4
கார், அந்த பறந்து விரிந்த தோட்டத்திற்குள் நுழைந்தது. சுற்றி பறவைகளின் கீச்-கீச் சத்தம் காதிற்கு இனிமையாக இருக்க, ஷண்மதிக்கு அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் மதிற்கு அமைதி தருவதை உணர்ந்தாள். என்னவோ அவளுக்கு அந்த வீட்டில் ஒரு சொந்தம் உருவாகிருப்பதாக அவள் உள்ளுணர்வு கூறியது. அந்த தோட்டத்தின் முடிவில் இருந்த நீருற்றை சுற்றி, அந்த மாட மாளிகையின் வாசலில் நின்றது அந்த கார். காரிலிருந்து மூவரும் இறங்க.. ப்ரீத்தி அந்த வீட்டைக் கண்டு அதிசயித்தாள்.
“எவ்வளவு பெரிய வீடு-னு பாருங்க ப்பா..” என்றூ கூறீயவளைக் கண்டு அர்ஜூன் புன்னகைக்க... விட்டினுள்ளே இருந்து பிரபாகரன் ஓடி வந்து, அர்ஜூனை கட்டியணைத்தான். வீட்டுனுள்ளே அழைத்து சென்றவன், அர்ஜூனிடம் நலம் விசாரிக்க, ஷண்மதியை அவன் கேள்வியாகப் பார்பதை உணார்ந்த அர்ஜூன்,
“ஹான்.. பிரபா.. இவங்க ஷண்மதி. என் பி.ஏ.” என்று கூறவும் அவளிடம் பிரபாகரன் புன்னகைக்க, பதிலுக்கு ஷண்மதியும் புன்னகத்தாள். இதனைக் கண்ட அர்ஜூனுக்கு ஏனோ கடுப்பாக..
“சரி.. சரி.. எல்லாரும் ப்ரஸ் ஆவோம். பிரபா எங்க ரூம் எங்க இருக்கு?” என்று அவன் பேச்சை மாற்ற..பிரபாகரன் ஷண்மதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அதைக் காண பொறுக்காமல், ஷண்மதிக்கு முன் நின்றுக்கொண்டு, அதே கேள்வியை அர்ஜூன் கேட்க, சுயநிலைக்கு வந்த பிரபாகரன், அவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
“இது தான் டாக்டரே உங்க ரூம். ப்ரீத்தி பாப்பாக்கு உங்க பக்கத்துலையே ரூம்.” என்று அவன் கூறவும் ப்ரீத்தி துள்ளி குதித்து அவள் அறைக்கு ஓட, அர்ஜூன்..ஷண்மதியின் அறையைப் பற்றி அவனிடம் கேட்கப் போக, அவனோ மீண்டும் ஷண்மதியைக் கண்களில் காதல் பொங்க பார்த்துக் கொண்டிருக்க..
‘இவன் என்ன அடிக்கடி இப்படி ஆகிடுறான்?’ என்று கடுப்பாகிய அர்ஜூன், ஷண்மதியின் கையை பிடித்து இழுத்து தனக்கு பின்னே நிற்க வைத்துக்கொண்டு,
“ஆங்.. பிரபா, மிஸ்.ஷண்மதிக்கு எங்கே ரூம்?” என்று அர்ஜூன் பொறாமைப் பொங்க கேட்க, “அவங்களும் ப்ரீத்தியும் ஒரே அறை தான் அர்ஜூன்” என்று ஷண்மதியை அர்ஜூனையும் தாண்டி எட்டிப் பார்த்தப்படி அவன் கூற, அர்ஜூன் ‘இது சரி வராது.’ என்று முடிவுக்கு வந்தவனாக.. ஷண்மதியின் பெட்டியினை எடுத்துக்கொண்டு, அவளை ப்ரீத்தியின் அறைக்குள்ளே செல்லும்படி கூறிவிட்டு, அவளின் பெட்டியினை, அறைக்குள்ளே வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான் அர்ஜூன்.
நாட்கள் வேகமாக உருண்டோடியது. பிரபாகரனின் தம்பி ப்ரனீஷுக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்துக்கொண்டிருந்தான் அர்ஜூன். நாட்கள், வாரங்கள் ஆகின. வாரங்கள் மாதங்களாயின. ஷண்மதியை அங்கிருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. முக்கியமாக பிரபாகரனின் மனதில் அவள் நீங்கா இடம் பிடித்துவிட்டாள். அவளின் மீது தனக்கு இருந்த காதலை, அர்ஜூனிடம் ஒரு நாள் அவன் கூற, அவனோ.. தைரியம் இருந்தால் அதை ஷண்மதியிடம் கூறும்படி கூறிவிட்டு, மனதிற்குள் குமுறிக்கொண்டிருந்தான். வெகு நாட்களாக முயன்று, அன்று எப்படியேனும் ஷண்மதியிடம் தன் காதலைப் பற்றி கூறிவிடவேண்டும் என்ற முடிவிற்கு வந்தவனாக, ஷண்மதியை தனியாக வரும்படி கூறியிருந்தான். அதன்படி அவளும் பிரபாகரன் தன்னை அழைத்ததன் காரணம் அறியாமல் அவன் கூறிய இடத்திற்கு தனியாக வந்தாள் ஷண்மதி. அங்கே பிரபாகரன், ஒருமுறைக்கு பலமுறை தனது காதலை எப்படி கூறுவது என்று சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தான்.
“சொல்லுங்க பிரபா சார்.” என்ற ஷண்மதியின் குரலில் திரும்பியவன்,
“ப்ளீஸ்-ங்க. என்னைய சார்-னு கூப்பிடாதீங்க ஷண்மதி.” என்று அவன் கூறவும் புருவங்களில் முடிசிட யோசனையில் ஆழ்ந்தவள்,
“ஏன் சார் அப்படி சொல்லுறீங்க?” என்று அவள் கேட்கவும் தனது காதலை பட்டென்று உடைத்துவிட்டான் பிரபாகரன். இதனை சற்றும் எதிர்பாராத ஷண்மதி,
“என்ன சார் சொல்றீங்க??!!!” என்று அவள் அதிர்ச்சியில் கேட்க.. ‘ஆமாம்’ என்பது போல கூறியவன், தன் தலையை கவிழ்த்தினான். சற்று நேர அமைதிக்கு பிறகு ஷண்மதி பேசத் தொடங்கினாள்.
“ரொம்ப நாளா நானும் ஒரு விசயத்த உங்கட்ட சொல்லனும்-னு நினச்சுட்டு இருந்தேன்.” என்று அவள் கூறவும், ஷண்மதிக்கும் தன் மீது ஈர்ப்பு இருப்பதாக எண்ணிய பிரபாகரன்,
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்க ஷண்மதி.” என்று முகம் ஜொலிஜொலிக்க கேட்டு வைத்தான்.
“நான்...ஒருத்தர விரும்புறேன் சார்.” என்று ஷண்மதி கூறவும், ‘யாரது?’ என்பது போல அவன் கண்கள் மின்ன சைகை மொழியில் கேட்டான்.
“நான்..வந்து.. அர்ஜூன்....அர்ஜூன் சார்-அ விரும்புறேன் சார்.” என்று அவள் கூறவும் அதிர்ச்சியில் பிரபாகரன் பின்னோக்கி நடந்து அறை வாசலில் நின்றான். அவனை கவனியாத ஷண்மதி, அர்ஜூன் மீதான தன்னுடைய காதலைப் பற்றி கூறிக்கொண்டிருந்தாள்.
“அவர்..கல்யாணம் ஆனவர், அவர் மனைவி இப்போ இந்த உலகத்தில இல்லாம இருக்கலாம். ஆனா, நான் அவருக்கு மனைவியா வந்துட்டா, அவருக்கு மனைவியா மட்டுமில்லாம ஒரு அம்மாவாவும் இருப்பேன். அவருக்கு மட்டும் இல்ல. ப்ரீத்திக்கும் நான் தான் அம்மா. ரெண்டு பேரையும் உயிரா பார்த்துப்பேன்.” என்று கூறிக்கொண்டே பிரபாகரனை ஷண்மதி நோக்க.. அவனோ வாசலை அதிர்ச்சி மிகுந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்க்கும் திசையில் ஷண்மதி பார்க்க.. அங்கே, அர்ஜூன் சிவந்த கண்களுடன் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கோபமாக இருப்பதாக எண்ணிய ஷண்மதி, அவனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில்,
“அர்ஜூன்..” என்று அழைக்க.. அவனோ திரும்பி வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
“அவருக்கு என்னைய பிடிக்கல போல.” என்றபடி முகத்தை தொங்கப்போட்ட ஷண்மதியிடம்,
“இல்ல.. அவனுக்கு உங்கள பிடிக்கும்.. ஆனா, அவனுக்கு பயம். அவனோட கடந்த காலம் உங்க வாழ்க்கைய பாதிச்சுடுமோ-னு..” என்று பிரபாகரன் கூறவும் அவனை கேள்வியாகப் பார்த்தாள் ஷண்மதி.
“ஆமாங்க..அவனோட கடந்த காலம் ரொம்ப இருள் சூழ்ந்தது.” என்று அவன் வருத்தமாக முகத்தை வைக்க..
“அவர் மனைவி இறந்தத சொல்லுறீங்களா?” என்று ஷண்மதி கேட்கவும் பெருமூச்சு விட்ட பிரபாகரன்,
“இது ரொம்ப ரகசியம் ஷண்மதி. நீங்க அவன விரும்புறேன்-னு சொல்லுறதால உங்க கிட்ட மட்டும் சொல்லுறேன்.. அர்ஜூன் மனைவியோட இறப்பு இயற்கையானது இல்ல.” என்று அவன் கூறவும் அதிர்ந்த ஷண்மதி,
“பின்ன?” என்று அதிர்ச்சி குறையாமல் கேட்க...
“ஆமாங்க..அவன் மனைவி ஷர்மிளா இயற்கையா இறக்கல. அது...... ஒரு.... கொலை.” என்று பிரபாகரன் தயங்கி தயங்கி கூறி முடிக்க..
“என்னது...????!!!!!! கொலையா???? யாரு அந்த இரக்கமில்லாத காரியத்த செஞ்சா?” என்று ஷர்மிளா கேட்டு வைக்க, அதற்குள் ப்ரனீஷ் அழைக்கும் சத்தம் கேட்கவும், ஷண்மதியிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டான்.
‘இத பத்தி அர்ஜூன் கிட்ட பேசணும்.’ என்று எண்ணியப்படி அவளும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.