கேண்டின் சென்றுவிட்டு வந்த அபியும் வினயும் ஐ.சி.யூ வாசலிற்கு வர அங்கு நர்ஸ்சும் டாக்டர்சும் பதற்றத்துடன் அங்குமிங்கும் சென்றுக்கொண்டிருந்தனர். அதனை பார்த்தவர்கள் விரைந்து அங்கே சென்று விசாரிக்க முயல யாருமே சரியாக பதில் சொல்லவில்லை.
வினயோ ரேஷ்மிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிவிட்டான். அவனது பயம் தந்த அழுத்தத்தில் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாத செல்ல முயன்ற நர்ஸிடம் கோபத்தில் கத்திவிட்டான்.
“உங்களுக்கு மத்தவங்க வேதனை புரியாதா?? உள்ளுக்கு படுத்திருக்கவ பிழைப்பாளா இல்லையானு தெரியாமல் நேற்றிலிருந்து துடிச்சிட்டு இருக்கிறேன்.நின்ற ஒரு வார்த்தை அவ நிலையை சொல்லிட்டு போக மாட்டேன்னு போறீங்க.... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?? உங்களுக்கு மத்தவங்க வேதனை துச்சமாக போயிருச்சில்ல...” என்றவனை தடுத்தான் அபி..
இவனது கத்தலில் ஐ.சி.யூவிலிருந்து வெளியே வந்த டாக்டர்
“மிஸ்டர்.கவினயன் இது ஹாஸ்பிடல்...உங்க வீடில்லை... எங்களை ட்ரீட்மண்ட் பண்ண இடம்கொடுத்தால் தான் எங்களுக்து உங்க மனைவியை காப்பாற்ற முடியும். இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தா எங்களால ஒன்னும் பண்ண முடியாது... உங்க மனைவிக்கு ட்ரீட்மென்ட் கண்டினியூ பண்ணவா வேண்டாமா??” என்று டாக்டர் மிரட்ட அமைதியாகிவிட்டான் வினய்.
வினய் அவ்வாறு நடந்து கொண்டதற்காக டாக்டரிடம் மன்னிப்பு கேட்ட அபி இனி அவன் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தான் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தான்.... டாக்டரும் நர்சும் உள்ளே சென்றுவிட வினயை அங்கிருந்து ஒரு ஓரமாக அழைத்து சென்றான் அபி.
“டேய் கவின் ஏன் இப்படி நடந்துக்கிற??? நர்சுகிட்ட போய் அப்படி சத்தம் போடுற???”
“என்னால முடியலை அபி.... ரேஷ்மிக்கு என்னவோ ஏதோனு பயத்துல அவங்ககிட்ட என்னானு கேட்க ட்ரை பண்ண அவங்க ஒழுங்கா பதில் சொல்லாமல்போனதும் பயத்துல அப்படி கத்திட்டேன். என்னால முடியலடா... எனக்கு பயமா இருக்குடா...” என்று தன் அண்ணனை அணைத்துக்கொண்டு அழுதான் வினய்.
அவனை ஆதரவாக தடவிக்கொடுத்த அபி
“உன் நிலை எனக்கு புரியிதுடா... ஆனா நாம டிஸ்டப் பண்ணா அவங்களால ட்ரீட்மென்டை கன்டினியூ பண்ணமுடியாதுடா... அதோடு டாக்டரோட பர்மிஷன் இல்லாமல் பாவம் அந்த நர்சால என்ன சொல்லமுடியும்... நீ அவங்ககிட்ட சத்தம் போட்டிருக்க கூடாதுடா..” என்று வினயை அமைதிப்படுத்த முயன்றான் அபி...... ஒருவாறு வினயை அமைதிப்படுத்தி கூட்டி வந்த அபி அவனை ஐ.சி.யூ வாசலில் இருந்தை இருக்கையில் அமர செய்து தானும் அருகில் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் இருவரையும் தன்னறைக்கு வருமாறி கூறிவிட்டு சென்றார்.
வினய் தாமதிக்காது டாக்டரை பின்தொடர அவனுடன் கூடச்சென்றான் அபி..... தன்னறைக்கு சென்ற டாக்டர் அபி மற்றும் வினயை அமரச்சொன்னார்.
அவர் முன் அமர்ந்தவர்களிடம் ரேஷ்மியின் நிலையை எடுத்துரைக்க தொடங்கினார் டாக்டர்.
“மிஸ்டர் கவினயன் உங்க வைய்ப்புக்கு திடீர்னு பிட்ஸ் வந்திடுச்சி....” என்று டாக்டர் கூற வினயோ
“டாக்டர்...” என்று வினய் பதற
“பதறாதீங்க கவினயன்.. அவங்களுக்கு இப்படி திடீர்னு வரும்னு நாங்க எதிர்பார்க்கலை... ஆனா அது தான் அவங்க ரெக்கவரிக்கு எங்களுக்கு கிடைத்த முதல் சிம்டம். பிட்ஸ் வந்ததும் நாங்க கூட ரொம்ப பதறிட்டோம். அவங்க நிலை இன்னும் மோசமாகிரும்னு நினைத்தோம். ஆனா அப்படி ஏதும் ஆகாமல் அவங்க ரெக்கவரிக்கு ஒரு ஸ்டார்டா இருக்கு... இது ஓரு நல்ல முன்னேற்றம் தான்... ஆனா அவங்களுக்கு கான்சியஸ் வரும்வரை என்னால எதுவும் உறுதியா சொல்லமுடியாது... அவங்களோட ஸ்கேன் ரிப்பேர்ட்ஸ் பார்த்தப்போ அவங்களோட தலைக்குள் எந்தவித இன்ஜரீசும் இல்லை.. பலமா அடிப்பட்டதால வெளிக்காயம் மட்டும் தான் மற்றபடி உள்காயம் இல்லை.... இப்படி நடக்குறது ரொம்ப ரேர்.. ஆனா காட்ஸ் கிரேஸ் அவங்க இன்டர்னல் இன்ஜரீஸ் இல்லாமல் தப்பிச்சிட்டாங்க.... இப்போதைக்கு ட்ரீட்மண்ட் போய்கிட்டு இருக்கு... அவங்க கண்முழிச்சதும் தான் மற்றையதை பற்றி யோசிக்கனும். அவங்க எவ்வளவு சீக்கிரம் கண்முழிக்கிறாங்களோ அவ்வளவு சீக்கிரம் அவங்க அபாய கட்டத்தை தாண்டிருவாங்க...” என்று டாக்டர் கூற வினயோ
“டாக்டர் நான் ரேஷ்மியை பார்க்கலாமா????” என்று கேட்க
“இல்லை கவினயன் அவங்க இன்னும் எங்க ஆப்சவேஷனில் இருக்காங்க.. அதனால இப்போ பார்க்கமுடியாது”
“ப்ளீஸ் டாக்டர்... ஒரே ஒரு தடவை ரேஷ்மியை பார்க்கிறேன் டாக்டர். என்னால் உங்க ட்ரீட்மண்ட் எந்தவிதத்திலும் இன்டரப்ட் ஆகாது... ப்ளீஸ்” என்று வினய் மன்றாட அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டவர் ஐந்து நிமிடங்களுக்கு அதிகமாக அங்கு இருக்ககூடாது என்ற அறிவுறுத்தலோடு வினயை செல்ல அனுமதித்தார்.
தாமதிக்காது டாக்டருக்கு நன்றியுரைத்துவிட்டு ஐ.சி.யூ அறைக்கு சென்றான். அங்கு அவனை தடுத்து நிறுத்த முயன்ற நர்சிடம் டாக்டரிடம் அனுமதி பெற்றதை கூறியவன் அங்கு ஓரமாய் பாதி திரையால் மூடப்பட்டிருந்த கட்டிலினுருகே சென்றான்....அங்கு ரேஷ்மி உடல் முழுவதும் கட்டுக்களுடன் வாடிய கொடியாய் கட்டிலில் படுத்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு வேதனையை அடக்கமுடியவில்லை..
தன்னை சுற்றி நடப்பவற்றை அறியாது உணராது உணர்வின்றி படுத்திருந்தவளுக்கு தன் தொடுகையால் உயிர் கொடுத்தான் வினய். ரேஷ்மியின் அருகே சென்றவன் ஸ்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையில் தன் கையை வைக்க ரேஷ்மியின் இரு கண்களில் இருந்து விழியோரமாய் நீர் சொட்டியது... உயிரே இல்லாமல் கிடந்தவளுக்கு தொடுகையால் உயிர் கொடுத்தவனோ அதை அறியாது அவள் முன் பிதற்றிக்கொண்டிருந்தான்.
“ஷிமி... கண்ணை முழிச்சி பாருமா... உன் வினய் வந்திருக்கேன்.. என்னை அழைச்சிட்டு போக வர்றேனு சொன்னவ இங்க வந்து படுத்துக்கிட்டியே... உன்னை எவ்வளோ தேடுனேன் தெரியுமா??? உனக்காக நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்தேன்... சீக்கிரம் எழுந்திரு மா.. உன் வினய் பாவமில்லையா??? உன் வினய்க்காக நீ இதை கூட செய்யமாட்டியா??? நான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு போயிருக்ககூடாது... எங்க உன்னை ஹேர்ட் பண்ணிருவேனோனு பயந்து தான் நான் யூ.எஸ் போனேன்... ஆனா அங்க போனதுல இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.. அதுவும் உன் குரல் சோகமா கேட்கும் போது உள்ளுக்கு அப்படியே உடைஞ்சி போயிருவேன்... ஆனா நமக்குள்ள உள்ள அந்த சின்ன இடைவெளியை இல்லாம பண்ண தான் நான் யூ.எஸ் ட்ரிப்பை அக்சப்ட் பண்ணேன். ஆனா அதுவே உன்னோட இந்த நிலைமைக்கு ஒரு காரணமாகிவிட்டது... என்னை பார்க்கிற ஆசையில் வந்த உனக்கு ஏன் இந்த நிலைமை...???? இது எனக்கு நடந்திருக்ககூடாதா??? உன்னால சின்ன அடியை கூட தாங்கமுடியாது..... உனக்கு..... ஐயோ....” என்று பிதற்றியபடி ரேஷ்மியை அணைத்து கதறியவனை தடுத்தார் அங்கிருந்த நர்ஸ்.
உணர்ச்சிபிடியில் சிக்கியிருந்தவன் தான் செய்வதை உணராதிருக்க அவனை கஷ்டப்பட்டு ரேஷ்மியிடம் இருந்து பிரித்து அறைக்கு வெளியே அனுப்பினார் அந்த நர்ஸ்....வெளியே வந்தவன் இருக்கையில் அமர்ந்து தன்னுள் உழன்றான்.
மூன்று நாட்கள் இதே நிலை தொடர்ந்தது... மூன்று நாட்களும் அபியும் வினயும் ஆஸ்பிடலே கதியென்று இருந்தனர். ரியாவும் வீரலட்சுமியும் இடையிடையே வந்து சென்றனர். ரேஷ்மி ஐ.சி.யூவில் இருந்ததால் ஆண்களே தங்க வேண்டியநிலை... வினயோ உணவு உறக்கம் மறந்து இருந்ததால் அபி அவனுக்கு துணையாய் அங்கிருந்தான்.
மூன்றாம் நாள் காலை ஐ.சி.யூ அறையிலிருந்த வெளியே வந்த நர்ஸ் விரைவாக சென்று டாக்டரை அழைத்து வர அங்கு அமர்ந்திருந்த வினயும் அபியும் ஐ.சி.யூ அறையின் அருகே சென்று டாக்டரை பார்ப்பதற்காக நின்றிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த டாக்டர் ரேஷ்மிக்கு கான்சியஸ் வந்துவிட்டதாகவும் இனி பயமில்லை என்றும் கூறினார். உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்ட வினயிடம் இப்போது வேண்டாம் மாலை நார்மல் வாடிற்கு மாற்றியதும் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.
வினயோ அபியை கட்டிக்கொண்டு
“அபி ரேஷ்மிக்கு ஒன்னும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாருடா... என் ஷிமி என்கிட்டயே திரும்பிவந்துட்டா டா... நான் சொன்னமாதிரியே அவ திரும்பி வந்துட்டா டா..” என்று ஆனந்தத்தில் கண்ணீர் விட்டவனை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் அபி.
பின் வினயை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ரியாவிடமும் தினேஷிடமும் செய்தியை பகிர்ந்தான்.
வீட்டிற்கு வந்த வினய் ரேஷ்மி பிழைத்துவிட்ட செய்தியை வீரலட்சுமியிடம் பகிரந்தவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான். அறைக்குள் சென்றவனுக்கு கண்களில் நீர் முட்டியது... இந்த நான்கு நாட்களாக அவன் அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளால் சொல்லிடமுடியாது... அது தந்த மன அழுத்தம் அவனை அவனுள் இறுகவைத்து ஊண் உறக்கம் மறந்திடசெய்தது... ரேஷ்மியின் நினைவுகளும் பிம்பகங்களும் அவனை கண்மூடவிடவில்லை.. அதிலும் அவள் அடிப்பட்டு கிடந்த தோற்றம் அவனது இதயத்தில் குருதி வடியச்செய்தது... நொடிக்கொடி அதிகரித்த கலக்கத்தின் விளைவே அவனது ஆர்பரிப்பும் கதறலும்...
எப்போதும் வரும் துன்பத்தை தூசி போல் தட்டிவிட்டு செல்பவனால் இன்று இந்த துன்பத்தை சுமக்கும் நிற்கும் மனோதிடம் இல்லை... அதுவே அவனது இன்றைய கண்ணீருக்கு காரணம்.
மனம் லேசாகும் வரை அழுதவன் குளிக்க சென்றான். குளித்து முடிந்து வந்தவனுக்கு உணவு பரிமாறினார வீரலட்சுமி...சாப்பிட்டுவிட்டு கிளம்பமுயன்றவனை கட்டாயப்படுத்தி சிறிது நேரம் உறங்குமாறு கூறினார் வீரலட்சுமி...
அவரின் சொல்லுக்கு மதிப்பளித்து கட்டிலில் விழுந்தவனுக்கு மனது இலேசானதால் உறக்கம் வந்து தழுவிக்கொண்டது. நான்கு நாட்கள் தூக்கமின்றி இருந்தவனை நித்திராதேவி தன்னுள் இழுத்துக்கொண்டாள்.
நன்கு தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினார் வீரலட்சுமி...
“ஷிமி கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் மா... ரொம்ப டயர்டா இருக்குமா..” என்றுகூறி மறுபுறம் திரும்பி படுத்தவனுக்கு அடுத்த நிமிடம் தூக்கம் கலைந்தது. எழுந்து அமர்ந்தவன் எதிரே தன் அன்னையை கண்டதும்
“ஏதோ நினைவுல...” என்று கூற
“கவின் ரேஷ்மியை ரூமிற்கு மாத்திட்டாங்களாம். இப்போ தான் அபி சொன்னான். நானும் வர்றேன். வா ஆஸ்பிடலுக்கு போகலாம் ...” என்று வீரலட்சுமி அழைக்க அவரை தயாராகச்சொன்னவன் அவனும் தயாராக இருவரும் ஆஸ்பிடல் சென்றனர்.
அங்கு அபியிடம் விசாரித்து ரேஷ்மியிருந்த அறைக்கு தன் அன்னையுடன் சென்றான் வினய். .... அன்னையுடன் ரேஷ்மி இருந்த அறைக்கு வந்த வினய் உறங்கிக்கொண்டிருந்த ரேஷ்மியையே கண்டான். கால்களிரண்டில் ஒன்று மாவுகட்டு போடப்பட்டிருக்க மற்றொன்று பாண்டேஜினால் சுற்றப்பட்டிருந்தது. கைகளிலும் கட்டுகள் இருக்க ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டும் மறுகை கழுத்தோடு இணைக்கப்பட்டும் இருந்தது. தலையிலே பெரியகட்டுடன் கண்மூடியிருந்தாள் ரேஷ்மி. முள்ளந்தண்டிலும் அடிபட்டு இருந்ததால் அவள் படுத்திருந்த கட்டில் அவளுக்கு வாகாக சரிப்படுத்தப்பட்டிருந்தது.
கண்களால் தன் மனையாளை வருடியபடி அருகில் வந்தவன் அவள் தலையை தடவிக்கொடுத்தபடி ஷிமி என்று அழைக்க மூடிய இமைகளினுள் அவளது கருவிழி அசைவதை கண்டான் வினய். மெதுவாக தன் இமையிரண்டையும் பிரித்தவளது உதடுகளோ வினய் என்று உச்சரித்தது... சத்தம் எழாத போதிலும் அவளது இதழசைவு வினயின் உயிர்வரை ஊடுருவிச்சென்றது.
அவளது ஒரு கையினை மெதுவாக பிடித்தவன்
“ரொம்ப வலிக்கிதா ஷிமி..??” என்று வினவியவனின் வார்த்தைகளில் அத்தனை வலி.
“ஆமா வினய்.. இப்போ கொஞ்சம் முதல் வரை ரொம்ப வலித்தது.. ஆனா உங்களை பார்த்ததும் வலியெல்லாம் பறந்து போயிருச்சி...” என்று சிரிக்க முயன்றவளுக்கு வலியை மறைத்து சிரிக்கத் தெரியவில்லை.. அவளது முகபாவனையே அவளுக்கு வலிக்கிறதென்று காட்டிக்கொடுத்தது...
அவளது வேதனையை பொறுக்காதவன்
“ஷிமி... நீ ஸ்ரெயின் பண்ணிக்காத... நீ நல்லா ரெஸ்ட் எடு... நாம பிறகு பேசிக்கலாம்...” என்று கூறிவிட்டு செல்லமுயன்றவனை தன் அடிப்பட்ட கையால் அவனை தடுத்தாள். அவளது தொடுகையின் அர்த்தம் புரிய அதுவரை நேரம் இவர்களது அன்பு பரிமாறலை கண்டு மனதில் மகிழ்ந்து கொண்டிருந்த வீரலட்சுமி ரேஷ்மியிடம் நலம்விசாரித்துவிட்டு அவர்களிருவருக்கும் தனிமையை ஏற்படுத்தி கொடுப்பதற்காக அறையிலிருந்து விரைந்து வெளியேறினார் வீரலட்சுமி.
அதுவரை வினயின் கையை விடாது பிடித்தபடி இருந்த ரேஷ்மி அவர் சென்றதும்
“வினய் இப்படி பக்கத்துல உட்காருங்களே... ப்ளீஸ்..” என்று கூற
“ஹேய்.. என்ன ஷிமி ப்ளீஸ்லா சொல்லிட்டு இருக்க. உட்காருனா உட்கார போறேன்..” என்றுரைத்துவிட்டு அவள் தலைமாட்டிற்கருகே உட்கார முயன்றவனை தன் முகத்திற்கு நேர அமரவைத்தாள்.
அவன் அமர்ந்ததும் அவனது கையை பிடித்தபடி எழ முயன்றவளை தடுத்த வினய்
“ஹேய் ஷிமி... எதுக்கு ஸ்ரெயின் பண்ணிக்கிற...ஆப்பரேஷன் பண்ண உடம்பு மா... இன்னும் காயம் எதுவும் சரியாக ஆறலைனு டாக்டர் சொல்லிருக்காங்க... இப்படி ஸ்ரெயின் பண்ணா பெயின் ரொம்ப அதிகமா இருக்கும்... என்ன வேணும்னு சொல்லு செய்றேன்.”
“வினய் உங்க கையை என் முகத்துகிட்ட கொண்டுவாங்க...” என்று கூற அதன்படியே செய்தான் வினய். எக்கி அவனது புறங்கையில் இதழ் பதித்தவள் “உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் வினய்... ஆக்சிடன்ட் நடந்து நான் அன்கான்சியஸ் ஆகும் நேரத்தில் கூட உங்களை பார்க்காமல் செத்துடுவேனோனு ரொம்ப பயந்துட்டேன்...” என்றவளின் வாயை தன் கரங்களால் அரணிட்டான் வினய்..
“வேணாம் ஷிமி.. அப்படி பேசாத... எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது... ஆக்சிடண்ட் பத்தி பேசாதமா ப்ளீஸ்...” என்றவனது கண்கள் கலங்கியதை ரேஷ்மி கண்டாள். தன்னவனை கஷ்டப்படுத்த விரும்பாதவள் பேச்சை திசை திருப்பினாள்.
“வினய் நீங்க சரியில்லை...” என்று ரேஷ்மி ஆரம்பிக்க அவளது பேச்சின் அர்த்தம் புரியாதவன் என்னவென்று பார்க்க
“பின்ன என்ன ரொம்ப நாள் கழித்து பொண்டாட்டியை பார்க்கிறோமே.... அவ ரொம்ப ஏங்கிபோயிருப்பாளே... அவளை நல்லபடியா கவனிக்கனும் அப்படீங்கிற பொறுப்பு இருக்கா உங்களுக்கு?? நீங்க ரொம்ப மோசம்... போனில் என்னமோ அப்படி கவனிப்பேன்... இப்படி கவனிப்பேன்... என்று டயலாக் பேச தான் நீங்க சரிப்படுவீங்க போல... இது தெரியாமல் நானும் உங்களை என்னவோனு நினைச்சிட்டேன்...” என்று போலியாக புலம்ப வினயோ சிரித்துவிட்டான்.
“கள்ளி... அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கோம்னு நினைப்பில்லாமல் என்னை சீண்டி பார்க்கிறியா பேபி.. சரி உன் ஆசையை ஏன் கெடுப்பான்... இரு இப்போ உன்னை நான் கவனிக்கிற கவனிப்புல நீ அப்படியே மெர்சலாகிருவ...”என்றபடி அவளது வதனத்தருகே சென்றவன் காயம் படாத அவனது இதழ்களை சிறை செய்தான்.
உடலாலும் மனதாலும் வலியால் அவதிபட்டவளுக்கு அந்த இதழொற்றல் நிவாரணியாகியது... சிறிது நேரத்தில் விலகிய வினயிடம்
“உங்க தாடி ரொம்ப குத்துது வினய்... நீங்க சரியாக சேவ் பண்ணலையா???” என்று அவன் முகத்தை ஆராய்ந்தவள் அதிர்ந்துவிட்டாள்.
கண்களை சுற்றி கருவளையங்களும் நான்கு நாட்கள் சவரம் செய்யப்படாத தாடியும் சிவப்பேறிய கண்களுமாய் இருந்தவனை பார்த்தவளுக்கு அவனது அயர்ச்சி புரிந்தது. அதுவே அவனது நிலையை எண்ணி கவலைகொள்ளச் செய்தது. வினயை கட்டிலில் தலைவைத்து படுக்கக்கூறியவள் அவனது தலையை தடவிக்கொடுக்க அது தந்த சுகத்தில் தன்னையறியாமல் உறங்கிவிட்டான் வினய். அவனுடனேயே மருந்து தந்த அயர்ச்சியில் ரேஷ்மியும் உறங்கிவிட்டாள்.
வினயை அழைப்பதற்காக வந்த வீரலட்சுமிக்கு இந்த காட்சி மனநிறைவை தந்தது. தனக்கு பின் தன் மகனுக்கு சரியான துணையொன்று கிடைத்ததை எண்ணி அந்த தாயுள்ளம் மகிழ்ந்தது. இருரையும் தொல்லை செய்ய விரும்பாதவர் நர்சிடம் சொல்லிவிட்டு அபியுடன் வீடு திரும்பினார்.
இரண்டு கிழமைகள் ஆஸ்பிடல் வாசம் முடித்துவிட்டு அன்று தான் வீடு திரும்பினாள் ரேஷ்மி. முதுகுத்தண்டில் அடிப்பட்டிருப்பதால் ஒரு மாதம் கம்ப்ளீட் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டுமென டாக்டர் அறிவுறித்தியிருந்தார். ஆதலால் வீட்டிற்கு அழைத்து வந்த ரேஷ்மியை கைகளில் தாங்கிச்சென்று படுக்கையில் படுக்க வைத்தான் வினய். அவளுக்கு ஏதுவாக படுக்கையை ஒழுங்கு செய்தவன் அவள் குடிப்பதற்கு ஜூஸ் எடுத்துவந்தான். அவன் கொண்டுவந்த ஜூஸை குடித்தவள் அவனிடம் கப்பை நீட்ட அதை வாங்கிக்கொண்டு செல்லமுயன்றவனிடம்
“சாரி வினய்..” என்று மன்னிப்பு கோற மீண்டும் அவளருகே அமர்ந்தவன்
“எதுக்குமா சாரி.. ?? அப்படி என்குட்டிமா என்ன தப்பு பண்ணாங்க??”
“உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல...”
“யாரு சொன்னா??? அதெல்லாம் ஒன்றும் இல்லை.. என் பேபிமா என்னை எப்பவும் கஷ்டப்படுத்தமாட்டாங்க...”
“இல்லை வினய்... என்னை பார்த்து பார்த்து கவனிச்சிக்கிறது எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்களோனு தோனுது... இந்த மூன்று வாரங்களா நீங்க எப்படி இருக்கீங்கனு நான் பார்த்துட்டு தான் இருக்கேன்... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினய்..”
“ஹேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைமா..”
“இல்லை வினய் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..”
“சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லு.. எனக்கு இப்படி ஆகியிருந்தா நீ என்னை பார்த்துப்பியா மாட்டியா??”
“வினய் எதுக்கு எப்படி பேசுறீங்க..”
“ஹேய்... ஷிமி...நெருப்புனா வாய் சுட்டுடாதுமா... நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு...”
“நிச்சயமா பக்கத்தில் இருந்து பார்த்துப்பேன்..”
“ஹா.. பார்த்தியா அதே மாதிரி தான் நானும்... உனக்கு அடிப்பட்டிருக்கு..நான் பார்த்துக்கிறேன்... அவ்வளவு தான்..” என்றவனை தன் ஒரு கையால் அணைத்துக்கொண்டாள் ரேஷ்மி...
அவளது உணர்வுகள் புரிந்தவனும் அவளை அணைத்துக்கொண்டான்.... சிறிது நேரத்தில் வினயின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு விலகியவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்.
அவனது பார்வை மாற்றத்தை கண்டவள் சிரித்தபடியே
“என்னடா புருஷா.. உன் பார்வையே ஒரு மார்க்கமா இருக்கு...??”
“இது நீ தானானு எனக்கு டவுட்டாவே இருக்கு... ஷிமி....”
“ஏன் வினய் உங்களுக்கு இப்ப இப்படியொரு டவுட்டு???”
“பின்ன என்னமா... லவ்வுனாலே கொல காண்டுல சுத்திட்டு இருந்த இப்போ தாறுமாறா லவ் பண்றேன் பேர்வழினு ரகளை பண்ணா யாருக்குனாலும் டவுட்டு வரத்தானேமா செய்யும்...” என்று கேலி செய்தவனை
“ஓ அப்போ லவ் பண்ணுறேனு நான் செய்றது உங்களுக்கு ரகளையா தான் தெரியிதா???”
“அப்படியில்லை ஷிமி.. நான் என்ன சொல்ல வந்தேன்னா..”
“நீங்க எதுவும் சொல்ல வேணாம்...நீங்க இப்போ சொன்னதே எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சிது....” என்று முறுக்கிக்கொள்ள வினயோ மைண்ட் வாய்சில்
“டேய் கவின் உனக்கு வாயில தான்டா சனி... சும்மா இருந்தவளை இப்படி உசிப்பிவிட்டுட்டேனே... இப்போ இதுக்கு எப்படி வச்சி செய்வானு தெரியலையே..”
“ஆமா வச்சி செய்யதான் போறேன்...” என்று வினயின் கேள்விக்கு ரேஷ்மி பதில் சொல்ல திருதிருவென முழித்தான் வினய்...
“ஹேய் ஷிமி நான் பேசுனது உனக்கு கேட்டுச்சா???”
“ஆமா..” என்றுவிட்டு ரேஷ்மி தனக்குள் சிரிக்க
“நீ பொய் சொல்லுற..”
“எனக்கு பொய் சொல்லுறு புடிக்காதுனு உங்களுக்கு நல்லா தெரியும்..”
“சரி... எங்கே அப்போ நான் என்ன நினைச்சேனு சொல்லு...” என்று கேட்டவனிடம் அவன் நினைத்ததை ரேஷ்மி கூற அதிர்ந்துவிட்டான் வினய்..
“ஹேய் ஷிமி உனக்கு எப்படி நான் நினைத்தது தெரியும்...???”
“நான் சைக்காலஜி ஸ்டூடண்ட்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா...??”
“அதுக்கும் இதுக்கும் என்னமா சம்பந்தம்...”
“எனக்கு மைண்ட் ரீடிங் கொஞ்சம் தெரியும்...” என்று கூற
“ என்னது மைண்ட் ரீடிங்கா...”
“ஆமா... எல்லாரோட மைண்டையும் ரீட் பண்ண முடியாது... எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட மைண்டை ரீட் பண்ணிருவேன்... வெளியாட்களை பற்றி நல்லா தெரிஞ்சா அவங்களோட மைண்டையும் ரீட் பண்ண முடியும்... சிறுவயதிலேயே மற்றவங்க முகத்தை வைத்து கெஸ் பண்ணுற அபிலிடி என்கிட்ட இருந்தது... அது தெரிஞ்சிக்கிட்ட என்னோட அம்மா என்னை சைக்கோலஜி படிக்க சொன்னாங்க... எனக்கும் அதுல இன்ட்ரெஸ்ட் இருந்ததால அதையே படிச்சேன்.. அதோடு வீக்கொண்ட் சைல்ட் சைக்காலஜி டிப்ளோமா, பேசிக் கவுன்சிலிங் டிப்ளோமானு என்னோட சிகில்ஸை இவோல் பண்ணிக்கிட்டேன்.. அதான் உங்க மைண்ட் வாயிசை என்னால் சரியாக கேட்ச் பண்ண முடிந்தது..”
“அப்போ இவ்வளவு நாள் நான் நினைத்தது எல்லாம் தெரியுமா???”
“ஆமா..நீங்க என்னை அவாய்ட் பண்ணுறதுக்காக தான் யூ.எஸ் போனீங்கனு கூட தெரியும்....” என்று ரேஷ்மி புதுத்தகவலை கூற மேலும் அதிர்ந்தான் வினய்....
“சாரி ரேஷ்மி.. நான் பண்ணது தப்புதான்... ஆனா எனக்குள்ள ஒரு பயம்.. எங்க உன்னை ஹர்ட் பண்ணிருவேனோனு பயம்... அதோடு தூரமாகும்போது அன்பு அதிகமாகும்னு சொல்லுவாங்க... அதான் அப்படி பண்ணேன்மா...”
“கூல் வினய்... உங்க நிலை எனக்கு புரியிது... எனக்கும் அது தான் சரினு தோன்றியது... அதான் உங்களை போக அனுமதிச்சேன்... இல்லைனா பஞ்சாயத்தை கூட்டிருக்க மாட்டேன்...” என்று சிரித்தவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்...
“வினய் இவ்வளவு நாள் உங்களை சுத்தலில் விட்டதுக்கான காரணம் என்னான்னு கண்டுபிடிச்சிட்டீங்களா???”
“ஆமா ஷிமி... நீ ஆஸ்பிடலில் இருக்கும் போது அண்ணா சொன்னான்... மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு... ரொம்ப சிலியான விஷயத்துக்கு அவங்க அப்படி பண்ணியிருக்ககூடாது... ஆனா காதல்னு வரும்போது அது எப்படி ஒருத்தரோட எண்ணத்தை மாற்றும்னு யாராலும் சொல்லமுடியாது... அவங்க நிலையில் இருந்து பார்த்தா அது சரியா தோன்றியிருக்கலாம்...” என்று வினய் கூற மெதுவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ரேஷ்மி...
“என்ன பேபி பீல் ஆகிடுச்சா... சரி இந்த டாபிக்கை விடு...நாம வேற பேசலாம்..” என்றுவிட்டு வேறு கதை பேசினர் இருவரும்...
நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வண்ணம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
இதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க
விடை அளித்திட போகிறாய்
நீ கூறினால் என்னாகுவேன்

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன்- 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.