காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 57

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலவு உச்சி்க்கு வரும் நேரம் இரவு மணி ஒன்றை கடந்து இருந்தது. வீட்டு வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு பால்கனியில் சிகரெட்டுடன் நின்றிருந்த தேவராஜ் கீழே பார்த்தான். காலையில் விழாவிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தவன் இன்று மதுவின் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வருவதை பார்த்த தேவராஜ் 'மறுபடி ஆரம்பிச்சிட்டானா காலையில் போனவன் இராத்திரி வரான் அதுவும் குடிச்சிட்டு வந்து இருக்கான்... கொஞ்ச நாள் இல்லாமல் இருந்தது... பொறுப்பா இருக்கான் ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுலாம்னு பார்த்தா இப்படி இருக்கானே விடியட்டும் பேசிக்கிறேன்'. என்று மனதில் நிர்மலின் செயலை கருவியன் விடியம் வரை காத்திருந்தான்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தவன் போதையில் அனைத்தையும் மறந்து நிம்மதியாக தூங்கி இருந்தான். விடிந்ததும் தேவாவின் கண்ணில் சிக்காமல் தப்பிப்பதற்காக காலையில் சீக்கிரமாகவே எழுந்து மருத்துவமனைக்கு கிளம்பியவனை "நிர்மல்" என்ற தேவாவின் குரல் தடுத்து நிறுத்தியது.

'பச் கண்ணுலையே படகூடாதுன்னு நினைச்சேன் மாட்டிக்கிட்டேனே என்று திருதிருத்தபடி தேவாவின் அருகில் போய் நின்றவன் பயத்தை மறைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாக "என்ன ணா மார்னிங் இயர்லியரா எழுந்துட்டிங்க?" என்று சாதாரணம் போல் கேட்க

"எல்லாம் உன்னை பார்க்கத்தான் நிர்மல்" என்று கூற

"என்னையா!!!.. என்ன எதுக்கு ணா? சொன்னா நானே உங்களை வந்து பார்த்து இருப்பேனே" என்று கூறியவன் மனதில் மட்டும் 'உத்ரா ஏதேனும் கூறி இருப்பாளோ?' என்ற அச்சத்துடனே தடுமாறி கேட்டு இருந்தான்.

அவன் தடுமாற்றம், 'தான் அவனை குடியை பற்றி கேட்க போவதாக எண்ணி பயப்படுகிறான்.' என்று நினைத்த தேவா அவன் தோல்களில் கையிட்டு "இப்படி வா" என்று அவனின் பதட்டத்தை குறைத்து சாப்பாடு மேசையில் அமர வைத்தான்.

அவர்கள் அமர்ந்ததும் உணவை பறிமாற வேலையாள் வர அவனை அனுப்பியவன் தானே தம்பிக்கு பறிமாறியபடி "நிர்மல் நீ இப்போ ஒரு உயர்ந்த ஸ்தானத்துல இருக்க உன்னோட பிகேவியரால அதை நீயே ஸ்பாயில் பண்ணிக்காத" என்று கூறுவும் சாப்பிட்டு கொண்டு இருந்தவனுக்கு புறையேற தம்பியின் தலையில் தட்டி தண்ணீரை கையில் கொடுத்தவன் தானும் அவன் அருகில் அமர்ந்தான்.

'எதை பேச காத்து இருந்து இருப்பார்... ஒரு வேலை உத்ரா விஷயத்தை சொல்லி இருப்பாளோ? எதுவும் நம்மல கேக்கரதுக்கு முன்னால நாமலே எல்லா உண்மையும் சொல்லிடுவோம்... முதல்லயாவது கொலை பண்ணுவேன், வண்டி ஏத்தி கொல்லுவேன்னு சொல்லிட்டு இருந்தாரு… ஆனா அவ இப்போ உயிரோட தானே இருக்கா அப்படின்னு பார்த்தா என்னை அடிப்பாரு இல்லை வீட்டு விட்டு வெளியே போக சொல்லுவாரு…'

'அவன் கூட சேர்ந்ததுக்கு நமக்கு வேண்டிய தண்டனைதான் எத்தனை நாளுக்கு பயந்து பயந்து சாகறது உண்மைய உடைச்சி விட்டுடுவோம்.' என்று நினைத்தவன் "அண்ணா அது நான் வேணும்னே ஏதும் செய்யல ணா... அந்த வயசுல அது தப்புன்னு தெரியலணா... பிரெண்ட் தான்." என்று ஆரம்பிக்கவும்

கையை நீட்டி அவனை தடுத்து நிறுத்திய தேவராஜ் "நிர்மல் நீ வேணும்னு செஞ்சதா நான் சொல்ல ஆனா இது உன்னோட லைப்... உன்னோட கேரியர்... இதுல நீ நல்ல பெயர் சம்பாதிக்கனும் ஒரு அண்ணானா நான் ஆசைபடுறேன். தேவராஜோட தம்பி நிர்மல்னு போய் டாக்டர் நிர்மலோட அண்ணன் தேவராஜ்ன்னு சொல்லனும்னு நினைக்கிறேன்... சின்னவயசுல தான் கூடாத சேர்க்கைன்னு சுத்திட்டு இருந்த. ஆனா இப்பவும் அதே போலயே குடி கும்மாளம் அது இதுன்னு இருக்குற... தயவுசெய்து எல்லா பழக்கத்தையும் விடு." என்றதும் தான் நேற்று தான் வீட்டிற்கு வந்த நிலையை பார்த்து சொல்கிறார் என்று புரிந்து கொண்டவன் "சாரி ணா நான் கன்ட்ரோல தான் இருந்தேன் ஆனா என்னையும் அறியாம கொஞ்சம் அதிகமாகிடுச்சி." என்று தலை குனிய

"விடுடா இது போல நடக்காம பாத்துக்க... உனக்கு சொல்ல வேண்டியது இல்லை நீயே டாக்டர் இதோட விளைவுகள் என்னங்குறது ஒரு டாக்டரா உனக்கு நல்லாவே தெரியும். புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்." என்றவன் "ஃபக்ஷன்ல இருந்து பாதில போனவன் தான் நேத்து நைட்டு வீட்டு வர்ற எங்க போற எப்போ வருவ எதையும் சொல்ல மாட்டங்குற. பொருப்பான இடத்துல இருக்கங்குறது எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்." என்று கடுமையாகவே கூறிட

பதில் சொல்ல முடியாமல் திணறியவன் "ஒரு முக்கியமான பேஷண்ட் ணா தவிர்கக முடியல அதான் பாதில போக வேண்டியதா போயிடுச்சி. அதை முடிச்சிட்டு அப்படியே பிரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு வீட்டுக்கு வர லேட் ஆகிடுச்சி. இனி இது போல ஆகாம பாத்துக்குறேன்." என்றவனை "ம்." என்று தலையாட்டி "உன் நல்லதுக்குதான் நிர்மல் சொல்றேன். பாத்து நடந்துக்க." என்றவன் நேற்று சாருகேஷின் தங்கை உத்ரா கிடைத்த விஷயத்தை பத்தி தொடங்கவும் கொஞ்சம் வேர்த்து போனது அவனுக்கு

"அவங்க எப்படிணா கிடைச்சாங்க. சென்னையில் டாக்டர் தயாபரன் கிட்ட கிடைச்சி இருக்கா. இதுல கொடுமை என்னன்ன அவளுக்கு பழசு எதுவும் ஞாபகம் இல்லை." என்றதும் அவனை சுற்றி ஒளிவட்டம் ஒன்று உறுவானது போல முகம் பிரகாசமாய் மாறி இருந்தது.

அதே அதிர்ச்சியுடன் "என்னன்னா சொல்றிங்க?" என்று கேட்க

"ஆமா நிர்மல். இதை பத்தி பேசத்தான் நைட் அவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன். சாருகேஷ் உன்கிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணும்னு கேட்டிருந்தான். உனக்கு எப்போ முடியும்னு சொல்லு ஹாஸ்பிட்டல் வந்து மீட் பண்றேன்னு சொல்லி இருக்கான்." என்று கூறிட

அவளுக்கு தன்னுடைய கடந்த காலம் நினைவில்லை என்ற தகவல் தெரிந்ததும் வானுக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக மகிழ்ச்சி கடலில் முழ்கியவன் தன்னை தெரிந்த ஒரே நபர் என்றால் அது உத்ரா அவளுக்கு நியாகம் இல்லை என்றால் இதில் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அர்த்தமற்றது என்று நினைத்தவன் தைரியமாகவே "மதியம் கொஞ்சம் பிரியா தான் இருப்பேன். வரச்செல்லுங்க அண்ணா மறக்காம உத்ரா மெடிக்கல் பைல் எடுத்துட்டு வரச்சொல்லுங்க என்றவன் சந்தோஷமாகவே மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றிருந்தான்.

இரவு முழுவதும் குடித்துக்கொண்டே இரவை போக்கிய அஷ்வின் விடியும் போதுதான் உறங்க ஆரம்பித்தான். அப்போது நிர்மலின் போன் கால் அவனை எழுப்பிக்கொண்டு இருந்தது.

குப்புற படுத்து இருந்தவன் கண்களை திறக்காமலே போனை எடுத்து ஆன் செய்து காதுகளுக்கு பொருத்தி இருக்க

"ஹலோ... அஷ்வின்" என்ற நிர்மலின் குரலை கேட்டவனுக்கு இரவு நடந்தது கண் முன் நிழலாடி ஆத்திரமாக வர கிடைத்த கெட்ட வார்த்தைகளால் அவனை அர்ச்சனை செய்து போனை வைக்க போக,

அவன் திட்டியதில் போனை காதிலிருந்து விலக்கி பிடித்து இருந்தவன் வசவு மழை அடங்கவும் போனை கீழே வைக்க போகும் சமயம் அறிந்து "டேய் ஃபூல் எதுக்கு போன் பண்ணன்னு தெரியாமலையே இந்த பேச்சி பேசுறியே மனுசனாடா நீ வாய துறந்தா ஊர்ல இருக்க மொத்த குப்ப தொட்டியும் அதுல தான் இருக்கும்போல. அவ்வளவு நாறுது." என்று நண்பனை கேலி பேசியவன் "முதல்ல பெட்டை விட்டு எந்திரி நாயே." என்று கட்டளையிட்டான்.

'நாம இவ்வளவு பேசியும் கோவபடாம சிரிச்சா மாதிரி பேசுறான். நைட்டெல்லாம் புலம்பிகிட்டு போனான் இப்போ என்ன ஆச்சி அதிர்ச்சில மரகிரம் கழண்டுடுச்சா!?' என்று சந்தேகத்தில் மெத்தையில் அமர்ந்தவன் "டேய் என்னடா நல்லா இருக்கியா? இல்ல!" என்று ஆரம்பிக்கவும்.

"மச்சி நான் சொல்ல போற விஷயத்தை கேட்டா என்னைவிட நீதான் ரொம்ப சந்தோஷ படுவ." என்று கூற

"டேய் ரம்பமா அறுக்காதடா. ஏற்கனவே தலை சுத்தி போய் இருக்கேன் விஷயத்தை சொல்லி தொலை வருத்தப்படுறதா இல்ல சந்தோஷபடுறதான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்." என்று எரிந்து விழ

உத்ராவின் தற்போதைய நிலையை விளக்கியவன் மதியம் அவள் அண்ணன் சாருகேஷை சந்திக்க போவதாக கூற அஷ்வினின் மனதில் இப்போது அவளின் முழு விபரங்களை அறிய ஆவல் உண்டானது.

மனதில் பல திட்டங்களை வகுத்தவன் "மச்சி இப்போதான்டா எதோ க்ளியர் ஆனா மாதிரி மனசு நிம்மதியா இருக்கு. அவளை பத்திய ஃபுல் டிட்டெயலோட வா மாப்புள." என்றதும்

"ஏய் எதுக்குடா அவளோட டிட்டெயல் நாம பயந்தா மாதிரி அவளுக்கு நம்மள ஞாபகம் இல்லை. அது வரை உத்தமம்னு நினைச்சி சந்தோஷபடு அதை சொல்லி உன்னோட பிரஷரை குறைக்க தான் போன் பண்ணேன். இது என் பேஷன்டோட பர்சனல் இதை யாருக்கும் கொடுக்க முடியாது வேற ஏதாவது ஏடாகூடமாக மனசுல நினைச்சி இருந்தா அதை இப்பவே அழிச்சிடு பை." என்று போனை வைக்க

"அடப்பாவி ஒரேயடியா நல்லவான மாறிடுறானுங்களே. நம்மளால மட்டும் ஏன் இவனுங்க கூட ஒத்து போக முடியல ஒரு வேல மேனுஃபேக்சரிங் டிபக்டா இருக்கலாம். நீ இல்லனா என்னடா உன் ஹாஸ்பிட்டல காசு கொடுத்தா வேலை செய்ய அவ அவன் காத்து கெடக்கான்.

மாமா... ஒரு முறை கோட்டை விட்ட அந்த பச்சை கிளிய இந்த முறை தப்ப விடுவேனா... மாமா எப்படி புடிச்சி மடியில சாய்க்கிறேன் பாருடா... அவளுக்கு தான் நியாபகம் இல்லையே இனி நம்ம வேலைய காட்ட வேண்டியதுதான்... முன்னாடி எப்படி இருந்தாலோ இப்போ அதை விட இன்னும் லுக்கா அதை விட கிக்கா இருக்காளே... இவளை எப்படி விடுறது?!" என்று தனக்கு தானே பேசியவன் "இப்போ நாம நல்லவனா வேஷம் போடனும் முதல்ல இந்த குடியை கட் பண்ணனும்." என்று அடுத்ததடுத்த திட்டங்களை வகுத்தவன் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை இப்படியும் அப்படியுமாக பார்த்துக்கொண்டே "இன்னும் கிளமார தான்டா இருக்க மாமா..." என்று தனக்கு தானே பாராட்டியும் கொண்டான்.

~

"முதல்ல மேல இருந்து கைய எடு எடுன்னு சொல்றேன்ல எடுடா." என்று கத்திக்கொண்டு இருந்தாள் தியா...

"பீளிஸ் வது டார்லிங்..." என்றவன் அவனை இன்னும் முறைத்துக்கொண்டு நின்ற தியாவை சுற்றி வந்து முன்னால் நின்று கன்னத்தை பிடித்து "என்னடி இப்படி கெஞ்ச விடுற?" என்றதும்.

தன் கன்னங்களை பற்றிய அவனின் கைகளை கிள்ளி விட ஸ்... ஆ... என்று அலறியவனின் முகம் பார்த்தவள் "உன்னையெல்லாம் துறத்தி அடிக்காம கெஞ்ச விடுறேனேன்னு சந்தோஷப்படு... எப்படி எப்படி இவரு கார்ல வரப்போ வேனும்னே என் மேல தண்ணிய ஊத்துவாராம். நான் ஏன் ஊத்தினிங்கன்னு கேட்டா சம்மந்தம் சம்மந்தமில்லாம பேசுவாறாம். நாங்க இவர காதலிக்கிறோம்னு உண்மைய என் வாய்ல இருந்தே வரவழைக்க டிரை பண்ணுவாராம். என்னடா என் தலைல வித்தியா ஒரு இளிச்சவாயின்னு எழுதி ஒட்டி இருக்கா?" என்று அவன் நெஞ்சில ஒற்றை விரலை குத்தி தள்ளி கேட்க

அவள் நெற்றியை கிட்ட வந்து உற்று பார்த்தவன் "அப்படி இல்ல வது மா!" என்று பாவமாய் முகத்தை வைத்து சொல்ல

"டேய் நடிக்காத டா நல்ல ஆளுதான் நீ... பார்க்க ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இருக்க ஆனா செஞ்சது எல்லாம் அட பாவின்னு சொல்ற மாதிரி இருக்கு." என்று முறைத்தவள் அவனின் சட்டையை பிடித்து "அத்தைக்கு நான் உன்னை விரும்புறேன்ற விஷயம் தெரியும்ன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா? தெரியாதா?" என்று ஆவேசமாக கேட்க

அவன் இதழ்களில் புன்னகை பூக்கவும் "டேய் சிரிக்காதடா. சொல்லு தெரியுமா? தெரியாதா?" என்று அவனை உலுக்க அதே சிரிப்புடனே தன் சட்டையில் இருந்து அவள் கைகளை எடுத்து தன் தோல்களில் மாலையாக போட்டுக்கொண்டவன் "இப்படி கேட்டா உனக்கு வேண்டிய உண்மையெல்லாம் வரும்..." என்று கூறவும் அவன் உடலோடு உடல் உரசியபடி ஒட்டி நிற்க இவ்வளவு நேரம் அனலாய் அவன் மேல் தகித்து கொண்டு இருந்தவள் சித்துவின் இந்த திடீர் தாக்குதலில் பூஞ்சாரலாய் மாறி குளிர்ந்து போய் இருந்தாள். கண்கள் படபடவென்று பட்டாம்பூச்சியின் சிறகுகளாய் அடித்துக்கொள்ள இதயத்தில் ஓசை காதுகளுக்கே கேட்கும் அளவிற்கு அதிர்வின் பிடியில் இருந்தவளுக்கு அவனின் உடலின் உஷ்ணத்தை உணர்ந்திட பெண்மைக்கே உண்டான நாணம் அவள் கன்னங்களில் குடியேர அவன் முகம் பார்க்க முடியாமல் சித்துவின் நெஞ்சினிலே ஆழ புதைந்து கொண்டவள் அவனை விட்டு விலக வேண்டும் என்ற மட்டும் எண்ணம் கொள்ளவே இல்லை...

"இப்போ என்ன வேணும் கேளு... இப்படி கேட்ட உனக்கு வேண்டிய எல்லா விஷயமும் வரும்..." என்று அவளை அணைத்தபடியே நயமாக கூற

எங்கே! அவள் தான் தமிழில் இருக்கும் அத்தனை வார்த்தைகளும் மறந்து போய் இருந்தாளே... வார்த்தைகள் அற்ற மௌனம் அங்கே நிறைந்திருக்க அவளின் படபடக்கும் நிலையை உணர்ந்து தன் கை வளைவில் கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தியவன்...

அவள் நாடியை நிமிர்த்தி பார்த்து "நானா! எதுவுமே நம்ம பத்தி அவங்க கிட்ட சொல்லலடி... தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாம வந்த போதே என் ரூம்ல இருந்த உன் டைரி மூலமா அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சி இருக்கு... மாமா என் கல்யாண விஷயம் எடுக்கும் போது என் அத்தை அவங்க பொண்ணை எனக்கு தான் கொடுக்கனும்னு உறுதியா இருக்கவும்.... இதுவரை சொந்தங்களை பத்தி யோசனையில இருந்தவங்க நீதான் மறுமகளா வரனும்னு ஆசைப்பட்டாங்க... அவங்க ஊருக்கு வர இரண்டு நாள் முன்ன தான் உன்னை பத்தியும் உன் டைரிய பத்தியும் என் கிட்ட பேசினாங்க. அதுவரையிலும் நீ எதுக்கு என்னை ஒதுக்குறன்னு தெரியாம திண்டாடிக்கிட்டு இருந்தேன். அம்மா பேசின பிறகுதான் என் மனசுல இருக்கறதை சொன்னேன். அவங்க சொன்ன விஷயத்தை வைச்சி உன் மனசுல இருக்கிறதை கண்டுபிடிச்சிட்டேன்.

அதுக்கப்புறம் தான் உன் கிட்ட பேசினேன். ஆனாலும் உன் கிட்ட விஷயத்தை வாங்க முடியல அம்மா வந்து இது எல்லாம் நடக்கனும்னு இருக்கு... ஆனா இவ்வளவு சீக்கிரம் இது நடக்கம்னு நானும் எதிர்பாக்கல இங்க வந்த பிறகுதான் நம்ம கல்யாண விஷயமே எனக்கு தெரியும்... இது எனக்கும் கூட சர்பிரைஸ் தான் வதுமா..." என்றவன் "இது எங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல கவிக்கும் நம்ம லவ் மேட்டர் தெரியும்..." என்று கூறிவிட

அவனையே பார்த்து கொண்டு இருந்தவள் முகத்தில் பலவிதமான உணர்வுகளை வெளிபடுத்தி இருக்க கவிக்கு தெரியும் என்று கூறியதில் அதிர்வை வெளிகாட்டியவள் "கவிக்கு தெரியுமா? அவளுக்கு எப்படி தெரியும் நீ சொன்னியா?" என்று சித்துவை கேட்க...

"அடியே மண்டு... நான் எப்படி டீ அவ கிட்ட சொல்ல முடியும்? உன் தங்கச்சிய லவ் பண்றேன்னு சொன்னா அவ என்னை பத்தி என்ன நினைப்பா?" என்று அவளின் தலையை தட்டிவிட

"ச்சீ பே..." என்று அவனை திட்டியபடியே தலையை தேய்த்தவள் "அதானே எப்படி சொல்ல முடியும் அப்போ எப்படி தெரிஞ்சிது சித்து?" என்றிட

இது நம்ம ரெண்டு பேரோட நடவடிக்கைய வச்சே கண்டு புடிச்சிட்டா... என்னை தனியா வைச்சி லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா..." என்றதும்

"எதுக்கு என்னை லவ் பண்ணதுக்கா?" என்று பாவமாக கேட்க

"பச் அதுக்கில்லடி... அவ கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு... ஏன் என்கிட்ட சொல்லல? 'உனக்கு எல்லாம் பிரெண்ட் ஒரு கேடா?' அப்படி இப்படின்னு போட்டு வாங்கிட்டா..." என்று அலுத்துக்கொண்டு கூறியவன் "அது எப்படி அக்கா தங்கச்சி ஒரே மாதிரி இருக்கிங்க? அடுத்தவன் என்ன பேச வரான்னு தெரியாம கிழி கிழின்னு கிழிச்சிடுறிங்கடி. ஆனா ஒன்னு உன்னை விட அவ பரவாயில்லை... அடி கொஞ்சம் பதமாதான் விழுது..." என்று கூறியவன்

அவன் கூற கூற முறைத்துக்கொண்டு இருந்தவள் அவன் கடைசி வாக்கியத்தை முடிக்கவும் சித்துவை அடிக்க துறத்திக்கொண்டு சென்று கையில் கிடைத்த குச்சியை வைத்து அவன் கால்களில் விளாச அவளை தடுத்தபடியே வந்தவன் சுற்றி வளைத்து பின்னில் இருந்து அணைத்துக்கொண்டு காதுகளில் இதழ் பதிக்க

"போடா... எப்பவும் கோபம் வரமாதிரி பண்ணிட்டு உடனே ஆப் பண்ற... மரியாதையா எதிரல நில்லு பக்கத்துல வந்த மகனே கைய உடைச்சி போட்டுடுவேன்..." என்று அவனை மிரட்டியவள் "ஒழுங்க வர்ரதுனா உன் கூட வர்ரேன் இல்ல நான் தனியா வண்டில போறேன்..." என்று அவனிடம் இருந்து விலகி நடக்க

"டேய் வதுமா... வது டார்லிங்... மாமா எதும் பண்ணல... வாடி நல்ல பையனா வறேன்... வாடி..." என்று அவளை தாஜா செய்து வண்டியில் அமர வைத்தவன் "வதுமா ரொம்ப கஷ்ட பட்டியா?" என்று கேட்டுவிட... அதுவரை சிரித்த முகமாக இருந்தவள் முகம் வாடி விட்டது.

அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவன்... அவள் பதிலுக்காக காத்திருக்க... அவள் "ம்... இன்னும் கொஞ்சம் நாள் இப்படியே போயிருந்தா செத்துருப்பேன்." என்கையில் அவள் கண்கள் கலங்கி இருந்தது...

அவளை அணைத்து ஆசுவாசப் படுத்தி வண்டியை எடுத்தவன் நண்பர்களை வர சொல்லிய ஹோட்டலிற்கு சென்றான்.

~

மதிய இடைவேளையின் போது கையில் உத்ராவின் குறிப்புகள் அடங்கிய மருத்துவ கோப்புடன் நிர்மலின் மருத்துவமனைக்கு வந்தான் சாருகேஷ். ரிசப்ஷனில் நின்றிருந்த பெண்ணிடம் வந்தவன் "கேன் ஐ மீட் டாக்டர் நிர்மல்?"

"எஸ் சுவர் சார்... யுவர் நேம் பிளிஸ்?" என்றே ரிசிவரை எடுத்தவள் அவன் பெயருக்காக காத்திருக்க "சாருகேஷ்" என்றவன் நிர்மலின் அழைப்பிற்காக நின்றிருந்தான்.

"எஸ் டாக்டர்..." என்றவள் அவன் புறம் திரும்பி "சார் உங்களுக்காக தான் டாக்டர் வைய்ட் பண்ணிட்டு இருக்கார்... நேராய் போய் இடது பக்கம் முதல் அறை சார்." என்றதும் அவள் சொன்ன திசையில் திரும்பியவன் நிர்மலின் அறைக்கு வந்து கதவை தட்டி உள்நுழைந்தான்.

சாருகேஷை பார்த்ததும் நாற்காலியில் இருந்து எழுந்து வந்த நிர்மல் "வாங்க... வாங்க அண்ணா..." என்று அவனை அழைத்து இருக்கையை காட்டி அமர சொல்லி தானும் அமர்ந்தான். இருவரும் பரஸ்பர நல விசாரிப்புக்களை தொடர்ந்து நிர்மலே "சொல்லுங்க அண்ணா பார்க்கனும்னு சொல்லி இருந்திங்களாம் தேவா அண்ணா சொன்னார்..." என்று அவனே விஷயத்தை ஆரம்பிக்க.

"ஆமா நிர்மல் தேவாகிட்ட பேசி இருந்தேன்... உன்னை பார்க்கனும்னு சொல்லி..." என்று சிறிது இடைவெளி விட்டவன் "உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்... இறந்ததா நினைச்சிட்டு இருந்த என் தங்கை உத்தரா எனக்கு திரும்பவும் கிடைச்சிட்டா..." என்றான்.

"தெரியும் ணா... அண்ணா சொன்னார் நானே நேரில் பார்த்தேனே... தீடீர்னு ஒரு அவசர கேஸ் வந்ததால என்னாலதான் அன்னைக்கு ஃபுல்லா பங்கஷன்ல இருக்க முடியாம போயிடுச்சி." என்றவன் "இப்போ எப்படி ணா இருக்காங்க?" என்று அவளை பாற்றி விசாரிக்க

"ம் நல்லா இருக்கா நிர்மல் அவளை பத்தி தான் கொஞ்சம் கவலையா இருக்கு." என்றவன் அவள் குறிப்புகள் அடங்கிய கோப்பை நிர்மலின் புறம் நீட்ட அதை வாங்கி பார்த்தவன் "ஏன் அண்ணா கவலை?" என்று கேட்டபடியே அதை வாங்கி ஆராயந்து பார்க்க ஆரம்பித்தான்.

"இப்போ அவளுடைய உடல் நிலை நல்லா தான் இருக்கா..?" என்றதும் அதிர்வாய் அவனை பார்த்தான் நிர்மல் "என்ன அண்ணா? என்ன கேட்டிங்க?"

"உத்ராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு ஆசைபடுறேன் நிர்மல்... அவளோட கடந்தகாலம் இதுக்கு தடையா இருக்குமோன்று ஒரு பயம் அதான் அவளோட ரிப்போர்ட்டை கொண்டு வந்தேன்..." என்று கலக்கமான குரலில் கூறினான் சாருகேஷ்.

கூறியதை கிரகித்துக்கொண்டவன் உத்ராவின் குறிப்புகளை பார்த்துவிட்டு "டோண்ட்வொரி ணா... உத்ரா பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்... நவ் ஷீ மே 100 பர்சன்ட்டேஜ் கம்ப்ளீட்லி கேப்பபில் டு ஹேவ் மேரேஜ்.. யூ கேன் ப்ரொசீட் ஃபர்தர்..." என்று கூறியவன் "அவங்க நல்ல ஆரோக்கியமா தான் இருக்காங்க அண்ணா பயப்படும் அளவு எதுவும் இல்லை" என்று கூற

"நிர்மல் அவ மனநிலை.?. அவளுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. கல்யாணம் ஆகி பழைசு நினைவு வந்துட்டாலும் இப்போ அவ பார்க்குற எல்லாம் மறந்துடுமா? இதை நம்பி அவளுக்கு கல்யாணம் பணணாலாமா?" என்று சந்தேகமாக கேட்க

"உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் வந்தபிறகு அதை கிளையர் பண்றதுதான் நல்லது..." என்றவன் தனது மேசையில் இருந்த செல்லை எடுத்தவன் எண்களை அழுத்தி காதில் பொருத்தி இருந்தான்.

"ஹலோ டாக்டர் கல்யாணி... ஆர் யூ ஃப்ரி நவ்?" என்று கேட்டவன் உங்களை மீட் பண்ணனும்... தெங்கஸ் உடனே வரோம்..." என்றவன் தனது மருத்துவமனையிலையே மனநல மருத்தவர் என்ற பெயர் பலகை தாங்கிய டாக்டர் கல்யாணியின் அறைக்கு அழைத்து சென்றான்.

உத்ராவின் மருத்துவ குறிப்புகளை படித்தவர் இவங்க என்று உத்ராவை பற்றி கேட்கவும்

சாருகேஷ் "என்னுடைய தங்கை டாக்டர்" என்று மருத்துவரிடம் உறைத்தவன் அவரின் பதிலுக்காக காத்திருந்தான்.

"சி மிஸ்டர் சாருகேஷ் ரொம்ப சென்சிட்டிவான ஒரு விஷயம் அதுல அவங்க ரொம்ப பாதிக்கபட்டு இருக்காங்க.... சொல்ல முடியாது அவங்க நினைவு திரும்ப ஒருவாரம் ஆகலாம்... ஏன் ஒரு மாசம் ஆகலாம்... இல்லை ஒரு வருஷம் கூட ஆகலாம்... ஏற்கனவே நாலு வருஷம் கடந்த காலத்தின் சுவடே இல்லாம இருந்து இருக்காங்க. ஆனால் அவங்க நினைவை தட்டி எழுப்புற ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால் ஒரு வேலை மறந்த பழைய நினைவு திரும்ப வரலாம்... இதுலாம் ஒரு யூகமே... உத்ராவை நேரா அழைச்சிட்டு வாங்க பேசி பாக்கலாம்... நானும் டாக்டர் தயாபரன் சாரோட பேசிட்டு சொல்றேன்...." என்று அவர் கூறிவிட அங்கிருந்து நிர்மலிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்றுவிட்டான்.

~

அலுவலகத்தில் பணிகளில் முழ்கி இருந்தவனை கவியின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தி கொண்டே இருக்க ஃபைல்களை பார்த்த வண்ணம் அதை காதுக்கு கொடுத்தவன் "ஹலோ..." என்றதும் அந்த பக்கம் அதிரடியாய் ஆட்டோபாம் வெடிக்க தயாராய் இருந்தது.

"என்ன நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல? ஒரு இடத்துக்கு வறேன்னு சொல்லி இருந்தோமே ஒருத்திக்கிட்ட... மக்குமாதிரி நமக்காக காத்துட்டு இருப்பாளேன்னு கொஞ்சம் கூட உங்களுக்கு நினைப்பு இருக்காதா?... ஆப்பீஸ் போனா பைலையே கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருப்பிங்களா? சுத்தி முத்தீலும் என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டிங்களா?" என்று படபடவென பட்டாசாய் பொறியும் மனைவியின் கோவத்தில் சிரிப்பு வந்து விட

"ஹேய் ஹேய்... வைட் வைட்... உன்கிட்ட சொன்ன டைமுக்கு கரெக்டா அங்க இருப்பேன்டி உன் மச்சி... உனக்கு ஆட்டோபாம்னு சொன்னா மட்டும் கோவம் வரும் ஆனா நான் ஸ்டாப் சரவெடி மாதிரி சும்மா வெடிச்சிக்கிட்டே இருக்கியடி..." என்று அவளை சீண்டியவன் "கோவபடாத பேபி இன்னும் பத்து நிமிஷத்துல உன் முன்னாடி இப்பேன்டி ஆட்டோ பாம்..." என்றிட "உங்களுக்காக வைட் பண்ணிட்டு இருக்கேன் மச்சி சீக்கிரம் வந்துடு..." என்றவள் மனமே இல்லாமல் போனை வைத்து அவனுக்காக காத்திருக்க காதல் பறவைகள் இரண்டும் ஒன்றை ஒன்று முறைத்தபடி எதிர் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.

"இந்த முறை வர சொல்லவே சண்டகோழிங்க மாதிரி முறைச்சிட்டு வருதுங்க... இதுங்க நடுவுல போனா உயிருக்கு உத்திரவாதம் இல்ல அதுவும் இது பஜாரி. நம்ம வாய கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டுடும்..." என்று கோபி அமைதியாய் இருவரையும் பார்த்துவிட்டு கவியை பார்த்து செய்கையிலையே என்னவென்று கேட்க அவளும் உதட்டை பிதிக்கி தெரியலை என்று பதிலளித்து காதல் புறாக்களையே பார்த்து இருந்தாள்.

"என்ன தியா முகத்துல யாரு ரெட் கலர் பெயிண்ட் அடிச்சது?" என்று

கவி அவளின் சிவந்த கோபமாய் இருக்கும் முகத்தை பார்த்து விளையாட்டாய் கேட்க

அவளை முறைத்து "என்ன ஜோக்கா? சிரிப்பு வரலை..." என்று முகத்தை திருப்பியவளின் பார்வையில் கோபி குனிந்து சிரிப்பை அடக்குவது தெரிய அவனின் முன்னால் போர்க்கை "நீட்டி மகனே வாய் துறந்து சிரிச்ச தொண்டையிலையே குத்திடுவேன்..." என்று மிரட்ட தன்னை கட்டுபடுத்தி சிரப்பை அடக்கியவன் சித்துவின் புறம் சாய்ந்து "இந்த பஜாரி ஏண்டா இந்த எகுறு எகுறுது?"

"பச் அதையேண்டா கேக்குற? வரும்போது என் மாமா பொண்ணு ஒன்னு... அது என் கிரகம் அது பேரு கூட தெரியாது ஏதோ சொன்னுச்சே அஹ் ஞாபகம் வந்துடுச்சி மகாவாம்... அது எனக்கு கால் பண்ணுச்சி... என் கெட்ட நேரம் அந்த போனை இந்த ரத்தகாட்டேரி எடுத்துடுச்சி அது என்ன உளறுச்சின்னு தெரியல. இதுக்கு என்ன புருஞ்சிதுன்னும் தெரியல. புறப்படும்போது ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடிஞ்ச பாடு இல்ல. அந்த மூஞ்சு முகம் தெரியாத மகாவால இன்னும் என்ன என்ன கொடுமையெல்லாம் வருமோன்னு தெரியல." என்று பரிதாபமாக சொல்ல

"மாப்ள உன் பாடு கஷ்டம் தான்." என்று கூறி நல்ல பிள்ளையாய் அமர்ந்து இருக்க உத்ரா மனதிலும் மூளையில் கோபி கூறிய வரிகளே ஓடிக்கொண்டு இருந்தது சித்து வந்ததைரோ இல்லை தியா கோவமாய் இருப்பதையோ எதையும் உணராதவள் தன் சிந்தனையிலையே முழ்கியபடி ஒரே இடத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க கவி தான் "உதி உதிமா... என்ன பேபி ஏதோ டீப் திங்கிங் ல இருக்க போல?"

சட்டென சுயத்தை அடைந்தவள் "பச் பச் அது எல்லாம் ஒன்னும் இல்ல கா... சும்ம ஊர்ல விட்டுவிட்டு வந்தேன்ல ஒரு குட்டி பாப்பா அவனை பத்தி நினைச்சிட்டு இருந்தேன்... பாப்பா கண்ணுக்குள்ளையே இருக்கு வந்து இத்தனை நாள் ஆச்சி டெய்லி பேசுறேன் இருந்தாலும் நேர்ல பாக்குறாமாதிரி ஆகுமா?" என்று உண்மையை மறைத்து கூறி இருந்தாலும் அதுவும் அவள் மனதில் இருப்பதைதான் கூறி இருந்தாள்.

தியா உத்ராவை கேட்கவும் சட்டென உத்ராவை பார்த்த கோபி அவள் முகம் சிந்தனையாக இருந்ததையும் கவனித்து இருந்தான்... 'நாம காதலை சொன்னதுனால வந்த மாற்றமாதான் இருக்கனும்....' என்று நினைத்தவன் 'நடந்ததை மாத்த முடியாது.' என்று பெருமூச்சி ஒன்றை வெளியேற்றியவன் இனி அவ கண்ணுல பட்டு அவளுக்கு சங்கடத்தை கொடுக்காம இருக்க முயற்சி பண்ணனும் என்று நினைத்தவன் தன் பார்வையை அவளிடம் இருந்து பிரிந்து வேறு இடத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

அவளின் பேச்சில் உத்ராவை பார்த்த தியா இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவாங்களா.... உங்களுக்கு அவங்களை பாக்கனும் போல இருந்தா.... உடனே அண்ணா கிட்ட சொல்லுவிங்களாம்... சட்டுன்னு போய் பார்த்துட்டு வருவிங்களாம்..." என்று அவளின் கவலையை போக்க வழி கூறினாள்.

அவளின் ஏற்ற இறக்கமான பேச்சிலும் அவளின் முக பாவத்திலும் தன்னை தொலைத்து அவளை விழுங்கியவன் "எல்லார்கிட்டாயும் நல்லா பேசு என் கிட்ட வந்தா மட்டும் முகத்தை எட்டு அடிக்கு நீட்டி வைச்சிக்கோ. என்கிட்ட தனியா மாட்டமலையா போய்டுவ? எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சி வசூல் பண்றேன்டி..." என்று அவளுக்கு மட்டும் உதட்டசைவில் கூற இவ்வளவு நேரம் இருந்த கோபமும் மறைந்து வெட்கத்தில் முகம் மலர்ந்து சிவந்து போனாள் தியா.

'இனியும் நாம ஒருமாதிரி இருந்தா எல்லாரோடைய கவனமும் நம்ம மேலதான் திரும்பும் இதை இப்படியே விட்டுடுவோம்." என்று நினைத்த உத்ரா தியா கூறிய சமாதானத்தை ஏற்றுக்கொண்டவளாய் பளிச் சிரிப்புடன் இருக்க முயன்றாள்.

இவர்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கேஷவும் வர அங்கே மகிழ்ச்சியாக அந்த மதிய பொழுது சென்றது....

~

கேஷவ் இரவு லேப்டாப்பில் அண்ணனுடன் உறையாடியவன் கம்பெனி சம்மந்தமான முடிவுகளும் அதற்கு ஜெயந்தின் கருத்துக்களையும் கேட்டு கொண்டு அண்ணனை சீக்கிரமே எதிர்பார்ப்பதாக கூறி இருக்க

"டேய் எனக்கும் தான்டா உங்களையெல்லாம் பாக்கனும் போல இருக்கு... மதுவ தனியா விட்டு எப்படி வர்ரது இன்னும் இரண்டு மாசம் தான் பல்லை கடிச்சகட்டு எனக்காக கொஞ்சம் தாக்குபிடி டா அவளுக்கு படிப்பு முடிஞ்ச அடுத்த நாளே பிளைட்ட புடிச்சி அங்க வந்து இறங்கிடுறேன்..." என்று கூற

"அண்ணனாச்சேன்னு பாக்குறேன் இல்லை துக்கி போட்டு போயிட்டே இருப்பேன்டா. உன்னை பாக்கனும்னு தான் சொன்னேன் கம்பெனிய பாக்க முடியலன்னு சொல்லல. ஆனா வந்ததும் இந்த பொருப்பை எல்லாம் திரும்பி நீயே எடுத்துக்கல மகனே நாலா பக்கமும் சுழல்ற நாக்கை வெட்டி விட்டுடுவேன் என்று கூற

"டேய் ஒரு கெம்பெனியோட எம். டி மாதிரி பேசு டா ரவுடி மாதிரி பேசுற... உத்ரா சாருகேஷ் எல்லாம் சேரந்துட்டதும் கலேஜ் நியாபகம் வருதோ வரத்தானே செய்யும் முன்னால் காலேஜ் ரவுடி தானே." என்று தம்பியை சீண்ட

போதும் டா இன்னைக்கு நான்தான் மாட்டினேனா உனக்கு போ... போய் வேற உறுப்படிய்ன வேலை வேற ஏதாவது இருந்தா பாரு என்றவன் ஜெயந்திற்கு கையசைத்து விடையளித்து லேபை மூடி மேசையின் மேலே வைக்கத்தவன் தன் அருயீர் மனைவியை அறையில் கண்களால் அலச

அப்பாவின் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்கு வந்தவள் அவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் பேச வேண்டும் கணவனின் மார்பில் சாய்ந்துகொள்ள வேண்டும் அவனின் தொடுகை வேண்டும் செல்ல சண்டை வேண்டும். என்று எதிர்பார்த்து ஏங்கி கிடந்தவளுக்கு வந்ததும் வராததுமாக முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பதாக கூறிய கணவனுக்காக காத்திருந்து காத்திருந்து பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்தபடி உறங்கிய பார்கவியை கண்டு அவள் அருகில் சென்றவன் அவளை அள்ளிக்கொள்ளவும் அவன் தொடுகையிலும் அவனின் வாசத்திலும் கண் விழித்தவள் அவன் மார்பிலையே சாய்ந்து கைகளை அவன் கழுத்தில் போட்டுக்கொண்டு அவனின் கன்னம் வலிக்க கடித்து வைத்தாள்.

"ஏய் ராட்சசி விடுடி வலிக்குது..." என்று அவளை கட்டிலில் கிடத்த அவன் கைகளில் இருந்து உருண்டு மெத்தையில் ஒருக்கலித்து படுத்து இருந்தவள் எழுந்து அமர்ந்து அவனின் பனியனை பற்றி அருகில் இழுத்து "ஒருத்தி உனக்கு எவ்வளவு நேரந்தாய்யா வைட் பண்றது... என் பக்கத்துல வந்த..." என்று அருகில் பருந்த பழம் நறுக்கும் கத்தியை அவன் புறம் திருப்பி ஒரு போடு முகத்திலையே போட்டுடுவேன்..." என்று அவன் முகத்துக்கு நேரே கத்தியை காட்டி பேசியவள் சமாளிக்க "ஆட்டோ பாம் சொல்ற த கேளுடி..." என்று பக்கத்தில் கேஷவ் அமர "ஏந்திரியா எந்திரி போ... அப்படி போய் படு." என்று தரையை கை காட்டி அவனின் போர்வையையும் தலையணையையும் தூக்கி போட இரண்டையும் கைகளில் அள்ளிக்கொண்டவன் திருப்பி போவது போல் பாசாங்கு செய்து அவள் மேலையே போட்டு அவளின் கைகளில் இருந்த கத்தியை பிடிங்கி தூர எரிந்து அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் செப்பு இதழில் கவிஎழுத விழைய முதலில் திமிறி அவனை விலக்க பாடுபட்டவள் மெல்ல மெல்ல அவனுள் கரைந்து உருகி போய் விட நீண்ட இதழ் முத்தம் சங்கமாமாய் மாறி இருவரின் கண்களும் கலக்க அவனுள் அடங்கி போனவள் பள்ளியறை கட்டிலில் காதல் கதை எழுத... உறங்கா இரவை தொடங்கி இருந்தனர் இருவரும்....
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 57
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN