பகுதி 2
சென்னை
"ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை
"ஹலோ ....அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன்
"ஓ... அப்படியா சரிப்பா...."
" என்னமா போன் பண்ணியிருக்கிங்க"
" ஶ்ரீ உனக்கு டிரஸ் ரெடியாகிடுச்சின்னு தம்பிக்கு போன் வந்துச்சி பா........ அதான் தம்பி உனக்கு போன் பண்ணி சொல்ல சொன்னான்".
"ம்......... சரி மா..... பிளைட் வந்துடுச்சு இன்னும் அரை மணி நேரத்துல அவன கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துடுவேன் ".
"சரிப்பா........... பாத்து வாங்க வைக்கிறேன்".
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான் கௌஷிக்.சராசரி ஆண்களின் உயரத்திற்கு சற்று கூடுதல் உயரம். அதற்கேற்றார் போல் திடமான உடற்கட்டுடன் சந்தன நிற அகன்ற நெற்றியில் கரு கரு வென அளைந்தாடும் கேசத்தை இடக் கையால் அழுந்த தள்ளும் கம்பிரமான தோற்றத்தில் 32 வயதில் பதின் பெண்களும் காதல் கொள்ளக்கூடிய அழகிய ஆண்மகன். தீர்கமான பார்வையால் எதிராளியை எடைபோடும் பிரபல தொழிலதிபர்.
" ஹாய்..........கௌஷிக் வெல் கம் டு சென்னை "என்று தன் நண்பனை ஆரத்தழுவி வரவேற்றான் ஶ்ரீ.
சிறு புன்னகையை உதிர்த்த கௌஷிக்" டேய் தல்யாண மாப்புள உனக்கு எவ்வளவோ வேலை இருக்கும் நீ ஏன் ரிசீவ் பண்ண வந்த ? நானே வந்திருப்பேன்ல" என்றான்
"இதனால என் வேலை எதுவும் கெட்டு போகல வா போகலாம்". என்று அழுத்தமாக கூறினான் ஶ்ரீ.
பேசிக்கொண்டு காரில் ஏறி வீட்டிற்கு பயணம் மேற்க்கொண்டனர். சென்னை சாலையில் சீறி பாய்ந்த வண்டி சிக்னல் ஒன்றில் நின்றது. இதே போன்ற சிக்னல் ஒன்றில் தான் முதன் முதலாக அவளை பார்த்தான்.
கௌஷிக்கின் மனம் வெளி உலகினை காண சகிக்காமல் கண்களை இறுக்க மூடி காரின் பின் சீட்டில் தலை சாய்த்து தன் மனதை கொள்ளைக் கொண்டவளின் நினைவில் மூழ்கினான். அன்று சென்னையில் கௌஷிக் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த சமயம் பளார் எனும் அறையும் சப்தம் கேட்டு என்னவென்று திரும்பி பார்த்தவனின் கண்களில் எழில் கொஞ்சும் ரவிவர்மனின் ஓவியம் ஒன்று உயிர் கொண்டு வந்தது போன்று இருந்தவளை கண்டு சிலையாகினான். அவள் ஒருவனை வெலுவெலுவன வெலுத்து கொண்டிருந்தாள். இது எதுவும் கருத்தில் பதியாது ஸ்லோமோஷனில் அவளின் செய்கைகளை ரசித்து இருந்தான் . அவளின் தோழி அவளை சமாதானம் செய்ய போராடி ஒரு வழியாய் இழுத்துச் சென்றாள். தன்னவளை நினைத்து கண்களை மூடி சாய்ந்த நிலையில் இருந்த கௌஷிக்கின் முகத்தில் தெரிந்த வேதனையை கலைக்கும் பொருட்டு ஶ்ரீயே பேச்சை ஆரம்பித்தான்.
" டேய் மச்சா வீட்டுல எல்லாரும் எப்படிடா இருக்காங்க? ".
விழிகளை திறந்தவன் ஆழ்ந்த மூச்செடுத்து "ம் ....இருக்காங்க டா எனக்கு வீட்டுல இருக்கவே முடியலடா".கௌஷிக்
அதற்கு ஶ்ரீ வருத்தமாக "ஏன்டா என்னவோ போல பேசுற" என்றான்.
கௌஷிக் அடிபட்ட பார்வையுடன் " கல்யாணம் பண்ண சொல்லி கம்ப்பல் பண்றாங்கடா ...".
ஶ்ரீ அவனை பார்த்து" நீ ஏன்?மச்சி அதபத்தி யோசிக்க கூடாது ? "
கௌஷிக் சட்டென்று " ஷட்டப் ஶ்ரீ என்னால அவளை தவிரவேர யாரையும் அந்த இடத்துல நினச்சி பாக்கக்கூட முடியாது. நிச்சயம் அவ என் கிட்ட வருவா பிளிஸ் ஶ்ரீ இனி இத பத்தி பேசாத". என்றான் கோப குரலில் .
ஶ்ரீ உள்சென்ற குரலில்"சாரி... மச்சி சாரி ...கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுடா பிளீஸ் டா".என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
சென்னை பிரதான சாலையில் அமைந்துள்ள பங்களாவின் காம்பவுண்ட்டுக்குள் கார் நுழைந்தது
வீடே பூக்களால் அலங்கரித்து கல்யாண கலையில் ஜொலித்ததுக் கொண்டிருந்தது . கௌஷிக்கும் ஶ்ரீதரனும் கல்லூரி நண்பர்கள் ஶ்ரீதரனின் திருமணத்திற்க்கு சென்னை வந்திருந்தான் கௌஷிக்.
ஶ்ரீ தன்னுடைய ஆபிஸில் பணிபுரியும் ஷோபானாவை காதலித்து வந்தான். இவர்கள் காதலுக்கு ஶ்ரீயின் தந்தை கடும் எதிர்ப்பினால் ஆறு வருட காத்திருப்பிற்கு பின் இரு வீட்டாரின் சம்மத்தடன் நடைபெறுகிறது .
ஶ்ரீ யின் தந்தை ராஜசேகர். தாய் சிவகாமி, சௌந்தர் என்ற ஒரு தம்பியும் உள்ளனர் .சௌந்தர் அண்ணன் திருமணத்திற்கு பிறகுதான் தன் திருமணம் என்று உறுதியாக இருந்தான். வீட்டில் ஶ்ரீ யின் காதலுக்கு தந்தை சம்மதம் தெரிவித்தவுடன் சௌந்தருக்கும் பெண் பார்த்து இரு திருமணமும் ஒரே நாளில் நிச்சயிக்கப்பட்டது.
கௌஷிக் வருவதை பார்த்து ஶ்ரீ யின் தாய் முகம் முழுவதும் பூரிப்புடன் "வாப்பா கௌஷிக் ...உன்ன பார்த்து எத்தன வருஷமாச்சி " என்றார்
கௌஷிக் அதற்கு ஶ்ரீ யை பார்த்து கொண்டு"அதுக்கு இவன்தான் மா காரணம் ". என்றான் வருத்தமாக.
ஶ்ரீ பதட்டத்துடன் "டேய் நான் என்னடா செஞ்சேன் ...அம்மாவ பார்ரா எப்படி முறைக்கிறாங்க "
கௌஷிக் சிவகாமி தோளில் சலுகையாக கைபோட்டு கொண்டு"பின்ன என்னடா அண்ணணும் தம்பியும் ஓரேடியா கல்யாணத்த தள்ளி போட்டுகிட்டே இருந்தீங்க இல்லையா? அதான் அப்படி"என்றான் சிரித்தபடி.
சிவகாமி கௌஷிக்கை பார்த்து"இப்போவாவது அவங்க அப்பாவுக்கு இவங்களுக்கு கல்யாணம் பண்ண தோனுச்சே அதுவே போதும் பா என்றார் மலர்ந்த முகத்துடன் ."ஶ்ரீ, தம்பிய கூட்டிக்கிட்டு போய் ரூம் காட்டு. கௌஷிக் பிரஷ் ஆகிட்டு வா சாப்பிட்டு அப்புறம் பேசலாம் என்றார் வாஞ்சையுடன்.
சாப்பிட்டு சிறிது நேர ஓய்வுக்கு பின் மாலை ராஜசேகரனின் குரல் கேட்டு ஹாலிற்கு வந்த கௌஷிக்கை நலம் விசாரித்தார் ராஜசேகர்
அப்போது வீட்டிற்கு வந்த சௌந்தர்" அம்மா ...அம்மா...ஶ்ரீ வந்துட்டனாம்மா?கௌஷிக் அண்ணா வந்துட்டாங்களா? ". என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
"சமையலறையில் இருந்து வெளியே வந்த சிவகாமி " ஏன்டா? என்னை இப்படி ஏலம் போடுற... கொஞ்சம் கண்ண திறந்துதான் பாருடா" என்றார் கிண்டலாக.
ஹாலில் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த கௌஷிக்கை பார்த்தவன் மகிழ்ச்சியுடன் " அண்ணா எப்போ ? வந்திங்க எப்படி ? இருக்கிங்க". என்று படபடத்தான் சௌந்தர்.
சௌந்தரை பார்த்து சிரிப்புடன் "மதியம் தான் வந்தேன் . நல்ல இருக்கேன்டா ...
அப்புறம் சாரை வந்ததுல இருந்து பாக்க முடியல! அவ்வளவு பிஸியா சார்? " . என்றான் கௌஷிக் கேலியுடன்
அதற்கு சௌந்தர் புன்னகையுடன்
"பிரண்ஸ்சுக்கு ரூம் அரேஞ்ச் பண்ணிட்டு வந்தேன்ணா.....ஆமா ஶ்ரீ எங்கண்ணா? டிரஸ் பாத்துட்டானா ?போன் பண்ணா என்கேஜிடுன்னு வருது...என்று கௌஷிக்கிடம் கூறினான் .
இதை கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்த ஶ்ரீ "இவனுகளுக்கு நான் ஷோபி கூடதான் பேசினேன்னு தெரிஞ்சா ரொம்ப ஓட்டுவானுங்களே! சரி கேட்டா ஏதாவது சமாளிப்போம்" என மனத்தினுள் நினைத்துக்கொண்டான்.
"என்ன டா நாளைக்கு எத்தனை மணிக்கு மண்டபத்துக்கு வரசொன்னாங்க wedding planner".என்று பேச்சை மாற்றும் விதமாக சௌந்தரிடம் கேட்டான்.