என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 14
ஆதிகா சொன்னதை வர்ஷித் செய்ததால், ஆதிகா வேலைக்கு செல்ல ஒப்புக்கொண்டாள். நேர்முக தேர்விற்கு ஆதிகாவை அனுப்பி வைத்தது முதல் வேலை கிடைத்து, அலுவலகத்திற்கு சென்றது வரை அவளுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தது வர்ஷித்தான். அவள் வேலைக்கு போக சுப்பிரமணியனும் வசந்தாவும் சம்மதித்தனர். இதற்கிடையில், ஆதிகாவும் எவ்ளோவா காரணம், வேலைக்கு போகாமலிருக்க சொல்லியும் அம்மூவர்களிடம் எடுப்படவில்லை . வர்ஷித்தின் பெற்றோர் மேலும் ஊக்குவித்தனர். வசந்தா, "படிச்சா புள்ள எதுக்கு சும்மா வீட்ல இருக்கணும் " எனவும் சுப்பிரமணியன், "வெளியில் போனாதான் வெளி உலகத்தை தெரிஞ்சுக்கலாம்" என பல அறிவுரைகளை கூறினார். அதற்கு அவளோ, 'எப்படித்தான் இவனை மாதிரியே அத்தை மாமாவும் இருக்காங்களோ' என உள்ளே நினைத்துக்கொண்டு சரி என சம்மதித்தாள். வர்ஷித்தே ஸ்கூட்டி ஒன்று வாங்கி தந்து ஒட்டவும் கத்துக்குடுத்தான்.
நாட்களும் இதுபோலவே உருண்டோடின. ஆதிகாவும் வசந்தாவும் மாமியார் மருமகள் நிலையிலிருந்து அம்மா மகள் நிலைக்கு மாற்றம் பெற்றிருந்தனர். அவ்விருவரும் பெண் பிள்ளை இல்லாத குறையை ஆதிகாவிடம் அன்பை பொழிந்து போக்கி கொண்டனர். கட்டுக்கோப்பான பெற்றோருடன் வாழ்ந்த ஆதிகாவிற்கு, நட்பாய் பேசி நண்பர்கள் போல் பழகும் அத்தை மாமாவுடன் நன்றாக இணங்கி போனாள். தினசரி மூச்சுக்கு ஆயிரம் முறையாவது "அத்தை அத்தை'என கூப்பாடு போட்டுக்கொண்டே இருப்பாள். தினசரி நடப்பதை இருவரிடமும் பகிர்ந்தும் கொள்ளுவாள். இவர்களின் பிணைப்பை பார்த்து வர்ஷித் மிகவும் சந்தோசம் கொண்டான். சில நேரம் பொறாமையும் எழுந்தது அவனுக்குள்.
வர்ஷித் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஆதிகா அங்கு வந்தால், வர்ஷித் அவ்விடத்தை விட்டு விலகி விடுவான். இதை பெற்றோரும் கவனிக்க தவறவில்லை. இருந்தாலும், "இது அவர்களே பேசி தீர்க்க வேண்டியது"என கேட்காமல் விட்டனர், பின்னர் அதுவே பெரிய விஷயமாகி போக போவதை அறியாமல். ஆதிகா இருக்கும் பக்கம் வர்ஷித் வருவதை முற்றிலும் தவிர்த்தான். அவள் தூங்கிய பிறகே அறைக்குள் வருவான். அவள் தூங்கி எழுவதற்குள் அறையை விட்டு வெளியேறிடுவான். அதிகமாக அவள் கண்ணை சந்திப்பதை மறுத்தான். இந்த விலகலை ஆதிகா மனதினுள், 'வேறு ஒரு பொண்ணை மனதில் வைத்து கொண்டுதான் என்னை ஒதுக்குகிறான்' என மனதில் தீர்மானித்துக்கொண்டாள். ஆனால் அவனோ, ஆதிகாவிடம் நெருங்கினாலே தன்னை மறந்துவிடுகிறோம், ஏதாவுது தன்னை மீறி நடந்துவிட்டாள் என்ன செய்வது என்றே விலகியிருந்தான், தானே அப்படி ஒரு நாள் செய்ய போகிறோம் என்பதை அறியாமல்.
அவனையும் அறியாமல் ஒரு சோகம், தவிப்பு எல்லாமே அவன் கண்களில் தெரியும். அவன் சாதாரணமாக இருந்தாலும் அவனது முகத்தில் ஒரு கவலை குடிக்கொண்டிருக்கும். இதையெல்லாம் கவனித்த ஆதிகா அவனிடம் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டாலும் 'ஒண்ணுமே இல்லனு 'எதுமே சொல்ல மாட்டான். எனக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு பண்ணுறது ஆனால் என்கிட்ட அவன பத்தி ஒண்ணுமே சொல்லமாட்டான் என மனதில் அவனை வசை பாடுவதை தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை. காதல் தோல்வி என ஆதிகாவே யூகித்து கொண்டாள். அத்தை மாமாகிட்ட கேட்போமா என யோசித்தவளுக்கு, 'அவுங்களுக்கு தெரிஞ்சாலும் சப்போர்ட் தானே பண்ணிருப்பாங்க, வர்ஷித்தோட மாமாகிட்ட பேசிருப்பாங்களே, வர்ஷித்திற்கு புடிச்ச பொன்னாத்தானே கல்யாணம் பண்ணிவச்சிருப்பாங்க. ஒரு வேளை, இவனே யார்கிட்டயும் சொல்லால போல'என பலவழியில் யோசித்து கொண்டிருந்தாள்.
வர்ஷித் சிரிக்கும்போது அவனது அழகான இதழ்கள் தாடிக்குள் சிக்கி கிடப்பதை போல் உணர்ந்தவள், அவனுக்குள் ஒளிந்திருக்கும் சோகத்தை கலைத்து, விடுதலையாக வர்ஷித் சிரிப்பதை கண்கூட பார்க்கணும் என உறுதி கொண்டாள். கண்டிப்பா அதுக்கு ஒரு வழி கிடைக்கும் என ஒரு நம்பிக்கையில் அடுத்த வேலைக்கு சென்றாள். அவளுக்கு தெரியாத ஒன்றை சொல்ல துடிக்கும் விதியை இவள் அறிவாளா?
சிறிது நாட்கள் செல்ல, வசந்தா தான் கொண்டு வந்த பை ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருக்க, அங்கு ஆதிகாவும் சென்று அமர்ந்து வழக்கம் போல வளவளத்துக்கொண்டிருந்தாள். வசந்தவுடன் சேர்ந்து ஆதிகாவும் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
அப்போது வசந்தாவின் கையில் ஒரு குட்டி பை ஒன்று பிடிப்பட்டது. அதை ஆதிகா திறந்து பார்க்க அதில் ஒரு டைரி இருந்தது. அதை வசந்தவிடம் காண்பித்து யாருடையது என கேட்க அவரோ அது வர்ஷித்தோட டைரி, "வீட்டுக்கு வந்தபொழுது அதை வச்சிட்டு வந்துட்டேன், எடுத்து வச்சிக்கோங்க இங்க வந்து வாங்கிக்கிறேனு சொன்னான், நானும் கொடுக்க மறந்துட்டேன் அவனும் மறந்துட்டான் போல, இதை வர்ஷித் கிட்ட குடுத்துருமா" என சொன்னார். அவளோ, " இது முக்கியமான டைரியா அத்தை" என கேட்க, வசந்தாவோ, ஒரு சிரிப்புடன், "இத அவன் ஸ்கூலிருந்து வச்சிருக்கான். எங்க யார்கிட்டயும் கொடுக்க மாட்டான். வீட்ல உள்ளவங்க கூட இந்த டைரியை அவனோட பொண்டாட்டினு சொல்லுவோம். எங்க போனாலும் இதை தூக்கிகிட்டுதான் திரிவான். ஏதோ இப்போ மறந்துட்டான் போல அதான் அங்கேயே வச்சிட்டு வந்துட்டான். இதுல என்ன ரகசியம் இருக்குனு எங்க யாருக்கும் தெரியாது மா"என கூறினார் வசந்தா. இதனை கேட்ட ஆதிகாவின் மனதில் ஒரு வித மின்னல் பளிச்சிட்டது. 'இதுலதான் ஏதோ இருக்கு, இத படிச்சா தெரியும், இத கொடுத்துட்டு நான் என்ன பண்றது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தியே ஆகணும். இதுல அந்த பொண்ண பத்தி இருக்க வாய்ப்பு இருக்கு'. இத படிச்சு அந்த பொண்ண கண்டுபுடிச்சு வர்ஷித்கூட சேர்த்து வைக்கணும் என நினைக்கும் போதே அவள் இதயத்தை யாரோ குத்தி கீறுவது போல வலி ஏற்பட்டது. அந்த டைரியை தொடும்போது மனதிலும் உடம்பிலும் நடுக்கம் உருவானது. ஒரு பெருமூச்செடுத்து உணர்வை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாமாதான் சந்தோசமா இல்லை, நமக்கு புடிச்சவங்களாவது சந்தோசமா இருக்கட்டும் என நினைத்து மனதை திட படுத்திகொண்டு, டைரியை வர்ஷித்திற்கு தெரியாமலிருக்க தனது துணிகளுக்கு நடுவில் மறைத்து வைத்தாள், இத சீக்கிரமா படிக்கணும் என உறுதியோடு.
அந்த வாரத்திலேயே ஒரு நாள் இரவு இருவரும் சாப்பிட்டு முடித்தனர். ஆதிகா அறைக்கு சென்று பொருட்களை ஒழுங்கி படுத்தி கொண்டிருந்தாள். வர்ஷித் உள்ளே வரும் நேரம் பார்த்து சரியாக ஆதிகாவும் கப்போர்டில் தலையை இடித்துக்கொண்டாள். அம்மாஆஆ... என கத்தும்போது வர்ஷித்தும் வேக வேக எட்டுக்கள் எடுத்து வைத்து உள்ளே வந்து ஆதிகாவை பிடித்து கைத்தாங்கலாக மெத்தையில் உட்கார வைத்தவனின் கண்ணில் பதற்றம் மட்டுமே தெரிந்தது. அதோடு ஒரு அக்கறையும் தொற்றிக்கொண்டது. அவன் கண்ணை பார்த்ததும் அவளின் வலிகள் பறந்து சென்றது. பேரின்பம் மனதில் குடிக்கொண்டது.
ஆனால், அவனோ "பாத்து செய்ய மாட்டியா" என அவள் செய்த செயலில் பதற்றம் கொண்டு அக்கறையில் திட்டினான். அந்தோ பரிதாபம், ஆதிகாவிற்கு அவன் திட்டிய வார்த்தைகள் யாவும் காதில் விழவே இல்லை. அவனையும் அவனின் பாசத்தையும் ரசித்து அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு நெற்றியில் வீக்கம் இருந்தது. அதை சரி செய்ய மருந்தை தேடி அலைந்து வேகமாக கொண்டு வந்து போட்டு விட்டான். இருவரின் முகமும் அருகே அருகே இருந்தது. ஆனால் இதை கவனிக்கும் நிலையில் இருவரும் இல்லை. ஆதிகவோ வர்ஷித்தின் அன்பின் மழை சாரலில் நனைந்து கொண்டிருந்தாள். வர்ஷித்தோ அவளின் பிறை நெற்றியை நீவி விட்டு நொடிக்கொரு முறை அவனது அன்பை பறைசாற்றிக்கொண்டிருந்தான். இவ்வன்பை பார்த்ததும் ஆதிகாவிற்கு அவன் மீது எழும் காதல் கூடி போனது. இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த அன்பெல்லாம் மொத்தமாக வெளி வந்தது.
அவனின் மூச்சுக்காற்று ஆதிகாவை மெல்ல இம்சிக்க ஆரம்பித்தது. அதிலே அவள் கண் மூடி லயித்திருந்தாள். கிட்ட தட்ட இருவரின் முகமும் ஒட்டியிருந்தது. வர்ஷித் இதை இன்னும் கவனிக்கவே இல்லை. வெகு நேரம் நீவி விட்டு பதற்றம் எல்லாம் குறைந்த பிறகே உணர்ந்தான் தன்னை மீறி தன் மறைத்து வைத்திருந்த அக்கறையும் அவளோடு ஒட்டி இருப்பதையும். உணர்ந்த பிறகு, பட்டென்று எழ போனவனை சட்டென்று தடுத்தது ஆதிகாவின் செயின். ஆம், ஆதிகாவின் செயினோடு வர்ஷித்தின் செயினும் சிக்கி பிணைந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. இதை எடுக்க முயலுகையில் ஆதிகாவை பார்த்தான். அவளும் அப்போதுதான் கண்விழித்தாள். இருவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்திக்க, சட்டென ஆதிகா விழிகளை தாழ்த்தி கொள்ள அவளின் கன்னமும் சிவந்து வெட்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அடுத்து அடுத்து இத்தனை அரங்கேற்றங்களை பார்த்தவன், அவளின் பால் சரியும் மனதை கட்டுப்படுத்த வழி தெரியாமல், இத்தனை நாட்கள் போக்கு காட்டிக்கொண்டிருந்த புத்தியெல்லாம் தறி கெட்டு ஓட, சித்தம் கிறங்கி அசுர வேகத்தில் அவளது பால் போன்ற முகத்தை தன் கைகளால் ஏந்தி தன் இதழ்களால் அவள் இதழ்களை தவிர எல்லா இடத்திலும் பஞ்சமே இல்லாமல் முத்தத்தை வாரி வழங்கினான். இத்தனை நாட்கள் இருந்த தவிப்பு, இப்போது கிடைத்த அவளின் அருகாமை எல்லாமே மடை திறந்த வெள்ளம் போல கட்டுப்பாடின்றி முத்தத்தை இறைத்தான். அவனுக்கு அப்போது தெரிந்தது எல்லாம் ஆதிகா மட்டுமே.
இவற்றை சற்றும் எதிர்பாக்காத ஆதிகா ஸ்தம்பித்து போனாள். ஏற்கனவே, அவனின் அன்பில் திளைத்திருந்தவள் இப்போது அவனின் முதல் முத்தத்தில் திக்கு மூக்கு ஆடிப்போனாள். அவன் செய்வதை அவனவளால் தடுக்க முடியவில்லை, எப்படி முடியும் அவன்தான் அவளின் உயிரில் உறைந்தவன் ஆயிற்றே, ஆருயிர் காதலன் ஆயிற்றே. அவனின் செய்கையை ஏற்றுகொண்டிருந்தாள் அப்பெண்ணவள்.
முகத்தில் அவனது முத்தம் தொடர் கதை ஆகிக்கொண்டிருக்க, அதில் துளியும் அவள் காமத்தை கண்டிரவில்லை விலை உயர்ந்த காதலை மட்டுமே உணர்ந்தாள்.
அவனின் இதழ் ஆதிகாவின் இதழ் நோக்கி பயணிக்கும் நேரம், அவர்களது அறையில் கரண்ட் கட் ஆனது. ஒரு நிமிடம் நிதானித்தவன், தான் செய்த வேலையையும், தான் செய்ய நினைத்த வேலையையும் நினைத்து வேதனை கொண்டு வேகமாக இணைந்த செயினை பிரிக்க முடியாமல் போக அதனை கழட்டி, அவளிடமிருந்து விடுபட்டு ஆதிகாவின் முகம் பார்க்காமல் மாடிக்கு ஓடி சென்றான். தன்னை மீறி அவளின் மீதுள்ள உணர்வுகள் போட்டி போட்டு வெளி வந்ததை நினைத்து கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவன், அவள் தனது முத்தத்திற்கு உருகினாளே தவிர ஒரு வித எதிர்ப்பும் அவள் காட்டவில்லை என்பதை அவன் யோசிக்கவே இல்லை. மாறாக, 'அவ என்ன என்ன நினைச்சிருப்பா, கேவலமா இருக்கு, அவளுக்கு விருப்பம் இல்லாம இந்த மாதிரி பண்ணிட்டு இனிமேல் எப்படி அவளுக்கு முன்னாடி போய்ட்டு நிற்பேன் 'என குற்ற உணர்வு கொண்டான்.
அங்கு அவளின் நிலைமை தான் மோசம், அவனின் முதல் முத்தமும் அவனின் மீசை குறுகுறுப்பும் அவளை விடவே மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. இனிமேல் அவன் சரியா கூட பேசமாட்டான் என அவனின் குணம் அறிந்து யூகித்து கொண்டாள்.
இரவு வெகு நேரம் சென்றும் அவன் அறைக்கு வராததால், அவள் அவனின் டைரியை படிக்க ஆரம்பித்தாள். "உன்ன எப்படிடா வேற பொண்ணுக்கு விட்டுக்கொடுப்பேன் "என புலம்பி, காதலில் உருகி பக்கங்களை புரட்டினாள்.
முதல் பக்கத்திலிருந்து அடுத்த பகுதியில் பாப்போம்.
நன்றி