😍💘உனக்காக வாழ நினைக்கிறேன், அத்தியாயம்-7💘😍

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
7

“ஆஆஆ..” என்று ப்ரனீஷ் அலறும் சத்தம் கேட்டு வீட்டில் அனைவரும் பயந்து அந்த ரூமிற்கு போக.. அங்கு அவன், “ஷ்..ஷ்..” என்று அவன் பாத்ரூமைக் காட்ட.. அந்த பக்கம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.
“அங்க யாரும் இல்ல டா” என்று பிரபாகரன் கூற..
“இல்ல நான் பார்த்தேன். நீளமா முடி வச்சு முகத்த மறைச்சுகிட்டு, பெரிய கண்களோட..ஒரு பொண்ணு இந்த பக்கம் போனத பார்த்தேன்.” என்று ப்ரனீஷ் கூறவும், அவன் அருகில் அமர்ந்தான் அர்ஜூன்.
“ஒன்னுமில்ல ப்ரனீஷ். நீங்க வருத்தத்துல இருக்கீங்க. அதான் அப்படி உங்களுக்கு தெரியுது. டி.வி.-ல ஏதாவது பாட்டு போட்டு பார்த்துட்டு தூங்குங்க.” என்று கூறிவிட்டு டி.வி-யை ஆன் செய்துவிட்டு செல்ல..அவனைத் தொடர்ந்து, ப்ரீத்தி, ஷண்மதி, பிரபாகரன் ப்ரனீஷ் அறையை விட்டு சென்றனர். அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்த ப்ரனீஷ், தனது மொபைல் போனை எடுத்து,
“ டேய்..மச்சான்.. ஆமா டா. அவ மறுபடியும் வந்துட்டா. நான் பார்த்தேன் டா. அர்ஜூன் அண்ணா வந்த புதுசுல காணாம போயிருந்தா ட. இப்போ மறுபடியும் வந்துட்டா.” என்று ப்ரனீஷ் தனது நண்பனிடம் கூறிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஷண்மதி.
‘இவன் என்ன சொல்லுறான். ஏதோ தப்பு இருக்கு. கவனிப்போம்.’ என்றெண்ணியவளாக தன்னுடய அறைக்குச் சென்றாள் ஷண்மதி.
மறுநாள் காலை ப்ரனீஷ் தன்னுடைய நண்பனைக் காண செல்வதாக கூறிவிட்டு காரை எடுத்துக்கொண்டு செல்ல.. அவன் காரைப் பின்தொடர்ந்தாள் ஷண்மதி. ப்ரனீஷின் கார், கேமரால் நீர்வீழ்ச்சி பாலத்தில் நின்றது. வேகமாக அங்கே இருந்த செக்யூடிட்டி அறைக்கு செல்ல.. அவன் வெளியில் வரும் வரை மறைவாகக் காத்திருந்தாள். அவ்வறையை விட்டு வெளியில் வந்த ப்ரனீஷ் எதையோ மறைவாக அடுத்துச் செல்வதைக் கவனித்தாள். அவன் கார் சென்றதும் அதே செக்யூரிட்டி அறைக்குள் சென்றாள் ஷண்மதி. அங்கு ஒருவன் டி-வியில் சிசிடிவி காமரா மூலமாக பாலத்தில் நடப்பவைகளை கவனிக்காமல் பொறி சாப்பிட்டுக்கொண்டிருக்க..
“எக்ஸ்க்யுஸ் மீ சார்..” என்ற கதவைத் தட்டிய ஷண்மதியை ஏறெடுத்துப் பார்த்த அந்த செக்யூரிட்டி ஆள்,
“என்ன மா? ஒரு பொறிய திங்கவிடுறீங்களா?” என்று பொறியை மென்றப்படியே கேட்க..
“இப்போ வந்தாரே, அவர் எதுக்கு வந்தார்னு சொல்லமுடியுமா?” என்று ஷண்மதி கேட்க..
“ஆஹான்.. அதெல்லாம் ரகசியம். எல்லாருட்டையும் சொல்லக் கூடாது.” என்று அந்த செக்யூரிட்டி ஆள் கூற, தன்னுடைய கைப்பையிலிருந்து ஒரு கார்டு-ஐ எடுத்து,
“நான் விஜிலென்ஸ்-ல இருந்து வந்திருக்கேன். இப்போவாச்சும் சொல்லமுடியுமா, வந்தவர் என்ன விசயமா வந்தார்னு?” என்று ஷண்மதி கேட்கவும், வாயிலிருந்த பொறியை பயத்தில் துப்பிவிட்டு பேச ஆரம்பித்தான் செக்யூரிட்டி.
“அவர்..அவர்... 27-7-2009 அன்னைக்கு நடந்த சிசிடிவி ரெக்கார்டு-அ வாங்கிட்டு போனார் மேடம்.” என்றுக்கூறவும்,
‘அது ஷர்மிளா அக்கா இறந்த தினம்னு பிரபா சார் சொன்னாரே..!! இவன் எதுக்கு அன்னைக்கு நடந்த ரெக்கார்டு-அ வாங்கிட்டு போறான்..?’ என்று யோசித்தவள், வேகமாக வெளியில் வந்து, செக்யூரிட்டியிடம் காட்டிய தன்னுடைய பான்-கார்டுஐ தன் கைப்பையில் வைத்தாள் ஷண்மதி.
இரவு ஏழு மணியளவில், வீடு வந்த ப்ரனீஷ்-ஐ டி-வி பார்ப்பது போல் பார்த்தாள் ஷண்மதி. அவன் தன் அறைக்கு சென்று கதவை லேசாக கதவை சாத்தினான். ப்ரனீஷின் அறையின் வாசலில் நின்றப்படி அவன் உள்ளே செய்கிறான் என்று கவனித்தாள். அங்கு அவன் கையிலிருந்த சி.டி-யை எடுத்து லாப்டாப்-ல் போட்டு பார்த்துக்கொண்டிருக்க அதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வீடீயோவை பார்த்துவிட்டு வேகமாக அதனை அவன் டெலிட் செய்யப்போக..
“ஏய்..ஏய்...” என்று வேகமாக அவன் ரூமிற்குள்ளே விரைந்தாள் ஷண்மதி. அவள் வருவதைக் கண்ட ப்ரனீஷ்,
“நீ..நீ...?” என்று யோசித்தவன், சட்டென்று அந்த வீடியோவை நீக்க செல்ல.. அவனைத் தடுத்த ஷண்மதியை ஒரு அரை அரைய..சுருண்டு மெத்தையில் படுத்தவளின் ஒரு கையில் தன் காலை வைத்து..
“என்னடி..ஓவர் சீன் போடுற? நானும் நேத்து இருந்து பார்த்துடு இருக்கேன், பெரிய சிபிஐ ஆபிஸர் மாதிரி துப்பு துளவுற? என்று ப்ரனீஷ் கேட்க..அதிர்ந்தாள் ஷண்மதி.
“அடப்பாவி.. எல்லாம் தெரிஞ்சே தான் இருந்தியா?” என்று ஷண்மதி கேட்க..
“ஆமா.. நேத்து என் ப்ரண்ட்-ட பேசிட்டு இருக்கைல என் ரூம் வாசல்-ல உன் துப்பட்டா பறந்தத பார்த்தேன். கீழ உன் நிழல் அசஞ்சுச்சு.. என்னதான் செய்யுறனு பார்ப்போம்னு தான் உன்னைய விட்டுபிடிச்சேன்.. ஏன் டி..? எவனாச்சும் ரூம் கதவ நீ பார்க்குற அளவுல திறந்து வைப்பேனா? நீ எதுக்கு என்னைய பின் தொடருரனு கண்டுபிடிக்க தான் பண்ணேன்..பெரிய செர்லாக் ஹோல்ம்ஸ்-உ.. துப்பறிய வந்துட்டாங்க.. என்ன டி தெரியணும் உனக்கு? ஷர்மிளா எப்படி செத்துச்சுனா? அத கொன்னதே நான் தான் டி..” என்று ப்ரனீஷ் கூறவும் அதிர்ந்தாள் ஷண்மதி..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN