அத்தியாயம் 1

VinoMalar

நிகரிலா வானவில் எழுத்தாளர்
அத்தியாயம் 1





நேபால், சுன்கோஷி நதி...........

திபெத்தின் ஜாங்ஸாங்போ பனிமைலையில் துவங்கும் இந்த சுன்கோஷி நதி, மகாபாரத மலைதொடர் மற்றும் இமயமலை இடையில் ஏற்படும் பள்ளதாக்கு வழியாக கிழக்கு நோக்கி பாயிகிறது. கிழக்கு நேபாளத்தில் ஏழு ஆறுகள் இணைத்து உருவாகும் சப்தகோஷி நதி அமைப்பில் இந்த சுன்கோஷியும் ஒன்று. சுன்கோஷி,இந்திராவதி,தம்பா கோஷி,போட் கோஷி,தூத் கோஷி,அருண், மற்றும் தமூர் என ஏழு ஆறுகள் இணைந்து உருவாகும் இந்த சப்தகோஷி நதி சத்ரா பள்ளதாக்கு வழியே தெற்க்கு திசையில் பீகார் வழியாக பாய்ந்து கங்கையில் சேர்கிறது.

சப்தகோஷி நதியில் இணையும் நதியான சுன்கோஷி, ராஃப்டிங் & காயக்கிங் என படும் நீர் விளையாட்டுகளுக்கும் பயன்படுகிறது. நீர் சாகச விரும்பிகளுக்கு இது ஏற்ற இடம். 620m (2030 அடி) உயரத்தில் அமைந்துள்ள டோலாகாடில் துவங்கி -115m (377 அடி), உள்ள சத்ரா ஜார்ஜில் முடிவடைகிறது. மொத்தம் 272 km. இந்த தொலைவை வெகு வேகமாய் கடக்க முயற்சித்து கொண்டு இருந்தான் நம் நாயகன். அவனை தொடர்ந்து இன்னும் இரண்டு பேரு வர. மூவருக்கும் இடையில் போட்டி தீவிரமடைய துவங்கியது.

சுன்கோஷி நதி நீர் ஆரவாரத்துடன் பாயிந்து வர அதன் நீரோட்டத்தை சமாளித்து லாவகமாய் துடுப்பை போட்டு தனது கயாக்கை (படகு) செலுத்திக் கொண்டு இருந்தான் ரிஷிமித்ரன். ஒரு கட்டத்தில் நதி நீரும் தனது வேகத்தை அதிக படுத்தி, ரிஷிமித்ரனை தன்னுள் இளுத்துக்கொள்ள முயற்ச்சிக்க. அவனும் அதை உணர்ந்து தனது துடுப்பின் வேகத்தை அதிக படுத்தி நீரோட்டத்துக்கு தகுந்தார் போல வெகு வலகமாய் தனது கயாக்கை செலுத்தினான். அவனை தொடர்ந்து வந்த மற்ற இருவரும் அவனை போலவே நதி நீரின் வேகத்தை சமாளித்து அவனை முந்தி செல்ல முயன்றனர். ரிஷி அவர்களுக்கு அந்த வாய்பை கொடுக்காமல் தனது வேகத்தை அதிக படுத்தி இலக்கை முதலில் அடைந்து வெற்றி பெற்றான்.

மூவரும் கரை ஏறிய பின், ரிஷி மற்ற இருவரிடமும் , “மை மனி!!!” என்று கை நீட்ட. மற்ற இருவரும் அவனை முறைத்துக்கொண்டே பணத்தை அவனிடம் கொடுத்தனர்.

“வொய் டோன்ட் வீ ஹாவ் அனதர் பெட் மாட்ச் டுமாரோ?? டபுள் தி பெட் மனி...”, இழந்த பணத்தை திரும்ப பெற்று விடலாம் என்ற ஆசையில் ஒருவன் கேட்க.

அவனை பார்த்து புன்னகையித்த ரிஷி, “சாரி ஃபிரண்ட்ஸ்.... ஐ அம் லீவிங் தி கண்ட்ரி டுடே. மே பி நெக்ஸ்ட் டைம்.” என்று தொலை குளிக்கிவிட்டு ,சற்று தொலைவில் ஜீபுடன் காத்திருக்கும் தன் நண்பனிடம் விரைந்தான்.

ஆறு அடிக்கும் மேல் உயரம், தோல் பட்டை வரை சுருள் சுருளாய் வளர்ந்த முடி, திரண்ட பூஜங்கள், அகன்ற மார்பு, சிக்ஸ் பாக் வயிறு, என பீமசேனன் போல இருந்தான் ரிஷி. [பீமன்க்கு ஏது சிக்ஸ் பாக்ன்னு கேக்றீங்களா?? சரி நம்ப பாகுபலி பள்வாள் தேவன் மாதிரின்னு வைச்சுகொங்க ப்பா.] முகத்தில் பாதியையை அவனது மீசையும் தாடியும் மறைத்திருக்க, பெயர்க்கு ஏற்றார் போல பார்பதற்க்கு முற்றும் துறந்த ஒரு ரிஷியை போல தான் இருந்தான். யாரையும் ஊடுருவி பார்க்கும் அவன் கண்களில் தெரிவது, உறுதியா? நிதானமா? மென்மையா? என்று பிரித்தறிய முடியாததாய் இருந்தது. புன்னகையுடன் தன்னை நோக்கி வரும் ரிஷியை முறைத்தபடி நின்றிருந்தான் அவன் நண்பன்.

“எதுக்குடா இப்போ என்ன இவளோ பாசமா பார்க்கிற??” கேட்டான் ரிஷி.

“ஆமா டா .... உன்னை இப்படி பார்க்கணும்னு எனக்கு வேண்டுதல் பாரு. அதான்.” என்றான் அவன்.

“இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற?? ரிலாக்ஸ்...” என்று சொல்லிக்கொண்டே ஜீப்பில் இருந்து துண்டை எடுத்து தனது தலையை துடைத்தான் ரிஷி.

“உனக்கு ஃப்ரெண்டா இருந்துட்டு நான் எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உனக்கு ஃப்ளைட். ஆனா நீ ஜாலியா போட் ஒட்டிட்டு இருக்க.”

“என்னது போட் ஒட்டிட்டு இருந்தேன்னா!!!! டேய் இதுக்கு பெயர் காயக்கிங்.!!! வாட்டர் அட்வெஞ்சர் கேம்.!!!.” என்றான் ரிஷி.

“அது எனக்கும் தெரியும் டா எரும... நீ பாட்டுக்கு அட்வெஞ்சர் பன்றேன்னு போயிட்டே ஆனா இங்க நீ கிளம்பிடியான்னு உங்க அம்மா அப்பா தம்பின்னு எல்லாரும் மாத்தி மாத்தி எனக்கு தானே கால் பண்ணிட்டே இருக்காங்க.”

“நான் தான் வரேன் சொல்லிட்டேன்ல அப்பறம் எதுக்கு உனக்கு கால் பன்றாங்க??”

“எங்க நீ திரும்பவும் ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டு, என்னால வார முடியாதுன்னு சொல்லிறிவியோன்னு ஒரு பயம் தான். அவங்களும் எத்தனை நாள் தான் பொறுமையா இருப்பாங்க?? நீ அவங்களை பார்த்து முழுசா 3 வருஷம் ஆச்சு. அது தெரியுமா உனக்கு.”

நண்பன் சொன்னதை கேட்டதும் ரிஷியின் முகம் கருத்தது.

“ஏண்டா இப்படி இருக்க.?? என்ன இல்லை உன் கிட்ட.... அன்பான குடும்பம், அளவில்லாத சொத்து.... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு, காடு மலைன்னு எதுக்குடா உனக்கு இந்த நாடோடி வாழ்க்கை ??”.

தனது இந்த நாடோடி வாழ்கைக்கான காரணத்தை நினைத்தவனுக்கு கோவத்தில் முகம் சிவந்தது. நண்பனை முறைத்தவன், “தேவை இல்லாததை பேசாம வந்து வண்டியில் ஏறு” என்று சொன்னவன், தான் கையில் இருந்த துண்டை தூக்கி எறிந்துவிட்டு ஜீப்பை கிளப்பினான் ரிஷி.

அடுத்த அரை மணி நேரத்தில் தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்த ரிஷி தயாராகி தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான். ரிசப்ஷனில் பணத்தை செலுத்துவதற்காக தனது பர்சை எடுக்கும் பொது தான் அதை உணர்ந்தான் ரிஷி. அடுத்த நொடி மனம் பதற, தன் மற்ற பாக்கெட்டுகளை தொட்டு பார்த்தான். ரிஷியின் செயல் கண்ட அவனது நண்பன், “என்ன ஆச்சு ரிஷி??” என்று கேட்க.

அவனுக்கு பதில் சொல்லாமல் வேகமாய் தன் பையில் இருந்த அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு தேடினான். சுற்றி இருந்த மற்றவர்கள் அவனை வித்தியாசமாய் பார்க்க. ரிஷி இப்படி பதட்டமாய் தேடுவதை பார்த்த அவன் நண்பன், “என்ன டா ஏதாவது மிஸ் பண்ணிடியா?? ரூம்க்கு போயி செக் பண்ணலாமா???” என்று அவன் சொல்லிமுடிக்கும் முன் ரிஷி வேகமாய் உள்ளே ஓடினான். பதில் சொல்லாமல் ஓடும் ரிஷியை கண்டு குழம்பி நின்ற அவன் நண்பன் பின் சிதறி கிடந்த ரிஷியின் பொருட்களை அவன் பையில் எடுத்துவைத்து கொண்டு ரிஷியை தொடர்ந்து சென்றான்.

லிப்ட் பட்டனை அலுத்திய ரிஷி அது வரும் நேரம் கூட பொறுத்திருக்க முடியாமல், 9 வது மாடியில் இருக்கும் தன் அறைக்கு படிகளில் தாவி ஏறினான். மூச்சு வாங்க, தான் தங்கிருந்த அறைக்கு வந்தவன் வேகமாய் சென்று தலையணையை எடுத்து பார்த்தான். அந்த சிகப்பு வண்ண கை குட்டை அங்கே தான் இருந்தது.

அதை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவனுக்கு அப்போது தான் இதய துடிப்பு சீரானது. அந்த கைக்குட்டையில் மெல்ல இதழ் ஒற்றி எடுத்தவனுக்கு, அதன் வாசம் மனதை நிறைக்க, ஆழ்ந்து மூச்சிழுத்து அதை தன்னுள் நிரப்பிக்கொண்டான்.

ரிஷியின் பதட்டத்தை கண்டு அவனை பின் தொடர்ந்து வந்த அவன் நண்பன், ரிஷி ஒரு கை குட்டையை அணைத்துக்கொண்டு நிற்பதை கண்டு காண்டாகி, “ஏண்டா எரும.... இதுக்காகவா இப்படி உயிரே போன மாதிரி ஓடி வந்த??” என்று கேட்டான்.

நண்பனை முறைத்த ரிஷி, எதுவும் பேசாமல் அவனை கடந்து வெளியே சென்றான். பதில் சொல்லாமல் முறைத்துவிட்டு செல்லும் ரிஷியை கண்டு குளம்பி போயி நின்றான் அவன் நண்பன்.

விமான நிலையம் வந்ததும் நண்பனிடம் விடை பெற்று கொண்டு விமானம் ஏறிய ரிஷி. தன் இருக்கையில் அமர அவன் ஃபோன் சிணுகியது. திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் புன்னகையுடனே அழைப்பை ஏற்று, “இப்போ தான் ஃப்ளைட் ஏறினேன் . நாளைக்கு காலையில் அங்க இருப்பேன் போதுமா??” என்றான்.

அப்போது ஏர் ஹோஸ்டெஸ் வந்து அவனை ஃபோன் கட் பண்ண சொல்ல. “சரி, இப்போ என்னால பேச முடியாது, மத்தத நேர்ல பேசலாம்”. என்று சொல்லிவிட்டு ஃபோன் வைத்தான். ஃப்ளைட் கிளம்பியதும், மீண்டும் ஏர் ஹோஸ்டெஸ் வந்து அவனுக்கு எதுவும் தேவையா என்று கேட்க. “நோ தாங்க்ஸ்...” என்று புன்னகையுடனே மறுத்தவன் தனது ஹெட் போனை மாட்டிக்கொண்டு இருக்கையில் கண் மூடி சாய்ந்துகொண்டான்.

ரிஷி பாட்டு கேட்கட்டும் , நாம் அவனை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இந்தியாவில் பிரபலமான ‘மிவா பெர்ஃப்யூம்ஸ் & கஸ்மெட்டிக்ஸ்’ இன் CEO மித்ரேஷ்வரன் - வசுமதியின் மூத்த மகன் தான் ரிஷிமித்ரன். லண்டனில் முதுநிலை பட்டபடிப்பை முடித்துவிட்டு வந்த ரிஷியிடம் தங்கள் தொழிலை கவனித்து கொல்லும் முழு பொறுப்பையும் கொடுத்தார் மித்ரேஷ்வரன். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்க்கு ஏற்ப, இந்தியாவில் மட்டும் விற்பனையான தங்கள் ‘மிவா பெர்ஃப்யூம்ஸ் & கஸ்மெட்டிக்ஸ்’ பொருட்களை வெளிநாடுகளிலும் பிரபலமடைய செய்தான். அது மட்டுமில்லாமல் சிறு வயது முதலே ரிஷிக்கு போட்டோக்ரபியில் ஆர்வம் அதிகம் இருந்ததினால், தனது பேஷனான வைல்டு லைஃப் போட்டோக்ராஃபிக்காக வருடதில் பாதி நாட்கள் காட்டுக்கு சென்றுவிடுவான்.

அந்த சமையங்களில் அவனது தம்பி அபிமித்ரன் அனைத்தையும் கவனித்துக்கொள்ளவான். அபிமித்ரனுக்கு தன் அண்ணன் மேல் அளவு கடந்த அன்பு பாசமும் உண்டு. இருவரும் இடையில் பாசத்தையும் தாண்டிய ஒரு அழகான நட்பு இருந்தது. அண்ணன் இல்லாத இந்த மூன்று வருடங்களாய் தங்கள் தொழிலை திறம்பட நடத்தி வருகிறான்.

அடுத்தது ஒரே செல்ல தங்கை அமிர்தா, ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படித்துக்கொண்டு இருப்பவள். அந்த வீட்டின் இளவரசி... ரிஷி அபியின் செல்ல தங்கை. அவள் ஆசைபட்டத்தை அவள் கண் பார்த்து நிறைவேற்றி விடுவார்கள் அவள் அண்ணன்கள் இரண்டு பெரும்.

ரிஷிமித்ரன் என்ற பெயரை கேட்டாலே தொழில் வட்டத்தில் அனைவருக்கும் பயம் கலந்த மரியாதை ஏற்படும். ரிஷி நண்பனுக்கு நண்பன், எதிரிக்கு எதிரி. இவனை பற்றி நன்கு அறிந்தவர்கள் இவனிடம் நட்பு பாராட்டவே விரும்புவார்கள். இவனது ஒரு பார்வையே பொதும் எதிரியை குலை நடுங்க செய்ய. அனைவரிடமும் அன்பாகவே பழகும் ரிஷிக்கு, பிடிவாதமும் கோவமும் அதிகம். ரிஷிக்கு எளிதில் கோவம் வராது, அப்படி வந்தால் அவனை மலையிறக்குவது அத்தனை சுலபம் அல்ல. தனக்கு ஒன்று வேண்டும் என்றாள் அதை எந்த எல்லைக்கும் சென்று தன்னுடன் தக்கவைத்துக் கொள்வான். அதே போல ஒன்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் பின் எந்த காரணம் கொண்டும் அதை திரும்பி கூட பார்க்க மாட்டான்.

வீட்டிலோ அன்னைக்கு செல்ல பிள்ளை, அன்னையுடனும், தம்பி தங்கையுடனும் வம்பு செய்து விளையாடுவான். அபியோ அமிர்தாவோ வசுமதியின் மடியில் படுத்துவிட்டால் போதும் ரிஷிக்கு பொறுக்கது, வேண்டும் என்றே அவர்கள் இடம் வம்பு செய்து அவர்களை எழுப்பிவிட்டு விட்டு இவன் படுத்துக்கொள்வான். தொழில் வட்டாரத்தில் அடுத்தவரை ஒரே பார்வையில் அடக்கிவிடுபவன், வீட்டில் தம்பி தங்கையுடன் சரிக்கு சரியாய் சண்டையிடுவதை பார்க்க மித்ரேஷ்வரன்க்கு சிரிப்பு தான் வரும்.

இப்படி அழகாய் சென்று கொண்டிருந்த ரிஷியின் வாழ்வில் அந்த ஒரு நாள், அவன் வாழ்வை முற்றிலும் மாற்றி போட்டது. அதன் தாக்கத்தில் இருந்து விடுபட தனது காமிராவை எடுத்து கொண்டு காட்டுக்கு சென்றவன். முழுதாய் 3 வருடங்கள் களித்து தன் தம்பியின் திருமனதிக்காக தனது வனவாசத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிறான்.

விமானம் தரையிறங்கும் அறிவிப்பை கேட்டு கண் விழித்த ரிஷி, தன் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்க தயாரானான். அதே நேரம் விமான நிலையத்துக்குள் நுழைந்த அபி தன் அண்ணனை தேடினான். சற்று நேரத்தில் ரிஷி தன் லக்கேஜ் உடன் வர, முழுதாய் 3 வருடகள் கழித்து நேரில் பார்க்கும் தன் அண்ணனை அளவெடுத்தான் அபி.

3 வருடம் முன் பார்த்த அதே கம்பீர தோற்றம், தோல் வரை வளர்ந்த முடி, முகத்தில் பாதியையை அவனது மீசையும் தாடியும் மரைத்திருக்க, அவன் கண்கள் ஒளி இழந்து இறுகிபோயிருந்தன. லூசன டிஷர்ட் , வெளுத்துபோன ஜீன்ஸ், கழுத்தில் ஒரு பாசி மணி மாலை என்று ஒரு காட்டுவாசி போல இருந்த ரிஷியை கண்ட அபியின் கண்கள் கலங்கியது.

தன்னை அழைத்து செல்ல அபி வருவான் என்று சிறிதும் எதிர்பார்க்காத ரிஷி புன்னகையுடன் அபியை நெருங்கி தம்பியை கட்டிக்கொண்டான். அபியும் தன் அண்ணனை ஆர தழுவிகொண்டான்.

“எப்படி இருக்க அபி?? அம்மா அப்பா அம்மு எல்லாம் எப்படி இருக்காங்க??” ரிஷி கேட்க.

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க??” கேட்டான் அபி.

“நான் நல்லா இருக்கேன், உங்களை தான் ரொம்ப மிஸ் பண்னினேன்.” என்றான் ரிஷி உண்மையான வருத்ததுடன்.

அண்ணனின் மன வேதனை புரிந்தவன், அந்த பேச்சை தவிர்த்து விட்டு, “சரி சரி... அதான் இப்போ வந்துட்ட இல்ல. வா சீக்கிரம் வீட்டுக்கு போலாம். அங்க எல்லாரும் உனக்காக வெயிட்டிங்.” என்று சொல்லி அழைத்து சென்றான்.

காரின் அருகில் வந்ததும், அபி டிரைவர் சீடில் ஏற போக, “மாணிக்கம் அண்ணா வரல??” என்று வினவினான் ரிஷி.

“அவருக்கு கல்யாண வேலை இருக்கு அதான் நான் வந்தேன்.” என்று அபி சொல்ல.

அபி சொன்னதை கேட்டு கோவமுற்ற ரிஷி, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?? இன்னும் ரெண்டு நாளில் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு தனியா வண்டி எடுத்துட்டு வந்தேன்னு சொல்லற!!!!” என்று கடிந்துகொள்ள.

தமையனின் கோவத்தை சிறிதும் சட்டை செல்லாமல், “அது எல்லாம் பார்த்து மெதுவா தான் ஓடிட்டு வந்தேன். நீ முதலில் வண்டியில் ஏறு.” என்றான் அபி.

“நீ மெதுவா ஒட்டுற லச்சனம் எனக்கு தெரியும், கீ கொடு நான் ட்ரைவ் பன்றேன்”, என்றபடி கார் சாவியை அபியிடம் இருத்து பறித்துக்கொண்டு உள்ளே அமர்ந்தான் ரிஷி. அண்ணனின் கோவத்துக்கு பின் இருக்கும் அக்கறை புரிந்தவன் மெல்ல புன்னகையித்தவாறே மறு புறம் வந்து அமர, கார் வீட்டை நோக்கி பயணித்தது.

பாதையில் கவனத்தை பதித்தவாறே, “ஆமா உன்னை எப்படி அம்மா தனியா அனுப்பினாங்க”, என்று கேட்டான் ரிஷி.

“அவங்க கிட்ட யார் சொன்னா.... அவங்களுக்கு தெரியாம தான் வந்தேன். ஏற்கனவே பத்து நாளா என்னை ஆஃபிஸ் கூட போக விடல.இப்போ நான் தனியா வந்தது தெரிஞ்சது அவளோதான் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சருவாங்க.” என்று அபி சொல்ல.

தம்பி சொன்னதை கேட்டு சிரித்த ரிஷி, “இரு நீ சொன்னதை அப்படியே அம்மா கிட்ட சொல்றேன்.” என்றான்.

“டேய் ரிஷி, நான் உன்னை ஆசையா ரிஸீவ் பண்ண வந்தா நீ என்னை கோத்துவிடறதுளையே இரு. ஆனா இப்போ எனக்கும் சபோர்ட்டுக்கு ஆள் இருக்கு தெரிஞ்சிகோ” என்று அபி சொல்லிகொண்டு இருக்கும் பொது அவன் ஃபோன் இசைத்தது.

“பார்தியா.... திங்க் ஆஃப் தி ஏஞ்சல் அண்ட் தி ஏஞ்சல் கால்ஸ் மீ”, என்று சொல்லிக்கொண்டே கால் அட்டென்ட் பண்ணி, “சொல்லு வனிம்மா... என்ன பன்ற??” என்று துள்ளல் குரலில் வினவினான் அபி. தம்பியின் பேச்சில் புன்னகயித்த ரிஷி சாலையில் கவனத்தை பதிதான்.

“இப்போ தான் மா பிக் அப் பண்னினேன்” என்றான் அபி.

...................

“மெதுவா தான் மா ட்ரைவ் பண்னினேன்.”

....................

“நம்பு வனிம்மா”

.....................

“இல்லை இப்போ ரிஷி தான் ட்ரைவ் பன்றான்.”

.....................

“நல்லா இருக்கான், இரு ஸ்பீக்கர் ஆன் பன்றேன் நீயே பேசு.” என்றவன் ரிஷியிடம் , “ரிஷி வனி பேசணுமாம்” என்று சொல்லி ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

“ஹாய் கல்யாண பொண்ணு எப்படி இருக்க??” உற்ச்சகமாய் கேட்டான் ரிஷி.

“ஹாய் பாஸ்.... நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க??”

“நான் நல்லா இருக்கேன் பவி. அப்பா அம்மா எப்படி இருக்காங்க?” கேட்டான் ரிஷி.

“ம்‌ம்‌ம் அவங்களும் நல்லா இருக்காங்க. நீங்க ஏன் பாஸ் இப்படி செஞ்சிங்க.ரெண்டு பெரும் தீடீர்ன்னு ஆளுக்கு ஒரு பக்கம் போயிடிங்க. நாங்க எல்லாரும் எவளோ கஷ்ட்டபட்டோம் தெரியுமா. எங்களை பற்றி நீங்க ரெண்டு பெரும் யோசிக்கவே இல்லை இல்ல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்களாவது பரவாயில்லை அப்போ அப்போ போனில் பேசுறீங்க. ஆனா அவ.....” என்று அவள் சொல்லி கொண்டே போக.

“பாவனா!!!!!!” என்ற அதட்டலுடன் இடை புகுந்தான் அபி.

அப்போது தான் தான் என்ன சொன்னோம் என்று புரிய, பாவனா அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமானாள். தன் அண்ணனை பார்த்தான் அபி.

ரிஷியின் கண்கள் கலங்கி வேதனையில் முகம் வாடியது. மறு நொடியே அவள் சொன்னா வார்த்தை நினைவு வர, அவன் முகம் கோவத்தில் சிவந்தது. “ராட்சசி.... உன்னோட பிடிவாததினால் எத்தனை பெரை வேதனை படவைக்கிறாய். நீ மட்டும் இப்போது என் முன்னாள் இருந்த என் கையாலே உன்னை கொன்னு போட்டு இருப்பேன். ராட்சசி. ராட்சசி........” என்று மனத்துக்குள் அவளை திட்டியவன் காரை சாலை ஓரமாய் நிறுத்தினான்.



*******************​
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN