எனை மீட்டும் இயலிசையே -4

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
4


பெண்ணே என் சொர்க்கம் நீ !!

நித்தம் நித்தம் எனை தீண்டி

செல்லும் தென்றல் நீ !!

என் எண்ணங்களில் வண்ணம்

குழைத்த வானவில் நீ !!


அன்று சத்யாவிற்கும் இசைக்கும் நிச்சயதார்த்தம்....

ஆலிவ் நிற பட்டு புடவை.... அதில் மயில் தோகை விரித்தது போலே ஜமிக்கி வேலை பாட்டுடன் அழகாக இருந்தது.... அதற்கேற்ற நகைகளுடன் அழகாய் இருந்தாள் இசை.... உதயாவும் நித்யாவும் சேர்ந்து இசையை கலாய்த்து கொண்டிருந்தனர்.. வெளியே சத்யாவும் மற்றவர்களும் இருந்தனர்....

நாதன் "அப்புறம் மாப்பிளை உங்க புது ப்ராஜெக்ட் எப்படி போய்ட்டு இருக்கு"

"நல்லா போய்ட்டு இருக்கு மாமா... கல்யாணத்துக்கு முன்னாடி முடிச்சிருவேன் "

புகழ் "அப்படி முடிச்சிட்டா மட்டும் பிரீ ஆகிடுவியா... அடுத்த ப்ராஜெக்ட்னு திரும்பவும் பிஸி ஆகிடுவ"

நாதன் " பிசினஸ்னா அப்படி தான் இருக்கும் சின்ன மாப்பிளை "

இனியன் "நீங்க தான் mba முடிக்க போறீங்களே... இனி நீங்க உதவி பண்ணா பிரீ ஆகிடுவாங்க சின்ன மாப்பிளை.. "

"வெயிட் வெயிட்.... அத்தை உங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் தான... வேற பொண்ணு கிது இருக்கா.. "

"இல்லையேபா... ஏன் கேக்கறீங்க "

"இல்லை... இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சின்ன மாப்பிளைனு கூப்பிடவும் எனக்கு உங்க ரெண்டாவது பொண்ண எனக்கு கட்டி வச்சிருவீங்கனு கொஞ்சம் பயம் வந்துருச்சு... "

புகழ் அவ்வாறு சொல்லவும் அனைவரும் நகைத்தனர்....

"அது ஒரு மரியாதைக்கு தம்பி "

"மரியாதை மனசில இருந்தா போதும் மாமா.... என்னை நீங்க புகழ்னு கூப்பிடலாம்... " சத்யனை காட்டி "இவனை கூட மாப்பிளைனு கூப்பிட வேண்டாம் மாமா பேர் சொல்லியே கூப்பிடுங்க... உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கறதுனால நாங்க உங்களுக்கு இன்னோரு மகன் தான்.. "

"புகழ் சரியா தான் சொல்றான் மாமா"

"சரிங்க மாப்ப்.... "

"மாமா.... "

"சரிங்க சத்யா... "

புகழ் மீண்டும் ஏதோ சொல்ல வர தடுத்த துளசி... அவனிடம் மெதுவாக "அவருக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடட்டும் விடுடா... "

அப்போது சுமித்ரா உதயா நித்யாவுடன் இசை வர சத்யா தன்னவளின் அழகில் தன்னை தொலைத்தான்..

இசையின் புடவை நிறத்தில் சட்டை அணிந்து இருந்த சத்யாவினை ரகசியமாய் தொட்டு மீண்டது இசையின் பார்வை....

"அண்ணா வழியுது தொடச்சுகோ "

"என்னடா பொய் சொல்றயா "

"வியர்வை வழியுது தொடச்சிக்கோனு சொன்னேன் தெய்வமே.... " என்று கைக்குட்டையை நீட்டினான்..

"ரொம்ப தேங்க்ஸ்டா....

"உன்னோட அரிச்சந்திர குணத்துக்கு அண்ணி என்ன பாடுபட போறாங்களோ " என்று தனக்குள் முனகியவன் வெளியில் ஒன்றும் சொல்லிக் கொள்ள வில்லை...

"அங்க என்னடா முணுமுணுப்பு "என்று சந்திரன் கேட்க

"எல்லாம் நீங்க பெத்த ரத்தினத்த பத்தி தான் "

"நீ சொல்லலைனாலும் அவன் ரத்தினம் தான்டா... "

"ம்க்கும்... நீங்க தான் மெச்சிக்கணும்.... "

பிறகு இசையும் சத்யாவும் மோதிரம் மாற்றி கொண்டனர்... வழக்கமான சம்பிரதாய பேச்சுக்கள் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...

பெரியவர்கள் மற்ற விவரங்களை பேசி கொண்டிருந்தனர்..

சத்யாவும் இசையும் தோட்டத்தில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்...

முன் தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் புண்ணானதே !!

இத்தனை நாளாக

உன்னை நான் காணாமல்

எங்கு நான் போனேனா

நாட்களும் வீணானதே !!

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு

வந்தால் என்ன

ஊர் பார்க்க ஒன்றாக

சென்றால் என்ன !!

மெல்லிய குரலில் பாடியவன்... இதமாய் நெற்றியில் முத்தம் வைத்தான்...

அதில் சிலிர்த்து பின் வெட்கம் கொண்டு ஓட நினைத்து எழ...

"எங்க எனக்கு பதில் முத்தம் தராம ஓடற "என்று இழுக்க அவன்மீதே வந்து விழுந்தாள்...

தான் மடியினில் விழுந்தவள் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தான் சத்யா...

மூடிய விழிகளுக்குள் விழி இரண்டும் அலைபாய சத்தம் இல்லா முத்தத்தை இட்டான்...

மருதாணி இன்றி சிவந்திருந்த கண்ணமிரண்டும் தனி முத்தத்தை பெற்றன...

பூகம்பம் இல்லாமல் நடுங்கி கொண்டிருந்த உதடுகள் மென்மையாய் சிறை பட்டன....

சுவாசம் வேண்டி தவித்த உதடுகள் இறுதியில் விடுதலை பெற்றான.. சிறிது நேரம் மவுனம் இருவரின் இடையில்..

"சாரி இயல்.... "என்று கூறியவன் திரும்பி நடக்க முற்பட.... கை பிடித்து தடுத்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு

"நான் சாரிலாம் சொல்ல மாட்டேன்பா "என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்...

தன் கன்னத்தை தொட்டு பார்த்த சத்யா..." ஐ லவ் யூ இயல்... " என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.

எந்தன் எண்ணத்தில் நிறைந்து

சுவாசத்தில் கலந்து

விழி மூடி நின்றாலும்

இமைக்குள்ளே நீயடி !!


"ஹேய் இசை... இந்த ரெஸ்டாரன்ட் சூப்பரா இருக்குடி... அதுவும் இந்த மாதிரி ஈவினிங் டைம்ல கடல பாத்துட்டு சாப்பிடறது சூப்பரா இருக்கும்... "

"ஆமா அகி.... சத்யா தான் இந்த ரெஸ்டாரன்ட்பத்தி சொன்னாரு... "

"ஆமா அவரு வரலையா... "

"இல்லை மகி... ஏதோ முக்கியமான மீட்டிங்னு வரமுடியாதுனு சொல்லிட்டாங்க... இன்னொரு நாள் எல்லாரையும் மீட் பன்றேன்னு சொன்னாங்க "

"சரிடி... நம்மளும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம்... அன்னைக்கு என்கேஜ்மென்ட்டுக்கு நானும் மகியும் வர முடில... இன்னைக்கு நல்லா என்ஜோய் பண்ணலாம்... "

அப்போது பேரர் வர இசை அவரை தனியாக அழைத்து கொண்டு போய் அவரிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தாள்...

"என்னடி தனியா கூட்டிட்டு போய் சொல்லிட்டு வர "

"அது சஸ்பென்ஸ்.... சரி வெயிட் பண்ணுங்க... நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வரேன்.... "இசை சென்றதும் அவளின் போனை எடுத்த அகி யாருக்கோ செய்தி அனுப்பினாள்... பிறகு போனை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டாள்..

"ஏய் என்னடி பண்ண...எதுக்கு போனை ஆப் பண்ண "

"இசைக்கு சின்ன சர்ப்ரைஸ் உதி "

"ஏதாச்சும் பிரச்சனை ஆகிட போகுதுடி "

"ஒன்னும் ஆகாதுடி... நம்ம சர்ப்ரைஸ்

பாத்துட்டு அவ சந்தோசம் தான் படுவா "

பிறகு இசை வந்துவிட அனைவரும் அமைதி ஆகி விட்டனர்...

"என்னடி ஆர்டர் பண்ண... எப்ப வரும்"

"இதோ வந்துருச்சு " என்று பேரர் கொண்டு வந்து வைத்த ஒற்றை மில்க்ஷேக் டம்ளரை பார்த்த தோழிகள் அனைவரும் காண்டாகினர்..

"அடியே டால்டா டப்பா இதுக்கு தான் இந்த பில்டப்பா... "என்று இசையை மொத்த வர அவள் கையில் இருந்த ஐந்து ஸ்ட்ராக்களை பார்த்ததும்..

"என்னடி இது... இங்கயுமா....சரியான கஞ்ச பிசிநாரி... "

"இல்ல கைஸ்.... நம்ம காலேஜ் கேன்டீன் இப்படித்தான் லாஸ் ஆகிருச்சுனு எனக்கு தெரியும்... பட் இது நம்ம கேங்கோட ஸ்பெஷல்டி... அதான் இருக்கற இல்லா ஐட்டத்திலயும் ஒன்னு கொண்டு வர சொல்லிருக்கேன்... அதை நாம ஒன் பை பைவ் போட்டரலாம்.. "

"ஹேய் சூப்பர்டி செல்லம் " என்று அனைவரும் அவளை கட்டிக்கொண்டு கொஞ்ச.....

"ஏய் விடுங்கடி எருமைகளா... இப்படி எல்லா கழுதைகளும் எம்மேல விழுந்தா.. மீ பாவம்..... "

பிறகென்ன ஐவரும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு இல்லை இடித்து கொண்டு சாப்பிட்டனர்.. மற்றவர்கள் இவர்களை கவனிப்பதை எல்லாம் கண்டு கொள்ள வில்லை...

"செமடி.....இப்ப உனக்கு ஒரு சர்ப்ரைஸ்... உன் பின்னாடி பாரு... "என்று அகி சொல்ல அனைவரும் பார்த்தனர்... சத்யா தான் வந்து கொண்டிருந்தான்...

அவனை பார்த்த இசை சந்தோசத்துடன் அவனை நோக்கி செல்ல...அருகில் போகும்போது தான் கவனித்தாள் அவன் கோவத்தை..

அவன் கண்கள் அவளை மேலும் கீழும் ஆராய கை முஸ்ட்டி இறுகியது...

"வாங்க சத்யா.. நீங்........."என்று சொல்லி முடிக்கும் முன் இசையை அறைந்திருந்தான் சத்யா...

"என்ன பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினச்சு கூட பாக்கல... தயவு செஞ்சி என் மூஞ்சியிலேயே முழிக்காத " என்று சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து சென்று விட்டான்...

அவனின் இந்த செயலை எதிர் பாக்காத அனைவரும் உறைந்து நின்றனர்...

"ஏய் என்னடி பண்ணி தொலைஞ்ச... இப்பவாச்சும் சொல்லித் தொலை.. "

அகி அழுது கொண்டே... "அது... நான்... இசைக்கு சின்ன அக்சிடன்ட்.. அதனால் காலில் அடிபட்டுருக்கு... நடக்க முடிலனு... அவ அனுப்பின மாதிரி அனுப்பிட்டேன்டி.... "

அவள் பளார் என்று அறைந்தாள் உதயா...

"உனக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்லையடி... எதுல விளையாடறதுன்னு அறிவு வேண்டாம்... "

"சாரிடி இப்படி ஆகும்னு நான் நினைக்கல " என்று மேலும் அழ..

"இப்ப அழுது என்ன யூஸ்... இவள பாரு... "என்று இசையை காட்ட

வெறித்த பார்வையுடன் இருந்த இசையின் அருகில் சென்ற அகி

"என்னை மன்னிச்சுடு இசை... நான் பண்ணது தப்பு தான்.. நான் சத்யாண்ணா கிட்ட பேசறேன்.... "

இசை எதுவும் பேசாமல் கடல் மணலில் சென்று அமர்ந்தாள்...

தன் தோழிகள் எவ்வளவு பேசியும் இசையிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை... கண்கள் கடலை வெறித்த நிலையிலும் கண்ணீரை நிறுத்தவில்லை.. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தனர்..

அப்போது அங்கு புகழ் தன் நண்பர்களுடன் வர இவர்களை பார்த்ததும் நண்பர்களிடம் சொல்லிவிட்டு இவர்கள் அருகில் வந்தான்....

"என்ன அக்காஸ் இந்த நேரத்தில் நீங்க என்ன பண்றீங்க... எங்க என் அண்ணி அவர்கள்...."

"அது.... புகழ்.... ஒரு பிரச்சனை... "

"என்னாச்சு உதிக்கா..... "

உதயா நடந்தவற்றை விளக்கினாள்

"ப்ச்.... அவன் குணமே அப்படி தான்க்கா... அவனுக்கு பொய் சொன்னா புடிக்காது... யாரு என்னனு பாக்க மாட்டான்... "

"சாரி புகழ்... நான் தான் தெரியாம இப்படி பண்ணிட்டேன்... இசை வேற அழுதுட்டே

இருக்கா... நாங்க எவ்ளவோ பேசி பாத்துட்டோம்... எந்த ரியாக்சனும் தர மாட்டின்ரா... அதான் பயமா இருக்கு. "

நித்யா "இருட்ட வேற ஆரம்பிச்சுருச்சு... நாங்க ஹாஸ்டல்ல இருக்கோம்.. லேட் ஆகிட்டா உள்ள விட மாட்டாங்க... என்ன பண்றதுனு தெரில.... "

"நீங்க எல்லாரும் போங்க அக்கா... நான் அண்ணா கிட்ட பேசறேன் "

"புகழ்...... இசை..... "

"நான் பாத்துக்கறேன்க்கா.. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க "என்று அவர்களை அனுப்பி வைத்தான்..

தன் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்து சத்யாவிற்கு அழைத்தான்..

மீட்டிங் நடுவில் வந்த இசையின் குறுந்செய்தி பார்த்துவிட்டு இசைக்கு என்னவோ ஏதோவென்று அனைத்தையும் கான்செல் செய்துவிட்டு பதட்டத்துடன் வந்த சத்யாவிற்கு முதலில் இசையை பார்த்ததும் அவளுக்கு எதுவும் இல்லை என்ற நிம்மதி வந்த மறு நிமிடம் அவள் பொய் சொன்ன கோவம் அவன் கண்ணை மறைத்து விட்டது...

அன்று அவ்வளவு சொல்லியும் இப்படி பொய் சொல்லிவிட்டாள் என்ற கோவத்தில் அடித்து விட்டான்...

திரும்பியும் பாராது வந்தவன் மனதில் கடைசியாக பார்த்த இசையின் முகம் அவனை வருத்தியது..

பெண்களை மிகவும் மதிப்பவன்.. கை நீட்டி ஒருவரை அடிப்பது பெரிய குற்றமென நினைப்பவன் ஏனோ இயலின் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டான்..

கோவத்தில் காரில் இங்கும் அங்கும் சுற்றியவன் கடைசியில் காரின் எரிபொருள் தீர்ந்து விட அப்படியே தலை சாய்த்து படுத்துவிட்டான்...

அப்போது கைபேசி அழைக்கவும் யார் என பார்த்தவன் புகழ் என்று அறிந்ததும் ஆன் செய்தான்..

"சத்யா எங்க இருக்க "

"ப்ச்... பீச் ரோட்ல... "

"இங்க அண்ணிய அடிச்சுட்டு அங்க போய் என்ன பண்ற "

"ப்ச்.... நடந்தது தெரியாம பேசாத.. " என்று நடந்தவற்றை சொல்ல..

"இங்க பாருண்ணா... நீ பெரிய அரிச்சந்திரனாவே இரு... ஆனால் நீ பொய் சொல்லலைனு நாங்க நம்பினால் தான் நீ அரிச்சந்திரன்... அதே மாதிரி அண்ணியும் அப்படி பொய் சொல்ல மாட்டாங்கனு நீ நம்பனும்... என்ன நடந்துச்சுனு சொல்ல அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கூட குடுக்காம நீ பாட்டுக்கு அடிச்சிட்டு வந்துருக்க... என்ன நடந்துச்சுனு தெரியுமா.... "என்று நடந்தவற்றை சொல்ல சத்யாவிடம் எந்த பதிலும் இல்லை.

"அண்ணா...... "

"நான் வர்ற வரைக்கும் இயல பாத்துக்கோ புகழ்... "

என்று சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து அங்கு சென்றான்..

சத்யா ஆட்டோவில் வருவதை பார்த்த புகழ்..

"கார் என்னாச்சு சத்யா... "

"டீசல் இல்லை.. நீ இந்த ஆட்டோலேயே போய் காரை எடுத்துக்கோ.. உன் பைக்க விட்டுட்டு போ... "

"சரி சத்யா.. அண்ணி அங்க இருக்காங்க.. அண்ணி வீட்ல பேசிரு " என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்..

நாதனுக்கு போன் செய்து தான் அழைத்து கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இசையின் அருகில் சென்றான்..

கண்களில் கண்ணீரின் தடம் காய்ந்திருக்க கால்களை மடக்கி அதன் மீது முகத்தை பதித்திருந்தாள்.. அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்..

"இயல்.... சாரிடாம்மா... நான் பண்ணது தப்பு தான்மா... "

இயல் அசையவே இல்லை.. அவனை பார்க்கவும் இல்லை...

"ப்ளீஸ் இங்க பாரு இயல்.. "என்று அவள் கன்னம் பற்ற அது தந்த வழியில்

"ஸ்ஸ்ஸ் " என்று மேலும் கண்ணீர் பெருக... திகைத்து கன்னத்தை பார்க்க சிவந்து தடித்து இருந்தது..

அதை கண்டவன் மனமும் ரணம் ஆக அவள் முழங்காலில் தன் முகத்தை பதித்தான்...

அவ்வளவு நேரம் அசைவற்று இருந்தவள் தன் கால்களில் பட்ட ஈரத்தில் சுய உணர்வு பெற்றாள்...

"சத்யா... சத்யா.. என்ன பண்றீங்க.. நீங்க ஏன் அழுகறீங்க...."என்று அவன் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்தாள்..

"நான்.... எனக்கு ஏன் அவ்ளோ கோவம் வந்துச்சுனு தெரில இயல்.. நான் அரக்கன் ஆகிட்டேன்.. நான் வேண்டாம் இயல்... "

அவன் வாயை பொத்திய இசை "அப்டிலாம் சொல்லாதீங்க சத்யா.. நீங்க அந்த மெசேஜ் பாத்துட்டு எவ்ளோ பதட்டத்தோட வந்துருப்பிங்க.... இங்க வந்ததும் எனக்கு ஒன்னும் அகலனு தெரிஞ்சு நான் பொய் சொல்லிட்டேன்னு கோவம் தான் வந்திருக்கும்.. என் பிரண்ட் அப்டி செஞ்சிருப்பான்னு உங்களுக்கு எப்படி தெரியும்.... விடுங்க சத்யா... நீங்க எதும் தப்பு பண்ணல.. உங்க சூழ்நிலை.. அப்படி தப்பா நினைக்க வச்சிருச்சு.. என் மேல உள்ள உரிமை அடிக்க வச்சிருச்சு.. "

"என்மேல தப்புனு தெரிஞ்சும் எனக்காக யோசிச்சு பேசற நீ என்னோட பொக்கிஷம் இயல்...உனக்கு என்மேல கோபம் வரலையா "

"கோவம் இல்ல சத்யா வருத்தம் தான் இருந்துச்சு... உங்களை பத்தி தெரிஞ்ச நான் இப்படி பண்ணியிருப்பேன்னு நீங்க எப்படி நினைச்சீங்க...என்மேல அந்த நம்பிக்கை எப்படி இல்லாம போச்சு.. காதலோட ஆதாரம் ஒருத்தர் மேல் இன்னொருத்தர் வச்சிருக்கிற நம்பிக்கை தான் சத்யா... இனிமேல் அது குறையவே கூடாது "

"நான் வாக்கு தரேன் இயல்... இனிமேல் இப்படி ஒரு பிரச்சனை நமக்குள்ள வராது.... "என்றவன் அடிபட்ட கன்னத்தை வருடி

"வலிக்குதாடா.... "

"லேசாக தான் சத்யா... மருந்து போட்ட சரி ஆகிடும்... "

"நான் போட்டு விடறேன்.... "

"ஆன இங்க மருந்து இல்லையே.. " என்றவள் கன்னம் பற்றி மெதுவாக முத்தம் எனும் மருந்தை தாரளமாய் தந்தான்...

அந்த மருந்தை பெற்றவள் முகமோ சிவந்து போனது... வலியினால் இல்லை வெட்கத்தினால்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN