மாற்றம் -5

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரேகா அன்று எதையோ சிந்தித்தவாறு தனது லஞ்ச் பாக்ஸ் எடுத்து திறந்து சோற்றை பிசைந்துக்கொண்டு இருக்க அவளை முதுகில் தட்டி..
"ரேகா கவனம் சாப்பாட்டில் இருக்கட்டும்" என்றாள் ரோஜா. அன்று ரேகாவிற்கு என்ன தோன்றியதோ ஓவென அழத்துவங்கினாள்.

அவளை சமாதானம் செய்தவளாய் ரோஜா தன் தோளில் அவளை சாய்த்துக்கொண்டு "உண்மையை சொல்லு ரேகா என்ன பிரச்சனை உனக்கு. நீ என்னனு சொன்னா தான் பிரச்சினை தீர்க்க முடியும்" என்று கூற கண்களை துடைத்தவள்.

"ரோஜா..என்னை ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டான் டி என்கூட ஊரெல்லாம் சுற்றிவிட்டு இப்ப நீ எனக்கு தேவையில்லை னு போயிட்டான் டி..ஆனால் என்னால அவனை மறக்கவும் முடியல மன்னிக்கவும் முடியல" என்றாள் வெகுளியாய்.

"யார் டி அது" என்றாள் ரோஜா.

"அவர் பெயர் ராஜேஷ் டிப்ளமோ பிலிம் டெக்னாலஜி படிக்கிறாரு" என்று கூறி வீட்டின் விபரத்தையும் கூற ரோஜாவுக்கு மெல்ல புரிந்தது அது ஆர்யாவின் அண்ணன் ராஜேஷ் என்று எனவே அவளை அழைத்துக்கொண்டு நேரே ஆர்யாவின் வீட்டுக்கு சென்றாள்.

"ராஜேஷ்...ராஜேஷ்" என்று கூக்குரலில் அனைவரும் வர...ராஜேஷ் திருதிருனு முழிக்க ஆரம்பித்தான்.

"யாரம்மா நீ ஏன் இங்க வந்து எங்கள் புள்ளைய பெயரிட்டு அழைச்சிட்டு இருக்க" என்றார் பரிமளம்.

"இங்க பாருங்க ஆண்டி ,இவள் பெயர் ரேகா இவளை உங்கள் புள்ள லவ் பண்ணி ஊரை சுத்திட்டு வேணாம்னு விட்டுட்டாரு. இதுக்கு ஒரு நியாயம் தெரிஞ்சாகனும் அதான்" என்றாள் சத்தமாய்.

"என்னது ராஜேஷ் லவ் பண்ணானா" என்றாள் ஆராதனா.

"என்ன காரியம் டா பண்ணிருக்க சனியனே எனக்குனு வந்து பொறந்துருக்கு பாரு" என்று பரிமளத்தின் கணவர் ஓங்கி அடிக்க ஆரம்பிக்க அதை தடுத்த ரோஜா...

"அங்கிள்.."

"என்னம்மா"

",நீங்க அடிக்கிறத வேடிக்கை பார்க்க நான் இங்க வரவில்லை, இவளை முறைப்படி உங்கள் வீட்டு மருமகளா ஏத்துக்க நீங்க சம்மதிக்கனும். அந்த சம்மதம் வாங்கிட்டு போலானு தான் வந்தேன். அவளை முறைப்படி பொண்ணு கேட்டு அவங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க. இது தான் சரியான முடிவுனு எனக்கு தோன்றுது"என்றாளே நம் ரோஜா தைரியமாக.

"யாரு என்னனு தெரியாத பொண்ணை எப்படிமா சம்மதம் பண்றது" என்ற பரிமளத்திடம்.

"ம்ம்ங் அது சரி, யார் என்னனு தெரியாமலேயே உங்கள் பையன் காதலிக்கும்போது யாரு என்னனு தெரியாத இந்த பொண்ணை சம்மதம் பண்றது தப்பில்லையே" என்றாளே பார்ப்போம்.

"எல்லாரும் கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா" என்றது பார்வதியின் குரல்.

"அம்மாடி இந்த பொண்ணை எங்கள் வீட்டு மருமகளா ஏத்துக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டிலையும் பொம்பள பிள்ளைகள் இருக்குத்தா அவங்களுக்கு நல்ல வழி பண்ணி கரை சேத்துட்டு ராஜேஷ்க்கு இந்த ரேகாவையே கட்டி வைக்கிறோம். சத்தம் போடாத தா..அக்கம்பக்கத்தில் இருப்பவங்க ஒன்னுக்கு ரெண்டா பேசுவாங்க" என்றார் பார்வதி.

அவளின் குரல் சற்று தனிந்து "சரிங்க ஆண்டி அப்ப நாங்க கிளம்புறோம்" என்று விடைபெற்று கொள்ள இதையெல்லாம் வேடிக்கை பார்த்த ஆர்யா..

'செம்ம பொண்ணு ரோஜா சேன்ஸே இல்லை' என்று மனதினுள் அவளுக்கு பாராட்டி மகிழ்ந்தான். ராஜேஷின் மனமும் மாறியது. இந்த மாற்றத்திற்கு காரணம் ரோஜாவே..
....
'ச்சு இந்த வீட்டில் என்னன்மோ நடக்குது இந்த வீட்டில் 32வயசு ஆகியும் குத்து கல் மாதிரி உக்காந்து இருக்கேன். இந்த ராஜேஷ் என்னடா னா லவ் அது இதுனு..கடவுளே எனக்கொரு வழி காட்டேன்' என்று மனதினுள் புழுங்கிக்கொண்டு இருக்கையில் தான் ஆகாஷ் அவளது வீட்டை கடந்தவாறு பைக்கில் எங்கோ சென்றுக்கொண்டு இருந்தான்.

"வாவ் நம்ம ஆளு எங்கயோ போறாப்ல" என்றபடி இவளும் மார்கெட் போக வேண்டிய காரணத்தை கொண்டு தன் ஸ்கூட்டியில் இவளும் அவனை பின்தொடர்ந்தாள். அவனை பின்தொடர்ந்து செல்ல சிக்னலில் மாட்டிக்கொண்டாள்.

"ஐயோ இந்த சிக்னல் வேற"..என்று புலம்பிக்கொண்டு வாகனத்தை செலுத்தினாள். அவள் பின்னால் வருவதை தன் வாகனக்கண்ணாடி மூலம் பார்த்தவன் நமட்டு சிரிப்புடன் தன் வாகனத்தை இன்னும் வேகமாக செலுத்த முயன்றான். எப்படியோ ஒருவழியாக அந்த பானிபூரி கடையில் நின்றது.

மூச்சு வாங்கியபடி வந்தவள்.
"இந்த பானிபூரி வாங்கவா இவ்வளவு தூரம் பைக் ரைடு" என்றாள்

"ஹாஹா ஆமாம் இது என்னோட ஃபேவரிட் ஆமாம் நீ என்ன இந்த பக்கம்"..

"ஈஈஈஈஈ..." என்று பல்லை காட்டியபடி அசடுவழிய..

"சரி சரி இந்தா நீ ஒரு ப்லேட் சாப்பிட்டு" என்று அவளுக்கும் ஒன்று வாங்கி தந்தான். பானிபூரி என்றாள் இவளுக்கும் கொள்ளை பிரியம். இவளும் ரசித்தபடி அதை சாப்பிட்டாள்.

"ஆகாஷ்..."

"என்ன ஆராதனா"

"ஒன்னுல உன் கிட்ட மனசுல இருக்கிற எல்லாம் சொல்லனும் போல இருக்கு"

"சொல்லு"

"நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா"

"ஹாஹா ஏய் ஆராதனா என்ன நீ திடிரென இப்படி "

"பிடிச்சிருக்கு.. உங்களை பார்த்த உடனே பிடிச்சிருச்சு சின்ன பிள்ளைங்க மாதிரி ஐலவ்யூ னு எல்லாம் சொல்லி ப்ரொபோஸ் பண்ண தெரியல ஆனால் நீங்கள் இல்லாமல் என்னால இருக்க முடியாதுனு தோன்றுது" எனக்கூறிக்கொண்டே அவன் கண்களை எதிர்நோக்கினாள் பதிலுக்காக அவனோ அவளையே கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டிருக்க...

"ஆகாஷ்" என்ற அழைப்பில் விழித்தவன்

"ஆராதனா...ஐலவ்யூ" என்றான் வெடுக்கென்று.

"எ..என்ன சொல்றீங்க"

"ம்ம்ம் உன்னை விரும்புறேன் போதுமா"

"நிஜமாவா"?

"சத்யமா உன்னை விரும்புறேன். ஆனால் உனக்கே தெரியும்ல நாங்க கொஞ்சம் ஆச்சாரம்.. ஐயர் ஆத்துக்கு மருமகளா வருவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை... நீ நினைக்கிற மாதிரி உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது . முதல்ல எங்கள் சித்தி பங்கஜம் கிட்ட பேசிட்டு அவங்க மூலமா எங்கள் ஆத்துல பேச சொல்றேன்" என்றான் தனக்குரிய நேர்த்தியான மொழியில்.

"சரிங்க ஆகாஷ்..இது இது போதும் எனக்கு" என்றாள் மகிழ்ச்சியில் ஆனால் அவளுக்குள் குழப்பமும் இருந்தது ஒருவேளை ஏதேனும் காரணம் காட்டி கல்யாணத்திற்கு பெரியவர்கள் சம்மதிக்காவிட்டால் ,அல்லது சம்மதம் தெரிவித்து பின்பு கல்யாணம் வரை வந்து ஏதேனும் பிரச்சினை நிகழ்ந்தால்...

அவளுக்குள் குழப்பம் தீருமா?

காத்திருப்போம்
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN