ஆம்பல் (அல்லி)
அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
பூ 7
தந்தையின் வார்த்தைகளில் சிக்குண்டு இருந்த தேவசேனாவின் மனது அன்றைய நாள் முழுவதும் அவனுடைய சிந்தனையிலேயே கழிந்தது, கடந்த சில நாட்களாகவே விசாகனை பற்றிய எண்ணங்கள் அவளின் மனதில் ஆழ வேறுன்றி இருக்க கல்லூரிக்கு செல்லும் போது கூட அவன் எங்காவது தெரிகிறானா என்று கண்கள் அலைபாய்ந்து அவனை தேடியது.
"ஏய் என்னடி நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், முன்னாடி பாக்குற... பின்னாடி பாக்குற... உன் கண்ணு எதையோ சுத்தி சுத்தி தேடுது என்ன வேணும்" ம் என்று மிரட்டல் தோணியில் மேகலா சந்தேகமாக கேட்க
"ம் என் மாமனை தேடுறேன் பேசாம வருவியா.... எப்போ பார்த்தாலும் கேள்விக்கு பொறந்தவ மாதிரி கேள்விய கேட்டுக்கிட்டே இருப்பியா... நானும் உனக்கு பதில் சொல்லி சொல்லியே கலைச்சி போயிடுறேன்" என்றவள் பஸ்ஸை விட்டு இறங்கி வேகமாக கல்லூரிக்குள் நுழைந்திட்டாள்....
"ஹேய் நில்லு புள்ள.... ஹேய் நில்லு புள்ள இவ என்ன ஓட்ட பந்தயத்துக்கு ஓடுற மாதிரி இந்த ஓட்டம் ஓடுறாளே நம்ம கிட்ட இருந்து தப்பிக்க தானே இந்த ஓட்டம் ஓடுறா உன்னை... ஹேய் வறேன் இருடி என்னால ஓட முடியல" என்று பேசிக்கொண்டே அவளை பின்னால் துரத்தியபடியே சென்றாள் மேகலா.
வகுப்புக்குள் நுழைந்ததும் மேகலாவிடமிருந்து தப்பித்து தோழிகளுடன் கலந்துவிட்டவள் பிறகு தப்பி தவறி கூட மேகலாவின் புறம் திரும்பாமல் அமர்ந்து கொண்டாள்.
எது எப்படியோ வகுப்பு ஆரம்பித்ததும் தன்னுடைய அனைத்து சிந்தனைகளையும் மூட்டை கட்டி வைத்தவள் உன்னிப்பாய் பாடத்தில் கவனம் செலுத்த தொடங்கி இருந்தாள்.
மதிய இடைவேளையின் போதும் கூட மேகலாவுடன் தனித்திருக்கும் தருணத்தை கஷ்டப்பட்டு தவிர்த்து வந்தாள்... அவளுக்கே வியப்பான விஷயம் எதுவென்றால் அவனை காண தான் மனம் ஏன் இவ்வளவு அலை பாய வேண்டும் அவன் சிந்தனைகள் ஏன் மூளையை செயல்பட விடாமல் வேலை நிறுத்தம் செய்கிறது என்று அவளுக்கே தெரியாத போது தோழியின் ஒவ்வொரு கேள்விக்கும் எப்படி தன்னால் பதில் சொல்ல முடியும் என்ற காரணத்தினால் அவளுடன் இருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வந்தாள்.
தோழியின் தடுமாற்றத்தை மனதில் குறித்துக் கொண்ட மேகலா அவளை முறைத்தபடியே கல்லூரி முடிந்ததும் பேருந்து நிறுத்தத்திற்கு இருவருமாக சேர்ந்து வந்தனர். தோழியின் கொலைவெறி முகத்தை பார்த்த தேவா இதற்கு மேல் அவளின் பார்வையை எதிர் நோக்க முடியாமல் "ஹீ.. ஹீ.. என்று அசடு வழிந்து கொண்டே என்னடி ரொம்ப ஆசையா பாக்குற?" என்றாள்
அவள் கேட்டதும் தன் பின் புறமும் பக்கவாட்டு புறமும் திரும்பி திரும்பி பார்த்தவள் சைகையிலேயே என்னையா என்று கையை தன்னை நோக்கி காட்டி தலையை ஆட்டி கேட்டிட
"அட ஆமாடி உனக்கு பின்னாடி என்ன பத்து பேரா நிக்குறாங்க!! உன்னைத்தான் கேட்கிறேன்" என்று தேவா கேளியாக கூறிட
"ஆச்சர்யமா இருக்கு!!! உனக்கு என்னை தெரியுமா? இது எனக்கு தெரியாம போச்சே.... நீங்க யாரு என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்றாள் மேகலா நக்கல் தொணியில்
"ஏண்டி ஏதோ மாதிரி பேசுற என்னை யாருன்னு உனக்கு தெரியாதா?!?" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டாள் தேவா
"அம்மா தாயே உன் சங்காத்தமே வேணாம்... உன் போக்கே வரவர சரியில்ல உன் வீட்டை பத்தியும் தெரியும் நம்ம ஊரை பத்தியும் தெரியும் அப்படி இருந்தும் உன் கண்ணும் உன் செயலும் எனக்கு வேற என்னத்தையோ சொல்லுது" என்றவாறு தோழியிடம் தன் அக்கறையை வெளிப்படுத்த
அவளிடம் தன் மனதில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை எவ்வாறு கூறுவது என்று தடுமாற்றத்துடன் "நீ என்னன்னமோ வாய்க்கு வந்தபடி உளறாத கலா... நான் சாதாரணமா பாக்குறது கூட உனக்கு வேற மாதிரியா தெரியுது... நான் என்ன சொல்லி உன்னை நம்ப வைக்கிறது சரி விடு நாம பேசி பேசியே இது இப்படியே பெருசா போகுது" என்று தோழியை சமாதானம் செய்தாள் தேவசேனா
தோழியின் கையை பிடித்து பெருமுச்சு ஒன்றை வெளியிட்ட மேகலா "சரி எதுவும் கேக்கல ஆனா கவனமா இரு அவ்வளவு தான் சொல்வேன்... புரியுதா..." என்று கூறிவிட்டு பேருந்தின் வரவிற்காக இருவரும் காத்திருந்தனர்.
அவர்களை அதிக நேரம் சோதிக்காமல் பேருந்தும் வந்துவிட கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் ஏறியபடி இருந்தது. அப்போது அவ்வழியாக தேவசேனாவை கடந்து விசாகனின் பைக் செல்ல தன் கண்கள் சிலநாட்களாகவே தேடிய உருவத்தை கண்டதும் தோழி பேசிய அனைத்தையும் மறந்து அவனையே பார்த்து கொண்டு இருந்தவள் படிகளில் கால் வைக்க கால் இடறி கீழே விழுந்து விட்டாள்.
விசாகன் தான் வேலை விஷயமாக சுந்தரனுடன் வந்தவன் ஊர் திரும்பும் போது தான் அவ்வழியாக சென்றது தூரத்தில் இருந்து வரும்போதே அவளை பார்த்து விட்டவன் அவளை கவனியாது சென்று விட பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சுந்தரனின் கண்களில் தேவசேனா பட்டவுடன் அவள் நடவடிக்கைகளை பார்த்தவாறு இருந்தவன் பேருந்தில் ஏறி கீழே விழுந்ததை கண்டுவிட்டான்.
"டேய் அந்த பொண்ணு விழுந்துருச்சு டா"
"எந்த பொண்ணு"
"அதான் டா காபி ஷாப்ல கூட வந்து உன் பெயரை கேட்டுச்சே அந்த பொண்ணுடா"
சட்டென வண்டியை நிறுத்தி திரும்பி அவர்களை பார்த்தவன் சிறிது நேரம் கழித்து "பெருசா எதுவும் இருக்குது டா... எழுந்து போயிடுவாங்க" என்றான் வண்டியை எடுக்காமலேயே
"சின்னதா கூட இருக்கட்டும்... தெரிஞ்ச பொண்ணு பஸ்ஸில இருந்தது விழுந்துடுச்சி டா என்னன்னு கேக்க வேணாமா?? அதுவும் உனக்கு நல்லா தெரிஞ்சவரோட பொண்ணு" என்றதும்
"இது காலேஜ் டா அவங்க பிரெண்டுங்க இருப்பாங்க நாமா பாட்டுக்கு அங்க போய் நின்னா சங்கடமாகிடும்" என்று நண்பனிடம் கூறினாலும் அவ்விடத்தில் இன்னும் கூட்டம் அவளை சூழ்ந்துள்ளதை கண்டு ஏன் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்று பார்த்து இருந்தான்.
"அப்படிங்குறியா சரி வா வண்டிய எடு போலாம் யாருக்கு என்ன ஆனா நமக்கு என்ன வா போகலாம்" என்று விட்டேத்தியாக சுந்தரன் கூற
சுந்தரனின் பேச்சில் அவனை முறைத்தவன் கண்களை இறுக்க மூடி திறந்து "உன்னை திருத்த முடியாது வா போய் பாக்கலாம்" என்று அவள் இருக்கும் இடத்திற்கு விரைந்தான்.
கீழே விழுந்த தேவசேனா வலியை கட்டுப்படுத்த முடியாமல் யார் அவளை நெருங்கி தூக்கினாலும் கத்திக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தாள்.
"ஒன்னுமில்ல தேவா ஆஸ்பிட்டல் போனா சரியாகிடும் உன்னை தூக்கி விடுடி இப்படி கத்தினா என்ன செய்றது... நேரம் வேற ஆகுது" என்று மேகலா சமாதானமாக கூறிட்டாலும் வலியில் தேவா யாரையும் அவளை தொட கூட விடவில்லை தோழிகளும் நண்பர்களும் கூறிய சமாதானங்கள் கூட எதுவும் ஒத்துவராமல் போனது
"அய்யோ கடவுளே.... வலி தாங்கல... என்னை விட்டுருங்க... ரொம்ப வலிக்குது... யாரும் கை வைக்காதீங்க ஆ.... அம்மா என் கால் உடைஞ்சு போச்சோ எனக்கு இப்படி வலிக்குதே" என்று வலியில் கத்திக்கொண்டு அழுது கொண்டு இருந்தாள் தேவா
கூட்டத்தை விலக்கி வலியில் அவள் செய்யும் அலப்பறைகளை பார்த்தவன் 'இவ எப்பவுமே இப்படித்தானா... எதுக்கெடுத்தாலும் கண்ணுல தண்ணிய வைச்சிக்கிட்டு அலையுறா' என்று மனதில் அவளை பற்றி எண்ணியவன் அவளை சுற்றி சூழ்ந்துள்ள கும்பலிடம் "நீங்க போங்க நான் பாத்துக்குறேன் எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்" என்று கூறி அவளை கை கொடுத்து எழுப்ப முயற்சிக்க "இல்ல இல்ல வேணாம் என்னால நிக்க கூட முடியாது... ப்ளீஸ் என் கால் ரொம்ப வலிக்குது என் பக்கத்துல கூட வராதிங்க" என்று அவனை தடுக்க தலையை இருபுறம் ஆட்டியவன் "ஒன்னும் இல்ல சின்ன அடிதான் சரியாகிடும்" என்று கூறி தூக்க போக
"நீங்க தூக்க போறீங்களா!!!" என்று கண்கள் விரிந்து அவனை வியப்புடன் பார்த்தவள் அவன் செய்ய போகும் காரியம் மூலைக்கு உரைத்ததும் "வேணா வேணா தூக்காதிங்க வலி உயிர் போகுது இப்படியே இருக்கட்டும் என்னால நிக்க கூட முடியாது ப்ளீஸ் கை வைக்காதீங்க ஸ்... அம்மா" என்று கால்களை பிடித்துக் கொண்டு கத்திட அவள் கத்த கத்த தேவாவை இருகைகளிலும் ஏந்தியவன் ஆட்டோவை நிறுத்தி அதில் அமரவைத்து மேகலாவும் அவளுடன் அமரவைத்து ஆஸ்பிட்டல் போக டிரைவரிடம் கூறிவிட்டு தானும் அவளை பின் தொடர்ந்தான்.
விசாகனின் கைகள் தேவாவை தாங்கியதும் இதுவரையில் அடம் பிடித்திருந்த தேவா முயல் குட்டி என அவன் கைகளில் அடங்கிட படபடவென பேசிய வாயும் தாழிட்டுக்கொண்டு, கண்களோ அவன் முகத்தையே பார்த்திருக்க, மனமோ 'என்னடி நடக்குது இங்க வந்தாரு பூவ தூக்குறாப்போல கைல தூக்கிட்டாரு... அட கடவுளே நான் கனவுலையா இருக்கேன். இல்ல உண்மையாவே இப்படி நடக்குதா! எனக்கு ஒன்னும் புரியலையே' என்று அதன் போக்கிற்கு நினைத்து கொண்டு கற்பனையில் மிதந்து கொண்டும் இருந்தது அவளின் மூளை.
ஆட்டோவில் இறக்கி அமரவைத்த பின்னும் தன் சுய உணர்வு வெளி வராத தேவா அப்படியே கனவுலகில் அவனுடன் சஞ்சரித்து கொண்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் இருக்க "நல்ல வேளை டி நீ பண்ண ரகளைக்கு நான் எப்போ வீடு போய் சேருவோம்னு பயந்துட்டேன்" என்று தன் போக்கிற்கு மேகலா அவளிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
மேகலாவின் பேச்சுக்கு தேவாவிடம் இருந்து எந்த ஒரு எதிர் வினையும் இல்லாமல் கனவில் மிதந்து கொண்டு இருக்க "ஏய் என்னடி முழிச்சுக்கிட்டே கனவுல இருக்கியா? என்று உலுக்கவும் சுயத்தை அடைந்த தேவா இப்போ என்ன நடந்துச்சு கலா நான் கனவுலயா இருந்தேன். ஆமா நீ எப்படி ஆட்டோல அது சரி நான் எங்க இங்க" என்று கேட்கவும்
"அடி கால்ல தானேடி பட்டுச்சி இல்ல மண்டையில ஏதாவது பட்டுச்சா? ஏன்டி இப்படி வாய்க்கு வந்ததை உளர்ற? " என்று அவளின் தலையை ஆராய்ந்தவன் கைகளை உதறி விட்ட தேவா "ஏய் என்னடி பண்ற லூசு" என்று திட்ட
"ஆனா ஒன்னுடி நீ என்ன நினைச்சி கனவு கண்டியோ தெரியாது... ஆனா நடந்தத பார்த்த எனக்கு தான் பக்குன்னு இருந்துச்சி நீ பண்ண ரகளைக்கு அந்த அண்ணனே உன்னை ஆட்டோல ஏத்தி விட்டு பின்னாடி வர்றாரு பாரு" என்று கூறிட பின்புறம் கண்ணாடி வழியாக அவன் பைக்கில் வருவதை பார்த்தால் உள்ளுக்குள் ஐ!!!!! அப்போ இது கனவு இல்லை' என்று நினைத்தவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி
ஒருவழியாக மருத்துவரிடம் வந்தவர்கள் அடிபட்ட காலை பரிசோதிக்க உள்ளே சென்றனர்.
"டாக்டர் ரொம்ப வலிக்குதுன்னு சொல்றாங்க... என்ன ஆச்சு டாக்டர் பெரிய காயமோ?" என்று விசாகன் தன் ஐயத்தை வினவ
"காயம் இல்ல... ஆனா தசை பிசகி இருக்கு அதனால தான் இவ்வளவு வலி வேற ஒன்னும் இல்ல ஊசி போட்டு மாத்திரை எடுத்துக்கிட்டா இரண்டு நாளில் சாதரணமா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க... அதுவரைக்கும் கால் கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் பண்ணாம இருக்கனும்" என்று மருத்துவர் கூறிவிட்டு செவிலியரை அழைத்து ஊசி போடுமாறு கூறவும் உள்ளே இருந்து அவள் கத்துவது தெளிவாக கேட்டது அவனுக்கு.
"சிஸ்டர் சிஸ்டர்... ப்ளீஸ் சிஸ்டர்... எனக்கு ஊசி னா சத்தியமா பயம் எனக்கு ஊசி எல்லாம் வேண்டாம் இதோ இந்த மாதிரி பெரிய பெரிய மாத்திரையா இருந்தாலும் பரவாயில்லை தாங்க நான் போட்டுங்குறேன்" என்று அடம் செய்ய
"அட என்னம்மா நீங்க சாதாரண ஊசிக்கு போய் இப்படி பயப்படுறீங்க... இப்போ எல்லாம் சின்ன குழந்தைகளே அழாம போட்டுக்குவாங்க இது சின்ன ஊசிதான் வலி எல்லாம் இருக்கவே இருக்காது" என்று கூறிட
"ப்ளீஸ் ப்ளீஸ் இந்த ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன் சிஸ்டர்... எனக்கு ஊசி எல்லாம் செட் ஆகவே ஆகாது, சாதாரண அடி தான் இதுக்கு போய் இவ்வளவு பெரிய ஊசியை கொண்டு வர்றீங்களா" என்று அவரை தடுத்திட
"சின்ன ஊசி தாம்மா ஒன்னும் ஆகாது, நர்ஸ் இவங்கள பிடிங்க" என்று ஒரு நர்ஸை துணைக்கு அழைக்க
"இல்ல இல்ல எனக்கு வேணாம் சிஸ்டர் என் கால் வலியை விட இந்த இன்ஜெக்ஷன் வலிதான் பெரிசா தெரியுது ப்ளீஸ் வேண்டாம்" என்று அலப்பறையை செய்து கத்திக்கொண்டு இருந்தாள்.
டாக்டரிடம் பேசியபடியே இவையனைத்தும் கேட்டு கொண்டிருந்த விசாகனின் இருக்கம் நிறைந்த இதழ்களில் கூட அவளை நினைத்து சிறு புன்னகை எட்டி பார்த்து இருந்தது. பக்கத்தில் இருந்த சுந்தரனோ 'ஆளு செம கெத்தா பேசி நானும் ரவுடிதான்னு எபெக்ட் கொடுத்தாலும் ஊசிய காமிச்சே வழிக்கு கொண்டு வந்துடலாம் போலியே' என்று அவளை நினைத்து சிரித்து கொண்டு இருந்தான்.
மருத்துவமனையை ஒரு வழியாக்கியவள் வெளியே தோழியின் தோள்களில் கையை போட்டு தாங்கி தாங்கி நடந்து வந்தவளின் வாய் மட்டும் ஓயவே இல்லை 'ஒரே ஏத்து ஏத்திட்டாங்களே... கடவுளே அடிபட்ட வலியோட ஊசி போட்ட வலி தான் அதிகமாக இருக்கும் போலயே எல்லாம் அவனால் தான் உன்னை ஒருத்தி பாக்குறேன் தெரியும் போது பைக் ஸ்லோ பன்ண முடியாதா உன்னை பார்த்துக்கிட்டே படியில கால வைச்சேன்னு நினைச்சி கீழே விழுந்து வாரி வைச்சேனே' என்று மனதில் நினைக்க முகம் அதன் உணர்ச்சிகளை பிரதிபலித்து இருந்தது.
அவள் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை அவன் காண முன்னே மறைத்தவள் முகம் வலியின் சாயலை பெற்று இருந்தது. அவளையும் காலையும் மாறி மாறி பார்த்தவன் "இப்போ எப்படி போவீங்க ஒரு ஆட்டோல போயிடுறிங்களா" என்று விசாகன் கேட்க
"இல்ல இல்ல ஆட்டோலாம் வேண்டாம் பஸ்லயே போயிக்கிறோம்" என்று பதில் தேவாவிடம் இருந்து வந்தது. இன்னும் அவன் அருகாமையில் மனதில் இருப்பதை உளறி விடுவோம் என்று
"பஸ்ஸிலையா!!! எப்படிமா உன்னால நிக்கவே முடியலையே அதுல எப்படி போவ?" என்று சுந்தரன் அக்கறையோடு கேட்டிட
"அதெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல... இதெல்லாம் எனக்கு சாதாரணம் எவ்வளவு அடி பட்டு இருப்பேன்... என்ன இங்க அடிபட்டவுடனே கால் வீங்கிபோகவே பயம் வந்துடுச்சி அதிர்ச்சியில கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்" என்று அவனை பார்த்து அசடு வழிய சிரித்தபடியே கூறியவள் "அப்போ நாங்க கிளம்புறோம் டைம் வேற அதிகம் ஆகிடுச்சி" என்று அவர்களிடம் விடைபெற்று ஒரு அடி எடுத்து வைக்க வலியில் ஸ் ஆ... என்று முனங்கியபடியே தடுமாறி நடந்தாள்
அவள் தடுமாற்றத்தை பார்த்தவன் கொஞ்சம் இரு என்று மேகலாவை நிப்பாட்டி விட்டு ஒரு ஆட்டோ கூட்டிட்டு வாடா என்று சுந்தரனிடம் கூறிவிட்டு "நடக்கவே முடியல இதுல பஸ்ஸ எல்லாம் போகவே முடியாது... இப்போ வர்ற ஆட்டோல வீட்டுக்கு போங்க" என்று கூறியவன் ஆட்டோ வந்ததும் அவர்களை ஏற்றி விட்டு அதன் பின்னே இவனும் சுந்தரனும் பைக்கில் தொடர்ந்து சென்றனர்.
'போயே பாக்க மாட்டேன்னு சொன்னான் ஆட்டோல பின்னாடி பாலோவ் பண்ணிட்டு போறான்.. ம் நல்ல டெவலப்மென்ட் தான்' என்று மனதில் நானே எதுவும் பண்ணலனாலும் விதியே உங்களை சேர்த்துடும் என்று நினைத்தவன் "மாப்ள அவங்க ஊர் வரைக்கும் போகறோமா இல்ல வீடு வரையும் போறோமா" என்றான் சந்தேகமாக
"என்ன பொண்ணுடா அவ??? எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சிக்கல மாட்டிக்கிட்டு கிடக்கிறதே வேலையா வைச்சி இருக்கா... இன்னைக்கு பார்த்துட்டோம் ல வீடு வரைக்கும் போய் தான் ஆகணும். பார்த்த ல ஆஸ்பிட்டல்ல பண்ண ஆர்பாட்டத்தை... அவளோட நடவடிக்கை எல்லாம் விசித்திரமா இருக்கு, இதுல ஊர் கிடக்குற அழகுல இவங்கள எப்படி தனியா ஆட்டோல அனுப்பறது வேற ஏதாவது வம்பை இழுத்து விட்டு வச்சா அது வேற பிரச்சனை ஆகிடும்" என்று சலித்துக் கொண்டாலும் அவள் மருத்துவமனையில் பேசிய பேச்சை நினைத்து உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவர்களை பின் தொடர்ந்து இருந்தான்.
விசாகனின் வார்த்தைகளை கேட்டவனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சர்யம் ஊர் வரையும் போலாம் என்று கூறுவான் என தான் பார்த்தான் ஆனால் வீட்டிற்கே கொண்டு விடுவான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அதே மனநிலையுடன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவனுக்கு மனதில் தேவாவின் வெகுளியான சுபாவம் மருத்துவமனையில் தன் நண்பனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்து இருந்ததை பார்த்தவனுக்கு தன் நண்பனின் சிரிப்பை மறுபடியும் உயிர்ப்பிக்கும் சக்தி அவளிடம் உள்ளது என்று நம்பினான்.