன் அவ செத்துட்டான்னு இப்போ உயிரோட இருக்கா... அதுக்கு நானா பொறுப்பாக முடியும்... நடக்கரது நடக்கட்டும் நான் பாத்துக்குறேன்" என்று கூற.

நிர்மல் "மச்சி அவசரப்பட்டு கோவப்படாத டா அன்னைக்கு என்ன நடந்துச்சி அதையாவது கொஞ்சம் தெளிவா சொல்லுட" என்றிட

“எப்படியும் அவ நான் கூப்பிட்ட இடத்துக்கு வருவான்னு எனக்கு தோனல டா. அதுவும் இல்லாம அவளை அடைஞ்சே அகானும்ன்ற ஒரு வேகம் எனக்கு வெறியா இருந்துச்சி. ஆசை கண்ணை மறைச்சது அன்னைக்கு நைட்டே அவ வீட்டுக்கு போனேன்” என்றான் அந்த நாள் நினைவில்

அன்று

இரவெல்லாம் அஷ்வினின் மிரட்டலில் துவண்டு போய் இருந்தவள் உயிருடன் இருந்து அவனுக்கு இரையாய் ஆவதை விட இறப்பது மேல் எனும் முடிவுக்கு வர தன் அண்ணனுக்கு ஒரு மடலை எழுதியவளின் ஃபோன் சிணுங்கியது. நேரம் பார்க்க நள்ளிரவை தாண்டி இருந்தது. இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என யூகித்தவளின் சப்த நாடியும் நடுங்கி அலைபேசியை பார்த்ததும் அதை தொட கூட கைகளில் சக்தி வடிந்ததை போல் துவண்டது…. நெஞ்சம் படபடப்புடன் இருக்க அலைபேசி முழுவதும் அடித்து ஓய்ந்து அடுத்த அழைப்பை ஏந்தி வர இம்முறை எவர் காதுகளிலும் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை எடுத்து காதுகளுக்கு பொருத்தியவளின் தொண்டை குழி வரண்டு போய் இருந்தது.

“ஹா...ஹலோ” என்று திக்கி திணறியவளின் குரலில் காற்று மட்டுமே வந்தது.

“என்ன டார்லிங் ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா. நாளைக்கு எனக்கு எப்படி மேட்சிங்கா வரனும்னு யோசிச்சிட்டு இருங்கியா??” என்று நக்கலாக கேட்க

“அது… அது… ப்ளீஸ் அஷ்வின். என்னை விட்ரு” என்று மறுபடியும் உத்ரா ஆரம்பிக்க.

“ப்ச்… ப்ச்… என் செல்லகிளி இப்படி கெஞ்சலாமா சொல்லு…. ஒரே ஒரு முறை மட்டும் வந்து எனக்கு வேண்டியதை கொடுத்துட்டா நான் ஏன் உன்னை தொந்தரவு செய்ய போறேன்” என்று பாதி கிண்டலாகவும் மீதி குழைவாகவும் கூற.

“டேய் உனக்கு மனசாட்சியே இல்லையாடா. நான் உன்னை சின்சியராதானேடா லவ் பண்ணேன் இப்படி என் மானத்தோட விளையாட நினைக்கிறேயே நீ நல்லா இருப்பியா??” என்று அழுகையோடு கேட்க

“டார்லிங் எனக்கு இது எல்லாம் கேட்க நேரமே இல்ல. உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசனும் 2 மினிட்ஸ் வெளியே வந்து பேசிட்டு போறியா” என்று கூலாக கூற

“என்னது வெளியவா. என்னால வர முடியாது” என்று அவன் நிற்கிறானா என்று ஜன்னல் திரைசீலையை நீக்கி பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அஷ்வின் உத்ராவின் வீட்டின் முன்னால் காரில் சாய்ந்தவாறு நின்றிருக்க “ப்ளீஸ் அஷ்வின் போய்டுயாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும்” என்று கெஞ்ச.

“பிரச்சினை தானே அதை நான் பார்த்துக்குறேன் முதல்ல என்கிட்ட வந்து பேசு. எனக்கு கன்வின்ஸ் ஆனா உன்னை விட்றதை பத்தி யோசிக்கிறேன் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று கூற

ஒரு வேலை உண்மையா நம்மல விடதான் பேச கூப்பிடுறானா இவனை நம்பி எப்படி போறது என்று நினைத்தவள் எப்படியும் தன்னிடம் பேசாமல் அவன் போகவே மாட்டான் என்று உணர்ந்த உத்ரா முதலில் மெல்ல வெளியே வந்து எட்டி பார்த்தாள்.

அனைவரும் உறங்குகிறார்கள் என்று அறிந்துக்கொண்டவள் பேசிக்கொண்டு இருந்த மொபைலை ஆஃப் செய்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கேட்டினை திறந்து வெளியே வந்து அவனின் அருகில் சென்றாள்.

உத்ரா இரவு உடையில் வந்ததை கவனித்தவன் கண்கள் அவளின் அழகில் மயங்கியது முழுமதியின் நிலவொளியில் கூட இப்படி ஒரு அழகா… உணர்வினை தட்டி எழுப்பும் அவளின் அழகில் சொக்கியவன் தன்னை மறந்து அவள் கன்னத்தில் கை வைக்க அஷ்வினின் கைகளை தட்டி விட்டவள் “ப்ளீஸ் தயவுசெய்து புரிஞ்சிக்கோ அஷ்வின் நீ நினைக்கிறா மாதிரி பொண்ணு நான் இல்ல. என்னை விட்ரு. மானம் மரியாதையோட வாழனும்னு நினைக்கிறேன்” என்று அவன் கால்களில் விழ மயக்க மருந்தினை கைகுட்டையில் வைத்திருந்தவன் குனிந்த அவள் முகத்தருகே கொண்டு சென்றதும் அதன் வீரியத்தில் மயங்கிட விட அப்படியே அள்ளி காரில் ஏற்றியவன் அவனுக்கு தெரிந்த ஹோட்டலை நோக்கி வண்டியை செலுத்தினான்.

வேகமாக சென்றுகொண்டு இருந்தவன் ஒரு திருப்பத்தில் எதிரே தாருமாறாக வந்த ஒரு வண்டி அவனின் வண்டியின் மீது மோத அது மோதிய அதிர்ச்சியில் மயங்கி இருந்தவளுக்கு விழிப்பு ஏற்பட்டதும் நடந்ததை நினைவுபடுத்தியவள் எப்படியும் அவன் கைகளுக்கு சிக்கக்கூடாது என்று எண்ணத்தில் ஒடும் காரில் இருந்து கதவை திறந்து வெளியே குதிக்க பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி கிழே விழந்து நொருங்கியது அவளுக்கும் கைகளில் முட்டியிலும் சிராய்ப்புகளுடன் காயமும் ஏற்பட அவளிடமிருந்து தவறி விழுந்த அலைபேசியை கவனிக்காமல் அவளை மட்டும் இழுத்து மறுபடி வண்டியின் உள்ளே தள்ளியவன் ஹோட்டலின் முன் நிறுத்தி இருந்தான்.

அங்கு அவனுக்கு உதவி செய்யும் ரூம் பாயின் மூலம் பின்பக்கமாக ஹோட்டலின் உள்ளே வந்தவன் அறைக்கு அழைத்து சென்று அவளிடம் தவறாக நடக்க பார்க்க அவனிடம் இருந்து திமிரி தப்பித்தவள் கையில் கிடைத்த பாட்டிலை எடுத்து சுவற்றில் அடித்து உடைத்து கைகளில் பிடித்துக்கொண்டு “நீ என்னை தொட்ட இப்படியே அறுத்துக்கிட்டு செத்துடுவேன் தவிற உனக்கு கிடைக்க மாட்டேன் டா” என்று ஆவேசமாக கூற

இவள் எங்கே அதை செய்வாள் என்ற நம்பிக்கையில் அவளின் அருகே செல்ல அவளின் கைகளில் செல்லும் நரம்பில் ஒரு வெட்டை ஏற்படுத்த “ஏய் வேணாம்டி சொல்றத கேளுடி. வேணாம்டி” என்று அவளை தடுக்க உத்ராவின் அருகில் சென்றவனின் கைகளில் காயப்படுத்த பாட்டிலை அவன் புறம் திருப்பியவள் அவன் அசந்த நேரம் பார்த்து அறையில் இருந்து தப்பி பால்கனியில் இருந்து குதித்து டாக்டர் தயாபரன் மருத்துவமனை வேனின் மேல் கூறியில் விழுந்து விட்டாள்(குழந்தையின் அழுகை காரணமாக அந்த நேரத்தில் ஹோட்டலில் வண்டியை நிறுத்தி இருந்தவர்கள் குழந்தைக்கு பசியாற்றி விட்டு அவர்களும் உண்டு கிளம்பி இருந்த வேலையில் உத்ரா மேலே இருந்து விழுந்ததது அவர்களும் வாண்டில் மேல் என்ன என்று கவனிக்காமல் எடுத்து சென்று விட்டதால் உத்ரா எங்கே ஏறி இருப்பாள் என்று கண்டறியமுடியாமல் போனது) அவள் விழுந்ததை அறியாதவர்கள் அவன் வருவதற்குள் வாகனத்தை அங்கிருந்து கிளப்பி சென்றிருந்தார்கள்.

இவை அனைத்தையும் ஒரு பெருமூச்சுடன் கூறியவன் “நான் வர்றத்துக்குள்ள அந்த வண்டி அங்கிருந்து கிளம்பிடுச்சிடா. எப்படியும் அவ கைய கிழிச்சிக்கிட்டதுக்கும் மேல இருந்து கீழ குதிச்சி விழுந்து அடிபட்டதுக்கும் அவ இறந்து இருப்பான்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். இப்படி உயிரோட வந்து என் கழுத்தை அருப்பான்னு நினைக்கல” என்று ஆத்திரத்துடன் கூறினான் அஷ்வின்.
~
இங்கு சாருகேஷோ தங்கையை தவறாக நினைத்ததை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டே “கேஷவையும் உத்ராவையும் ஒன்னா பார்த்ததுக்கு அப்புறம் அவ கூட நானும் அப்பாவும் சரியா பேசல..” என்று விரக்தியாய் ஒரு மூச்சை வெளியே விட்டவன்….

“பேசனும்…. பேசி இருக்கனும்... தப்பு பண்ணிட்டோம் ரெண்டுபேரும் பெரியதப்பை பண்ணிட்டோம்… அவ மனசை என்ன உறுத்தி இருந்துச்சின்னு கேட்க தவறிட்டோம் கண்ணால பார்த்ததை வைச்சி மட்டுமே எல்லாத்தையும் நிர்ணையம் பண்ணிட்டோம்” என்று முகத்தை மூடி அழுகையில் உடல் குலுங்க.

“அண்ணா காம்டவுன் ப்ளீஸ் என்ற பார்கவி “இப்படி நீங்க ஃபீல் பண்றதா இருந்தா சொல்ல வேண்டாம் விட்டுடலாம். அவ எப்படி கிடைச்சா என்ன இப்போ அவ உயிரோட இருக்கா அது போதும்” என்று நாற்காலியில் இருந்து எழ அவள் கைகளை பிடித்து பக்கத்தில் அமர்த்தியவன் “சொல்றேன் கவிமா சொல்றேன் அவ காணாம போன அன்னைக்கு நைட் வீட்டை விட்டு வெளியே போனது சிசிடிவி கேமரால பார்த்துதான் கண்டுபிடிச்சோம்... கேமரால எங்க வீட்டு எண்ட்ரன்ஸ் வரையும் தான் தெரியும்ன்றதால வெளியே யார் இருந்தா இவ ஏன் போனான்னு புரியல லெட்டரை பார்த்தும் தான் புரிஞ்சது. அவ தானா போனது எங்களுக்கு ஆச்சரியமாகவும் இருந்துச்சி அவளை காதலிச்சவனை நம்பன அளவு நம்மல நம்பலையேன்னு கஷ்டமாவும் இருந்துச்சி” என்றவன் “அவளை அன் அஃபிஷியலா அப்பவோட இன்ஃப்லூயன்ஸ் வைச்சி தேட வைச்சோம். ஆனா விடியற்காலையில் அவ வயசுலையே ஒரு இளம்பெண் சடலம் உருதெரியாம லாரி சக்கரத்தில் மாட்டி இறந்து இருந்ததா சொன்னாங்க ( ஏதேச்சையாக அதே சாலையில் லாரியின் அடியில் சிக்கி விபத்தில் உருதெரியாமல் போன பெண்ணில் சடலத்தின் பக்கத்தில் உடைந்து போய் இருந்த செல்ஃபோனின் சிம்கார்டு எண்களை வைத்து அது உத்ரா என்னும் முடி செய்யப்பட்டு இருந்தது) அதுக்கு பக்கத்துல ஒரு உடைந்த செல் ஃபோன் கிடைச்சி இருக்கு அதுல இருக்க சிம்கார்ட் நம்பர் உத்ராவோடது அதுவும் இல்லாம இறந்த பெண்ணின் வயதும் உத்ராவோட வயசுன்றதுனால அது வைச்சிதான் அது உத்ரான்ற முடிவு எடுத்தோம்” என்றான் உடைந்த குரலில்.

“அண்ணா அது உத்ரா இல்லன்னு ஏன் உங்களால கன்ஃபார்மா சொல்ல முடியல”

“ஒருத்தனை நம்பி ஏமாந்துட்டேன்னு சொல்லி அவளுக்கு அவளே அசிங்கப்படுத்திக்கிட்டா. இன்னும் அவளை அசிங்கப்படுத்தவோ இல்லை அவள் உடலை வருத்தி காக்கவைக்கவோ நாங்க விரும்பல அவளுக்கு விதி இவ்வளவு தான்னு நினைச்சி மனசை தேத்ததிக்கிட்டோம்” என்று கூற.

“கெட்டதுலையும் ஒரு நன்மை அவ்வளவு தான் ண்ணா. யாரோ முகம் தெரியாத ஆதரவு இல்லாத ஒரு பெண்ணோட உடலை நல்ல மரியாதையோட அடக்கம் பண்ணி இருக்கீங்க. அந்த புண்ணியம் தான் நம்ம உத்ரா நம்மகிட்ட வந்தது... இனி பழசை எல்லாம் மறந்துடுங்க. அவளுக்கு மட்டும் பழசு மறக்கல உங்களுக்கும் சேர்த்துதான் மறந்துடுச்சி ஓகேவா…” என்று கூறி என்ன என்று கண்களால் கணவனையும் கேட்க.

“நான் எப்பவோ மறந்துட்டேன். ஆமா நீ யாரு பாக்க அட்டு முஞ்சா இருக்கு. டேய் நம்ம கூட படிச்ச மாதவி தேவிகலா ரூபாலாம் செம’ல” என்று அவளை வெறுப்பேற்ற என்று கூற.

“ஆமா ஆமா அரைகிழவிங்க உங்க கண்ணுக்கு சூப்பராதான் இருப்பாங்க” என்று அழகு காட்டியவள் “உங்களுக்கு ரொம்ப வாய் அதிகம்” என்று அவனை துரத்த “போடுமா அவனை. இன்னும் நாளு போடு. அதுங்களும் அதுங்க முகரையும் நம்ம பக்கத்துல நிக்ககூட முடியாது. அதுங்க செமையாம் செம” என்று உசுப்பேற்றிக்கொண்டு இருந்தான் சாருகேஷ்.

~

அஷ்வினால் அடித்து விரட்டபட்ட வர்ஷா தந்தையை காண செல்ல 15 நாள் நீதிமன்ற காவலில் இருப்பதால் யாரையும் பார்க்க அனுமதி மறுக்கபட்டு விட ஆளவந்தனை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் நாளும் வந்தது. அப்போது தந்தையை காண சென்றவள் அஷ்வின் தன்னை இப்போது கைவிட துணிந்ததையும் அவனால் தான் மோசம் போனதையும் அழுகையுடனே கூறி முடித்தாள்.

ஆளவந்தான் இவ்வளவு நாள் இதையெல்லாம் பொருத்துக்கொண்டதே மகள் ஆசைப்படவன் இதில் மாட்டிக்கொள்ள கூடாதே என்பதற்காக தான் ஆனால் தன் மகளே கண்ணீருடன் வந்து கதறும்போது கொதிநிலையின் உச்சத்திற்கே சென்று விட்டார் அவர்.

“அவனை….” என்று பற்களை கடித்தவர் “நானே எமகாதகன் என்னைவிட ஜெக சித்தனா இருக்கானேடா…. மத்தவன் கண்ல நான் விரலை விட்டு ஆட்டுனா... நீ என் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டுறியா…. உன்னை விடமாட்டேன் டா. இவ்வளவுக்கும் நீ கொடுத்த ஐடியாவும் அந்த இழவெடுத்த ஃபேக்டீரியும் தானே காரணம்.... என் அம்முவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தான் உன்னை பத்தி மூச்சி விடாம இருந்தேன். நீ செத்தடா என்கிட்ட என் பொண்ணையே கலங்க வைச்சிட்டியே…. உன்னை பார்ரா இந்த ஆளவந்தன்னு யாருன்னு” கருவிவயவர்

“அம்மாடி வர்ஷா. இந்த நாய் இல்லன்னா என்னடா உனக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை நான் கொண்டாரேன்டா. இவன்லாம் ஒன்னுத்துக்கும் உதவாதவன் நீ இவவரசி டா... இளவரசன் மாதிரி ஒருத்தன் தான் உனக்கு புருஷனா வருவான்” என்று மகளை சமாதானம் செய்து அனுப்பியவர் மனதில் வஞ்சம் மட்டும் உழன்று கொண்டு இருந்தது.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 55
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN