6

இசை தன் வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆயிற்று... அனைவரும் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தனர்...

தனியாக இருக்க போறடித்து வீட்டையும் தன் அறையயும் சுத்தம் செய்தவள் தன் படுக்கையின் அருகில் இருந்த மேஜையை சுத்தம் செய்யும் பொழுது அன்று வைத்த ஆல்ப பையை திறந்தவள்....... கண்ணில் பட்டது.... இயல் வெட்ஸ் சத்யா..... அதன் பக்கத்தில் இருவரின் புகைப்படமும் இருந்தது...

இன்னும் அந்த தருணம் பாலைவன பசுமையாய் நெஞ்சின் வேதனையின் நடுவில் வெறுக்க நினைத்தாலும் முடியாத பொக்கிஷமாய் .....

ஆறு மாதங்களுக்கு முன்பு......

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு...

இயல் சுவற்றோடு சாய்ந்திருக்க அவளின் வலது புறம் கையை ஊன்றி மற்றோரு கையால் முகத்தை நிமிர்த்த... கண்ணோடு கண் கலந்து கவிதை பல பேசிட இருவரின் இதயமும் தாளம் தப்பி தாறு மாறாக துடித்திட அவர்கள் மேல் கேமராவின் வெளிச்சம் பளிச்சென்று மின்னல் வெட்டிய போதும்.... இருவரின் நிலை மாறாதிருக்க புகைப்படம் எடுப்பவர் சிரித்து கொண்டே அவ்விடம் விட்டு அகன்றார்...

அதை கண்டு தலையில் அடித்து கொண்டே அவர்களிடம் சென்ற புகழ்

"அண்ணா உன்னை போட்டோஸ்க்கு போஸ் குடுக்க சொன்னா நீ லைவ்வா ஷோ கட்டிட்டு இருக்க... " என்று சத்யாவின் தோளில் தட்ட தன் உணர்வு மீண்டவன் தன் தலையை கோதிக் கொண்டே வேறு புறம் திரும்ப

"ஐயோடா சத்யாக்கு வெட்கம்லா வருதே... "

"ச்சு.... போட அந்தான்ட...."

"ம்ஹும்... போக மாட்டேனே.... அண்ணி சொல்லட்டும் நான் போறேன்... சொல்லுங்க அண்ணி நான் போகணுமா.. "

"நீ இரு புகழ்.... "

"ஹய்ய்....சூப்பர் அண்ணி.... " என்று ஹைபை கொடுத்தான்...

"பாத்தியா எங்க அண்ணி எனக்கு தான் சப்போர்ட்.... "என்று பழித்து காட்ட அவன் கோவமாக சென்று விட்டான்...

"அச்சோ என்ன புகழ் கோவமா போறாரு... "

"அவன் அப்படி தான் அண்ணி... ஓவர் பொஸ்ஸசிவ்....எங்க அம்மா கூட அவன விட்டுட்டு என்னை கொஞ்சுனா அப்பிடி ஒரு கோவம் வரும்... ஒரு வாரத்துக்கு சரியா சாப்பிட கூட மாட்டான்... போய் உங்க ஹப்பிய சமாதானம் பண்ணுங்க..." என்று சொல்லி விட்டு சென்று விட்டான்...

சத்யாவை தேடிக் கொண்டு மண்டபத்தின் இரண்டாம் தளத்திற்கு சென்றவள் அவனை காணாது திரும்ப முற்பட தூண் மறைவில் இருந்தவன் பிடித்து இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதினாள்....

"உங்களுக்கு இதே வேலையா போச்சு... இதென்ன சின்ன புள்ள மாறி விளையாட்டுக்கு பேசுனதுக்கு கோவம் வருது... "

"அது ஜஸ்ட் சின்ன கோவம்... அதுக்காக எல்லாம் இங்க வரல... அப்படி வந்தா தான உன்னை தனியா பாக்க முடியும் அதான் .... "

"போங்கப்பா... அதென்ன கோவத்திலயும் சின்ன கோவம் செல்ல கோவம்னுட்டு.... "

"என் பொண்டாட்டி எப்பவும் எனக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணனும்ங்கர ஒரு ஈகோ அவ்ளோதான்.... "

அவன் மூக்கை பிடித்து ஆட்டியவள்

"உங்க பொண்டாட்டி எப்பவும் உங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவா... இப்ப ஓகே வா.... "

"பத்தாதே... "

"வேற என்ன வேணும்... எக்கு தப்பா கேட்ட உங்க பொண்டாட்டி கன்னத்துலயே போடுவா... "

"ஓய்ய்ய்... நான் ரொம்ப நல்ல பையன்... "

"சரி...... அப்ப சத்யாக்கு என்ன வேணும் "

" ஐ லவ் யூ வேணும்.... "

"மை செல்ல புருஷா அதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள்....

அவனும் சிரித்து கொண்டே மணமகன் அறைக்கு சென்றான்....

எந்தன் உள்ளத்தை உனக்களித்து

உனக்காகவே எனை மறந்து

எந்தன் சிந்தையிலும் நிந்தையிலும்

உன்னையே நினைத்து

உனக்காக எந்தன் அன்னை தந்தை

துறந்து

நீயே என் வாழ்வும் சாவும்

என்றெண்ணி

நின்தன் கரம் பிடிக்க

காத்திருந்த என்னை கை உதறி

நம்பிக்கை சிதறி

அனாதரவாய் நின்ற என்னை

திரும்பியும் பாராது

சென்று விட்டாயே......

என் காதலும் பொய்த்து

நம்பிக்கையும் தகர்ந்து

உயிர் மட்டுமே என் உடம்பில்

என் விருப்பமின்றி!!!!

அடுத்த சடங்கிற்காக வேறு புடவை அணிந்து தயாராகி கொண்டிருந்தாள் இசை.....

"ஹேய் நித்தி இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தா லைவ்வா ஒரு ரொமான்ஸ் சீன் பாத்துருக்கலாம்.. "

"இதோ திரும்பியும் இன்னும் சடங்கு போட்டோ செஷன் எல்லாத்துலயும் பார்க்கலாம் நித்தி.. டோன்ட் ஒர்ரி.. "

"மேடம் நாளைக்கு நம்ம கண்டுக்க மாட்டா போலவே... "

"ஹனிமூன் எங்க இசை..... "

என்று கேலி பண்ணி திணறடித்து கொண்டிருந்தனர்...

அப்போது ஒரு சிறு பெண் குழந்தை ஒன்று கையில் ஒரு பூங்கொத்தை கொண்டு வந்தது....

"ஆன்ட்டி இத அந்த அங்கிள் கொடுக்க சொன்னாங்க... "

சிகப்பு நிற ரோஜாக்கள் கொத்தாக இருந்த அந்த பூங்கொத்தில் கீழே டூ மை லவ் என்று இருந்தது...

யார் என்று பார்க்கும் பொழுது யாரோ தொப்பி போட்ட நபர் சென்று கொண்டிருந்தார்...

யாராக இருக்கும் என்றெண்ணியவள் மீண்டும் பார்க்க அங்கிருந்து சத்யா சென்றதை பார்த்தாள்...

"ஓ.... எல்லாம் சத்யா அண்ணா வேலையா "என்று உதி சொல்ல

"ஐயோ இவங்க பண்ற லவ்ல எனக்கும் இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வருதே... "என்று அகில் சொல்ல

"வருமடி ஆத்தா.... இரு உங்க அம்மாக்கு இப்பவே போன் போடறேன் "

"எதுக்கு இதான் சாக்குனு அந்த வீனா போனவனை என் தலையில கட்டறதுக்கா..... போடிங்.... "

"யாருடி அது... "

"அது அவங்க மாமா பையன்டி.... அவனுக்கு இவள ரொம்ப புடிச்சு போயி பின்னாடியே சுத்தறான்... இவங்க அம்மாவோட அண்ணா பையன்கரதுனால அவங்களுக்கும் ரொம்ப இஷ்டம் மேடம் தான் பிடி கொடுக்க மாட்டின்றா... "

"அடிப்பாவி அகில் சொல்லவே இல்லை... "

"எனக்கு எந்த இன்டெரெஸ்ட்டும் இல்லை... அதான் சொல்லல இசை.. "

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சுமித்ரா ஏதோ சடங்கேன இசையை அழைத்து சென்றார்...

அங்கு சத்யாவும் அமர்ந்திருந்தான்.. அவன் எதிரில் இசையை அமர்த்தி பெரியவர்கள் வெத்தலை மாற்றி பரிசம் போட்டனர்...

இசை ஆவலுடன் சத்யாவை பார்க்க... அவன் முகமோ ஏதோ குழப்பத்தில் இருந்தது...

இவள் பார்ப்பதை அறிந்து பேருக்கு ஏதோ சிரித்து வைத்தான்...

இசைக்கு ஏன் என்று குழப்பமாக இருந்தது.....

அந்த சடங்கு முடிந்து அறைக்கு வந்த சிறிது நேரத்தில் போட்டோ எடுக்க வர சொன்னதால் அங்கு சென்றாள்.

இப்பொழுது சத்யாவின் முகத்தில் கோவமும் குழப்பமும் இருந்தது...

போட்டோ எடுப்பவர் சொல்லும் எதையும் ஒழுங்காகவே செய்ய வில்லை..

"என்னாச்சு சத்யா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.... "

"சத்யா..... என்னாச்சு..... "

"ம்ம்... அது.... நீ லவ் பண்ணியா... "

இதென்ன இப்படி கேக்கறாரு... ஓ... நான் ஐ லவ் யூ சொல்லலைனு தான் இவ்ளோ டென்ஷனா... அது நாளைக்கு சொல்லலாம்னு நெனச்சா விட மாட்டிங்குறாரு... வெயிட் பண்ணட்டும்.. " என்று மனதில் நினைத்து கொண்டவள்..

"அது....... வந்து.... அங்க பாருங்க போட்டோகாறரு வந்துட்டாரு... "

அவரிடம் தலைவலி என்று சொல்லி விட்டு சென்று விட்டான்...

" ம்க்கும்... ரொம்பத்தான்.... "

என்று புன்னகைத்துகொண்டாள்....

கண்ணீரில் கலந்து

காற்றினில் கரைந்து

காணாமல் போய் விட்டது

என் காதலும் நேசமும்

உன் மீது நான் வைத்த

நம்பிக்கையும்!!!!

மங்கள இசை மண்டபம் முழுக்க ஒலிக்க..... பலவித பூக்களின் நறுமணம் நாசிகளை நிறைக்க..... சுட்டிகளின் கொண்டாட்டம் மண்டபம் முழுக்க எதிரொலிக்க....... சமையல் அறையில் பலவித உணவுகளின் வாசம் பசியை தூண்ட..... தேவதைகளாய் இளஞ்சிட்டுக்கள் துள்ளித் திரிந்திட... இளங்காளைகள் அவர்களின் ஓர விழி பார்வைக்காக தவமிருக்க..... மண்டபம் முழுதும் கல்யாண பரபரப்பில் மூழ்கிருக்க..... அய்யர் ஹோமம் வளர்க்க அதன் பக்கத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கடனே என்று செய்து கொண்டிருந்த சத்யாவின் முகத்தில் அடக்க பட்ட கோவம் தெரிந்தது...

"பொண்ணை அழைச்சிட்டு வாங்க... "

என்று அய்யர் அழைக்க தோழிகள் புடை சூழ.... மெரூன் நிற பட்டில் தங்கஇலைகள் கோர்த்து கொடியாய் படர.... முகமோ நிலம் நோக்க கண்களோ தன்னவனை கள்ள பார்வை பார்த்து வைக்க...... சத்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் இசை...

ஆவலாய் அவன் முகம் நோக்கியவள் அவன் முகத்தை பார்க்க... அது கோவத்தில் சிவந்திருந்தது....

"ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ கோவம் ஆகாதுப்பா "என்று அவனுக்கு மட்டும் கேக்குமாறு கூறினாள்...

அய்யர் அட்சதை தட்டை அனைவர்க்கும் குடுத்தனுப்பினார்..

"சத்யா... "

"சத்யா.... "

"ம்...... "

"நான் உ........ "

மண்டபத்தில் கெட்டிமேளம் ஒளித்து கொண்டிருந்தது....

"நீ...... லவ் பண்......... "

கெட்டிமேள சத்தத்தில் அவன் கேட்டது அறை குறையாக கேட்டது....

"ஹப்பா... சொன்னா தான் தாலி காட்டுவீங்க போலவே....சரி சொல்றேன்... நான் லவ் பண்ணேன்...""உங்களை பார்த்த நிமிடத்தில் இருந்து லவ் உங்களை லவ் பண்ணேன் பன்றேன் என் வாழ்நாள் முழுதும் லவ் பண்ணிகிட்டே இருப்பேன்... ஐ லவ் யூ சத்யா.... "

அந்த நேரம் மாங்கல்யத்தை அவன் கையில் தர அந்த நேரம் சத்தம் அதிகமாக ஒழிக்க இசை சொன்னதின் பிற்பகுதி அவன் காதில் விழுந்திருக்கும் என்பது சந்தேகமே......

சத்யா மாங்கல்யத்தை இசையின் கழுத்தில் கட்டினான்.... "கடவுளே எங்கள் வாழ்க்கையை உன் கையில் சமர்ப்பிக்கின்றேன்... எங்கள் சுக தூக்கங்களில் நீயே எங்கள் துணை நின்று எங்களின் காதலுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று மன முருக வேண்டிக கொண்டாள்...

அப்பொழுது ஏற்பட்ட உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் துளிகள் வெளி வந்து சத்யாவின் கைகளில் பட்டு தெறித்தது....

சட்டென உடல் விரைப்புற மணமேடையில் எழுந்து நின்றான்....

மாலையை கழட்டி போட்டு விட்டு மன மேடையை விட்டுஇறங்க முயன்றவனை கை பிடித்து தடுத்தாள் இசை....

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.