review - எந்தன் முகவரி நீயடி...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு ஒரு வாசகி.. inbox ல் கொடுத்த review.. அதிலும் இந்த பாடல் வரிகள் முழுவதும் மிருவும்💕ஷிதாவும்னு சொல்லி கொடுத்தாங்க😍😍😍உங்கள் அன்புக்கு🤗🤗🤗என் பிரியங்கள் ம்மா💜💜💜💜👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

யுவனி சிஸ் எந்தன் முகவரி நீயடி நாவல் செம சூப்பர் சூப்பர்..
ஹீரோ பெயர் மிருடவாமணன் செமையா இருக்கு எங்கிருந்து இப்படி பெயரை பிடிக்கிறீங்க.
நான் நாவலுக்கு வரேன் காதல் அன்பு கோபம் பழிஉணர்வு போன்றவையான கலந்த குடும்ப கலந்த காதல் கதை. அனுவோட அவசர புத்தியால் திருமண வாழ்க்கையில் தடம் புரள்கிறது‌‌.
மிருவோ எல்லா செயலிலும் அதிரடியாக காதலோ கோபமோ தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டுமென்றும் அவனுடைய காதல் மட்டுமே பெரிது என்றும் கொஞ்சம் இல்லை ரொம்பவேஏஏஏ கர்வம் திமிர் கொள்கிறான்.

தன்னை சேர்ந்தவர்க்கு ஏற்பட்ட காயத்தால் தன்னவளை பழிவாங்க காதல் வலை வீசுகிறான். ஆனா அந்த வலையில் தானே மாட்டிக்குவோம்னு தெரியாம இருக்கான் மிரு.
பழி வாங்க நினைத்தேன் என்ற ஒரு காரணத்திற்காக அவனின் செல்லமாவின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காமல் தன்னுள் இறுகி அவனுக்கே தண்டனை கொடுத்திருக்கிறான் மிரு.

அனுஷிதா தன் அவசரபுத்தியால் தன்னைவனை விட்டு பிரிந்து வந்தாலும் தன்னை தானே செதுக்கி தன் தவறுகளை திருத்தி தன் தந்தையால் ஏற்பட்ட களங்கத்தையும் திருத்தி தன்னவனுக்கு நியாயம் செய்கிறாள்‌. அதுபோல் மிருவின் கேள்விகளுக்கு பதறாமல் சிதறாமல் சாட்டையடி போல் கேள்விகளால் விளசுகிறாள். ஷிதா எல்லா இடத்திலும் அழகா பிரிதிபலிக்கிறாள்

வெண்பா அப்ப்பா சொல்லவே வேண்டாம் இதே மாதிரி வீட்டுக்கு ‌ஓரு அக்கா இருக்கனும் . மிருவை கண்டித்தாக இருக்கட்டும் தன் கணவனிடம் கிண்டல் பேசுவதாக இருக்கட்டும்.தன் தம்பியின் மனைவி அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவதாக இருக்கட்டும். குழந்தைகளை பாசமுடன் அரவணைப்பதாக இருக்கட்டும் எல்லாவித செயலிலும் மிளிர்கிறாள்.

யுவனி சிஸ் கதையில் எல்லோருடைய பாத்திரத்தையும் அழகா கொடுத்திருக்கீங்க.இன்னும் மேன்மேலும் நிறைய படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு பவி டியர் சகோதரி கொடுத்த review 💕💕💕💕 உங்கள் அன்புக்கு💖💖💖💖 என் பிரியங்கள் ம்மா🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Hi friends oru small review of the story "எந்தன் முகவரி நீயடி"...

Writer யுவனிகா ....

Anti hero story pidichavanga kandipa intha story padikalam but enna porutha varai hero mirudavanan(மிருடவானன்) , hero than.... Bold Engertic, brave, intelligent hero. Kovathin utcham evan aana elloraium pathi nalla therinchu vachurukavan. Thuru thuru heroin(ஷீதா @ அனுஷிதா) evlo kastam vanthalum bold ah face pandradhula namakey avala remba pidichi pogum... Super story., last episode varai twist erundhuttey erukum, enna nadandhurukumnu guess panna mudiyatha story... Hero heroin pandra thappu varai ellothaium author super ah solli erupar, adhuku solution num solli erupanga... Enaku story padikum podhu wow feel adikadi varum, ungaluku kandipa pidikumnu ninaikuren friends time kidacha read panni paarungoo...

Startingla story padikum podhu hero va ninachavey this song than en mind la varum adhum ippadi
மிருடா மிருடா மிருடா
நீ யாரென இவளுக்கு சொல்வாயா????

Full song um ippadi lyrics mari than varum athanaala ithoda mudichukiren... Sema story padika aasai padupavarkal யுவனிகா sister kitta kettukonga... Thank you sister for this story... Thappu eruntha manichukonga friends... Bye bye... Stay home, read storys, relax please, be careful and stay safe friends...
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு வானதி சகோதரி கொடுத்த review 💜💜💜 உங்கள் அன்புக்கு💝💝💝 என் பிரியங்கள் ம்மா🤗🤗🤗🤗🤗

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
யுவனிகா " எந்தன் முகவரி நீயடி "...

தன்னோட அவசர புத்தியால் வாழ்க்கையை தொலைக்கும் அனு, தன்னோட கோபத்தால் பழிவாங்குறேன்னு வாழ்க்கையை சிக்கலாக்கும் மிருடன், இவங்க இருவருக்கும் என்ன சம்பந்தம்?... பழிவாங்கும் படலத்தின் காரணம் என்ன?... இவர்களுக்குள் நடக்கும் மோதலின் முடிவு?... இதெல்லாம் தான் கதை...

கதையோட ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் , கதையின் போக்கில் தெளிவாகுது...

பதினேழு வயதில நிதானம் இல்லாமல் வாழ்க்கையில முடிவெடுத்து, அதனால் அனுவுக்கு ஏற்படுற கஷ்டம், மன அழுத்தத்தை மிருடன் உணர்வதும், பழி வாங்குறேன்னு (அப்படின்னு அவனேதான் சொல்லிக்கிறான் ) அனுவ விடாம படுத்தி எடுக்கும், மிருடனோட துயரங்கள, அனு புரிந்துகொள்வதும் ரொம்பவே உணர்வுபூர்வமாய் இருந்தது...

( ஆனாலும் மிருடனுக்கு கொஞ்சமில்ல... திமிர் ரொம்பவே ஜாஸ்திதான் 😱. கடைசிவரைக்கும் வாயே திறக்காம, அவனோட காதல புரிய வச்சிட்டான்... )

கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வெண்பா தான். தவறு செய்வது தம்பியாய் இருந்தாலும், அவனை விட்டு விளாசி தள்ளுவதில இருந்து, அனுவோட அவசரபுத்திய பொட்டில அடிச்ச மாதிரி புரியவைப்பது வரைக்கும், குடும்பத்தை பொறுப்பா வழிநடத்துற பெண்மணி👌...

மான்வி குட்டியோட ப்ரெண்ட் ங்கிற கொஞ்சலும், ஜீவாவோட அனும்மாங்கிற சிணுங்கலும் அத்தனை அழகு 😍.

இந்த கதையில் என்னை கவர்ந்த விசயம் என்னன்னா, அனு மிருடன் இவங்க ரெண்டுபேர் பக்கமும் இருக்க சரி, தவறுகள சரிசமமாய் எடுத்துகாட்டி, வாழ்க்கைல பெண்ணுக்கு அவசரபுத்தி கூடாது, ஆணுக்கு கோபத்தால் உண்டாகும் ஆணவம் கூடாதுன்னு அழகா புரிய வச்சிருக்காங்க எழுத்தாளர் 👏👏👏.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக எழுத்தாளரும் என்னுடைய தோழியும் ஆனா பாக்கி லஷ்மணமூர்த்தி சகோதரி என் கதைக்கு கொடுத்த review 💖💖💖💖💖 உங்கள் அன்புக்கு 💜💜💜💜 என் பிரியங்கள் ம்மா🤗🤗🤗😘😘😘😘

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஹாய் சகோஸ் நான் இதுவரையிலும் விமர்சனம்னு எதுவும் எழுதியது இல்லை அதனால் தவறாக இருப்பின் பொருத்துக்கோங்க இப்போ கதை என்னன்னு பாக்கலாமா என்னோட பேவரைட் ரைட்டர் யுவனிகவோட கதை

எந்தன் முகவரி நீயடி

நாயகன் திருடன் சாரி சாரி மிருடன் என் மனசை திருடிட்டான் முதல்ல அவனை சாரி அவரை ஒரு anti hero அப்படின்னு நினைஞ்சிதான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா படிக்க படிக்க அதனுள் மூழ்கி போயிட்டேன் என்ன ஆளுமைடா, கம்பீரம், லுக்.... எல்லாமே மனசை அள்ளிடுச்சி அப்புறம் அனு, கலர்ல என்ன இருக்கு அவ மனசு அத்தனையும் தூய்மையான வெள்ளைக்கு நிகர் தன்னோட அவசர செய்கையால எல்லாமே மாறி போன அவ வாழ்க்கையில் நிதானத்துக்கு வரும் நிமிடங்கள் வாவ் என்ன பொண்ணுடான்னு என்னை சொல்ல வைச்சிட்டா.... அப்புறம் மை ஸ்வீட் வெண்பா இப்படி ஒரு உறவு எனக்கு இல்லையேன்னு கொஞ்சம் கோவம் கூட வந்துச்சி அப்புறம் குட்டீஸ் சொல்லவே வேணா அவ்வளவு அழகு குழந்தைங்களோட சிரிப்புக்கும் தேடலுக்கும் ஒரு முடிவை கொண்டுவந்த யுவனிக்கு ஒரு ராயல் சல்யூட் அப்புறம் இதன் மூலமா நான் கதையை ரீலீவ் பண்ணலன்னு நினைக்கிறேன் அப்படி தவறா பண்ணிட்டேனா சாரி....
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு காஞ்சனா சகோதரி கொடுத்த review 💖💖💖💖 உங்கள் அன்புக்கு 🤗🤗🤗🤗🤗 என் பிரியங்கள் ம்மா💜💜💜💜💜💜

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Hi friends,
நான் இன்னைக்கு ஒரு புது கதையோட விமர்சனத்தோடு வந்திருக்கேன்.
யுவனிகாவின் “எந்தன் முகவரி நீயடி”

அவங்களோட மற்றுமொரு அற்புதமான காதல் கலந்த குடும்ப கதை.
பதின்ம வயதில் காதல் வயப்படுவதால் ஏற்படும் விளைவையும், ஒரு ஆணின் நிதானமில்லாத கோபத்தால் ஏற்படும் விபரீதத்தையும் வழக்கம் போல் தன் பாணியில் அழகாகவும், விறுவிறுப்பாகவும், பல திருப்புமுனைகளுடனும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
நாயகன் மிருடவாமணன் .. ஐந்தாவது அத்தியாயத்திலே தான் அறிமுகம்.. ஆனால் ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்’ என்பது போல் ஆரம்பத்துலயே சுஜிக்கு மரண பயத்தைக் காட்டும் அதிரடியுடன் அறிமுகம். அதன் பிறகே நாயகியுடன் சந்திப்பு.

ஆனால் அதன் பிறகே அவனின் அவதாரம் தெரிகிறது. நாயகியை பல வழிகளில் டார்ச்சர் செய்வது.. அவளை பல இக்கட்டுகளில் சிக்க வைப்பது முதற்கொண்டு அப்பப்பா😱😱.. ‘என்னடா வேணும் உனக்கு?’ என்று நம்மையே கேட்க வைக்கிறான். ஆனால் ஏன் இப்படி செய்கிறான்.. இருவருக்கும் இடையில் என்ன நடந்தது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக விறுவிறுப்புடன் நகர்கிறது கதைக்களம். ஆனால் இப்படி இருந்தவன் பின் தன் மனைவியிடம் காட்டும் அதிகார காதல் அழகு😍😍.. ஆனால் தன் பிடிவாத குணத்தால் அன்பை வெளிப்படுத்துவதில் கூட அப்படி ஒரு அடாவடி.. ஆனால் தன் அக்காவிடமும், குழந்தைகளிடமும் காட்டும் அன்பு ஆழமானது. மொத்தத்தில் பிடிவாதம், கோபம் , ஆளுமை நிறைந்த நாயகன்.. இருந்தாலும் நம்மைக் கவர்கிறான் என்பதில் ஐயமில்லை.

அடுத்து நாயகி அனுதிஷிதா.. கதையின் ஆரம்பமே நாயகியின் அறிமுகத்துடன் தான். பதின்ம வயதில் தான் செய்த தவறினால் பல கஷ்டங்கள் அனுபவித்து பின் தனியே தன் மகளுடன் அமைதியாக வாழ்கையில் புயலைப் போல் அவள் வாழ்வில் குறுக்க்கிடும் நாயகனால் மீண்டும் பல இன்னல்கள் அனுபவித்தாலும் அவளின் குலையாத மன உறுதி பாராட்டுக்குறியது. கடைசியில் நாயகனிடம் அவள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் சபாஷ்.. காதலில் கர்வம் கூடாது என்பதை அவள் புரியவைப்பது சாட்டையடி.. இறுதியில் அவள் சரளாவுக்காக நியாயம் செய்யும் இடத்தில் உயர்ந்து நிற்கிறாள்.

அடுத்து நாயகனின் அக்காவாக வரும் வெண்பா.. வெகு இயல்பான என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். தம்பியைக் கண்டிப்பது, பாசம் காட்டுவது முதற்கொண்டு இருவரிடமும் கேட்கும் கேள்விகளும் சிந்திக்க வைப்பவை. அவர் கணவர் கஜேந்திரன் ஆங்காங்கே என்றாலும் டைமிங் டயலாக் பேசி மனதில் நிற்கிறார்.

குழந்தைகள் மான்வி, ஜீவா.. பார்க்காமலே நாம் கொஞ்ச வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
மற்றும் நண்பன் பரணிதரன்.. முனுசாமி.. பார்வதி என அனைவரும் நிறைவான கதாபாத்திரம்..

மொத்தத்தில் அழகான நிறைவான கதையை கொடுந்திருக்கிறார் ஆசிரியர். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னுடைய கதைக்கு ஜெயந்தி சிஸ் கொடுத்த review உங்கள் அன்புக்கு♥️♥️♥️என் பிரியங்கள் சிஸ்💞💞🤗🤗🤗🌹🌹🌹🌹

❤❤எந்தன் முகவரி நீயடி❤❤

வெகு நாட்களுக்கு பிறகு நான் விரும்பி படித்த வலிய/மெல்லிய காதல் கதை💜💜💜💜💜💜

First of all a big SORRY for not turning up n read ur story immediately Yuvanika...

மிருடவாமணன்...என்ன மேக் டா நீ???? அந்த வாமனன் தன் காலடியில் உலகை அளந்தால் இவன் ஆளுமையில் நம்மை கட்டிப்போடுவான்..தனக்கு தானே உருவாக்கின அழகான குருவிக்கூடு மாதிரி ஒரு குடும்பம், அதிரடியா கண்டிக்கிற வெண்பாக்கா, சரியா புரிஞ்சுக்கிற மாமா, திகட்ட திட்டி காதலை புரியவைக்கும் மனைவி, அழகாய் பேசும் குட்டி பூக்குவியல்கள்.., blessed Miru u are...

பழி வாங்க கிளம்பி காதல் வயபட்டு பின்வாங்கி ஆணவத்தில அவனுக்கு அவனே தண்டனை கொடுக்கிறது, அதட்டி உருட்டி பணிய வைக்கிறது தப்பாவே தெரியல...அவன் பக்கம் நேர்மை, கண்ணியம், அன்பு இருக்கு...அதை சரியா வெளிப்படுத்த தெரியாமல் தடுமாறும் ஆணழகன்...As u said he will remain fresh ever in my mind Yuvi...இவன் இதயத்திருடன் தான் பா💜💜💜💜💜💜💜💜💜

அனுதாஷிதா இவனுக்கு கொஞ்சமும் குறையாத பிடிவாதம் உடைய கோல்டர்ன் கேர்ள்...தன் அவசர புத்தியினால் தன் பொக்கிஷத்தை தொலைத்தாலும் நிமிர்வுடன் வாழும் சிங்க பெண்...கதை முழுக்க அமைதி, ஆர்ப்பாட்டமில்லாத நேர் கொண்ட பார்வை என வலம் வருபவள் ஒரு கட்டத்தில் தனக்கான அங்கீகாரத்தை தன் கணவனிடம் உணர்த்தும் விதம் சபாஷ்.....நாட்டை ஆளும் அரசியல்வாதியின் மகளாக பிறந்தாலும் நியாயம், தர்மம் எதுவோ அதை பின்பற்றி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிக் பாஸ் அனு...

யுவனிகா

நான் இரசித்த இடங்களை கண்டிப்பா பட்டியலிடனும் யுவி...

1. மெல்லிய பூங்காற்றாய் கதை ஆரம்பித்து, விறுவிறுப்பாய் நம்மையும் சூறாவளியாய் சூழட்டி அடிக்கிற உங்க நகர்வு, உரைநடை...

2. இயற்கையை காப்பாற்ற போராடும் அனு...

3. தன்னை ஏன் பழி வாங்கல னு அனு கேட்கும் போது சுவாசிப்பதையே நிறுத்தி தன் காதலை உணர்த்தி என்னையும் பயமுறுத்திட்டான் யுவி...Really I skipped my breath there...

4. கணவனா தன் மனைவிக்கு பெண்மை எனும் அங்கீகாரத்தை தந்து பக்கபலமாக அவ கூட இல்ல னு அனு சொல்லும் பொழுது தன் அகங்காரம், ஆணவத்தை விட்டு மன்னிப்பு கேட்பது..

5. மனைவிய பிரிய நேரும் போதும் தன் கண்காணிப்பில் நிறுத்தியது..

6. அனு என்ற தங்க விக்கிரகத்தின் துவாரபாலகர்களாய் முனீஸ்வரன், பரணிதரனை மிரு நியமித்தது...

7. வெண்பா வின் அதிரடியான தன்னலமில்லாத பாசம்...

8. கணவன் மனைவியின் அந்நியோன்யத்தை அழகாய் விவரித்த உங்க கதை சொல்லும் பாங்கு...

9. சரளாவிற்கு அனு கொடுத்த அங்கீகாரம்..

I have many to list like this Yaar, but right now am enjoying them simply...really feeling bad for why I missed them for a month? So far I would share my opinions in English being comfortable to type but I have to convey how I enjoyed this story...so mixed reveiw Yuvi..Adjust pannikonga..
admired the soft romantic silk line that runs in Miru n Anu...never seen such a pair who love n care for each other n go to any extreme to prove the same...

My heartfelt wishes n gratitude to you for giving us such close to feel heart story line..looking for more such family oriented stories from u further Dear🧡🧡🧡🧡🧡

With loads of Hugs n Kisses😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

Congratulations Yuvanika💐💐💐💐💐💐
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN