எனை மீட்டும் இயலிசையே -14

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
14


கோவையில் இருந்து வந்தது முதல் இசை சத்யாவிடம் இருந்து அறவே ஒதுங்கிவிட்டாள்....

அழகியும் தினேசும் இசையிடம் பேச முயற்சித்தனர்.... அவர்களிடமும் பேச வில்லை...

வீட்டில் இருந்தவர்களுக்கும் இசையின் மாற்றம் புரிந்தது... இப்படியே நாட்கள் செல்ல இடையில் ஒரு நாள் சத்யா இயலிடம் பேச வந்தான்...

இரவு நேரம்....

இயல் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.... கையில் இருந்த புத்தகத்தில் கண்கள் இருந்தாலும் மனம் பதிய வில்லை...

அப்போது சத்யா இசையிடம் வந்தான்...

"இயல்.... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.... "

அவள் பேசாமல் எழுந்து போக அவளின் கையை பிடித்து தடுத்தான் சத்யா....

"ப்ளீஸ்டா... புரிஞ்சுக்கோ... உன்மேல தப்பு இல்லைங்கறத அவங்க சொல்லி தெரிஞ்சுக்கல..."

அவனிடம் இருந்து கையை விடுவித்த இசை... வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்..

நாற்காலியில் சோர்வாய் அமர்ந்தான் சத்யா...

"ஏன் புஜ்ஜிமா... நான் சொல்ல வரத கேட்கவே மாட்டின்ற... நீ நெனச்ச மாதிரி இல்லனு நான் எப்படி உனக்கு புரிய வைக்க.... "என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தான்....

அன்று....

மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவன் நேரே தன் அறைக்கு சென்றான்.... கோபத்தில் தன் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் விசிறி எறிந்தான்... எல்லாம் சுவரில் பட்டு சிதறியது.....

விரக்தியாய் படுக்கையில் விழுந்தவன் கண்முன்னே...

"ஏன் சத்யா நான் அப்படி பண்ணுவேன்னு நினைக்கறீங்களா... உங்க கிட்ட நான் எப்படி போய் சொல்வேன்னு நீங்க நினைச்சீங்க.. என் மேல நீங்க வச்ச நம்பிக்கை அவ்வளவு தான.... "

என்று இசை கேட்பது போல் தோன்ற திடுக்கிட்டு போனான் சத்யா...

ஆமாம் என் இயல் என்கிட்ட பொய் சொல்றான்னு எனக்கு ஏன் தோணுச்சு.. என்று யோசித்தவனுக்கு தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டது போல் தோன்றியது....

அந்நேரம் பார்த்து அவன் நண்பன் அழைக்கவும் எடுத்து காதில் வைத்தான் சத்யா....

"டேய் என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க.... நான் பேசுனத முழுசா கேக்காமா எந்த மாதிரி அறிவு கெட்ட தனமா நடந்துருக்க தெரியுமா...

அந்த போட்டோவுல ஒரு போட்டோ ஒரிஜினல்.... மத்தது எல்லாம் எதோ குரூப் போட்டோவுல இருந்து கட் பண்ணி எடுத்திருக்காங்க.. "

அதற்கு மேல் அவன் காதில் எதுவும் விழவில்லை.... நேரே மண்டபத்திற்கு சென்றான்.... அங்கு யாரும் அவனிடம் பேச தயாராக இல்லை.. துளசியும் அவனை அடித்து அனுப்பி விட்டார்...

வெளியில் வந்து காரில் அமர்ந்தவன் அலுவலகத்திற்கு போன் செய்து தினேசின் முகவரியை வாங்கி கொண்டு அவன் வீட்டிற்கு சென்று தினேசை அடித்து புரட்ட அழகி அவனை தடுத்து அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்ற காரணத்தையும் அவர்கள் பள்ளி நட்பயும் கூற அவன் முற்றிலும் செயல் இழந்து போனான்...

எதும் சொல்லாமல் தன் வீட்டிற்கு வந்தவன் நேரே தன் அறைக்கு சென்று கதவை அடைத்தவனை இரண்டு நாள் கழித்து அறையில் ரத்த வெள்ளத்தில் பார்த்தனர்...

தன்னை யாரோ எழுப்பவும் கண் திறந்து பார்த்தான் சத்யா....

"என்ன சத்யா... இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற.. "

"ஒன்னும் இல்லப்பா... சும்மாதான்... "

"வாப்பா உள்ள போகலாம்... "

சரி என்று அவருடன் உள்ளே சென்றான்....

"சத்யா ஊருல இருந்து உங்க சித்தப்பா போன் பண்ணிருந்தாங்க... எப்பவும் வருஷ வருஷம் ஊருக்கு போய் ஒரு வாரம் இருந்துட்டு வருவோம்ல....அது மாதிரி இந்த வருஷம் வாரீங்களான்னு கேட்டாரு.. அதான் உங்க அம்மாவும் நானும் போறோம்...

புகழ் டூர் போகணும்னு சொல்லிட்டு இருந்தான்... அதான் அவனை விட்டுட்டு போறோம்... "

"சரிப்பா....எப்ப கிளம்பறீங்க.... "

"அடுத்த வாரம்ப்பா.... "

"ஓகே ப்பா... "



துளசியும் சந்திரனும் ஊருக்கு சென்றிருந்தனர்.....சமையல் வேலையை முடித்து விட்டு சாப்பாட்டு மேஜையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு தன் அறைக்கு வந்தாள்...

தன்னிடம் இருந்த பணத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்து கொண்டு சத்யாவின் அறைக்கு வந்தாள்...

சத்யா குளித்து கொண்டிருந்தான்... பணத்தை மேஜை மீது வைத்து விட்டு வந்து விட்டாள்.... காலையில் இருந்து உடல் சூடாக இருப்பது போல் தோன்றவே தலைக்கு குளிக்க சென்று விட்டாள்...

குளித்து விட்டு வந்த சத்யா உடை மாற்றி கொண்டு வரும் பொழுது தான் கவனித்தான் மேஜை மீது இருந்த பணத்தை...

"என்ன இது....யார் பணத்தை இங்க வச்சிருப்பாங்க... "என்று யோசித்து கொண்டே வெளியில் வந்தான்....

புகழ் சாப்பிட்டு கொண்டிருந்தான்...

"புகழ் என் ரூம்ல நீயா பணத்தை வச்ச?.... "

"இல்ல சத்யா.... "

"யாரா இருக்கும்.. " என்று யோசித்தவன் மனதில் இயல் தோன்ற மறு நொடி முகம் இறுகி போனது... வேகமாக இயலின் அறைக்குள் நுழைந்தான்....

அப்பொழுது தான் குளித்து விட்டு வந்தாள் இசை....இவனை எதிர்பார்த்தது போல் எதும் கண்டு கொள்ளாமல் தாண்டி சென்றவளை இழுத்து தன் முன் நிறுத்தினான்....

"இந்த பணத்தை நீ தான் வச்சியா... "

அவள் அமைதியாக அவன் முகம் பாராமல் முகத்தை திருப்பி கொண்டு நிற்க.. அவள் முகத்தை வழுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பியவன்.....

"சொல்லு நீ தான் வச்சியா.... "

"ஆமா நான் தான் வச்சேன்... நான் சொன்ன மாதிரி இங்க நான் பேயிங் கெஸ்ட் தான்... அதுக்கு தான் இந்த பணம்.. "

பணத்தை விசிறியவன்"என்னதான்டி நெனச்சிட்டு இருக்க மனசுல... நான் தான் சொல்றேனே அவங்க சொல்லி நான் நம்பலைன்னு... ஏன் நான் சொல்றத நம்ப மாட்டிங்குற... "

"நீங்களும் என்ன அப்ப நம்புனிங்களா... இப்ப நான் மட்டும் எதுக்கு நம்பனும்... "

"வேண்டாம் நம்பவே வேண்டாம்... எப்பவுமே நம்ப வேண்டாம்.... "

என்று தன் அறைக்கு சென்றவன் எல்லா பொருட்களையும் விசிறியடித்தான்... சத்தம் கேட்டு மேல வந்தான் புகழ்....

"சத்யா என்ன பண்ற.... "

"விடுடா.... என்னையெல்லாம் அப்பவே சாக விட்ருக்க வேண்டியது தான... இப்ப பாரு நிமிசத்துக்கு நிமிஷம் சாவ வேண்டி இருக்கு.... "

என்று கூறிவிட்டு வேகமாக கீழே இறங்கி சென்றான்....

"சத்யா..... சத்யா... "என்று புகழ் கூப்பிட்டு கொண்டே பின்னால் செல்ல சத்யாவோ தனது காரில் ஏறி வேகமாக சென்று விட்டான்...

புகழ் வருத்தத்துடன் இசையின் அறைக்கு சென்றான்....

அங்கு இசை தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள்..... அவளிடம் சென்ற புகழ்....

"அண்ணி..... என்னாச்சு... சத்யா ஏன் கோவமா போறான்........ இப்படி எந்த கேள்வியும் நான் கேக்க போறது இல்லை.... அவன் அன்னிக்கு கல்யாணத்தப்ப பண்ணது மன்னிக்க முடியாத தப்பு.... ஆனா அதுக்கு அப்புறம் அவன் ரொம்பவே தண்டனை அனுபவிச்சுட்டான் அண்ணி....

அன்னிக்கு நீங்க மண்டபத்தை விட்டு போன கொஞ்ச நேரம் கழிச்சு உங்க அம்மா அப்பாவும் உங்களை தேடி வந்துட்டாங்க... அம்மாவும் அப்பாவும் வந்த சொந்தக் காரங்களுக்கு பதில் சொல்ல முடியாம திணறி போய்ட்டாங்க....

ஒரு வழியா எல்லாரையும் அனுப்பின அப்புறம் சத்யா வந்தான்...

தப்பு பண்ணிட்டேன்னு எங்க அம்மா கிட்ட அழுதான்... அம்மா இனிமேல் அவன் கிட்ட பேச மாட்டேன்.....நீ என் பையனே இல்லைன்னு சொல்லி சத்யாவை அடிச்சுட்டு ரூம்ல போய் கதவை சாத்திகிட்டாங்க.. நானும் அப்பாவும் அம்மாவை சமாதானம் பண்ண போய்ட்டோம்... அவனும் போய்ட்டான்....

நாங்க மண்டபத்தை காலி பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்... அப்ப சத்யா வந்து அவனோட ரூம்க்கு போய்ட்டான்...

அடுத்த நாள் புல்லா வெளியவே வரல நாங்களும் கோவத்துல விட்டுட்டோம்... அடுத்த நாள் காலைல ரூம்ல எதையோ போட்டு உடைக்கற சத்தம் கேட்டுது... நாங்களும் பெருசா எடுத்துகல...அப்புறம் மதியம் போல மேல போய் பார்த்தேன்..

ரத்தம் கதவை தாண்டி வந்திருந்துச்சு...நான் கதவை தட்டி எவ்ளவோ கூப்பிட்டு பார்த்தும் கதவை திறக்கல.....அப்புறம் அப்பாவும் நானும் கதவை ஒடச்சு உள்ள போய் பார்த்தா ஒடம்பு பூரா ரத்தம்... இருக்கற பொருள் எல்லாத்தையும் ஒடச்சு வச்சிருந்தான்...

ஹாஸ்பிடல் கொண்டு போனா பிளட் நிறைய போயிருச்சு... ஒடம்புலயும் நிறைய அடி பட்டிருக்கு....சீரியஸ்ன்னு சொல்லிட்டாங்க... அவன் பொழச்சு வந்ததே பெரிய விஷயம் அண்ணி...

ஒரு மாசம் ஆச்சு அவன் சரி ஆக... அதுக்கு அப்புறம் எதுலயும் கவனம் இல்லாம எங்கயாவது அடி பட்டு அடிக்கடி ஹாஸ்பிடல் சேர்க்க வேண்டியதா போச்சு.....

இன்னொரு பக்கம் போற வழி எல்லாம் உங்களை தேடிகிட்டே இருப்பான்.... உங்களை பார்த்த பிறகுதான் அண்ணி அவன் நல்லா இருக்கான்....

ப்ளீஸ் அண்ணி அவனை மன்னிக்க சொல்லி சொல்லல... அது உங்க பர்சனல்.... ஆனால் அவன் இப்படி கஷ்ட படறதையும் என்னால பாக்க முடில....

என்று சொல்லி விட்டு சென்று விட்டான்..... பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்த இயல் மெதுவாக சத்யாவின் அறைக்கு சென்றாள்....

மெதுவாக கண்களை சூழல விட்டவள் பார்வை இறைந்து கிடந்த பொருளின் மேல் நிலைத்தது.... அது அவளுடைய டைரி .... கட்டிலின் ஓரத்தில் கிடந்த அதை விரித்தவள் அதிர்ச்சியில் மயங்கி விழ தலை கட்டிலின் விளிம்பில் பட்டு ரத்தம் சொட்ட மயங்கி விழுந்தாள்...

அவள் கைகளில் இருந்து நழுவிய டைரி முழுதும் சத்யாவின் ரத்தம் திட்டுகளாய் உறைந்து இருந்தது.....

மாலை வீட்டிற்கு வந்தான் சத்யா... வீடு அமைதியாக இருந்தது.... தன் அறைக்கு சென்றான்.... செல்லும் பொழுது இயலின் அறை முன் ஒரு நிமிடம் நின்றவன் ஒரு பேரு மூச்சுடன் தன் அறைக்கு சென்றான்...

உள்ளே சென்றவன் ஏசியை அதிகப் படுத்தி வைத்து விட்டு கட்டிலில் விழுந்தான்... அறை இருட்டாக இருக்கவே அவன் இயலை கவனிக்க வில்லை....

படுத்திருந்தவன் காதில் முனகல் சத்தம் கேட்கவே மேஜை விளக்கை போட்டு பார்த்தவன் திகைத்தான்..

இயலை நெற்றியில் காயத்துடன் பார்க்க ஆடி போனான்.... இயலின் அருகில் சென்றவன் மெதுவாக அவளை எழுப்ப நினைத்து கன்னத்தில் கை வைக்க உடம்பு நெருப்பாய் சுட்டது....

உடனே மருத்துவ தோழி சுதாவிற்கு போன் செய்தான்.... பின் துவண்டு போன கொடியாய் கிடந்தவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான்....

காலையில் தலைக்கு குளித்து கட்டி இருந்த துணியை அகற்றி முடியை படர விட்டான்.... ஏசியை அனைத்து விட்டு காற்றாடியை ஓட விட்டான்....

பின் அறையை ஒழுங்கு படுத்தி முடிக்கவும் சுதா வரவும் சரியாக இருந்தது.....

" வா சுதா..... "

"என்னடா ஆச்சு... "

"தெரியல சுதா.... நான் வரும் போது மயக்கமா இருந்தா.... தலையில் அடி வேற பட்டிருக்கு....காய்ச்சலும் அதிகமா இருக்கு.... பயமா இருக்கு.... கண்ண தொறக்கவே மாட்டின்றா.... "

"இரு நான் பாக்கறேன்..... " என்று அவளை செக் செய்தவர் அவனிடம் சில மருந்துகளை எழுதி குடுத்து வாங்கி வர சொன்னாள்... அவனும் வாங்கி கொண்டு வந்தான்

பின்னர் தேவையான மருத்துவ உதவிகள் செய்து விட்டு சத்யாவிடம் வந்தாள்...

"என்னாச்சு சுதா.... ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமா.... "

"பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல..காய்ச்சல் அதிகம் ஆனதுல மயங்கி விழுந்துருக்கா... அப்ப தலையில லேசா அடி பட்டுருக்கு.... நான் ட்ரீட்மென்ட் பண்ணிருக்கேன்... ஊசி போட்டுருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கண் முழிப்பா....அப்ப ஏதாவது குடிக்க குடுத்துட்டு இந்த டேப்லெட்ஸ்ஸ குடு....ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்...அப்புறம் தலை பின்னாடி கொஞ்சம் ஈரமா இருக்கு... கொஞ்சம் காய வச்சா நல்லது...

"நான் பாத்துக்கறேன் சுதா..... ரொம்ப தேங்க்ஸ்..... "

"பிரண்ட்ஸ்குள்ள நோ தேங்க்ஸ்.....நோ சாரி...... ஓகே...... "

"ஓகே ஓகே..... "

சுதா சென்ற பின் சமையல் அறைக்கு சென்று பாலை கல்கண்டு போட்டு காய்ச்சி அளவான சூட்டுடன் பிளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டு மேலே வந்தான்....

பாலை வைத்து விட்டு ஹேர் ட்ரையருடன் இயலின் அருகில் அமர்ந்தான்... மெதுவாக இயலை அமர வைத்து தன் தோளின் மேல் சாய்த்தவன் முடியை காய வைத்து மீண்டும் படுக்க வைத்தான்....

"சாரிடா.... என்னால எப்பவும் உனக்கு கஷ்டம் தான்...... "என்றவன் படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்து இயலின் தலையை கோதிக் கொண்டிருந்தான்.....

அறை மணி நேரம் கழித்து இயல் கண் விழித்தாள்....

சத்யா இயலை எழுப்பி அமர வைத்தான்... பின் பிளாஸ்க்கில் இருந்த பாலை இயலிற்கு புகட்டினான்.... பின்னர் தண்ணீர் குடுத்து மாத்தரையை விழுங்க வைத்து படுக்க வைத்தான்...

இயலிற்கு அறை மயக்க நிலையில் இருந்ததால் எதுவும் உணர வில்லை....

சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனாள்... அவள் அருகில் அமர்ந்தவாறே சத்யாவும் உறங்கிப் போனான்...

இயல் கண் முன் சத்யா ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல் தோன்ற சத்யா என்று கத்திக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்...

"இயல்.... என்னாச்சுடா.... ஏன் கத்துனா..... "

"ச.....சத்யா.... உ...உங்களுக்கு....ர.. ரத்தம்.... நான் பார்த்தேன்.... "என்று அழுது கொண்டே கூற....

"எனக்கு ஒன்னும் இல்லடா..... நான் நல்லாருக்கேன்.... நீ அழாத.... "என்று இயலை அனைத்து ஆறுதல் படுத்தியவன்..... அவளை விலக்கி மீண்டும் படுக்க வைத்தான்...

"சத்யா.... நான்.... இன்னிக்கு மட்டும் உங்களை கட்டிப்புடிச்சுட்டு தூங்கட்டுமா.... எனக்கு பயமா இருக்கு..... "என சிறு குழந்தையாய் கேட்க அவன் உருகி தான் போனான்....

சரியென்று சத்யாவும் இயல் அருகில் படுக்க..... அவன் மார்பில் முகம் புதைத்து அவன் இடுப்பை இறுக்கி கொண்டு இயல் உறங்க முற்பட.... அவனும் அவளை இறுகி அணைத்து இயலின் உச்சியில் முத்தம் பதித்தவன் அவள் முடியை இதமாய் கோதியவாறே அவனும் தூங்கி போனான்....

சிறு குழந்தையாய் நெஞ்சில்

முகம் பதித்து இடை இறுக்கி

இன்பமாய் அவள் உறங்கி விட !!!!

அதை விட இன்பமாய்

நெஞ்சில் சாய்ந்த கோதையவள்

அன்பு கண்டு இதயம் உருகி

ஐவிரல் வழியே வழிந்து

தலை கோதி !!!!

இரு உள்ளம்தனை நனைத்து

இதயங்கள் புது மோகனங்கள்

பாடியதே !!!!

காமம் இல்லாக் காதலில்

இரு உள்ளங்கள் சேர்ந்ததே !!!!!
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN