பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 8

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நந்தியாவட்டை | நந்தியார்வட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine, East Indian Rosebay, Nandivrksah)




ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.[2]

"என்னய்யா நீ அவனெல்லாம் ஒரு ஆளு…. அந்த பொடி பையனுக்கு போய் இப்படி பயப்படுற... நான் பார்த்து பொறந்தவன், என்னையே ஏமாத்துறான். அவன் அப்பனை விட இவன் பெரிய மோசக்காரன்யா... நான் சொல்றதை கேளு, அந்த வக்கீல் கேட்ட காசு இன்னும் ரெண்டு, இல்ல இல்ல மூனு நாள்ல தரேன் சொல்லு... அவனை நடு தெருவுக்கு இழுத்து மானத்தை வாங்காம விடமாட்டேன்". என்று வக்கீல் ஜூனியரிடம் போனில் பேசிக்கொண்டு இருந்த கணவனை தீ பார்வை பார்த்தபடி இருந்த மனைவியை சட்டை செய்யாமல் பேசிக்கொண்டிருந்த ரத்தினம் ஃபோனை அணைக்கவும்

"நீங்க செய்றது கொஞ்சம் கூட நியாமே இல்லை ஏன் அந்த தாய் தகப்பன் இல்லா புள்ளைய நோக அடிக்கிறீங்க... எங்க ஆத்தா வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த அம்புட்டையும் வச்சு வித்து திண்ணாச்சி... இன்னும் பணம் பணம்னு பணத்தாசை பிடிச்சு அலையுறிங்க.. கோர்ட்டு வீடுன்னு அந்த புள்ளையையும் அலைய வைக்கிறிங்க... இது பத்தாதுன்னு ஊர்ல இருக்கிறவங்க கிட்ட உங்கள ஏமாத்திட்டாங்கன்னு வாய் கூசாம பொய் சொல்றீங்க…. எப்ப தான் திருந்த போறீங்க?!?!..." என்று முந்தானையால் மூக்கை மூடியபடி அழுது கொண்டு இருந்தார் அலமேலு

மனைவியின் வார்த்தைகளில் கோபம் கொண்ட நாகரத்தினம் "யாரை பாத்துடி பணத்தாசை பிடிச்சவன் பொய் பேசுறனவன்னு சொல்ற?? என்னையே எதிர்த்து பேசுறியா? அவ்வளவு தைரியம் வந்துருச்சா டீ நாயே.. உன்னை" என்று மனைவியின் முடியை கொத்தாக பிடித்து இரண்டு கன்னங்களிலும் பளார் பளார் என்று அறைந்தவர் "சீ போய் தொலை" என்று கீழே தள்ளி விட்டார்.

தாயின் அழுகுரலும் தந்தையின் கோபகுரலும் ஒருசேர கேட்டதும் பின்கட்டில் வேலையாக இருந்த அமுதா ஓடி வர கீழே விழுந்த நிலையில் அழுதபடி அமர்ந்திருந்த அன்னையைக் கண்டதும் அருகில் சென்றவள் "என்னம்மா? என்ன ஆச்சு?? ஏன் மா இப்படி அழுகுற?" என்று கேள்வியில் துளைத்தாள்.

இரண்டு கைகளினால் தலையில் அடித்துக் கொண்டவர் "எல்லாம் என் விதி... டி விதி... இந்த மனுசனை கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு நான் பெரிய துரோகத்தை செய்துட்டேன்டி... என்னால் அந்த புள்ள இவ்வளவு கஷ்டப்படுது இந்தாளு பணத்தாசைக்கு அந்த புள்ளை கெட்ட பெயரை வாங்குது... கட்டிக்கிட்டவன்ற பேருல எல்லாம் நான் வாங்கி வந்த சாபம்.. இன்னும் என்னென்ன அனுபவிக்க போறேனோ" என்று அழுது புலம்ப

"என்னடி சொன்ன….சீ நாயே எழுந்து உள்ளே போடி... என்னை ஏமாத்தினதுக்கு தான் உன் நொண்ணனும் அவன் பொண்டாட்டியும் போய் சேர்ந்தாங்க… உனக்கு என்ன திமிர் ரொம்ப கூடி போச்சா என்னடி என்ன சொன்ன என்னை பார்த்து உனக்கு கிடைச்ச சாபம்னா சொல்ற?" என்று தன் காலை ஓங்கி ஒரு மிதி மிதிக்க அவரை தடுக்க "அப்பா, அப்பா... ஏன் இப்படி அராஜகம் பண்ணி அழிஞ்சு போறீங்க ….இப்படி அவங்கள கொஞ்ச கொஞ்சமா அடிச்சு சாகடிக்கிறதுக்கு பதிலா மொத்தமா எங்கள கொன்னுட்டு சந்தோஷமா இருங்களேன்" என்று தாயின் குறுக்கே விழுந்து அழ

"உங்களை சாகடிச்சிட்டு நான் எப்படி சுகமா வாழறது?... பொன் முட்டை இடுற வாத்தை எவனாவது அறுப்பானா… உன்னை வச்சு தானே என் ஆட்டமே ஒன்னு நிலத்தை எனக்கு விட்டு தரணும் இல்லை உன்னை கல்யாணம் பண்ணிக்கணும். இதுல எது நடந்தாலும் எனக்கு லாபம் தானே... உன்னை கட்டிக்கிட்டா காலம் பூரா நமக்கு ராஜ வாழ்க்கை தான்... உங்களுக்கும் சேர்த்து தானே திட்டம் போடுறேன் இதுக்கு நீ சம்மதித்தாலும் சம்மதிக்கலனாலும் நான் நடத்தி காட்டுறேன் இது தான் உன் விதி" என்று கேலியாக கூறிட

"அட சீ நீ எல்லாம் ஒரு அப்பனா?!! பெத்த பொண்ணையே காசுக்கு விக்கிற மாதிரி பேசுறியே!! உனக்கு அசிங்கமா இல்ல?? நீ சோத்துல உப்பு போட்டுதானே சாப்பிடுற.… இந்த மானம் கௌரவம் எல்லாம் பாக்க மாட்டியா? இல்ல உன் ரத்தத்துல அது இல்லவே இல்லையா ??? ம்… உன் குடும்பத்துல சம்மந்தம் வைக்க என் மாமன் ஒன்னும் ஏமாளி இல்லை... அதுவும் உன்னை ஒரு ஆளா கூட மதிக்காதவர் உன் பொண்ணான என்னை கல்யாணம் கட்டிப்பாருன்னு வீணா மனக்கோட்டை கட்டி சரியவிடாதே…" என்று பதிலுக்கு பதில் பேசியவள் முகத்தை திருப்பிக் கொள்ள

"என்னடி சொன்ன நாயே" என்று ஓங்கி கன்னத்தில் ஒன்றை வைத்தவன் "நீ எனக்கு தான் பொறந்தையா சந்தேகமா இருக்கு?" என் குணம் ஒன்னு கூட உன் கிட்ட இல்லையே???" என்று மனைவியை கேவலப்படுத்துவதாக நினைத்து தன்னை தானே கேவலப்படுத்தி கொண்டவன் "உங்களை வெளியே போயிட்டு வந்து வச்சிக்கிறேன். இருங்கடி" என்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்

தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த அமுதா தாயின் அழுகையை பார்த்ததும் "ஏன்மா தினமும் அவர்கிட்ட அடிவாங்குற? அவர் மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு எனக்கென்ன வந்துச்சுன்னு போறாரு… உங்க உடம்பு தானே புண்ணா போகுது.. நீ எப்படி மா இந்த மனுசனை நம்பி வந்த, அதுக்கு பாழும் கிணத்துலையோ இல்லை ஆத்துலையோ விழுந்து செத்து இருக்கலாம்... நானும் அனாவசியமா இந்த உலகத்துக்கு வந்து இவரோட கேவலமான பேச்சை கேட்டு இருக்க மாட்டேன்…" என்று தலையில் அடித்துக் கொண்டு அழ

"என்னம்மா செய்ய ஏமாந்துட்டேனே…. நல்லவன்னு நினைச்சேனே உங்க அப்பா என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான்னு தெரிஞ்சவுடனே வந்த வலியை காட்டிலும் இது எல்லாம் நூத்துல ஒரு பங்கு கூட இல்ல டீ... இருபது வருஷமா என் பொறந்த வீட்டுக்கு நிம்மதியே இல்லாம பண்ணிட்டானே... இந்த படுபாவி அதை நினைச்சு தான் அடி வயிறு பத்திக்கிட்டு எரியுது… உன்னை காட்டி காட்டியே என்னை ஒன்னும் செய்ய முடியாம வைச்சிருக்கான்... கட்டையில போறவன்…. வயசு பொண்ணை வச்சி இருக்கேனே உன்னை கரையேத்துற வரையிலும் இந்த கொடுமையை எல்லாம் சகிச்சிதானே ஆகனும்…. இன்னைக்கு அவன் மனசுல இருக்கிறது எல்லாத்தையும் கொட்டிட்டான். ஒரு வகையில நீ என் அண்ணன் மகனுக்கு பொண்டாட்டியாக போகிறது எனக்கு சந்தோஷம்னாலும் இந்த பாவி ஊடால புகுந்த விளையாடிடுவானே!!! இது நடக்காம இருக்கறதுதான் நாம என் அண்ணனுக்கு செய்ற நன்றிக்கடன்" என்று மகளின் தோளில் முகம் புதைத்து அழுதவரை

"நீ அழாதமா சின்ன மாமாவுக்கு நல்லது தான் நடக்கும். இவர் பேராசைக்கு எதுவும் நடக்காது மா... நாம நல்லா இருப்போம் மா... நீ எழுந்து வா மா... நாம கும்புடுற சாமி நம்மை எப்பவும் கை விடாது…" என்று தாய்க்கு ஆறுதலையும் தைரியத்தையும் சொல்லியவள் இன்று இதற்கு ஒரு முடிவு எடுத்து ஆக வேண்டும் என்று நினைத்தாள்..

அதற்கு முன் இவர்களை பற்றிய சின்ன அறிமுகம் அலமேலு விசாகனுடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியின் உடன் பிறந்த தங்கை அவருடைய கணவர் தான் நாகரத்தினம். வேலை ஏதும் இல்லாத ரத்தினம் சிறுவயதில் டிப்டாப்பாக உடையணிந்து ஊரில் வளைய வர அவர் மேல் காதல் கொண்ட அலமேலு வீட்டில் சொல்ல அவரின் நடவடிக்கைகள் தெரிந்த ஈஸ்வரமூரத்தியும் அவரது தந்தையும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் யாருக்கும் தெரியாமல் ரத்தினத்தை திருமணம் செய்து கொண்டு வர அத்துடன் தந்தை மகளின் உறவை முறித்துக்கொண்டதோடு சொத்தில் அவருக்கு சேர வேண்டிய பகுதியை பிரித்து அவரின் பெயரில் எழுதி வைத்துவிட தந்தையின் வார்த்தையை மீறாத ஈஸ்வரமூர்த்தியும் அண்ணன் தங்கை என்ற உறவுமுறையை துண்டித்து கொண்டதோடு அவருடனான பேச்சுவார்த்தையையும் நிறுத்தி இருந்தார். அதுவரையிலும் நல்லவன் வேஷம் போட்ட ரத்தினம் சொத்து வந்ததும் தன் சுயரூபத்தை அலமேலுவிடம் காட்ட ஆரம்பித்து இருந்தார்.

அண்ணனும் தந்தையும் எவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டதற்கு தனக்கு இது தேவைதான் என்று அதை ஏற்றுக் கொண்டாலும் அவர் செய்த அட்டூழியங்களை தாங்கிக்கொள்ள முடியவில்லை இதில் தினமும் குடி கும்மாளம் பெண்கள் சகவாசம் என ஆளே சாக்கடையாக போனார் கடைசியில் கொடுத்த பங்கு அனைத்தும் கரியாக்கி விட்டு மறுபடியும் தன் மனைவியை சொத்து தராமல் ஏமாற்றியதாக பஞ்சாயத்தில் புகார் கொடுத்து அவரை தெருவிற்கு இழுக்க சில லட்சங்கள் கொடுத்து விட்டு இத்துடன் முடித்து விட பார்க்க கடைசியாக ரத்தினத்தின் குறி அவர்களுடைய 40 ஏக்கர் பூமியில் வந்து நின்றது.

அதுவரையிலும் அமைதியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி இதையும் வைத்து சூதாடி விற்றுவிடுவான் என்று அறிந்து இது தன் சொந்த உழைப்பு கொடுக்க முடியாது என்று மறுத்து விட சம்பவம் நடந்த மறுநாளே கார் விபத்தில் சிக்கி கணவனும் மனைவியும் இறந்ததும் சொத்து பிரச்சனை கோர்ட் படி ஏறியது கடந்த 7 வருடங்களாக நடக்கும் கேஸில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை இறந்து போன ஈஸ்வரமூர்த்தியின் சமாதியும் அவரது மனைவி பார்வதி தேவியின் சமாதியும் அந்த நிலத்தில் தான் இருக்கிறது. அதுவே நிலத்தை ரத்தினத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாமல் போராடி கொண்டு வருகிறான் விசாகன். அலமேலுவிற்கும் நாகரத்தினத்திற்கும் பிறந்தது ஒரே மகள் பெயர் அமுதவல்லி பெயருக்கு ஏற்றார் போல் மனதும் அத்தனை தூய்மையானது தகப்பனிடத்தில் பயம் இருந்தும் மாமனிடத்தில் அதையும் தாண்டிய பாசம் இருந்தது.

தேவாவை வீட்டில் இறக்கி விட்டு நடந்த விபத்தை பற்றி மரகத்திடம் கூறியவர்கள் அவரிடம். விடைபெற்று வீடு திரும்ப சுந்தரனின் எண்ணம் முழுவதும் தேவா ஆக்கிரமித்து இருந்தாள். அவளின் ஒவ்வொரு செயலையும் நினைத்து தன் போக்கில் சிரித்துக் கொண்டு அமைதியாய் வந்த சுந்தரனை "என்னடா எப்பவும் தகர டின்னை உருட்டி விட்டா மாதிரி பேசிக்கிட்டு வருவ இன்னைக்கு இவ்வளவு அமைதியா வர" என்று கேட்டும் பதில் இல்லாமல் இருக்க வண்டியை சடன் பிரேக் இட்டு நிறுத்தவும் திடுக்கிட்டு விழுந்தவன் "என்ன என்ன மாப்ள கேட்ட" என்றான் சுந்தரன்.

"சுத்தம் என்ன யோசனைல இருக்க டா? நினைப்பு இங்க இல்ல போல" என்றான் விசாகன்.

"நீ பாறை மச்சான் உன் தலையில இடியே இறங்கினாலும் எனக்கு என்னென்னு இருப்ப... நான் மனுஷன் டா சிரிப்பு, அழுகை, விருப்பு, வெறுப்பு எல்லாம் இருக்கும் உனக்கு முதல்ல சிரிக்க தெரியுமா!!! அந்த பொண்ணு கூட இருந்தா சத்தியமா சிரிக்காம மட்டும் இருக்கவே முடியாது... காலம் முழுவதும் அவ கூட இருந்தா எந்த நோயுமே அண்டாது நல்ல பொண்ணுடா" என்று கூறிக்கொண்டு வர

சட்டென வண்டியை நிறுத்திய விசாகன் "அது சரி நல்ல பொண்ணு 1மணிநேரத்துல என் BP ஏத்திவிடுறவ உனக்கு நல்ல பொண்ணா?!... அவளை மட்டும் பக்கத்துல வைச்சிக்கிட்டா உலகத்தில் இருக்கும் அத்தனை வியாதியும் வந்து சேரும் இன்னைக்கு பார்த்தல்ல அவ ஆஸ்பிட்டல்ல பண்ண அலும்பை பேசாம வாய மூடிக்கிட்டு வாடா" என்று அவளை பற்றிய பேச்சை கத்தரித்தவன் வண்டியை ஆலையை நோக்கி விட்டான்.

நீல நிற வானம் புத்தம் புதிய கருநிற ஆடையை உடுத்திக் கொள்ள நிலவு மங்கையின் உடையினில் அங்காங்கே வைரக் கற்களாய் நட்சத்திரங்கள் மின்னி ஒளிவீச ராஜ வீதியில் உலா வர தொடங்கினாள் அவள். சிலுசிலுவென்று ஓடிய ஓடையின் ஒலி காதை நிறைத்தது. எங்கோ வரும் மோட்டார் பைக்கின் சத்தத்தில் மனம் படபடவென அடித்துக் கொள்ள வரும் நபருக்காக கண்களில் கலக்கத்துடன் காத்திருந்தாள் அமுதா.

"என்ன அமுதா பாக்கனும்னு வர சொல்லி இருந்த? அதுவும் இந்த இருட்டுல! எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லி இருக்கலாமே!! அப்படி என்ன பார்த்து பேச வேண்டிய அளவுக்கு அவசரமான விஷயம்?" என்றான் அவளை காண வந்த சுந்தரன்.

எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தவள் எதிரில் வந்து நின்ற சுந்தரன் அவள் வாயில் இருந்து.எந்த சொல்லும் வராது இருக்க "என்ன அமுதா ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

தலையை உயர்த்தாமலே ஆம் என்று அவள் தலையை அசைக்க

"அமுதா… பிரச்சனை பெருசா?? எதுவா இருந்தாலும் சொல்லு அதுக்குதானே வர சொல்லி இருக்க சொல்லு புள்ள என்னை வர சொல்லிட்டு நீ அமைதியாவே இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது" என்றான் கரிசனமாய்

மெல்ல தலையை உயர்த்தி அவனை பார்த்தவள் "என் மாமா என்னை பார்த்தாலே விரட்டியடிக்கிறாரு…"

"ம் அது தெரிஞ்ச விஷயம் ஆனா அதுக்கு காரணம் நீ இல்லை அதுவும் உனக்கு தெரியும் அப்புறம் என்ன?" என்றான்.

"அது எனக்கு நல்லாவே தெரியும் உம் அதனால தான் அவர் கிட்ட என்னால பேச முடியல... மாமாகிட்ட உங்களால் தான் பேச முடியும்... என் அப்பா என்னை வைச்சி தான் திட்டம் போடுறாரு... என் மாமாவ ஏமாத்த... அது எப்பவும் நடக்க கூடாது..". என்று கூறியதும்

"திட்டமா!... என்ன சொல்ற அமுதா… என்ன திட்டம்… சரி இதை உன் அம்மத்தாக்கிட்டயே சொல்லி இருக்கலாமே… என்னை தேடி இவ்வளவு தூரம் வந்து சொல்ல வேண்டிய அவசியம்…?" என்றான் அவளை பார்த்து.

"அதான் என் அப்பன் பணத்தை சம்பாரிக்கலனாலும் எல்லாரோட வெறுப்பையும் எங்களுக்கு சம்பாதிச்சி வச்சி இருக்காரே... நாங்க யார் முக்ததுல முழிக்க முடியும்… நீங்கதான் என்கிட்ட கொஞ்சம் முகம் கொடுத்து பேசுறிங்க அதான் உங்ககிட்ட உதவி கேட்க வந்தேன்…"

"சரி அதை விடுங்க நான் என்ன சொல்ல வந்தேன்னா என் அப்பா என்னை என் மாமாவுக்கு கட்டி வைக்க ஏதோ சதி வேலை செய்யறாரு.. அது எதுவும் நடக்க கூடாது எப்பவும் என் மாமா நல்லபடியா இருக்கணும்… முடிஞ்சா அவரை என் அப்பா கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க சொல்லுங்க" என்றவள் சரி நான் வரேன் என்று திரும்ப

"ஒரு நிமிசம் அமுதா உங்க அப்பா செய்ற வேலை இருக்கட்டும்.. உனக்கு உன் மாமாவை கட்டிக்கணும்னு எண்ணம் இருக்கா?" என்றான் அவளின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள

"என் மாமா னா எனக்கு உயிர் அவர் மேல மதிப்பு இருக்கு, அன்பு இருக்கு, அதுக்கு மேல மரியாதை இருக்கு.. ஆனா அவரை இந்த நினைப்போட நான் பார்த்தது இல்லை அதுவும் இல்லாம அப்படி ஒரு தப்பை செய்து காலம் முழுசும் என் மாமாவை கஷ்டபடுத்த நான் விரும்பல... இதுக்கு மேல அவருக்கு எந்த கஷ்டமும் இல்லாம நல்ல சந்தோசமா இருக்கணும்... என் மாமா என்கிட்ட பேசி கிட்டத்தட்ட 8 வருஷம் ஆகிடுச்சு எப்பவும் என் மேல பாசமா இருக்க அந்த மாமா திரும்பி வந்தா போதும்... வேற எதுவும் எனக்கு வேண்டாம்.. என்று கூறியவள்

"அப்பா வந்துடுவாறு நான் இல்லனுதும் அம்மாவை தான் அடிப்பாரு நான் போறேன்... நான் சொன்னதை எதையும் மறக்காம மாமா கிட்ட சொல்லிடுங்க" என்றவள் இருட்டில் ஓடி மறைந்தாள்.

சுந்தரனுக்கு ஒரு புறம் மனது கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது அமுதாவின் மனதில் ஒருவேளை விசாகன் இருந்திருந்தால் என்ன செய்வது என்று ஆனால் அவன் மனதில் இருக்கும் வெறுப்பிற்கு அது எந்த காலத்திலும் நடக்காத ஒன்றாகுமே வீணாய் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வளோ என்று நினைத்து இருந்தவனுக்கு அமுதாவின் பதில் நிம்மதியை கொடுத்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN